நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தள நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன்


Newbie

Status: Offline
Posts: 2
Date:
தள நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன்
Permalink  
 


பதிவுகள் தணிக்கை செய்யப்படும் எனும் நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன்.

__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

இப்படி ஒரு கருத்து அதிர்ச்சியை தான் தருகிறது. கருத்து என்கிற பெயரில் ஆபாசமாகவும், பிறரை தனிப்பட்ட முறையில் தாக்காமல் எழுதவும், என்கிறதே உன்மையான கிறிஸ்தவர்களுக்கு போதும் என்று நினைக்கிறேன். அதையும் மீறி ஏதாகிலும் பதிவுகள் அப்படி வந்து விட்டால், அதை நீக்க நிர்வாகிக்கு முழு சுதந்திரம் இருக்கிறதே. அதையும் தாணடி இனி பதிவுகள் வருவதே நிர்வாகியின் கைகளில் மாத்திரமே இருக்கிறது என்றால் கருத்து சுதந்திரத்திற்கு அர்த்தம் இல்லையே!

தள நிர்வாகி இதை பரிசீலிக்கும்படியாக கேட்டுக்கொள்ள படுகிறார்கள்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.பெரேயன்ஸ் அவர்களே!

உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனாலும் உங்கள் வேண்டுகோளை செயல்படுத்த இயலாமைக்கு வருந்துகிறேன்.

ஒரு 2 வாரங்கள் பொறுத்திருந்து, உங்கள் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறதா எனப் பாருங்கள். அதன்பின் தணிக்கை சம்பந்தமான உங்கள் கருத்தை மீண்டும் தெரிவியுங்கள்.

அன்புடன்
தள நிர்வாகி


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:
//கருத்து என்கிற பெயரில் ஆபாசமாகவும், பிறரை தனிப்பட்ட முறையில் தாக்காமல் எழுதவும், என்கிறதே உன்மையான கிறிஸ்தவர்களுக்கு போதும் என்று நினைக்கிறேன். அதையும் மீறி ஏதாகிலும் பதிவுகள் அப்படி வந்து விட்டால், அதை நீக்க நிர்வாகிக்கு முழு சுதந்திரம் இருக்கிறதே.//

அன்பான சகோதரரே!

ஒரு தளத்தை நிர்வகிக்கும் உங்களுக்கு இவ்விஷயத்தில் அதிகம் கூறவேண்டியதில்லை.

இணைய தளங்களில் வெளியிடப்படும் ஒரு தகவலை ஒரு நொடிப்பொழுதில் ஏராளமான பேர்கள் பார்க்க வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. அப்படி இருக்கையில், ஒரு தகவல் வெளிவந்து, ஏராளமான பேர் அதைப் பார்த்தபின்னர் அதை நீக்குவதற்கும், அத்தகவல் வெளியிடப்படும் முன்னமேயே தணிக்கை செய்து வெளியிடுவதற்கும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?

எனவே நல்ல நோக்கத்தோடு நிர்வாகம் எடுக்கிற முடிவுக்கு ஒத்துழைப்பு தரும்படி உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
RE: தள நிர்வாகத்தின் முடிவை..?
Permalink  
 


கிறித்தவர்கள் என்றாலே மிகவும் கட்டுப்பாடும் ஒழுங்கும் உடையவர்கள் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது; ஆனால் இந்த அறிவிப்பைப் பார்த்தால் நடைமுறையில் அப்படியில்லையோ என்ற அச்சமே ஏற்படுகிறது; இந்த அறிவிப்புக்குப் பின்னால் உங்களுக்கிடையே நிலவும் போதனை சம்பந்தமான கருத்து வேறுபாடுகளும் அதன்மூலம் உண்டான எச்சரிக்கையுணர்வுமே தெரிகிறது; இந்நிலையில் என்னைப் போன்ற வேற்று மார்க்கத்தார் இங்கிருந்து எதைக் கற்றுக் கொள்ளமுடியும் -
எப்படி இங்கே பங்கேற்க முடியும் என்பது தெரியவில்லை என்று தெரியவில்லை; இனி இந்த தளம் தணிக்கை செய்யாத தளமாக மாறினாலும் நம்பிக்கைக்குரிய தளமாக விளங்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: தள நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன்
Permalink  
 


aryadasan wrote:
//கிறித்தவர்கள் என்றாலே மிகவும் கட்டுப்பாடும் ஒழுங்கும் உடையவர்கள் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது; ஆனால் இந்த அறிவிப்பைப் பார்த்தால் நடைமுறையில் அப்படியில்லையோ என்ற அச்சமே ஏற்படுகிறது; இந்த அறிவிப்புக்குப் பின்னால் உங்களுக்கிடையே நிலவும் போதனை சம்பந்தமான கருத்து வேறுபாடுகளும் அதன்மூலம் உண்டான எச்சரிக்கையுணர்வுமே தெரிகிறது; இந்நிலையில் என்னைப் போன்ற வேற்று மார்க்கத்தார் இங்கிருந்து எதைக் கற்றுக் கொள்ளமுடியும் -
எப்படி இங்கே பங்கேற்க முடியும் என்பது தெரியவில்லை என்று தெரியவில்லை; இனி இந்த தளம் தணிக்கை செய்யாத தளமாக மாறினாலும் நம்பிக்கைக்குரிய தளமாக விளங்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.//


இவ்வுலகில் எந்த மனிதனும் நிச்சயமாக மாயையே என வேதாகமம் கூறுகிறது. எனவே கிறிஸ்தவர்/கிறிஸ்தவரல்லாதவர் என வேறுபடுத்தி, இவர் இப்படி இருப்பார் அவர் அப்படி இருப்பார் என சமுதாயம் கருதுவதை இங்கு பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

ஒருவனின் கனிகளாலே அவனை அறிவீர்கள் என இயேசு கூறுகிறார். எனவே ஒருவன் நல்ல கனிகளைக் கொடுக்கிறானா எனபதை நிதானித்தறிந்து செயல்படுங்கள்.

பொதுவிவாத தளத்தில் பலரும் வருவார்கள், கருத்தைச் சொல்வார்கள், தரக்குறைவாகவும் எழுதுவார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. விவாதமேடை அமைப்பதில் நான் புதியவன் என்பதால், ஆரம்பத்திலேயே தணிக்கை போன்றதை நான் யோசியாதிருந்திருக்கலாம். தற்போது சற்று அனுபவம் கிடைத்துள்ளதால், அதை செயல்படுத்த நினைத்திருக்கலாம்.

இதனால் இத்தளத்தின்மீது நீங்கள் நம்பிக்கையிழப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

அதன்படியே செயல்படுங்கள்.

நன்றி.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

அன்புள்ள ஐயா அவர்களுக்கு உங்கள் பதில் அருமையாக இருக்கிறது; ஆனாலும் வாசகர் சார்பிலிருந்து நீங்கள் பார்த்தால் எம‌து கருத்தை உடனே பதித்துப் பார்ப்பதில் உள்ள திருப்தியுணர்வை இழந்துவிட்டது போல உணருகிறோம்; இது சற்று சோர்வைத் தருகிறது என்பதே உண்மை; தணிக்கை செய்துவிடுவார்களோ- தள்ளிவிடுவார்களோ என்ற சந்தேகத்துடனே கருத்துக் கூறுவது இயலாத காரியமென்றே தோன்றுகிறது.

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

aryadasan wrote:
//வாசகர் சார்பிலிருந்து நீங்கள் பார்த்தால் எம‌து கருத்தை உடனே பதித்துப் பார்ப்பதில் உள்ள திருப்தியுணர்வை இழந்துவிட்டது போல உணருகிறோம்; இது சற்று சோர்வைத் தருகிறது என்பதே உண்மை; தணிக்கை செய்துவிடுவார்களோ- தள்ளிவிடுவார்களோ என்ற சந்தேகத்துடனே கருத்துக் கூறுவது இயலாத காரியமென்றே தோன்றுகிறது.//

உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது சகோதரரே!

ஒருசில தவறான மனிதர்களின் நடவடிக்கையால், அப்பாவி பயணிகள்கூட விமான நிலைய அதிகாரிகளால் சோதனையிடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ஏன், நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகூட சில விமான நிலைய அதிகாரகளால் சோதனையிடப்பட்டார் எனும் செய்தி சில மாதங்களுக்கு முன் நம் நாட்டையே உலுக்கியதை அறிவீர்கள்.

ஆம், ஒருசில தவறான மனிதர்களின் செயல்பாட்டால், பல அப்பாவி ஜனங்களும் சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. அதேவிதமாகத்தான் நீங்களும் சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. சகோ.பெரியன்ஸ் அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன். ஒருசில வாரங்கள் பொறுத்திருந்து பாருங்கள்.

நீங்கள் சந்தேகப்படுவது போல் எதுவும் நேராது சகோதரரே!


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard