நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவைபெரியன்ஸ் தள கேள்விகளுக்கான பதில்கள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: கோவைபெரியன்ஸ் தள கேள்விகளுக்கான பதில்கள்
Permalink  
 


bereans wrote:

//மற்ற மனிதர்களை போல் முழுவதுமாக மரித்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவம்!!//

அன்பான சகோதரரே!

மற்ற மனிதர்கள் முழுவதுமாக மரிக்கின்றனர் என்றா அவர்கள் சொல்கின்றனர்?

தவறு சகோதரரே! மனிதர்களின் சரீரம் மட்டுந்தான் மரிக்கிறது; அவர்களின் ஆவி அல்லது ஆத்துமா உயிரோடிருந்து நரகத்தில் வாதிக்கப்படுகிறது அல்லது பரதீசில் இளைப்பாறுகிறது என்றல்லவா சொல்கின்றனர்.

soulsolution (கற்பனையாகச்) சொன்னதுபோல், விலக்கப்பட்ட கனியைச் சாப்பிட்ட ஒரே குற்றத்திற்காக ஆதாம் சுமார் 6000 வருடங்கள் நரகத்தில் உயிரோடு வாதிக்கப்படுகிறார், அல்லது ஒருவேளை தேவன் அவரை மன்னித்திருந்தால் அவர் பரதீசில் உயிரோடு இளைப்பாறுகிறார்.

எப்படியானாலும் விலக்கப்பட்ட கனியை புசித்தால் சாகவே சாவாய் என தேவன் சொன்னபடி ஆதாமுக்கு நிகழாமல், கனியைச் சாப்பிட்டால் சாகவே சாவதில்லை என சாத்தான் கூறியபடிதான் நடந்துள்ளது (இந்த கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி).

தேவனின் கூற்றை பொய்யாக்கி சாத்தானின் கூற்றை உண்மையாக்குகிற இதைவிட ஒரு தேவதூஷணம் இருக்கமுடியுமா, அல்லது இதைவிட அதிகமாக பொய்யனாகிய சாத்தானை மகிமைப்படுத்தமுடியுமா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

50. ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் அவன் உயிர்த்தெழ முடியுமா? அவனுடைய கணக்கில் பாவமிருந்தால் மரணம் அவனை விடுவிக்குமா?

ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையிலும் அவன் உயிர்த்தெழ முடியுமென்றே வேதாகமம் கூறுகிறது. இதற்கான ஆதாரம், மத்தேயு 25:31-46 வசனங்களில் அடங்கியுள்ளது.

அப்பகுதியின் சுருக்கம்:

31 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். 32 அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, 33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். .... 40 ... மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். ... 45 ... மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

இயேசுவின் இந்த அறிவிப்பை ஓர் உவமானம் என Kovaibereans தளத்தினர் கூறுகின்றனர். ஆனால் இது நிச்சயமாக உவமானமல்ல. நடக்கப்போகும் சம்பவத்தை அப்படியே இயேசு முன்னறிவிக்கிறார்.

31-ம் வசனத்தில், தமது 2-ம் வருகைக்குப்பின் இறுதி நியாயத்தீர்ப்பிற்காக தாம் வருவதைக் குறித்து இயேசு கூறுகிறார். 32-ம் வசனத்தில் சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகக் கூட்டப்படுவார்கள் எனக் கூறுகிறார். இங்கு கூட்டப்படும் ஜனங்கள் “மரிக்காத ஜனங்கள்” அல்ல. மரித்து உயிர்த்தெழுந்த “சகல ஜனங்கள்தான்” கூட்டப்படுவார்கள் என இயேசு கூறுகிறார். அவர்களை 2 பிரிவினராக பிரிப்பது எப்படி என்பதை மட்டுமே ஓர் உவமானத்துடன் கூறுகிறார். அதாவது மேய்ப்பனானவன் எப்படி செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் 2 பிரிவுகளாகப் பிரிப்பானோ அதேவிதமாக மனுஷகுமாரனும் ஜனங்களைப் பிரிப்பார் எனக் கூறுகிறார். இவ்விபரத்தை 32-ம் வசனத்தில் இயேசு தெளிவாகக் கூறுகிறார்.

கோவைபெரியன்ஸின் சகோதரர்கள் பெரியன்ஸ் மற்றும் soulsolution அவர்களே, 32-ம் வசனத்தில், “மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து” என இயேசு சொல்வதை நன்கு படியுங்கள். ஆடுகளைப் பிரிப்பதைப் போல, “அவர்களை அதாவது ஜனங்களை” அவர் பிரிப்பார் என மிகத் தெளிவாக இயேசு கூறுகிறார்.

பிரிக்கப்பட்ட 2 பிரிவினரான அந்த ஜனங்களைப் பார்த்துதான், 34-40 வசனங்களிலும், 41-45 வசனங்களிலும் தமது நியாயத்தீர்ப்பை அறிவிக்கிறார்.

முதல் பிரிவினர், நற்கிரியைகளைச் செய்தவர்கள்; 2-வது பிரிவினர், நற்கிரியைகளைச் செய்யாதவர்கள்.

நற்கிரியைகளைச் செய்தவர்களை “பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று சொல்லி, ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளும்படி கூறுகிறார்.

நற்கிரியைகளைச் செய்யாதவர்களை “சபிக்கப்பட்டவர்கள்” என்று சொல்லி, பிசாசுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குப் போகும்படி கூறுகிறார்.

இறுதி வசனமான 46-ம் வசனத்தில், நற்கிரியைகளைச் செய்யாதவர்களாகிய அநீதிமான்கள் நித்திய ஆக்கினை அடையவும், நற்கிரியைகளைச் செய்த நீதிமான்கள் நித்தியஜீவனை அடையவும் போவார்கள் என இயேசு கூறுவதையும் கவனிக்கவும்.

நற்கிரியைகளைச் செய்யாதவர்களை “சபிக்கப்பட்டவர்கள்” எனக் கூறி, அவர்களுக்கு பலனாக நித்தியஆக்கினையை இயேசு கூறுவதால், அவர்களின் கணக்கில் பாவம் இருக்கிறதென்றுதான் அர்த்தம். அவர்களின் கணக்கில் பாவம் இல்லையெனில், அவர்கள் எப்படி “சபிக்கப்படமுடியும்”, எப்படி நித்தியஆக்கினையை பலனாகப் பெறமுடியும்?

எனவே பாவமுள்ளவர்களாகத்தான் அவர்கள் உயிர்த்தெழுந்திருக்க வேண்டும். எல்லா மனிதருக்கும் முதலாம் மரணமென்பது, ஆதாமின் பாவத்தினிமித்தம் கிடைத்ததாகும். ஆதாமுக்குள் மரித்த மனிதர்கள், கிறிஸ்துவின் பலியினால் உண்டான இரட்சிப்பால் ஆதாமின் பாவம் நீக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் உயிர்த்தெழுவார்கள். இதைத்தான் 1 கொரி. 15:22 கூறுகிறது.

இவ்வாறு உயிர்த்தெழுகிற அனைவரின் மீதும் அவரவரின் பாவங்கள் இருக்கத்தான் செய்யும். அவரவரின் அந்த பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமெனில், அவர்கள் இரக்கமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். பின்வரும் வசனங்கள் கூறுவதைக் கவனிக்கவும்.

மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.

(இவ்வசனத்திற்கு முன்பாக இயேசு சொன்ன உவமானத்தில், 33-ம் வசனத்தில் “நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ” என எஜமானன் கூறுவதைக் கவனிக்கவும்)

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

நியாயத்தீர்ப்பில் “இரக்கம்” எனும் பண்பு மேன்மைபாராட்டும். அதாவது, ஒருவன் வேறு பாவங்களைச் செய்திருந்தாலும், அவன் “இரக்கமுள்ளவனாக” இருந்திருந்தால், அவனது “இரக்கம்” மேன்மையாகக் கருதப்பட்டு, அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படும்.

எனவேதான் இரக்கம் எனும் பண்பை உடையதான “அன்பை” இயேசுவும் அப்போஸ்தலரும் வலியுறுத்தி போதித்தனர்.

மத்தேயு 22:39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

1 கொரி. 13:13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

1 யோவான் 4:7  பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 16 தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 17 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது;  20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? 21 தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

நம்மிடம் அன்பு பூரணப்பட்டால், நியாயத்தீர்ப்பு நாளில் அது நமக்குத் தைரியமுண்டாக்கும். அன்புள்ளவர்கள் மத்தேயு 25:35,36-ல் கூறப்பட்டுள்ள நற்கிரியைகளைச் செய்திருப்பார்கள். எனவே அவர்களின் பிறபாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் நித்தியஜீவனைப்பெற தகுதியாக்கப்படுவார்கள். அன்பில்லாதவர்கள் மத்தேயு 25:35,36-ல் கூறப்பட்டுள்ள நற்கிரியைகளைச் செய்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களின் பிறபாவங்கள் மன்னிக்கப்படமாட்டாது. எனவே அவர்கள் நித்தியஆக்கினையையே பலனாகப் பெறுவார்கள்.

சகோ.பெரியன்ஸ் மற்றும் soulsolution இருவரும், எல்லோருக்கும் இரட்சிப்பு என மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது ஒருவிதத்தில் சரியானதுதான் என்றாலும், மற்றொரு விதத்தில் தவறுமாகும். ஆதாமின் பாவம் நீக்கப்பட்டு, அப்பாவத்தால் உண்டான மரணத்திலிருந்து எல்லோரும் இரட்சிக்கப்பட்டு உயிர்த்தெழுவார்கள் என்ற வகையில் அவர்களின் கூற்று சரியே. ஆனால் உயிர்த்தெழுந்த அவர்கள், மத்தேயு 25:31-41-ல் இயேசு கூறுகிறவிதமாக நியாயந்தீர்க்கப்பட்டு, ஒரு பிரிவினர் இரட்சிப்பைத் தக்கவைத்து, நித்திய ஜீவனைப் பெறுவார்கள்; மற்றொரு பிரிவினர் இரட்சிப்பை இழந்து நித்தியஆக்கினையை அடைவார்கள் எனும் உண்மையை அறியாமல், உயிர்த்தெழுகிற அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என அவர்கள் கூறுவது தவறே.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

51. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
நவீன காலத்து பிரசங்கிமார்கள் தொலைக்காட்சி ஊழிய நிகழ்ச்சிகளில் ஜெபிக்கிறார்கள்.
தேவன் அவர்கள் ஜெபத்தை கீழ்கண்ட சமயங்களில் கேட்டு பதில் தருகிறார்.

1. ஊழியர் நிகழ்ச்சியை Record செய்யும்போது.
2. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது.
3. மறுஒளிபரப்பின்போது.
4. TV ஐப்பார்த்துக்கொண்டே ஒரு விசுவாசி இணைந்து ஜெபிக்கும்போது.
5. மேற்கண்ட நான்கும் சரி.
6. இப்படிப்பட்ட மாய்மால ஜெபங்களை தேவன் ஒருபோதும் கேட்பதில்லை.

மறுபடியும் பயன்படுத்தும்படி Record பண்ண ஏற்பாடு செய்து ஜெபம் செய்தால், அந்த ஜெபம் மாய்மாலமான ஜெபமாகத்தான் இருக்கும். எனவே அந்த ஜெபத்தை தேவன் கேட்கமாட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.


52. வல்லமையுள்ள ஊழியர் ஒரு பிசாசை ஒருவரிடத்திலிருந்து துரத்தியதும் அது எங்கு போகும்?
1. நரகத்துக்கு   2. வேறெங்காவது சுற்றும்    3.அமைதியாக ஒரிடத்தில் இருக்கும்    4. இன்னொரு மனிதனுக்குள் போகும்

2. வேறெங்காவது சுற்றும்


53. மரித்த ஒருவரையாவது உயிரோடெழுப்பும், உயிரோடெழுப்பிய ஊழியர் உண்டா?

வேதாகமத்தில் உண்டு. வேதாகம காலத்திற்குப் பின் உண்டா என்பது தெரியவில்லை.


54. 'சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது உங்களை சேதப்படுத்தாது' என்ற வசனத்தை விசுவாசிக்கும் ஊழியர் உண்டா? ஆம் எனில் நிரூபிக்கத்தயாரா?

ஊழியர் உண்டா என்பது தெரியவில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

55. கர்த்தருடைய பந்தியை எவ்வாறு ஆசரிக்கலாம்?
1. வருடம் ஒரு முறை 2. வாரம் ஒரு முறை 3. தினமும் ஒரு முறை 4. மணிக்கு ஒரு முறை. 5 எப்போதுவேண்டுமானாலும்

இதுபற்றி வேதாகமம் எந்த குறிப்பையும் சொல்லாததால், அவரவர் விருப்பப்படி ஆசரிக்கலாம்.


56. இஸ்ரவேலர்கள் பாஸ்காவை வருடம் ஒரு முறைமட்டுமே அனுசரித்தார்கள். நமது பாஸ்காவாகிய இயேசுகிறிஸ்துவின் பந்தியில் இவ்வளவு குளறுபடிகள் ஏன்?

இஸ்ரவேலர் ஆசரித்த பஸ்காவை நாம் ஆசரிக்கவில்லை. இஸ்ரவேலரின் பஸ்காவை ஆசரிப்பவர்கள், அதை வருடமொருமுறை பஸ்கா நாளில் செய்வதுதான் சரி.

நாம் ஆசரிக்கிற கர்த்தருடைய பந்தி என்பது, இஸ்ரவேலரின் பஸ்கா ஆசரிப்பு அல்ல. லூக்கா 22:19-ல் இயேசு கேட்டுக்கொண்டபடியே, அவரை நினைவுகூரும்படியாகத்தான் கர்த்தருடைய பந்தியை நாம் ஆசரிக்கிறோம். இதை இன்னின்ன நாட்களில்தான் ஆசரிக்கவேண்டுமென இயேசுவும் கூறவில்லை, அப்போஸ்தலரும் கூறவில்லை. எனவே நாம் விரும்புகிற எந்த நாளிலும் இதை ஆசரிக்கலாம்.

ஆகிலும், இதை ஆசரிப்பதற்கும் நித்தியஜீவனைப் பெறுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நித்தியஜீவனை சுதந்தரிக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பல வேதவசனங்கள் கூறுகின்றன. அவற்றின்படி செய்தால்தான் நித்தியஜீவனை சுதந்தரிக்கமுடியும்.

57. இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாணாமல் ஒரு இயந்திரம் போல 'சுவிசேஷ' பணி செய்ய பணிக்கப்படும் கிறிஸ்தவனின் நிலை என்ன? ஏன் இது போன்ற மிக மிக அடிப்படைக் காரியங்கள் எந்த சபையிலும் போதிக்கப்படுவதில்லை?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாணாமல் ஒரு இயந்திரம் போல 'சுவிசேஷ' பணி செய்ய செய்கிற கிறிஸ்தவனின் நிலையை தேவன் தான் தீர்மானிப்பார். நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இதுபோன்ற காரியங்களை அடிப்படைக் காரியங்களாகக் கருதாத சபைகளில், அவற்றைக் குறித்து போதிக்கமாட்டார்கள்தானே?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சரியா? தவறா?

1. வேதத்தை ஆராய்ந்து பாருங்கள் என்று வேதமே கூறுகிறது.

ஆம்.

அப்போஸ்தலர் 17:11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

தீத்து 3:16,17 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

யோவான் 5:39  வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.


2. "எல்லாரும் ரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவால் நிரப்பப்படவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" ஆனால் அவரது இந்த சித்தம் ஒருபோதும் நிறைவேறாது.

தேவசித்தம் என்பது 2 வகைப்படும்.

1. மனிதன் என்னென்ன செய்யவேண்டும் என்பதுபற்றிய தேவசித்தம்.

2. மனிதனின் இறுதி நிலை என்னவாக வேண்டும் என்பதுபற்றிய தேவசித்தம்.

தேவன் மனிதனுக்குத் தந்த கற்பனைகளும் கட்டளைகளும்தான் மனிதன் என்னென்ன செய்யவேண்டும் என்பதுபற்றிய தேவசித்தம். அவரது அந்த சித்தப்படி நடந்து, எல்லா மனிதரும் நித்தியஜீவனைப் பெறவேண்டும் என்பதுதான் மனிதனின் இறுதி நிலை பற்றிய தேவசித்தம்.

எனவே எல்லா மனிதரும் நித்தியஜீவனைப் பெறவேண்டும் எனும் தேவசித்தம் நிறைவேற வேண்டுமெனில், எல்லா மனிதரும் தேவன் அவர்களுக்கிட்ட கற்பனைகளின்படி/கட்டளைகளின்படி நடக்கவேண்டும். இக்கருத்தை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.


3. மனிதன் ஜெபிக்காவிட்டால் தேவனால் ஒன்றும் செய்ய முடியாது.

இக்கருத்துக்கு ஆதாரமான வேதவசனம் இல்லை.


4. சாதாரணமாக நினைவு நாள் என்பது வருடம் ஒரு முறைதான் வரும்.

ஆம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

கோவை பெரியன்ஸ் தளத்தின் எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்தாகிவிட்டது. இனி, இவ்விடைகளைக் குறித்த அவர்களின் விமர்சனங்களை இத்தளத்திலோ அவர்களின் தளத்திலோ அவர்கள் தரலாம்.

மற்றவர்களும் தங்களது விமர்சனங்களைத் தரலாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard