நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷம், ராஜியத்தின் சுவிசேஷம் என்பது எது?


Militant

Status: Offline
Posts: 830
Date:
சுவிசேஷம், ராஜியத்தின் சுவிசேஷம் என்பது எது?
Permalink  
 


bereans wrote:
//மகன் சரிவர கீழ்ப்படிதலை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், தகப்பனுக்கு சில சமயத்தில் பிரம்பு எடுக்க வேண்டியதாக இருக்கும்.//

உதாரணமெல்லாம் சரிதான் சகோதரரே! ஆனால், மகனைப் பார்த்து “என்னைவிட்டு அகன்று போ” எனச் சொல்லிவிட்டு, அவனைப் பிரம்பால் கண்டிக்க முடியுமா?

அந்த அக்கிரமச்செய்கைக்காரரைப் பார்த்து, அன்பான இயேசு, “என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்றல்லவா கூறுவார்? இயேசுவின் 1000 வருட ராஜ்யத்தில், அவர்கள் இயேசுவை விட்டு எங்கே அகன்று போவார்கள்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
RE: சுவிசேஷம், ராஜியத்தின் சுவிசேஷம் என்பது எத
Permalink  
 


அது ஏன் அப்படி சொல்லுகிறார் என்றால், "கிரியைக‌ள் செய்த‌வ‌ர்க‌ள், அங்கேயும் வ‌ந்து த‌ங்க‌ளின் கிரியைக‌ளையே மேன்மை பாராட்டுவார்க‌ள்" அத‌ற்கு தான் இயேசு கிறிஸ்து அப்ப‌டி சொல்லுகிற‌ர். "அக்கிர‌ம‌செய்கைக்கார‌ர்க‌ளே" என்றால் ஏதோ கொடுமை செய்த‌வ‌ர்க‌ள் என்று மாத்திர‌ம் அர்த்த‌ம் இல்லை, மாறாக‌ கிர‌ம‌ம் இல்லாம‌ல் (Not on an orderly way, எந்த நேரத்தில் எதை செய்வது என்று தெரியாமல் செய்துக்கொண்டவர்களின் கூட்டம் தான் இந்த அக்கிரமசெய்கைக்காரர்கள்) செய்த‌தை கூட‌ இந்த‌ வார்த்தை குறிக்கும். "கிரியை" செய்த‌வ‌ர்க‌ள் ராஜிய‌த்தில் வ‌ந்தும் "நாங்க‌ள் பேய்க‌ளை ஓட்டினோம்" பிசாசுக‌ளை துற‌த்தினோம், வியாதிய‌ஸ்த‌ர்க‌ளை குண‌ப்ப‌டுத்தினோம். என்று தாங்க‌ள் ந‌ட‌ப்பித்த‌ கிரியைக‌ளை தான் காண்பிப்பார்க‌ள். ஆக‌வே தான் அவ‌ர்க‌ள் உண்மை என்ன‌ வென்று க‌ற்றுக்கொள்ள‌ அப்ப‌டி ஒரு சிறிய த‌ண்ட‌னை அவ‌ர்க‌ளுக்கு.

என்னை விட்டு அக‌ன்று போங்க‌ள் என்ப‌து, பிர‌ம்பை எடுத்த‌ த‌க‌ப்ப‌ன், என் க‌ண் முன்னால் நிக்காதே என்று சொல்லுவ‌து போல் மாத்திர‌மே, அத‌ற்காக‌ த‌ன் ம‌க‌னை கொன்று விட‌ மாட்டார் ஒரு த‌ந்தை, அப்ப‌டியே, ஊயிர்த்தெழுந்த‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு "நித்திய‌ பிதாவாக‌" இருக்க‌ போகிற‌ இயேசு கிறிஸ்து, இவ‌ர்க‌ளை பார்த்து "என்னை விட்டு அக‌ன்று என்றென்றும் எரியும் அக்கினிக்குள் போய் விழுங்க‌ள்" என்று சொல்லுவ‌தில்லை அப்ப‌டி சொல்ல‌வும் இல்லை. அக‌ன்று போங்க‌ள் என்ப‌து அவ‌ர்க‌ளும் த‌ங்க‌ளின் கிரியைக‌ளை ந‌ம்புவ‌தை விட்டு விட்டு, அவ‌ரின் கிருபையை ந‌ம்பும் ப‌டியாக‌ நீதியை க‌ற்றுக்கொள்ள‌வே அனுப்புகிறார். ஆனால் இது எல்லாம் உங்க‌ளுக்கு கேளியாக‌ தான் இருக்கும்.



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:
//அது ஏன் அப்படிச் சொல்லுகிறார் என்றால், "கிரியைக‌ள் செய்த‌வ‌ர்க‌ள், அங்கேயும் வ‌ந்து த‌ங்க‌ளின் கிரியைக‌ளையே மேன்மை பாராட்டுவார்க‌ள்" அத‌ற்குத் தான் இயேசு கிறிஸ்து அப்ப‌டிச் சொல்லுகிறார். "அக்கிர‌ம‌செய்கைக்கார‌ர்க‌ளே" என்றால் ஏதோ கொடுமை செய்த‌வ‌ர்க‌ள் என்று மாத்திர‌ம் அர்த்த‌ம் இல்லை, மாறாக‌ கிர‌ம‌ம் இல்லாம‌ல் (Not on an orderly way, எந்த நேரத்தில் எதை செய்வது என்று தெரியாமல் செய்துகொண்டவர்களின் கூட்டம்தான் இந்த அக்கிரமசெய்கைக்காரர்கள்) செய்த‌தைக்கூட‌ இந்த‌ வார்த்தை குறிக்கும். "கிரியை" செய்த‌வ‌ர்க‌ள் ராஜிய‌த்தில் வ‌ந்தும் "நாங்க‌ள் பேய்க‌ளை ஓட்டினோம்" பிசாசுக‌ளை துரத்தினோம், வியாதிய‌ஸ்த‌ர்க‌ளைக் குண‌ப்ப‌டுத்தினோம் என்று தாங்க‌ள் ந‌ட‌ப்பித்த‌ கிரியைக‌ளைத்தான் காண்பிப்பார்க‌ள். ஆக‌வேதான் அவ‌ர்க‌ள் உண்மை என்ன‌வென்று க‌ற்றுக்கொள்ள‌ அப்ப‌டி ஒரு சிறிய த‌ண்ட‌னை அவ‌ர்க‌ளுக்கு.//

சகோ.பெரியன்ஸ் அவர்களே! தங்களின் ஒரு கோட்பாட்டை நிலைநிறுத்தவதற்காக வசனங்களின் இயல்பான கருத்தை விட்டுவிட்டு, உங்கள் கோட்பாட்டிற்கு இசைவான கருத்தைக் கூறுகிறீர்கள்.

மத்தேயு 7:22,23 வசனங்களின் கருத்து மிகவும் இயல்பானது, நேரடியானது. அவற்றில் கூறப்பட்டுள்ள அக்கிரமச்செய்கைக்காரர் அனைவரும், இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் பெரும் தேவஊழியர்களாகக் கருதப்பட்டவர்கள் என்பது ஒரு தெளிவான கருத்து. இந்நாட்களில் தீர்க்கதரிசனம் சொல்வோரையும், பிசாசுகளைத் துரத்துவோரையும், அற்புதம் செய்வோரையும்தான் பெரிய தேவஊழியர்கள் என கிறிஸ்தவ சமுதாயம் கருதுவதை நாம் நன்கறிவோம். ஆனால், இவ்விதமான செயல்களைச் செய்தோரில் அநேகரைத்தான் அக்கிரமச்செய்கைக்காரர் என்று சொல்லி அவர்களை அகன்றுபோகும்படி இயேசு சொல்வார்.

மாத்திரமல்ல, தொடர்ந்து 24-27 வசனங்களைப் படித்துப் பார்த்தால்: “தமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் சொல்வதோ, பிசாசுகளைத் துரத்துவதோ, அற்புதம் செய்வதோ முக்கியமல்ல; தமது வார்த்தைகளின்படி நடப்பதுதான் முக்கியம்; அவ்வாறு நடக்கவில்லையெனில் மணலில் கட்டின வீடு அழிந்துபோவதைப்போல் அவர்களும் அழியத்தான் வேண்டும்” என்றே இயேசு கூறுகிறார் என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஆக, கிரியைதான் அங்கு முக்கியப்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறியவேண்டும்.

அந்த “பெரும் தேவஊழியர்கள்”, தீர்க்கதரிசனம் உரைத்ததையும், பிசாசைத் துரத்தினதையும், அற்புதம் செய்ததையும் சொல்லிக் காட்டுவது தங்கள் கிரியைகளை மேன்மைபாராட்ட அல்ல; "இயேசுவின் நாமத்தினால்தானே அவற்றையெல்லாம் செய்தோம், அவ்வாறெனில் நாங்களெல்லாம் மெய்யான தேவஊழியர்கள்தானே, எங்களை ஏன் அழிவுக்கு நியமிக்கவேண்டும்" என்பதே அவர்களின் கேள்வி. அக்கேள்விக்கு பதில், 21-ம் வசனத்திலேயே கூறப்பட்டுவிட்டது.

21-27 வசனங்களை ஒன்றோடொன்று தொடர்புப்படுத்தி நிதானமாக சிந்தித்துப்பார்த்தால், “தீர்க்கதரிசனம் சொல்வதோ, பிசாசைத் துரத்துவதோ, அற்புதம் செய்வதோ முக்கியமல்ல, இயேசுவின் வார்த்தைகளின்படி நடப்பதுதான் முக்கியம், அதுவே பிதாவின் சித்தம்” என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவ்வசனங்களை சற்று நிதானமாகப் படித்துப் பாருங்கள்.

மத்தேயு 7:21-23  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 24 ஆகையால் ...

26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.

ஆக, இயேசுவின் நாமத்தினால் பெரிய பெரிய செயல்களைச் செய்து ஊழியம் செய்வோராக இருந்தாலும், அவர்கள் இயேசுவின் வார்த்தைகளின்படி நடவாவிடில் (அதாவது கிரியைகள் இல்லாவிடில்) அவர்களும் அக்கிரமச்செய்கைக்காரர்களாகத்தான் கருதப்படுவார்கள் என்பதையே மத்தேயு 7:21-27 வசனங்களில் இயேசு தெளிவாகக் கூறுகிறார்.

இயல்பான இக்கருத்தைப் புரிந்துகொள்ளாமல், கிரியைகளினிமித்தம் அவர்கள் தங்களை மேன்மை பாராட்டுவார்கள் என்றும், கிரமம் இல்லாத செயல்களை அவர்கள் செய்ததால்தான் அக்கிரமச்செய்கைக்காரர் எனக் கருதப்படுவார்கள் என்றும் கூறுகிறீர்கள்.

தீர்க்கதரிசனம் உரைப்பதையும் பிசாசைத் துரத்துவதையும் அற்புதம் செய்வதையும் அக்கிரமங்கள் எனக் கூறமுடியாது. ஆனால், இயேசுவின் வார்த்தைகளின்படி நடவாமல் வெறுமனே தீர்க்கதரிசனம் உரைத்து பிசாசைத் துரத்தி அற்புதம் செய்வதுதான் அக்கிரமமாகிறது.

வேதாகம அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசனம் உரைத்து, பிசாசுகளைத் துரத்தி, அற்புதங்களைச் செய்யத்தான் செய்தனர். ஆனால் அத்தோடுகூட, இயேசு சொன்னபடி, தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதைக் குறித்தும் பிரசங்கத்தினர்; தாங்களும் தங்கள் வாழ்வில் அதைக் கடைப்பிடித்தனர்.

ஆனால் இன்றைய ஊழியர்களோ, தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் அதிகமாகப் போதிப்பதுமில்லை; தங்கள் வாழ்வில் அவற்றைக் கடைப்பிடிப்பதும் இல்லை. இப்பூமியின் வசதிகளைக் குறித்தே ஓயாமல் சொல்வதோடு தாங்களும் அவற்றைத்தான் நாடிக்கொண்டிருக்கின்றனர். சுருக்கமாகச் சொல்லப்போனால், பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் எனப் பவுல் கூறியபடி நடவாமலும் போதிக்காமலும் இருந்து (கொலோசெயர் 3:2), பூமிக்குரிய காரியங்களையே பெரிதுபடுத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் எண்ணமெல்லாம், தீர்க்கதைசனம் உரைத்து, பிசாசுகளைத் துரத்தி, அற்புதம் செய்தாலே தங்களை பெரிய ஊழியர்களாகக் காட்டிவிடும் என்பதே.

ஆனால் தேவனின் பார்வையில் அது முக்கியமல்ல என்பதால்தான், அம்மாதிரி ஊழியர்களை “அக்கிரமச்செய்கைக்காரர்” என இயேசு அழைப்பார்.

இயேசுவின் இத்தீர்க்கதரிசன அறிவிப்பு, இன்றைய பொய்யான ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அவர்களைப் பின்பற்றிச் செல்கிற விசுவாசிகளுக்கும் மாபெரும் எச்சரிக்கையாக உள்ளது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
சுவிசேஷம், ராஜியத்தின் சுவிசேஷம் என்பது எது?
Permalink  
 


கிரியை தேவையில்லை, கிருபை போதும் எனக் கூறுபவர்கள் ஒருசில எளிதான கிரியைகளை மட்டும் தவறாமல் செய்து, தாங்கள்தான் இயேசு சொன்னதை சரியாகச் செய்துவருவதாக பெருமிதத்தோடு கூறிவருகின்றனர். அவர்கள் மிகுந்த அக்கறையோடு செய்துவரும் அக்கிரியைகள் எவை?

இராப்போஜனம் ஆசரித்தல் மற்றும் ஞானஸ்நானம் பெறுதல் ஆகியவைகளே.

இராப்போஜனம் ஆசரித்தல் மற்றும் ஞானஸ்நானம் பெறுதல் பற்றி வேதாகமம் போதித்துள்ளது மெய்தான். ஆனால் எளிதான இவை மட்டும்தான் நமக்கான போதனை, மற்றவையெல்லாம் மணவாட்டி சபைக்கான போதனை, அவற்றை நாம் கைக்கொள்ளாவிட்டாலும் நித்திய ஜீவனைப் பெற்றுவிடுவோம் எனக் கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

கிரியை இல்லாவிட்டாலும் நித்திய ஜீவனைப் பெற்றுவிடுவோம் எனக் கூறுபவர்கள், எளிதான கிரியைகளாகிய இராப்போஜனம் மற்றும் ஞானஸ்நானத்தை மட்டும் முக்கியப்படுத்துவது ஏனோ?

எளிதான போதனைகளை மட்டும் சொல்லிவிட்டு, தங்கள் போதனையைக்கேட்டு இத்தனை பேர் ஞானஸ்நானம் எடுத்துள்ளனர், இத்தனை பேர் இராப்போஜனத்தை ஆசரித்துள்ளனர் எனப் பெருமிதத்தோடு கூறுவதில் என்ன இருக்கிறது? இப்படியெல்லாம் பலர் சொல்வார்கள், அவர்கள் சொல்கிறபடி பலர் நடப்பார்கள் என்பதால்தான் பவுல் பின்வருமாறு கூறுகிறார் போலும்.

2 தீமோத்தேயு 4:2-4 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பண்ணு எனப் பவுல் சொல்கிறார்; ஆனால் இன்றைய பல போதகர்களோ, இராப்போஜனத்தையும் ஞானஸ்நானத்தையும் போதிப்பதோடு திருவசனத்தைப் போதித்தல் முடிந்துவிடுகிறது என்கிற வண்ணமாய் அவற்றை மட்டும் போதிக்கின்றனர். ஜனங்களும் இவ்வித எளிதான போதனைகளைத்தான் விரும்புகின்றனர். எனவே இப்படிப்பட்ட போதகர்களைப் பின்பற்றிக் கொண்டு அவர்கள் கூறுகிற கட்டுக்கதைகளுக்கு செவிசாய்த்து வருகின்றனர்.

ஒருசில போதகர்கள்: இயேசுவை விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்து இராப்போஜனம் ஆசரித்தால் போதும், பரலோகம் சென்றுவிடலாம் என்கின்றனர்.

மற்றும் சில போதகர்கள்: உலகில் அனைவரும் நித்திய ஜீவனைப் பெற்று விடுவார்கள்; எனவே கிரியைகளை வலியுறுத்தி போதிக்க வேண்டியதில்லை; ஆகிலும் இயேசுவை விசுவாசிப்பவர்கள் ஞானஸ்நானம் பெற்று இராப்போஜனம் ஆசரித்தால் மட்டும் போதும் என்கின்றனர்.

விசுவாசிகளாகிய நாம் அவர்களின் இம்மாதிரி போதனைகளால் வஞ்சிக்கப்படாதபடி ஜாக்கிரதையாயிருப்போம். கிரியைகள் நிச்சயம் தேவை என ஏராளமான வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் குறிப்பாக பின்வரும் வசனத்தைப் படிப்போம்.

1 பேதுரு 1:17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.

ஆம், நம் தேவன் பட்சபாதமில்லாமல், அவனவன் கிரியைகளின்படிதான் நம்மை நியாயந்தீர்க்கப்போகிறார் எனப் பேதுரு தெளிவாகக் கூறுகிறார். மாத்திரமல்ல, இப்படியாக நம் தேவன் இருப்பதால் இவ்வுலக நாட்களில் நாம் அவருக்குப் பயந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார். அவரது எச்சரிப்பைப் புரிந்துகொண்டு, கிரியைகளைச் செய்வதற்கு ஜாக்கிரதையாயிருப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard