கிறிஸ்தவ உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்படுவதும், பலருக்குப் புரியாத புதிருமான ஒரு கோட்பாடுதான் திரித்துவக் கோட்பாடு ஆகும். அதை நமது தளத்திலும் விவாதித்துதான் பார்ப்போமே!
தகுந்த வசன ஆதாரங்களோடு உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.
திருத்துவம் அல்லது திரியேகத்துவம் (Trinity or Triune) போன்ற கோட்பாடுகள் நிச்சயமாக வேதத்தில் இல்லை. யூகங்களின் அடிப்படையில் மற்றும், பிற மதங்கள் மற்றும் மார்கங்களின் உபயத்தால் வந்தது தான் இந்த கோட்பாடுகள் என்பது நான் தேவனின் வார்த்தைகள் மீது கொண்ட விசுவாசத்தில் பதியிறேன்.
திருத்துவ கோட்பாடு உடையோர் இரண்டு பிரிவினராக இருப்பதை அவர்களே அரிவார்களோ என்று தெரியவில்லை, இருந்தாலும்,
1. ஒரு தரப்பினர், தேவன் ஒருவர், ஆனால் அவரின் செயல்பாடுகள் மூன்றாக இருக்கிறது. அதாவது அவரே பரலோகத்தில் இருக்கும் போது பிதா, மாம்சத்தில் வந்த போது இயேசு கிறிஸ்து, பிறகு இப்பொழுது ஆவி(யானவர்). இவர்கள் கொடுக்கும் மாதிரி எப்படி என்றால், "நான், என் மனைவிக்கு கணவன், என் மகனுக்கு அப்பா, என் அப்பாவிற்கு மகன்". இப்படி ஒரே ஆளாக இருந்தாலும் ரோல் மாத்திரம் மாறுகிறது.
2. இந்த குழுவினர், எப்படி என்றால், மூன்று நபர்கள் இருக்கிறார்கள், மூவரும் சம வயது, சம வல்லமை, ச்ம அந்தஸ்து, அனைத்திலும் சமமாக இருப்பவர்கள் என்கிற கொள்கை உடையவர்கள்.
2. யெகோவா என்கிற ஒன்றான மெய்தேவனின் ஒரே பேரான குமாரன், இயேசு கிறிஸ்து. இவர் மாம்சத்தில் வரும் முன் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் படைக்கப்பட்டு பிதாவோடு அவரின் தற்சொரூபமாக இருந்தவர். இவரே தேவனின் படைப்பிற்கு தொடக்கமும் முடிவுமானவர் (அல்ஃபா ஒமேகா), அதாவது தேவன் நேரடியா சிருஷ்ட்டித்த முதல் மற்றும் கடைசி நபர் (அதற்கு பிறகு படைக்கப்பட்டவை எல்லாம் வார்த்தை (லோகோஸ்) என்கிற இயேசு கிறிஸ்துவான் தான்). இவர் மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்கிறது வேதம்.
இவர்கள் இருவருமே நபர்களாக குறிப்பிட்ட வேதம், மூன்றாவதாக ஒரு நபர் இருப்பதாக சொல்லவில்லை. கோட்பாடுகள் அனைத்தும் மனித ஞானத்தில் வந்தவைகள் தான்.
வசனங்கள்:
I கொரிந்தியர் 8 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
இப்படியாக பவுல் எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் பிதாவாகிய தேவனும், அவரின் குமாரனான இயேசுகிறிஸ்து என்று இரு நபர்களின் நாமத்தில் மாத்திரமே வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். மேலும் இவர்கள் இருவரையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறது வசனம். வசனங்கள் இப்படி இருக்க இவர்கள் அனைவரும் ஒன்று தான் என்று இன்னும் ஒரு மூன்றாவது நபரையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.
சரி விவாதம் தொடங்கட்டும், இது என் கருத்து. வசனங்களை வைத்தே விவாதத்தை நடத்தலாம்!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
"நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்", "என்னைக் கண்டவன் பிதாவைக் காண்கிறான்", "நித்திய பிதா", "இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்", "அந்த வார்த்தை தேவனாக இருந்தது", "பிதாவுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்", "என் ஆண்டவரே, என் தேவனே",
போன்ற பழைய பல்லவிகளைத் தவிர வேறு ஏதாவது பதிப்பார்களானால் உபயோகமாக இருக்கும்.
வேத வசனங்கள் உங்களுக்கு பழைய பல்லவியாக தெரிகிறதாக்கும்.
//"நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்", "என்னைக் கண்டவன் பிதாவைக் காண்கிறான்", "நித்திய பிதா", "இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்", "அந்த வார்த்தை தேவனாக இருந்தது", "பிதாவுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்", "என் ஆண்டவரே, என் தேவனே",
போன்ற பழைய பல்லவிகளைத் தவிர வேறு ஏதாவது பதிப்பார்களானால் உபயோகமாக இருக்கும்.//
இந்த வசனங்கள் என்ன சொல்லுகிறது என்பதை தெளிவுப்படுத்தாமல் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லுவதினால் தான் பல்லவி என்று சொல்லியிருக்கிறார் நண்பர்!! வேதத்தில் திரித்துவம் என்கிற வார்த்தை இல்லை என்று ஒப்புக்கொள்கிறீர்கள், இல்லாத ஒன்றை (வேதத்தில்) எப்படி விசுவாசம் என்கிறீர்கள்?
ஆதாமும் ஏவாளும் ஒன்றாக இருந்தார்கள்!! இருவருமே ஒன்றா!! நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பது அவர்களின் தன்மையை () காண்பிக்கிறதே தவிர அவர்கள் இருவரும் ஒருத்தரே என்பதை அல்ல!!
நானாக எதையும் செய்யாமல், என் பிதா எனக்கு காண்பிப்பதை, போதிப்பதையே நான் செய்கிறேன் என்று சொன்ன கிறிஸ்து, அவரின் செயல்களின் மூலமாக பிதாவை அவரில் பார்க்கச் சொல்லுகிறார்!! என்னைப் பார்த்தால் போதும், பிதாவின் அதே தன்மைகள் என்னிடமும் வெளிப்படுகிறது என்று கிறிஸ்து இயேசு சொல்லுவதை நீங்களாக ஏன் வேறுவிதமான அர்த்தம் கொள்ளுகிறீர்கள்!!
இனி வரயிருக்கும் உயிர்த்தெழுதலுக்குக் காரணமாக இருக்கும் கிறிஸ்து இயேசு பூமியில் அனைவரையும் உயிரடையச்செய்ய இருக்கிறார், இப்படி அனைவரைக்கும் நித்திய ஜீவனைத் தருவதால், அவர் நித்திய பிதாவாகிறார். He is Eternal Father not by Status but by Relation or Work!!
"இம்முவரும் ஒன்றாயிருக்கிறார்கள்" என்கிற இந்த வார்த்தைகள் தங்களின் வேதத்தில் () குறியீட்டிற்குள் ஏன் இருக்கிறது என்கிற கேள்வி தங்களுக்கு எழும்பினதே கிடையாதா!! குறியீட்டிற்குள் இருக்கும் வசனங்கள் வேதத்தில் இன்னும் நிறைய இருக்கிறது, அவை எல்லாம் பிற்பாடு சில நல்ல மனிதர்களின் கள்ள விசுவாசத்தின் வந்த விளைவுகளே!!
அந்த வார்த்தை தேவனாக இருந்தது, ஆனால் அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது என்பதை என்னவாக புரிந்திருக்கிறீர்கள்!! அப்படி இருந்தாலும் இருவரை மாத்திரம் சொல்லும் ஒரு இடத்தில் மூன்றாம் ஒரு "நபரை" எப்படி பொருத்துகிறீர்களோ!!
பிதாவிடம் வந்தவர் கிறிஸ்து இயேசு!! மாம்சத்தில் வரும் முன்னே அவருக்கு ஒரு மகிமை கொடுக்கப்பட்டிருந்தது, அந்த மகிமையோடு அவர் பூமிக்கு வராமல், அந்த சுதந்திரத்தை அபகரித்துக்கொண்டு வராமல், பூமியில் பாடு உள்ள மனிதனாகவே கிறிஸ்து இயேசு பிறந்தார்!! இது தான் அவர் "கொள்ளையாடின பொருள் என்று எண்ணாமல்" இருப்பது!! அவர் ஒரு போதும் தன்னை பிதா என்று சொல்லவில்லையே!! நான் அனுப்பப்பட்டவன் என்று சொல்லும்போது யாரால் இவர் அனுப்பட்டவர் என்கிற கேள்வி எழும்பாதா? பிதாவே கிறிஸ்துவாக இந்த பூமிக்கு வருகிறார் என்றால் அவர் ஏன் அனுப்பட்டவராக இருக்கவேண்டும்!! கிறிஸ்து என்றாலே அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று அர்த்தம்!! யாரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று யோசிக்க வேண்டாமா!!
தேவன் என்கிற ஒரு வார்த்தையால் கிறிஸ்து பிதாவாகி விடுவதில்லை!! தேவன் என்கிற வார்த்தை வேதத்தில் அநேகருக்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!! வேதத்தை வாசித்து ஆராய்பவராக இருந்தால் பாருங்கள்!!
யோவான் 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
வேதத்தையும் அதில் உள்ள வார்த்தைகளையும் நம்பும்படியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர, வேதம் சொல்லுவதில்லை தான், ஆனால் அநேகர் இந்த விசுவாசத்தில் இருப்பதால் இது தான் சரி என்று சொல்லுவது அர்த்தமற்ற, ஆபத்தான, அபத்தமான விசுவாசமாகிறது!! விசுவாசமும் தேவனின் வசனத்தினால்தான் வருகிறது!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
// மூன்றாவதாக ஒரு நபர் இருப்பதாக சொல்லவில்லை. கோட்பாடுகள் அனைத்தும் மனித ஞானத்தில் வந்தவைகள் தான்//.
அப்போ, அவருக்கு பின்னால் வரப்போகிற தேற்றரவாளன் என இயேசு யாரை ஐயா குறிப்பிட்டார். இது மனுஷ ஞானமோ.
யோவான் 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
பிதாவிடத்தில் வேண்டிக்கொள்ளும்போது (பிதா, இயேசு இருவராக இருக்கிறார்கள்), உங்களுடனே (அப்போஸ்தலர்களுடன்) இருக்கும்படிக்கு சத்திய ஆவி (கவனியுங்கள், சத்திய ஆவியானவர் இல்லை) ஆகிய வேறொரு தேற்றரவாளனை (தேவத்துவம் உள்ள தேற்றரவாளர் அல்ல) உங்களுக்கு (அப்போஸ்தலர்களுக்கு) தந்தருளுவார்!!
இப்படி ஒரு வசனத்தை வாசித்தால் உங்களுக்கு சத்திய ஆவி மூன்றாம் நபராக தெரிகிறதோ!! வஞ்சிக்கும் ஆவி, பொய்யின் ஆவி, குறிச்சொல்லும் ஆவி இவைகளெல்லாம் ஆள்தத்துவம் உள்ளது என்று ஒப்புக்கொண்டால், சத்திய ஆவியையும் ஆள்தத்துவம் என்று ஒப்புக்கொள்ளலாம்!! அப்படியே ஆள்தத்துவம் என்றால், அந்த சத்திய ஆவியை ஒரு தேவனாக இந்த வசனம் சொல்லவில்லையே!! இதை வைத்துக்கொண்டு இவர்கள் மூவரும் ஒன்றுதான் என்று எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்!! மேலும், நபராக இருக்கும் ஒருவர் எப்படித்தான் கிறிஸ்துவின் மேல், அப்போஸ்தலர்கள் மேல், ஏன் இன்று உங்கள் மேல் "ஊற்றப்படுகிறாரோ"!!
நண்பரே, இதை எழுதுவதில் மனிதஞானம் இல்லை, தேவஞானம்தான் வெளிப்படும். ஏனென்றால் வசனத்தை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு தேவன் நிச்சயமாக அந்த தேவஞானத்தைத் தருகிறார்!! நான் மனிதஞானம் என்று சொன்னது, திரித்துவம் என்கிற கோட்பாட்டைத்தான்!! தயவுசெய்து வசனங்களைப் பாருங்கள், அவைகளில் தான் உண்மையும் ஜீவனும் இருக்கிறது!!
ஒரு காலத்தில் நிலாவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருக்கிறாள் என்றுதான் பிள்ளைகளிடம் சொல்லி வந்தார்கள்; அநேகர் அதை நம்பி, அந்த நம்பிக்கையில் மரித்துமிருக்கிறார்கள்!! ஆனால் ஒரு நாள் நீல் ஆம்ஸ்ட்ராங் என்கிற மனிதன் அந்த நிலாவில் கால் பதித்து அதை ஆராய்ந்து பார்த்து, பாட்டியும் இல்லை வடையும் இல்லை என்று சொல்லிய பிறகே மக்களின் நம்பிக்கை மாறியது!! இல்லை இல்லை, என் தாத்தா, என் பாட்டி என் மூதாதையர் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கையை நான் ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் சொன்னால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது!!
ஆவியை ஆவியானவர் என்று ஆக்கியது தமிழ் மொழிபெயர்ப்பு. ஏனென்றால், திரித்துவ கோட்பாட்டின் பாதிப்பில் உள்ளவர்கள் அதை மொழிபெயர்த்ததினால்!! வேதத்தை வாசிக்காத ஒரு நபரிடம் இந்த வேதத்தைக் கொடுங்கள்; உங்கள் போதனைகளைச் சொல்லாமல், பிறகு அவரிடம் கேட்டு பாருங்கள் இந்த வேதத்தில் என்னதான் இருக்கிறது என்று, அவர் சொல்லுவார்,
சர்வ வல்லமை உள்ள ஒரு அநாதி தேவன் இருக்கிறார்!! அவரின் ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்து இயேசு என்கிற மீட்பர் இருக்கிறார்!! இவர்களின் ஆவியின் வல்லமையினால், இவர்கள் தங்களின் வசனங்களைக் கொண்டு அனைத்தையும் செயல்படுத்துகிறார்கள் என்று!! இதை வைத்துக்கொண்டு இவர்கள் மூவரும் ஒரே ஆள் தான், தேவைக்கு தகுந்தாற்போல் தங்கள் உருவங்களை மாற்றி கொண்டு வருகிறார்கள் என்பதைத்தான் மனிதஞானத்தில் வந்த திரித்துவம் என்பேன்!!
தொடருவேன்...............
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
திரு ஜோஸப்ஸ்நேகா அவர்களே, இந்த தேற்றரவாளன் என்கிற பரிசுத்த ஆவி புதிய ஏற்பாட்டில் புதிதானது ஒன்றும் இல்லை!! இதே ஆவி பழைய ஏற்பாட்டில் வெகு சிலருக்கு கொடுக்கப்பட்டது!! ஆனால் கிறிஸ்துவின் சபை வளர அந்த ஆவி பூர்ணமாக தேவைப்பட்டது!! அப்போஸ்தலர்கள் உலகெங்கும் சென்று கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சொல்ல இந்த ஆவி தேவைப்பட்டது!!
சற்று யோசித்து பாருங்கள், இந்த ஆவி ஒரு ஆள் என்றால் அத்துனை பேருக்கும் எப்படி பங்கு போட்டு கொடுக்க முடியும்!! ஆனால் இந்த ஆவியை தேவனின் வல்லமை அல்லது சிந்தை என்று எடுத்துக்கொண்டால் இதை அனைவருக்கும் கொடுக்க முடியும், தேவையான அளவிற்கு கொடுக்க முடியும்!!
தேவனும் சரி அவர் தந்த வேதமும் சரி, குழப்பமே இல்லை, குழப்பம் ஆரம்பித்ததே மனிதர்களின் போதனைகள் மற்றும் பிற மதங்கள் / மார்கங்கள்ன் போதனைகள், விசுவாசங்கள், நம்பிக்கைகள் கிறிஸ்தவத்திற்குள் நுழைந்து விட்டதால் மாத்திரமே!! வேதம் தெளிவாக தேவன் யார் என்றும், அவரின் குமாரன் யார் என்றும் இவர்களின் ஆவி என்னவென்றும் போதித்தாலும், தேவையற்ற பக்தி முயற்சிகளால் தேவன் என்று கொடுக்கப்பட்ட ஒரே வார்த்தையினால் கிற்ஸ்துவையும், பிதாவையும் ஒன்றாக புரிந்துக்கொண்டு போதித்தும் வந்து விட்டார்கள், அதற்காக ஆறாயமல் அப்படியே ஏற்றுக்கொள்வது சரியாகுமா?? அப்படி இருந்தாலும், இருவரை வைத்துக்கொண்டு திரித்துவம் என்று எப்படி முடிவு செய்தார்கள் என்று புரியவில்லையே!! பரிசுத்த ஆவியான தேவன் என்று வேதத்தில் ஒரு வாக்கியம் அல்லது வசனமும் கிடையாதே!! தேவன் ஆவியாக இருக்கிறார் என்பதற்கும், பரிசுத்த ஆவி தேவனாக இருக்கிறார் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதே!! ஏன் எழுதியதற்கு அதிகமாக விசுவாசம் கொள்ள வேண்டும்!?
வேறு ஒரு இடத்தில் தாங்கள் பதிவிட்டது, //2000 ஆண்டு கிறிஸ்தவ வரலாற்றில் எத்தனையோ தியாகிகள், பக்தர்கள், பரிசுத்தவான்கள் இயேசுவை அறிக்கையிட்டு கடந்து சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத தெளிவு இவர்களுக்கு கிடைத்துவிட்டதாக்கும்.//
மன்னிக்கனும், 2000 வருடங்கள் என்பதே தவறு!! அப்போஸ்தலர்கள் துவக்கி வைத்த விசுவாசம் 325ம் ஆண்டு கத்தோலிக்கர்கள் வந்தவுடன் மாறியது!! அதன் பின் சுமார் 1500க்கு மேல் மார்ட்டீன் லூத்தர் மூலம் லூதர்ன் என்கிற ப்ராடஸ்டண்ட் பிரிவு (Denomination) ஏற்பட்டது!! அதை தொடர்ந்து 1800 கடைசியில் அல்லது 1900 ஆரம்பங்களில் வந்தது பெந்தகோஸ்தே பிரிவு!! இப்படி அப்போஸ்தலர்கள் கொடுத்த மூல உபதேசங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு மாறி தானே இருக்கிறது!! இன்று பெந்தகோஸ்தேயினர் கத்தோலிக்க விசுவாசத்தில் இருக்கிறார்களா என்றால் இல்லையே!! இந்த மாற்றங்கள் அல்லது பிரிவுகள் வந்ததே ஒவ்வொரு பிரிவிலும் ஏதோ தவறு இருக்கிறது என்பதினால் தானே!! அதை எல்லாம் ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்!! அப்படி இருக்க அறிவு பெருகியிருக்கும் (Technology-wise, internet, bible study tools, interlinear bibles, concordances etc,) இந்த கடைசி காலத்தில் வேதத்தை ஆறாய்ந்து சரியானதை போதிப்பவர்கள் தங்களுக்கு பரியாச பொருட்களாக அல்லது தவறான போதனை தருகிறார் என்பதற்கு தாங்கள் என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள், பாரம்பரிய மற்றும் உணர்வு பூர்வமான விசுவாசத்தை தவிற!! நீதியின் சூரியனான கிறிஸ்து இயேசுவின் வருகை சமீபித்திருக்கிற காலத்தில் அந்த நீதியின் சூரியனின் வெளிச்சத்தில் வேதம் இன்னும் தெளிவாக இருக்கிறது!! ஒரே கண்டிஷன், பாரம்பரியங்களை விட்டு பாருங்கள், வேதத்தின் சத்தியங்களை ருசிக்க வேண்டுமென்றால்!!
தானியேல் 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
வேதத்தை மறைத்து வைத்து, எரித்து போட்டு கிறிஸ்துவை சுமார் 1200 ஆண்டுகள் போதித்திருக்கிறார்கள் கத்தோலிக்கர்கள், எப்படி பட்ட விசுவாசம் இது!! இதை தானே பாரம்பரியமாக இன்று வரை பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்!! இயேசுவை அறிக்கை செய்வது பெரிய காரியமே கிடையாது, ஆனால் இயேசு யார் என்று அறிக்கை செய்வதில் தால் விஷயமே இருக்கிறது!! மற்ற மதத்தினரும் தான் இன்று இயேசுவின் படத்தை தங்கள் வீட்டில் வைத்துக்கொண்டு, இயேசுவும் ஒரு தெய்வம் என்று இருக்கிறார்கள், அவர்களுக்கும் கிறிஸ்துவை அறிந்தவர்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா!!
தள நிர்வாகியின் வேண்டுதலுக்கு இனங்கியே அவர் ஆரம்பித்த "திரித்துவம் என்றால் என்ன?" என்கிற திரியில் எழுதாமல் இங்கு எழுதுகிறேன்!! அதை நிர்வாகி என்று அனைவரும் அந்த திரியில் பதிவுகளை தரலாம் என்பாரோ, அன்று முதல் அங்கே பதிவு செய்கிறேன்!!
ரோமர் 10:17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
ஆக வேதத்தை ஆறாய்ந்து பார்த்து அதில் எழும்பும் கேள்விகளுக்கு வேதத்தின் வெளிச்சத்தில் வேதத்திலிருந்தே பதில் கிடைத்து அதை பற்றிக்கொள்வது தான் உன்னதமான விசுவாசமாக இருக்க முடியுமே தவிர, 2000 வருடங்களாக சிலர் போதித்து வந்ததை விசுவாசமாக கருதினால் வேதத்திற்கு புறம்பான விசுவாசம் தான் வர முடியும்!!
திரித்துவம் என்பது வேதத்தில் இல்லை ஆனால் விசுவாசிக்கிறீர்கள்!! புதுசா ஒரு வார்த்தை சேர்த்துக்கொண்டதையும் கவனித்தேன்,
//உங்களை பொறுத்தவரை திரித்துவதேவனை அறிக்கை செய்வது பாவமா? // என்று,
யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
வேதம் நமக்கு சொல்லுவது ஒன்றான மெய் தேவன் என்று, ஆனால் நீங்கள் (பாரம்பரியம், 2000 வருடங்களாக அறிக்கை செய்தவர்கள்) சொல்லுவது திரித்துவதேவனை!! வேதத்தை ஏற்பதா, அல்லது உங்களின் பாரம்பரியத்தை ஏற்பதா!? சற்று பொறுமையாக சிந்தியுங்கள்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17