நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: (2 ) உண்மை மதத்தை அடையாளம் காண்பது எப்படி?


Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
(2 ) உண்மை மதத்தை அடையாளம் காண்பது எப்படி?
Permalink  
 


பெரும்பாலான மதங்கள் கடவுளுடைய வார்த்தையையே    போதிப்பதாக   சொல்கின்றனர். ஆகையால், இயேசுவின்  அப்போஸ்த்லனான யோவான் சொன்ன வார்த்தைகளுக்கு நாம்  கவனம் செலுத்துவது அவசியம். அது இவ்வாறு வாசிகிறது : 1John 4:1 ''பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்''. என அவர் எழுதினார்.
ஒரு தகவல் கடவுளிடமிருந்து வந்ததுதானா என்பதை நாம் எப்படிச் சோதித்தறிவது ?   தொடரும் ...


-- Edited by Dino on Tuesday 15th of March 2011 01:43:31 PM

-- Edited by Dino on Tuesday 15th of March 2011 01:45:04 PM

-- Edited by Dino on Tuesday 15th of March 2011 01:46:39 PM

__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

கடவுளிடமிருந்து வருகிற அனைத்தும் அவருடைய சுபாவத்தை, முக்கியமாக அவருடைய தலைசிறந்த குணமான அன்பைப் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, மூலிகை செடிகள், வண்ண மலர்கள் அல்லது சுடச் சுடச் செய்யப்பட்ட ப்ரெட் ஆகியவற்றின் வாசனையே நம்முடைய முகரும் திறனால் நுகர முடிகிறது; இது கடவுளுடைய அன்பின் வெளிக்காட்டு. சூரிய அஸ்தமனதியையே நாம் பார்த்து மகிழ்கிறோம். இது கடவுள் நம்மீது அன்பு வைத்திருப்பதை காட்டுகிறது. அருமையான இசையே, பறவையின் இனிய கீதத்தை, அன்பானவரின் பாசக் குரலைக் கேட்கும் திறனை நாம் பெற்றுருப்பதும் கடவுளுடைய அன்பின் வெளிக்காடே. நம்மிடம் அபூரனத்தன்மை இருந்தாலும் கூட நாம் கடவுளுடைய அன்பைப் பிரதிபலிக்க முடிகிறது. 
 
அதன் காரணமாகவே, இயேசுவின்  பின்வரும் வார்த்தைகள் உண்மை என்பதை நாம் அனுபவத்தில் கான்பிறோம்: அப்போஸ்தலர் 20 :  35. ''இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்''.  நாம் ஆதியாகமம் 1 : 27. ''தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்''. ஆகவே நாம் தேவசாயலாக படைக்கப் பட்டபடியால் தான் பிறரிடம் அன்பு காட்டுகிறோம். யேகோவாவிடம் அனேக குணங்கள் இருக்கிற போதிலும், அன்பு அவருடைய சுபாவத்தின் தலைசிறந்த அம்சமாகும்.
கடவுள் கொடுத்த புத்தகத்தில் அவரது அன்பு பிரதிபலிக்க வேண்டும். உலக மதங்கள் பல பழங்கால புத்தகங்களை வைத்து இருக்கின்றனர்.  இப்புத்தகங்களை கடவுளுடைய அன்பை எந்தளவுக்கும் பிரதிபளிகின்றனர்?
 
உண்மை என்னவென்றால், அந்தப் பழங்கால மதப்  புத்தகங்களின் பெரும்பாலானவை கடவுள் நம்மிடம் எப்படி அன்பு காட்டுகிறார், நாம் அவரிடம் எப்படி அன்பு காட்டலாம் என்றெல்லாம் விளங்குவதில்லை. இதனால் தான்,  ''படைப்பில் கடவுளுடைய அன்பைப் பார்க்க முடிந்தாலும், துன்பமும் கெட்ட காரியங்களும் ஏன் தொடர்ந்து நடக்கின்றனர்''?  என அநேகர் கேட்கும் கேள்விக்குப் பதில் கிடைப் பதில்லை. மறுபட்சதில், கடவுளுடைய அன்பைப்பற்றி முழுமையாக விளக்குகிற ஒரே பழங்கால மதப் புத்தகம் பைபல் தான். அன்பு காட்டுவது எப்படி என்பதையும் அது நமக்கு கற்றுத் தருகிறது.  தொடரும் .......


__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

அன்பை விளக்கும் புத்தகம் 
 
யெகோவாவின் 'அன்பின் தேவன்' என அவருடைய வார்த்தையாகிய பைபல் தெரிவிக்கிறது. 2  கொரிந்தியர் 13 :11  இவ்வாறு நமக்கு கூறுகிறது:- ''கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்''.   முதல் மனிதருக்கு நோயும் சாவும் இல்லாத வாழ்க்கையே கொடுக்க அன்பு அவரை எப்படி ஊந்துவித்தது என்பதை பைபல் விவரிக்கிறது. ஆனால், கடவுளுடைய ஆட்சிக்கு எதிராக அவர்கள் கலகம் செய்ததால் மனிதகுலத்துக்கு துன்பம் வந்தது.
( உபாகமம் 32 :4 ,5 :- 'அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். 5 அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்''
ரோமர் 5 :12 :- '' இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று'' ) 
மனிதகுலம் இழந்ததை திரும்பக் கொடுப்பதற்கு யெகோவா நடவடிக்கை எடுத்தார். அதைக் குறித்து கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: 

யோவான் 3 :16  ''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''  

கடவுளுடைய அன்பைப் பற்றி பரிசுத்த பைபல் இன்னும் தெளிவாக விவரிக்கிறது. அதாவது,
கிழப்படிதலுள்ள மனித குலத்தை மீண்டும் சமாதானமான சூழ்நிலையில் வாழவைப்பதற்காக ஓர் அருமையான அரசாங்கத்தை ஏற்படுத்தி அதை இயேசுவிடம் ஒப்படைத்து இருக்கிறார் என அது விவரிக்கிறது.  ( தானியேல் 7 :13 ,14  :- இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.
14. சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்''   /  2  பேதுரு 3 :13 :- '' அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்'')  

அப்படியானால், மனிதரின் கடமையே பைபல் இவ்வாறு சுருக்கமாக சொல்கிறது:- மத்தேயு 22 :37 -40  '' 37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
38. இது முதலாம் பிரதான கற்பனை.
39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
வேதவாக்கியங்கள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை என பைபளே சொல்கிறது. இவ்வாறு பைபல் அவருடைய சுபாவத்தை பிரதிபலித்தால், இது '' அன்பின் தேவனுடைய'' புத்தகம் என்பதில் நாம் நிட்சயமாய் இருக்கலாம். 2  திமொதயு 3 :16  '' வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி''  என்று இருக்கிறது.

இந்த ஆதாரத்தை வைத்தே எந்தப் பழங்கால புத்தகம் உண்மையில் கடவுளுடைய புத்தகம் என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். உண்மை மதத்தவர் யார் என்பதையும் அன்பு அடையாளம் காட்டுகிறது. ஏனெனில், அன்பு காட்டுவதில் அவர்கள் கடவுளை பின்பற்றுகிறார்கள். தொடரும் .....



-- Edited by Dino on Tuesday 15th of March 2011 08:35:33 PM

__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard