வேதாகம விசுவாசிகளில் பலர் உபவாசமிருந்ததாக வேதாகமம் கூறுவது மெய்தான். ஆனால் அவர்களின் உபவாசத்திற்கும் இன்றைய விசுவாசிகள் பலரது உபவாசத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
உதாரணமாக, இன்றைய பல உபவாச அறிவிப்புகளில் காணப்படுவதைப்போல் வெறும் 3 மணி அல்லது 5 மணி நேர உபவாச அறிவிப்புகள் வேதாகமத்தில் காணப்படவில்லை.
உபவாசம் என்பது தங்கள் ஜெபத்திற்கு தேவனைப் பதிலளிக்க வைக்கும் ஒரு கருவியாகவே இன்றைய விசுவாசிகள் பலர் கருதுகின்றனர்.
மேலும், ஏசாயா 58:6,7 வசனங்களில் கூறப்பட்டுள்ள தேவனுக்கு உகந்த உபவாசத்தைச் செய்யத் தீவிரப்படாமல், சரீரத்தை ஒடுக்கி பட்டினி கிடந்து உபவாசமிருக்கத்தான் இன்றைய ஊழியர்களும் விசுவாசிகளும் தீவிரப்படுகின்றனர்.
இன்றைய சபைத்தலைவர்கள் தங்கள் சபையாரிடம், வாரம் இத்தனை நாட்கள் அல்லது மாதம் இத்தனை நாட்கள் உபவாசமிருக்க வேண்டும் என்று சொல்வதைப் பார்த்தால், உபவாசத்தை தேவன் ஒரு கற்பனையாகவே கூறியுள்ளாரா எனும் கேள்வி எழுகிறது.
இக்கேள்விக்கு பதில் அறிந்தவர்கள், தகுந்த வசன ஆதாரத்துடன் இங்கு அதைத் தெரிவிக்கலாம்.
மத்தேயு 6:17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
கர்த்தரின் வார்த்தை இப்படி இருக்க, இன்று சபைகளும் அரசியல்வாதிகள் போல், மேடை போட்டு, மைக் வைத்து, நேரம் குறித்து, "மூன்று நாட்கள் உபவாச ஜெபக்கூட்டம்" என்று உபவாசத்தை ஒரு பொது காரியமாக ஆக்கிவிட்டார்கள்!
ப்ரதர், எங்கே போயிட்டு வரீங்க, ரொம்ப சோர்வாக இருக்கீங்களே, என்று கேட்டால், "இன்று எங்கள் சபையில் வார உபவாச ஜெப கூட்டம், அதை முடித்து விட்டு வருகிறேன்" என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் தான் உபவாசம் இருந்ததாக தம்பட்டம் அடிப்பது!!
இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேல் போய், நான் டானியேல் ஃபாஸ்டிங், எனக்கு பழங்கள் மட்டும் கொடுங்கள் என்று ஃபாஸ்டில்ங்கில் ஒரு புதிய வழியை கான்பிப்பவர்களும் உண்டு.
இவைகள் தான் உபவாசமா? ஒரு வேளையோ, இரண்டு வேளையோ, மூன்று வேளையோ அல்ல அதற்கு மேல் ஃபாஸ்டிங் இருப்பவர்கள் என்று டீ.வீ ஊழியர்களின் சொல்லுவது கேட்க்கிறதா?
இது தான் உபவாசமா! இன்று உபவாசம் என்பது கிறிஸ்தவத்தை மார்க்கெடிங் செய்வது போல் ஆகி விட்டது. நானும் என் தேவன் என்னோடு வாசமாக இருக்க, என்னிடம் உள்ள அவர் விரும்பாத காரியங்களை விட்டு விடுவது தான் என்னை பொறுத்த வரையில் உபவாசம் என்று நினைக்கிறேன். மனதில் பண ஆசை, பொன் ஆசை, எல்லாம் வைத்துக்கொண்டு மூன்று வேலை சாப்பிடாமல் இருந்தால் தான் உபவாசமா?
I தீமோத்தேயு 4:8 சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
AISOURAP wrote: //முன்பு ஒரு பாஸ்டர் சொன்னார், "பிரதர், சாதாரண ஜெபம் என்பது கடிதம் எழுதுவது போல, ஆனால் உபவாச ஜெபம் தந்தியடிப்பது போல" என்று.//
உபவாச ஜெபம் தந்தியடிப்பது போலத்தான், ஆனால் அது இவர்கள் சொல்கிற (உணவு உண்ணா) உபவாசம் அல்ல!
இப்படி சொல்லிச் சொல்லித்தான் (உண்ணா) உபவாசமென்பது நம் ஜெபத்திற்கு தேவனை செவிசாய்க்க வைக்கும் ஒரு கருவி எனும் எண்ணத்தை இன்றைய போதகர்கள் உருவாக்கிவிட்டனர்.
உண்மையில், நம் ஜெபத்திற்கு தேவனை செவிசாய்க்க வைக்கும் கருவியாக ஓர் உபவாசத்தை வேதாகமம் கூறத்தான் செய்கிறது. அது எந்த உபவாசம்? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
ஏசாயா 58:6-9 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்.
தேவனுக்கு உகந்ததான இவ்வுபவாசமே, நம் ஜெபத்திற்கு தேவனை செவிசாய்க்க வைக்கும் கருவி என்பதோடு, இது தந்தி அடிப்பது போன்றதாகவும் இருக்கிறது. ஆம், இந்த உபவாசத்தை ஆசரித்து, நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது, கூப்பிட்ட உடனேயே தேவன் மறுஉத்தரவு கொடுப்பார் என வசனம் கூறுகிறது.
இத்தனை வல்லமையான இவ்வுபவாசத்தைப் போதிக்காமல், 3 மணி, 4 மணி, 5 மணி நேரம் உண்ணாமலிருந்து உபவாசித்தால் தேவன் அதைத் தந்திபோல் பாவித்து செவிசாய்த்து விடுவார் எனப் போதிக்கிற இன்றைய போதகர்களையும் ஊழியர்களையும் என்னவென்று சொல்ல? அதிலும், வியாபாரப் பெருக்கத்திற்கென தனிப்பட்ட முறையில் உபவாச அறிவிப்பு கொடுக்கிற ஊழியர்களை என்னவென்று சொல்ல?
வேதாகம விசுவாசிகள் உண்ணா உபவாசம் இருந்தது, தங்கள் ஜெபத்திற்கு தேவனை பதிலளிக்க வைப்பதற்காக அல்ல. தங்கள் பாவத்தை உணர்ந்து பாவமன்னிப்பு வேண்டுகையிலும், பிறரது பாவத்திற்காக மன்னிப்பு வேண்டுகையிலும், நெருக்கடியான சமயங்களில் தேவ இரக்கத்தை வேண்டுகையிலும் தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துகிறதற்கு அடையாளமாகத்தான் உண்ணா உபவாசத்தை ஆசரித்தனர்.
ஆனால், இன்றைய போதகர்கள் கூறுவதென்ன?
ஐயா, என் மகனுக்கு/மகளுக்கு Annna University-ல் இடம் கிடைக்க வேண்டும், வேலை கிடைக்கவேண்டும், திருமணம் ஒழுங்காக வேண்டும் என்றோ அல்லது எனக்குப் பதவி உயர்வு கிடைக்க வேண்டும், வியாபாரம் பெருகவேண்டும் என்றோ விசுவாசி சொல்கையில், உபவாசமிருந்து ஜெபியுங்கள், தேவன் பதில் தருவார் எனக் கூறுகின்றனர்.
ஏசாயா 58-ம் அதிகாரம் கூறுகிற அந்த உபவாசத்தைக் கூறாமல், உண்ணா உபவாசத்தைச் சொல்லி, அதைச் செய்தால் ஜெபம் கேட்கப்படும் என விசுவாசிகளிடம் கூறுவது ஓர் அக்கிரமம் அல்லவா? அந்த அக்கிரமத்தின் கட்டுகளை நாம் அவிழ்ப்பது அவசியமல்லவா (ஏசாயா 58:6)?
தள அன்பர்கள் தங்கள் கருத்தைக் கூறும்படி வேண்டுகிறேன்.
ஏசாயா 58:6-9 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
சகோதரர் அவர்களே!
தேவனுக்கு உகந்த உபவாசம் என்று சொல்லும்போது அது தாங்கள் குறிப்பிட்டுள்ள ஏசாயா சொல்லும் முறைப்படி செய்வதுதான் என்பது மறுப்பதற்கில்லை. ஆகினும் மற்ற வகையான உபவாசங்கள் உபவாசம் இல்லை என்று சொல்லிவிடமுடியுமா? .
புசியாமல் குடியாமல் சரீரத்தை ஒடுக்கும் உபவாசத்தை கூட தேவன் கேட்டு அதற்க்கு இரங்கியிருக்கிறார் என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் தெரிவிக்கின்றனர்.
16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
மேல்கண்ட உபவாசம் யூதர்களை இரட்சித்தது என்பதை நாம் அறிவோம்
7 மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், 8 மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.
இங்கு உண்ணாமல் குடிக்காமல் உபவாசம் இருந்து தன மாமிசத்தை ஓடுக்குவதால் மனிதனின் அகம்பாவம் தணிகிறது. அதனால் அவன் தீமையைவிட்டு திரும்ப ஒரு வழி ஏற்ப்படுகிறது என்றே கருதுகிறேன்.
10 அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
இன்னும் தானியல் கூட தரிசனம் கண்ட நாட்களில் ஒருவகை உபவாசம் இருந்ததாக் வேதம் குறிப்பிடுகிறது
2 அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். 3 அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை.
இப்படி பலதரப்பட்ட உபவாசங்களை வேதத்தில் காணலாம்! ஆனால் கர்த்தருக்கு உகந்த உபவாசம் எனபது ஏசாயா சொல்வதுதான் என்பதில் மாற்று கருத்தில்லை! அதே நேரத்தில் மற்ற எல்லா உபவாசத்தையும் தவறு என்று தீர்ப்பதில் நியாயமில்லை என்றே நான் கருதுகிறேன்!
//புசியாமல் குடியாமல் சரீரத்தை ஒடுக்கும் உபவாசத்தை கூட தேவன் கேட்டு அதற்க்கு இரங்கியிருக்கிறார் என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் தெரிவிக்கின்றனர்.
எஸ்தர் 4:16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
மேல்கண்ட உபவாசம் யூதர்களை இரட்சித்தது என்பதை நாம் அறிவோம்//
இவ்வசனத்தைக் கொண்டு, தேவன் உபவாசத்திற்காக இரங்கினார் எனக் கூறமுடியாது. உண்மையில், எஸ்தர் புத்தகத்தின் ஒரு வசனத்தில்கூட தேவன் எனும் வார்த்தை இடம்பெறவில்லை.
இக்கட்டான நேரங்களில் தங்கள் ஜெபத்தை ஏறெடுக்கையில், வேதாகம விசுவாசிகள் உபவாசமிருந்தனர் என ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த உபவாசத்தின் நோக்கம், தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துவதுதானேயொழிய, உபவாசத்தால் தேவனை இரங்கவைத்துவிடலாம் என்பதல்ல.
அன்றைய விசுவாசிகள் கடைபிடித்த அதே நடைமுறையைத்தான் எஸ்தரும் கடை பிடித்தாள். எஸ்தரும் அவள் ஜனங்களும் உபவாசமிருந்ததாலோ, அல்லது வேறு யாராவது உபவாசமிருந்ததாலோ தேவன் ஜெபத்தைக் கேட்டார் என்பதற்கு ஆதாரமான ஒரு வசனத்தை உங்களால் தரமுடியுமா?
நினிவே பட்டணத்தாரின் உபவாசத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள். நினிவே பட்டணத்தாருக்கு தேவனை இரங்கச் செய்தது எது என்பதைப் பாருங்கள்.
யோனா 3:9 10 நினிவே பட்டணத்தார் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
பொல்லாத வழியைவிட்டுத் திரும்பியதால்தான் தேவன் அவர்களுக்கு இரங்கினார்.
நினிவே பட்டணத்தாரின் உபவாசத்தைப் பார்த்து தேவன் இரங்கவில்லை. அப்படிப் பார்த்தால், நினிவே பட்டணத்தார் தங்கள் மிருக ஜீவன்களோடு உபவாசம் இருந்ததால்தான் தேவன் அவர்களுக்கு இரங்கினார் என்றுகூட சொல்லலாமே!
நினிவே பட்டணத்தார் தேவனை நோக்கி உரத்த சத்தமாய் கூப்பிட்டது (வசனம் 3:8), தங்கள் வசதி வாழ்வுக்காக அல்ல; தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே.
தானியேல் விஷயத்தில், அவர் உபவாசமிருந்ததாக வசனம் கூறவில்லை என்பதை முதலில் அறியுங்கள். இதை தகவலுக்காக மட்டுமே கூறுகிறேனேயன்றி வாதத்துக்காக கூறவில்லை.
தானியேல் கண்ட ஒரு தரிசனம், அவரை துக்கமடையச் செய்தது. அத்துக்கத்தினால் அவர் ருசியான அப்பமோ, இறைச்சியோ புசியாமல், திராட்சைரசம் குடியாமல், பரிமளதைலம் பூசாமல் இருந்தார். நாமுங்கூட துக்க நேரங்களில் அவ்வாறு செய்வதுண்டு.
ஒருமுறை ஆகாப் உபவாசமிருந்தபோது, தேவன் இவ்வாறு கூறினார்.
1 ராஜா. 21:29 ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.
ஒருமுறை இஸ்ரவேலின் ராஜாவும் பிரபுக்களும் உபவாசமிருக்காமலேயே தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தினபோது, தேவன் அவர்களுக்கு இரங்கினார்.
2 நாளா. 12:6,7 அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்திக் கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள். அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்;
உபவாசமிருந்தால்தான் செவிசாய்ப்பேன் என தேவன் கூறியதாகவோ, உபவாசத்தைப் பார்த்து தேவன் இரங்கியதாகவோ ஒரு வசனமும் இல்லை. ஜனங்களின் மனந்திரும்பதலைப் பார்த்தும், தமக்கு முன்பாக அவர்கள் தங்களைத் தாழ்த்தியதைப் பார்த்தும்தான் தேவன் மனமிரங்கினார்.
உபவாசத்தை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், உபவாசத்தால் தேவனை மனமிரங்கச் செய்துவிடலாம், தங்கள் உலகவசதிகளைக் கேட்டுப் பெற்று விடலாம் என ஒரு புது சித்தாந்தத்தை உண்டாக்கி, ஜனங்கள் அதை நம்பும்படி செய்வதுதான் தவறு என்கிறேன்.
இன்றைய ஊழியர்களின்/விசுவாசிகளின் நடைமுறைகளை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? உபவாச ஜெபம் என அறிவிக்கும் ஊழியர்கள், விசுவாசிகளிடம் ஜெபக்குறிப்புகளை கேட்டு வாங்கி அதற்காக விழுந்து விழுந்து ஜெபிப்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது. அந்த ஜெபக்குறிப்புகளில், அநேகமாக எல்லா விசுவாசிகளும் உலகப்பிரகாரமான வசதிகளைத்தான் சொல்லியிருப்பார்களேயொழிய, தங்கள் பாவம் மன்னிக்கப்பட வேண்டும் என யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள்.
மத்தேயு 6:16-18 வசனங்களில் இயேசு கூறுகிறபடி தனிப்பட்ட முறையில் உபவாசமிருப்பதை நான் விமர்சிக்கவில்லை. அந்த உபவாசத்திற்கு வெளியரங்கமான பலனை தேவன் தருவார் என்பது மெய்தான். ஆனால் வெளியரங்கமான பலன் என்பது, பரலோகப் பலன் மட்டுமே.
-- Edited by anbu57 on Tuesday 2nd of February 2010 06:49:34 PM
I தீமோத்தேயு 4:8. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது;
உபவாசம் என்கிற முயற்சி, மாம்சத்தை கட்டுப்படுத்த முடியுமே தவிர தேவனை அல்ல. பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனின் நேரடியான கட்டளையை பின் பற்றி இஸ்ராயேல் மக்கள் உபவாசம் இருந்தார்கள், அவர்களின் உபவாச முறைக்கூட வேதத்தில் தெளிவாக இருக்கிறது, அப்படி உபவாசம் இருக்கும் ஒரு சபையை இன்று கான்பிக்க முடியுமா?
இயேசு கிறிஸ்து உபவாசத்தை ஒரு கட்டளையாக கொடுக்கவில்லையே! உபவாசம் இருந்தால் இப்படி இருங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார். பவுலோ மற்றவர்களோ, தாங்கள் உபவாசித்ததை சொல்லி இருக்கிறார்களே தவிர சபைகளுக்கு ஒரு கட்டளையாக கொடுக்கவில்லையே!!
வார உபவாசமோ, மாத உபவாசமோ, மூன்று நாட்கள் உபவாசமோ, சங்கிளி உபவாசம் இவைகள் எல்லாம் மனிதர்களின் கோட்பாடுகளே அன்றி, தேவனுக்கு, அவரின் வேதத்திற்கும் இதில் சம்பந்தமே இல்லை. சரீரம், லேசாக இருந்தால், ஒரு மனப்பட்டு ஜெபிக்கலாம், அதிகமாக சாப்பிட்டோம் என்றால் தூக்கம் வரும். அவ்வுளவு தான். இது உபவாசத்தை குறித்த என் கருத்து!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
எப்படிப்பட்ட உபவாசம் சிறந்தது என்று கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லியிருந்தாலும், அனேக இடங்களில் உபவாசம் என்ற வார்த்தையை தேவன் உண்ணாமல் தன்னை ஒடுக்கும்படி இருப்பதற்கு கட்டளையிடுவதாகவே வருகிறது என்றே நான் கருதுகிறேன்.
யோவேல் 2:12 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதில் வரும் உபவாசம் என்ற வார்த்தைக்கு வரும் பொருள் இதுதான் .
Meaning of Fast: To abstain from food; to omit to take nourishment in whole or in part; to go hungry.
மத்தேயு 4:2 அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
மேல்கண்ட வசனமும் உபவாசம் என்பது உண்ணாமல் இருப்பதைத்தான் குறிக்கிறது
அந்த பொருளின் அடிப்படையில் பார்த்தால், வேதம் முழுவதும் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களில் கூறப்படும் உபவாசத்தில் பல பயன்கள் நேர்ந்துள்ளது என்பதையே அறிய முடியும்
கீழ்க்கண்ட வசனப்படி உபவாச ஜெபத்தின்போதே தேவதூதன் காட்சி தருகிறான்
அப்போஸ்தலர் 10:30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த ஒரு மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று
மேலும் சகோ. பெறேயன்ஸ் சொல்வதுபோல் ஒருமனப்படுவதர்க்கும் தன்னை தாழ்த்துவதற்கும் உபவாசம் (உண்ணா நிலை) என்பது ஒரு சிறந்த வழி. வயிறு முழுவதும் நிறைந்தால் சீக்கிரம் தூக்கம் வரும்! ஆனால் பசியோடு இருக்கும்போது தூக்கம் வராது, மற்றும் ஆவியில் பெலன்கொள்ள முடியும். அகம்பாவம் ஒழியும் என்பதை நமது அனுபவத்தில் பார்க்கலாம்.
தன்னை தாழ்த்துவதற்கு உண்ணாநிலை என்பது ஒரு நல்ல வழி என்றே நான் கூறுவேன்.
எஸ்றா 8:21 அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், ..... செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.
இராஜாக்கள் 21:27 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
மற்றபடி என்னதான் உண்ணா நிலையில் இருந்தாலும் கர்த்தருக்கு நேராக நம் வழிகளையும் மனதையும் செய்யவில்லை என்றால்:
எரேமியா 14:12 அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை
sundar wrote: //மேலும் சகோ. பெறேயன்ஸ் சொல்வதுபோல் ஒருமனப்படுவதர்க்கும் தன்னை தாழ்த்துவதற்கும் உபவாசம் (உண்ணா நிலை) என்பது ஒரு சிறந்த வழி. வயிறு முழுவதும் நிறைந்தால் சீக்கிரம் தூக்கம் வரும்! ஆனால் பசியோடு இருக்கும்போது தூக்கம் வராது, மற்றும் ஆவியில் பெலன்கொள்ள முடியும். அகம்பாவம் ஒழியும் என்பதை நமது அனுபவத்தில் பார்க்கலாம்.
தன்னை தாழ்த்துவதற்கு உண்ணாநிலை என்பது ஒரு நல்ல வழி என்றே நான் கூறுவேன்.//
இதைத்தான் நானும் முதலிலிருந்தே கூறிவருகிறேன்.
ஆனால் நீங்கள் இத்தோடு, உண்ணாநிலை உபவாசத்திற்கு தேவன் பதிலளித்துள்ளார் என்று சொல்லி, நம் ஜெபம் கேட்கப்படுவதற்கு உண்ணாநிலை உபவாசம் ஒரு கருவியாக இருக்கும் என்ற கருத்தையும் சொல்கிறீர்கள். இக்கருத்தைத்தான் நான் மறுக்கிறேன்.
உண்ணாநிலை உபவாசத்தை முதன்முதலாகத் தொடங்கியவர் மோசே. அவர் இஸ்ரவேல் ஜனங்களின் பாவம் மன்னிக்கப்படுவதற்காக 40 நாட்கள் இரவும் பகலும் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தார். இவ்விதமாக 3 சந்தர்ப்பங்களில் அவர் உபவாசம் இருந்துள்ளார்.
மோசேயின் நோக்கத்தோடு, இக்காலத்தில் உபவாசம் இருப்போரின் நோக்கங்களை சற்றாகிலும் ஒப்பிடமுடியுமா?
மோசேயின் நோக்கம் உன்னதமானது; ஆனால் இன்று அறிவிப்பு வெளியிட்டு உபவாசமிருப்போரின் நோக்கம் அற்ப உலகத்திற்குரியது.
மோசே தனது உபவாசத்தால் தேவனை இரங்கச் செய்துவிடலாம் என நினைக்கவில்லை; தேவனும் அவரது உபவாசத்தைப் பார்த்து மனமிரங்கவில்லை. மோசேயின் இருதயத்தை தேவன் பார்த்தார்; ஜனங்களுக்காக அவர் பாரங்கொண்டதை தேவன் பார்த்தார். மோசே ஜனங்களுக்காக எத்தனை பாரங்கொண்டார் என்பதற்கு பின்வரும் வசனம் சிறந்த சாட்சியாக உள்ளது.
யாத்திராகமம் 32:31,32 அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.
மோசேயின் இந்த இருதயத்தைப் பார்த்துதான் தேவன் இரங்கினாரேயன்றி, உபவாசத்தைப் பார்த்து அவர் இரங்கவில்லை.
sundar wrote: //
மத்தேயு 4:2 அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
மேல்கண்ட வசனமும் உபவாசம் என்பது உண்ணாமல் இருப்பதைத்தான் குறிக்கிறது.
அந்த பொருளின் அடிப்படையில் பார்த்தால், வேதம் முழுவதும் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களில் கூறப்படும் உபவாசத்தில் பல பயன்கள் நேர்ந்துள்ளது என்பதையே அறிய முடியும்//
உண்ணாநிலை உபவாசம் வேதாகமத்தில் கூறப்படவில்லை என நான் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் அது, நம் ஜெபம் கேட்கப்படுவதற்கான கருவி அல்ல என்பதைத்தான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்.
வேதாகமத்தில் 50-க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் உண்ணாநிலை உபவாசத்தால் பயன் நேர்ந்துள்ளது என்கிறீர்களே, அவற்றில் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கூறுங்கள்.
sundar wrote: //
கீழ்க்கண்ட வசனப்படி உபவாச ஜெபத்தின்போதே தேவதூதன் காட்சி தருகிறான்.
அப்போஸ்தலர் 10:30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த ஒரு மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று//
இந்த சம்பவத்தில், பின்வரும் வசனங்களையும் படியுங்கள்.
அப்போஸ்தலர் 10:3,4 பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
அப்போஸ்தலர் 10:30,31 30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.
இவ்வசனங்களில் தேவதூதன் சொல்வதை நன்றாகப் படியுங்கள். கொர்நேலியுவின் உபவாசம் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது என அவன் சொல்லவில்லை. கொர்நேலியுவின் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது என்றுதான் அவன் கூறினான்.
உபவாசம் என்பது நமது மன திருப்திக்கும், நம் மனதை ஒருமுகப்படுத்துவதற்கும், தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவதற்குமேயன்றி, நம் ஜெபத்திற்கு தேவனை பதில் கொடுக்க வைப்பதற்காக அல்ல.
இன்றைய ஊழியர்கள்தான் “உபவாசிப்பவனின் வேண்டுதலுக்கு தேவனின் செவிகள் கவனமாயிருக்கிறது” என்கிறதான ஒரு மாயக்கருத்தை உருவாக்கி, ஏசாயா 58-ம் அதிகாரம் கூறுகிற “தேவனுக்கு உகந்த உபவாசத்திற்கு” ஜனங்களை அழையாமல், (தங்கள் பைகளை நிரப்புவதற்காக) வெறும் உண்ணாநிலை உபவாசத்திற்கு ஜனங்களை அழைக்கிறார்கள்.
“தேவனுக்கு உகந்த உபவாசத்திற்கு” அழைத்தால், கூட்டங்கூட்டமாக ஜனங்கள் வருவார்களா? நிச்சயம் வரமாட்டார்கள். சில மணி நேரங்கள் உண்ணாமல் இருந்துவிட்டு, ஊழியக்காரருக்கு கொஞ்சம் காணிக்கை போட்டுவிட்டு வந்துவிடலாமென்றால்தான் அவர்கள் கூட்டமாக வருவார்கள்; தாங்கள் உலகவசதிகளை ஜெபக்குறிப்புகளில் எழுதிக்கொடுப்பார்கள்.
இப்படித்தான் இன்றைய உபவாசங்கள் நடக்கின்றன.
வேதாகம நல்விசுவாசிகள் உபவாசமிருந்ததைப் போல உன்னதமான நோக்கத்துடன் ஆசரிக்கும் உபவாசம் நிச்சயமாக போற்றத்தக்கதே. மற்றபடி, உலகவசதிகளைப் பெறுவதற்காக ஆசரிக்கும் உபவாசங்கள் நிச்சயமாக கண்டிக்கத்தக்கவைகளே.
anbu wrotes: ///ஆனால் நீங்கள் இத்தோடு, உண்ணாநிலை உபவாசத்திற்கு தேவன் பதிலளித்துள்ளார் என்று சொல்லி, நம் ஜெபம் கேட்கப்படுவதற்கு உண்ணாநிலை உபவாசம் ஒரு கருவியாக இருக்கும் என்ற கருத்தையும் சொல்கிறீர்கள். இக்கருத்தைத்தான் நான் மறுக்கிறேன்.////
சகோதரர் அவர்களே நான் சொல்வதன் கருத்தை சற்று சிந்தியுங்கள். நமது செய்கையை சீர்படுத்த உண்ணா நிலையும் ஒரு வழி என்றும், அந்த வழியில் செய்கையை சீர்படுத்தினால் தேவன் பதில் தருவார் என்றும் கூறுகிறேன். எவ்விதத்திலேயும் நமது செய்கை சீர்படுத்தபட வேண்டும் என்பதுதானே தேவனின் நோக்கம்?
உதாரணமாக: நாம் வேலை செய்யும் இடத்தில்போய் வேலை செய்தால்தான் ஊதியம் கிடைக்கும். அதற்காக நாம் வேலைக்கு பயணிக்கும் வழியை கணக்கிலே எடுக்காமல் இருக்க முடியுமா? முதலாளிக்கு அதை பற்றி கவலை இல்லைதான், ஆனால் நாம் நிச்சயம் அதைப்பற்றி கவலைபட்டே ஆகவேண்டும்
வேலைக்குதான் கூலி என்ற முதலாளியின் கருத்து போல, தேவனுக்கு பிரியமான தேவனுக்கேற்ற கிரியைக்ளுக்குதான் தேவனிடத்தில் பலன் உண்டு! ஆனால் சில தவறான உழியர்களின் செயல்பாட்டை பார்த்துஅதற்க்கான ஒருவழியாகிய உண்ணாமல் மாமிசத்தை ஒடுக்கி கீழ்படுத்துதல் என்பது தேவையே இல்லை என்று எப்படி தவிர்க்க முடியுமா? அதை முற்றிலும் தவறு என்று எப்படி ஒதுக்கிவிட முடியுமா?
உங்களால் அப்படி உண்ணா நிலையில் இருக்காமல் தேவனுக்கு ஏற்ற கிரியைகளை செய்யமுடியும் என்றால் நல்லது, அனால் எல்லோரும் அப்படியல்லவே!அதனால்தாம் மாமிசத்தை ஒடுக்கி ஒருமனதோடு இறைவனை தேட உபவாசத்தை வேதகாம மனிதர்கள் கட்டளை இட்டிருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.
anbu wrotes: ////உண்ணாநிலை உபவாசம் வேதாகமத்தில் கூறப்படவில்லை என நான் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் அது, நம் ஜெபம் கேட்கப்படுவதற்கான கருவி அல்ல என்பதைத்தான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்////
உபவாசம் என்பது தேவனை நம்மை நோக்கி திரும்ப வைக்கும் ஒரு கருவியல்ல என்பதை நானும் ஏற்கிறேன்! ஆனால் அவ்வுபவாசத்தில் மாமிசத்தை ஒடுக்கி நமது அகம்பாவத்தை அழிப்பதமூலம் தேவனை நம்மை நோக்கி திரும்ப வைக்க முடியும் என்றும் நம்புகிறேன்!
anbu wrotes: அப்போஸ்தலர் 10:3,4 பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
அப்போஸ்தலர் 10:30,31 30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.
இவ்வசனங்களில் தேவதூதன் சொல்வதை நன்றாகப் படியுங்கள். கொர்நேலியுவின் உபவாசம் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது என அவன் சொல்லவில்லை. கொர்நேலியுவின் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது என்றுதான் அவன் கூறினான்./////
கீழேயுள்ளது அதற்க்கான உதாரணம் தானே!
anbu wrotes: ////வேதாகமத்தில் 50-க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் உண்ணாநிலை உபவாசத்தால் பயன் நேர்ந்துள்ளது என்கிறீர்களே, அவற்றில் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கூறுங்கள்///.
மேல்கண்ட சம்பவத்தில் தொகுப்பை பாருங்கள்:
"நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்"
அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த ஒரு மனுஷன் அவருக்கு முபாக வந்து நின்று இரண்டு காரியங்களை சொல்கிறார்
இதில் இரண்டாவதுக்குதான் தேவன் கொடுத்த பதில் என்று எப்படி சொல்கிறீர்கள்? முதலாவது அவரது (உபவாசித்த்து) ஜெபித்த ஜெபம் கேட்கப்பட்டது என்றுதானே தூதன் சொல்கிறான்.
உபவாசம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வேதத்துக்கு புறம்பான ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்தும் தவறாக கிறிஸ்த்தவ வியாபாரிகள் பற்றி நான் இங்கு எதுவும் பேசவரவில்லை. என்னுடைய கருத்து மற்றும் அனுபவப்படி நன்றாக உண்டுவிட்டு தேவனை தேடுவதை விட, அரை குறை வயிற்றோடு ஆண்டவரை தேடினால் நமது மாமிசம் விரைவில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். அதை நீங்களும் ஒத்துகொள்கிறீர்கள். எனவே உபவாசத்தால் யாருக்கும் பயனே இல்லை என்று கூற முடியாது என்பதே!
அதே நேரத்தில் வெறும் சாப்பிடாமல் கிடந்தால் மட்டும் தேவன் நமது வார்த்தைக்கு செவி கொடுத்துவிடுவார் என்று ஒரு மாயமான எதிர்பார்ப்பும் பயனளிக்காது
கையை தரித்து போட்டால்தான் நான் கெட்ட கிரியைகளை செய்யாமல் இருக்கமுடியும் என்று ஒருவர் கருதினால் கையை தரித்து போடுவதுகூட சிறந்ததுதான். இங்கு கையை தரிப்பது பெரிதல்ல அக்கையின் மூலம் கெட்ட கிரியைகள் செய்யப்படகூடாது என்பதுதான் முக்கிய நோக்கம். அதுபோல்! நாம் நம்மை ஒடுக்கி பாவத்தை விலக்க என்ன நடவடிக்கை மேற்க்கொள்கிறோம் என்பது பெரிதல்ல, எவ்விதத்திலாவது பாவம் செய்யாமல் அவரது பரிசுத்த நிலைக்கு திரும்பவேண்டும் என்பதே தேவனின் எதிர்பார்ப்பு.
-- Edited by SUNDAR on Saturday 6th of February 2010 11:52:42 AM
sundar wrote: //உண்ணாமல் மாமிசத்தை ஒடுக்கி கீழ்படுத்துதல் என்பது தேவையே இல்லை என்று எப்படி தவிர்க்க முடியுமா? அதை முற்றிலும் தவறு என்று எப்படி ஒதுக்கிவிட முடியுமா?//
சகோ.சுந்தர் அவர்களே! எனது பதிவுகள் முழுவதையும் நன்றாகப் படித்துப் பாருங்கள். உபவாசத்தை தவறு என நான் ஒரு இடத்திலும் சொல்லவில்லை. வேதாகம நல்விசுவாசிகளில் பலர் உபவாசத்தை ஆசரித்திருக்கும்போது, நான் எப்படி அதை தவறு எனச் சொல்லமுடியும்?
sundar wrote: //உபவாசம் என்பது தேவனை நம்மை நோக்கி திரும்ப வைக்கும் ஒரு கருவியல்ல என்பதை நானும் ஏற்கிறேன்! ஆனால் அவ்வுபவாசத்தில் மாமிசத்தை ஒடுக்கி நமது அகம்பாவத்தை அழிப்பதமூலம் தேவனை நம்மை நோக்கி திரும்ப வைக்க முடியும் என்றும் நம்புகிறேன்!//
உண்ணா உபவாசம் இருப்பதற்கான அவசியத்தை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். இதை நான் மறுக்கவில்லை. ஆனால், தற்போது நம் சபைகள் மற்றும் சுவிசேஷ ஊழியர்கள் அறிவிப்பு கொடுத்து முன்னின்று நடத்துகிற உபவாசங்கள் நீங்கள் கூறுகிற பிரகாரம் இல்லையே!
சபை ஒழுங்குகள்/வழக்கங்கள்/சட்டங்கள் என்ற தலைப்பின் கீழ்தான் இத்திரி துவக்கப்பட்டுள்ளது. எனவே நம் சபைகள் மற்றும் ஊழியர்கள் நடத்துகிற உபவாசத்தைத்தான் நான் பிரதானமாகக் கூறுகிறேன். அத்தோடு, இன்றைய சபைகளும் ஊழியர்களும் சொல்வதைக் கேட்டு, உலகப்பிரகாரமான காரியங்களைப் பெறுவதற்காக தனிப்பட்ட முறையில் உபவாசம் இருப்பதையும்தான் நான் கூறுகிறேன்.
மற்றபடி, வேதாகம விசுவாசிகள் செய்தபிரகாரம் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும் தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துவதற்காகவும் உபவசமிருப்பதை நான் விமர்சிக்கவில்லை.
உபவாசத்தை ஒரு கற்பனையாக வேதாகமம் கூறவில்லை. ஆனால், இன்றைய சபைத்தலைவர்களும் ஊழியர்களும் சேர்ந்து உபவாசத்தை ஒரு கற்பனைக்கு நிகராக ஆக்கியதைத்தான் கூறுகிறேன். அதாவது, கட்டாயம் உபவாசமிருக்கவேண்டும் என்கிற பிரகாரமாக அவர்கள் சொல்லி, அதை ஒரு கற்பனையாக மாற்றியதைத்தான் நான் விமர்சிக்கிறேன்.
உண்மையில், இன்றைய விசுவாசிகளில் பலர்: சபைத்தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் சொல்வதைக்கேட்டு, “நாம் உபவாசமிருக்காவிடில் தேவன் நம் ஜெபத்தைக் கேட்க மாட்டோரோ” என்கிற அச்சத்தில்தான் உபவாசமிருக்கின்றனர்.
பெற்றோரைக் கனம்பண்ணுதல் என்பது தேவனால் நேரடியாகக் கொடுக்கப்பட்ட 10 கற்பனைகளில் ஒன்று. ஆனால், அக்கற்பனையின் நோக்கத்திற்கு மாறாக அன்றைய வேதபாரகரும் பரிசேயரும் அதை நடைமுறைப்படுத்தியதால்தான், அவர்களின் செயலை மனுஷரால் போதிக்கப்பட்ட கற்பனையென இயேசு கூறினார். மத்தேயு 15:1-9 வசனங்களைப் படித்துப் பாருங்கள்.
உபவாசத்தை ஒரு கற்பனையாக வேதாகமம் ஒருபோதும் சொல்லவில்லை. உண்மையில், அதை ஆரம்பித்து வைத்தது மோசேதான். நீதிமான்களென அழைக்கப்பட்ட யோபு, நோவா, ஆபிரகாம், லோத்து ஆகிய எவரும் உபவாசமிருந்ததாக வேதாகமம் கூறவில்லை.
மோசே துவக்கி வைத்த உபவாசம், நாளடைவில் வழக்கமாகிப்போனது. ஆனால் மோசேயும் சரி, அவரைப் பின்பற்றின மெய்யான விசுவாசிகளும் சரி, தங்களை தேவனுக்கு முன்பாகத் தாழ்த்துவதற்கும் தங்கள் பாவமன்னிப்புக்காகவுந்தான் உபவாசம் இருந்தனரேயன்றி, தாங்கள் விரும்புகிற உலகக்காரியங்களைப் பெறுவதற்காக உபவாசமிருக்கவில்லை.
தேவன் ஒரு கற்பனையாகக் கூறாத உபவாசம், இன்று மனுஷரால் போதிக்கப்படும் ஒரு கற்பனையாக மாறிவிட்டது.
இதைச் சொல்வதும் செய்வதும் சாதாரண விசுவாசியல்ல, ஓர் ஊழியர். ஓர் ஊழியரே இப்படிச் செய்தால், விசுவாசிகள் எவ்வளவாய் இவ்விஷயத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பார்கள்?
தேர்வில் வெற்றி பெறுவதற்கு உபவாச ஜெபம். இதைத்தான் வேதாகமம் போதிக்கிறதா?
இப்படிச் சொல்லி சொல்லித்தான் உபவாசமென்பது, மனுஷரால் போதிக்கப்பட்ட கற்பனையாகி விட்டது. இதேவிதமாக இன்னும் பல கற்பனைகள் உள்ளன. அவற்றை எடுத்துரைத்து விசுவாசிகளை எச்சரிப்பதே என் நோக்கமேயன்றி, வேதாகமத்தில் மெய்யான விசுவாசிகளால் தகுந்தவிதமாய் ஆசரிக்கப்பட்ட உபவாசத்தை தவறு எனச் சொல்வதல்ல.
-- Edited by anbu57 on Thursday 11th of February 2010 09:01:16 PM
sundar wrote: //நல்லது சகோதரரே! நீங்கள் எதன் அடிப்படையில் இந்த உபவாச கோட்பாட்டை வெறுக்கிறீர்கள் என்பது எனக்கு இப்பொழுது புரியவருகிறது!//
தங்களின் புரிந்துகொள்தலுக்கு நன்றி சகோ.சுந்தர் அவர்களே!
ஒரு சின்ன திருத்தம். உபவாச கோட்பாட்டை நான் வெறுக்கவில்லை சகோதரரே! உபவாசத்தின் பெயரால் ஜனங்களை இடறச்செய்துவரும் ஊழியர்களின் செயல்தான் என்னை மிகவும் பாரமடையச் செய்கிறது.
sundar wrote: //நல்லது சகோதரரே! நீங்கள் எதன் அடிப்படையில் இந்த உபவாச கோட்பாட்டை வெறுக்கிறீர்கள் என்பது எனக்கு இப்பொழுது புரியவருகிறது!//
தங்களின் புரிந்துகொள்தலுக்கு நன்றி சகோ.சுந்தர் அவர்களே!
ஒரு சின்ன திருத்தம். உபவாச கோட்பாட்டை நான் வெறுக்கவில்லை சகோதரரே! உபவாசத்தின் பெயரால் ஜனங்களை இடறச்செய்துவரும் ஊழியர்களின் செயல்தான் என்னை மிகவும் பாரமடையச் செய்கிறது.
சகோதரர் அன்பு அவர்களே அவரவர்கள் செய்யும் செயலுக்கு ஏதாவது ஒரு சீரிய காரணம் மற்றும் நோக்கம் இருக்கும் அது நமக்கு தெரியாதபட்சத்தில், யாரையும் நான் குற்றப்படுத்த விரும்புவது இல்லை. அதை ஆண்டவர் ஒருவரே நியாயம் தீர்க்க முடியும். அடுத்தவர் செய்வதை தவறு என்று நியாயம்தீர்க்க நாம் யார்? அவரவர் தாங்கள் செய்யும் செயலுக்கு ஒரு நியாயமான காரணம் வைத்திருப்பார்கள். அது அவர்களுக்கும் தேவனுக்கும் உள்ள பிரச்சனை, அதை தவறு என்று சொல்ல எனக்கு எந்த தகுதியும் கிடையாது என்றே நான் கருதுகிறேன்.
என்னை பொறுத்தவரை பொதுவாக போதிக்கலாம், ஆனால் குற்றம்காணுதல் எவ்விதத்திலும் சரியல்ல என்பது எனது கருத்து. ஏனெனில் எல்லாவற்றையும் அறிந்து தேறினவன் ஒருவரும் இல்லை!
ஒரு மிகபெரிய தொழில்சாலையில் எத்தனையோ விதமான வேலைகள் உண்டு அதுபோல் தேவனுடய ராஜ்யம் கட்டப்பட அவரவர் ஒரு வேலையே செய்கின்றனர்!மெசின் ஓட்டுபவனை பார்த்து கணக்கன் "நீ என்ன வேலை செய்கிறாய்" நான் செய்வதுதான் சரியான வேலை என்று கேட்பது தகுதியல்ல என்றே நான் கருதுகிறேன். அவனவன் ஆவிக்குரிய தகுதிக்கேற்ப ஆண்டவர் பணியை நியமிக்கிறார்
நமக்கு அதைபற்றிய வெளிப்பாடோ அல்லது விருப்பமோ இல்லை என்றால் நாம் விலகிவிட வேண்டியதுதான் அவரவருக்கு அவரவர் செய்வது சரியானதுபோல் தெரியும்! ஆனால் என்னை பொறுத்தவரை எல்லோர் சொல்லும் பதிலும் ஏற்புடையதாகவே இருக்கிறது. எனவே நான் யாரையும் குற்றம் கண்டுபிடிக்கவோ குறைசொல்லவோ துணியவில்லை!
பொதுவாக வேதாகமம் சொல்லும் உபவாசத்தை பற்றி மட்டுமே நான் பதிவிட்டேன்.
sundar wrote: //சகோதரர் அன்பு அவர்களே அவரவர்கள் செய்யும் செயலுக்கு ஏதாவது ஒரு சீரிய காரணம் மற்றும் நோக்கம் இருக்கும் அது நமக்கு தெரியாதபட்சத்தில், யாரையும் நான் குற்றப்படுத்த விரும்புவது இல்லை. அதை ஆண்டவர் ஒருவரே நியாயம் தீர்க்க முடியும். அடுத்தவர் செய்வதை தவறு என்று நியாயம்தீர்க்க நாம் யார்? அவரவர் தாங்கள் செய்யும் செயலுக்கு ஒரு நியாயமான காரணம் வைத்திருப்பார்கள்.//
ஆம், பொய் சொல்பவர்கள், கொலை செய்பவர்கள்கூட தங்கள் செயலுக்கு ஒரு நியாயமான(?) காரணம் வைத்திருப்பார்கள்.
sundar wrote: //ஒரு மிகபெரிய தொழில்சாலையில் எத்தனையோ விதமான வேலைகள் உண்டு அதுபோல் தேவனுடய ராஜ்யம் கட்டப்பட அவரவர் ஒரு வேலையை செய்கின்றனர்! மெசின் ஓட்டுபவனை பார்த்து கணக்கன் "நீ என்ன வேலை செய்கிறாய்" நான் செய்வதுதான் சரியான வேலை என்று கேட்பது தகுதியல்ல என்றே நான் கருதுகிறேன்.//
மிகச் சரியான கூற்றுதான். ஆனால், மெஷின் ஓட்டுபவன் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் ஒரு தவறால் தொழிற்சாலைக்கு பெரும் நஷ்டம் வரும் என்பதை கணக்கன் திட்டமாக அறிந்தால், அதைக் குறித்து அவனையும் எச்சரித்து, சக ஊழியர்களையும் எச்சரிப்பது அவசியமல்லவா?
anbu57 wrote: //ஏசாயா 58-ம் அதிகாரம் கூறுகிற அந்த உபவாசத்தைக் கூறாமல், உண்ணா உபவாசத்தைச் சொல்லி, அதைச் செய்தால் ஜெபம் கேட்கப்படும் என விசுவாசிகளிடம் கூறுவது ஓர் அக்கிரமம் அல்லவா? அந்த அக்கிரமத்தின் கட்டுகளை நாம் அவிழ்ப்பது அவசியமல்லவா (ஏசாயா 58:6)?//
ஏசாயா 58-ம் அதிகாரம் கூறுகிற “தேவனுக்கு உகந்த உபவாசத்தைக்” கூறாமல் “உண்ணா உபவாசத்தை” மட்டும் சொல்லி, அதன் மூலம் தேவனை செவிசாய்க்க வைத்துவிடலாம் எனும் எண்ணத்தை வளர்ப்பது அக்கிரமமே எனச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
அக்கிரமம் எது, கிரமம் எது என்பது தெரிந்தால்தான் ஏசாயா 58:6 கூறுகிறபடி அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கமுடியும், கிரமத்தைப் போதிக்க முடியும். இவ்விஷயத்தில், “மற்றவர்கள் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், நான் விலகிக் கொள்கிறேன்” என்றிருப்பது நிர்விசாரமான செயலாகும். sundar wrote: //என்னை பொறுத்தவரை பொதுவாக போதிக்கலாம், ஆனால் குற்றம்காணுதல் எவ்விதத்திலும் சரியல்ல என்பது எனது கருத்து. ஏனெனில் எல்லாவற்றையும் அறிந்து தேறினவன் ஒருவரும் இல்லை!//
இது சம்பந்தமாக பின்வரும் தொடுப்புக்குச் செல்லும்படி வேண்டுகிறேன். பின்வரும் வசனத்தைப் படிக்கும்படியும் வேண்டுகிறேன்.
The word "fast" is derived from OT hebrew term tsom which refers to self -denial & NT greek word refers to nesteia also refers to Self Denail.Many Scripture ref quotes that fasting apparently began a natural expression of grief,'where as it became customary.'
True fasting is a root cause to keep our Body Mind & Soul in oneness in the presence of God which does not matter the hour,hours,day,days as we read in Jonah ch 3:5 to 8 and 10.Here we see the animals also fasted for the global cause and repented .
Br.Jonathan Edwards fasted for 22 hours prior to preaching his Sermon and wrote a book sinners are in the Hands of angry God.ious
As we see our muslim Brethern they follow the customary fasting and praying a religious practices and during fridays we can see the darghas are packed
Every church should become a model to our Neibhours