வேதத்தில் உள்ள பலவிதமான காரியங்களை குறித்து கிறிஸ்தவத்தில் நாம் வாதிட்டு வருகிறாம். இதற்க்கு ஒரு முடிவே இல்லை! இவையெல்லாம் எவ்வளவுதூரம் நமக்கு பயனுள்ளதாக அமையும் என்று அனுமானிப்பது மிகவும் கடினம். ஏனெனில் அனேக சகோதரர்கள் தாங்கள் கொண்டிருக்கும் கொள்கையில் ஒரு சிறிய மாற்றம் செய்யகூட முன்வருவதில்லை. அப்படியிருக்க அனேக விவாதங்கள் விழலுக்கு இழைத்த நீராகவே போகலாம் என்றே நான் கருதுகிறேன். ஆகினும் சிலருக்கு மனதில் எழும் சந்தேகங்கள் தீரவும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது!
ஆனால் எல்லோருக்கும் மிகவும் முக்கியமான ஒரு செய்தியை நான் இங்கு பதிவிட விரும்புகிறேன் அதுதான் சாத்தானால் செய்யமுடியாதது என்னவென்பது!
"பிசாசின் கிரியைகளை அழிக்கவே இயேசு வந்தார்"என்பது அனைவரும் அறிந்ததே அந்த பிசாசால் எதை செய்ய முடியாது? பிசாசின் தூண்டுதலால் நாம் செய்யும் தவறுகளை விட்டு வெளியே வந்து, இயேசுவின் சாயலை நாம் தரித்திருக்கிரோமா என்பதைதான் நாம் முக்கியமாக ஆராயவேண்டும்.
சாத்தானால் திரித்துவம் உண்டு என்றோ இல்லை என்றோ வாதிட முடியாதா? சாத்தானால் ஞானஸ்தானம் எடுக்க முடியாதா? சாத்தானால் "ரீகபலபா ஷீகபலபா" என்று அந்நிய பாஷை பேசமுடியாதா? சாத்தானால் சுவிசேஷம் சொல்ல முடியாதா?
சாத்தானால் உபவாசம் இருக்க முடியாதா?
சாத்தானால் வாரம் தவறாமல் சர்ச்சுக்கு போக முடியாதா?
சாத்தானால் காணிக்கை போடமுடியாதா?
சாத்தானால் வேத வசனங்களை எடுத்து போதிக்க முடியாதா?
இவை எல்லாமே சாத்தானால் செய்யமுடியும்! இன்னும் எத்தனையோ கூட அவனால் செய்ய முடியும்! அவனால் அவனால் செய்யமுடியாதது ஒன்றே ஒன்றுதான்!
ஆதியில் இருந்து ஆண்டவரின் வார்த்தைக்கு அவன் எதிரியாக இருப்பதால். அதை மட்டும்தான் அவனால் செய்யமுடியாது. செய்பவர்களையும் செய்யவிடாமல் தடுப்பதுதான் அவனின் முக்கிய பணி. அப்படி அவன் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்துவிட்டால் பிறகு அவன் பெயர் சாத்தான் இல்லை!
எனவே அன்பானவர்களே மேலே பட்டியலிட்ட எந்த ஒன்றையும் செய்வது நல்லதுதான் ஆனால் செய்வதால் பெரிய காரியம் எதுவும் நடந்துவிடபோவது இல்லை!
ஆண்டவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சரியாக அறிந்து அதன் அடிப்படையில் உங்கள் நடைமுறை வாழ்க்கையை அமையுங்கள். சாத்தானின் கிரியைகளை அழியுங்கள்! இயேசுவை உங்களில் பிரதிபலியுங்கள்!
அது ஒன்றே தேவன் நம்மிடம் ஆசிக்கும் முக்கியமான எதிர்பார்ப்பு!
//சாத்தானால் திரித்துவம் உண்டு என்றோ இல்லை என்றோ வாதிட முடியாதா?// நிச்சயமாக முடியும். ஏனெனில், தேவனிடமும் இயேசுவினிடமுமே வாதம் செய்தவன் அல்லவா அவன் (யோபு 1:9-11; 2:4,5; மத்தேயு 4:3-10)?
//சாத்தானால் ஞானஸ்நானம் எடுக்க முடியாதா?// நிச்சயமாக முடியும். தேவன் உண்டென்று விசுவாசித்து நடுங்குகிற அவனுக்கு இந்த சடங்காச்சார ஞானஸ்நானத்தை எடுப்பதென்ன அத்தனை கடினமானதா (யாக்கோபு 2:19)?
//சாத்தானால் சுவிசேஷம் சொல்ல முடியாதா? சாத்தானால் வேத வசனங்களை எடுத்து போதிக்க முடியாதா?//
நிச்சயமாக முடியும். தேவகுமாரனாகிய இயேசுவிடமே வசனங்களை எடுத்துச் சொன்னவனுக்கு சுவிசேஷம் சொல்வதும் போதிப்பதும் மிகமிக எளிது (மத்தேயு 4:3-10)?
//சாத்தானால் வாரம் தவறாமல் சர்ச்சுக்கு போக முடியாதா? சாத்தானால் "ரீகபலபா ஷீகபலபா" என்று அந்நிய பாஷை பேசமுடியாதா? சாத்தானால் உபவாசம் இருக்க முடியாதா?//
நிச்சயமாக முடியும். சாத்தானின் பிரதிநிதியாகிய அந்திக்கிறிஸ்துவால் தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல் உட்காரமுடியும்போது, சாத்தானால் ஒழுங்காக சர்ச்சுக்குப் போகவும் முடியும், அந்நிய பாஷை பேசவும் முடியும், உபவாசம் இருக்கவும் முடியும் (2 தெச, 2:4)?
//சாத்தானால் காணிக்கை போடமுடியாதா?// நிச்சயமாக முடியும். வணக்கத்தை எதிர்பார்த்து இவ்வுலகம் முழுவதையுமே இயேசுவிடம் தருவதாகச் சொன்ன அவன், பெருமைக்காகவும் தன் இச்சை நிறைவேறுவதற்காகவும் தாராளமாகவே காணிக்கை கொடுப்பான் (மத்தேயு 4:8,9).