நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யெகோவா என்பது அவருடைய நாம சங்கீர்த்தனம்


Militant

Status: Offline
Posts: 830
Date:
யெகோவா என்பது அவருடைய நாம சங்கீர்த்தனம்
Permalink  
 


பழைய ஏற்பாட்டில், சுமார் 3068 முறை யெகோவா (Yehovah) எனும் எபிரெய வார்த்தை காணப்படுகிறது; சுமார் 3050 முறை யாவே (Yahh) எனும் எபிரெய வார்த்தை காணப்படுகிறது. ஆங்கில வேதாகமங்களில், American Standard Edition-ல் சுமார் 5000 முறை Jehovah எனும் வார்த்தை காணப்படுகிறது; King James Version-ல் 4 வசனங்களில் Jehovah எனும் வார்த்தை காணப்படுகிறது; New King James Version மற்றும் New International Version-ல் Jehovah எனும் வார்த்தை ஒரு வசனத்திலும் இல்லை; நம் தமிழ் வேதாகமத்தில் சுமார் 9 வசனங்களில் யேகோவா எனும் வார்த்தை காணப்படுகிறது.

Yehovah எனும் எபிரெய வார்த்தையின் அர்த்தம்: (the) self-Existent or Eternal; Jehovah, Jewish national name of God:

அதாவது ‘இருக்கிறவராகவே இருப்பவர் அல்லது நித்தியமானவர்’ என்பதே Yehovah எனும் வார்த்தையின் அர்த்தமாகும். அவருடைய ஏகத்தன்மையை (uniqueness) குறிப்பிடும் வண்ணம் the எனும் ஆங்கில வார்த்தை அடைமொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

எபிரெய வேதாகமத்தில் சுமார் 3068 முறை காணப்படும் Yehovah எனும் வார்த்தையை American Standard Edition மட்டுமே அவ்வார்த்தையின் மூலத்தன்மை பாதிக்காதவாறு மொழிபெயர்த்துள்ளது (இங்கு குறிப்பிடப்படாத வேறு சில மொழிபெயர்ப்புகளும், அவ்விதமாக மொழிபெயர்த்திருக்கக் கூடும்). ஆனால் KJV, NKJV, NIV மற்றும் நம் தமிழ் வேதாகமங்கள், மூலத்தன்மைக்கு மாறாக LORD அல்லது கர்த்தர் என மொழிபெயர்த்துள்ளன.

இந்த மொழிபெயர்ப்பு ஆராய்ச்சியால் நமக்கு என்ன பயன் என சிலர் கேட்கலாம். தேவையற்றதும் குழப்பத்திற்குரியதுமான சில கோட்பாடுகள் உருவாவதற்கு முக்கிய காரணம், மொழிபெயர்ப்பு தவறுகளே என்பதை நாம் அறிந்துகொள்ளவும், தேவனைக் குறித்து வேதாகமம் சொல்வதை முடிந்தவரை பிழையற்றதாக நாம் அறிந்துகொள்ளவுமே இந்த ஆராய்ச்சி.

யெகோவா தேவனையும் அவருடைய ஒரேபேரான குமாரன் என வேதாகமம் கூறுகிறதுமான இயேசு கிறிஸ்துவையும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டு, எந்த தேவத்துவக் கோட்பாட்டையும் வேதாகம் ஊழியர்கள் கூறவில்லை. அவர்களுக்குப் பின்வந்த சபைத்தலைவர்களின் மனித ஞானத்தால் வந்ததுதான் இன்று நம் மத்தியில் காணப்படும் தேவத்துவ கோட்பாடுகள்.

இவ்வித கோட்பாடுகளை அவர்கள் கொண்டுவராதிருந்தால், அவற்றின் தவறுகளை எடுத்துச் சொல்லி வாதிட வேண்டிய அவசியம் வந்திருக்காது.

யோவான் 17:3-ல் “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு கூறுகிறார். இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி, “தேவன் யார், இயேசு யார், அவர்கள் ஒன்றுக்குள் ஒன்றா, தனித்தனியா” என அறிவது அவசியம் எனச் சிலர் சிலர் கூறுவதுண்டு. ஆனால், இம்மாதிரி கேள்விகேட்டு ஆராய்வதற்காக இயேசு அவ்வசனத்தைக் கூறவில்லை. ஏனெனில், அக்கேள்விகளுக்கான பதில்கள் யாவும் இயேசுவின் அவ்வசனத்திலேயே அடங்கியுள்ளன.

தேவன் யார்? - அவர் ஒன்றான (ஒரேயொருவரான) மெய்த்தேவன்
இயேசு யார்? - தேவனால் இப்பூமிக்கு அனுப்பப்பட்டவர்
அவர்கள் ஒன்றுக்குள் ஒன்றா? - அனுப்பியவரும் அனுப்பப்பட்டவரும் நிச்சயமாக ஒன்றுக்குள் ஒன்று அல்ல
அவர்கள் தனித்தனியா? - அனுப்பியவரும் அனுப்பப்பட்டவரும் நிச்சயமாக தனித்தனிதான்

இவ்வாறு நம் எல்லா கேள்விகளுக்குமான பதில்கள் அவ்வசனத்திலேயே அடங்கியுள்ளன.

அவ்வாறெனில், தேவனையும் இயேசுவையும் அறிதல் என்றால் என்ன?

பொதுவாக நாம் இவ்வாறு சொல்வதுண்டு. “எனக்கு அவனைப் பத்தி நல்லாத் தெரியும்” என்று.

இப்படி நாம் சொல்வதன் அர்த்தமென்ன? ஒருவரின் குணங்கள் அவரது எதிர்பார்ப்புகள் போன்றவற்றை நன்றாக தெரிந்து வைத்திருப்பதைத்தான் நாம் அப்படிச் சொல்வதுண்டு.

அதேவிதமாக தேவன் மற்றும் இயேசுவின் குணாதியங்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அறிவதுதான் அவர்களை அறிதல் ஆகும்.

யெகோவா தேவனின் ஒரு முக்கிய குணாதிசயத்தை பின்வரும் வசனம் கூறுகிறது.

ஏசாயா 42:8  நான் கர்த்தர் (சரியான மொழிபெயர்ப்பின்படி நான் யெகோவா), இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

ஆம், யெகோவா தேவனுக்குரிய துதியை அவர் அனுப்பினவராகிய இயேசு உட்பட வேறு யாருக்கும் கொடுப்பதை அவர் விரும்பவில்லை.

ஆனால், நாமோ பிதாவும் (யெகோவா தேவனும்) இயேசுவும் ஒருவரே என்று சொல்லி, யெகோவா தேவனுக்குரிய துதிகளை இயேசுவுக்குச் செலுத்துகிறோம். மாத்திரமல்ல, இயேசுவின் உருவத்தைப் படமாக்கி, இயேசுவின் படமாகிய அந்த விக்கிரகத்திற்கும் யெகோவா தேவனுக்குரிய துதியைக் கொடுத்து, யெகோவா தேவனின் சித்தத்துக்கு விரோதமாக நடக்கிறோம்.

இத்தியானத்தைக் குறித்து, தள அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கும்படி வேண்டுகிறேன்.


-- Edited by anbu57 on Monday 1st of February 2010 08:32:13 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 6
Date:
Permalink  
 

நம் தமிழ் வேதாகமத்தில் சுமார் 9 வசனங்களில் யேகோவா எனும் வார்த்தை காணப்படுகிறது.

நாம் வைத்திருக்கும் "ஹென்ரி பொவர்" அவர்களின் மொழிபெயர்ப்பில் "யேகோவா" என்னும் வார்த்தை கீழ்கண்ட 13 இடங்களில் இருக்கிற‌து

1. யாத் 6:2
2. யாத் 6:3
3. சங் 68:4
4. சங் 83:17
5. ஏசா 12:2
6. ஏசா 26:4
7. எரே 16:21
8. எரே 33:2
9. ஓசியா 12:5
10. ஆதி 22:14
11. யாத் 17:15
12. நியா 6:24
13. எசேக் 48:35

என்னிடம் உள்ள 1936ம் ஆண்டு சென்னை டயசிசன் பிரஸ்ல் அச்சிடப்பட்ட தமிழ் பைபிளில் 6855 முறை "யெகோவா" என்ற பெயர் இருக்கிறது.


__________________
ராஜியத்தினுடைய இந்தச் சுவிஷேசம் ... சாட்சியாக பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (மத் 24:14)


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

தங்கள் பதிவுக்கும் தகவலுக்கும் நன்றி சகோ.harvestsiftings அவர்களே!

நம் ‘பரிசுத்த வேதாகமம்’ மற்றும் ஆங்கில வேதாகமங்களின் Software என்னிடம் உள்ளதால், அவற்றிலுள்ள ஒரு வார்த்தையின் எண்ணிக்கையை எளிதில் கண்டறிந்தேன். ஆனால் அதிகம் கேள்விப்படாத ஹென்றி போவார் மொழிபெயர்ப்பு மற்றும் சென்னை டயசிசன் பிரஸ் வேதாகமங்களில் எப்படி வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டறிந்தீர்கள்? அவற்றின் Software வைத்துள்ளீர்களா?

Software இருந்தால் அதை மற்றவர்களும் பெற்றுக்கொள்ள வழி இருந்தால் சொல்லுங்கள் சகோதரரே!

உங்கள் Signature வசனத்தின் மூலம் (மத்தேயு 24:14), வேதம் உலகத்துக்கு எனும் கோட்பாடு தலைப்பில் சகோ.பெரியன்ஸ் -உடனான என் விவாதத்திற்கு ஆதரவான ஒரு முக்கிய வசனத்தைத் தந்துள்ளீர்கள். நன்றி.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 6
Date:
Permalink  
 

அன்பான சகோ. அன்பு57 அவர்களுக்கு,

உண்மையில் நாம் அனைவரும் வைத்திருக்கும் பைபிளே "ஹென்ரி பொவர்" ஐயரின் மொழி பெயர்ப்பாகும். இது 1867ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது "ஐக்கிய திருப்புதல்" "(UNION VERSION)" எனவும் "பழைய மொழிபெயர்ப்பு" (OV) எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த மொழிபெயர்ப்பில் 13 முறை "யேகோவா" என்ற பெயர் வருகிறது.

ஐக்கிய திருப்புதலுக்கு ஆதாரமான "TEXTUS RECEPTUS" என்ற வாசகம் பிழையானது என உறுதியானதாலும். "TEXTUS RECEPTUS" க்கு பல நூற்றாண்டுக்கு முந்திய கையெழுத்து பிரதிகள் கிடைத்ததாலும் லார்ஸன் ஐயர் தலைமையில் 1936ம் ஆண்டு "திருத்திய மொழிபெயர்ப்பு" வெளியிடப்பட்டது.

இந்த மொழிபெயர்ப்பில் "டெட்ராக்ரமாட்டன்" என்று அழைக்கப்படும் தெய்வீக பெயரை "யெகோவா" என 6855 முறை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

தமிழில் இந்த மொழிபெயர்ப்பு எந்த வரவேற்பையும் பெறவில்லை என்றாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இன்றும் முழுமையக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே நாம் வைத்திருக்கும் தமிழ் பைபிளை,  "துல்லியமற்ற வாசகத்திலிருந்து மொழிபெயர்கப்பட்ட‌ துல்லியமான மொழிபெயர்ப்பு" (AN ACCURATE TRANSLATION OF THE INACCURATE MANUSCRIPT) என கூறலாம்.




__________________
ராஜியத்தினுடைய இந்தச் சுவிஷேசம் ... சாட்சியாக பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (மத் 24:14)


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

கூடுதல் தகவல்களைத் தந்த சகோ.harvestsiftings அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

சகோதரரின் தகவல்களின்படி பார்க்கும்போது, நம் தமிழ் வேதாகமம் துல்லியக்குறைவானதே என அறிகிறோம். தமிழ் வேதாகமத்தை முழுமையாகச் சார்ந்திருப்பவர்கள் இக்கருத்தை கவனத்தில் கொள்வார்களாக.

தேவையற்றதும் குழப்பத்திற்குரியதுமான சில கோட்பாடுகள் உருவாவதற்கு முக்கிய காரணம், மொழிபெயர்ப்பு தவறுகளே.

யெகோவா எனும் நாமமுள்ள நம் தேவன் வேறு யாருடனும் ஒப்பிடக்கூடாதவராக இருக்கிறார் என்பது பழைய ஏற்பாட்டில் மட்டுமின்றி புதிய ஏற்பாட்டிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

யெகோவா எனும் நாமம் புதிய ஏற்பாட்டில் இல்லையெனினும், பிதாவாகிய தேவன் எனக் குறிப்பிடப்படுபவர் பழைய ஏற்பாட்டின் யெகோவா தேவனே.

யெகோவா தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்து, தமது சரீரமாக நம்மை ஏற்றுக்கொண்டதால், அவரைப் போலவே நாமும் தேவனை நோக்கி பிதாவே என அழைக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம். எனவேதான் ‘பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா’ என இயேசு அடிக்கடி கூறுகிறார்.

யெகோவா தேவனின் ஒரேபேறான குமாரனான இயேசுவின் சரீரமாக நாம் விளங்குவதால், நாமும் தேவனை நோக்கி அப்பா பிதாவே என தாராளமாக அழைக்கலாம். இதற்கு மேலாக பிதாவும் இயேசுவும் ஒருவரே என்றோ பிதாவே இயேசுவாக வந்தார் என்றோ பிதாவும் இயேசுவும் சமமான தேவர்கள் என்றோ கூறுவது, யெகோவா தேவனின் நாமத்தை களங்கப்படுத்திவிடுவதாக ஆகிவிடும் என்பதை அறிவோமாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

சகோதரர் அன்பு அவர்களே,

மிகவும் தெளிவான சத்தியத்தை எழுதியிருக்கிறீர்கள்.

"கர்த்தருக்குப் (யெகோவாவிற்கு) பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு" நீதி. 9:10.

என்ன அருமையான ஒரு வசனம். இந்த மகா பரிசுத்தமான தேவனை அறிவது தான் அறிவு என்கிறது வேதம். இந்த மகா பரிசுத்தரின் நாமம் தான் "யெகோவா" என்கிறது வேதம். இதை தவிற வேறு என்ன அறிவு இருக்க முடியும். இந்த தேவனை அறிந்துக்கொண்டாலே அவருக்கு பயப்படும் பயமும் வரும். ஆனால் மனுஷ ஞானத்தில் இன்று அநேகர் யெகோவா என்கிற நாமத்தை சொல்லவே கஷ்ட்டப்படுகிறார்கள். சரீயாக சொன்னீர்கள், இதற்கு காரணமே "மொழிப்பெயர்ப்புகள்" தான் என்று. இதை தான் என் தளத்திலும் நான் எழுதி வந்தேன், ஆனால் பலர் அது எப்படி என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்த மொழிப்பெயர்ப்புகள் சரியான அர்த்தத்தையும், வார்த்தைகளையும் கொடுக்காததினால் வந்த வினை தான் சுமார் 22000 சபைகள்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Member

Status: Offline
Posts: 6
Date:
Permalink  
 

யெகோவா எனும் நாமம் புதிய ஏற்பாட்டில் இல்லையெனினும், ......

இல்லை! யெகோவா எனும் நாமம் புதிய ஏற்பாட்டில் இருக்கிறது.

ஜே.என்.டார்பி என்ற ஆங்கில மொழிபெயர்ப்பில் மத்தேயு 4:4ல் துவங்கி, பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோளாக உபயோகிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும், "யெகோவா" என்ற பெயர் அடிக்குறிப்புகளில் போடப்பட்டு இருக்கிறது. (இது பிரதரன் மிஷனால் பிரசூரிக்கப்பட்டது)

என்னிடம் உள்ள ஒரு தமிழ் மொழிபெயர்ப்பில் "யெகோவா" என்ற பெயர் 237 முறை புதிய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டிருப்பதுமன்றி அவ்வாறு உள்ள 12 கிரேக்க கையெழுத்து பிரதிகளின் ஃபோட்டோ காப்பிகளை பிற்சேர்க்கையில் அச்சிட்டிருக்கிறார்கள்.

அந்த மொழிபெயர்ப்பில் ரோமர் 10:12 முதல் 15 இவ்விதமாக:

12. யூதனுக்கும் கிரேக்கனுக்கும் இடையே எந்த பாகுபாடும் இல்லை; ஏனென்றால் எல்லாருக்கும் எஜமானர் ஒருவரே; அவரிடம் வேண்டிக்கொள்கிற அனைவருக்கும் ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குகிறார்.

13. ஆகவே, "யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்."

14. என்றாலும், அவர்மீது விசுவாசம் வைக்காதவர்கள் எப்படி அவரிடம் வேண்டிக்கொள்வார்கள்? அவரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் எப்படி அவர் மீது விசுவாசம் வைப்பார்கள்? யாருமே பிரசங்கிக்காவிட்டால் எப்படி அவர்கள் கேள்விப்படுவார்கள்?

15. அனுப்பப்படாமல் எப்படி பிரசங்கிப்பார்கள்? " நற்காரியங்களை நற்செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!" என்று எழுதப்பட்டுள்ளதே.

நன்றி!



__________________
ராஜியத்தினுடைய இந்தச் சுவிஷேசம் ... சாட்சியாக பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (மத் 24:14)


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu wrotes:
///இதற்கு மேலாக பிதாவும் இயேசுவும் ஒருவரே என்றோ ....... கூறுவது, யெகோவா தேவனின் நாமத்தை களங்கப்படுத்திவிடுவதாக ஆகிவிடும் என்பதை அறிவோமாக.///

ஏசாயா 42:8  நான் கர்த்தர் (சரியான மொழிபெயர்ப்பின்படி நான் யெகோவா), இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.///


"தன்னுடைய மகிமையை வேறொருவருக்கு கொடேன்" என்று கர்த்தர் திட்டவட்டமாக சொன்ன  வசனத்தின்   அடிப்படையில்தான்   சொல்கிறேன் ஆண்டவராகிய  
இயேசு  வேறொரு தனிப்பட்டவர்  அல்ல!

எபிரெயர் 1
3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்


ஏசாயா:40
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்
5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று

இந்த சத்தத்துக்கு உரியவன் யோவான் என்பதை வேதம் சொல்கிறது

3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; 4 யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.

யோவானை  தொடந்து ஆயத்தபடுத்தப்பட்ட வழியில் வந்தவர் இயேசு கிறிஸ்துதான். எனவே கர்த்தரின் மகிமைதான், தேவனின் வார்த்தையோடு மாமிசமான    இயேசுவாக வெளிப்பட்டது என்று நான் கருதுகிறேன்.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

சகரியா:
அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். 13 கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.

மத்தேயு:
5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு,  7 ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.

இங்கு தனக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையாக முப்பது வெள்ளிகாசை கர்த்தர் கூறுகிறார் உண்மையில் அது இயேசுவுக்கு நிர்ணயிக்கப்பட்டது! இது கர்த்தரும் இயேசுவும் முற்றிலும்  வேறு வேறு அல்ல என்பதை  உணர்த்தவில்லையா? 

இதுபற்றி உங்கள் கருத்து என்ன?


எபி 1
5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும் நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா

ஜெநிப்பித்தலுக்கும் / படைத்தல், உருவாக்குதளுக்கும்  உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியும் என்று கருதுகிறேன். ஒரு பிள்ளை ஜெனிப்பிக்கப்படுவதற்கு  ஏதாவது ஒரு அடிப்படை வேண்டும்! தானாக ஒரு பிள்ளை ஜெநிக்காது. தேவன் தனது குமாரனை ஜெநிப்பித்தேன் என்று சொல்கிறார் அதற்கு இணையாக "வார்த்தை மாமிசமானது" என்றும் வசனம்  குறிப்பிடுகிறது

இந்த  கருத்துக்கள் பற்றி ஆராய்ந்து பாருங்கள். உங்கள் விளக்கம் என்னவென்பதை தெரிவியுங்கள்!

(எழுத்துப் பிழை நீக்கப்பட்டது - Moderator)


-- Edited by anbu57 on Monday 8th of February 2010 03:12:19 PM

 

-- Edited by SUNDAR on Monday 8th of February 2010 04:58:43 PM

__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

சகோ ஹார்வெஸ்ட் அவர்களே,

பிதாவாகிய தேவன் என்று புதிய ஏற்பாட்டில் இருக்கும் வார்த்தை "ஹோ தியோஸ்" என்கிற கிரேக்க வார்த்தையின் மொழிப்பெயர்ப்பு. அதை யெகோவா என்று சொல்லுவது சரி தான், ஆனால் கிரேக்க கையெழுத்து பிரதிகளில் "தியோஸ்"க்கு பதிலாக "யெகோவா" என்றா இருக்கிறது. அப்படி என்றால் தயவு செய்து அந்த கையெழுத்து பிரதிகளின் Linkஐ தரும்படியாக கேட்டு கொள்கிறேன்.

ஆனால் டார்பி ஆங்கிள மொழிப்பெயர்ப்பில் "யெகோவா" என்று உபயோகப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். இதோ தாங்கள் தமிழில் காண்பித்த ரோம் 10:12,13 வசனங்கள்,

Romans Chapter 10

12 For there is no difference of Jew and Greek; for the same Lord of all [is] rich towards all that call upon him.

 
13 For every one whosoever, who shall call on the name of the Lord, shall be saved.



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

anbu57 wrote:
//இதற்கு மேலாக பிதாவும் இயேசுவும் ஒருவரே என்றோ பிதாவே இயேசுவாக வந்தார் என்றோ பிதாவும் இயேசுவும் சமமான தேவர்கள் என்றோ கூறுவது, யெகோவா தேவனின் நாமத்தை களங்கப்படுத்திவிடுவதாக ஆகிவிடும் என்பதை அறிவோமாக.//

சகோ.சுந்தர் அவர்களே! எனது இவ்வரிகளை மேற்கோள்காட்டி சில கருத்துக்களை பதிந்துள்ள நீங்கள், முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை.

பிதாவும் இயேசுவும் ஒருவரே என்கிறீர்களா? அல்லது இருவரும் சமமான தேவர்கள் என்கிறீர்களா?

sundar wrote:
//"தன்னுடைய மகிமையை வேறொருவருக்கு கொடேன்" என்று கர்த்தர் திட்டவட்டமாக சொன்ன  வசனத்தின்   அடிப்படையில்தான்   சொல்கிறேன், ஆண்டவராகிய  இயேசு  வேறொரு தனிப்பட்டவர்  அல்ல!//

தமது மகிமையை வேறொருவனுக்கும் கொடேன் என்று சொன்ன தேவன், இயேசுவுக்குத் தமது மகிமையைக் கொடுத்துள்ளதால், இயேசு வேறொருவர் அல்ல என்கிறீர்கள். உங்கள் வாதப்படியே வருகிறேன்.

வேறொருவருக்கும் கொடுக்காத தமது மகிமையை, இயேசுவுக்கு தேவன் கொடுத்துள்ளதால் அவர்கள் இருவரும் வேறு வேறு அல்ல என்கிறீர்கள். சரி, பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

யோவான் 17:22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

தேவனின் மகிமையைப் பெற்றவரான இயேசு, அந்த மகிமையை தமது சீஷர்களுக்குக் கொடுத்துள்ளதாக இவ்வசனத்தில் கூறுகிறார். எனவே இயேசு மட்டுமல்ல, அவரது சீஷர்களும் பிதாவின் மகிமையைப் பெற்றவர்கள்தான்.

எனவே உங்கள் வாதப்படி, இயேசு மட்டுமல்ல, அவரது சீஷர்களும் வேறொரு தனிப்பட்டவர்கள் அல்ல என்றாகிறது. அதாவது, பிதா, இயேசு, இயேசுவின் சீஷர் இவர்கள் யாவரும் வேறு வேறல்ல, யாரும் தனிப்பட்டவர்கள் அல்ல, எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றானவர்கள் என்றாகிறது. இக்கூற்றை உங்களால் மட்டுமல்ல, வேறு யாராலும் ஏற்கமுடியாது.

இப்படி யாராலும் ஏற்கமுடியாத கூற்று உண்டானதற்குக் காரணம், ஏசாயா 42:8-ஐ நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததே!

ஏசாயா 42:8  நான் கர்த்தர் (சரியான மொழிபெயர்ப்பின்படி நான் யெகோவா), இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

மனுஷர்கள் தமக்குச் செலுத்தவேண்டிய மகிமையை வேறொருவருக்குக் கொடுக்கவோ, தமக்குச் செலுத்தவேண்டிய துதியை விக்கிரகங்களுக்குக் கொடுக்கவோ தேவன் கண்டிப்பாக அனுமதிக்கமாட்டார் என்பதுதான் இவ்வசனத்தின் அர்த்தம்.

“எனக்கு மட்டுமே உரித்தான மகிமையையும் துதியையும், வேறு யாருக்கும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்றுதான் தேவன் இவ்வசனத்தில் கூறுகிறார்.

நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் (விட்டுக்) கொடேன் என ஏசாயா 42:8-ஐப் படித்தால், அதன் கருத்தைப் புரிந்துகொள்வது சற்று எளிதாயிருக்கும்.

இனி நீங்கள் குறிப்பிட்டுள்ள சில வசனங்களைப் பார்ப்போம்.

எபிரெயர் 1:3-ன்படி, தேவனுடைய மகிமையின் பிரகாசமாகவும் அவருடைய தன்மையின் சொரூபமாகவும் இயேசு இருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதனால் பிதாவும் இயேசுவும் ஒருவரே எனக் கூறமுடியுமா? அல்லது பிதாதான் இயேசுவாக வந்தார் எனக் கூறமுடியுமா?

ஏசாயா 40:5-ன்படி யெகோவா தேவனின் மகிமை வெளியரங்கமாகும் என்பதும், மாம்சமான யாவும் அதைக் காணும் என்பதும் மெய்தான். ஆனால், இத்தீர்க்கதரிசனம், இயேசு இப்பூமியில் வந்தபோது நிறைவேறவில்லை.

இயேசு இப்பூமியில் வாழ்கையில், அவரிடம் தேவனின் மகிமையை ஜனங்கள் கண்டிருந்தால், அவர்கள் அவரை சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே!

பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்;

மத்தேயு 24:30 அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

இயேசுவின் 2-ம் வருகையின்போதுதான் அவர் பிதாவின் மகிமையோடு இப்பூமிக்கு வருவார்; அதை மாம்சமான யாவரும் கண்டு புலம்புவார்கள். அப்போதுதான் ஏசாயா 40:5-ன் தீர்க்கதரிசனம் சரியாக நிறைவேறும்.

sundar wrote:
//எனவே கர்த்தரின் மகிமைதான், தேவனின் வார்த்தையோடு மாமிசமான இயேசுவாக வெளிப்பட்டது என்று நான் கருதுகிறேன்.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?//


இப்பூமியில் இயேசு வாழ்கையில், தம்மை மகிமைப்படுத்தும்படி பிதாவிடம் ஜெபித்தார், பிதா அவருக்கு மகிமையைக் கொடுக்கவும் செய்தார், அந்த மகிமையை இயேசு தமது சீஷர்களுக்குக் கொடுத்தார். பின்வரும் வசனங்கள் இதற்கு ஆதாரமாயுள்ளன.

யோவான் 17:2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

யோவான் 17:22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.


ஆனால், பிதாவின் முழுமையான மகிமை பொருந்தினவராய் அப்போது இயேசு இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால், தம்மை மகிமைப்படுத்தும்படி அவர் பிதாவிடம் ஜெபிக்கவேண்டியதில்லையே!

தம்மை மகிமைப்படுத்தும்படி, பிதாவிடம் இயேசு ஜெபிப்பதிலிருந்தே, இருவரும் ஒன்றல்ல, வேறு வேறுதான் என்பதை நாம் மிகஎளிதில் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், மிகஎளிதில் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு விஷயத்தை புரிந்துகொள்வதற்கு நீங்களும் பலரும் பிடிவாதமாக மறுப்பதால்தான் இத்தனை குழப்பமான கோட்பாடுகளும், அவற்றை மறுத்து இத்தனை விளக்கங்களும்.

நீங்கள் புரிந்துகொள்ள ஏதுவாக பின்வரும் வசனத்தையும் படியுங்கள்.

யோவான் 7:39 இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.

எனவே, யோவான் 1:1 கூறுகிறபடி, தேவனுடைய வார்த்தை மாம்சமானது என்பதே சரி. நீங்கள் சொல்வதுபோல், யெகோவா தேவனின் மகிமையும் வார்த்தையும் சேர்ந்து மாமிசமான இயேசுவாக வெளிப்பட்டது என்பது சரியல்ல.

இயேசுவின் 2-ம் வருகையில், (ஏசாயா 40:5-ன்படி) அவர் பிதாவின் மகிமைபொருந்தினவராக, வெளியரங்கமாக வருவார் என்பதே உண்மை.

என் மகிமையை வேறொருவருக்கும் (விட்டுக்)கொடேன் என்று சொன்ன தேவன், இயேசுவின் 2-ம் வருகையின்போது அவருக்கு எப்படி தமது மகிமையைக் கொடுப்பார் என நீங்கள் கேட்கலாம்.

மனுஷர்கள் தமக்குச் செலுத்தவேண்டிய மகிமையை வேறொருவருக்குச் செலுத்துவதற்குத்தான் தேவன் விட்டுக்கொடுக்கமாட்டார். அவராக தமது மகிமையை யாருக்கும் கொடுப்பது அவரது சித்தம்/விருப்பம்.

sundar wrote:
//யோவானை  தொடந்து ஆயத்தபடுத்தப்பட்ட வழியில் வந்தவர் இயேசு கிறிஸ்துதான்.//

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என யோவான் சொன்னதில், “கர்த்தருக்கு” எனும் வார்த்தை இயேசுவையே குறிப்பதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்கிறபடி வைத்துக்கொண்டால், யோவான் சொன்னதைக் கேட்டு ஜனங்களில் எத்தனை பேர் எவ்விதமாக இயேசுவுக்கு வழியை ஆயத்தம்செய்தனர்?

sundar wrote:
//சகரியா:
அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். 13 கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.

இங்கு தனக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையாக முப்பது வெள்ளிகாசை கர்த்தர் கூறுகிறார் உண்மையில் அது இயேசுவுக்கு நிர்ணயிக்கப்பட்டது! இது கர்த்தரும் இயேசுவும் முற்றிலும்  வேறு வேறு அல்ல என்பதை  உணர்த்தவில்லையா?//

சகோ.சுந்தர் அவர்களே! சகரியா 11:12,-ம் வசனத்தை யார் சொன்னது? 13-ம் வசனத்தில் “என்னை” எனும் வார்த்தை யாரைக் குறிப்பிடுகிறது? முப்பது வெள்ளிக் காசை கர்த்தருடைய ஆலயத்தில் எறிந்தது யார்? எனும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

கவனிக்கவும்: மத்தேயு 27:5-ல் யூதாஸ்தான் 30 வெள்ளிக்காசை தேவாலயத்தில் எறிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. யூதாஸுக்கு அடையாளமாக சகரியா 11:12,13-ல் யார் குறிப்பிடப்பட்டுள்ளார்?

நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதில் சொன்னபின்பு தொடர்ந்து தியானிப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

ANBU WROTE:
/////தம்மை மகிமைப்படுத்தும்படி, பிதாவிடம் இயேசு ஜெபிப்பதிலிருந்தே, இருவரும் ஒன்றல்ல, வேறு வேறுதான் என்பதை நாம் மிகஎளிதில் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், மிகஎளிதில் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு விஷயத்தை புரிந்துகொள்வதற்கு நீங்களும் பலரும் பிடிவாதமாக மறுப்பதால்தான் இத்தனை குழப்பமான கோட்பாடுகளும், அவற்றை மறுத்து இத்தனை விளக்கங்களும்.////

   
நல்லது சகோதரரே! இந்த விவாதத்துக்கு மேலும் நான் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை! அதே  நேரத்தில் பிதாவும் இயேசுவும் ஒருவர்தான் என்றும் நான் சொல்ல வரவில்லை. இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்தார் என்று வசனம்  சொல்லும்பொழுது இருவரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்?  
 
தேவனும் இயேசுவும் ஒருவரிலிருந்து உருவான இருவர்   என்பதுதான் எனது கருத்து!  
 
மூளை அறிவை வைத்து பார்த்தால் இது மிக சுலபமாக புரியக்கூடிய காரியம்தான், அனால் ஆவிக்குரிய நிலையில் பார்த்தால் இது நீங்கள்  கருதுவதுபோல் இது மிக சுலபமாக  எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு காரியம் அல்ல.இன்னும் பரிசுத்த ஆவியானவர் பற்றிய கருத்துக்களை ஆராய்ந்தால்   அங்கும்  குழப்பம்தான்.   மிக எளிதாக புரிந்துகொண்டுள்ள உங்களுக்கு குழப்பத்தை விளைவிக்க நான் விரும்பவில்லை.  நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பது தேவனின் சித்தமானால் உங்களுக்கு புரியவைப்பார்.   அது உங்களுக்கு தேவையில்லை  என்று தேவன் கருதினால், என்னால்   அதை உங்களுக்கு   புரியவைப்பது கடினம், ஏனெனில் ஆதியில் இருந்து மீண்டும் பார்க்கவேண்டும்.  அதில் ஒரு வசனத்துக்கு நான் ஒரு கருத்து சொல்வேன், நீங்கள் ஒரு கருத்து என்பீர்கள்,  எல்லோருக்கும் குழப்பம்.
 
ஓரளவு வசனத்தில் தேறிய யாரும் தங்கள் கருத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பது நான் அறிந்ததே!  ஏனெனில் நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்!   எனவே
 
என்ன நிலையை நம்மை அழைத்திருக்கிராரோ அதே நிலையில் நாம்  நிலைத்திருப்போம்!
 



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//மூளை அறிவை வைத்து பார்த்தால் இது மிக சுலபமாக புரியக்கூடிய காரியம்தான், ஆனால் ஆவிக்குரிய நிலையில் பார்த்தால் இது நீங்கள்  கருதுவதுபோல் இது மிக சுலபமாக  எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு காரியம் அல்ல.//

மூளை அறிவும் ஆவிக்குரிய நிலையும் ஒன்றோடொன்று தொடர்பில்லாதவைகள் அல்ல; இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இயேசுவின் வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருப்பதாக யோவான் 6:63-ல் இயேசு கூறுகிறார். எனவே வசனங்களை அறிந்து, அவற்றின் கருத்தை மூளை அறிவால் ஆராய்ந்து, அவற்றின்படி நடப்பதன்மூலம்தான் ஆவிக்குரிய நிலையை அடையமுடியும்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் என மத்தேயு 24:15-ல் இயேசு கூறுகிறார். ஆவியான வசனங்களை மனித மூளையால் சிந்திக்கும்போதுதான் ஆவிக்குரிய நிலையை அடையமுடியும்.

என் ஜனங்கள் அறிவில்லாமையால் சிறைப்பட்டுப்போகிறார்கள் என்றும், அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள் என்றும் ஏசாயா 5:13; ஓசியா 4:6 வசனங்கள் கூறுகின்றன. எனவே ஆவிக்குரிய நிலையை அடைவதற்கு மூளை அறிவால் சிந்த்திப்பது அவசியமே.

ஆனால் நம் மூளை அறிவில் 2 வகை உண்டு. 1. உலகஞானம், 2. தேவஞானம்.

நம் மாம்சத்திற்குரியவற்றைச் சிந்திப்பது உலகஞானம்; தேவனுக்குரியவைகளை அல்லது ஆவிக்குரியவைகளை சிந்திப்பது தேவஞானம். ஒரே மூளை அறிவுதான் மாம்சத்திற்கிரியதையும் சிந்திக்கிறது, ஆவிக்குரியதையும் சிந்திக்கிறது.

ரோமர் 8:5 மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.

எனவே மூளை அறிவின் சிந்தை தேவையற்றதல்ல. அந்த அறிவைக்கொண்டுதான் சிந்தித்து ஆவிக்குரிய நிலையை அடையமுடியும்.

ஆனால், இன்றைய சில ஊழியர்களும் விசுவாசிகளும், தாங்கள் சொல்வதெல்லாம் ஏதோ ஆவியானவரால் வெளிப்படுத்தப்படுவை என்பது போலவும், மற்றவர்கள் சொல்வதெல்லாம் மூளை அறிவால் வந்தவை என்பது போலவும் கருதுகின்றனர்.

ஆனால், குறிப்பிட்ட ஒரு விஷயத்தில், ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டவை என அவர்கள் கூறுபவை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உள்ளன. மெய்யாகவே ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டவை எனில் அனைவருக்கும் ஒரே வெளிப்படுத்துதல் அல்லவா வரவேண்டும்?

ஆவியான வசனங்களால் எடுத்துரைக்க இயலாத சிலர்தான், எனக்கு ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டது எனக் கூறுவதாக நான் கருதுகிறேன்.

உண்மையில் ஆவியானவரின் வெளிப்படுத்துதல் என ஒன்று இருந்தால், அது வேதவசனங்களுக்கு இசைந்ததாகத்தான் இருக்குமேயொழிய, வேதவசனங்களுக்கு மிஞ்சினதாக இருக்காது.

வேதாகமத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வசனங்கள் யாவும் ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டவைதான். அவற்றை நம் மூளை அறிவால் ஆவிக்குரிய நோக்கத்துடன் சிந்திக்கையில், நாம் மெய்யான ஆவிக்குரிய நிலையை அடையமுடியும். இதைத்தான் வேதாகமம் நமக்குக் கூறுகிறது.

மாறாக, தனிப்பட்ட முறையில் ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார் எனும் நினைப்பு, நம்மை வஞ்சித்துவிடக்கூடும் என்பதை அறிவோமாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

நீங்கள் சொல்லும் எல்லா கருத்துக்களிலும் நியாயம் இருப்பது உண்மை  அதை நான் எவ்விதத்திலும் மறுப்பதற்கில்லை.  எல்லா கருத்துக்கும் என்னிடத்தில் சரியான  விளக்கமும் உண்டு ஆகினும் இஸ்லாம் சகோதரர்களுக்கு சொல்லும்  விளக்கங்கள்   பயனற்று போவதுபோல் போகாமல் இருக்கவும்,   உங்கள் ஆவிக்குரிய நிலைமையை  என் ஆவியில் உணரமுடிவதாலும்   உங்களிடம்  ஒரே ஒரு கேள்வி.
 
நீங்கள் தேவனை   வேதவசனத்தின் அடிப்படையில்  அறிவைக்கொண்டு மட்டும்   ஆராய்ந்து அறிந்துள்ளீர்களா அல்லது ஆவியானவரின் கிருபையுடன்  அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறீர்களா?  அதாவது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேக  அனுபவத்துக்குள் கடந்து சென்றிருக்கிறீர்களா?
 
நீங்கள் பாரம்பரிய சபையை சார்ந்தவர் என்பதால்தான் இந்த கேள்வியை முன் வைக்கிறேன்.  விரும்பினால் பதில்  தாருங்கள்.


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//நீங்கள் தேவனை வேதவசனத்தின் அடிப்படையில் அறிவைக்கொண்டு மட்டும் ஆராய்ந்து அறிந்துள்ளீர்களா அல்லது ஆவியானவரின் கிருபையுடன் அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறீர்களா? அதாவது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேக அனுபவத்துக்குள் கடந்து சென்றிருக்கிறீர்களா?//

நல்லதொரு கேள்வியை முன்வைத்துள்ளீர்கள் சகோதரரே!

இன்றைய விசுவாசிகளில் பலர் தங்களுக்கு ஆவியானவரின் கிருபை கிடைத்திருப்பதாக நினைக்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லைதான். ஆனால் அதே ஆவியானவரின் கிருபை மற்றவருக்கும் உண்டு என்பதை அவர்கள் நினைப்பதில்லை. தேவ ஆவியானவர் பட்சபாதமுள்ளவரல்ல. தம்மை வாஞ்சையோடு தேடுகிற அனைவருக்கும் அவரது கிருபை உண்டு. எனவேதான் இயேசு இவ்வாறு கூறினார்.

யோவான் 7:37-39 இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.

லூக்கா 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

லூக்கா 8:18 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.

தாகம் என்பது வாஞ்சையைக் குறிப்பிடுகிறது. மேற்கூறிய வசனங்களின்படி பார்த்தால், யாருக்கெல்லாம் பரிசுத்தஆவியின் மீது மெய்யான வாஞ்சை இருக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் பரிசுத்தஆவி தாராளமாக வழங்கப்படும் என்பதே உண்மை.

பரிசுத்தஆவியை நாம் எப்படி பெறுகிறோம், பரிசுத்தஆவியை நாம் பெற்றுள்ளதை எப்படி அறிவது, பரிசுத்தஆவியை நாம் பெற்றுள்ளதை மற்றவர்கள் எப்படி அறிவார்கள், பரிசுத்தஆவி நமக்குள் வருவதை நம்மால் உணரமுடியுமா என்பது போன்ற பல கேள்விகளுக்கு, ஆளாளுக்கு ஒரு பதில் சொல்கின்றனர்.

பொதுவாக பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் அந்நிய பாஷை பேசுவார்கள், தங்களை மறந்து பரவசமாக ஆடுவார்கள் எனும் பரவலான கருத்து நம்மிடையே காணப்படுகிறது. அந்நிய பாஷை பேசுதல் என்பது ஆவியின் வரங்களில் ஒன்றாக இருப்பது மெய்தான். அப்போஸ்தலரின் நாட்களில், ஒருவர் மீது பரிசுத்தஆவி இறங்குவதை மற்றவர்கள் அறியுமளவு, பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்தினுள் சென்றனர் என்பதும் உண்மைதான் (அப்போஸ்தலர் 8:18).

ஆனால், இந்நாட்களில் பரிசுத்தஆவியைப் பெறுபவர்களுக்கும் அதேவிதமான ஓர் அனுபவம் வரவேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. அப்போஸ்தலரின் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. அந்நாட்களில், பரிசுத்தஆவி பற்றிய அறிவு பலருக்கும் இல்லாததால், பரிசுத்தஆவி வருவதை அவர்கள் சரீரப்பிரகாரமாக உணரவேண்டியதாயிருந்தது. எனவேதான் பெந்தேகோஸ்தே நாளில் பலத்த காற்று அடித்து, வானத்திலிருந்து முழக்கம் உண்டாகி, அக்கினிமய நாவுகள் காணப்படுகையில் பரிசுத்தஆவி இறங்கியது. ஆனால் அதற்குப்பின் பரிசுத்தஆவி வரும்போது பெந்தேகோஸ்தே நாளில் நிகழ்ந்ததுபோல் நிகழவில்லை. ஒவ்வொருமுறை பரிசுத்தஆவி வரும்போதும் ஒவ்வொருவிதமான நிகழ்வுகள் நிகழ்ந்தன.

அப்போஸ்தலர் நடபடிகளில் பின்னால் போகப்போக, பரிசுத்தஆவி இறங்குகிறதைப் பற்றிய குறிப்புகள் அதிகமாகக் காணப்படவில்லை.

எனவே பரிசுத்தஆவி வரும்போது இப்படித்தான் நடக்கவேண்டுமென்கிற எந்த விதியும் கிடையாது.

இந்நாட்களில் பலரும், நான் அபிஷேகம் பெற்றுவிட்டேன், நீங்கள் பெற்றுவிட்டீர்களா என ஒருவருக்கொருவர் கேட்கும் ஒரு வழக்கம் காணப்படுகிறது.

அபிஷேகம் என்றால் என்ன? உச்சந்தலையிலிருந்து உடல்முழுவதும் தண்ணீரையோ பாலையோ அல்லது வேறு ஏதாவதையோ ஊற்றி கழுவுவதைதான் நீரபிஷேகம், பாலபிஷேகம் என்றெல்லாம் கூறுகிறோம். அதேவிதமாக, பரிசுத்தஆவி உச்சந்தலை முதல் உடல்முழுவதும் ஊற்றப்பட்டு அதைக்கொண்டு உடலை சுத்திகரிப்பதுதான் பரிசுத்தஆவியின் அபிஷேகமாகும். நடைமுறையில், இந்த அபிஷேகம் நமக்கு எவ்வாறு நடக்கும்? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.

எபேசியர் 5:25-27 அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

திருவசனத்தால் நம் உச்சந்தலை முதல் உடல் முழுவதும் (அதாவது நம் சிந்தனை முதல், உடலின் செயல்கள் வரை) கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாவதன் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை நாம் பெறலாம். அதாவது பரிசுத்தத்தில் வாஞ்சை கொண்டு வசனங்களைக் கேட்டு அவற்றின்படி நடக்கும்போது, மேலும் மேலும் நாம் வசனங்களால் உணர்த்தப்பட்டு மேலும் மேலும் பரிசுத்தமாவதன் மூலம் நாம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறலாம்.

இயேசுவைத் தவிர, மற்றவர்கள் அபிஷேகம் பெற்றதைக் குறித்து புதிய ஏற்பாட்டில் 3 வசனங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

2 கொரிந்தியர் 1:21 உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

1 யோவான் 2:20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.

1 யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.


இம்மூன்று வசனங்களிலிருந்து நாம் என்ன அறிகிறோம்?

1. கிறிஸ்துவுக்குள் நாம் ஸ்திரப்படுவதன் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறுகிறோம். கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுதல் என்றால், கிறிஸ்துவின் வசனங்கள் எல்லாவற்றின்படியும் நடப்பதிலும் கிறிஸ்துவுக்காக வாழ்வதிலும் ஸ்திரமாக (உறுதியாக) இருத்தல் என்பதே.

2. பரிசுத்தராலே அபிஷேகம் பெறும்போது நாம் சகலத்தையும் அறிந்தவர்களாகிறோம். “சகலத்தையும்” என யோவான் குறிப்பிடுவது “சகல சத்தியத்தையே” என 21-ம் வசனத்தில் பார்க்கிறோம். “சத்தியம்” என்பது எது? தேவனுடைய வசனமே சத்தியம் (யோவான் 17:17); அந்த வசனத்தினால்தான் நாம் பரிசுத்தமாக்கப்படவேண்டுமென்று யோவான் 17:19-ல் இயேசு கூறுகிறார். எனவே அபிஷேகம் என்பது, சத்தியமாகிய சகல தேவவசனங்களை அறிந்து அவற்றின்படி நடக்கக் செய்கிறது என அறிகிறோம்.

3. அவ்விதமாக சகல தேவவசனங்களாலும் நாம் அபிஷேகிக்கப்பட்டுவிட்டால், அதன்பின் வேறு யாரும் நமக்குப் போதிக்கவேண்டியதில்லை. ஆம், தேவவசனங்களுக்கு மிஞ்சின எந்தப் போதனையும் இல்லை. அந்தப் போதனையில் நாம் நிலைத்திருக்கவேண்டியதே நம் கடமை. அப்போது அந்த அபிஷேகம் நம்மில் நிலைத்திருக்கும்.

இவ்விதமான அபிஷேகத்தைத்தான் வேதாகமம் கூறுகிறது. அந்த அபிஷேகத்தின் அனுபவத்திற்குள் நான் அனுதினமும் கடந்து செல்கிறேன். அதாவது, வசனங்களை வாஞ்சையோடு தேடி, அவற்றின்படி நடக்க நான் வாஞ்சிக்கிறேன். தேவனும் என் வாஞ்சையை நிறைவேற்றி, நாளுக்குநாள் என்னை அபிஷேகத்தில் வளரச் செய்கிறார்.

இவ்விதமான பரிசுத்தஆவியின் அபிஷேக அனுபவத்தினுள் நான் நாள்தோறும் கடந்துகொண்டிருக்கிறேன்.

ஒருவேளை ஏதோ ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒரு பரவசமான அனுபவத்தின் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேக அனுபவத்தினுள் நான் கடந்துசென்றுள்ளேனா என நீங்கள் கேட்டால், அக்கேள்விக்கு இல்லை என்றுதான் நான் பதில் சொல்வேன்.

நான் அறிந்தவரை, அப்படி ஒரு அபிஷேக அனுபவம் பற்றி வேதாகமத்தில் எந்த வசனமும் கூறவில்லை என நான் நம்புகிறேன். ஒருவேளை யாரேனும் அப்படி ஓர் அனுபவத்தைப் பெற்றிருந்தால், அவர்கள் எந்த ஆவியின் மூலம் அந்த அபிஷேகத்தைப் பெற்றனர் என்பதை நான் அறியேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

யெகோவா தேவனை குறித்து எழுதாமல் விவாதம், தற்சமயம் ஆவிக்குரிய அனுபவங்களை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது போல் இருக்கிறது! ஆவிக்குறிய அனுபவங்கள் என்று சொல்லி இன்று அநேகர் புதிய புதிய அனுபவங்களை (நம்பவே முடியவில்லை) சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அபிஷேகத்தை குறித்து தனியாக திரி துவங்கி அதிலே ஆவியா, ஆவியானவரா, அபிஷேகம் என்றால் என்ன போன்றவற்றை விவாதிக்கலாமே. நம் கிறிஸ்தவர்கள் உச்சரிக்க பயப்படும் நாமமே இன்று யெகோவா என்கிற நாமம் தான் என்று நினைக்கிறேன்.

அனுபவங்களில் இருப்பவர்கள் ஒரு வித மேட்டிமையில் தான் கானப்படுவதை பார்க்க முடிகிறதே அன்றி வேத தெளிவை பார்க்க முடிவதில்லை. அன்று அப்போஸ்தலர்கள் அல்லது அவர்கள் கைகளை வைத்த சீஷர்கள் பெற்ற அபிஷேகம் என்பதை இநாட்களில் தொடர்பு படுத்தவே முடியாது! வேறு திரி ஆரம்பித்தால் அதில் எழுதுகிறேன்.

நிர்வாகி அவர்கள் இந்த திரியில் யெகோவா தேவனை குரித்து மாத்திரமே பதிய அனுமதித்தால் நன்றாக இருக்கும்.

உமது வசனமே சத்தியம் என்று சொன்ன இயேசு கிறிஸ்து அனுபவங்களினால் தான் தன்னையோ தன் பிதாவையோ அறிய வழி சொல்ல்வில்லை என்றே என் வாதம்! சத்திய வசனம் மாறாதது, ஆனால் உலகின் பல வித ஆவிகளினால் நிச்சயமாகவ் அனுபவங்கள் மாறும். சகோ அன்பு அப்படி பட்ட ஒரு அனுபவத்திற்கு வரவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!! அது உண்மையே!!



-- Edited by Bereans on Tuesday 16th of February 2010 07:22:34 PM

__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:
//யெகோவா தேவனை குறித்து எழுதாமல் விவாதம், தற்சமயம் ஆவிக்குரிய அனுபவங்களை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது போல் இருக்கிறது! ஆவிக்குறிய அனுபவங்கள் என்று சொல்லி இன்று அநேகர் புதிய புதிய அனுபவங்களை (நம்பவே முடியவில்லை) சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அபிஷேகத்தை குறித்து தனியாக திரி துவங்கி அதிலே ஆவியா, ஆவியானவரா, அபிஷேகம் என்றால் என்ன போன்றவற்றை விவாதிக்கலாமே.//

சகோ.சுந்தர் அவர்களின் கேள்விக்கு இத்திரியிலேயே பதில் சொல்லிவிடலாம் என எண்ணி, பதில் தந்தேன்.

சகோ.பெரியன்ஸ் அவர்கள் கேட்டுக்கொண்டபடி பின்வரும் தொடுப்பில் புதிய திரியை துவங்கியுள்ளேன்.

http://eternal-life.activeboard.com/index.spark?aBID=134761&p=3&topicID=34100742

இனி, இத்திரியின் தலைப்பு சம்பந்தமான கருத்துக்களை மட்டும் இங்கு பகிர்ந்துகொள்வோம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard