இத்தளத்தினுள் தங்களை இணைத்துக் கொண்ட சகோதர சகோதரிகள் மோசஸ், பிரைட், பெரேயன்ஸ், சுந்தர், எட்வின், சுதா, julisam அனைவரையும் கிறிஸ்துவின் நாமத்தில் அன்புடன் வரவேற்கிறேன். இத்தளத்தினுள் வருகை தருகிற மற்றவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறேன். அனைவரும் தேவநாமம் மகிமைப்படவும் தேவராஜ்யம் கட்டப்படவும் ஏதுவான ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
I am a new member to this forum..I have to spend little more time to read full forum topics, because of less time i could not do it now, but i will check it later..
Anyway, best wishes....
Lovingly yours,
Jalal, Dubai.//
இனிய நண்பர் ஜலால் அவர்களை இத்தளத்தில் வரவேற்பதில் பேருவகை கொள்கிறேன்.
சில மாதங்கள் நண்பர் ஜலாலுடன் ஒரு தனியார் நிறுவனத்தில் நான் பணியாற்றியதோடு, அவரோடு PGDCA படிப்பும் படித்தேன். குறுகிய காலத்தில் எனது மிக நெருங்கிய நண்பரான ஜலால், தொடர்ந்து தனது நட்பை வளர்த்து வருகிறார். நண்பர் ஜலால், தன்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை இப்பகுதியில் பதிக்கும்படி வேண்டுகிறேன்.
இத்தளத்தினுள் தங்களை இணைத்துக்கொண்ட சகோதர சகோதரிகள் aryadasan, AISUORAP, Jalal, Suganthan, ravi, timothy, harvestsiftings, valsa, peuse ஆகியோரையும் அன்புடன் வரவேற்கிறேன். அனைவரும் வேதத்தின் அடிப்படையிலான தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவுசெய்து இத்தளத்தின் நோக்கம் நிறைவேறச் செய்ய பங்காற்றும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
தள அன்பர்கள் அனைவரும் இத்தளத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன். நம் கருத்து பெருவாரியானவர்களின் கருத்தோடு ஒத்துப்போகாததால், விவாதங்களில் கலந்துகொள்ள யாரும் தயங்கவேண்டாம். இடுக்கமான வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலரே என மத்தேயு 7:14-ல் இயேசு கூறுகிறார். அச்சிலரில் ஒருவராக நாம் இருக்கக்கூடுமென்பதால், நம் கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துகொள்வோம்.
தள அன்பர்களில் சிலர், இம்மாதிரி விவாதங்கள் அவசியந்தானா என நினைக்கலாம். அவர்களுக்கு பின்வரும் வசனங்களை நினைவூட்டுகிறேன்.
மல்கியா 3:16 கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
வேதாகம தியானம் என்பது தனித்தியானமாகவும் இருக்கலாம், கூட்டுத்தியானமாகவும் இருக்கலாம். இம்மாதிரி தளங்கள் கூட்டுத்தியானம் செய்வதற்கு ஒரு சிறிய கருவியாக இருக்கின்றன. நாமறிந்ததை பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் பிறர் அறிந்ததை நாம் தெரிந்துகொள்ளவும் இத்தளங்கள் உதவுகின்றன.
எனவே நாம் கூட்டுத்தியானம் செய்வதற்கு இம்மாதிரி தளங்கள் மூலம் தேவன் தந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோமாக.
தளத்தில் புதிதாக இணைந்துள்ள சகோ.ஆசைத்தம்பி (asai41) மற்றும் சகோ.எட்வின் சுதாகரை அன்புடன் வரவேற்கிறேன். தங்கள் மேலான கருத்துக்களை வழங்கும்படி வேண்டுகிறேன்.
தளத்தில் புதிதாக இணைந்துள்ள Bro.Alfred Rathanavelu(dalfrath), Bro.Soosaiappu Croos(Dixy) மற்றும் Bro.Karna (suncauvery) ஆகியோரை கிறிஸ்துவின் நாமத்தில் வரவேற்கிறேன். தங்கள் மேலான கருத்துக்களை வழங்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
தளத்தில் இணைந்து இதுவரை தங்களை அறிமுகப்படுத்தாதவர்கள், விருப்பமானால் தங்களைக் குறித்த சிறு அறிமுகம் தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
Hii sir, Thank you for your invites. Iam Karna from Mysore. and Iam new to this site. i saw your love on GOD The CREATOR. by your writing. First i will study your Mesg.
தளத்தில் புதிதாக இணைந்துள்ள சகோதரர்கள் எட்வின் ராஜா, Titus (gssscool), சேகர், ஜெபின், ஐசக் இம்மானுவேல், ஜெகநாதன், அமல்ராஜ், ப்ரதாப் செல்வராஜ், ஷலால், ஜோயல், பீட்டர் பால் சகாயராஜ் மற்றும் சகோதரிகள் கிருபை மேரி, யமுனா ஆகியோரை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
இத்தள நிர்வாகியும் மற்றும் பல உறுப்பினர்களும் Face Book-ல் இணைந்து அங்கு பதிவுகளைத் தந்துகொண்டிருப்பதால் இத்தளத்தில் புதிய பதிவுகள் அதிகம் இல்லை. ஆனாலும் பழைய பதிவுகள் ஏராளமாக உள்ளன. உறுப்பினர்கள் அவற்றைப் படித்து சந்தேகங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை பதியலாம்.
புதிய பதிவுகளும் அவ்வப்போது பதியப்படும். உறுப்பினர்களும் பதியும்படி அன்புடன் வேண்டுகிறேன்.