சகோ.பெரியன்ஸ் அவர்கள் முக்கியமானதொரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவரது கேள்விக்கு அடிப்படையான வசனம்:
மத்தேயு 24:14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
இவ்வசனத்தில் இயேசு கூறுவதை ஒரு தீர்க்கதரிசனமாகவே எடுத்துக்கொள்ளலாம். ஆயினும், இத்தீர்க்கதரிசனத்திற்கும் பின்வரும் வசனங்களில் காணப்படும் இயேசுவின் கட்டளைகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதை நாம் நன்கு உணரமுடிகிறது.
மத்தேயு 28:19,20 நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.
அப்போஸ்தலர் 1:8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
இவ்வசனங்களில் இயேசு கட்டளையிட்டபடி, உலகின் சகல ஜாதிகளுக்கும் ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்ட பின்னரே முடிவு வரும் என அறிகிறோம்.
இயேசுவின் கட்டளைப்படி சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறேன் என்று சொல்லி, இன்றைய ஊழியர்களில் பலர் என்னவெல்லாமோ செய்துவருகின்றனர். ஆனால், அவர்கள் மெய்யாகவே இயேசு கட்டளையிட்டபடிதான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே.
இக்கேள்விக்கு விடை காணவேண்டுமெனில், சகோ.பெரியன்ஸ் அவர்களின் 2 கேள்விகளுக்கும் நாம் விடைகாணவேண்டும்.
இது சம்பந்தமான கருத்துக்களை தள அன்பர்கள் பகிர்ந்துகொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
இந்த பகுதியில் ஒரு கேள்வியை கேட்கிறேன். பதிவுகளை ஆரம்பியுங்கள். நானும் கலந்துகொள்கிறேன்!!
(அ) சுவிசேஷம் என்றால் என்ன?
(ஆ) ராஜியத்தின் சுவிசேஷம் என்றால் என்ன?
இந்த இருவேறுபட்ட சுவிசேஷம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது! எனக்கு தெரிந்ததெல்லாம்:
தானியல்:
2. உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது
என்பதன் அடிப்படையில், எனக்கு ஆண்டவரால் தெரிவிக்கப்பட்டவைகளை நான் பிரசித்தி பண்ணுகிறேன். ஆகிலும் ஆண்டவராகிய இயேசுவின் கட்டளைக்கேற்ப இயேசுவின் இரட்சிப்பை பற்றி என்னால் இயன்ற வழியில் சுவிசேஷம் சொல்லி வருகிறேன்.
இதில் ராஜ்யத்தின் சுவிசேஷம் சாதாரண சுவிசேஷம் என்பதை பற்றிய கருத்து எனக்கு புரியவில்லை!
தெரிந்த சகோதரர்கள் சற்று விளக்குங்கள்,அறிய ஆவல்!
(Spelling mistakes corrected by Moderator)
-- Edited by anbu57 on Friday 12th of February 2010 12:19:04 PM
-- Edited by SUNDAR on Friday 12th of February 2010 12:52:34 PM
அதை தான் கேட்க்கிறேன், சுவிசேஷம் சொல்லுகிறோம் என்று இன்று பலர் சொல்லுகிறார்களே, அந்த சுவிசேஷம் என்றால் தான் என்ன? கொடுக்கப்பட்ட உள்ள வசனத்தின் வரும் "ராஜியத்தின் சுவிசேஷம்" என்றால் என்ன? இதை குறித்து நாம் வேதத்தின் அடிப்படையில் விவாதிப்போமே!!
தேவன் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் அல்ல, மனிதர்களுக்கே அனுதினமும் அற்புதங்கள் செய்து வருகிறார்! நாம் அனுதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுவதே ஒரு பெரிய அற்புதம்! அதை பற்றி எழுதினால் இடம் கொள்ளாது!!
இங்கு நாம் "சுவிசேஷம்", "இராஜியத்தின் சுவிசேஷம்" இதை குறித்து மாத்திரம் பேசலாம். இன்று ஊழியர்கள் சொல்லுவது வேதத்தில் உள்ளபடியான சுவிசேஷம் தானா?
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு இணையான கிரேக்க வார்த்தை "euaggelion" (யூஅங்கலியான்) என்பதாகும். இவ்வார்த்தையின் அர்த்தம் “நல்ல செய்தி அல்லது நற்செய்தி” என்பதாகும்.
எனவே எதுவெல்லாம் ஜனங்களுக்கு நல்ல செய்தியோ (அதாவது நன்மையைக் கொண்டுவரக்கூடிய செய்தியோ) அதுவெல்லாம் சுவிசேஷம் தான்.
ஜனங்களுக்கு எது நல்ல செய்தி? அதாவது எது நன்மையைக் கொண்டுவரும் செய்தி? இதற்கான பதிலை அறிந்தால்தான் சுவிசேஷம் என்ற வார்த்தையின் மெய்யான அர்த்தத்தை நாம் அறியமுடியும்.
இன்றைய ஜனங்களிடம் கேட்டால், நல்ல வேலை கிடைத்தால் அது ஒரு நன்மை, நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தால் அது ஒரு நன்மை, வீடு கிடைத்தால் அது ஒரு நன்மை, வாகனம் கிடைத்தால் அது ஒரு நன்மை என நன்மையானவைகளுக்கு ஒரு பெரிய பட்டியலே கொடுத்துவிடுவார்கள். அதாவது உலகப்பிரகாரமாக தாங்கள் நல்லதென கருதுகிற அத்தனை காரியங்களையும் “நன்மை” எனக் கூறிவிடுவார்கள். ஆனால் வேதாகம் எதை “நன்மை” எனக் கூறுகிறது?
பழையஏற்பாட்டு காலத்தில், மனிதனின் ஜீவன், வயல்வெளியின் செழிப்பான விளைச்சல், குடியிருக்க நல்லவீடு, மிருக ஜீவன்களின் பெருக்கம், உடல் ஆரோக்கியம் போன்றவைதான் மனிதனுக்கு நன்மையானவைகளாகக் கருதப்பட்டன.
ஆகிலும், இதுவே மனிதனுக்கு நன்மையானது என சில குறிப்பிட்ட காரியங்களை பிரசங்கி சொல்கிறார். அவை:
பிரசங்கி 3:12 மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
பிரசங்கி 3:22 இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன்;
பிரசங்கி 8:15 புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை;
இவ்வுலகில் நாம் நன்மையென நினைக்கிற எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், உள்ளத்தில் மகிழ்ச்சியிருந்தால் அதுவே மெய்யான நன்மை என பிரசங்கி கூறுகிறார். இவ்வுலகைப் பொறுத்தவரை ஒருவனுக்கு எவ்வளவு பணம் ஆஸ்தி இருந்தாலும், புசிக்கவும் குடிக்கவும் தேவையான ஆகாரமும் நீரும் கிடைக்காவிட்டால் அவனுக்கு ஒரு பயனும் கிடையாது. எனவேதான் புசித்து குடித்து மகிழ்வதையே இவ்வுலகில் நன்மையான காரியம் என பிரசங்கி சொல்கிறார்.
இந்நாட்களில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நன்குபடித்து நல்ல வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்து வசதியோடு வாழவேண்டுமென நினைக்கின்றனர். கிட்டத்தட்ட எல்லா பெற்றோரும் இந்நாட்களில் அப்படித்தான் நினைக்கின்றனர். கூலி வேலை செய்பவர், விவசாயம் செய்பவர் என அனைத்து பிரிவு மக்களும் தங்கள் பிள்ளைகள் படித்து உயர்ந்த வேலக்கு வந்து வசதியுடன் வாழவேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். பெற்றோர்கள் இப்படி நினைப்பதை தவறென்று சொல்வதற்கில்லை. ஏனெனில், ஒரு விவசாயியையும் கணினிப் பொறியாளரையும் எடுத்துக்கொண்டால் கணினிப் பொறியாளரைத்தான் இச்சமுதாயம் அதிக மதிப்பாகப் பார்க்கிறது; விவசாயியையோ அற்பமாகத்தான் பார்க்கிறது.
ஆனால் வரும் நாட்களில் எல்லோரும் கணினிப் பொறியாளராக அல்லது அலுவலக/கம்பெனி வேலையாளராகப் போய்விட்டால் என்னாகும்? எல்லோரிடமும் பணம் செழுமையாக இருக்கும்; ஆனால் அப்பணத்தால் வாங்குவதற்கு உணவுப்பொருள் இருக்காது. ஏனெனில் விவசாயத்தைக் கவனிக்க யாரும் இல்லையே! அப்படி ஒரு நிலை வரும்போதுதான், பெரும் உத்தியோகத்தில் இருப்பதிலெல்லாம் எந்தப்பயனுமில்லை எனும் உணர்வு மக்களுக்கு வரும்.
இவ்வுலகைப் பொறுத்தவரை, ஒரு மனிதனுக்கு எத்தனை செல்வம் இருந்தாலும் புசிக்க/குடிக்க வாய்ப்பு அமைந்தால்தான் அவனுக்கு அது நன்மையாயிருக்கும். சிலரிடம் பணம் ஏராளமாக இருந்தாலும், சாப்பிடுவதற்கு நல்ல உணவு வகைகள் இருந்தாலும், உடலில் ஆரோக்கியம் இல்லாமையால், விரும்பினதை சாப்பிடமுடியாத நிலையில் இருப்பார்கள்.
எனவே இவ்வுலகில் பணம், செல்வம், ஆஸ்தி இருக்கிறதோ இல்லையோ, புசிக்கவும் குடிக்கவும் தேவையானவை கிடைத்து, அவற்றை புசித்துக் குடிப்பதற்கேற்ற ஆரோக்கியமும் கிடைப்பதுதான் மெய்யான நன்மையாகும். இவ்வுலகைப் பொறுத்தவரை மனிதனின் ஜீவனுக்குத் தேவையானது உணவும் நீரும் மட்டுமே. எனவேதான் இயேசு கற்றுத்தந்த ஜெபத்தில், அன்றன்று தேவைப்படும் ஆகாரத்திற்காக ஜெபிக்கும்படி கூறினார்.
இவ்வுலகில் புசித்துக் குடித்து மகிழ்ச்சியாயிருப்பதே நன்மையான காரியம் எனக் கூறிய பிரசங்கி, மற்றொரு நன்மையான காரியத்தையும் சொல்கிறார். அதுதான், பிறருக்கு நன்மை செய்கிற காரியம். இது எப்படி ஒரு மனிதனுக்கு நன்மையாகிறது? இவ்வுலகில் ஒரு மனிதன் தனக்குரிய நன்மையைத் தேடுவதைப்போல, பிறருக்குரிய நன்மையையும் தேடுவதால் அவனுக்கு என்ன நன்மை? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
லூக்கா 10:25-28 அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, இயேசுவைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
இவ்வசனங்களில் 2 காரியங்களைப் பார்க்கிறோம். 1. தேவனிடத்தில் அன்புகூருதல், 2. சக மனிதரிடம் அன்புகூருதல். மத்தேயு 10:39-ல் சக மனிதரிடம் அன்பு கூருவதென்பது, தேவனிடம் அன்புகூருவதற்கு ஒப்பானது என இயேசு சொல்கிறார். கண்ட சகோதரனிடம் அன்புகூராதவன் காணாத தேவனிடம் எப்படி அன்புகூருவான் என 1 யோவான் 4:20-ல் யோவான் கேட்கிறார்.
எனவே லூக்கா 10:25-28-ன்படி, சக மனிதரிடம் அன்புகூருவதுதான் நாம் நித்திய ஜீவனைப் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என அறிகிறோம். இதன் அடிப்படையில்தான், பிறருக்கு நன்மை செய்வது நமக்கு நன்மையாயிருக்கிறது என பிரசங்கி கூறுகிறார். ஆம், பிறருக்கு நாம் செய்கிற நன்மைதான் நாம் நித்திய ஜீவனைப் பெற வழிவகுக்கிறது.
நம் அனைவருக்கும் மிக முக்கியமானது நம் ஜீவன். எனவே நம் ஜீவனைக் காப்பது எதுவோ அதுவே நமக்கு நன்மையானதாக இருக்கிறது. இவ்வுலக ஜீவனைப் பொறுத்தவரை ஆகாரமும் நீரும்தான் நம் ஜீவனைக் காப்பதாக இருக்கிறது. எனவேதான் புசிப்பதும் குடிப்பதும்தான் இவ்வுலகில் நன்மையானது என பிரசங்கி சொல்கிறார்.
ஆனால், மறுமையில் நாம் நித்திய ஜீவனைப் பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பது, இவ்வுலகில் பிறருக்கு நாம் செய்கிற நன்மையே.
பிரசங்கி சொல்கிறபடி, நாம் இவ்வுலகில் உயிரோடிருக்கையில் பிறருக்குச் செய்கிற நன்மைதான் மறுமையில் நாம் நித்திய ஜீவனைப் பெற வழிவகுக்கிறது.
இவ்வுலக ஜீவன் என்றோ ஒருநாள் நிச்சயமாக அழியக்கூடியதே. எனவே இந்த ஜீவனைக் காக்கின்ற ஆகாரம் நீரைக் குறித்த செய்தியைவிட மறுமையில் நித்திய ஜீவனைப் பெற வழிகாட்டுகிற செய்தியே மிக நன்மையானது. எனவே, மிக நன்மையான நித்திய ஜீவனுக்கு வழிகாட்டுகிற செய்தியைத்தான் நற்செய்தி அல்லது சுவிசேஷம் என்று கூறவேண்டும். இதன்படி பார்த்தால், பிரசங்கி 3:12 கூறுகிற செய்திகூட நற்செய்தி அல்லது சுவிசேஷம்தான்.
வேதாகமத்தை நாம் ஆராய்ந்து பார்க்கையில், நித்திய ஜீவனுக்கடுத்த காரியங்களைச் சொல்கிற இடங்களில் மட்டுமே சுவிசேஷம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். எனவே எந்தெந்த செய்திகள் நித்திய ஜீவனுக்கடுத்ததைக் கூறுகிறதோ அவையெல்லாமே சுவிசேஷம் அல்லது நற்செய்திதான்.
வேதாகமத்தில் காணப்படும் அவ்வித சுவிசேஷங்கள் அல்லது நற்செய்திகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.
சுவிசேஷம் என்றால் நற்செய்தி, நல்ல செய்தி என்று கிறிஸ்தவர்களானாலும் சரி, கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் ஆனாலும் சரி, அனைவரும் அறிவார்கள்!! ஆனால் ஒரு கிறிஸ்தவனுக்கு உலகத்தின் உள்ள நல்ல செய்தி தான் நல்ல செய்தியா!! நற்செய்தி ஒரு கிறிஸ்தவனுக்கு என்ன புரியவைக்கிறது.
இன்று தங்களுக்கு பொருத்தமான வேலை, கல்லூரியில் தேவையான படிப்பு, நல்ல வசதியுடன் வீடு, நல்ல உடல் நலம், திருமணமன வயது வந்தவுடன் நல்ல மனைவி / கணவன், நல்ல பிள்ளைகள் இப்படியாக இந்த உலகத்தின் நன்மைகளை நாடுவது மாத்திரமே நல்லது என்று படுகிறது. புறமதஸ்தரின் இல்லை, கிறிஸ்தவத்திலும் இன்று ஏறெடுக்கப்படும் ஜெபங்களும், நடத்தப்படும் உபவாசங்களும் இதை சுற்றித்தான் இருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு இதுதான் நற்செய்தியா!!
"இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால், எல்லா மனுஷரிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாகயிருப்போம்" என்கிறது வேதம் 1 கொரி. 15:19ல். வேதத்தின்படி நற்செய்தியாக இருக்கும் சில வசனங்களை தருகிறேன், பிறகு அதை ஆராய்ந்துப்பார்கலாம்:
தேவன் ஆதாமை என்றென்றும் அவருக்கு கீழ்படிந்தவனாக இருந்து இந்த பூமியில் வாழ படைத்திருந்தார் ஆனால் ஆதாமோ பாவம் செய்து, அந்த ஜீவனை இழந்து மரணத்தை பெற்றுக்கொண்டான், ஆனால் தேவன் அவனை எந்த திட்டத்துடன் படைத்திருந்தாரோ அது நிறைவேறத்தக்க அவனுக்கு ஒரு வாக்குத்தத்தை கொடுக்கிறார், அதை மனித குலத்திற்கு நற்செய்தியாகவும், அவர்களுக்கு விரோதமான சாத்தானுக்கு துர்ச்செய்தியாக தருகிறார்,
"உனக்கும் ஸ்திரிக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன், அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவரின் குதிங்காலை நசுக்குவார் என்றார்" ஆதி 3:15.
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட முதலாவது நற்செய்தி வாக்குத்தத்தம் இது. சாத்தானினால் தலை நசுக்கப்பட்ட மனிதன் மீண்டும் எழும்படியாக ஒரு மீட்பரை கொடுப்பேன் என்று அவரின் ஆதீனத்தின்படி அவர் நற்செய்தி தருகிறார். இதை கிறிஸ்தவர்கள் உட்பட மனிதர்கள் எப்படி புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இந்த வாக்குத்தத்த நற்செய்தியின்படி இயேசு கிறிஸ்து எனும் மீட்பர் பிறந்தார். அவர் பிறக்கும் போது உண்டான செய்தி,
"தேவதூதன் அவ்ர்களை நோக்கி: பயப்ப்டாதிருங்கள், இதோ எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" லூக். 2:10. தேவன் ஆதி 3:15ல் தந்த அந்த வாக்குறுதி இங்கு நிறைவேருகிறது. வசனத்தை கவனித்தோமென்றால், இந்த நற்செய்தி, இதைக்கேட்டு கீழ்ப்படிவோருக்கு மாத்திரம் இல்லை, மாறாக "எல்லா ஜனத்துக்கும்" என்கிறான் தேவதூதன். என்ன ஒரு நற்செய்தி.
இன்று கிறிஸ்தவர்கள் போதிக்கும் கிரியைகளினால் உண்டான நற்செய்தியை போல் இல்லாமல், தேவன் அனைவருக்கும் தருகிற மீட்பின் செய்திதான் இந்த நற்செய்தி.
ஐ.சி.யுவில் படுத்திருக்கும் ஒரு மனிதனிடத்தில் கொண்டு போய் 10 கோடி கொடுத்தாலும் அவனுக்கு சந்தோஷம் ஏற்படாது, மாறாக அவனுக்கு கிடைக்கும் ஜீவனினால் தான் அவனுக்கு சந்தோஷம். அப்படியே மரித்து போய் கொண்டிருக்கும் இந்த உலகத்திற்கு ஒரு மீட்பு (இலவசமாக தான்) உண்டு என்கிற செய்தியை காட்டிலும் ஒரு "நற்செய்தி" இருக்க முடியுமா.
எல்லா ஜனத்துக்கும் என்றால் எல்லோரும் தான், ஆதாம் தொடங்கி, உலகம் முடிவு பரியந்தம் வரயிருக்கும் ஒவ்வொரு ஜனத்திற்கும் இது நற்செய்தி தான், சிலர் இதை கேட்க கொடுத்து வைத்திருக்கிறார்கள், அநேகர் இதை கேட்காமலையே மரித்துப்போனார்கள், மரித்துப்போகிறார்கள், மரித்துப் போவார்கள், அதினால் தேவன் தன் வக்குத்தத்த நற்செய்தியை மாற்றிக்கொள்வாரோ!! இல்லை, அந்த தேவதூதன்தான் வந்து, "ஐயோ நான் அன்று தெரியாமல் சொல்லி விட்டேன், இயேசுகிறிஸ்து பிறந்த செய்தி அவரை விசுவசிப்போருக்கு மாத்திரம்தான் "நற்செய்தி" நான்தான் தவறாக "எல்லா ஜனத்திற்கும்" என்று சொல்லிவிட்டேன்" என்று சொல்லுவானோ!!
இந்த நற்செய்தியை ஆதரிக்கும் இன்னும் சில வசனங்கள்,
இப்படிப்பட்ட ஒரு பெரிதான நற்செய்தி நமக்கு தேவன் வேதத்தில் தந்திருக்கிறார், இதை எல்லாம் அசட்டை செய்துவிட்டு தங்களின் கிரியைகளை மேன்மைபடுத்தும் கிறிஸ்தவ கூட்டங்கள் தான் இன்று பெருகி தேவமகிமையை சொல்லத் தவறுகிறார்கள்.
இது நற்செய்தி அல்லது சுவிசேஷம், அடுத்த பதிவில், இராஜியத்தின் சுவிசேஷம் என்றால் என்னவென்று பதிவேன். முதலாவது சுவிசேஷத்தை புரிந்தால்தான் "இராஜியத்தின் சுவிசேஷம்" புரியும்.
(எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டது - Moderator)
-- Edited by anbu57 on Saturday 20th of February 2010 07:03:36 AM
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
Bereans wrote:"தேவதூதன் அவ்ர்களை நோக்கி: பயப்ப்டாதிருங்கள், இதோ எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்"
வேதாகமும் முழுவதும் எத்தனையோ நற்செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் சிற நற்செய்தியால் சிலர் சந்தொசமடைன்தனர் சில நற்செய்தியால் பலர் சந்தோசம் அடைந்தார் அனால் எல்லா மனிதனுக்கும், அதாவது பிறந்தவர், பிறக்காதவர், குருடர், செவிடர், மனநிலை சரியில்லாதவர் எல்லோருக்குமே மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும் நற்செய்தி என்று சொல்லப்படுவது சகோ. பெரியான்ஸ் சொவதுபோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் பிறப்புதான்.
லூக்கா: 2
10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்
இதை தவிர வேறு எந்த நற்செய்தியாலும் எல்லோரும் சந்தோசப்பட முடியாது. பிறருக்கு நன்மை செய்தவன் மட்டும்தான் மீட்கப்பட முடியும் என்றால், அது அவர் ஒருவரூக்கு மட்டும்தான் நற்செய்தி. அனால் இங்கு எல்லோருக்குமே நற்செய்தி! ஏனெனில் இயேசுவின் பிறப்பு எல்லோருக்கும் மீட்பை கொடுக்க கூடிய ஒரு நற்செய்தி. சாத்தானால் பாவத்துக்கு அடிமையாகி கிடந்த மக்களை மீட்பதர்க்காக தேவன் இயேசுவை அனுப்பியதே மிக உயர்ந்த நற்செய்தி.
-- Edited by SUNDAR on Saturday 20th of February 2010 07:42:44 AM
சகோ.பெரியன்ஸ் மற்றும் சகோ.சுந்தரின் பதிவுகளுக்கு நன்றி.
சகோ.பெரியன்ஸ் அவர்களே!
எல்லா ஜனத்துக்குமான நற்செய்தியைக் குறித்து தகுந்த வசனங்களுங்களுடன் கூறியுள்ளீர்கள், நல்லது. ஆனால் நாம் ஒருபக்க வசனங்களை மட்டும் வைத்துச் சொல்வதால் பயனில்லை. கிறிஸ்தவ உலகில் பிரிவினைகளும் மார்க்கபேதங்களும் உண்டானதற்கு முக்கிய காரணமே, ஒருபக்க வசங்களை மட்டும் எடுத்து, அவற்றைப் பிடித்துக்கொண்டு ஒரு கொள்கையை உருவாக்குவதுதான்.
கிறிஸ்துவின் பிறப்பு, ஆதாம் முதால் எல்லா மனிதருக்கும் நற்செய்திதான் என நீங்கள் எடுத்துச் சொல்லாவிட்டாலும், லூக்கா 2:10-ன்படி அது எல்லோருக்கும் நற்செய்திதான் என ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், அதை மட்டும் சொல்வதில் பயனில்லை. மக்கள் மனதில் எழுகிற மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டும்.
உதாரணமாக, இவ்வசனத்தைப் படியுங்கள்.
யோவான் 3:18 அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
இயேசுவை விசுவாசியாதவனுக்கு ஆக்கினை தீர்ப்பு நியமிக்கப்பட்டாயிற்று என இவ்வசனம் தெளிவாகக் கூறுகிறது. ஆக்கினைத் தீர்ப்பு என்பது மரணம் இல்லை என எடுத்துக் கொண்டாலும், அது ஒரு சுகமான அனுபவமாக இராமல், ஒரு வேதனையான அனுபவமாகத்தான் இருக்க வேண்டும்.
எனவே, இயேசு இவ்வுலகில் பிறக்காவிடில், அவரை விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பு எனும் வேதனை இருந்திருக்காது என்றும் நான் சொல்லலாம். இதன்படி பார்த்தால், இயேசுவின் பிறப்பு என்பது, அவரை விசுவாசியாதவர்களுக்கு வேதனை தரும் செய்தியாக அல்லவா இருக்கும்? இக்கேள்விக்கு நாம் பதில்தர கடமைப்பட்டுள்ளோம்.
அடுத்து பின்வரும் வசனங்களையும் படியுங்கள்.
மத்தேயு 13:41,42 மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
இவ்வசனங்களின்படி பார்த்தால், ஜனங்களில் பலருக்கு இயேசுவின் பிறப்பு தந்த நற்செய்தி பயனற்றதாகிப் போகும் என்றல்லவா தோன்றுகிறது.
இன்னும், கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்கிற வசனத்தின்படி பார்த்தால், இயேசுவை விசுவாசிப்பதால் மட்டும் பயனில்லை, கிரியையும் வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது. எனவே இம்மாதிரியான பல கேள்விகளுக்கு விடைதந்தால்தான், எது முழுமையான சுவிசேஷம் என்பதை அறியமுடியும்.
அதைச் சொல்வதற்குமுன் கீழ்க்கண்டவை போன்ற விமர்சனங்கள் தேவையில்லை என நான் கருதுகிறேன்.
இயேசுவின் பிறப்பினால் கிடைத்த நற்செய்தியின் பலன் எப்போது எப்படி முழுமையடைகிறது என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டு, அதன்பின்னர், இன்றைய கிறிஸ்தவர்களின் தவறான நற்செய்தியை நாம் விமர்சிக்கலாம் எனக் கருதுகிறேன்.
இவ்வுலகின் இறுதி நியாயத்தீர்ப்பு வரையிலான விஷயங்களைத் தெளிவாகச் சொன்னால்தான், இயேசுவின் பிறப்பின்போது கூறப்பட்ட நற்செய்தியின் பலனை எல்லோரும் அனுபவிப்பார்களா இல்லையா என்பதைக் கூறமுடியும். எனவே தொடர்ந்து பதிவுகளைத் தந்து, இவ்வுலகின் இறுதி நியாயத்தீர்ப்பு வரையிலான விஷயங்கள் எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்படி வேண்டுகிறேன்.
இயேசுவை விசுவாசியாதவனுக்கு ஆக்கினை தீர்ப்பு நியமிக்கப்பட்டாயிற்று என இவ்வசனம் தெளிவாகக் கூறுகிறது. ஆக்கினைத் தீர்ப்பு என்பது மரணம் இல்லை என எடுத்துக் கொண்டாலும், அது ஒரு சுகமான அனுபவமாக இராமல், ஒரு வேதனையான அனுபவமாகத்தான் இருக்க வேண்டும்.
எனவே, இயேசு இவ்வுலகில் பிறக்காவிடில், அவரை விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பு எனும் வேதனை இருந்திருக்காது என்றும் நான் சொல்லலாம். இதன்படி பார்த்தால், இயேசுவின் பிறப்பு என்பது, அவரை விசுவாசியாதவர்களுக்கு வேதனை தரும் செய்தியாக அல்லவா இருக்கும்? இக்கேள்விக்கு நாம் பதில்தர கடமைப்பட்டுள்ளோம்.
இதுவும் சரியான கருத்துதான். அதாவது நற்செய்தி சொல்லப்பட்டது எல்லோருக்கும்தான் ஆனால் அந்த நற்செய்தியை நம்பி ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே அதனால் பலன் உண்டு, நம்பி ஏற்காதவர்களுக்கு அந்த செய்தியில் பயனில்லை என்பதைத்தான் கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது.
யோவான் 3:18 அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
அதாவது நமது ஊரில் நோயாளிகளுக்கு வயித்தியம் பார்க்க ஒரு நல்ல டாக்டர் வந்திருக்கிறார் என்று ஒரு விளம்பரம் செய்யப்படுகிறது. இது ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் அதாவது நோயாளி நல்லவர் கெட்டவர் எல்லோருக்குமே அது நற்செய்திதான். ஆனால் நோய் உள்ள ஒருவர் டாக்டரிடம் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால், அவருக்கு டாக்டர் வந்தது நற்செய்தி இல்லை என்று எடுத்துகொள்ள முடியாது! அவருக்கும் அது நற்செய்திதான், ஆனால் அவர் அந்த நல்ல செய்தியை அசட்டை பண்ணி புறம் தள்ளுவதால் அவர் தனது பழைய நிலையிலேயே இருக்கிராறேயன்றி, சொல்லப்பட்ட செய்தியின் தன்மையில் எந்த மாற்றமும் கிடையாது!
அதுபோல் இயேசு பிறந்தது நற்செய்திதான், ஆனால் அதை அசட்டைபண்ணி வேண்டாம் என்று ஒதுக்குகிறவர் அந்த செய்தியின் பலனை அடையாமல் பழைய நிலையிலேயே இருக்கிரார்கலேயன்றி அந்த செய்தியின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் நீண்டநாள் கழித்து ஒருநாள் அந்த செய்தில் உள்ள உண்மையை உணர்ந்து இயேசுவினண்டை வந்தால் அப்பொழுதும் அது அவருக்கு நற்செய்தியாகவே இருக்கும்.
அதாவது இயேசு பிறந்தார் என்பது எப்பொழுதுமே எல்லோருக்கும் நற்செய்திதான். அந்த செய்தியின் தன்மை உலகம் இருக்கும் வரை மாறாது! அனால் அதன் பயனை அனுபவிப்பதும் அனுபவிக்காததும் சுய சித்தம் செய்யும்படி படைக்கப்பட்ட மனிதனின் கையில் இருக்கிறது.
உதாரணமாக நாகமானை எடுத்துகொள்வோம்.
"யோர்தானில் குளித்தல்" என்னும் ஒருசிறு செயலை செய்தால் அவரது குஸ்டரோகம போகும் என்பது அவருக்கு கிடைத்த நற்செய்தி.
இந்த செய்தியை அவர் அசட்டைபண்ணி இது என்ன அற்பமாக இருக்கிறது எங்கள் ஊர் குளத்திலேயே நான் குளிப்பேனே, என்று திரும்பிபோயவிட்டால் அந்த நற்செய்தியால் அவனுக்கு பயனேதும் இல்லை. ஆனால் சொல்லப்பட்டது என்னவோ நற்செய்திதான்.
அதுபோல் இங்கு "இயேசுவை விசுவாசி உன் பாவம் போகும், நீ தேவனுடைய பிள்ளை ஆவாய்" என்று ஒருவனுக்கு நற்செய்தி சொல்லப்படும்போது "அப்படியெல்லாம் யார் பாவத்தையும் யாரும் போக்க முடியாது எங்கள் சாமிக்கு ஒரு குடை கொடுத்தல் பாவம் போகும்" என்று விதாண்டவாதம் பண்ணுபவர்களுக்கு அந்த செய்தியால் பலனில்லையே தவிர, அந்த செய்தி என்னவோ அவருக்கு கிடைத்த நற்செய்திதான்!
எனவே இயேசு பிறந்தார் என்னும் நற்செய்தி என்னவோ எல்லாருக்குமே கொடுக்கப்பட்டதுதான் அதை விசுவசித்தவனுக்கு அது பயனளிக்கும் மற்றவர்கள், தங்கள் பழைய நிலையிலேயே அதாவது தேவனின் பிள்ளைகள் இல்லை என்ற பாவ நிலையிலே தொடர்வார்கள் அவ்வளவுதான்.
-- Edited by SUNDAR on Saturday 20th of February 2010 12:33:20 PM
முதலாவது இயேசு கிறிஸ்துவின் பிறப்பு எப்படி, எந்த வகையில் எல்லா ஜனத்திற்கும் ஒரு நற்செய்தியாக இருக்க முடியும்? அடுத்து இதில் ஒரு கேள்வி எழும்புகிறது,
"அது எப்படி இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத ஜனங்களுக்கு இது நற்செய்தியாக இருக்க முடியும்?" என்பதே. ஏனென்றால் அந்த தேவ தூதன் மூலமாக கேள்வி பட்டதே அந்த ஆட்டு இடையர்கள் தானே.
பதில்:
அப்படி என்றால் தேவ தூதன் பொய் தான் சொல்லியிருக்க வேண்டும்!! ஏனென்றால் இதற்கு எதிராக தோற்றம் அளிக்கும் வசனங்களை சகோ அன்பு கேட்டிருக்கிறாரே.
ஏன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனத்திற்கும் ஒரு நற்செய்தி? ஏனென்றால், மரண பிடியிலிருந்த மனிதக்குலத்தை விடுவிக்கும்படியாக, இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்து எழுந்தது போல் உயிர்த்தெழும் படியான ஒரு சம்பவமே இயேசு கிறிஸ்துவின் பிறப்பு. இனி இந்த உயிர்த்தெழுதலில் இரண்டு பிரிவுகள் உண்டு, ஒன்று மேன்மையான உயிர்த்தெழுதல், அதாவது கிறிஸ்துவின் சாயலில் உயிர்த்தெழுதல் அடைவார்கள் (1 யோவா 3:2,3), அதை தான் ஆவிக்குரிய மேனிகள் என்று பவுல் 1 கொரி. 15ம் அதிகாரத்தில் சொல்லுகிறார். அடுத்த பிரிவு, மிச்சம் இருக்கிற அனைத்து மனிதகுலம் (சுவிசேஷம் கேட்காதவர்கள் தொடங்கி கேட்டு அதை ஏற்றுக்கொள்ளாதோர் வரை) இந்த பூமியில் பூமிக்குரிய மேனியுடன் நடக்கும் உயிர்த்தெழுதல், இதையும் பவுல் 1 கொரி 15ம் அதிகாரத்தில் எழுதுகிறார். இப்படியாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நற்செய்தியாக இருக்கிறது.
இதில் இயேசு கிறிஸ்துவின் சாயலை (சாவாமை)உயிர்த்தெழுதலில் தரிக்கும் கூட்டம் அவரோடு ஆளுகை மற்றும் அரசாட்சி செய்யும் ஒரு சிறிய கூட்டமாகவும், பெரும் கூட்டத்தாரோ, அந்த தகுதியை இழந்து இந்த பூமியில் சாத்தானின் இல்லாமையில் சீர் பொருந்தி என்றென்றும் மரணத்தை ஜெயித்திருப்பார்கள் (நித்திய ஜீவன்).. இந்த சீர் பொருந்தும் நேரத்தைத்தான் வேதம் "நியாயத்தீர்ப்பு நாட்கள்" என்றும் "ஆக்கினை தீர்ப்பு" என்றும் சொல்லியிருக்கிறது.
இந்த ஆக்கினை தீர்ப்பு என்றவுடன் ஏதோ அக்கினியில் போட்டு வேகாத சாத்தானும் அவன் கூட்டத்தின் நடுவில் வெந்துகொண்டு இருக்கப்போகும் ஒரு நிலையைத்தான் இன்று பெரும்பாலும் பிரசங்கித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட போதனைகளை கேட்டு வளர்ந்தவர்கள் அதை தரிசனங்களாகவும் வெளிப்பாடுகளாகவும் கண்டு இன்னும் ஒரு படி மேல் பிரசங்கிக்கிறார்கள், இந்த போதனைகளை கேட்டால், நிச்சயமாக தேவ தூதன் சொன்னது பொய்யாகத்தான் இருக்க முடியும்!!
சகோ அன்பு கான்பித்திருக்கும் வசனத்திற்கு நான் மேலே எழுதிய விளக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். அவரை விசுவாசிக்கிறவன் (விசுவாசத்திற்கே ஒரு தனி விவாதம் வேண்டும்) அவர் சொன்னதை செய்வதால், அவரைப் போல், அதாவது அவரின் சாயலில் உயிர்த்தெழுவதால் பூமியில் இருக்கும் நியாயத்தீர்ப்பு நாட்கள் (ஆக்கினை தீர்ப்பு) அவனுக்குப் பொருந்தாது. அதற்கு மாறாக அவரைக் கேள்வி படாதவர்கள், அவரை விசுவசியாதவர்கள் அனைவருக்கும் இந்த பூமியின் நியாயத்தீர்ப்பு நாட்கள் (ஆக்கினை தீர்ப்பு) பொருந்தும். இன்று எப்படியும் பரலோகம் போய் விடுவோம் என்று பிரசங்கித்துக்கொண்டு இருக்கும் ஒரு பெரும் கூட்டம் இந்த பூமியில் வரும்போது வசனம் சொல்லும் "பற்கடிப்பும், அழுகையும்:" நிச்சயம் உண்டாகும். இதை உறுதிப்படுத்தும் வசனம் தான், "என்னை விட்டு அகன்று போங்கள், அக்கிரம செய்கைக்காரர்களே".
சகோ அன்பு கொடுத்த அடுத்த வசனம்: "மத்தேயு 13:41,42 மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்."
அழுகை பற்கடிப்பு பற்றி மேலே எழுதிவிட்டேன். வசனத்தின்படி அக்கிரமஞ் செய்கிறவர்களை ஒரு வேளை அக்கினிச் சூளையிலே போட்டாலும் "இடறல்களை" எப்படி போட முடியும்? என்பதை சற்று தியானியுங்கள் சகோ அன்பு அவர்களே!!
இன்னும் தொடருவேன்......
(எழுத்துப்பிழை நீக்கப்பட்டது - Moderator)
-- Edited by anbu57 on Saturday 20th of February 2010 04:08:36 PM
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
bereans wrote: //இதில் இயேசு கிறிஸ்துவின் சாயலை (சாவாமை)உயிர்த்தெழுதலில் தரிக்கும் கூட்டம் அவரோடு ஆளுகை மற்றும் அரசாட்சி செய்யும் ஒரு சிறிய கூட்டமாகவும், பெரும் கூட்டத்தாரோ, அந்த தகுதியை இழந்து இந்த பூமியில் சாத்தானின் இல்லாமையில் சீர் பொருந்தி என்றென்றும் மரணத்தை ஜெயித்திருப்பார்கள் (நித்திய ஜீவன்).. இந்த சீர் பொருந்தும் நேரத்தைத்தான் வேதம் "நியாயத்தீர்ப்பு நாட்கள்" என்றும் "ஆக்கினை தீர்ப்பு" என்றும் சொல்லியிருக்கிறது.//
சகோ.பெரியன்ஸ் அவர்களே நீங்கள் சொல்கிற பிரகாரம் நடந்தால், அதை நானும் மகிழ்வோடு வரவேற்கத்தான் செய்வேன். ஆனால் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க என்ன செய்யவேண்டும் எனும் கேள்விக்கு இயேசு சொன்ன பதில், உங்கள் கருத்துக்கு இசைந்ததாக இல்லையே! பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
மத்தேயு 19:16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
லூக்கா 10:25-28 அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
sundar wrote: //அதுபோல் இங்கு "இயேசுவை விசுவாசி உன் பாவம் போகும், நீ தேவனுடைய பிள்ளை ஆவாய்" என்று ஒருவனுக்கு நற்செய்தி சொல்லப்படும்போது ...//
சகோ.சுந்தர் அவர்களே! இயேசுவை விசுவாசித்தால் பாவம் மன்னிக்கப்படும் எனும் கருத்தில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், பாவம் மன்னிக்கப்பட்ட அனைவரும் உடனே தேவனுடைய பிள்ளைகள் ஆகிவிடுவார்களா? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
மத்தேயு 5:39-45 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.
ரோமர் 8:14 எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
anbu57 wrote: //வேதாகமத்தை நாம் ஆராய்ந்து பார்க்கையில், நித்திய ஜீவனுக்கடுத்த காரியங்களைச் சொல்கிற இடங்களில் மட்டுமே சுவிசேஷம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். எனவே எந்தெந்த செய்திகள் நித்திய ஜீவனுக்கடுத்ததைக் கூறுகிறதோ அவையெல்லாமே சுவிசேஷம் அல்லது நற்செய்திதான்.
வேதாகமத்தில் காணப்படும் அவ்வித சுவிசேஷங்கள் அல்லது நற்செய்திகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.//
பின்வரும் தொடுப்பிலுள்ள திரியில், வேதாகமத்தில் காணப்படும் சுவிசேஷங்கள் தனிக்கட்டுரை வடிவில் கூறப்பட்டுள்ளன. அதின் பதிவுகளைப் படித்து, அவை சம்பந்தமான விவாதங்கள் மற்றும் விமர்சனங்களை இத்திரியில் பதிக்கும்படி தள அன்பர்களை வேண்டுகிறேன்.
சகோ அன்பு எழுதுகிறார்: "சகோ.பெரியன்ஸ் அவர்களே நீங்கள் சொல்கிற பிரகாரம் நடந்தால், அதை நானும் மகிழ்வோடு வரவேற்கத்தான் செய்வேன்"
இது நான் சொன்னது இல்லை, இது நான் பதிந்தது, சொன்னவர்கள் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகவே வேதத்தில் இருப்பதால் நீங்கள் மகிழ்வோடு வரவேற்கலாம்.
"ஆனால் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க என்ன செய்யவேண்டும் எனும் கேள்விக்கு இயேசு சொன்ன பதில், உங்கள் கருத்துக்கு இசைந்ததாக இல்லையே! பின்வரும் வசனங்களைப் படியுங்கள்"
இப்படி இயேசு கிறிஸ்து சொல்லியும் அதை பின் பற்றாமல் போவதினால் தானே நித்திய ஜீவன் கிடைக்கும் முன்பு ஒரு ஆக்கினை உண்டு, அதை தான் வேதம் "நியாயத்தீர்ப்பு நாட்கள்" என்று சொல்லுகிறது. இதை தான் என் முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேனே.
கிறிஸ்தவர்கள் தெளிவாக இன்று பதில் தராத கேள்விகள் இருக்கிறது.
உயிர்த்தெழுதல் யாருக்கு? யார் பரலோகம் செல்வார்கள்? இந்த பூமியில் மக்கள் இருப்பார்களா? நீதிமான்கள் பரலோகம் சென்று, ஹிட்லர் போன்று பெரிய கொலைக்காரனும், பிக்பாக்கெட் அடித்த ஒரு சிருவனுக்கும் ஒரே தண்டனையான அவியாத அக்கினி கிடைத்து விட்டால், இந்த பூமியில் யார் தான் இருப்பார்கள்? இதற்கு பதில்கள் உண்டா?
இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பாவம் மன்னிக்கப்பட்டு பரலோகம் போவார்கள் என்று சொல்லுவதெல்லாம் பொய் பிரசங்கம். பாவம் மன்னிக்கப்படுதல் என்பது கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் இல்லை, ஏனென்றால் இயேசு கிறிஸ்து "நம்முடைய பாவங்களை மாத்திரம் இல்லை, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" 1 யோவான் 2:2.
இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டு அதன் படி நடக்க பிரயாசிக்கிறவர்களுக்கு பரலோகம் செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி அப்படியே அவரை ஏற்றுக்கொள்ளாத கோடா கோடு ஜனங்கள் நரகத்திற்கு தான் போக வேண்டும் என்றால் இயேசு கிறிஸ்துவின் "சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" என்பதற்கு என்ன அர்த்தம்? ஏன் கிறிஸ்தவத்தில் இந்த பொய் பிரச்சாரம் நடக்கிறது என்பது தான் தெரியவில்லை. ஒருபக்கம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு "எல்லா ஜனத்திற்கும்" நற்செய்தியாக அறிவிக்கப்படுகிறது, ஆனால் அவரின் பலி உதாவது என்று பிரசங்கிக்கப்படுகிறது. வேதத்தில் "எல்லா ஜனத்திற்கும்" உண்டான ஒரே நற்செய்தி அல்லது சுவிசேஷம் இது தான். விழுந்து போன மனிதக்குலத்தை தேவன் மீட்டெடுக்கும் விவரங்கள் தான் வேதத்தின் கரு.
சுருக்கமாக, சுவிசேஷம் அல்லது நற்செய்தி என்ன சொல்லுகிறது என்றால், இயேசு கிறிஸ்து செலுத்திய பலியினால் சரவலோகமமும் பிரயோஜன்ப்படும். தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சிறிய கூட்டம் அவரின் விருப்ப படி செய்து பரலோகத்தை சுதந்தரிக்கும், அவரை தெரிந்த, தெரியாத, பின் பற்றின பின்பற்றாத அறிந்த அறியாத ஒரு பெரும் கூட்டம் "மனிதன் என்றென்றும் வாழும்படியாக படைக்கப்பட்ட இந்த பூமியில்" வாழும்படி உயிர்த்தெழுவார்கள்" இது தான் சுவிசேஷத்தின் கரு. இதை தவிர வேறு சுவிசேஷம் இல்லை. இதை விட்டு விட்டு, இல்லாத பொல்லாத பலதை கற்பனை செய்து, அதை தரிசனங்களாக வடிவமைத்து பாவப்பட்ட ஜனங்களை பயமுறுத்தி "தேவ தூஷனம்" செய்வதில் "Record Break" செய்து வருகிறார்கள் நம் ஊழியர்கள்!!
அடுத்து வருவது இராஜியத்தின் சுவிசேஷம்.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
bereans wrote: //வசனத்தின்படி அக்கிரமஞ்செய்கிறவர்களை ஒருவேளை அக்கினிச் சூளையிலே போட்டாலும் "இடறல்களை" எப்படி போடமுடியும்? என்பதைச் சற்று தியானியுங்கள் சகோ அன்பு அவர்களே!! //
“இடறல்களை” எனும் வார்த்தைக்கு இணையாக 3 கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1. pas, 2.ho, 3. skandalon. இவற்றின் அர்த்தங்கள்:
1. pas - including all the forms of declension; apparently a primary word; all, any, every, the whole:
KJV - all (manner of, means), alway (-s), any (one), X daily, + ever, every (one, way), as many as, + no (-thing), X thoroughly, whatsoever, whole, whosoever.
எல்லாம், எல்லாரும், முழுவதும் எனும் அர்த்தங்களைத் தருகிறது.
2. ho - the எனும் ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தைத் தருகிறது.
3. skandalon - a trap-stick (bent sapling), i.e. snare (figuratively, cause of displeasure or sin):
KJV - occasion to fall (of stumbling), offence, thing that offends, stumblingblock.
அசெளகரியத்திற்குக் காரணமான, பாவத்திற்குக் காரணமான எனும் அர்த்தங்களைத் தருகிறது.
இவ்விதமாக 3 வார்த்தைகள் அடங்கிய ஒரு சொற்றொடரை, “இடறல்கள்” எனும் ஒரு வார்த்தையில் நம் மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்துவிட்டனர். இதைப் படிக்கிற நாம், இவ்வார்த்தை ஏதோ உயிரற்ற காரியங்களைக் குறிப்பதாக நினைக்கிறோம். உதாரணமாக, நம்மை இச்சையில் விழவைக்கும் பொன்னைப் போன்றதும் அல்லது உருவமற்றதும் உணர்வு பூர்வமானதுமான இடறலாக இருக்கும் என நினைக்கிறோம். உண்மையில், அவ்வார்த்தை மனிதரைக் குறிப்பதாகவே உள்ளது. மேலே சொன்ன 3 வார்த்தைகளையும் மொழிபெயர்க்கையில், “பாவத்துக்குக் காரணமான எல்லாவற்றையும்” அல்லது “பாவத்துக்குக் காரணமான எல்லாரையும்” என மொழிபெயர்க்கலாம். ஆனால், அச்சொற்றொடரோடு சேர்ந்து “அக்கிரமஞ்செய்கிறவர்களையும்” எனும் வார்த்தை வருவதால், “பாவத்துக்குக் காரணமான எல்லாரையும்” என மொழிபெயர்ப்பதே சரியாக இருக்கும்.
இதை ஏற்றுக்கொள்ள மனமில்லையென்றால், மத்தேயு 2:3-ல் pas Hierosoluma எனும் கிரேக்க வார்த்தைகள், “எருசலேம் நகரத்தார்” எனும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.
அப்படி ஒப்பிட்டுப் பார்க்கையில், மத்தேயு 13:41-லுள்ள pas ho skandalon எனும் வார்த்தைகளை “பாவத்துக்குக் காரணமான எல்லாரையும்” அல்லது “இடறல் செய்கிற எல்லாரையும்” என மொழிபெயர்ப்பதில் தவறில்லை என அறிகிறோம்.
அதன்படி, மத்தேயு 13:41,42 வசனங்களை பின்வருமாறு மொழிபெயர்ப்பதுதான் அதிக பொருத்தமாயிருக்கும் என அறிகிறோம்.
மத்தேயு 13:41,42 மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற இடறல் செய்கிற எல்லாரையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
தற்போது, “இடறல்களையும்” எனும் வார்த்தையிலுள்ள சந்தேகம் தீர்ந்ததா, சகோ.பெரியன்ஸ் அவர்களே?
இடறல் செய்கிறவர்களுக்கும் அக்கிரமஞ்செய்கிறவர்களுக்கும் “அழுகையும் பற்கடிப்புமான” வேதனை உண்டாகும் என்பதை இப்போது ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அப்படியானால், இடறல் மற்றும் அக்கிரமம் செய்பவர்களுக்கு, இயேசுவின் பிறப்பினால் உண்டான நற்செய்தியின் பலன் கிடைக்கவில்லை என்றாகிறதே? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் சகோ.பெரியன்ஸ் அவர்களே?
எந்த மனுஷனையும் இயேசுவாகிய ஒளி பிரகாசிப்பிக்கும் என்பது சரிதான். ஆனால், ஒரு மனுஷன் இருளுக்குள் இருந்துகொண்டால் அவனை எப்படி அந்த ஒளி பிரகாசிப்பிக்க முடியும்? இருள் சூழ்ந்த (அதாவது பாவம் நிறைந்த) உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம். பாவம் நிறைந்த இவ்வுலகத்தை உதறிப்போட்டுவிட்டு, பாவமில்லா ஒளியாகிய இயேசுவண்டை வரவேண்டும் என நினைத்து, இயேசுவண்டை வந்தால்தானே, ஒளியாகிய இயேசுவால் நம்மைப் பிரகாசிப்பிக்கச் செய்யமுடியும்? ஆம், நாம் பாவத்தை வெறுத்து பரிசுத்தமாக வாழ முன்வருவது அவசியமாயியுள்ளதே? பரிசுத்தமாய் வாழ முன்வருதல் என்றால், கிரியை அங்கு அவசியமாகிறதே?
ஆம், சந்தேகமில்லை. ஒவ்வொருவருவருக்காகவும் கிறிஸ்து மரணத்தை ருசி பார்த்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதுதான் “கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” என 1 கொரி. 15:22-ல் பவுல் தெளிவாகச் சொல்லிவிட்டாரே! அப்படி உயிர்த்தெழுந்தபின் நடக்கிற நியாயத்தீர்ப்பில் அல்லவா வேதனைகள் இருக்கும்? பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
மல்கியா 3:2 ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
கிறிஸ்து வருகிற நாளில், அக்கினியும் வண்ணாருடைய சவுக்காரமும் ஒருவனுக்கு எவ்வளவு வேதனையளிக்குமோ அதையொத்த வேதனை இருக்குமென என்றல்லவா இவ்வசனம் கூறுகிறது? நியாயத்தீர்ப்பு நாளாகிய அந்த நாள் சகிக்க முடியாத நாளாக இருக்குமென்றல்லவா வசனம் கூறுகிறது? ஆனால் நீங்களோ மிக எளிதாக நியாயத்தீர்ப்பு நாளில் நீதியைக் கற்று நித்திய ஜீவனைப் பெற்றுவிடுவார்கள் என்கிறீர்கள்!
bereans wrote: //இனி இந்த உயிர்த்தெழுதலில் இரண்டு பிரிவுகள் உண்டு, ஒன்று மேன்மையான உயிர்த்தெழுதல், அதாவது கிறிஸ்துவின் சாயலில் உயிர்த்தெழுதல் அடைவார்கள் (1 யோவா 3:2,3), அதை தான் ஆவிக்குரிய மேனிகள் என்று பவுல் 1 கொரி. 15ம் அதிகாரத்தில் சொல்லுகிறார். அடுத்த பிரிவு, மிச்சம் இருக்கிற அனைத்து மனிதகுலம் (சுவிசேஷம் கேட்காதவர்கள் தொடங்கி கேட்டு அதை ஏற்றுக்கொள்ளாதோர் வரை) இந்த பூமியில் பூமிக்குரிய மேனியுடன் நடக்கும் உயிர்த்தெழுதல், இதையும் பவுல் 1 கொரி 15ம் அதிகாரத்தில் எழுதுகிறார்.
இதில் இயேசு கிறிஸ்துவின் சாயலை (சாவாமை)உயிர்த்தெழுதலில் தரிக்கும் கூட்டம் அவரோடு ஆளுகை மற்றும் அரசாட்சி செய்யும் ஒரு சிறிய கூட்டமாகவும், பெரும் கூட்டத்தாரோ, அந்த தகுதியை இழந்து இந்த பூமியில் சாத்தான் இல்லாமையில் சீர்பொருந்தி, என்றென்றும் மரணத்தை ஜெயித்திருப்பார்கள் (நித்திய ஜீவன்).. இந்த சீர் பொருந்தும் நேரத்தைத்தான் வேதம் "நியாயத்தீர்ப்பு நாட்கள்" என்றும் "ஆக்கினை தீர்ப்பு" என்றும் சொல்லியிருக்கிறது.//
பெருங்கூட்டத்தாராகிய பிரிவினர், நியாயத்தீர்ப்பு நாளில் வேதனைக்குள்ளாக நேரிடும் என வசனம் கூறுகிறதே! இதை நாம் ஜனங்களிடம் சொல்லவேண்டாமா? கிறிஸ்துவின் பிறப்பு எல்லாருக்கும் நற்செய்திதான். அதனால்தான் ஆதாமின் பாவத்தல் வந்த மரணத்தில் இருக்கவேண்டிய அவர்கள், உயிர்த்தெழுதல் எனும் நன்மையைப் பெறுகிறார்கள். ஆனால் கிடைக்கிற இந்த நன்மையை நல்லவிதமாகப் பயன்படுத்தி, வேதனையிலிருந்து தப்புவது அவரவர் கையில்தான் உள்ளது. எனவேதான் கற்பனைகளின்படி நடக்க முயற்சித்தல் அவசியம் என மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
இதை உதாசீனம் செய்துவிட்டு, கற்பனைகளின்படி நடப்பதில் அலட்சியமாயிருந்தால், நியாயத்தீர்ப்பு நாளில் சகிக்க முடியாத வேதனையை அனுபவிக்க வேண்டிவரும் என வசனம் தெளிவாகக் கூறுகிறது. வசனம் கூறுவதை முழுமையாகச் சொல்லாமல், ஏதோ எல்லாரும் நித்திய ஜீவனை எளிதில் பெற்றுவிடலாம் எனக் கூறுபவர்கள், ஜனங்களின் பாவத்துக்குக் காரணமாகிவிடுவார்கள்; அதாவது இடறல் செய்கிறவர்களாவார்கள். இடறல் செய்கிறவர்களுக்கான பலனை ஏற்கனவே பார்த்தோம். அதை அறிந்து எச்சரிக்கையாயிருப்போம்.
இடறல் செய்பவர்களில் மற்றொரு பிரிவினரும் உண்டு.
இயேசுவின் மீது விசுவாசமிருந்தால் போதும், என்னென்ன பாவம் செய்தாலும் அது மன்னிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும், அல்லது பூமியிலேயே சரிக்கட்டப்பட்டுவிடும் என அவர்கள் கூறுவார்கள். இப்படிக் கூறுபவர்களும் ஒரு வகையில் இடறல் செய்கிறவர்கள்தான். ஏனெனில் கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. செத்த விசுவாசத்தினால் பயன் எதுவுமில்லை.
எனவே எப்படிப் பார்த்தாலும், கிரியை (அதாவது நற்கிரியை செய்தல்) அவசியம் என்பது வேதாகமம் திட்டவட்டமாகக் கூறும் போதனை. இப்போதனையை வலியுறுத்தாத அனைவரும் இடறல் செய்பவர்கள்தான். இவர்கள் அனைவருக்கும் அழுகையும் பற்கடிப்பும் உண்டு என இயேசு சொல்வதை அவர்கள் உணர்வார்களாக.
இன்னுமொரு முக்கியமான கேள்வியும் நம்முன்னே உள்ளது.
சகோ.பெரியன்ஸ் சொல்வதுபோல் சாவாமைக்குள் சென்ற சிறுகூட்டத்தாரைத் தவிர மிச்சமுள்ள அனைவரும் நித்திய ஜீவனைப் பெற்றுவிடுவார்களா? அல்லது நித்திய ஜீவனை இழக்கக் கூடிய சிலர் (அல்லது பலர்) இருப்பார்களா?
சகோ அன்பு எழுதுகிறார்: "தற்போது, “இடறல்களையும்” எனும் வார்த்தையிலுள்ள சந்தேகம் தீர்ந்ததா, சகோ.பெரியன்ஸ் அவர்களே?"
ஏன் இடற்லகளுக்கு ஜீவன் இருப்பதை போல் மொழிப்பெயர்க்க முயற்சிக்கிறீர்கள் சகோ அன்பு அவர்களே! இடற்ல் என்றால் பாவத்தை தூண்டும் ஒரு செயல் ஒரு உயிரற்ற பொருள், ஒரு உணர்வு என்று ஏன் எடுத்துக்கொள்ள முடியாது? pas என்றால் "எல்லாம்" என்று தானே அர்த்தம் அதை ஏன் "இடறல்" என்கிற வார்த்தைக்கு துனையாக சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? அப்படியே அதை நேரடியாக மொழிப்பெயர்தாலும், "All things that cause stumbling" என்று தான் சரியாக இருக்க முடியும். ஆனால் தாங்களோ "All people those who cause stumbling" என்று மொழிபெயர்த்து விளக்கம் தந்திருக்கிறீர்கள். ஏன்?
மேலும், "இருள்" என்கிற வார்த்தை "வெளிச்சத்திற்கு" opposite வார்த்தை கிடையாது. இருள் இருக்கும் இடத்தில் வெளிச்சம் சென்றால் இருள் மாறி விடும். இயேசு கிறிஸ்துவே அந்த ஒளி என்றால் எந்த இருள் தான் இருளாக இருக்க முடியும். மேலும் இந்த வசனம் ஒரு கண்டிஷ்னல் வசனம் அல்ல. இது ஒரு உறுதியான வசனம். அதாவது இருளில் இருப்போர் அந்த ஒளியை நோக்கி போனால் வெளிச்சத்திற்கு வர முடியும் என்கிற படி அல்லாமல், "எந்த ஒரு மனுஷனையும்" பிரகாசிப்பிகிற மெய்யான "ஒளி" என்று தான் வசனம் சொல்லுகிறது. அதற்கு ஏன் அலங்கரிப்பு கொடுத்து இருக்கும் வசனத்தை மாற்ற பிரயாசப்படவேண்டும். இதை தானே காலம காலமாக மனித போதனையில் செய்து வருகிறார்கள். எனக்கு கிடைத்த வெளிப்பாடு, எனக்கு ஆவியானவர் சொன்னது என்னை வழிநடத்துனது என்று ஏன் இப்படி எல்லோரும் "என்னை" என்கிற ஒரு மாயையில் இருக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. கிரியை என்று பார்த்தால் கிறிஸ்துவை தெரிந்தவர்களை காட்டிலும் கிறிஸ்துவை தெரியாதவர்களின் கிரியைகள் பல மடங்கு உச்சிதமாக தான் இருக்கிறது. "இது உங்களால ஆனது அல்ல" என்று வசனம் சொன்னாலும், இல்லை இது என் செயலால் தான் ஆனது என்று சொல்லுவது எப்படி நியாயம்!?
"மல்கியா 3:2 ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்."
புடமிடுவதே ஜொலிக்கவைப்பதற்கும், வண்ணானிடம் கொடுப்பதே வெளுத்து வாங்கவே. அதாவது கற்று கொடுக்கும் நிலை வேண்டும் என்றால் கடினமாக தோன்றலாம், ஆனால் அதன் முடிவு என்னவென்று தான் பார்க்க வேண்டும். புடிமிட்டு ஜொலிக்க செய்வது தானே நோக்கம், வண்ணானிடம் கொடுப்பதும் வெளுத்து வாஙக தானே நோக்கம். இந்த இரு காரியங்களும் யாருக்கென்றால், தன் சுய நீதியில் இன்று பரலோகம் செல்லும் வழியை போதித்து வருபவர்களுக்கு தான். ஒரு வேளை அவரின் வருகையின் போது அதிகமாக "அடம் பிடிப்பவர்களாக" இருப்பார்கள். மேலும் நீதி வாசம் செய்யும் பூமியில் நியாயத்தீர்ப்பு நடக்கும் என்பதால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு "வேதனை" இருக்காது என்றே நான் நினைக்கிறேன். என் வாதத்திற்கு நான் கொடுக்கும் வசனங்கள்:
மேலும் நியாய்த்தீர்ப்பது அவர் வழியில் தான் என்றாலும் அதன் முடிவு "சமுத்திரம் ஜலத்தினால் நிறம்பியிருப்பது போல், தேவனை அறிகிற அறிவால் நிறம்பும்","எல்லா மனுஷர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடைவார்கள்"!
"அல்லது நித்திய ஜீவனை இழக்கக் கூடிய சிலர் (அல்லது பலர்) இருப்பார்களா?"
அப்படி ஒரு நிலை வருமென்றால் இது தேவனின் "தோல்வி"யோ என்று தானே அர்த்தம். இன்று சாத்தான் இந்த பிரபஞ்சத்தை ஆளுகை செய்து அவனின் வல்லமையாலே இத்துனை கோடி ஜனங்களை ஆளுகை செய்யும் போது, சர்வ வல்லமை உள்ள தேவன், அந்த சாத்தானை "கட்டி வைத்து" நீதி வாசமாக இருக்கும் பூமியில் (2 பேது 3:13) அவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் மனிதர்கள் அவரிடம் கற்றுக்கொள்ளாவிட்டால் எப்படி? எப்படி இன்று சாத்தானின் ஜெயம் என்று சொல்லுகிறோமோ, அப்படியே தேவனின் நியாயத்தீர்ப்பின் போது சிலர் (அல்லது பலர்) கற்றுக்கொள்ளாமல் இருந்தால் அது தேவனின் "தோல்வி" என்று தானே அர்த்தமாகிறது. சர்வ வல்லமை உள்ள தேவன் தோற்று போவதாக இல்லை என்பது என் வாதம்.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
bereans wrote: //அழுகை பற்கடிப்பு பற்றி மேலே எழுதிவிட்டேன். வசனத்தின்படி அக்கிரமஞ் செய்கிறவர்களை ஒரு வேளை அக்கினிச் சூளையிலே போட்டாலும் "இடறல்களை" எப்படி போட முடியும்? என்பதை சற்று தியானியுங்கள் சகோ அன்பு அவர்களே!!//
//இடறல் என்றால் பாவத்தை தூண்டும் ஒரு செயல் ஒரு உயிரற்ற பொருள், ஒரு உணர்வு என்று ஏன் எடுத்துக்கொள்ள முடியாது? pas என்றால் "எல்லாம்" என்று தானே அர்த்தம் அதை ஏன் "இடறல்" என்கிற வார்த்தைக்கு துனையாக சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? அப்படியே அதை நேரடியாக மொழிப்பெயர்தாலும், "All things that cause stumbling" என்று தான் சரியாக இருக்க முடியும். ஆனால் தாங்களோ "All people those who cause stumbling" என்று மொழிபெயர்த்து விளக்கம் தந்திருக்கிறீர்கள். ஏன்?//
மத்தேயு 2:3-ல் pas எனும் கிரேக்க வார்த்தை, எருசலேம் நகரத்தாரைக் குறிப்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டித்தான், மத்தேயு 13:41,42-ல் pas எனும் வார்த்தை இடறல் செய்கிற மனிதர்களையும் குறிப்பிடுவதாக தெளிவாகக் குறிக்கப்பிட்டுள்ளேன். இதன் பின்னரும் "இடறல்" எனும் வார்த்தை வெறும் உணர்வை மட்டுமே குறிப்பிடுகிறது என நீங்கள் சொன்னால், நான் என்ன செய்யமுடியும்?
சரி சகோதரரே! “இடறல்” எனும் வார்த்தைக்கு நீங்கள் சொல்கிற அர்த்தத்தையே எடுத்துக்கொள்வோம். அக்கிரமஞ்செய்கிறவர்கள் என்பதன் அர்த்தம் என்னவென்று சொல்லப் போகிறீர்கள்? அதுவும் மனிதரைக் குறிக்காமல் வெறும் “உணர்வைத்தான்” குறிக்கிறது எனச் சொல்லப்போகிறீர்களா?
anbu57 wrote: //"ஆனால் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க என்ன செய்யவேண்டும் எனும் கேள்விக்கு இயேசு சொன்ன பதில், உங்கள் கருத்துக்கு இசைந்ததாக இல்லையே! பின்வரும் வசனங்களைப் படியுங்கள்"//
bereans wrote: //இப்படி இயேசு கிறிஸ்து சொல்லியும் அதை பின் பற்றாமல் போவதினால் தானே நித்திய ஜீவன் கிடைக்கும் முன்பு ஒரு ஆக்கினை உண்டு, அதை தான் வேதம் "நியாயத்தீர்ப்பு நாட்கள்" என்று சொல்லுகிறது. இதை தான் என் முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேனே.//
நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க என்ன செய்யவேண்டும் என இயேசு சொன்னதின்படி நடவாதவர்களுக்கு ஆக்கினை உண்டு என்கிறீர்கள். அவ்வாறெனில் அந்த ஆக்கினைக்குத் தப்புவதற்காகவாவது நாம் ஜனங்களுக்குப் போதிக்க வேண்டாமா?
bereans wrote: //மேலும் நீதி வாசம் செய்யும் பூமியில் நியாயத்தீர்ப்பு நடக்கும் என்பதால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு "வேதனை" இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.//
நியாயத்தீர்ப்பு நடக்கும்போது வேதனை இருக்கும் என ஒத்துக்கொள்கிறீர்கள்; அவ்வாறெனில், அந்த வேதனைக்குத் தப்பும்படி போதிப்பது அவசியம்தானே?
நியாயத்தீர்ப்பு நடக்கும்போது வேதனை இருக்கும் என ஒத்துக்கொண்ட நீங்கள், சங்கீதம் 97:8-ஐச் சுட்டிக்காட்டி நியாயத்தீர்ப்பால் களிகூருதல்தான் உண்டாகும் என்றும் சொல்கிறீர்கள். பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
(நியாயத்தீர்ப்பில் வேதனை இருக்காது என்றால், அதைக் குறித்து சங்கீதக்காரன் ஏன் பயப்படவேண்டும்?)
மாற்கு 6:11 எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேர்ந்ததை அறிவீர்கள் அல்லவா? ஒருவேளை “இடறல்” என்றால் அது வெறும் உணர்வையே குறிக்கும் என்பதைப்போல், பட்டணம் என்றால், அது பட்டணத்தின் கட்டிடங்கள் மற்றும் பொருட்களைத்தான் குறிக்கும் என்பீர்களோ?)
யோவான் 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
(நியாயத்தீர்ப்பில் பெரிய வேதனை இருக்காது என்றால் அதைக் குறித்து ஏன் உலகத்தைக் கண்டிக்கவேண்டும்?)
அப்போஸ்தலர் 24:24,25 சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான். அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
(நியாயத்தீர்ப்பைக் குறித்து பவுல் பேசுகையில், பேலிக்ஸ் ஏன் பயப்படவேண்டும்?)
(கிருபை கிருபை என நீங்களும் சகோ.ஆத்துமாவும் ஓயாமல் சொல்கிறீர்களே, இரக்கஞ்செய்யாதவனுக்கு ஏன் அந்த கிருபை இல்லை? அவனுக்கு ஏன் இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு? இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்குத் தப்பவேண்டுமெனில், இரக்கஞ்செய்யுங்கள் என போதிக்கக்கூடாதா?)
அன்பான சகோதரரே! நியாயத்தீர்ப்பின் போது, அது நீதிமான்களுக்கு மட்டுமே களிகூருதலாக இருக்கும். அதைத்தான் சங்கீதம் 97:8 கூறுகிறது. துன்மார்க்கரைப் பொறுத்தவரை, நியாயத்தீர்ப்பு அவர்களுக்கு வேதனையாகத்தான் இருக்கும். அந்த வேதனை, தற்போது இவ்வுலகில் கற்பனைகளின்படி நடப்பதால் அனுபவிக்கக்கூடிய வேதனையைவிட நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். அதனால் கற்பனைகளின் நடக்கும்படி வேதாகமம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வுலகில் நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்கு மறுமையில் பரலோக ராஜ்ய பாக்கியம் கிடைக்கும் (மத்தேயு 5:11). இவ்வுலகில் நீதியினிமித்தம் துன்பப்பட மறுக்கிறவர்களுக்கு மறுமையில் பரலோக ராஜ்ய பாக்கியம் கிடைக்காது; எனவே அது வேதனையாகத்தான் இருக்கும்.
நித்திய ஜீவனை சுதந்தரித்தல் பற்றிய பல வசனங்களும் எனது கருத்துக்களும் பின்வரும் தொடுப்பில் பதியப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பயன்பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்.
bereans wrote: //"தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்ப்டாதிருங்கள், இதோ எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" லூக். 2:10. தேவன் ஆதி 3:15ல் தந்த அந்த வாக்குறுதி இங்கு நிறைவேருகிறது. வசனத்தை கவனித்தோமென்றால், இந்த நற்செய்தி, இதைக்கேட்டு கீழ்ப்படிவோருக்கு மாத்திரம் இல்லை, மாறாக "எல்லா ஜனத்துக்கும்" என்கிறான் தேவதூதன். என்ன ஒரு நற்செய்தி.
எல்லா ஜனத்துக்கும் என்றால் எல்லோருக்கும்தான்; ஆதாம் தொடங்கி, உலகம் முடிவு பரியந்தம் வரயிருக்கும் ஒவ்வொரு ஜனத்திற்கும் இது நற்செய்தி தான்; சிலர் இதை கேட்க கொடுத்து வைத்திருக்கிறார்கள், அநேகர் இதை கேட்காமலையே மரித்துப்போனார்கள், மரித்துப்போகிறார்கள், மரித்துப் போவார்கள், அதினால் தேவன் தன் வக்குத்தத்த நற்செய்தியை மாற்றிக்கொள்வாரோ!!
இன்று எப்படியும் பரலோகம் போய்விடுவோம் என்று பிரசங்கித்துக்கொண்டு இருக்கும் ஒரு பெரும் கூட்டம் இந்த பூமியில் வரும்போது வசனம் சொல்லும் "பற்கடிப்பும், அழுகையும்:" நிச்சயம் உண்டாகும். இதை உறுதிப்படுத்தும் வசனம்தான், "என்னை விட்டு அகன்று போங்கள், அக்கிரம செய்கைக்காரர்களே".
அழுகை பற்கடிப்பு பற்றி மேலே எழுதிவிட்டேன். வசனத்தின்படி அக்கிரமஞ் செய்கிறவர்களை ஒரு வேளை அக்கினிச் சூளையிலே போட்டாலும் "இடறல்களை" எப்படி போட முடியும்? என்பதை சற்று தியானியுங்கள் சகோ அன்பு அவர்களே!!
இன்னும் தொடருவேன்......//
எல்லா ஜனத்துக்கும் நற்செய்தி எனக் கூறிய சகோ.பெரியன்ஸ் அவர்கள், அக்கிரமஞ்செய்த சிலருக்கு அழுகையும் பற்கடிப்பும் நிச்சயம் உண்டாகும் என்றும் சொல்கிறார். இயேசுவின் பிறப்பு எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி எனச் சொல்லிவிட்டு, அக்கிரமஞ்செய்த சிலர் மட்டும் அழுகையிலும் பற்கடிப்பிலும் இருப்பார்கள் என்று சொல்வது ஒன்றுக்கொன்று முரணான கூற்றாக உள்ளது. இந்த முரண்பாடு ஏன் எனும் கேள்விக்கு சகோ.பெரியன்ஸ் பதில்கூறவேண்டும்.
மகன் சரிவர கீழ்ப்படிதலை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், தகப்பனுக்கு சில சமயத்தில் பிரம்பு எடுக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் அதுவே நிரந்திர்ரம் அல்ல, மகன் கீழ்படிதலை ஒரு வயது வந்தவுடன் தெரிந்துக்கொள்ளும் போது அதன் பின் பிறம்புக்கு வேலை இல்லை. அப்படியே தான். அழுகையும் பற்கடிப்பும் ஒரு குறிப்பிட்ட காலம் தான், அது நிரந்திரமானதாக இல்லை. ஏனென்றால் எல்லாரும் தேவனை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும், அது நடக்கும் காலம் இது அல்ல, அது "ராஜியத்தில்" தான் நடக்கும். இந்த ராஜியத்தை குறித்து தான் அப்போஸ்தலர் "தேவனுடைய இராஜியத்தை பிரசங்கித்தார்கள்" என்று வேதத்தில் (அப். 28:31) உள்ளது. இந்த இராஜியத்தின் சுவிசேஷம் இன்று எந்த சபையில் பிரசிங்க்கப்படுகிறது!? எதிலும் இல்லை!!
இந்த ராஜியத்தை குறித்து தான் ஏசாயா தீர்க்கதரிசி 35ம் அதிகாரத்தில் எழுதுகிறார். அந்த இராஜியத்தில் என்ன நடக்கும் என்பதை. இதை தான் எல்லா தீர்க்கதரிசிகளும் "இளைப்பாறுதலின் காலங்கள்" என்று சொல்லி வந்தார்கள் என்கிறது வேதம் (அப். 3:19).தேவனின் இராஜியம் "இந்த பொல்லாத பிரபஞ்சம்" (கலா 1:4) அல்ல, மாறாக நீதி வாசமாக போகும் பூமி (2 பேது 3:13). இந்த பூமியில் தான் "சில பலருக்கு பற்கடிப்பும், அழுகையும்" (இது நித்திய தண்டனை என்று பலர் போதித்தாலும் ஆதாரமற்ற போதனை) உண்டாகும், ஆனால் இறுதியில் யாவரும் நீதியை (தேவனை அறிகிற அறிவும், அவரின் அன்பை அறிவதுமே நீதி; பலர் நீதி என்றவுடன், தேவன் பயங்கரமான கோபக்காரர், அவர் பல்லுக்கு பல், கண்ணுக்கு கண்ணு எடுப்பவர் போல் நினைத்துக்கொண்டு போதித்து வந்தாலும், உண்மை அப்படி அல்ல, அவருக்கு தெரியும் நாம் மண் என்று) கற்று தேவனின் இராஜியத்தில் என்றென்றும் இருப்பார்கள், இந்த பூமி அதற்காக தான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17