நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Why God didn't create all people as good?


Militant

Status: Offline
Posts: 830
Date:
Why God didn't create all people as good?
Permalink  
 


The question raised by Bro.Padmmanaban in another thread has been shifted to this thread by the Moderator. Forum members are requested to answer his question. - Moderator

EVERYTHING IS POSSIBLE FOR GOD.
THEN HE CAN CREATE ALL PEOPLE AS GOOD.
WHY THIS IS NOT DONE SO?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.பத்மநாபன் அவர்களே!

தாங்கள் எழுப்பியுள்ள கேள்வி அநேகர் மனதில் எழுவதுண்டு.

தேவனால் எல்லாம் கூடும் எனும் உங்கள் கூற்று 100-க்கு 100 மெய்யானதே. ஆனால், தம்மால் செய்யமுடிகிற அனைத்து செயல்களையும் தேவன் செய்துதான் ஆக வேண்டுமென்பதில்லை.

அவரது சித்தப்படி, ஒரு காரணத்தோடுதான் ஒவ்வொரு செயலையும் அவர் செய்வார்.

உண்மையில் தேவன் மனிதனை நல்லவனாகத்தான் படைத்தார்.

பிரசங்கி 7:29 இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்.

தேவனால் செம்மையானவனாகப் படைக்கப்பட்ட மனிதன், தீயவனாக மாற தேவன் ஏன் அனுமதித்தார் எனும் கேள்வி தற்போது எழுகிறது.

தள அன்பர்கள் இக்கேள்விக்கு பதில் தரும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

Welcome br Padmanabhan,

But what made you think that God did not create his people Good. It is the extreme love of God towards human beings that he made us in "His image and likeness".

Gen 1:26 "Then God said, "Let us make man in our image, in our likeness,".

Do you find even a pinch of wrong in a new born baby? How come then you claim that God does not make good people?

Kindly reconsider your decision br.

Regards.



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

Bereans wrote:

 
Do you find even a pinch of wrong in a new born baby? How come then you claim that God does not make good people?

Kindly reconsider your decision br.

 


என்ன சகோதரரே புதியதாக பிறக்கும் குழந்தைகள் எல்லாமே எந்த குறையும் இல்லாமலா உலகில்  பிறக்கிறது?     
 
கண்ணில்லாமல் /காலில்லாமல்/ தலை ஒட்டிய நிலையில்/ மன நிலை சரியில்லாமல் காது கேளாமல்  இன்னும் எத்தெத்தனையோ குறைகளுடன்  குழந்தைகள் இன்றும் என்றும் உலகில்  பிறந்துகொண்டுதான் இருக்கின்றன. இதெல்லாம் உங்களுக்கு குறையாக தெரியவில்லையா?
 
மிகுந்த அன்பான தேவன் இவைகளை எல்லாம் ஏன் அனுமதிக்கிறார். தன்னைப்போல சாயலில் படைத்தால் மட்டும் போதுமா? தன்னைப்போல எந்த குறையும் இல்லாமல் படைப்பதல்லவா சிறந்தது!
 
மன நிலைகளை வைத்து மட்டும் சொல்லாதீர்கள் உடல் நிலைகளையும் கருத்தில் கொள்ளுங்கள் அதுவும்  இறைவனின் படைப்புதானே!   
 
சகோ. பத்மநாபன் அவர்கள் கேள்வியில் ஆதங்கம்  இருக்கிறது சரியான பதிலை தாருங்கள்.   

 



__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

ச‌கோ சுந்த‌ர் கேட்ட‌ கேள்வி:
"என்ன சகோதரரே புதியதாக பிறக்கும் குழந்தைகள் எல்லாமே எந்த குறையும் இல்லாமலா உலகில்  பிறக்கிறது?    

கண்ணில்லாமல் /காலில்லாமல்/ தலை ஒட்டிய நிலையில்/ மன நிலை சரியில்லாமல் காது கேளாமல்  இன்னும் எத்தெத்தனையோ குறைகளுடன்  குழந்தைகள் இன்றும் என்றும் உலகில்  பிறந்துகொண்டுதான் இருக்கின்றன. இதெல்லாம் உங்களுக்கு குறையாக தெரியவில்லையா?"

ஒன்று நான் கேள்வியை தப்பாக புரிந்திருக்கவேண்டும் அல்லது தாங்கள் தவறாக புரிந்திருக்கவேண்டும். சகோ பத்மநாபன் அவர்கள் கேட்டது ஏன் மனிதர்களை ஊனத்தோடு தேவன் படைத்தார் என்று இல்லை, மாறாக‌ ஏன் எல்லா மனிதர்களையும் நல்லவர்களாக உண்டாக்கவில்லை என்பதே அவரின் கேள்வி.

ச‌கோ சுந்த‌ரின் கேள்வி:
"மிகுந்த அன்பான தேவன் இவைகளை எல்லாம் ஏன் அனுமதிக்கிறார். தன்னைப்போல சாயலில் படைத்தால் மட்டும் போதுமா? தன்னைப்போல எந்த குறையும் இல்லாமல் படைப்பதல்லவா சிறந்தது!"

தேவ‌னின் ம‌கிமையை புரிந்துகொள்ள‌ தேவ‌ன் அவ‌ர்க‌ளை ந‌ம‌க்கு ஒருவேளை சாட்சிக‌ளாக‌ வைத்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். ந‌ன்மையை ப‌டைத்த‌ தேவ‌ன் தீமையையும் ப‌டைத்திருக்கிறார் என்றால் அத‌ற்கு கார‌ண‌ம் இருக்கிற‌து. அது வேத‌த்திலே இருக்கிற‌து, அதை ஆராய்ந்து பார்த்தால் தான் முடியும்.

தேவனின் அன்பை நாம் வெளிப்புறமாக புரிந்துகொள்ள முடியாது சகோ பத்ம‌நாப‌ன் அவ‌ர்க‌ளே! தேவ‌ன் த‌ன் அன்பில் எல்லாருக்கும் திட்ட‌ம் வைத்திருக்கிறார், அதின் நீங்க‌ளும் நானும் இருக்கிறோம். அது நன்மையாகவே முடியும். இன்று ந‌ம் க‌ண்க‌ளுக்கு காணும் தீமை எல்லாம் ச‌டுதியில் மாறும் கால‌ம் வ‌ருகிற‌து (ஏசா. 35ம் அதிகார‌ம்) அது வ‌ரையில் பொறுத்திருப்போம்.

(கருத்தின் ஒரு பகுதி நீக்கப்பட்டது - Moderator)



-- Edited by anbu57 on Tuesday 16th of February 2010 08:06:42 PM

__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//என்ன சகோதரரே புதியதாக பிறக்கும் குழந்தைகள் எல்லாமே எந்த குறையும் இல்லாமலா உலகில் பிறக்கிறது?

கண்ணில்லாமல் /காலில்லாமல்/ தலை ஒட்டிய நிலையில்/ மன நிலை சரியில்லாமல் காது கேளாமல் இன்னும் எத்தெத்தனையோ குறைகளுடன் குழந்தைகள் இன்றும் என்றும் உலகில் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன. இதெல்லாம் உங்களுக்கு குறையாக தெரியவில்லையா?//


சகோ.சுந்தர் அவர்களே! மனிதனை நல்லவனாக படைப்பதைப் பற்றிதான் சகோ.பத்மநாபன் கேள்வி எழுப்பியுள்ளார்; அதன்படியே சகோ.பெரியன்ஸ் பதில் தந்துள்ளார்.

மனிதன் உடல் ரீதியான குறையுடன் பிறப்பது பற்றி சகோ.பத்மநாபன் கேள்வியெழுப்பவில்லை. அது சம்பந்தமான நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவேண்டுமெனில் வேறொரு திரி துவங்கி, அதில் பகிர்ந்துகொள்வோம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.பத்மநாபன் அவர்களின் கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாமல் இருப்பதால், நான் அறிந்த பதிலைத்தர ஆசிக்கிறேன்.

ஆதிமனிதனான ஆதாம் பாவ சுபாமின்றி தேவ சாயலில் படைக்கப்பட்டார். ஆயினும் சாத்தானின் வஞ்சகத்திற்கு ஆதாம் பலியானதால், அவர் பாவம் செய்ததோடு அவரது சந்ததியினரான நம்மிடமும் பாவம் தொடர்வதற்கு அவர் காரணமானார்.

ஆதாமை ஏன் பாவம் செய்யக்கூடியவராக தேவன் படைத்தார்? சாத்தானின் வஞ்சகத்தில் விழாதபடிக்கு தேவன் அவனைப் படைத்திருக்கலாமே எனும் கேள்வி தற்போது எழுகிறது.

இக்கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

ஆதியில் தேவன் மனிதனைப் படைத்தபோது அவனுக்குக் கொடுத்த ஜீவன், நித்திய ஜீவனாகவும் இருக்கவில்லை, சாகக்கூடிய ஜீவனாகவும் இருக்கவில்லை.

அதாவது அவன் ஜீவன் நிரந்தரமானது என்ற உத்தரவாதமும் இருக்கவில்லை, சாகத்தான் வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருக்கவில்லை.

அந்நிலையில் இருந்த மனிதன், நிரந்தரமான ஜீவனைப் பெற்று நித்தியமாக வாழவேண்டும் என்பது தேவனின் சித்தமாக இருந்தது. நித்திய ஜீவன் என்பது மனிதனுக்குக் கிடைக்கிற பெரும் பாக்கியம்.

கண்டிப்பாக ஒரு நாளில் சாகத்தான் வேண்டும் என்ற நிலையிலுள்ள தற்போதைய ஜீவனைக் காப்பதற்கு நாம் எவ்வளவாய் போராடுகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. என்றோ ஒரு நாள் நிச்சயமாக சாவோம் என்பதை அறிந்திருந்தாலும், சாகாமல் வாழ்வதற்கு நாம் அதிகபட்ச முயற்சி எடுக்கிறோம். அதாவது, இவ்வுலகில் என்றென்றும் சாகாமல் ஜீவிக்கவேண்டும் என்பதே நம் விருப்பமாயுள்ளது.

இவ்வுலக வாழ்வில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும், எப்படியாவது வாழவேண்டும் என்பதே நம்மில் அனேகரின் விருப்பமாயுள்ளது. ஒருவேளை நம்மில் சிலர் ஏதோ சில நெருக்கடிகளினிமித்தம் வாழ்வை முடித்துக்கொள்ள முன்வந்தாலும், அந்த நெருக்கடிகள் இல்லையெனில் இவ்வுலகில் வாழவேண்டும் என்றுதான் அவர்களும் விரும்புவார்கள். வயதானவர்கள்கூட தங்கள் இயலாமை மற்றும் பலகீனங்களின் காரணமாகத்தான் உலகவாழ்வு போதும் என்ற முடிவுக்கு வருகின்றனரேயன்றி, முழு மனதுடன் உலகவாழ்வு வேண்டாம் என யாரும் நினைப்பதில்லை.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், அதிகபட்சம் நூறு வயதில் முடியக்கூடிய இத்தற்காலிக வாழ்வைக்கூட எளிதில் இழப்பதற்கு யாரும் முன்வருவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்வதற்கே. இத்தற்காலிக வாழ்விலேயே நமக்கு இத்தனை நாட்டம் இருந்தால், நித்திய நிரந்தர வாழ்வில் நமக்கு அதிக நாட்டம் இருக்கும் என்பது மெய்தானே? அதுவும் எந்த துன்பமும் இல்லாமல், போராட்டம் இல்லாமல் மகிழ்வுடனும் சந்தோஷத்துடனும் நித்தியமாக வாழ்வதென்றால் அது நமக்கு பெரும் பாக்கியமாக இருக்குமல்லவா? நிச்சயம் அது பெரும் பாக்கியம்தான்.

அந்த பாக்கியத்தை மனிதன் பெறவேண்டுமென்பதுதான் தேவனின் விருப்பம், அல்லது சித்தம். ஆனாலும், பெரும்பாக்கியம் ஒன்றை மனிதன் பெறவேண்டுமெனில், அதற்கான ஒரு தகுதி அவனிடம் இருக்கவேண்டும்.

ஒரு மாணவனுக்குப் பரிசு கொடுக்கவேண்டுமெனில், அவன் தேர்வில் இத்தனை மதிப்பெண் பெறவேண்டும், அல்லது இத்தனாவது ரேங்க் எடுக்க வேண்டும் என்றெல்லாம் சில தகுதிகளை நாம் நிர்ணயிக்கிறோம். தகுதியின் அடிப்படையில் ஒரு பரிசு கொடுக்கப்பட்டால்தான் அப்பரிசுக்கு மதிப்பு இருக்கும்.

இதேவிதமாகத்தான் நித்தியஜீவன் எனும் பரிசை மனிதனுக்குக் கொடுக்கவேண்டுமெனில், அதற்கு அவன் ஒரு தகுதியைப் பெறவேண்டும். அது மட்டுமல்ல, நித்தியஜீவனைப் பெற்றபின்னர் அத்தகுதியை அவன் இழக்காதவனாகவும் இருக்கவேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு தகுதியை நிர்ணயிக்கத்தான், தேவன் மனிதனுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்து, அக்கட்டளைக்குக் கீழ்ப்படிவதுதான் நித்திய ஜீவனைப் பெறுவதற்கான தகுதி என நிர்ணயித்தார். மாத்திரமல்ல, அத்தகுதியை அவன் பெறத்தவறினால், அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஜீவனை அவனிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் தேவன் தீர்மானித்தார். ஏனெனில், அந்த ஜீவனை எடுக்காவிடில், தானாகவே அது நித்திய ஜீவனாக ஆகிவிடுமே!

எனவே ஆதி மனிதனிடம் தேவன் இவ்வாறு கட்டளையிட்டார்.

ஆதியாகமம் 2:16,17 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

இப்படி ஒரு கட்டளையைக் கொடுத்தபின், அக்கட்டளையை மனிதன் மீறமுடியாதபடிச் செய்வதற்கு தேவனால் முடியும் என்பது மெய்தான். ஆம், நீங்கள் சொன்னபடி “EVERYTHING IS POSSIBLE FOR GOD”. தமது கட்டளையை மீறமுடியாத நிலையில் மனிதனை அவர் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், நீங்கள் சொன்னபடி மனிதன் நல்லவனாகவே இருந்திருப்பான். ஆனால் அதில் மனிதனின் தகுதி என்பது இல்லாமற்போய்விடும்.

எனவே, தேவகட்டளையை மீறவும் மீறாதிருக்கவும் மனிதனுக்கு உரிமை இருந்தால்தான், நித்தியஜீவனுக்கு அவன் தகுதி பெறுகிறானா என்பதை அறியமுடியும். எனவேதான் மனிதன் தான் விரும்புவதைச் செய்வதற்கான சுயாதீன உரிமையை தேவன் அவனுக்குக் கொடுத்தார்.

சுயதீன உரிமையைப் பெற்ற மனிதன், ஒரு காலகட்டம் வரை நல்லவனாகத்தான் இருந்தான்; அதாவது தேவகட்டளைக்குக் கீழ்ப்படிந்துதான் இருந்தான். ஆனால் சாத்தான் வந்து மனிதனிடம் ஒரு பொய்யைச் சொல்லி, தேவகட்டளையை மீறும்படி அவனைத் தூண்டினபோதுதான், மனிதன் தன் சுயாதீன உரிமையைப் பயன்படுத்தி, தேவகட்டளையை மீறினான்.

விளைவு? நித்திய ஜீவனைப் பெறுவதற்கான தகுதி மனிதனுக்குக் கிடைக்கவில்லை. எனவே, அவனது ஜீவன் சாகக்கூடிய ஜீவனாக மாறியது.

ஆதிமனிதனான ஆதாமின் பாவம், அவரது சந்ததியினரான நமக்கு ஜென்மசுபாவமாக வந்துவிடுகிறது. அத்துடன் பாவத்தின் விளைவான மரணமும் நமக்கு வந்துவிடுகிறது. இவ்விதமாகத்தான் நல்லவன் என்ற நிலையில் இருந்த மனிதன் கெட்டவனாகி, நித்திய ஜீவனை இழந்து, மரணத்திற்கேதுவானான்.

தற்போது மற்றொரு கேள்வி நமக்குள் எழக்கூடும்.

சாத்தான் என்பவன் யார்? அவன் ஏன் தேவனுக்கு எதிராக மனிதனை செயல்பட வைத்தான்? எனும் கேள்விகள் நமக்கு எழும்பக்கூடும்.

இக்கேள்விகளுக்கு பதில் தெரிந்த தள அன்பர்கள், அதை இங்கு பகிர்ந்துகொள்ளும்படி வேண்டுகிறேன்.

பின்குறிப்பு: ஆதிமனிதன் ஒருவனின் மீறுதலினிமித்தம் எல்லா மனிதர்களும் ஜீவனை இழக்கவேண்டியதுதானா? இழந்த ஜீவனை மீண்டும் அவர்கள் பெறுவதற்கு வழியேயில்லையா எனக் கேட்பவர்கள், பின்வரும் தொடுப்பிற்குச் செல்லும்படி வேண்டுகிறேன்.

http://eternal-life.activeboard.com/index.spark?aBID=134761&p=3&topicID=33657631


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard