"பின்வரும் கேள்விகளுக்கு நேரடியான சுருக்கமான பதில் தாருங்கள், சகோ.பெரியன்ஸ் அவர்களே!
கொரிந்து, எபேசு போன்ற சபைகளுக்குத்தான் பவுல் நிருபங்களை ............... பல்வேறு சபைகளுக்குப் போதிக்கலாமா?"
வாசியுங்கள் 1 கொரி 1:2. "கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்லாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுக்கொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது"
அதை தானே செய்து வருகிறார்கள், ஆனால் அந்த போதனைகளை ஏற்றுக்கொள்பவர்கள் நிச்சயமாக தேவன் முன்குறித்தவர்களாக இருப்பார்கள்! கேட்பவர்கள அநேகராக இருந்தாலும் ஏற்றுக்கொள்பவர்கள் சிலரே! பவுல் எழுதும் போதே இரு குழுக்களுக்கு என்று தானே எழுதுகிறார் என்பதை தான் மேலே உள்ள வசனம் தெரிவிக்கிறது. கத்தோலிக்கர் தொடங்கி இன்று வந்த "சபை"கள் வரையில் அனைவரும் கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளுகிறார்கள், ஆனால அந்த கிறிஸ்து தான் யார் என்று அறியாமலே இருக்கிறார்கள்! "சபை" என்றால் என்னவென்று உங்கள் புரிந்துக்கொள்ளுதலை பொறுத்து தான் போதனைகள்! "பன்றிகளுக்கு முன் முத்தை கொட்டாதீர்கள்" என்கிறது வேதம்.
இன்று ஊழியரின் என்னைக்கையும், சதவிகிதமும் கூடிக்கொண்டி போயிருக்கிறது, ஆனால் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் என்னிக்கை குறைந்துக்கொண்டு தான் இருக்கிறது. இன்று உலகிலேயே இஸ்லாம் தான் அதிகமாக வேகமாக வளர்ந்துக்கொண்டிருக்கும் ஒரு மார்க்கம் என்று தாங்களும் அறிவீர்கள் என்று என்னுகிறேன். அப்படி என்றால் கிறிஸ்து சொன்ன போதனைகளை யார் பின் பற்றிகிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்!
என் தனிப்பட்ட அபிப்பிராயம் என்னவென்றால், யார் ஒருவனுக்கு தேவன் தன் அண்டையில் சேர்த்துக்கொள்ள சித்தமாக இருக்கிறாரோ, அவர்கள் நிச்சயமாக கேட்டு வருவார்கள், அதர்கு நீங்கள் காரணாமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
"யாரெல்லாம் அப்போஸ்தலர்கள்? நற்செய்தி சொல்கிற காரியம் அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே ஒப்புவிக்கப்பட்டது என்பதற்கு என்ன வேதஆதாரம்?"
யார் அப்போஸ்தலர்கள்?
இன்று அப்போஸ்தலர்கள் எனப்படவர்கள் பலர் தாங்களாகவோ, அல்லது தங்களின் சபை நியமிக்கப்பட்டவர்களாக இருக்கலாம், ஆனால் வேதம் சொல்லுவது, "அந்த பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன" மத். 10:2
"பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிடண்டுபேரத் தெரிந்துக்கோண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பெயிரிட்டார்" லூக். 6:13
இந்த வசனங்கள் நான் வேதத்திலிருந்து தான்கொடுத்திருக்கிறேன். இவைகள் சில வசனங்கள் தான், இன்னும் இதில் நான் கொடுக்காத வசனங்கள் உண்டு, அதையும் நேரம் இருந்தால் வேதத்தை ஆராய்கிறவர்கள் படிக்கவும்.
இந்த அப்போஸ்தலர்களுக்கு ஒரு விசேஷ அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது,
"பூமியில் கட்டப்படுவது பரலோகத்திலும் கட்டப்படும் என்றும், பூமியில் கட்டவிழ்க்கப்படுவது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்" அதாவது பூமியில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அவர்களுக்கு போதிக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருந்தது, அவர்கள் இங்கு சொல்லுவது பரலோகத்தின் அங்கிகாரம் பெற்றிருந்தது.
இப்பொழுது,
"பதினோருசீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் அவரைக்க்ண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள், அபொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி, வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆகையால், நீங்கள் (அப்பொஸ்தலர்கள்) புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் (இயேசு கிறிஸ்து) உங்களுக்கு (அப்போஸ்தலர்களுக்கு) கட்டளையிட்ட யாவையும் அவர்கள் (உலகத்தார், தேவனின் சபைக்கு முன்குறிக்கப்பட்டவர்கள்) கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென்." மத். 28:16-20
இந்த வசனங்களை விளக்கினால் தான் புரியுமா சகோதரரே! இயேசு கிறிஸ்து தான் சொல்ல வந்ததை அவரின் அப்போஸ்தலர்களிடம் சொல்லி சென்றார், அவர்கள் அதை வேதாகமம் என்கிற தொகுப்பில் எழுதி, இயேசு கிறிஸ்துவை மூலைக் கல்லாக கொண்டும், தாங்களை (அப்போஸ்தலர்களை) அஸ்திபாரக் கற்கலாகவும் சொல்லியிருக்கிறார்கள். யூதாஸ் போன பிறகு, பவுல் தான் அந்த பன்னிரண்டாவது அப்போஸ்தலனாக கிறிஸ்துவால் அவனுக்கு காட்சிக்கொடுக்கப்பட்டு தெரிந்துக்கொள்ளப்பட்டான் என்பதற்கு வேதம் போதுமானதாக இருக்கிறது.
அப்போஸ்தலர்கள் எல்லா இடமும் வசனம் சொல்ல வேண்டும் (அப். 6) என்பதால் தான் ஆங்காங்கே கூடுகிற கூட்டங்களை மேய்க்கும் படியாக அந்த சபைகளில் மூப்பர்கள் அல்லது மற்ற பனியாளர்களை தேர்வு செய்கிறார்கள்.
மற்றவர்களும் போதித்தார்கள், (தீமோத்தேயு, பர்ணபா இன்னும் பலர், ஆனால் அவர்களும் அப்போஸ்தலர்களால் அனுப்பபட்டவர்கள் தான்) இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து நேரடியாக கட்டளை பெற்று உலகம் எங்கும் சுவிசேஷத்தை சோலும் பணி அப்போஸ்தலர்களுக்கே சேர்ந்தது. அதன் பின் மனித முயற்சியில், நாங்களும் ஊழியம் செய்கிறோம் என்று யாரும் சொல்லாமல் செய்தார்கள், ஆனால் இன்றோ, இயேசு கிறிஸ்து தான் என்னிடம் வந்து பேசினார் என்றும், பரிசுத்த ஆவியான தேவன் தான் என்னிடம் பீஹாருக்கு போக சொன்னர் என்றும், பல விதமானவர்கள் பலவிதமாக சொல்லி வருகிறார்கள்.
யார் அப்போஸ்தலர்கள்??
மேலும் தாங்கள் குறிப்பிட்ட பிலி 1:18ஐ படித்து ஆராய எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வேண்டும். அல்லது தெரிந்த வேறு யாராவது அதை விளக்கி பதியலாம்.
"யோவான் 20:30-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள “நீங்கள்” எனும் வார்த்தை எவர்களைக் குறிப்பிடுகிறது?"
"இந்த புஸ்தகத்தில் எழுதியிராதா வேறு அநேகர் அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்" யோவான் 20:30. இதில் "நீங்கள்" எனும் வார்த்தை எனக்கு புரியவில்லை?!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
"பவுலின் நிருபங்கள் யாவும் சபைக்கு எழுதப்பட்டது என்கிறீர்கள். அதன்படி மேற்கூறிய வசனமும் சபைக்கு எழுதப்பட்டதுதானே? "
இதற்கும் அதே பதில் தான், சபை என்றால் புரிந்துக்கொள்ளுங்கள். அவர் சொல்லுவதை காதுள்ளவன் கேட்டு பின்பற்றுகிறான் என்றால் அது சபைக்கு அல்லது, இன்று, கத்தோலிக்கர்கள் முதல், நேற்று பக்கத்து தெருவில் வந்த சபையினர் வரைக்கும் என்று எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் அதை புரிந்து ஆசரிப்பது தான் இங்கே விஷயம்.பெயர் வைத்த இத்துனை சபைகள் இருந்தாலும் இதை ஏதாவது இரண்டு சபைகள் ஒரே விதமாக பின்பற்றுகிறார்களா? "இராபோஜனம்" என்று சொல்லி காலையில், மதியத்தில், சாயங்காலத்தில் வைப்பதை தான் நான் மனிதன் போதனை என்கிறேன்.
"இயேசு, தம்மை நினைவுகூர்ந்து இராப்போஜனம் எடுக்கச் சொன்னது தமது 12 சீஷர்களிடம் மட்டுமே."
மன்னிக்கனும், அவர் 12 பேரோடு எடுத்துக்கொண்டார் என்று தான் வேதம் சொல்லியிருக்கிறதே தவிர, 12 பேர்கள் மாத்திரம் எடுத்தால் போதும் என்று சொல்லவில்லை, அப்படி இருந்திருந்தால் அப்,. பவுல் இதை குறித்து வாய் திறந்திருக்க மாட்டார்.
"நீங்கள் ஏற்றுக்கொள்கிற காரியமென்றால் அதை “நமக்கு” என உரிமையோடு சொல்கிறீர்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளாததென்றால், அது சபைக்குதான் கூறப்பட்டது, அப்போஸ்தலருக்குத்தான் கூறப்பட்டது என்கிறீர்கள். ஏன் சகோதரரே இந்த பாரபட்சம்?"
இதில் பாரபட்சம் ஒன்றும் இல்லையே சகோதரரே. அவர் அப்போஸ்தலர்கள் மேல் பரிசுத்த ஆவியை ஊதினார் என்று வசனம் சொல்லியது என்றால் அது எப்படி என் மேல் ஊதினார் என்று எடுத்துக்கொள்ள முடியும். "நீங்கள்" என்று குறிப்பிட்டு சொல்லும் போது அது அந்த இடத்தில் யாருக்கு சொல்லப்பட்டதோ அப்படியே தான். "நாம்" என்றாலே அவரை பின் பற்றும் அனைவருக்கும் தான். நான் இதை வேற் மாதிரி பிரித்து பார்க்கவில்லையே.
அப்போஸ்தலர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எப்படி கிடைத்ததோ, அப்படியே தான் கொர்நெலேயு வீட்டிலும் கிடைத்தது என்று வேதம் சொல்லுகிறது. மற்ற எத்துனையோ பேர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கிடைத்தது, ஆனால் அதை அப்.க்கு கிடைத்தது போல், அல்லது கொர்நெலேயு வீட்டிற்கு கிடைத்தது போல் என்று சொல்லவில்லையே. இதை தான் நானும் சொல்லுகிறேன். ஆனால் சபைகள் இன்றும் தங்களுக்கு அப்படி பட்ட அபிஷேகம் கிடைப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், நான் வேதத்தை நம்பட்டுமா அல்லது மனிதர்களை நம்பட்டுமா? "நாம்" என்று வேதம் சொல்லுகிற இடம் சபைக்கு தான் சகோதரரே, ஆனால் பூமியில் பெயர் வைத்த சபைகளுக்கு அல்ல.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
"புதிய ஏற்பாட்டின் போதனைகள் யாவும் உலகத்துக்கு அல்ல, சபைக்கே என்கிறீர்கள். ஆனால், ஞானஸ்நானம் அவசியம் செய்யவேண்டிய ஒரு சடங்கு என்கிறீர்கள். இந்த சடங்கை இந்நாட்களில் யாரெல்லாம் செய்யவேண்டுமென்பதை சற்று விரிவாகக் கூறுங்கள்."
சகோதரரே, சபைக்கு மனிதர்கள் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. முன்பு உலகத்தில் சவுலாக இருந்தவன் தான் பின்பு சபைக்கு பவுலாக மாறுகிறான். சபைக்கு வரவேண்டியவர்கள் இந்த உலகத்திலிருந்து தான் வருகிறார்கள். ஒருவன் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும் என்றால் முதலில் அவர் இருதயத்தில் சுத்திகரித்துக்கொள்ளட்டும். தேவனுக்கு (கவனிக்கவும் ஊழியத்திற்கு என்று இல்லை) என்று தன்னை கொடுக்கிறவர்கள், கிறிஸ்துவை போல் மரித்து (நீரில் அடையாளமாக முங்கி) புது சிருஷ்டியாக (தங்களை அர்பனித்தவர்களாக நீரை விட்டு எழும்புவது) எழும்புவார்கள்!! முங்கி எழும்புவது காரியம் அல்ல, அந்த முங்கி எழும்புவதின் அர்த்தம் என்னவென்று பூமியில் பெயர் கொண்ட சபைகள் இன்று போதிப்பதில்லையே. ஞான்ஸ்னானம் எடுத்து புதிய சிருஷ்ட்டியாகும் மனிதன் Consecrated ஒனெ என படுகிறான். இங்கு இந்த கன்சிக்ரேஷன் தான் அவசியம். இந்த கான்சிக்ரேஷம் உலகத்தாருக்கு (கிரிஸ்தவர்கள் உட்பட) கிடையாது.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
//யோவான் 20:30-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள “நீங்கள்” எனும் வார்த்தை எவர்களைக் குறிப்பிடுகிறது?//
bereans wrote:
//"இந்த புஸ்தகத்தில் எழுதியிராதா வேறு அநேகர் அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்" யோவான் 20:30. இதில் "நீங்கள்" எனும் வார்த்தை எனக்கு புரியவில்லை?!//
மன்னிக்கவும் சகோதரரே!
யோவான் 20:31-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள “நீங்கள்” எனும் வார்த்தை எவர்களைக் குறிப்பிடுகிறது?
யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
-- Edited by anbu57 on Sunday 31st of January 2010 06:14:13 PM
anbu57 wrote: //பின்வரும் கேள்விகளுக்கு நேரடியான சுருக்கமான பதில் தாருங்கள், சகோ.பெரியன்ஸ் அவர்களே!
கொரிந்து, எபேசு போன்ற சபைகளுக்குத்தான் பவுல் நிருபங்களை எழுதியுள்ளார் என்கிறீர்கள். அந்த நிருபங்களில் அவர் போதித்ததை உலகத்திற்கு போதிக்க வேண்டியதில்லை என்கிறீகள். அவ்வாறெனில் அப்போதனைகளை சபைகளுக்குப் போதிக்கலாமா? அதாவது இந்நாட்களில் நம் மத்தியிலுள்ள பல்வேறு சபைகளுக்குப் போதிக்கலாமா?//
இக்கேள்விக்கான உங்கள் பதில் புரியவில்லை. சுருக்கமான நேரடியான பதிலைத் தரும்படி மீண்டும் வேண்டுகிறேன்.
anbu57 wrote: //யாரெல்லாம் அப்போஸ்தலர்கள்? நற்செய்தி சொல்கிற காரியம் அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே ஒப்புவிக்கப்பட்டது என்பதற்கு என்ன வேதஆதாரம்?//
bereanas wrote: //இயேசு கிறிஸ்துவிடம் இருந்து நேரடியாக கட்டளை பெற்று உலகம் எங்கும் சுவிசேஷத்தைச் சொல்லும் பணி அப்போஸ்தலர்களுக்கே சேர்ந்தது.//
அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே சுவிசேஷப்பணி செய்யக் கட்டளை என்கிறீர்கள். ஆனால் இராப்போஜனக் கட்டளை பற்றி கேட்டால், அது 12 பேர்களுக்கு மட்டும் என இயேசு சொல்லவில்லையே என்கிறீர்கள்.
அப்படிப் பார்த்தால், சுவிசேஷப்பணி கட்டளையும் 12 பேர்களுக்கு மட்டும் என இயேசு சொல்லவில்லையே!
எப்படி 12 பேர்களிடம் சொன்ன இராப்போஜனக் கட்டளைக்கு பவுலும் அன்றைய சபையாரும் கீழ்ப்படிந்தனரோ, அப்படியே 12 பேர்களிடம் சொன்ன சுவிசேஷப்பணிக் கட்டளைக்கு நாமும் கீழ்ப்படிவதில் தவறில்லையே! உங்களுக்கு மனமில்லையென்றால் விட்டுவிடுங்கள். அதற்காக நீங்கள் என்னென்ன கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறீர்களோ அவற்றிற்கு மட்டுமே மற்றவர்களும் கீழ்ப்படிய வேண்டும் எனச் சொல்வதில் என்ன நியாயம்?
நீங்கள் கீழ்ப்படியாத கட்டளைகளுக்கு மற்றவர்களும் கீழ்ப்படியக்கூடாது எனச் சொல்வதில் என்ன நியாயம்?
வேதாகமம் பிரதானப்படுத்தாதவற்றை பிரதான கொள்கைக் கோட்பாடுகளாக வகுத்து, அவற்றை வலியுறுத்திவிட்டு, பிரதானமானவைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிற சபையின் விபரீதக் கொள்கைகளை வெளிப்படுத்துவதுதான் “கொள்கைக் கோட்பாடுகள்” எனும் தலைப்பின் நோக்கம்.
ஆனால், “வேதம் உலகத்துக்கு என்ற கோட்பாடு” எனும் இத்திரியில், வேதாகமம் நேரடியான சொன்ன கட்டளைகளில் சிலவற்றை இது நமக்குரியதல்ல என விவாதித்து வருகிறீர்கள்.
உலகத்திலிருந்துதான் சபைக்கு வருகிறார்கள் எனும் உண்மையை நீங்களே சொல்லிவிட்டீர்கள். எனவேதான் வேதத்தை உலகுக்குப் போதிக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லிவருகிறேன்.
எப்படி இயேசு உலகத்திடம் போதித்தாரோ, எப்படி அப்போஸ்தலர்கள் உலகத்திடம் போதித்தார்களோ அப்படியே நாமும் உலகத்திடம் போதிப்பதால் தவறெதுவுமில்லை. போதனைக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா மாட்டார்களா என்பது கேள்வியல்ல. நாம் விதைப்போம், நீர்பாய்ச்சுவோம். விளையச் செய்வது கர்த்தரே.
நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கு வேதாகமம் கூறுகிற கட்டளைகள் இவ்வுலகம் முழுமைக்கும் பொதுவானதுதான். அக்கட்டளைகளை அறியாமல் பலர் மரித்துள்ளனரே என்ற கேள்வியைக் கேட்டு, யாரிடமும் போதியாதிருக்க வேண்டியதில்லை.
கட்டளைகளை அறிந்தவர்கள் அவற்றின்படி நடக்க பிரயாசப்படத்தான் வேண்டும். கட்டளைகளை அறியாதவர்கள், அல்லது அறிந்தும் கீழ்ப்படியாதவர்களைப் பற்றி நாம் சொல்லிக்கொண்டிடிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு தேவன் என்ன திட்டம் வைத்துள்ளாரோ அதன்படி நடக்கும். அந்த தேவதிட்டத்தைக் குறித்து வேண்டுமானால், நாம் மற்றொரு தலைப்பில் ஒரு திரியைத் துவக்கி நம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம்.
பிலி. 1:18-க்கு விரைவில் விளக்கம் தரும்படி வேண்டுகிறேன்.
-- Edited by anbu57 on Wednesday 3rd of February 2010 04:00:05 AM
-- Edited by anbu57 on Wednesday 3rd of February 2010 04:03:30 AM
நான் சொல்ல வருவதை தாங்கள் புரிந்துகொள்ளவில்லையே சகோதரரே. பேர் வைத்த சபைகளில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், ஆனாலும் வசனங்கள் "காது உள்ளவர்களுக்கு" மாத்திரமே புரியும் என்கிறேன். ஆகவே புரியாதவர்களும், அதை பின்பற்றாதவர்களும் "உலகத்தார்" தான். பூமியில் இருக்கும் பேர் வைத்த சபைகளில் அங்கத்தினராக இருப்பதாலோ, அல்லது முங்கி எழுந்து ஞானஸ்னானம் எடுத்து விட்டேன் என்பதாலோ, நான் பரலோகத்தில் பேர் எழுதப்பட்டிருக்கும் சர்வ சங்க சபைக்கு தகுதியானவனாக இருக்கிறேன் என்கிற உத்திரவாதம் இல்லை. இது ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியில் நன்கு உணர்வாகள்.
ஆகவே போதிக்கப்படும் வசனங்கள் அது வேறு மதத்தினருக்கோ அல்லது சபைக்கோ யாரிடமாக இருந்தாலும், அந்த மெய்யான சபைக்கு தீர்மானிக்கப்பட்டவர்கள் மாத்திரமே அதை புரிந்துகொண்டு, அதன்படி நடக்க முடியும் (மத். 13:11).
நான் சபை என்றால், இந்த பூமிக்குரிய சபையையே சொல்லவில்லை, அப்படி என்றால் இருப்பவர்கள் எல்லோருமே உலகத்தார்தான்.
"அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே சுவிசேஷப்பணி செய்யக் கட்டளை என்கிறீர்கள். ஆனால் இராப்போஜனக் கட்டளை பற்றி கேட்டால், அது 12 பேர்களுக்கு மட்டும் என இயேசு சொல்லவில்லையே என்கிறீர்கள்.
அப்படிப் பார்த்தால், சுவிசேஷப்பணி கட்டளையும் 12 பேர்களுக்கு மட்டும் என இயேசு சொல்லவில்லையே!"
மத். 28:19,20ல் மற்றும் பவுலுக்கு அப். 9:15ல் கிடைத்த கட்டளை வேறு யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதை என்பதை தயவு செய்து எனக்கு சொல்லுங்கள். இல்லை, அப்போஸ்தலர்கள் தான் இப்படிப்பட்ட ஒரு கட்டளையை அவர்கள் சீஷர்களாக்கினவர்களுக்கு கொடுத்தார்களா? இயேசு கிறிஸ்துவின் கட்டளையே, விசுவாசிப்பவர்களை சீடராக்குவதுதானே அன்றி, அப்போஸ்தர்கள் ஆக்க இல்லை.
இராபோஜனம், இயேசு கிறிஸ்துவின் வருகை மட்டும் அதை நினைவுக்குருதலாக செய்யவேண்டும் என்பது கட்டளை, அப்போஸ்தலர்கள் நிச்சயமாக அவரின் வருகை மட்டும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பது தெரியாதா? இராபோஜனத்தில் கலந்துகொள்ளாத பவுலுக்கு இயேசு கிறிஸ்துவே அதை குறித்து போதித்து இருக்கிறாரே (1 கொரி. 11:23), ஏன்? அதை சரிவர செய்ய போதிக்க சொல்லியிருக்கிறாரே, பிறகு எப்படி 12 அப்போஸ்தர்கள் மாத்திரம் அதை அனுசரிக்கவேண்டும் என்று சொல்ல கூடும்.
ஆனால் நற்செய்தி சொல்லும்படியாக இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களை தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லையே!! மனிதர்களே தங்களை நியமித்துக்கொண்டார்கள், நாங்கள் அப்போஸ்தலர்கள் என்று, தீர்க்கதரிசிகள் என்று!!
ஆனால் இது கட்டளை இல்லையே, இதைத்தான் வேதத்தில் சொல்லப்படாத மனித முயற்சி என்கிறேன். போலீஸ்காரர்களாக இருப்பது நல்லதாக இருந்தாலும், நினைத்தவர்கள் எல்லாரும் அதை செய்ய முடியாதே!!
"அக்கட்டளைகளை அறியாமல் பலர் மரித்துள்ளனரே என்ற கேள்வியைக் கேட்டு, யாரிடமும் போதியாதிருக்க வேண்டியதில்லை."
இதைக்கேட்டு, போதிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை, அப்படி கேட்காமல் போனவர்கள் நிலைதான் என்ன என்று கேட்க்கிறேன். இல்லை கேட்டவர்கள் அனைவரின் (உலக சபைக்குள்ளும், புறம்பும்) நிலைதான் என்ன?
நீங்கள் ஒரு வேளை உலகத்தார் என்றால் உலக சபைகளுக்கு வெளியே இருப்பவர்களை குறிப்பிடுகிறீர்கள், ஆனால் நான் பேர் கொண்ட சபையில் இருப்பவர்களையும் சேர்த்துத்தான் உலகத்தார் என்கிறேன். இதுதான் வித்தியாசம்.
"அந்த தேவதிட்டத்தைக் குறித்து வேண்டுமானால், நாம் மற்றொரு தலைப்பில் ஒரு திரியைத் துவக்கி நம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம்."
அவசியம் துவக்குங்கள், அதில் நிச்சயமாகவே பங்கு கொள்கிறேன். வேதத்தில் அனைவருக்கும் தேவனின் திட்டம் இருக்கிறது, அதில் நீங்களும் நானும்,எல்லோரும் இருக்கிறோம், இதுதானே வேதத்தின் மகத்துவமே! ஆனால் இதை புரிந்துக்கொள்ள தான் சபைகள் (உலகத்தார்) மறுக்கிறார்கள்!!
"பிலி. 1:18-க்கு விரைவில் விளக்கம் தரும்படி வேண்டுகிறேன்."
கர்த்தர் சித்தம் இருந்தால், விரைவில் பதிவு செய்வேன். வன்கியில் ப்ரொபேஷம் பீரியட் என்பதால் வேலை நேரம் அதிகம், கிடைக்கும் நேரத்தில் வீட்டில் வந்து பதிய வேண்டியதால் தான் பதிவுகள் சற்று குறைவாக இருக்கிறது. விரைவில் தர முயற்சிக்கிறேன்.
நன்றி.
nb: Pl excuse me for my tamil letters especially L and R.
-- Edited by anbu57 on Thursday 4th of February 2010 12:57:51 AM
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
சகோ ஹார்வெஸ்ட் அவர்களுக்கு சகோ அன்பு எழுதிய ஒரு பகுதி, யெகோவா என்பது அவருடைய நாம சங்கீர்த்தனம் எனும் திரியிலிருந்து,
"உங்கள் Signature வசனத்தின் மூலம் (மத்தேயு 24:14), வேதம் உலகத்துக்கு எனும் கோட்பாடு தலைப்பில் சகோ.பெரியன்ஸ் -உடனான என் விவாதத்திற்கு ஆதரவான ஒரு முக்கிய வசனத்தைத் தந்துள்ளீர்கள். நன்றி."
இந்த வசனம் விவாதத்துக்குரியதுதான், இந்த வசனம் நிறைவேறிற்று. இன்று மக்கள் வேண்டுமென்றால் வேதத்தை பின்பற்றாமல் இருக்கலாம், ஆனால் வேதம் "கிறிஸ்து"விற்கு சாட்சியாக உலகம் எங்கும் சென்று விட்டது. இந்த அறிக்கை நான் அல்ல, "World Bible Society" அமைப்பு 1861ல் கொடுத்தது. ஒருக்கால் இன்னும் சிறு இடங்களுக்கு வேதாகமம் (கவனிக்க அதை பின் பற்றுபவர்கள் அல்ல) போய் சேருவதற்காகத்தான் முடிவு வராமல் இருக்கிறதோ. இந்த வசனம் தங்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறது என்பதை பதியுங்கள்.
-- Edited by anbu57 on Friday 5th of February 2010 05:51:28 AM
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
1. ராஜ்யத்தின் சுவிசேஷத்தை 12 அப்போஸ்தலர் மட்டுமல்லாது, யார் வேண்டுமானாலும் பிரசங்கிக்கலாம்.
2. சகல ஜாதிகளுக்கும் பிரசங்கித்தபின்னரே முடிவு வரும் என்பதால், முடிவு வரும்வரை பிரசங்கிக்கலாம். இதற்கு நாமாக காலநிர்ணயம் செய்யவேண்டியதில்லை.
World Bible Society-ன் அறிக்கையை aunthenticated-ஆக எல்லோரும் எடுக்கவேண்டியதில்லையே. சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டுவிட்டது என ஒருவர் கருதும்வரை அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க உரிமையுண்டு.
வேதாகம அப்போஸ்தலர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் சுவிசேஷப்பணி செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக மத்தேயு 24:14-ஐ எடுத்துக் காட்டினபின், 1861-ல் World Bible Society கொடுத்த அறிக்கையைச் சொல்லி, 1861-க்குப் பிறகு சுவிசேஷப்பணி செய்யவேண்டியதில்லை என்கிறீர்கள். உங்களுடைய நோக்கமெல்லாம் தற்போது யாரும் சுவிசேஷப்பணி செய்யவேண்டியதில்லை என நிரூபிப்பதிலேயே உள்ளது.
World Bible Society-ன்படி, 1861 வரை சுவிசேஷத்தை அறிந்தவர்கள், யார் மூலம் அறிந்திருப்பார்கள்? நிச்சயமாக, வேதாகம அப்போஸ்தலர்களால் அல்லது அவர்களின் உதவியாளர்களால் இருக்கமுடியாது.
நம்மைப் போன்றவர்களில் சிலர்தான் அப்பணியைச் செய்திருப்பார்கள். மத்தேயு 24:14-ன்படி, அவர்களின் பணி வேதபோதனைக்கு உட்பட்டதுதானே?
1861 வரை சுவிசேஷப்பணி செய்தவர்களின் பணி வேதபோதனைக்கு உட்பட்டதாக இருந்தால், அதற்குப் பின்வந்தவர்கள் மட்டும் வேதபோதனைக்கு அப்பாற்பட்டு சுவிசேஷபணி செய்வதாக எப்படிக் கூறமுடியும்?
1. ராஜ்யத்தின் சுவிசேஷத்தை 12 அப்போஸ்தலர் மட்டுமல்லாது, யார் வேண்டுமானாலும் பிரசங்கிக்கலாம்.
(அ) ஆம்! மத்தேயு 28:17 ல் பார்க்கும் போது கலிலேயாவில் பிரசங்கிப்பதற்கான கட்டளையை கொடுக்கும்போது 11 அப்போஸ்தலர்கள் மாத்திரம் அங்கு இல்லை. ஏறக்குறைய 500 பேர் இருந்த சந்தர்பமாக இருந்திருக்கலம்.
மத்தேயு 28:20ன் பிற்பகுதி, இந்த பிரசங்கிப்பு வேலையில், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பதாக உறுதியளித்திருப்பதால். இந்த கட்டளை இன்றுவரை அமலில் இருப்பதகவே கருதவேண்டும்.
(ஆ)அப் 1:8ல் அப்போதுள்ள சீசர்கள் மட்டும் அல்ல மாறாக எதிர்காலத்து சீசர்களும் உட்பட்டிருக்கிறார்கள்.
(இ) அப் 8:1 மற்றும் 8:4 ல் பிரசங்கித்தவர்கள் யார்? அப்போஸ்தலர்களா? இல்லவே இல்லை. அப்போஸ்தலர்கள் தவிர மற்றவர்களே பிரசங்கித்தார்கள்.
(ஈ) மத்தேயு 24 ம் அதிகாரத்தில் கடைசி காலத்தை பற்றிய அடையாளங்களில் 14ம் வசனமும் ஒன்று. இது நம் காலத்தில் செய்யப்படும் ராஜிய பிரசங்கிப்பு வேலையை குறிக்கிறது. அப்போஸ்தலர் காலத்தை அல்ல.
தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து யார் வேண்டுமானாலும் பிரசங்கிக்கலாம் என்ற கருத்தை வலுவான வசன ஆதாரங்கள் மூலம் எடுத்துரைத்து, விவாதத்தில் இணைந்த சகோ.harvestsiftings-ஐ அன்புடன் வரவேற்கிறேன்.
சகோ.பெரியன்ஸ் அவர்களே! உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
-- Edited by anbu57 on Saturday 6th of February 2010 02:36:49 AM
இதோ சகோ ஹார்வெஸ்ட் அவர்களின் கேள்விகளுக்கான வேதத்திலிருந்து பதில்கள்:
"1. ராஜ்யத்தின் சுவிசேஷத்தை 12 அப்போஸ்தலர் மட்டுமல்லாது, யார் வேண்டுமானாலும் பிரசங்கிக்கலாம்."
இந்த வாக்கியத்திற்கு நான் கேட்கும் கேள்வி, சகோ ஹார்வெஸ்ட் அவர்களே, "ராஜ்யத்தின் சுவிசேஷம்" என்றால் என்ன? இதற்கும் "சுவிசேஷத்திற்கும்" என்ன வித்தியசம்? இன்று "இராஜியத்தின் சுவிசேஷம்" ஒரு சபையில் பிரசங்கிப்படுவதை காண்பித்து தாருங்கள்! முதலாவது "இராஜியத்தின் சுவிசேஷம்" என்றா என்னவென்று தெரியாதவர்கள் எப்படி அதை பிரசங்கிப்பார்கள்?
சகோ ஹார்வெஸ்டின் கேள்வி:
(அ) ஆம்! மத்தேயு 28:17 ல் பார்க்கும் போது கலிலேயாவில் பிரசங்கிப்பதற்கான கட்டளையை கொடுக்கும்போது 11 அப்போஸ்தலர்கள் மாத்திரம் அங்கு இல்லை. ஏறக்குறைய 500 பேர் இருந்த சந்தர்பமாக இருந்திருக்கலம்.
பதில்: "இருந்திருக்கலாம்" என்று யூகமே முதலாவது தவறு. மத். 28:17 தெளிவாக சொல்லுகிறது, "பதினோரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்கு குறித்திருந்த மலைக்குப் போனார்கள்" என்று தானே. இதில் எங்கே இருந்து இன்னும் சுமார் 500 பேரை சேர்த்துக்கொண்டீர்கள்?
New International Version (NIV)
16Then the eleven disciples went to Galilee, to the mountain where Jesus had told them to go.
New Living Translation (NLT)
16 Then the eleven disciples left for Galilee, going to the mountain where Jesus had told them to go.
New American Standard Bible (NASB)
16 But the eleven disciples proceeded (A)to Galilee, to the mountain which Jesus had designated.
இத்துனை வசனங்களிலும் எங்கேயும் 500 பேரை காணவில்லை. தயவு செய்து "எழுதியதற்கு அதிகமாக என்ன வேண்டாம்". நம் யூகங்கள், இருக்கலாம், இருந்திருக்கலாம், அப்படியாக தான் இருக்கும் போன்றவைகள் தான் இத்துனை சபைகளை பிறப்பிக்க காரணமாக இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த கட்டளை 11 சீஷர்கள் பெற்றார்கள், அதன் பின் 12வது அப்போஸ்தலான பவுல் (யூதாஸிற்கு பதில்) இதே கட்டளையை பெற்றான். ஆக இந்த 12 பேர்கள் போதிக்கும், சபை கோட்பாடுகளை கொண்டு வரும் அதிகாரம் உடையவர்களாக இருந்தார்கள்.
"மத்தேயு 28:20ன் பிற்பகுதி, இந்த பிரசங்கிப்பு வேலையில், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பதாக உறுதியளித்திருப்பதால். இந்த கட்டளை இன்றுவரை அமலில் இருப்பதகவே கருதவேண்டும்."
உலகத்தின் முடிவு பரியந்தம் யாருடன் இயேசு கிறிஸ்து இருப்பதாக சொல்லியிருக்கிறார், ஏன் இப்படி சொன்னார் என்பதையும் பார்க்க வேண்டும்? இயேசு கிறிஸ்துவிற்கு தெரியாதா, அப்போஸ்தலர் அந்த நூற்றாண்டிற்குள் மரித்து விடுவார்கள் என்று? அப்புறம் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? இயேசு கிறிஸ்து அவர்களுக்கு உபதேசம் பண்ணும் அதிகாரத்தை கொடுத்தார், அந்த உபதேசங்கள், கோட்பாடுகள் வேதத்தில் பதிவாகியிருக்கிறது, இவைகளே உலக முடிவு பரியந்தம் நிலைத்திருக்கும் என்பது தான் அங்கே சொல்ல பட்ட கருத்து. .
சகோ ஹார்வெஸ்ட் யூகிப்பது போல் 500 பேர் இருந்திருந்தாலும், 11 பேரிடமே இந்த உபதேசம் பண்ணும் காரியம் (The Great Commission) ஒப்புவிக்கப்பட்டது என்பது என் வாதம்.
மற்ற கேள்விகளுக்கும் பதில் தருவேன், இன்னும் வரும்.......
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
இந்த இரண்டு கேள்விகளுக்கும் இரண்டு திரிகள் தேவை. இல்லாவிட்டால் அது "திரிபுரள்" (TROLL) ஆகிவிடலாம்.
(1) நீங்கள் மத் 28:16ஐ மேற்ககோள் காட்டும்போது 17ம் வசனத்தையும் சேர்த்து காட்டியிருக்கலாம். அந்த வச்னத்தில் "சிலர் சந்தேகப்பட்டார்கள்" என இருக்கிறது. இது நிச்சயமாக 11 பேரில் சிலர் சந்தேகப்பட்டார்கள் என நீங்கள் அர்த்தம் கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்.
ஆக அந்த கட்டளை கொடுக்கப்படும்போது 11 பேர் மாத்திரம் அல்ல அனேகர் அங்கே இருந்திருக்கிறார்கள். அதில் சிலர் சந்தேகப்பட்டிருக்கிறர்கள்.
(2) உயிர்த்தெழுந்த இயேசு யார் யாருக்கெல்லாம் காட்சியளித்தார் என்று ஒரு பட்டியலை பவுல் 1 கொரி 15ம் அதிகாரத்தில் தருகிறார். அதில் மற்ற எல்லா சந்தர்ப்பங்களையும் அறிய முடிந்தாலும் வசனம் 6ல் உள்ள் விவரங்கள், மத் 28:16 முதல் 20 வரையான பதிவுக்கு பொருந்துவதாக அனேக வல்லுனர்கள் சொல்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு உண்டு.
(3) அனேகர் வந்திருந்தாலும் 11 பேருக்கு மட்டுமே அந்த கட்டளை கொடுக்கப்பட்டது என்ற முடிவுக்கு வர வலுவான ஆதாரம் ஏதும் பைபிளில் இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை.
ஏன் அப்படி சொல்கிறோம்?
லூக்கா 10:1 இவ்விதமாக சொல்கிறது: இவைகளுக்கு பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
இந்த வசனம் காட்டுகிறபடி இயேசு 11 பேருக்கு மட்டுமல்ல அனேகருக்கு பயிற்சி அளித்து பிரசங்கிக்கும்படியான கட்டளையை கொடுத்தார். எனவே மத் 28:16 முதல் 20 வரையான பதிவில் உள்ள கட்டளை அங்கிருந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை என்ற முடிவுக்கு வருவது மிக சரியானது அல்லவா?
(4) சரி! இந்த கட்டளையை மீண்டும் சற்று கவனமாக வாசித்து பாருங்கள். அந்த கட்டளையில் என்ன உட்பட்டிருந்தது?
போய் பிரசங்கிப்பதோடு, இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் கைகொள்ளும்படி அவர்களுக்கு போதிக்கவேண்டும். இதில் "நீங்கள் புறப்பட்டுப் போய் சீஷராக்குங்கள்" என்ற கட்டளையும் அடங்கும். ஏன் இதை அவ்வளவு முக்கியமாக கருதுகிறோம்? இந்த கட்டளையை "ஆகையால்" என்ற வார்தையோடு துவங்குவதை கவனியுங்கள். "ஆகையால்" என்றால் எதனால்? 18ம் வசனத்தில் விளக்குகிறார்: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, "ஆகையால்"......
எனவே இந்த கட்டளை தன்னுடைய அதிகார நிலைபாட்டை வலியுறுத்திய பின் கொடுக்கப்பட்டதால் இது அனைவரும் கீழ்படியவேண்டிய கட்டளை என சரியாகவே முடிவுக்குவரலாம் அல்லவா.
(5) இயேசு கிறிஸ்துவிற்கு தெரியாதா, அப்போஸ்தலர் அந்த நூற்றாண்டிற்குள் மரித்து விடுவார்கள் என்று? அப்புறம் ஏன் அப்படி சொல்ல வேண்டும்?
மிக வலிமையான கேள்வி. இயேசு கிறிஸ்துவிற்கு அப்போஸ்தலர் அந்த நூற்றாண்டிற்குள் மரித்து விடுவார்கள் என்றும் தெரியும்.
தான் பிரசங்கிக்கும்படி கொடுத்த கட்டளையை கைகொள்ளும்படி அவர்கள் சத்தியத்தை கற்றுக்கொடுப்பவர்களுக்கும் கற்பிப்பார்கள் என்பதும் தெரியும்.
எனவேதான் முடிவுவரை இந்த பிரசங்கவேலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.
(6) அந்த உபதேசங்கள், கோட்பாடுகள் வேதத்தில் பதிவாகியிருக்கிறது, இவைகளே உலக முடிவு பரியந்தம் நிலைத்திருக்கும் என்பது தான் அங்கே சொல்ல பட்ட கருத்து.
தயவுசெய்து அந்த வசனத்தை மீண்டும் படிக்கும்படி வேண்டுகிறேன். அது இவ்விதமாக வாசிக்கிறது: 20ஆ "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" இந்த வசனம் நேரடியாகவே அந்த பிரசங்கிக்கும் கட்டளைகளுக்கு கீழ்படியும் நபர்களோடு இயேசுவின் அனுக்கிரகம் இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது அல்லவா?
இது ஒருபோதும் உபதேசங்களையோ, கோட்பாடுகளையோ அல்லது பைபிள் தொடர்ந்து மக்களிடம் இருக்கும் என்பதையோ குறிக்காது.
உண்மையில் அனேகர் இந்த கட்டளைக்கு கீழ்படிகிறார்களா?
இல்லை! அவர்கள் அனேக நுட்ப விவரங்களை சொல்லி அசட்டை செய்கிறார்கள். உண்மையில் முன் பின் அறியாதவர்களிடம் சென்று பிரசங்கிப்பதை மதிப்புகுறைவாக நினைப்பதே அதற்க்கு காரணம் என நினைக்கிறேன்.
ரோமர் 1:16 நற்செய்தியை அறிவிப்பதற்கு நான் வெட்கப்படுவதில்லை. ஏனென்றால், அது கடவுளுடய வல்லமையின் வெளிக்கட்டாக இருக்கிறது. முதலில் யூதர்களையும், பின்பு கிரேக்கர்களையும், ஏன், விசுவாசிக்கிற அனைவரையுமே அது மீட்புக்கு வழி நடத்துகிறது.
__________________
ராஜியத்தினுடைய இந்தச் சுவிஷேசம் ... சாட்சியாக பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (மத் 24:14)
(ஆ) அப் 1:8ல் அப்போதுள்ள சீசர்கள் மட்டும் அல்ல மாறாக எதிர்காலத்து சீசர்களும் உட்பட்டிருக்கிறார்கள்.
பதில்: சகோ ஹார்வெஸ்ட் அவர்கள் "அப்போஸ்தலர்களுக்கும்", "சீஷர்களுக்கும்" உண்டான வித்தியாசத்தை முதலில் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடம் போதிக்க சொல்லி அனைவரையும் "சீஷர்களாக்க" தான் சொன்னாரே தவிர அனைவரையும் "அப்பொஸ்தலர்களாக" மாற்ற சொல்லவில்லை. அப்போஸ்தலன் (Apostle): இயேசு கிறிஸ்துவால் தெரிந்துக்கொள்ளப்பட்டு அனுப்பட்டவன் சீஷன் (Disciple): போதனைகளை ஏற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்துவை பின் பற்றுபவன்.
மேலும் நீங்கள் குறிப்பிட்ட அந்த அப். 1:8ஐ மாத்திரம் வாசிப்பதற்கு பதிலாக முதலாம் வசனத்திலிருந்தே வாசியுங்கள். அதில் இயேசு கிறிஸ்து எப்படி உயிர்த்தெழுந்து பரம் ஏறுவதற்கு முன்பு தமது அப்போஸ்தலர்களிடமே ராஜியத்தின் காரியங்களை குறித்து சொல்லி தந்திருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்ளலாம். மேலும் மேல் வீட்டில் பரிசுத்த ஆவி பெறும் போது "அப்போஸ்தலர்களுடன்" "சீஷர்களும்" கூடி இருந்தார்கள்.
முதலாவது இயேசு கிறிஸ்துவின் கட்டளையை தெளிவாக வாசியுங்கள், அவர் அப்போஸ்தலரை அனுப்பி அனைவரையும் சீஷர்களாக்க சொன்னார், மற்றவர்களை போய் இவர்கள் செய்யும் காரியத்தை செய்ய சொல்லி வேதத்தில் எங்குமே இல்லை.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
நீங்கள் பதில் சொல்ல வேண்டிய வசனங்கள் நிறைய உள்ளன. உங்கள் வசதிக்காக அவற்றைத் தொகுத்து தருகிறேன்.
1. மத்தேயு 24:14 (ராஜ்யத்தைக் குறித்த பிரசங்கம் என்றால் எதுவெனச் சொல்ல விரும்பினால் அதை வேறொரு தலைப்பில் தனியாக ஒரு திரியைத் துவக்கி பதியலாம்)
2. பிலிப்பியர் 1:18
3. மத்தேயு 28:19-ன் கட்டளை, 11 சீஷர்களுக்கு மட்டுமே உரியது என்கிறீர்கள். அவ்வாறெனில், அந்த 11 பேரும் இயேசுவின் கட்டளைப்படி உலகின் சகல ஜாதிகளையும் சீஷராக்கிவிட்டார்களா? இந்தியாவிற்கு தோமா ஒருவர் மட்டுமே வந்த்தாக சரித்திரம் கூறுகிறது. அவர் தனியாளாக இந்தியாவின் சகல ஜாதிகளையும் சீஷராக்கினாரா? நீங்கள் இயேசுவின் சீஷரா? ஆம்,எனில் உங்களை சீஷராக்கியது யார்?
4. அப்போஸ்தலரல்லாத பலர், யூதேயா சமாரியாவுக்குச் சென்று சுவிசேஷ வசனத்தை பிரசங்கித்ததாக அப். 8:4; 11:19 வசனங்கள் கூறுகின்றது. இதற்கு உங்கள் பதில் என்ன?
5. பர்னபா, சீலா, மாற்கு, அப்பொல்லோ ஆகியோருக்கு போதிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தார்?
6. அப். 8:5-ல் கூறப்பட்டுள்ள பிலிப்பு யார்?
7. யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள “நீங்கள்” யார்?
8. நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுள்ளீர்களா? ஆம், எனில் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தார்?
இக்கேள்விகள் அனைத்துக்கும் நேரடியான பதிலைத் தரும்படி வேண்டுகிறேன்.
மத். 28:16ல் உள்ளவர்கள் 11 பேர்களே என்று வேதம் சொல்லியிருக்கும் போது, சந்தேகம் பட்ட சிலர் வேறு தான் சந்தேகம் கொண்டார்கள் என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. மேலும், அவர்களின் சந்தேகங்கள் (என்ன சந்தேகம் என்று அப்.1:6,7ல் உள்ளது) தீர்ந்து, அவர்கள் பலப்படும் படி அவர்களுக்கு பரிசுத்த ஆவியை வாக்கருளினார்.
16Then the eleven disciples went to Galilee, to the mountain where Jesus had told them to go. 17When they saw him, they worshiped him; but some doubted. 18Then Jesus came to them and said, "All authority in heaven and on earth has been given to me. 19Therefore go and makedisciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit, 20and teaching them to obey everything I have commanded you. And surely I am with you always, to the very end of the age."
மத். 28:19: "ஆகையால், நீங்கள் புறப்புட்டுபோய் சகல ஜாதிகளையும் சீஷர்களாக்கி"
கட்டளையே சகலரையும் "சீஷர்கள்" ஆக்குவது தான். சீஷர்கள் என்றால், கற்றுக்கொள்பவன், கட்டளைக்கொடுப்பவன் அல்ல. இயேசு கிறிஸ்து இவர்கள் மூலமாக மற்றவர்களை சீஷர்களாக்கும் கட்டளையை தான் கொடுத்தாரே அன்றி மற்றவர்களை அப்போஸ்தலர்களாக மாற்ற சொல்லவில்லை.
மத். 28:20 "அவர்கள் கைக்கொள்ளும்படி"
அவர்கள் யார்? சீஷர்கள்
கைக்கொள்ளும்படி என்றால் பின்பற்றுவது அல்லது ஆங்கிளத்தில் Obey, அவ்வுளவே..
உயிர்த்தெழுந்த இயேசு அநேகருக்கு காட்சி கொடுத்ததாக பவுல் எழுதியிருந்தும், அவர்கள் எல்லாம் அப்போஸ்தலர்கள் போல் உலகம் எங்கும் சுவிசேஷம் சொல்லும் படியாக கட்டளை பெற்றதாக வேதத்தில் கொடுக்கப்படவில்லையே.
11 பேருக்கு தான் கட்டளை பெற்றார்கள் என்பதற்கு 11 பேர் மட்டுமே அந்த மலைக்கு ஏறி போனார்கள் என்பதை காட்டிலும் வேறு என்ன ஆதாரம் வேண்டும் (மத். 28:16)?
மேலும் நாம் இங்கு விவாதிப்பதே, இக்காலத்தில் சுவிசேஷ ஊழியம் என்பது எப்படி என்று தான், அதை நாம் வேத கட்டளையின் படி தான் செய்கிறோமா? என்பவைகளே.
ரோம் 1:16 பவுல் எழுதியது, அல்லது பேசியது. அதில் "நான்" என்பது பவுலையே குறிக்கும்.
வேதம் இன்று உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் ஒரு புத்தகமாக இருந்தாலும், அதை கைக்கொள்கிறவர்கள் எத்துனை பேர், அதை எப்படி எல்லாம் கைக்கொள்கிறார்கள் என்பதையும் பாருங்கள்! முதல் நூற்றாண்டு வரை சுவிசேஷம் பிரசங்கிப்பட்ட விதமும், அப்போஸ்தலர்கள் (மனுஷர்கள் உறங்கிய பிறகு) ஓநாய்கள் சபைக்குள் வந்து, சத்தியத்தை புறட்டி மனித போதனைகள் கொடுக்க ஆரம்பித்து விட்டன. சுமார் ஒரு 250 வருடங்கள் வரை ஓரு அளவிற்கு வேதம் இருந்தது, அதன் பின் கத்தோலிக்க சாம்ராஜ்யத்தில் வேதாகமமே கானாமல் போனது. கள்ள உபதேசங்களுக்கு குறைவே இல்லாமல் போனது, மனித போதனைகள் கூடியது. 1500 களில் மீண்டும் வேதம் வெளி வர தேவன் அனுமதித்தார். இடையில் ஒரு நீண்ட இருண்ட காலம் இருந்த போது, எப்படி தான் சத்திய வார்த்தைகள் பிரசங்கிக்கப்பட்டிருக்கும்? ஆகவே தான் வேதத்தின் அந்த உண்மையான போதனைகள் எல்லாம் காணாமல் போய், மனிதர்களின் வல்லமைகள் வெளிப்பட ஆரம்பித்து விட்டன. அவர் அவர் ஒரே வசனத்திற்கு தேவன் என்னிடத்தில் இப்படியாக சொல்ல சொன்னார் என்று கற்று தர ஆரம்பித்தார்கள். அப்படி என்றால், இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடத்தில் கொடுத்த கட்டளை அவர்கள் உறங்கி போனவுடன் நின்று விட்டது. கிரேக்கத்தில் இயான் (eon) என்கிற வார்த்தை ஒரு குறிப்பிட்ட காலத்தையே குறிக்குமே அன்றி, மொழிப்பெயர்ப்புகளில் வந்தது போல் உலகத்தின் முடிவு என்று அல்ல. இன்று பிரசங்கிப்பவர்களுடன், அல்லது "சுவிசேஷம்" சொல்லுபவர்களுடன் இயேசு இருக்கிறார் என்று சொன்னால் அதை விட பெரிய நகைச்சுவை ஒன்றும் இருக்க முடியாது. ஆனால் அப்போஸ்தலர்கள் இருந்த மட்டும், அவர்கள் பிரசங்கித்த விதமும், அன்று மனம் மாறியவர்களின் என்னிக்கையும் இன்று அல்லது அவர்களுக்கு பின்பு இருந்ததே இல்லை. இன்று உலகத்தில் இத்துனை கிறிஸ்தவர்கள் (!!) இருக்கிறார்கள் என்பதே ரோம சாம்ராஜியத்தினால் தான் அன்றி ஊழியர்களால் அல்ல.
மேலும் அப்போஸ்தலர்கள் சிலர் மேல் கைகளை வைத்து, அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் வரங்களை பெற செய்து, அவர்களுடன் உடன் ஊழியர்களாக செய்லப்பட வைத்தார்கள் என்பது உண்மையே. அதை தான் பிலிப்பு, தீமோத்தேயு, பர்ணபா இன்னும் சிலரை நீங்கள் சுட்டி காண்பித்த இடங்கள் (அப்.8). நான் மறுக்கவில்லை. அவர்களும் பிரசங்கித்தார்கள், ஆனாலும், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நேரடியான கட்டளையினால் அல்ல.
பேதுரு போன்றவர்கள் பிரசங்கிக்கும் போது, 3000, 5000 என்று ஒரே நாளில் சபைக்குள் சேர்ந்துக்கொண்டிருந்தனர். இன்று இலட்ச்ச கணக்கில் கூட்டம் கூடினாலும், எத்துனை பேர் தான் சபைகளுக்குள் வருகிறார்கள்? ஏனென்றால் கூட்டத்தில் இருப்பவர்களின் பெரும் பகுதி ஏற்கனவே "சபைகளுக்கு" போகிறவர்கள் தானே! அப்படி என்றால், அங்கு பிரசங்கிக்கப்படுகிறது என்ன அப்போஸ்தலர்கள் பிரசங்கித்ததா, இல்லை இல்லை, இல்லவே இல்லை.
ஆகவே தான் இப்பவும் சொல்லுகிறேன், சுவிசேஷம் சொல்லும் அந்த அதிகாரம் கட்டளையாக அப்போஸ்தலர்களுக்கே கொடுக்கப்பட்டது என்று. ஏனென்றால் இன்று அப்போஸ்தலர்கள் சொன்ன சுவிசேஷமோ, ராஜியத்தின் சுவிசேஷமோ சொல்ல படுவதே இல்லை, முடியாது ஏனென்றால், இவர்கள் அதற்கு நியமிக்க படவில்லை.
இன்னும் வரும்......
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
கீழே எனக்கு கிடைத்த, அப்போஸ்தலர்களின் ஊழியங்களை குறித்து தொடுப்புகளை கொடுத்திருக்கிறேன். அபோஸ்தலர்கள் அனைவரும் போய் பிரசங்கித்தார்கள். அது மாத்திரம் இல்லாமல், கொரிந்து போன்ற பட்டனங்கள் வியாபார ஸ்தலங்களாக இருந்ததினால் உலகின் பெரும் பகுதிகளில் இருந்து மக்கள் வந்து போனார்கள்.
என்னை பற்றி தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்றால் வேதம் தான் எனக்கு சத்தியத்தை போதித்திருக்கிறது. பிறப்பால் கிறிஸ்தவன் என்றவுடன் இயேசு கிறிஸ்துவின் சீஷர் என்று இல்லை. இந்தியவில் இன்று கிறிஸ்தவர்கள் பரம்பரையா, அதாவது பிறப்பால் வந்தவர்கள் தான் பெரும்பாளுமானோர்.
Andrew preached in Asia Minor and in Scythia, along the Black Sea as far as the Volga and Kiev. Hence he became a patron saint of Ukraine, Romania and Russia.
missionary in Ethiopia, Mesopotamia, Parthia, and Lycaonia Bartholomew is reputed to have brought Christianity to Armenia in the 1st century. mission of Saint Bartholomew in India
http://en.wikipedia.org/wiki/Matthew_the_Evangelist preached the Gospel in Hebrew to the Jewish community in Judea. Later in his ministry he would travel to Gentile nations and spread the Gospel to the Ethiopians, Macedonians, Persians, and Parthians
http://en.wikipedia.org/wiki/Jude_the_Apostle preached the Gospel in Judea, Samaria, Idumaea, Syria, Mesopotamia and Libya. He is also said to have visited Beirut and Edessa, though the emissary of latter mission is also identified as Thaddeus of Edessa,
அப்போஸ்தலர்கள் சிலர் மேல் கைகளை வைத்து சில மனிதர்களை பயன்படுத்தியதை மறுக்க முடியாதது தான், ஆனால் நான் சொல்ல வருவதே, அவர்கள் சொன்ன சுவிசேஷம் இன்று சொல்லப்படுவது இல்லை, ஏன் என்றால் இவர்கள் அதை சொல்ல கட்டளை பெறவில்லை. இன்று சுவிசேஷம் சொல்ல கடமையாக இருந்திருந்தால் அப்போஸ்தலர்களோ, அவர்கள் சிலரை தெரிந்துக்கொண்டு அனுப்பியவர்கள் போல் இன்றும் ஒரே சுவிசேஷம் தான் பிரசங்கிக்க்ப்பட்டிருக்கும். இன்று அந்த சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதில்லை, ஆனால் அது அனைவரும் தெரிந்துக்கொள்ளும் ஒரு காலம் வரும்.
ஞானஸ்னானம் கொடுப்பவருக்கும் சுவிசேஷம் சொல்லுவதற்கும் என்ன சம்பந்தம்? ஞானஸ்னானம் இன்னார் கைகளிலிருந்து தான் எடுக்க வேண்டும் என்கிறதே மனித கட்டளை தானே. ஞானஸ்னானம் (உண்மையானது) எடுத்த யாரும் யாருக்கும் ஞானஸ்னானம் கொடுக்கலாமே.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
உங்கள் பதிலுக்காகவும் அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட பிரயாசங்களுக்காகவும் மிக்க நன்றி!
இன்று பைபிளில் சொல்லப்பட்ட ராஜியத்தின் நற்செய்தியை அனேகர் பிரசங்கிப்பது இல்லை என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. உங்கள் பதிலில் பெரும் பகுதியை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.
ஏனெனில் இன்று அனேகர் "இயேசு பணத்தை வாரி வழங்குகிறார்" இதுவே சுவிஷேசம் என கூறுகிறார்கள்.
வேறு சிலர் ஒரு ஹோட்டலில் இருக்கும் சப்ளையர் போல கடவுளை கருதி உங்களுக்கு என்ன வேண்டும் என கட்டளையிடுங்கள் அவர் கொடுப்பார் இதுவே நற்செய்தி என டீவி யில் கூறுகிறார்கள்.
"அறைகூவல்" என்னும் பத்திரிக்கை "இயேசுவே மெய்யான தேவன் எனும் அதிமுக்கிய விஷயத்தை சுவிஷேசமாக அறிவிக்கிறோம்" என அச்சிட்டிருக்கிறார்கள்.
இதில் எதுமே உண்மையில் சுவிஷேசம் அல்ல என ஒப்புக்கொள்கிறேன். இந்த உண்மை, பைபிளில் சொல்லப்பட்ட நற்செய்தியை இன்று யாருமே பிரசங்கிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்வதில்லை.
உங்களுடைய பதிலில் ஒருபகுதி
நான் மறுக்கவில்லை. அவர்களும் பிரசங்கித்தார்கள், ஆனாலும், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நேரடியான கட்டளையினால் அல்ல.
அப்படியானால் பவுல் கொலோசெயர் 4:17 ல் குறிப்பிடும் நபரை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அது இவ்விதமாக வாசிக்கிறது:
அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில்பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனிப்பாயாகவென்று சொல்லுங்கள்.
இந்த அர்க்கிப்பு யார்?
இவர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவரா?
இவர் எப்படி ஊழியத்தை கர்த்தரிடத்திலிருந்து பெற்றார்?
1870 களில் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டதா?
உங்களுடைய பதிலில் இன்னொரு பகுதி
இன்று அந்த சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதில்லை, ஆனால் அது அனைவரும் தெரிந்துக்கொள்ளும் ஒரு காலம் வரும்.
இன்று அப்போஸ்தலர்கள் யாரும் இல்லாத நிலையில், யாரும் அறிவிக்காமல் எப்படி அனைவரும் தெரிந்துக்கொள்வார்கள்?
__________________
ராஜியத்தினுடைய இந்தச் சுவிஷேசம் ... சாட்சியாக பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (மத் 24:14)
தாங்கள் என் பதில்களில் ஒர் அளவிற்கு திருப்தியானது எனக்கு மகிழ்ச்சியே!
மேலும் கொலோ. 4:17:
அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனிப்பாயாகவென்று சொல்லுங்கள்" என்பது தமிழ் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனத்தை கொடுத்து இருக்கிறீர்கள். எப்பவும் போல் நம்மவர்கள் இதை மொழிபெயர்க்கும் போது செய்த தவறு எத்துனை பாதிப்பை ஏற்படுத்துது பாருங்கள்.
Amplified Bible (AMP) Colossians 4: 17And say to Archippus, See that you discharge carefully [the duties of] the ministry and fulfill the stewardship which you have received in the Lord.
King James Version (KJV) 17And say to Archippus, Take heed to the ministry which thou hast received in the Lord, that thou fulfil it.
American Standard Version (ASV) 17 And say to Archippus, Take heed to the ministry which thou hast received in the Lord, that thou fulfil it.
New International Version (NIV) 17Tell Archippus: "See to it that you complete the work you have received in the Lord."
இப்படியாக "Received in the Lord" என்கிறதை "கர்த்தருக்குள்" என்று தான் மொழிப்பெயர்க்கனுமே தவிர "கர்த்தரிடத்தில்" என்று இல்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நினைக்கிறேன். "கர்த்தருக்குள்" என்பதற்கும் "கர்த்திரடத்தில்" என்பதற்கும் வித்தியாசம் இருப்பதை கவனியுங்கள்.
ஆகவே அர்கிப்புவிடம் சொல்லப்பட்டது எப்படி என்றால், "அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தருக்குள் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனிப்பாயாகவென்று சொல்லுங்கள்" என்பதை ... "கர்த்தரிடத்தில்" பெற்றதாக மாற்றி குழப்பங்களை ஏற்படுத்திகிறார்கள் இந்த மொழிப்பெயர்ப்பாளர்கள். என்ன செய்வது. நாம் தான் ஜாக்கிரதை உள்ளவர்களாய் சத்தியத்தை பகுத்து அறிய வேண்டும்.
சகோ ஹார்வெஸ்ட்டின் ஆதங்கம்: "இன்று அப்போஸ்தலர்கள் யாரும் இல்லாத நிலையில், யாரும் அறிவிக்காமல் எப்படி அனைவரும் தெரிந்துக்கொள்வார்கள்?"
நான் சொன்ன இந்த பகுதி இந்த காலத்திற்கு இல்லை சகோதரரே, தெரிந்துக்கொள்வார்கள் என்பது தேவனுடைய ராஜியம் இந்த பூமியில் முழுவதுமாக நிறுவிய பிறகே. "சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருகிறது போல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" (ஏசா. 11:9). இந்த வசனத்தை குறித்து தான் நான் குறிப்பிட்டிருந்தேன். இது நடக்க தான் இன்று ஒரு சிறிய கூட்டத்தை தேவன் பிரிக்கிறார் என்று சொன்னால் யார் நம்புவார்கள். நாங்கள் உலகத்தையே கிறிஸ்துவுக்காக ஆதாய படுத்துகிறோம் என்று நாளை கிறிஸ்துவின் தலைமையில் சபை செய்ய போகிற காரியத்தை இன்றே உண்மையாக்க எடுக்கும் வீன் முயற்சி என்பது என் வாதம்.
ஒருவன் கிறிஸ்துவிற்கு வர வேண்டும் என்றால் அது தேவனின் சித்தத்தினாலே அன்றி இன்றைய "முழு நேர" ஊழியர்களின் உபவாசமோ, பிரசங்கமோ கிடையாது. சுவிசேஷம் என்று சொல்லாமல் வேறு எதையோ சொல்லி வருகிறவர்கள் எப்படி உண்மையான கிறிஸ்தவத்தை உருவாக்க முடியும். இது ஏன் நடக்கிறது என்றால், நான் முதலில் எழுதியது போல், "இவர்கள் சுவிசேசஷம் சொல்ல அழைக்கப்படாமலே, தங்களின் சொந்த விருப்பத்தினால் சொல்லி வருகிறார்கள்" என்பதே. பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டைப்போட்டு கொண்டு, "இந்தியா"வை கிறிஸ்துவிற்கு ஆதாய படுத்துகிறேன் என்று சொல்லுவது அபத்தமாக தான் இருக்கிறது, இதில் அப்போஸ்தலர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்வது அதைவிட அபத்தம்.
(கருத்தில் ஒரு பகுதி நீக்கப்பட்டது - Moderator)
-- Edited by anbu57 on Monday 8th of February 2010 06:38:31 AM
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17