வருடத்திற்கு 3 தரம் பண்டிகை ஆசரிக்கும்படி இஸ்ரவேலரிடம் தேவன் கூறியிருந்தார் (யாத்திராகமம் 23:14). ஆனால் அதே தேவன் ஆமோஸ் 5:21-ல், உங்கள் பண்டிகைகளை நான் பகைத்து வெறுக்கிறேன் என்றும் கூறினார்.
இதற்குக் காரணமென்ன? தேவனின் பிரதான கற்பனையாகிய தீமையை வெறுத்து நன்மையைச் செய்தல் எனும் கற்பனையை இஸ்ரவேலர்கள் செய்யவில்லை (ஆமோஸ் 5:14).
இந்நாட்களில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாக விளங்குகிற நாம் பற்பல பண்டிகைகளை ஆசரித்து வருகிறோம். இந்த ஆசரிப்புகள், மனுஷரின் கற்பனையால் வந்ததா? தேவனின் கற்பனையால் வந்ததா? சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
-- Edited by anbu57 on Monday 25th of January 2010 12:26:00 AM
இதை ஏன் பவுல் எழுதுகிறார்! ஏனென்றால் யூதர்கள் தான் இவைகளை அந்த காலத்திலும் நேரத்திலும் சரியாக தவறாமல் பின் பற்ற கட்டளை பெற்றவர்கள், ஆனால் கிறிஸ்தவர்களான பிறகும், யூதர்களை போல் இவைகளை ஆசரித்தால் யாருமே உங்களை குற்றப்படுத்துவார்களே, ஆகையால் இவைகளை விட்டு விடுங்கள் என்கிறார்
மேலும் நமக்கு என்று ஒரு பண்டிக்கை நாள் அனுசரிக்கும் படி நம் கர்த்தரும் நம் எஜமானனுமான இயேசு கிறிஸ்து சொல்லி விட்டு சென்றிருக்கிறார், அது,
I கொரிந்தியர் 5:8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
அது தான் திருவிருந்து, அல்லது கிறிஸ்துவின் பந்தி எனப்படும் பண்டிகை.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
போலிசபையான பாபிலோன் மகா வேசியின் அருவருப்புகளில் ஒன்றுதான் இந்தப் பண்டிகை அனுசரிப்புகள். உண்மையான கிறிஸ்துவின் சபையின் அங்கத்தினர்கள் இவைகளையெல்லாம் அனுசரிக்க மாட்டார்கள்.
இந்நாட்களில் உலகமுழுவதும் கிட்டத்தட்ட அனைத்து கிறிஸ்தவ சபையாராலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ் ஆகும்.
கிறிஸ்துவானவர் டிசம்பர் 25-ம் தேதிதான் பிறந்தார் என்று சொல்லி, அந்த நாளை கிறிஸ்துமஸ் என்ற பெயரில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். பொதுவாக பெருந்தலைவர்களின் பிறந்தநாள் அல்லது இறந்தநாளை நினைவுகூருகையில், அந்த ஒரு நாளாவது குறிப்பிட்ட அத்தலைவரின் கொள்கைப்படி நடக்க ஜனங்கள் நினைப்பதுண்டு. உதாரணமாக மகாத்மா காந்தியின் நினைவுநாளில் யாரும் மதுஅருந்தாமலும் இறைச்சி புசிக்காமலும் இருக்கத்தக்கதாக மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்படுவதுண்டு. ஆனால் கிறிஸ்தவர்களோ இயேசுகிறிஸ்துவின் பிறந்தநாளைக் கொண்டாடுகிற நாளில்தான் மற்றநாட்களைவிட அதிகமாக அவரது போதனைகளுக்கு எதிராக நடக்கின்றனர்.
உங்களுக்கு உண்டானவைகளை விற்று பிச்சையிடுங்கள் என கிறிஸ்து போதித்திருக்க, கிறிஸ்துமஸ் கொண்டாடுகிற கிறிஸ்தவர்களோ, கையில் வைத்துள்ள பணத்தைக்கூட பிச்சையிட மனமில்லாமல், அதைக் கொண்டு கரியாகிப்போகும் பட்டாசுகளை வாங்கி கொளுத்திப்போட்டு, காசைக் கரியாக்குகின்றனர்.
பூமியில் பொக்கிஷம் சேராதே எனும் போதனைக்கு எதிராக, கிறிஸ்துமஸ் நாளில் பொன்னகை எனும் பொக்கிஷத்தை வாங்கியேயாக வேண்டும் எனும் கொள்கையுடைய கிறிஸ்தவர்கள் ஏராளம்.
உணவு உடைக்காகக் கவலைப்படாதே எனும் போதனைக்கு எதிராக, ஏற்கனவே ஏராளமான உடைகள் இருந்தாலும் கிறிஸ்துமஸ் நாளில் கடன் வாங்கியாவது அதிகவிலையுள்ள ஆடம்பர உடை வாங்கியேயாக வேண்டும் எனக் கவலைப்படும் கிறிஸ்தவர்கள் ஏராளம்.
கிறிஸ்தவர்களில் பலர் ஆடம்பரப் பொருட்களை அதிகமாக வாங்குவது, கிறிஸ்துமஸ் நாளையொட்டிதான். எனவேதான், ஆடம்பரப்பொருள் விற்பனையாளர்கள், கிறிஸ்துமஸ் நாட்களில் அப்பொருட்களின் விலையில் தள்ளுபடி மற்றும் பொருட்களை வாங்குவோருக்கு பரிசு என்பது போன்ற கவர்ச்சி அறிவிப்புகளை அதிகமாக வெளியிடுகின்றனர்.
கிறிஸ்துமஸ் நாளிலாவது கிறிஸ்துவின் போதனைப்படி எளிமையாக இருப்போம், இல்லாதவர்களுக்குக் கொடுப்போம், கிறிஸ்துவின் அன்பை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வோம் என்றில்லாமல் சுயநலத்துடன் ஆடம்பரமாக மதுபானங்களை குடித்து வெறித்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதுதான் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் ஆசரிக்கப்படுகிறது.
இத்தனைக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி வேதாகமம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. கிறிஸ்துவின் பெற்றோர்களும் சரி, அவரது சீஷர்களும் சரி, அப்போஸ்தலர்களும் சரி, கிறிஸ்துவின் பிறந்தநாளை நினைத்ததுமில்லை, அதைப் பற்றி பேசியதுமில்லை, அதைக் கொண்டாடியதுமில்லை.
ஆனாலும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் கிறிஸ்தவர்கள் மத்தியில் எவ்வாறு வந்தது? அதற்குக் காரணம் யார்? கிறிஸ்து பிறந்த தேதி இதுதான் எனச் சொன்னது யார்? இக்கேள்விகளுக்கான பதிலை தொடரும் பதிவுகளில் பார்ப்போம்.
-- Edited by anbu57 on Friday 26th of March 2010 06:03:40 AM