எண்ணாகமம் 12:3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
பழைய ஏற்பாட்டின் நல்விசுவாசிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விசேஷித்த முக்கியத்துவம் உண்டு. ஆயினும் அவர்கள் எல்லாரிலும் மிகமிக விசேஷித்தவர் யார் எனக் கேட்டால், மோசேயைத்தான் நான் சொல்லுவேன். இதற்கு பல காரணங்கள் உண்டு.
3. பெரும் ஜனக்கூட்டத்தை 40 வருஷமாக வனாந்தரத்தில் வழிநடத்தியதன் மூலம் தேவனுக்குப் பணி செய்தவர்.
4. தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்த இஸ்ரவேலரை மன்னிக்க தேவன் சித்தங்கொள்ளவில்லையெனில், தனது பெயரும் தேவனுடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தவர் (யாத்திராகமம் 32:32)
5. இஸ்ரவேலரின் பாவம் மன்னிக்கப்படுவதற்காகவும் தேவனிடமிருந்து கற்பனைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் 3 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 40 நாட்கள் இரவும் பகலும் அப்பம் புசியாமல் தண்ணீர் குடியாமல் இருந்தவர் (உபாகமம் 9:9,18,25) (இந்நாட்களில், மாணவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறவும், படித்து முடித்தபின் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கவும், வேலை கிடைத்தபின் நல்ல அந்தஸ்தும் பணவசதியுமுள்ள வரன் அமையவும், வியாபாரிகளின் வியாபாரம் ஓகோவென்று பெருகவும் இப்படி பல உலக காரியங்களுக்காக உபவாசமிருக்கும் ஊழியர்கள், மோசேயின் ஊழிய பாரத்தை சற்றாகிலும் சிந்திப்பார்களாக)
மோசேயைக் குறித்தும் அவரது ஊழியத்தைக் குறித்தும் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள ஏதுவாக மோசேயின் வாழ்வில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க சம்பவங்களை இத்திரியில் நாம் தியானிப்போம்.