நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து சர்வத்திற்கும் மேலான தேவனா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
கிறிஸ்து சர்வத்திற்கும் மேலான தேவனா?
Permalink  
 


திரித்துவவாதிகள் தாங்கள் நம்புகிற திரித்துவக் கொள்கைகளை ஒருபோதும் தெளிவாக அறிவிப்பதில்லை. ஆனால் சில வேதவசனங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டி, “பார்த்தீங்களா, கிறிஸ்துதான் பிதாவைவிட மேலானவர்” என்றும், “கிறிஸ்துவும் பிதாவும் ஒன்றுதான்” என்றும், “கிறிஸ்துவும் பிதாவும் சமமானவர்கள்” என்றும் மனம்போல சொல்லிக் கொள்வார்கள். உண்மையில் அவ்வசனங்களின் கருத்தை நிதானமாக ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் சொல்வது எதுவும் சரியல்ல என்பதை நாம் அறியமுடியும்.

வசனங்களின் கருத்தைப் புரட்டி, கிறிஸ்துவை பிதாவுக்குச் சமமானவராகவும் பிதாவைவிட மேலானவராகவும் காட்டுகிற அவர்கள், “பிதாவானவர் கிறிஸ்துவைவிட பெரியவர்” என நேரடியாக இயேசுவே சொல்கிற வசனத்திற்கு ஏடாகூடமான விளக்கத்தைக் கொடுத்து, தாங்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வார்கள்.

நாம் பயன்படுத்தும் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளவை யாவும், அவற்றை எழுதினவர்களின் நேரடி வாக்கியங்கள் அல்ல. வேறொரு மொழியில் எழுதப்பட்டு, மொழிமாற்றம் செய்யப்பட்டவையே அவை. ஆக்கியோனால் நேரடியாக எழுதப்பட்ட வாக்கியங்களே பல நேரங்களில் கருத்துசிதைவாகி புரிந்துகொள்ளப்படும்போது, மொழிமாற்றம் செய்யப்பட்ட வாக்கியங்கள் கருத்துசிதைவுக்குள்ளாக அதிக வாய்ப்புண்டு என்பது நாம் அறிந்ததே.

அப்படியிருந்தும், மொழிமாற்றம் செய்யப்பட்ட வாக்கியங்களின் கருத்தை சற்றும் ஆய்வுசெய்யாமல் அப்படியே எடுத்துக்கொண்டு, தங்கள் கோட்பாடுகளை நிரூபிப்பதுதான் திரித்துவவாதிகளின் வழக்கமாயுள்ளது. எந்த வசனமாக இருந்தாலும், அதன் மூலபாஷை வார்த்தைகள் என்ன சொல்கின்றன என்பதை சற்றாகிலும் ஆய்வுசெய்தால்தான், அவ்வசனத்தின் சரியான கருத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும். எனவே முடிந்தவரை மூலபாஷை வார்த்தைகளை ஆய்வு செய்து ஒரு வசனத்தின் கருத்தைப் புரிந்துகொள்வதுதான் சாலச்சிறந்தது. அதிலும் ஒரு வசனத்தின் கருத்தோடு மற்றொரு வசனம் முரண்படுகையில், கண்டிப்பாக மூலபாஷை வார்த்தைகள் என்ன சொல்கின்றன என்பதை ஆய்வுசெய்தல் மிகமிக அவசியம்.

ஆனால் இந்தத் திரித்துவவாதிகளோ, அப்படியெல்லாம் செய்யாமல், வெறுமனே மொழிபெயர்ப்பு வாசகத்தை எடுத்துச் சொல்லி தங்கள் கோட்பாட்டை நிலைநாட்ட முற்படுகின்றனர். உதாரணமாக, கிறிஸ்துவை சர்வத்திற்கும் மேலான தேவன் என ரோமர் 9:5 கூறுவதை சுட்டிக்காட்டி, பிதாவை விடவும் மேலான தேவனாக கிறிஸ்து இருக்கிறார் எனக் கூறுகின்றனர். இவர்கள் சொல்வது எத்தனை அறியாமையானது என்பதைப் புரிந்துகொள்ள அவ்வசனத்தின் ஒருசில ஆங்கில மொழிபெயர்ப்புகளை முதலாவது பார்ப்போம்.

தமிழ் மொழிபெயர்ப்பு:
ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்.

சில ஆங்கில மொழிபெயர்ப்புகள்:
1. Whose are the fathers, and of whom as concerning the flesh Christ came, who is over all, God blessed for ever. Amen. -King James Version(KJV)

2. Of whom are the fathers and from whom, according to the flesh, Christ came, who is over all, the eternally blessed God. Amen.     -New KJV

3. Theirs are the patriarchs, and from them is traced the human ancestry of Christ, who is God over all, forever praised! Amen.     -NIV

4. Whose are the fathers, and of whom is Christ as concerning the flesh,who is over all, God blessed for ever. Amen. -American Standard

5. Whose are the fathers, and from whom is the Christ according to the flesh, who is overall, God blessed forever. Amen. -New American Standard

6. Great men of God were your fathers, and Christ himself was one of you,a Jew so far as his human nature is concerned, he who now rules over all things. Praise God forever!     -Living Bible

7. To them belong the patriarchs, and of their race, according to the flesh, is the Christ. God who is overall be blessed for ever. Amen.  -Revised Standard

8. They have the family roots. Christ, in the human sense, came from them. God is over everyone. Praise Him forever. Amen. -Simple English

9. To them belong the fathers and out of them, so far as physical descent is concerened, came Christ who is overall, God, blessed for ever. Amen.-New Jerusalem with Apocrypha

10. Theirs the patriarchs, and from them, according to the flesh, is the Messiah. God who is overall be blessed forever. Amen. -New American with Apocrypha


ரோமர் 9:5-ன் ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமே இத்தனை வேறுபாடுகள் உள்ளன; இன்னும் பிற மொழிகளின் மொழிபெயர்ப்புகளுக்குச் சென்றால் இன்னும் என்னென்ன வேறுபாடுகள் இருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

இத்தனை வேறுபாடான கருத்துகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரு வசனத்தை ஆதாரமாகக் காட்டி, கிறிஸ்து பிதாவைவிட மேலானவர் எனச் சொல்வது எத்தனை பைத்தியக்காரத்தனமானது, எத்தனை போக்கிரித்தனமானது என்பதை விபரமறிந்தவர்கள் அறிவார்கள்.

தொடரும் ....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ரோமர் 9:5-ன் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் 10 மொழிபெயர்ப்புகளை கடந்த பதிவில் பார்த்தோம். அவற்றில் பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் KJV மொழிபெயர்ப்போடு ஒத்ததாக உள்ளன.

KJV மொழிபெயர்ப்பும் அதன் அர்த்தமும்:


Whose are the fathers, and of whom as concerning the flesh Christ came, who is over all, God blessed for ever. Amen.

இதன் அர்த்தம்:
மாம்சத்தில் வந்த கிறிஸ்துவானவர் இஸ்ரவேலரின் பிதாக்கள் எல்லாரிலும் மேலானவரும் மாம்சத்தில் வந்தவருமான கிறிஸ்து, என்றென்றும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனாயிருக்கிறார்” என்பதே.

இஸ்ரவேலரின் பிதாக்கள் எல்லாரிலும் கிறிஸ்து மேலானவர் என்ற அர்த்தத்தைதான் KJV உட்பட பெரும்பாலான ஆங்கில மொழிபெயர்ப்புகள் தருகின்றன. மூல பாஷை வார்த்தைகளின் நேரடி அர்த்தமும் அதேவிதமாகத்தான் இருக்கிறது.

ஆனால் நம் தமிழ் வேதாகமமோ, கிறிஸ்துவை சர்வத்திற்கும் மேலான தேவன் என்கிறது. இவ்வாக்கியத்தில் “சர்வத்திற்கும்” எனும் வார்த்தை இஸ்ரவேலரின் பிதாக்களையே குறிக்கிறது. நாமோ “சர்வத்திற்கும்” என்றதும், பிதா உட்பட வானத்திலும் பூமியிலும் உள்ள சர்வத்திற்கும் மேலானவர் என அர்த்தங்கொள்வதால்தான், பிதாவைக் காட்டிலும் மேலான தேவனாக கிறிஸ்துவை எண்ணுகிறோம். ஆனால் அது நிச்சயம் சரியல்ல.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard