நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பட்டபின் வரும் புத்தி ...


Militant

Status: Offline
Posts: 830
Date:
பட்டபின் வரும் புத்தி ...
Permalink  
 


யௌவன ஜனம் தளத்தின் ஒரு திரியில் அத்தளத்தின் நிர்வாகி சில்சாம், “இயேசு அழைக்கிறார்” ஊழியத்தின் “இளம் பங்காளர் திட்டம்” பற்றி  பின்வரும் விமர்சனத்தைப் பதித்துள்ளார்.

//
எனது இளைய சகோதரரின் இரு பிள்ளைகளும் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் இளம் பங்காளர் திட்டத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்; எனது சகோதரர் காலஞ் சென்ற டிஜிஎஸ் அவர்கள் மீது கொண்ட அபிமானத்தினால் தன் பிள்ளைகளை அதில் சேர்த்திருக்கிறார்.

காரணம்,சிறு வயதிலேயே தகப்பனாரை இழந்துவிட்ட நாங்கள் சொந்தங்களின் ஆதரவுமில்லாமற் போகவே அவரவருக்குக் கிடைத்த வாய்ப்பில் முன்னேறினோம்;ஆனாலும் அன்பின் ஏக்கம் மாத்திரம் இருந்துகொண்டேயிருந்தது;அந்த இடத்தில் டிஜிஎஸ் போன்றோரை வைத்து தகப்பனைப் போல நேசித்தோம்; அவருடைய பாடல்கள் அனைத்துமே அன்பு மற்றும் ஆறுதலின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதால் அதனால் ஈர்க்கப்பட்ட நாங்கள் இன்றுவரை அந்த அன்பினால் மாத்திரமே கட்டப்பட்டு அவர்களுடைய எத்தனையோ முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல் இருந்தோம்; ஆனால் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி என் சகோதரரின் மனதை , டிஜிஎஸ் பாணியில் சொல்வதானால் சுக்குநூறாக உடைத்துப் போட்டுவிட்டது.

அரபு நாட்டின் அடிமையாக கடந்த ரெண்டு வருடமாக உழைத்து களைத்து வேலையிழந்து மனம் சோர்ந்து போய் கடந்த ஐந்து மாதங்களாக வேலை தேடிக்கொண்டிருக்கிறார், எனது சகோதரர்; அவர் வேலையிலிருந்த வரைக்கும் இளம் பங்காளர் திட்டத்துக்கு மாதந்தோறும் தவறாமல் கப்பங் கட்டிவிடுவார்;ஆனால் வேலையில்லாத இந்த ஐந்து மாதங்களும் தன் குடும்பத்தை நடத்தவே வழியில்லாத நிலையில் இதுபோன்ற பொது செலவுகளுக்கு எப்படி செலவு செய்யமுடியும்?

இந்நிலையில் அவரும் அவரது மனைவி பிள்ளைகளுடன் வாரத்துக்கு மூன்று,நான்கு நாட்கள் எங்கள் வீட்டில் தங்கிவிடுவதுண்டு;மேலும் அவர் அவ்வப்போது வேலை தேடி எங்காவது வெளியே போய்விடுவார்;அந்த நேரத்தில் அவரது வீட்டைத் தேடி வந்த இயேசு அழைக்கிறார் ஊழியர் வீடு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு நேரடியாக வீட்டு உரிமையாளரிடம் சென்று விசாரித்திருக்கிறார்;என்ன விவரம் என்று கேட்டதற்கு அவர் , கடந்த ஐந்து மாதமாகப் பணம் செலுத்தவில்லை, அதை வசூலிக்கவே வந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

http://www.prayertoweronline.org/fs/ptr/ypp.asp


வீட்டு உரிமையாளருக்கு இளம் பங்காளர் திட்டத்தின் அருமை பெருமைகளைக் குறித்து ஒன்றுந்தெரியாது;எனவே வந்தவர் யாரோ ஒரு பெரிய கடங்காரர் என்று நினைத்துக்கொண்டு எனது சகோதரரிடம் உங்களைத் தேடி சர்ச்சிலிருந்து வந்திருந்தாங்க,நீங்க ஏதோ பணம் கட்டணுமாமே அதற்காகவே வந்தாங்க என்று சொன்னதும் எனது சகோதரருக்கு மிகவும் அவமானமாகிப் போனதுடன் அந்த ஊழியத்தின் மீதான நல்லெண்ணமும் சிதைந்துபோனது.

இளம் பங்காளர் திட்டம் என்பது வேதத்துக்குப் புறம்பானதா அல்லது நல்ல திட்டமா என்று நாம் நியாயந்தீர்க்கப் போவதில்லை;ஆனால் நேர்ந்துகொண்ட ஒரு தொகையை ஒரு குடும்பம் செலுத்தத் தவறும் போது அதனை அணுக தற்காலத்தில் பல்வேறு நவீன வசதிகள் இருக்கும் சீட்டு கம்பெனி போல ஒரு ஆளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய அவசியமென்ன? வருபவரின் நேர்மைக்கு யார் உத்தரவாதி? குறுஞ்செய்தி (Sms) மின்னஞ்சல் (email) போன்ற எத்தனையோ எளிமையான தொடர்பு சாதன வசதிகள் இருக்க வீட்டு ஒரு ஆளை அனுப்பி பணத்தை வசூலிக்க உரிமை கொடுத்தது யார்? நிச்சயமாக இந்த திட்டத்தில் இணையும் போது நாங்கள் அந்த உரிமையைக் கொடுக்கவில்லை.

ஒரு குடும்பம் தான் நேர்ந்துகொண்ட ஒரு குறிப்பிட்ட காணிக்கையை செலுத்தாத காரணம் என்ன என்று விசாரித்து ஆறுதல் கூறி ஆலோசனை தந்து ஜெப உதவி செய்வதற்கு தானே இயேசு அழைக்கிறார்..?

நமது சமுதாயத்தில் ஒரு வீட்டில் துக்கம் என்றால் அடுத்த வீட்டுக்காரன் சமைத்து கொடுத்து அவன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்;ஆனால் இந்த மோசடி ஊழியர்கள் மக்களுடைய துன்பத்தைக் குறித்து எந்த கரிசனையும் கொள்ளாமல் அவர்கள் கண்ணீரைக் காசாக்குவதிலேயே கவனமாக இருக்கிறார்களே,இதுவா கிறித்துவின் மாதிரி..? இதற்கா இயேசு அழைக்கிறார்..? இப்படிப்பட்டவர்களின் இயேசு எங்களுக்கு வேண்டாம் என்கிறோம்..!
//

சில மனிதர்களுக்கு தீமையான ஒரு விஷயத்தை அறிகிற அறிவு அதைப் பார்த்த மாத்திரத்தில் வராது; அதன் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டபின்னரே வரும். இதைத்தான் “பட்டபின் வரும் புத்தி”, அதாவது “பாதிக்கப்பட்டபின் வரும் புத்தி” எனப் பெரியவர்கள் சொல்வார்கள். இதற்கு ஒரு உதாரணமாய் சில்சாம் விளங்குகிறார்.

தேவஊழியர் எனச் சொல்லிக்கொள்ளும் ஒருவர், எப்போது தனது ஊழியத்துக்கு காணிக்கை கேட்கிறாரோ அப்போதே அவர் தேவஊழியர் எனப்படும் தகுதியை இழந்துபோவார் என்பதை சில்சாம் போன்ற பலர் அறியாததால்தான், அம்மாதிரி ஊழியர்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டபின்னரே அவர்களின் மோசடி பற்றிய அறிவை அவர்கள் பெறுகின்றனர்.

சொல்லப்போனால், “பட்டபின்கூட” சில்சாமுக்கு புத்தி வரவில்லை என்றே தோன்றுகிறது. இளம் பங்காளர் திட்டத்திற்கு காணிக்கை கொடுத்து ஆதரித்த தனது சகோதரர், அத்திட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பின்னர்கூட, அத்திட்டத்தைத் துவக்கிவைத்த காலஞ்சென்ற டி.ஜி.எஸ்.-தான் அத்திட்டத்தின் மோசடிகளுக்கு மூலகாரணர் என்பதை ஒப்புக்கொள்ள சில்சாமுக்கு மனமில்லை.

டி.ஜி.எஸ்-இடம் எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும், அவரது அன்பின் வார்த்தைகளினிமித்தம் அந்த முரண்பாடுகளை சில்சாம் பொருட்படுத்தாமல் இருந்தாராம். இச்சகப் பேச்சு மற்றும் வசனிப்பான பேச்சால் எப்படியெல்லாம் விசுவாசிகள் மதிமயங்குகின்றனர் என்பதற்கு சில்சாம் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார். அவர் ரோமர் 16:18; 1 தெச. 2:5; கலாத்தியர் 1:10 வசனங்களைப் படிப்பாராக.

மோசடி ஊழியர்களின் பிரதான சொத்தே “இச்சகமான பேச்சுதான்”. அதேவேளையில் அவ்வூழியர்கள் உருவாவதற்கு பிரதான காரணமும்
விசுவாசிகளின் “இச்சைதான்.

“இளம் பங்காளர் திட்டத்தை” ஆதரித்த தனது சகோதரருக்கு தற்போது உண்டான அவமானத்தால் படிப்பினை பெற்ற சில்சாம், அத்திட்டம் தொடங்கப்பட்டபோதோ அல்லது அவரது சகோதரர் அத்திட்டத்தில் தனது பிள்ளைகளை சேர்த்தபோதோ, இத்திட்டம் வேதத்துக்கு உட்பட்டதுதானா என சற்றேனும் சிந்தித்துப்பார்த்திருப்பாரா?

ஏசாயா 58:5-9 வசனங்களில் தேவன் சில காரியங்களைச் சொல்லி, அவற்றையெல்லாம் செய்பவன் தம்மை நோக்கிக் கூப்பிட்டால் தாம் உடனே மறுஉத்தரவு கொடுப்பதாகவும் அப்படிப்பட்டவனின் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் எனவும் அருமையான வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்க, “இளம் பங்காளர் திட்டத்தில்” தனது பிள்ளைகளைச் சேர்த்தால் அவர்களுக்கு அபரிதமான ஆசீர்வாதம் உண்டாகும் என சில்சாமின் சகோதரர் நினைக்கக் காரணமென்ன?

தனது பிள்ளைகள் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைப் பெறவேண்டும் எனும் “இச்சையை” வேதாகமம் காட்டும் வழியில் நிறைவேற்றுவதில் சில்சாமின் சகோதரருக்கு நம்பிக்கை இல்லாததால்தான், “இளம் பங்காளர் திட்டம்” போன்ற குறுக்கு வழியில், தனது இச்சையை நிறைவேற்ற அவர் நினைத்துள்ளார்.

ஏசாயா 58:8,9 வசனங்கள் மற்றும் அவை போன்ற ஏராளமான வசனங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், நிச்சயம் இம்மாதிரி திட்டத்தை நம்பமாட்டார்கள்.

இளம் பங்காளர் திட்டம் வேதத்துக்குப் புறம்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க சில்சாம் முன்வரமாட்டாராம். ஆனால் அத்திட்டத்தை அறிவித்த டி.ஜி.எஸ். நல்ல ஊழியர்தான் எனச் சொல்லி அதை பறைசாற்றுவாராம்.

ஓர் ஊழியரின் ஒரு திட்டம் வேதத்துக்குப் புறம்பானதா இல்லையா என்பதை அறியாமல், அவ்வூழியர் நல்ல ஊழியரா அல்லது கள்ள ஊழியரா என்பதை எப்படித் தீர்மானிக்க முடியம்? ஓர் ஊழியர் கள்ள ஊழியர் என்பதை ஆராய்ந்து அறிந்தால்தானே மத்தேயு 7:15-ல் இயேசு கூறுகிறபடி, “கள்ள ஊழியர்களிடம்” எச்சரிக்கையாயிருக்க முடியும்?

உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்றும், உலகத்தார் உலகுக்குரியதைப் பேசுவார்கள் என்றும் வேதாகமம் சொல்லியிருக்க (யாக்கோபு 4:4; 1 யோவான் 4:5), இளம் பிள்ளைகளின் உலகத் தேவைகளை முன்னிறுத்தி அறிவிக்கப்பட்டுள்ள “இளம் பங்காளர் திட்டம்”, நிச்சயமாக வேதத்துக்குப் புறம்பானது என சில்சாம் அறியத் தவறியது எப்படி? அவரது சகோதரரும் அறியத் தவறியது எப்படி?

என்னைக் கேட்டால், சில்சாமும் சரி அவரது சகோதரரும் சரி, உலகத்தேவைகளை சற்றும் பொருட்படுத்தாதிருந்தால், நிச்சயமாக அத்திட்டம் வேதத்துக்குப் புறம்பானதுதான் என்பதை அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் மனதில் உலகத்தைக் குறித்த இச்சை இருந்ததால்தான், உலகத்திற்குரிய அத்திட்டம் வேதத்துக்குப் புறம்பானது என்பதை அறியத் தவறியுள்ளனர்.

சில்சாமுங்கூட, மாணவர்களின் உலகத்தேவையான கல்விக்காக உபவாசமிருந்து ஜெபித்தவர்தான். அதனால்தான் “இளம் பங்காளர் திட்டம்” வேதத்துக்குப் புறம்பானது என அவரால் சொல்லமுடியவில்லை.

உலகத்தார் சொல்கிற உலகக்காரியங்களுக்கு உலகம் செவிகொடுக்கும் என 1 யோவான் 4:5 கூறுகிறபடியே, சில்சாமின் சகோதரர் “இளம் பங்காளர் திட்டத்துக்கு” செவிசாய்த்து, அத்திட்டதிற்கான கட்டணத்தை இயேசு அழைக்கிறார் நிறுவனத்திற்கு செலுத்தி, தனது பிள்ளைகளை அதில் சேர்த்துள்ளார். ஆனால் அந்தோ, அத்திட்டத்தா
ல் அவரது பிள்ளைகள் “ஆசீர்வாதத்தைப்பெற்றார்களோ இல்லையோ, அவர் தனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆசீர்வாதத்தையும் இழந்து, தன் பிள்ளைகளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான திட்டத்திற்குக் கட்டணத்தைச் செலுத்த இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அதன் பின்னர்தான் அத்திட்டத்தைத் தந்தவர்களின் “சுயரூபமான” ஓநாய்த்தனம் வெளிப்பட்டது. இப்போது அவர் மட்டுமல்ல, இச்செய்தியை படிக்கிற அனைவருமே “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள்” யார் என்பதைப் புரிந்திருப்பார்கள். ஆகிலும் இன்னமுங்கூட அந்த ஓநாய்களின் சுயரூபத்தை அறியாத அறிவிலிகளும் இருக்கக்கூடும். அவர்களின் கண்களும் திறக்கப்படத்தக்கதாக, இந்த ஓநாய்கள் இன்னும் வெளிப்படையாக தங்கள் சுயரூபத்தைக் காட்டும் நாள் நெருங்கிவருகிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சில்சாமைக் குறித்த இப்பதிவுக்கு, தனது தளத்தில் அவர் பதில் தந்துள்ளார். அவரது பதிலுக்கு பதில் தரவேண்டியது எனது கடமை.

chillsam wrote:
//நான் இதுவரை டிஜிஎஸ் அவர்களுக்கோ இயேசு அழைக்கிறார் நிறுவனத்துக்கோ எந்த காணிக்கையும் அனுப்பியதில்லை; எனவே எனக்கு எந்த தனிப்பட்ட பாதிப்பும் இல்லை;//

நிச்சயமாக சில்சாமுக்கு தனிப்பட்ட பாதிப்பு இல்லைதான். ஆனால் தன் சகோதரரின் பாதிப்பை தனது பாதிப்பாக சில்சாம் கருதியிருப்பார் என்ற எண்ணத்தில்தான் சில்சாம் பாதிப்புக்குள்ளானதாக நான் குறிப்பிட்டிருந்தேன்.

chillsam wrote:
//எனது சகோதரர் செய்வதை நான் தடுப்பதற்கு எனக்கு உரிமையில்லை; அவரே உணர்ந்துள்ள இந்த நேரத்துக்காகவே நான் காத்திருந்தேன்.//

ஆம், சகோதரரின் செயலைத் தடுக்க உரிமையில்லைதான்; ஆனால் சகோதரரைக் கண்டிக்கவும், கள்ள ஊழியர்களின் கள்ளத்தனத்தை எடுத்துச் சொல்லவும் உரிமை இல்லாமலா போய்விட்டது? அதை இவர் செய்தாரா?

அன்று மட்டுமல்ல, இன்றுங்கூட டி.ஜி.எஸ்.-ன் ஊழியம் ஒரு மாபெரும் சாதனை என்றல்லவா சில்சாம் கூறுகிறார்? தனது சொந்த மகனை (பால் தினகரனை) “மோசடிப் பேர்வழியாக” உருவாக்கிவிட்டு, பெருங்கூட்டத்தை இயேசுவுக்கு நேராக திருப்பியதைத்தான் “சாதனை” என சில்சாம் சொல்கிறார். ஆனால் உண்மையில் பெருங்கூட்டத்தை அவர் இயேசுவுக்கு நேராகத் திருப்பவில்லை, தனக்கு நேராகத்தான் திருப்பியுள்ளார். அதற்கு ஓர் உதாரணம், சில்சாமின் சகோதரனே.

சில்சாமின் சகோதரர் டி.ஜி.எஸ்.-க்கு நேராகத் திரும்பி இளம் பங்களார் திட்டத்தில் தனது பிள்ளைகளைச் சேர்த்ததால்தானே இன்று அவதிப்படும் நிலை உண்டாகியுள்ளது? இப்படியில்லாமல், இயேசுவுக்கு நேராக மட்டும் அவர் திரும்பியிருந்தால் அவருக்கு இந்த அவதி வந்திருக்குமா? இவரைப்போல் பலரையும் தங்களுக்கு நேராக இழுப்பவர்களைக் குறித்துதான் வேதாகமம் இப்படிச் சொல்லி எச்சரிக்கிறது.

மத்தேயு 23:15 ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

2 பேதுரு 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

அப்போஸ்தலர் 20:29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

ஏசாயா 5:13 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டுபோகிறார்கள்.
14 அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்.


தங்களோடுகூட ஒரு திரள்கூட்டத்தை இழுத்துக்கொண்டு பாதாளத்துக்குச் செல்வதுதான் சாதனையா?

இந்த திரள்கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் (சில்சாமின் சகோதரர்) உணரும்வரை காத்திருந்துவிட்டு, அவர் உணர்ந்தபின் “நீங்கள் ஏமாந்து விட்டீர்கள்” எனச் சொல்வதில் என்ன பயன்?

தனது சகோதரர் உணரும்வரை காத்திருந்த சில்சாம், இப்போது யாருக்காக இத்தகவலைச் சொல்கிறார்? தனது சகோதரரைப் போலவே எல்லோரும் உணரும்வரை காத்திருக்க வேண்டியதுதானே?

chillsam wrote:
//இயேசு அழைக்கிறார் ஊழியத்தையும் நான் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே இருக்கிறேன்; அது விரைவில் தனி மன்றத்தில்  (forum) தொகுக்கப்படும்; ஆனாலும் மற்றவர்களைப் போலக் காழ்ப்புணர்ச்சியுடன் அல்லாது சமதளத்திலிருந்து நாகரீகத்துடன் அதனைச் செய்வேன்;//

எனக்குத் தெரிந்தவரை இயேசு அழைக்கிறார் நிறுவனர் டி.ஜி.எஸ்.-ஐ சில்சாம் எப்போதும் பாராட்டி ஆதரித்துதான் எழுதியுள்ளார். ஒருவேளை பால் தினகரனின் மீது உண்டான காழ்ப்புணர்ச்சியால் (இவ்வார்த்தை சில்சாமின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டதுதான்) பால் தினகரனை மட்டும் விமர்சிக்கிறார் போலும்.

chillsam wrote:
//அவர்கள் இந்த தேசத்தில் ஆண்டவருக்காக சாதித்தவைகள் அதிகமாகும்; அவர்களால் தமிழ்க் கிறித்தவ உலகம் இழந்ததைவிட அடைந்தது அதிகமாகும்; இந்த சமநோக்கு பார்வையுடனே நான் அவர்களை விமர்சிப்பேன்.//

எது சாதனை என்பதை இன்னமும் சில்சாம் அறியவில்லை போலும். ஒரேயொரு பாவி மனந்திரும்பினால்கூட பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என லூக்கா 15:7 கூறுகிறது. ஆனால் டி.ஜி.எஸ். போன்றோரின் ஊழியத்தால் திரும்புகிறவர்களில் பெரும்பாலானவர்கள் தெய்வ வணக்கத்தில் மட்டுமே திரும்புகிறவர்கள். அதாவது தெய்வ வணக்கத்தைத் தவிர்த்த பிற காரியங்களில் அவர்கள் மனந்திரும்புவதில்லை.

தங்கள் உலகத்தேவைகளுக்காக முன்பு புறமார்க்க தெய்வத்தைத் தேடியவர்கள் தற்போது இயேசுவைத் தேடுகின்றனர், அவ்வளவே. இவர்களைக் குறித்துதான் பவுல் இப்படிக் கூறுகிறார்.

1 கொரி. 15:19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

இளம் பங்காளர் திட்டம் போன்ற டி.ஜி.எஸ்.-ன் திட்டங்கள் அனைத்தும் இம்மைக்கானவைகளே. அம்மாதிரியான இம்மைக்கான திட்டத்தில்தான் சில்சாமின் சகோதரர் தனது பிள்ளைகளைச் சேர்த்துள்ளார். சில்சாமின் சகோதரரைப் போன்ற திரளான ஜனங்கள் மெய்யாகவே டி.ஜி.எஸ்.-ன் ஊழியத்தால் மனந்திரும்பியிருந்தால், அவர்கள் டி.ஜி.எஸ்.-ன் இம்மைக்கான திட்டங்களில் சேராமல், மத்தேயு 6:33-ல் இயேசு சொன்ன வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் மட்டுமே தேடியிருக்க வேண்டும். அல்லது ஏசாயா 58:5-9 வசனங்களில் தேவன் தந்த வாக்குத்தத்தத்தைச் சுதந்தரிக்கும்படி நடந்திருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் செய்யாமல், இம்மைக்கான நன்மைகளை நாடுவோரைக் குறித்து வேதாகமம் இப்படி எச்சரிக்கிறது.

2 பேதுரு 2:20,21 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

நீதியின் மார்க்கத்தைக் கற்றுத்தந்த இயேசுவின் பரிசுத்த கற்பனைகளில் ஒன்று: நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள் என்பதாகும் (மத்தேயு 6:34). அந்த பரிசுத்த கற்பனையை விட்டுவிலகி, நாளைக்காகக் கவலைப்பட்டு, இளம் பங்காளர் திட்டம் போன்ற இம்மைக்கான திட்டங்களில் சேருவோர்கள், இயேசுவை அறியாதிருப்பதே நலம் என பேதுரு கூறுகிறார். இப்போது சில்சாம் சொல்லட்டும், இம்மைக்கான நாளைய தேவைகளுக்கு ஜனங்களை வழிநடத்துகிற டி.ஜி.எஸ்.-ன் ஊழியம் மெய்யாகவே சாதனைதானா என்று.

chillsam wrote:
//ஒரு குறிப்பிட்ட அடித்தளத்தை இடித்து தரைமட்டமாக்குவதற்கு முன் அதன் மீது எதைக் கட்டப்போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டுமல்லவா?//

யாருடைய கட்டடத்தையும் கோபுரத்தையும் இடிப்பது எமது நோக்கமல்ல. (தந்தை கட்டின கட்டடத்தை இடித்துவிட்டு வேறொரு கட்டடம் கட்டுகிற பணியைத்தான் தமையனே செய்கிறாரே!) தவறான ஊழியர்களால் உலகம் எனும் அடித்தளத்தால் கட்டப்பட்ட கட்டடத்தை இடிப்பதுதான் எமது நோக்கம். அந்தக் கட்டடத்தை இடித்தாலே போதும், பரலோகம் எனும் அடித்தளத்தால் கட்டப்படும் கட்டடம் தானாக எழும்பிவிடும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

chillsam wrote:
//நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இயேசு அழைக்கிறார் ஊழியம் கிறித்தவர்களை நம்பி நடைபெறவில்லை; அதன் ஆதரவாளர்களில் பெரும்பகுதியானவர்கள் வேற்று மார்க்கத்தைச் சார்ந்தவர்களாவர்; அல்லது முறைப்படுத்தப்படா மார்க்கத்தைச் சார்ந்தவர்கள்.//

பெரும்பாலும் வேற்று மார்க்கத்தவர்களே “இயேசு அழைக்கிறார்” எனும் கிறிஸ்தவ ஊழியத்தை ஆதரிக்கின்றனர் என்றால் என்ன அர்த்தம்? இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் பிரதான சுவிசேஷம் “உலகத்தைக்” குறித்தே என்பதுதானே?

இதையெல்லாம் தெரிந்துங்கூட, “இயேசு அழைக்கிறார்” ஊழியத்தையும் அதன் ஸ்தாபகரையும் சில்சாம் ஆதரிக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது.

எப்படியோ “இயேசு அழைக்கிறார்” ஊழியம் “கள்ள ஊழியம்” என்பதற்கான ஆதாரங்களை சில்சாம் தன்னையறியாமல் ஒவ்வொன்றாக வெளியிட்டு ஒரு நற்பணியைச் செய்துவருகிறார்.

chillsam wrote:
//உதாரணத்துக்கு ஒரு சாதாரண சுமை சுமக்கும் கூலியாள் வீட்டில் கூட டிவி எனும் பொழுதுபோக்கு சாதனம் இருக்கிறது;அதற்கு மாத்திரமே ஒரு மாதத்துக்கு சராசரியாக ரூபாய் 250 செலவிடப்படுகிறது;வாராவாரம் சாமி பூஜைக்கு மாத்திரமே குறைந்தது 100, ஆக மாதத்துக்கு 400 ரூபாய் ஆகிவிடும்;அதிலும் குடும்பமாக எங்காவது அருகிலிருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று வந்தாலும் எப்படியும் குறைந்த பட்சமாக 2000 ரூபாய் ஆகிவிடும்;மேலும் ஸ்பெஷல் நேர்த்தி கடன், புண்ணிய க்ஷேத்திர பயணம் மற்றும் தான தர்மங்களுக்கென்று ஒரு வருடத்துக்கு சுமார் 10,000 ரூபாய் செலவிடுகிறோம்;அதற்கும் மேலாக ஜாதகம் ஜோதிடம் குறிகேட்டல் பரிகாரப் பூஜைகள் என திடீர் செலவுகளும் 5000 ரூபாய்க்கு குறையாமலும் அதிகப்பட்சம் 50,000 ரூபாய் வரையிலும் ஆகிறது;இதையெல்லாம் தவிர வீட்டுத் தலைவரின் சந்தோஷ செலவுகள் மதுபானம் மற்றும் இத்தியாதி செலவுகளுக்கு ஒரு மாதத்துக்கு எப்படியும் 5000 ரூபாய் தேவைப்படும்; இன்னும் மருத்துவ செலவுகள் - விபத்துகளால் உண்டாகும் செலவுகளையும் கணக்கில் கொள்ளவேண்டும்; இவ்வளவும் ஜீவாதார செலவுகளான உணவு இருப்பிடம் உடை மற்றும் பிள்ளைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் கணக்கில் கொள்ளாத செலவினங்கள்; இதுவே இன்றைய சாமான்ய கூலியாளின் வாழ்க்கை முறை..!

இந்த செலவுகளையும் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து மாண்டு போவோர் எத்தனை பேர், அல்லது இதிலிருந்து மீள விபச்சாரம் மற்றும் திருட்டு, இலஞ்சம் ஆகிய கீழ்த்தரமான வாழ்க்கை முறையை நோக்கி நழுவிச் செல்வோர் எத்தனை பேர்?

இப்படிப்பட்டவர்களே கிறித்தவ ஊழியர்களின் இலக்கு;//


மொத்தத்தில் தரித்திரர்களே கிறிஸ்தவ ஊழியர்களின் இலக்கு என்கிறார் சில்சாம். இத்தகவலில் பாதிதான் உண்மை என்ற போதிலும், வேதாகமும்கூட “தரித்திரருக்குச் சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது” எனக் கூறுவதன்படி, தரித்திரரை கிறிஸ்தவ ஊழியர்கள் தங்கள் இலக்காகக் கொள்வதில் தவறில்லை. ஆனால், வேதாகமம் சொல்கிற சுவிசேஷம், பரலோக ராஜ்யத்திற்கு வழிகாடும் சுவிசேஷம்; அதனால்தான் தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள் என இயேசு கூறினார். இயேசுவோ வேதாகம ஊழியர்களோ தரித்திரர்களின் தரித்திரத்தைப் பார்த்து மனமுருகவுமில்லை, தரித்திரத்தைப் போக்க முயலவுமில்லை.

ஆனால் நம் ஊழியர்களோ, தரித்திரரின் தரித்திரத்தைப் போக்கியே தீருவோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, பல்லைக் கடித்து, “இர்ர்ர்ரரங்கும் ஆண்டவரே, இர்ர்ர்ரரங்கும்” என்று சொல்லி ஜெபித்து ஆண்டவருக்கே கட்டளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவா வேதாகமம் காட்டுகிற ஊழியம்? சிந்தியுங்கள் சில்சாம், சிந்தியுங்கள்.

அடுத்து, சில்சாம் சொல்வதுபோல தரித்திரர்கள் மட்டும் இன்றைய ஊழியர்களின் இலக்கு அல்ல. பணக்காரர்களையும் அதிகமாகக் குறிவைத்துதான் இவர்கள் ஊழியஞ்செய்கின்றனர். தங்கநிற சாவி வியாபாரம் ஒன்றே போதும், இதற்குச் சாட்சியாக.

ஒவ்வொரு ஊழியரும் தங்கள் கூடாரம், கோபுரம், தோட்டம் போன்றவற்றைக் கட்டுவதற்கு “10000 கொடுக்கக்கூடிய 500 பேர் தேவை”, “1000 கொடுக்கக்கூடிய 5000 பேர் தேவை” என்றெல்லாம் சொல்லி “அறைகூவல்” விடுக்கிறார்களே, இதெல்லாம் யாரைக் குறிவைத்து? பணக்காரர்களையே என்பதை பாவம் சில்சாம் அறியார் போலும்.

சில்சாம் அவர்களே! தேவன் தங்களுக்குக் கொடுத்த அறிவைக்கொண்டு சற்றேனும் சிந்தியுங்கள்.

chillsam wrote:
//மறுபுறத்தில் ஒரு ஊழிய ஸ்தாபனத்தை நடத்திச் செல்ல தங்கள் பேர் புகழைக் காப்பாற்றிக் கொள்ள நிறைய பணம் வேண்டும்;எனவே தங்களால் ஈர்க்கப்பட்ட மக்களிடமிருக்கும் பணத்தைக் குறிவைத்து திட்டங்களை தயாரிக்கிறார்கள்;//

திட்டங்களை அறிவிக்கும் அத்தனை ஊழியர்களும் பித்தலாட்டக்காரர்களே என்பதை தன்னையுமறியாமல் சில்சாம் அறிவித்து விட்டார். ஏனெனில் இவ்வூழியர்கள் அனைவரும் சொல்வது, “தேவனே தங்களுக்குத் திட்டங்களை அறிவித்ததாக”. ஆனால் பணத்துக்காகத்தான் இவர்கள் திட்டங்களை அறிவிக்கின்றனர் என்பதை சில்சாம் அழகாகச் சொல்லிவிட்டார்.

chillsam wrote:
//ஒரு சபைக்குக் கட்டுப்பட்டவர்கள் தங்கள் சபையை தங்கள் சம்பாத்தியத்தினால் தாங்குவார்கள்;ஆனால் சபைக்குட்படாமலும் மதம் மாற விரும்பாமலும் இறைவன் அருள் மாத்திரம் இருந்தால் மட்டும் போதும் என்று எண்ணும் புதியவர்கள் முழு சத்தியத்தை அறியும்வரை அவர்களுக்கான தற்காலிக பராமரிப்பு ஸ்தலம் தேவைப்படுகிறது; அப்படிப்பட்ட இடைவெளியை அதாவது இயேசுவின் அற்புத சக்தியை உணர்ந்தும் அவருடைய தெய்வீகத் தன்மையை அறிந்தும் உடனடியாக மதம் மாற விரும்பாதவர்களின் தேவையை இதுபோன்ற சுயாதீன ஊழியங்கள் நிரப்புகிறது;இது சரியா தவறா என்று நான் தீர்ப்பு செய்யவில்லை;ஆனால் அதுவே தற்போதய நிலவரம்; சரி,இதுபோன்ற தற்காலிக முகாம்களும் (அகதிகள் முகாம் என்றே வைத்துக்கொள்ளுவோம்..!)  இராதிருந்தால் நிலைமை என்னவாகும்?//

தற்காலிக பராமரிப்பு ஸ்தலம் தேவைப்படுகிறதாம். இந்த “ஸ்தலத்தைக்” குறித்து எந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது, சில்சாம் அவர்களே? வேதத்துக்குப் புறம்பான செயல்களை வெளிச்சம் போட்டுக் காண்பித்துவிட்டு, அச்செயல்களைச் செய்வோரை ஆதரிக்கவும் செய்கிற உங்கள் தைரியமும் திறமையும் யாருக்கும் வராது சில்சாம் அவர்களே!

chillsam wrote:
//சீர்திருத்தல் நிறைவேறும் வரைக்கும் இயேசு அழைக்கிறார் ஊழியமும் தன் பங்கை நிறைவேற்றும்; அந்த ஊழியத்தின் தேவைகளுக்காக புதுப்புது திட்டங்களை யோசித்து ஆண்டவர் பெயரால் அறிவிக்கிறார்கள்;//

புதுப்புது திட்டங்களை யோசித்து ஆண்டவர் பெயரால் அறிவிக்கிற “இயேசு அழைக்கிறார் ஊழியத்தின்” பித்தலாட்டத்தை வெளிப்படுத்திய சில்சாமுக்கு மனதார பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

chillsam wrote:
//ஊழியத்தின் தேவைகளுக்காக புதுப்புது திட்டங்களை யோசித்து ஆண்டவர் பெயரால் அறிவிக்கிறார்கள்; அதில் அவரவர் விரும்பி இணைகிறார்கள்; யாரும் மிரட்டவோ வற்புறுத்தப்படவோ இல்லை; நம்பிக்கை பெருகும் அளவுக்கு பணமும் பெருகுகிறது; பணம் பெருகினால் வழக்கமாகவே பெருகக்கூடிய பெருமையும் ஏனையோரின் பொறாமையும் தவிர்க்க இயலாத அளவில் பெருகுகிறது.//

பித்தலாட்ட திட்டத்தை அறிவித்துவிட்டு, அதில் இணைவதற்கு யாரையும் மிரட்டவோ வற்புறுத்தவோ இல்லை எனச் சொல்லி சில்சாம் பெருமைப்பட்டுக் கொள்கிறார். இதைத்தான் “வஞ்சப்புகழ்ச்சி அணி” எனச் சொல்கிறார்களோ?

இவர்கள் ஏன் மிரட்டவேண்டும், ஏன் வற்புறுத்த வேண்டும்? அதான் பவுல் சொல்கிறபடி “நயவசனிப்பான, இச்சகமான” வார்த்தைகளைச் சொல்கிறார்களே, அது ஒன்று போதாதா, மக்கள் ஏமாறுவதற்கு?

ஏனையோரின் பொறாமையும் தவிர்க்க இயலாத அளவில் பெருகுகிறது எனும் உண்மையையும் போட்டு உடைத்த சில்சாமுக்கு நன்றி. ஆனால் ஒரு சிறு திருத்தம்: “ஏனையோரின்” அல்ல, “ஏனைய ஊழியர்களின்” என இருக்கவேண்டும்.

ஏனைய (கள்ள) ஊழியர்களின் பொறாமையும் தவிர்க்க இயலாத அளவில் பெருகுகிறது என்பது 100-க்கு 100 உண்மையே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

ஏனையோரின் பொறாமையும் தவிர்க்க இயலாத அளவில் பெருகுகிறது எனும் உண்மையையும் போட்டு உடைத்த சில்சாமுக்கு நன்றி. ஆனால் ஒரு சிறு திருத்தம்: “ஏனையோரின்” அல்ல, “ஏனைய ஊழியர்களின்” என இருக்கவேண்டும்.

ஏனைய  ஊழியர்களின் பொறாமையும் தவிர்க்க இயலாத அளவில் பெருகுகிறது என்பது 100-க்கு 100 உண்மையே.
--------------------------------------------------------------------------

இப்படி அடுத்தவரின் முன்னேற்றத்தை பொறுக்க முடியாமல் தனக்குள்  எரியும்  பொறாமைதான்  இங்கு ஒரு ஊழியர் மற்ற ஊழியர்களை குறைசொல்ல வைக்கிறது என்றே நான்  கருதுகிறேன்.
  
 

 



__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

//chillsam wrote:
//அவர்கள் இந்த தேசத்தில் ஆண்டவருக்காக சாதித்தவைகள் அதிகமாகும்; அவர்களால் தமிழ்க் கிறித்தவ உலகம் இழந்ததைவிட அடைந்தது அதிகமாகும்; இந்த சமநோக்கு பார்வையுடனே நான் அவர்களை விமர்சிப்பேன்.//

இந்த‌ தேச‌த்தில் அவ‌ர்க‌ள் ஆண்ட‌வ‌ருக்காக‌ சாத்தித்த‌வைக‌ள் என்றால் என்ன‌வென்றே தெரிய‌வில்லை, ஆனால் நிச்ச‌ய‌மாக‌ அவ‌ர்க‌ளுக்காக‌ நிறைய‌வே சாதித்திருக்கிறார்கள்!!

நான் ஒரு அதிகாரியாக‌ இருந்து அந்த‌ ப‌த‌வியை துற‌ந்து ஊழிய‌த்திற்கு வ‌ந்துவிட்டேன் என்று சொல்லுகிற‌ ப‌ல‌ ஊழிய‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்!! அதை துவ‌க்கி வைத்த‌வ‌ர் டீ.ஜீ.எஸ் அவ‌ர்க‌ளே!! அன்று வ‌ங்கி ஊழிய‌ராக‌ இருந்த நிலைக்கும் இப்பொழுது அவ‌ர்க‌ள் இருக்கும் நிலைக்கும் உள்ள‌ வித்தியாச‌த்தை பார்த்து அநேக‌ர் அப்ப‌டி வ‌ந்து விட்டார்க‌ள்!! அதில் இன்னோருவ‌ர் ஆல‌ன் ப‌வுல்!! இவ‌ர்க‌ள் எல்லாம் அன்று அதிப‌ட்ச‌மாக‌ ஒரு ஸ்கூட்ட‌ரின் சென்றிருக்க‌லாம், ஆனால் இன்று இவ‌ர்க‌ள் செல்லும் வாக‌ன‌ங்க‌ளையும் அத‌ன் எண்ணிக்கைக‌ளையும் பார்த்தாலே இவ‌ர்க‌ள் எதனை சாதித்திருக்கிறார்க‌ள் என்று தெரிய‌வ‌ரும்!!

இவ‌ர்க‌ள் ப‌ண‌க்கார‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள் என்ப‌தில் என‌க்கு போறாமை கிடையாது ஆனால் அதை எப்ப‌டி அடைந்தார்க‌ள் என்ப‌து தான் பார்க்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌மாக‌ இருக்கிற‌து!! இதை தான் இவ‌ர்க‌ள் சாதித்திருக்கிறார்க‌ள்!! அன்று ப‌வுலோ த‌ன்னிட‌மிருந்த‌ அனைத்தையும் குப்பை என்று என்னி ஊழிய‌ம் செய்தார், இன்று இந்த‌ ஊழிய‌ர்க‌ளோ த‌ன்னிட‌ம் இருப்ப‌து போத‌வில்லை அதை பெருக்க‌னும் என்று ஊழிய‌ம் செய்கிறார்க‌ள்!! ஆனாலும் த‌ங்க‌ளை அப்போஸ்த‌ல‌ர்க‌ள் என்று அழைக்க‌ப்ப‌டுவ‌தை விரும்புகிறார்க‌ள்!!

கூட்ட‌த்தை வைத்து ஒருவ‌ர் சாதிக்கிறார் என்றால், திருப்ப‌தியில், நாகூரில், வேளாங்க‌ன்னியில், ச‌ப‌ரிம‌லையில் போன்ற‌ இட‌ங்க‌ளிலும் தான் கூட்ட‌ம் கூடுகிற‌து!! அப்ப‌டி என்றால் எல்லாம் ஒன்று தானே!! இன்று ஜ‌க்கி வாசுதேவ், ர‌வி ஷ‌ங்க‌ர், பாபா ராம்தேவ், சாய்பாபா, இவ‌ர்க‌ள் முன் கூடுவ‌தும் கூட்ட‌ம் தானே!! இவ‌ர்க‌ளிட‌மும் சில‌ ப‌ல‌ அற்புத‌ங்க‌ள் ந‌ட‌ப்ப‌தினால் தானே தொட‌ர்ந்து ம‌க்க‌ள் அங்கு செல்கிறார்க‌ள்!! அதை மோச‌டி என்று விம‌ர்சிக்கும் இவ‌ர்க‌ள், ந‌ம் ஊழிய‌ர்க‌ள் மாத்திர‌ம் தேவ‌ ஆவியில் இதை செய்கிறார்க‌ள் என்ப‌த‌ற்கு அவ‌ர்க‌ள் ந‌ம் ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ள் என்கிற‌ ப‌ற்று ஒன்றே த‌விர‌ வேறு ஒன்றும் இல்லை!!

குழ‌ந்தை பெறுவ‌த‌ற்கான‌ ஜெப‌ம் என்று கூட்ட‌ம் கூட்டுவார்க‌ள், ஆனால் அவ‌ர்க‌ள் வீட்டிலேயே குழ‌ந்தை இருக்காது!! இவ‌ர்க‌ளை எல்லாம் மோச‌டி செய்கிற‌வ‌ர்க‌ள் என்று வ‌ழ‌க்கு ப‌திவு செய்தால் தான் ச‌ரிப்ப‌டுவார்க‌ள்!! இள‌ம் ப‌ங்காள‌ர் திட்ட‌ம் என்ப‌து மாத்திர‌ம் இல்லை, இவ‌ர்க‌ள் போல், இவ‌ர்க‌ளின் திட்ட‌ங்க‌லை போல் இன்று ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் ப‌ல‌ ஊழிய‌ர்க‌ளால் தொட‌ங்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து!! இதை தான் இவ‌ர்க‌ள் முன் நின்று சாதித்திருக்கிறார்க‌ள்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard