நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதம் உலகத்துக்கு என்ற கோட்பாடு


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
RE: வேதம் உலகத்துக்கு என்ற கோட்பாடு
Permalink Closed


பிலி. 1:18. இந்த பகுதியை மாத்திரம் நான் ஆங்கிளத்தில் பதிய அனுமதி கேட்கிறேன். திறந்த மனதுடன் விளக்கத்தை வாசியுங்கள்:

Philippians 1:14-18 (Bible in Basic English)  "And most of the brothers in the Lord, taking heart because of my chains, are all the stronger to give the word of God without fear.  Though some are preaching Christ out of envy and competition, others do it out of a good heart: These do it from love, conscious that I am responsible for the cause of the good news: But those are preaching Christ in a spirit of competition, not from their hearts, but with the purpose of giving me pain in my prison.  What then? only that in every way, falsely or truly, the preaching of Christ goes on; and in this I am glad, and will be glad."

At this time the Apostle was in prison and others were free to preach Christ. Some were preaching for the true motives of love for God and His word. Others were preaching with a motive of envy, competition and the desire to hurt Paul. How could they hurt Paul? Possibly it was to put his message in such a bad light that those in authority would desire to have Paul executed.

Paul realized that it was the Lord's work and any who claimed to serve the Lord would be rewarded according to their heart intentions. The Lord was fully aware of the situation and could control it for whatever outcome He saw best. He would punish those who had done wrong.

"For the wrongdoer will have punishment for the wrong he has done, without respect for any man's position." Col. 3:25

Paul was rejoicing that Christ was preached. Even those with wrong motives brought His name before the public. To whatever extent it was a controversy it brought attention to the subject and left it for each individual to investigate.

In another example Paul left matters in the Lord's hands even when he was wronged. He realized he was to take no revenge. And let the Lord deal with the matter.  He did warn others.

"Alexander the copper-worker did me much wrong: the Lord will give him the reward of his works: But be on the watch for him, for he was violent in his attacks on our teaching." (2 Timothy 4:14,15)

Paul lived the words he preached to others. "Do not give evil for evil to any man. Let all your business be well ordered in the eyes of all men. As far as it is possible for you be at peace with all men. Do not give punishment for wrongs done to you, dear brothers, but give way to the wrath of God; for it is said in the holy Writings, Punishment is mine, I will give reward, says the Lord." Romans 12:17-19



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

அப்போஸ்தலர்களைத் தவிர மற்றவர்களும் சுவிசேஷ அறிவிப்பு செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக நானும் சகோ.ஹார்வெஸ்ட் அவர்களும் தந்த பல வசனங்களில் சிலவற்றை மீண்டும் தருகிறேன்.

மத்தேயு 24:14 14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

அப்போஸ்தலர் 8:1,4,5 அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள். சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள். அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான்.

பிலிப்பியர் 1:15-18 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.

அப்போஸ்தலரல்லாத பர்னபா, சீலா, மாற்கு, அப்பொல்லோ ஆகியோரும் சுவிசேஷப்பணி செய்ததாக அப்போஸ்தலர் நடபடிகளில் பார்க்கிறோம்.

மத்தேயு 24:14-ன்படி பார்த்தால், ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் இன்னும் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கப்படவில்லை என அறிகிறோம். அதைப் பிரசங்கிக்கும் உரிமை அப்போஸ்தலர்களுக்கு மட்டுமின்றி நமக்கும் உண்டும் என்பதற்கு அவ்வசனம் ஆதாரமாயுள்ளது.

இக்கருத்தை மறுக்கமுடியாத நீங்கள், ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் எது எனும் கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.

பிலிப்பியர் 1:18 சம்பந்தமாக நீங்கள் தந்துள்ள விளக்கத்தில், அப்போஸ்தலர் தவிர மற்றவர்கள் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதில்லை எனும் உங்கள் கருத்துக்கு ஆதரவான எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, அப்போஸ்தலர் தவிர மற்றவர்கள் சுவிசேஷத்தை அறிவித்ததற்கான காரணமும் வேறு சில விளக்கங்களும்தான் உள்ளது.

உங்கள் வாதத்திற்கு முக்கியமான ஆதரமாக மத்தேயு 28:20-ஐ கூறுகிறீர்கள். அவ்வசனத்தில் இயேசு கூறுவது, 11 பேருக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உரித்தாகும் என்பதே எனது மற்றும் சகோ.ஹார்வெஸ்ட்-ன் வாதம்.

இயேசு இப்பூமியில் வாழ்ந்தபோது உபதேசமாகக் கூறின வசனங்களை, ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு கூட்டத்தில் போதித்தார். இதனால், ஒரு கூட்டத்திற்குச் சொன்ன போதனை அடுத்த கூட்டத்திற்கு உரியதல்ல எனக் கூறமுடியாது.

இயேசுவின் சில வசனங்கள் கடைசி கால ஜனங்களுக்குரியதாகும். ஆனாலும், அவற்றை அன்றைய ஜனங்களுக்காக கூறுவதுபோலத்தான் கூறினார். உதாரணமாக, பின்வரும் வசனங்களைப் பாருங்கள்.

மத்தேயு 24:20,23,26 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.

இயேசுவின் வசனங்களில் பலவற்றை பொதுவாகத்தான் அவர் கூறியுள்ளார். இவர்களுக்கு மட்டுமே இக்கட்டளை என்பதாக, அவர் போதிக்கவில்லை. எனவே அப்போஸ்தலரைத் தவிர மற்றவர்களும் சுவிசேஷம் அறிவிப்பதில் தவறு எதுவுமில்லை என்பதோடு, அது ஒரு கடமையுமாகும் என நிச்சயமாகக் கூறலாம்.

சுவிசேஷத்தை உலகத்தின் எல்லா ஜாதிகளுக்கும் அறிவிக்கும்படி இயேசு கூறியுள்ளதால், “வேதம் உலகத்துக்கு” எனும் கோட்பாட்டில் தவறு எதுவுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

நித்திய ஜீவனை சுதந்தரிக்க இன்னின்ன செய்யவேண்டும் என வேதம் கூறுவதும், இவ்வுலகின் அனைவருக்கும் உரியதுதான்.

வேதத்தை அறியாத பலர் உண்டு என்பது மெய்தான். ஆனால், அவர்களை தேவன் எவ்வாறு நியாயந்தீர்ப்பார் என்பது தனி கேள்வி. அக்கேள்வியை வைத்து, வேதம் உலகத்துக்கு அல்ல எனும் முடிவுக்கு நாம் வரமுடியாது.

இன்றைய சுவிசேஷ அறிவிப்பாளர்களில் பலர் வேதாகமம் கூறுகிற பிரகாரமாக சுவிசேஷம் அறிவிக்கவில்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதற்காக சுவிசேஷம் அறிவிப்பதே தவறு எனக் கூறுவது சரியல்ல.

இன்றைய சபைகளிலுள்ள கோட்பாடுகளில் தவறானவற்றை எடுத்துச் சொல்வதுதான், “கொள்கைக் கோட்பாடுகள்” எனும் தலைப்பின் கீழ் நாம் விவாதிக்கும் திரிகளின் நோக்கம்.

ஆனால், “வேதம் உலகத்துக்கு” எனும் கோட்பாட்டில் தவறு எதுவுமில்லை. மாறாக, அக்கோட்பாட்டை செயல்படுத்துவதில்தான் தவறு உள்ளது.

அத்தவறுகளை நீங்கள் தொடங்கியுள்ள “சுவிசேஷம்! ராஜியத்தின் சுவிசேஷம்!! ” எனும் திரியில் நாம் பார்ப்போம்.

இத்திரியில் இதுவரை நாம் விவாதித்தவை போதும் என நினைக்கிறேன். நீங்கள் இன்னும் சொல்ல வேண்டிய விஷயம் இருந்தால், அவற்றைக் கோர்வையாக சொல்லுங்கள்.

அவற்றைப் படிப்பவர்கள், எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளட்டும்.

நாம் மற்ற திரிகளில் கவனம் செலுத்துவோம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink Closed

தள நண்பர்களே,

மத்தேயு 24:14 14. ராஜிய‌த்தின் சுவிசேஷ‌த்தை குறித்து சொல்லும் இந்த‌ வ‌ச‌ன‌த்தை நாம் புதிய‌ திரியில் விவாதிப்போம்.

 இந்த‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ள் அல்லாத‌ சில‌ர் அன்று சுவிசேஷ‌ ப‌ணி செய்தார்க‌ள் என்ப‌தை நான் ம‌றுக்க‌விலை. ஆனால் அவ‌ர்க‌ள் அப்போஸ்த‌ல‌ர்க‌ளின் நேர‌டி கைக‌ள் வைத்து அந்த‌ வ‌ர‌ங்க‌ளை பெற்ற‌தினால் அதை செய்தார்க‌ள் என்ப‌தை நீங்க‌ளும் ம‌றுக்க‌ முடியாது. பூமியில் நீங்க‌ள் க‌ட்டுவ‌து ப‌ரலோக‌த்தில் க‌ட்ட‌ப்ப‌டும், க‌ட்ட‌விழ்க்க‌ப்ப‌டுவ‌து ப‌ர‌லோக‌த்திலும் க‌ட்ட‌விழ்க்க‌ப்ப‌டும் என்று அப்போஸ்த‌ல‌ர்க‌ள் பெற்ற‌ இந்த‌ விசேஷ‌ அதிகார‌ம் வேறு யாருக்கும் கிடைக்க‌வில்லை. ஆக‌வே தான் அப்போஸ்த‌ல‌ர்க‌ளை ஒரு த‌னி கூட்ட‌மாக‌வும் அவ‌ர்கள் செய்ய்த‌து தான் சுவிசேஷ‌ ப‌ணி என்று சொல்லுகிறேன்.

முத‌லாம் நூற்றாண்டுட‌ன் இவ‌ர்க‌ளின் இந்த‌ ப‌ணி முடிந்த‌பின், அப். 20:29,30ல் சொல்ல‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ள் நிறைவேற‌ தொட‌ங்கிய‌து, மாறுபாடான‌ உப‌தேச‌ங்க‌ள் நுழைந்து இன்று வ‌ரை அது தொட‌ங்கி வ‌ருகிற‌து. இதை தான் சுவிசேஷ‌ம் சொல்லுவ‌து என்று நீங்க‌ள் சொல்லுவீர்க‌ளானால் அது ச‌ரியே. ஆனால் மெய்யான‌ சுவிசேஷ‌ம் இன்று ச‌பைக‌ளில் சொல்ல‌ப்ப‌டுவ‌தில்லை, அத‌ற்கு கார‌ண‌ம், இப்பொழுது அது இந்த‌ உல‌க‌த்திற்கு இல்லை என்ப‌தே.

உல‌கில் ந‌ட‌க்கும் காரிய‌ங்க‌ளை வைத்து தான் நாம் வேத‌த்தில் உள்ள‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள் நிறைவேறி வ‌ருகிற‌தை உண‌ர்ந்துக்கொள்ள‌ முடியும். அந்த‌ பிர‌கார‌ம் தான் இன்று சுவிசேஷ‌ம் உல‌கிற்கு பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌டுகிற‌தா என்ப‌தை முடிவு செய்துக்கொள்ளுங்க‌ள்.

இன்று சுமார் 22000 ச‌பைக‌ள் சேர்ந்து ஒரே விஷ‌ய‌த்தை சொல்ல‌ முடியாத‌தை தான் சுவிசேஷ‌ம் சொல்லுகிறார்க‌ள் என்று சொன்னால் நானும் ஒப்புக்கொளுகிறேன். என் வாத‌ம் என்ன‌வென்றான், இவ‌ர்க‌ள் சொல்லுவ‌து சுவிசேஷ‌மே இல்லை, ஏனென்றால் இவ‌ர்க‌ள் அத‌ற்காக‌ நிய‌மிக்க‌ ப‌ட‌வில்லை. சுவிசேஷ‌ம் சொன்ன‌வ‌ர்க‌ள் எல்லாம் முத‌ல் நூற்றாண்டு அல்ல‌து அதை தொட‌ர்ந்து சில‌ வ‌ருட‌ங்க‌ளில் ம‌ரித்து போனார்க‌ள். அத்துட‌ன் சுவிசேஷ‌ம் முடிந்து க‌ள்ள‌ போத‌னைக‌ள் தான் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌டுகிற‌து, இதை தான் சுவிசேஷ‌ ப‌ணி என்றால் இத‌ற்கு விள‌க்க‌ம் சொல்ல‌ என‌க்கு முடியாது!!

தாங்க‌ள் காண்பித்த‌ வ‌ச‌ன‌ம் மத்தேயு 24:20,23,26ன் படி தான் இன்று சுவிசேஷ பணி நடக்கிறது என்றால் எத்துனை அப‌த்த‌ம் என்று உங்க‌ளுக்கு தெரியும். இதை தானே இன்று சுவிசேஷ‌ம் என்று சொல்லி வ‌ருகிறார்க‌ள். இதுவா சுவிசேஷ‌ம்?

சுவிசேஷ‌ம் என்றால் என்ன‌வென்கிற‌ அடிப்ப‌டை ஞான‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள் நாங்க‌ள் தேவ‌னுடைய‌ ப‌ணியை செய்கிறோம் என்று ப‌வுலின் தீர்க்க‌த‌ரிசின‌ங்க‌ளை தான் நினைவு ப‌டுத்துகிறார்க‌ள்.

இன்றைய‌ ந‌வீன‌ கால‌ சுவிசேஷ‌ர்க‌ள் (!!) சொல்லும் சுவிசேஷ‌ம் ச‌ரி என்று நீங்க‌ள் ஒப்பு கொண்டால் சுவிசேஷ‌ம் உல‌கிற்கு தான் என்று சொல்ல‌லாம்.

என் வாத‌மே இவ‌ர்க‌ள் சொல்லுவ‌து சுவிசேஷ‌ம் அல்ல‌, ஏனென்றால் இவ‌ர்க‌ள் அத‌ற்காக‌ நிய‌மிக்க‌ ப‌ட‌வில்லை என்ப‌தே!!

நான் முடித்துக்கொள்கிறேன். ந‌ன்றி!!

மேலும் யோவான் 14:17,19; 15:19; 17:9, 16 வசனங்களை அவசியம் வாசித்து பாருங்கள்.



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

இத்திரியில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்கள், வசனங்கள் மற்றும் விளக்கங்கள் நம்மனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

நாம் மற்ற திரிகளிலும் கவனம் செலுத்தவேண்டியதிருப்பதால், இத்திரி தற்போதைக்கு மூடப்படுகிறது. இத்திரி சம்பந்தமான கருத்துக்கள், சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் அவற்றை தள நிர்வாகிக்கு தனிமடல் மூலம் அனுப்பும்படி வேண்டுகிறேன். தேவைப்பட்டால் இத்திரி மீண்டும் திறக்கப்படும்.

தள அன்பர்கள் அனைவரும் இத்தளத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன். நம் கருத்து பெருவாரியானவர்களின் கருத்தோடு ஒத்துப்போகாததால், விவாதங்களில் கலந்துகொள்ள யாரும் தயங்கவேண்டாம். இடுக்கமான வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலரே என மத்தேயு 7:14-ல் இயேசு கூறுகிறார். அச்சிலரில் ஒருவராக நாம் இருக்கக்கூடுமென்பதால், நம் கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துகொள்வோம்.

தள அன்பர்களில் சிலர், இம்மாதிரி விவாதங்கள் அவசியந்தானா என நினைக்கலாம். அவர்களுக்கு பின்வரும் வசனங்களை நினைவூட்டுகிறேன்.

சங்கீதம் 1:2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

மல்கியா 3:16 கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.


வேதாகம தியானம் என்பது தனித்தியானமாகவும் இருக்கலாம், கூட்டுத்தியானமாகவும் இருக்கலாம். இம்மாதிரி தளங்கள் கூட்டுத்தியானம் செய்வதற்கு ஒரு சிறிய கருவியாக இருக்கின்றன. நாமறிந்ததை பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் பிறர் அறிந்ததை நாம் தெரிந்துகொள்ளவும் இத்தளங்கள் உதவுகின்றன.

எனவே நாம் கூட்டுத்தியானம் செய்வதற்கு இம்மாதிரி தளங்கள் மூலம் தேவன் தந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோமாக.

அன்புடன்
தள நிர்வாகி



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard