நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் பாவியை மன்னிப்பவர்/தண்டிப்பவர்


Militant

Status: Offline
Posts: 830
Date:
தேவன் பாவியை மன்னிப்பவர்/தண்டிப்பவர்
Permalink  
 


யாத்திராகமம் 34:6,7 கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்.

இவ்வசனங்களில் நம் தேவனின் 2 விதமான தன்மைகளைப் பார்க்கிறோம். இரக்கமுள்ளவரான அவர், அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவராகவும் இருக்கிறார்;

அதேவேளையில், குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல் அவனது அக்கிரமத்தை 3-ம் 4-ம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராகவும் இருக்கிறார்.

இதனால் தேவன் முரண்பாடான தன்மையுள்ளவர் எனக் கூறமுடியுமா? நிச்சயமாகக் கூறமுடியாது. அப்படியானால் தேவனின் இவ்விரு முரண்பாடான தன்மைகளுக்கு விளக்கம்தான் என்ன?

இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன், தேவன் ஏன் ஒருவன் செய்த நீதி அல்லது அக்கிரமத்தின் பலனை, அவனது தலைமுறைகளுக்கும் அளிப்பதாக கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் ஜனங்கள் (குறிப்பாக தேவனுக்குப் பயந்த ஜனங்கள்) தங்கள் சந்ததி அல்லது தலைமுறையைக் குறித்து மிகுந்த கரிசனையுள்ளவர்களாக இருந்தார்கள். அதனால்தான் ஆபிரகாமிடம் அவரது சந்ததிக்கு வரக்கூடிய ஆசீர்வாதங்களைத்தான் தேவன் அதிகமாக வாக்களித்தார்.

ஒருவேளை ஆபிரகாமிடம் தேவன் சொன்னதுபோல், இன்று நம்மிடம்: உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் பெருகப்பண்ணுவேன் எனக் கூறினால் நாம் என்ன சொல்வோம்?

அதெல்லாம் எதற்கு ஆண்டவரே! நான் எனக்கே 1 அல்லது 2 பிள்ளை போதும் என்றிருக்கும்போது, எனது சந்ததி பெருகுவதால் எனக்கு என்ன நன்மை என்றுதான் கேட்போம். ஆனால் பழங்காலத்தில் சந்ததிப் பெருக்கம் என்பது ஒரு விசேக்ஷித்த ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது.

மாத்திரமல்ல, தங்கள் சந்ததியினர் தேசத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற எண்ணமும் அக்காலத்தில் இருந்தது. அதனால்தான் தன் மகனையும் அவன் சந்ததியையும் ஆசீர்வதிக்க நினைத்த ஈசாக்கு, அதை தனது பிரிய மகனான ஏசாதான் பெறவேண்டும் என நினைத்தார். ரெபேக்காளோ அந்த ஆசீர்வாதத்தை தனது பிரிய மகன் யாக்கோபுக்கு வாங்கிவிட வேண்டுமென நினைத்தாள்.

இப்படியாக அக்கால ஜனங்கள் தங்கள் சந்ததியின் ஆசீர்வாதத்தில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருந்தனர். அவர்களின் இந்த மனநிலையை தேவன் அறிந்ததால்தான், ஒருவனின் நீதி மற்றும் அக்கிரமத்தின் பலன் அவனது சந்ததிக்கும் தொடரும் எனக் கூறினார்.

ஆனால் போகப்போக ஜனங்களின் மனநிலை மாறத்தொடங்கியது. தங்கள் சந்ததியைப் பற்றி அவர்களுக்கிருந்த கரிசனை கொஞ்சங்கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. ஒருமுறை சமாரியாவில் கடும்பஞ்சம் நிலவியபோது, தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளையேகூட சமைத்துச் சாப்பிடுமளவு கடின மனதுள்ளவர்களானார்கள் (2 இராஜா. 6:28,29). கர்த்தருக்கு விரோதமாகப்

பாவஞ்செய்த எசேக்கியாவிடம், அவரது குமாரர்களுக்கு வரப்போகிற சாபத்தைக் குறித்து ஏசாயா சொன்னபோது, எசேக்கியா பின்வருமாறு கூறினார்.

2 இராஜா. 20:19 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

தனது குமாரர்களுக்கு விரோதமாக உரைக்கப்பட்ட சாபத்தைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாத எசேக்கியா, தனது காலத்தில் சமாதானம் இருக்கப்போவதை நினைத்து திருப்தியடைந்தார்.

அவ்வாறே சலொமோனின் குமாரர்களின் நாட்களில் இஸ்ரவேல் ராஜ்யம் பிரிக்கப்படும் எனும் தேவவார்த்தைகளை அறிந்த சாலொமோன், தன் தவறுகளுக்காக மனஸ்தாபப்பட்டு தேவனிடம் மன்னிப்பு வேண்டவில்லை.

சந்ததியைக் குறித்த கரிசனை கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து, இந்நாட்களில் பல பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் கடும் விரோதமாயிருக்கும் நிலை வந்துவிட்டது. எனவேதான் எசேக்கியேல் தீர்க்கதரிசி காலத்தில் தேவன் பின்வருமாறு கூறினார்.

எசேக்கியேல் 18:2-4  பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன?
இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.


இவ்விதமாக தேவன் சொன்னாலும், பாவத்திற்கு தண்டனை/மன்னிப்பு எனும் தமது நிலையிலிருந்து மாறவில்லை என்பதை பின்வரும் வசனங்களில் காணலாம்.

எசேக்கியேல் 18:21,22 துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.

எசேக்கியேல் 18:24  நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.

இத்தனை தெளிவாக வசனங்கள் கூறுகிற போதும், இவ்விஷயத்தில் நம் மத்தியில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன.

ஒரு பிரிவினர்: நாம் நீதியைச் செய்யவேண்டிய அவசியமில்லை, நாம் எத்தனை தரம் மீண்டும் மீண்டும் துணிகரமாக பாவஞ்செய்தாலும், தேவகிருபை நம்மை மன்னித்துக் கொண்டேயிருக்கும். பின்னர் நாம் மரித்து உயிர்த்தெழுந்தபின், கிறிஸ்துவின் 1000 வருட ராஜ்யத்தில் தேவநீதி நமக்குக் கற்றுக்கொடுக்கப்படும், அப்போது நாம் நீதியைக் கற்று நித்தியஜீவனைப் பெற்றுவிடுவோம் எனக் கூறுகின்றனர்.

மற்றொரு பிரிவினரோ: நாம் பாவங்களை உணர்ந்து மன்னிப்பு வேண்டுகையில் தேவன் மன்னிக்கத்தான் செய்வார்; ஆனால் தொடர்ந்து பாவஞ்செய்தால், நாம் மரித்தபின் தேவன் நம் ஆத்துமாவை சாத்தானிடம் ஒப்படைத்துவிடுவார்; அவன் நம் ஆத்துமாவைப் பாதாளம் எனப்படுகிற நரகத்தில் தள்ளி, இயேசுவின் 2-ம் வருகை காலம்வரை அக்கினியில் போட்டு வாதிப்பான். இயேசுவின் 2-ம் வருகைக்குப் பிறகு, சாத்தானிடமிருந்து நம் ஆத்துமாவை தேவன் வாங்கி, அவர் அதை அக்கினிக் கடலில் போட்டு அழிப்பார் என்கின்றனர். ஆக, நம் பாவத்திற்கு சாத்தான் மூலம் ஒரு தண்டனையும் தேவன் மூலம் ஒரு தண்டனையுமென 2 தண்டனைகளைப் பெறவேண்டுமெனக் கூறுகின்றனர்.

அவர்கள் இப்படிச் சொல்வதற்கு வசன ஆதாரம் உண்டா எனக் கேட்டால், எங்களுக்குத் தேவன் நேரடியாக வெளிப்படுத்திவிட்டார்; கேட்டால் கேளுங்கள் எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் அவர்களைப் போல் பலரும் பல வெளிப்பாட்டைச் சொல்வதால் ஜனங்கள் குழம்பிப் போகின்றனர்.

இன்னும் ஒரு பிரிவினர்: பாவிகளாகிய நாம் மரித்தபின் நம் ஆத்துமாவை சாத்தானிடம் வாதிக்கப்பட ஒப்படைத்த தேவன், இயேசுவின் 2-ம் வருகைக்குப்பின், சாத்தானிடமிருந்து அதை வாங்கி, நித்திய அக்கினியில் போட்டு, நித்திய நித்திய காலமாக வாதிப்பார் என்கின்றனர்.

மற்றும் ஒரு பிரிவினர் இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள் மரித்ததும் அவர்கள் ஆத்துமா பரதீசில் இளைப்பாறி, பின்னர் இயேசுவின் 2-ம் வருகையில் பரலோகம் செல்லும் என்றும், இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களின் ஆத்துமா நரகத்தில் சாத்தானால் வாதிக்கப்பட்டு, பின்னர் இயேசுவின் 2-ம் வருகையில் சாத்தானோடு அக்கினிக் கடலில் நித்திய வாதை அனுபவிக்கும் என்றும் கூறுகின்றனர். இக்கருத்துதான் இந்நாட்களில் பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.

நாம் மரித்தபின் நம் ஆத்துமாவை நரகத்தில் தள்ளை அழிக்க வல்லவர் தேவன் ஒருவர் மட்டுமே என லூக்கா 12:5; மத்தேயு 10:28 வசனங்கள் கூறுகின்றன. எனவே நாம் மரித்தபின் நம் ஆத்துமாவை வாதிக்கவோ அழிக்கவோ சாத்தானுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அக்கிரமக்காரர்களை நியாயந்தீர்ப்பதற்கும் தண்டிப்பதற்கும் பரிசுத்தரான இயேசு மற்றும் பரிசுத்த தேவன் ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதேயன்றி, அக்கிரமக்காரனாகிய சாத்தானுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

பாவியாகிய மனிதனை தேவன் எப்போது மன்னிப்பார், எப்போது/எவ்வாறு தண்டிப்பார் என்பதை தொடரும் பதிவுகளில் பார்ப்போம்.


-- Edited by anbu57 on Sunday 7th of March 2010 10:44:37 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

////மற்றொரு பிரிவினரோ: நாம் பாவங்களை உணர்ந்து மன்னிப்பு வேண்டுகையில் தேவன் மன்னிக்கத்தான் செய்வார்; ஆனால் தொடர்ந்து பாவஞ்செய்தால், நாம் மரித்தபின் தேவன் நம் ஆத்துமாவை சாத்தானிடம் ஒப்படைத்துவிடுவார்; அவன் நம் ஆத்துமாவைப் பாதாளம் எனப்படுகிற நரகத்தில் தள்ளி, இயேசுவின் 2-ம் வருகை காலம்வரை அக்கினியில் போட்டு வாதிப்பான். இயேசுவின் 2-ம் வருகைக்குப் பிறகு, சாத்தானிடமிருந்து நம் ஆத்துமாவை தேவன் வாங்கி, அவர் அதை அக்கினிக் கடலில் போட்டு அழிப்பார் என்கின்றனர். ஆக, நம் பாவத்திற்கு சாத்தான் மூலம் ஒரு தண்டனையும் தேவன் மூலம் ஒரு தண்டனையுமென 2 தண்டனைகளைப் பெறவேண்டுமெனக் கூறுகின்றனர்.

அவர்கள் இப்படிச் சொல்வதற்கு வசன ஆதாரம் உண்டா எனக் கேட்டால், எங்களுக்குத் தேவன் நேரடியாக வெளிப்படுத்திவிட்டார்; கேட்டால் கேளுங்கள் எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் அவர்களைப் போல் பலரும் பல வெளிப்பாட்டைச் சொல்வதால் ஜனங்கள் குழம்பிப் போகின்றனர்..////


சகோதரரே! நான் சொல்வதில் எந்த குழப்பமும் இல்லை. சொல்லும் கருத்தை தாங்கள் சரியாக புரியவில்லை என்றே நான்  கருதுகிறேன். இந்த உலகில் இரண்டுவிதமான மனிதர்கள் இருக்க்கின்றனர். ஓன்று இயேசுவை ஏற்ற்க் கொண்டவர்கள் இன்னொன்று இயேசுவை ஏற்றுக் கொள்ளதவர்கள்.  
 
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

யோவான் 3:15
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்
 
யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.

அதாவது கெட்டுபோகாமல்  நித்யஜீவன் பெறுவது  என்பது ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுகொண்டவர்களுக்கு மட்டும்தான் கிடைத்த பாக்கியம். இதன் மூலம்  மற்றவர்கள் கெட்டுபோகின்ற்றனர் என்று பொருள்கொள்ள முடிகிறது .
 
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
 
இவ்வசனத்தின் அடிப்படையில் யேசுவை விசுவாசித்தவர்கள் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள் ஆகும்படி அதிகாரம் பெற்றுவிடுகின்றனர்  அதன்மூலம்   இவர்கள்  இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானின் கரங்களிலிருந்து பிடுங்கப்பட்டு தேவனின்  நேரடி   ஆளுகையின்கீழ் வந்துவிடுகின்றனர். அவர்களுக்கு நடக்கும் நன்மை தீமை எல்லாவற்றிக்குமே தேவனே  பொறுப்பாகிறார். இவர்கள் கிருபையின்கீழ் இருப்பதால்  பாவம் இவர்களை  மேற்கொண்டு சாத்தானின் பிள்ளைகள்ஆக்க முடியவே முடியாது என்பதே பவுல் ரோமர் 6:14 பாவம் கிருபையை மேற்கொள்ள முடியாது என்று சொல்கிறார்  
 
இயேசுவை விசுவாசியாமல் கெட்டுப்போனவர்கள் எல்லோருக்கும் கிடைத்த இலவச மீட்பை நிராகரித்து,   இயேசுவை விசுவாசியாமல்  தேவனின் பிள்ளை என்ற நிலைக்கு வராததால் இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தனின் பிள்ளை என்ற நிலையிலேயே  நீடிக்கின்றனர்.  
 
I யோவான் 8. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

I யோவான் 3:10
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்
 
இவ்வாறு இந்த உலகில் உள்ள மக்கள் இரண்டு பகுதியாக பிரிக்கப்படுகின்றனர்.  இயேசுவை ஏற்று தேவனின் பிள்ளை ஆனவன் மரித்தபின் தேவனிடத்தில் நியாயதீர்ப்புக்கு போகிறான். பிசாசின்பிள்ளைகள் மரித்தபின் பிசாசு ராஜாவாக  இருக்கம் பாதாளம் என்னும் இடத்துக்கு போகின்றனர்.   
 
யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
 
இயேசுவை விசுவாசியாதவன், இயேசுவை விசுவாசியாத ஒரே காரணத்துக்காக ஆக்கினை தீர்ப்புக்கு உட்படுகிறான்.  இந்த ஆக்கினை என்பது சாத்தான் இடத்தில்  பாதாளத்தின் நடக்கும் அக்கினையை தான்  குறிக்கும்.  மேலும்  இவன் ஆக்கினை தீர்ப்புக்கு "உட்படுகிறான்" அவ்வளவுதான்!  இவனிடம் ஆக்கினையை (வேதனையை) நடப்பிப்பதும் நடபிக்க முடியாததும் அவன் செய்த நன்மை தீமையின் அடிப்படையிலேயே முடியும். அதற்க்கு தகுந்தால்போல இவர்கள் மேல் பாதாளம், தாழ்ந்த பாதாளம், நரக பாதாளம்  என்று வேதம் குறிப்பிடும் இடங்களில் நியாயதீர்ப்பு நாளுக்காக காத்திருக்கின்றனர்.  கீழ்க்கண்ட வசனங்களும் இந்த பாதாள ஆக்கினையை குறித்துதான் சொல்கின்றனர்.
 
ரோமர் 5:16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது
 
ரோமர் 5:18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல
 
தேவன் அவனவன் கிரியைக்கு தகுந்தால்போல் நியாயம் தீர்ப்பேன் என்று திரும்ப திரும்ப சொல்லும்போது ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினை தீர்ப்பு என்னது தேவனின் நியாயாதீர்ப்பை குறிப்பதல்ல!   
 
ஐஸ்வர்யாவான் இருந்ததும் இந்த பாதாள ஆக்கினயில்தான்! ஆனால் ஆனால் இந்த பாதாள ஆக்கினை என்பது கீழ்க்கண்ட வசனம் சொல்லும் நித்திய  ஆகினையை குறிப்பது அல்ல!
 
மத்தேயு 25:46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
 
இவாறு பாதாளத்தில் இயேசுவை விசுவாசிக்காத  ஒரே காரணத்துக்காக  பிசாசின் இடமாகிய பாதாளத்தில் ஆகினையில் இருப்பவர்கள்,  பிசாசுகள் தேவனால் மேற்கொள்ளப்பட்டு   இறுதி வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்பு நடக்கும்போது தேவனிடம் நியாயதீர்ப்புக்கு வந்து நிற்ப்பார்கள்.
 
வெளி 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.
 
யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள் 
    
இவர்களுக்கு தேவனால் கிரியைக்கு தகுந்த நியாயதீர்ப்பு வழங்கப்படும். இவர்களை தேவன் தவருக்கேற்ப  தண்டித்து ஏற்றுக்கொள்வாரா, அல்லது இவர்களுக்கென்று தனி வாசஸ்தலம் ஏற்ப்படுத்துவாரா என்பது குறித்து சரியான வேத ஆதாரம் இல்லை.
 
எனது கருத்துப்படி இவர்களை தேவன் அவரவர் கிரியைக்கு  தகுந்தால்போல்   தண்டித்து ஏற்றுக்கொள்வார் என்றே நான் கருதுகிறேன் அதற்க்கு அடிப்படையாக இவர்களை குறித்து இந்த வசனம் சொல்கிறது என்று கருதுகிறேன்.
 
ரோமர் 9:26 நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.

ஏனெனில் சாகிறவனுடைய சாவை தேவன் விரும்புவதில்லை.
 
இறுதியாக பாதாளத்தில் இருக்கும் ஆத்துமாக்களை தேவன் மீட்டு நியாயதீர்ப்பு செய்த பிறகு மரணமும் பாதளமும்   அக்கினிகடலில் தள்ளப்பட்டு போகும்.  இதுதான் இறுதி!
 
வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
 
உண்மையில்  "மரணம்" என்பது ஒரு நிகழ்ச்சியல்ல அது ஒரு தூதன் அதுபோல் "பாதாளம்" என்பதும் ஒரு தூதனே.  இவர்கள் இரட்டை  பிள்ளைகள்போன்ற   இரண்டு  தூதர்கள்தான் என்று வேதம் சொல்கிறது. 
 
வெளி 9:11 அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்   
 
வெளி 6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது.  
 
"மரணம்" அதை தொடர்ந்து "பாதாளம்" இவை இரண்டும் ஒன்றுக்குப்பின் ஓன்று என்ற கணக்கில் இன்று நடந்துகொண்டு இருக்கிறது. இறுதியில் இந்த இரண்டுமே அக்கினி கடலில் தள்ளப்பட்டுபோகும். அனால் இந்த இரண்டு தூதர்களால் பிடிக்கப்பட்ட எல்லா ஜனங்களும் தேவனாலேயே நியாயம்தீர்க்கப்படுவார்கள்.
 
தங்களுக்கு பாதாளம் பற்றிய  போதிய வெளிப்பாடு இல்லை என்ற காரணத்தினால், வசன ஆதாரம் இல்லை,  இது "தேவதூஷணம்"  "பொய்யின் ஆவி"   என்றெல்லாம்  கருதுவது  "நான் அறிந்ததற்கு மேல் ஒன்றுமே இல்லை" என்று நீங்கள் எண்ணுவதுபோல் தோன்றுகிறது. தேவன் அவரவர் மனநிலை மற்றும் தகுதிக்கு தகுந்த காரியங்களை மட்டும் வெளிப்படுத்தி காட்டுவர் என்பதை கருத்தில் கொள்க!    
 
நம்முடைய அறிவு  குறையுள்ளது  எல்லாம் அறிந்தவர் எவரும் இல்லை!
 
 


-- Edited by SUNDAR on Monday 8th of March 2010 10:10:51 AM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே!

மறுமையின் ஆக்கினை யாருக்கு/எப்போது/எங்கு/எவ்விதமாக கொடுக்கப்படும் என்பது பற்றி கருத்து சொல்கையில் நாம் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். இல்லாத ஆக்கினை ஒன்றைச் சொன்னால் அது தேவதூஷணமாகிவிடும், இருக்கிற ஆக்கினையைச் சொல்லத் தவறினால் அது ஜனங்களை இடறச் செய்வதாகிவிடும். எனவே கூடியவரை வசனம் சொல்வதை அப்படியே எடுத்துரைப்பதுதான் நல்லது.

மறுமையின் ஆக்கினை பற்றி இத்திரியில் நீங்கள் பதிந்துள்ள கருத்துக்கள் தெளிவில்லாததாகவும் முரணானதாகவும் உள்ளன.

யோவான் 3:15,16 வசனங்களின் அடிப்படையில் இவ்வுலக மனிதர்களை இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள், இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எனும் 2 பிரிவாகப் பிரித்த நீங்கள், அவர்களை யோவான் 1:12-ன் அடிப்படையில் தேவனின் பிள்ளைகள், சாத்தானின் பிள்ளைகள் என்றும் கூறியுள்ளீர்கள்.

ஆனால் ஒருவன் இயேசுவை விசுவாசிப்பதால் மட்டும் தேவனின் பிள்ளை ஆகிவிடமுடியுமா? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

யோவான் 1:12,13 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.

(விசுவாமுள்ளவன் என்றால், வெறுமனே இயேசுவை விசுவாசிக்கிறேன் எனச் சொன்னால் மட்டும் போதாது, அவன் தேவனாலே பிறந்திருக்கவும் வேண்டும்)

மத்தேயு 5:43-45 உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்;

(இவைதான் ஒருவன் தேவனாலே பிறந்திருக்கிறான் என்பதற்கான சில அடையாளங்கள்)

கலாத்தியர் 3:26,27 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

(கிறிஸ்துவை தரித்தவன்தான், அதாவது கிறிஸ்துவைப் போல் நடப்பவன்தான் தேவனுடைய புத்திரன்)

1 யோவான் 3:9,10 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.

(ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமல்ல, அவனது கிரியைகளில் தேவ நீதியும் அன்பும் இருந்தால்தான் அவன் தேவனால் உண்டானவனாக இருப்பான்)

ரோமர் 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

(நாம் கிறிஸ்துவோடுகூட பாடுபட்டால்தான் தேவனுடைய பிள்ளைகளாகவும், சுதந்தரராகவும் இருக்கமுடியும்)

அடுத்து, யோவான் 3:18-ன் அடிப்படையில், இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு கிடையாதென்றும், விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பு உண்டென்றும் சொல்கிறீர்கள். ஆனால், அவ்வசனத்தைத் தொடர்ந்து இயேசு கூறுவதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீர்கள்.

யோவான் 3:18-21 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.


சத்தியத்தின்படி எவன் செய்கிறானோ அவன்தான் மெய்யாகவே இயேசுவை விசுவாசிப்பவன். இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று ஒருவன் சொன்னாலும், அவன் பொல்லாங்கு செய்கிறவனாக இருந்தால் அவன் ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்பட்டவனே.

நான் மேலே குறிப்பிட்டுள்ள வசனங்களில் பெரும்பாலானவை, நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனங்களை ஒட்டின வசனங்கள்தான். வசனங்களை ஒட்டின பகுதியை முழுமையாக எடுக்காமல், குறுகின பகுதியை எடுத்து ஒரு முடிவெடுத்தால் குழப்பமும் முரண்பாடும்தான் மிஞ்சும்.

இப்பொழுது சொல்லுங்கள். யார் தேவனின் பிள்ளைகள், யார் சாத்தானின் பிள்ளைகள்? மரித்தவர்களில் எவர்களை சாத்தானிடம் தேவன் ஒப்படைப்பார்? எவர்களை தமது நியாயத்தீர்ப்புக்குக் கொண்டு செல்வார்?

இக்கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். மற்றதைப் பிறகு பார்க்கலாம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

உங்கள் அளவுக்கு வசனங்களை ஆராய்து அதன்படி பதில் எழுதும் ஞானம் எனக்கு நிச்சயம் இல்லை சகோதரரே ஆகினும் நான் உங்களை ஓன்று கேட்கிறேன்:  
 
சொல்லப்பட்டுள்ள வசனம் ஒன்றுக்கு பல  இணைவசனம் மற்றும் எதிர்மறை வசனங்கள் வேதத்தில் நிச்சயம் உண்டு.  வேதத்தில் உள்ள அனைத்து  பகுதிகளையும் படித்து அதை அப்படியே உங்கள் வாழ்வில்  நீங்கள் கைகொண்டு நடந்துவிட முடியுமா? அல்லது நடந்து விடமுடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
  
செய்ய முடியாத அனேக சிறிய சிறிய காரியங்கள் உண்டு என்பது உங்களுக்கும் தெரியும் அனைவருக்கும் தெரியும்.   நான் பூமியில் வாழும்வரை கிறிஸ்த்துவைபோல் பரிசுத்தராக முயற்ச்சிக்கிறோம் அவ்வளவுதான் ஒருவரும் அவரைப்போல முழுமையான  பரிசுத்தராக முடியாது.
 
அப்படி முழுமையான பரிசுத்தவானாகி  தனது கட்டளைகள்படி நடப்பவனை மட்டும் தேவன் நித்திய ஜீவனுக்கென்று தேர்நதெடுத்தால் ஒருவருமே தப்பிக்க முடியாது. ஏதாவது ஒரு வசனத்தின் அடிப்படையில் நம்மை குற்றவாழி என்று தேவனால் தீர்க்க முடியுமல்லவா?
 
இதை ஒத்துகொள்வீர்கள் என்று கருதுகிறேன்.
 
இங்குதான் கிரியையின் பயனற்ற நிலை தெரியவரும்.
  
இவ்வாறு ஏதாவது ஒரு வசனத்தின் அடிப்படையில் எவருமே பரிசுத்தர் இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அதேபோல்  ஏதாவது ஒரு வசனத்தின் அடிப்படையில் தேவன் எல்லோரையுமே  மீட்டுவிடவும் முடியும் என்பதையும்   கருத்தில் கொள்க.
 
இங்குதான் கிருபையின் மேன்மை தெரியும்.   
 
உங்களின் நன்னடத்தைகளும் நற்கிரியைகளும் அவசியமே அதற்க்கு பலன் நிச்சயம்  உண்டு. ஆகிவும் அதற்காக  நல்லவன் மட்டும்தான் நித்தியஜீவனை பெறுவான் தீயவன் எல்லோரும் அழிந்துபோக  வேண்டுமென்று எண்ணுவது  தேவனின் இரக்கத்துக்கு எதிரான செயல்.  

தேவன் அவ்வாறு சொல்லியிருக்கிறார்/ எச்சரித்திருக்கிறார்  எனவே அதை சொல்லி வாதிடுவதில் தவறேதும் இல்லை. ஆகினும் அவரின் இறுதி  இருதயநிலை என்ன? "ஒருவரும் கெட்டுபோக கூடாது என்பதுதான்" "ஒருவரின் மரணத்தையும் அவர் விரும்பவில்லை"
"இந்த  சிறியரில் ஒருவரும் கெட்டு போவது பிதாவின் சித்தமல்ல" என்பதுதான். 
 
இதை தேவனால் நிறைவேற்ற முடியாதா?
 
தேவன் எல்லோரையும் மீட்டுவிடுவார் என்று சொல்லி  தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட காரியங்களை கவனியாதிருக்கும் நண்பர்களை நான் ஏற்ப்பதில்லை அதே நேரத்தில் தேவன் எல்லோரையும் மீட்ககூடாது நியாயம் நீதி செய்பவர்களை மட்டும்தான் மீட்கவேண்டும் என்று விரும்புகிறவர்களும் தேவனின் இருதயநிலைக்கு ஏற்றவர்கள் அல்ல என்றே நான் கருதுகிறேன்
 
தேவனின் எதிர்பார்ப்பு என்ன என்பதை ஆராய்ந்து அவரின் சிந்தை நமக்கும் உண்டாயிருக்க வேண்டும். "ஒருவரும்  கெட்டு போககூடாது என்பதுதான் தேவனின் விருப்பம்"அதுவே நமது விருப்பமாகவும் அது நிறைவரவேண்டும் என்று வாஞ்சிப்பவர்கலாகவுமே எந்நாளும் இருக்கவேண்டும். நாம் எடுக்கும் ஒவ்வொரு முயர்ச்சியும் எல்லோருடய மீட்புக்காகவே இருக்கவேண்டும். எல்லோரின் மீட்புக்காகவும் நிச்சயம் ஜெபிக்க வேண்டும்!
 
ஒரு தகப்பன் தன் மகனை பார்த்து  "நீ நன்றாக படிக்க வில்லையென்றால் நாளை துன்பபடுவாய்" என்று சொல்வது இயற்க்கை. அதற்காக தன் மகன் சரியாக படிக்காமல்  துன்பப்படும்போது அந்த தகப்பன் "நான் சொன்னேன் நீ கேட்கவில்லை இப்பொழுது அனுபவி" என்று சொல்லி வாளாதிருப்பாரா?     
 
தன்னால் முடிந்த அளவு அவன் துன்பத்தை தீர்த்துவைக்க முயர்ச்சிப்பார் அல்லவா? அதே போன்றதுதான் தேவனின் அன்பும்.
 
அவர் எச்சரிக்கிறார் அது உண்மைதான்! அதற்காக அவர் எல்லோரையும் அப்படியே  கீழ்படியாதவர்களை அழிவில்   விட்டுவிடுவார் என்று கருதுவதும் தவறு அதே நேரத்தில் அவர் இப்படித்தான் எச்சரிப்பார் ஆனாலும் நாள் நாம் துன்பப்படும்போது எப்படியும் நம்மை காப்பாற்றுவார்  என்றெண்ணி அவர் எச்சரிப்பை கண்டு கொள்ளாமல் விடுவதும்  தவறு. இரண்டியிலும் ஒரு சமநிலை வேண்டும். முக்கியமாக எல்லோரும் மீட்கப்படவேண்டும் ஒருவரும் கெட்டு போககூடாது என்று எதிர்பார்ப்பும் ஏக்கமுமே ஒரு நல்ல தேவமனிதனுக்கு அடையாளம்.    
 
நீங்கள் என்னவென்றால் ஏதாவது சில வசனங்களை காண்பித்து மற்றவர்களை குற்றவாழி என்று தீர்ப்பதில்யேயே குறியாக இருக்கிறீர்கள்.
 
எசேக்கியேல் கீழ்க்கண்ட வசனங்களை படியுங்கள்:
 
எசேக்கியேல் 4:5 அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள் வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்.

எசேக்கியேல் 4:6 நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

பரிசுத்தமான தீர்க்கதரிசி  எசேக்கியேலை கர்த்தர் அழைத்து எவனோ இஸ்ரவேலரும்  யூதாவினரும் ஆண்டுகணக்கில்  செய்த அக்கிரமத்தை சுமக்க சொல்கிறார். அக்கிரமம் செய்தவன் எவனோ அனால் இங்கு அவர்களுக்கான சுமையை சுமப்பவன் எவனோ. இங்கு எசேக்கியேல் "எவன் அக்கிரமத்தையோ என்னை சுமக்க சொல்கிறீர்களே ஆண்டவரே, அவனவன் அக்கிரமத்தை அவனனவன் தலையில் சுமத்தும்"  என்று சொல்லி தேவனுக்கு எதிர்த்து பேசவில்லை. கேள்வியேதும் கேட்காமல் சுமந்தான். அங்கு தேவனின் மிகபெரிய திட்டம் நிறைவேறியது.  
 
இதுதான் ஒரு உண்மையான கீழ்படிதல்!  இதில் இரண்டு விஷயங்களை நாம் அறியமுடியும். 
 
1. தேவன் தனக்கு ஏனென்று கேட்காமல் கீழ்படியும் ஒரே 
ஒருவரைவைத்து அனேக காரியங்களை சாதித்து விடமுடியும்  
 

2. நம்மை பயன்படுத்தி அல்லது நம்மை துன்பத்துக்கு ஒப்பு கொடுத்து அதனால்  ஒரு ஆத்துமாவை மீட்க தேவன் சித்தமாக. இருந்தாலும் அதற்க்கு நாம் மகிழ்ச்சியோடு உடன்பட வேண்டும்.
 
தேவனிடம் நியாயம் பேசிக்கொண்டு இருப்பது சரியானது அல்ல!
 
இவ்விதத்தில் நீங்கள் தேவனின் வார்த்தைகள்படி நடப்பதும் பிறரை அவ்வாறு நடக்கும்படி எச்சரித்து  தேவனுக்கேற்ற பரிசுத்தராக வேண்டும் என்று போதிப்பதோ சரியான  காரியங்களே 
 
ஆகினும் இவற்றி அடிப்படை நோக்கம் என்ன?  
 
நாம் மட்டும் தப்பித்து விடவேண்டும், அல்லது அவர் வார்த்தைகள்படி  நடப்பவர் மட்டுமே   தப்பிக்க  வேண்டும் என்று  இருக்குமாயின், அது ஒரு சரியான நிலைப்பாடு அல்ல! 
 


-- Edited by SUNDAR on Friday 12th of March 2010 01:09:34 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//உங்கள் அளவுக்கு வசனங்களை ஆராய்து அதன்படி பதில் எழுதும் ஞானம் எனக்கு நிச்சயம் இல்லை சகோதரரே//

யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

sundar wrote:
//சொல்லப்பட்டுள்ள வசனம் ஒன்றுக்கு பல இணைவசனம் மற்றும் எதிர்மறை வசனங்கள் வேதத்தில் நிச்சயம் உண்டு.//

எல்லா வசனங்களுக்கும் இணைவசனம் உண்டு என உங்களைப்போல் என்னால் சொல்லமுடியாது. ஏனெனில், இணைவசனம் இல்லாத ஒரேயொரு வசனத்தை யாராவது காட்டினால்கூட நம் கூற்று பொய்யாகிவிடும். இணைவசனம் உண்டா இல்லையா என்பது நமக்குத் தேவையற்ற விஷயம். இணைவசனம் இல்லாவிட்டாலும் வேதம் சொன்னது சொன்னதுதான். அற்ப மனிதனே, “தான் ஒருமுறை சொன்னால் நூறுமுறை சொன்ன மாதிரி” எனச் சொல்லும்போது, தேவன் ஒரேயொருமுறை சொல்வதை நாம் ஏற்கக்கூடாதா?

வேதாகமத்தில் எதிர்மறை வசனங்களும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். நமது தவறான புரிந்துகொள்தலால்தான் வசனங்கள் எதிர்மறையாக இருப்பதாகக் கருதுகிறோம். உங்களுக்குத் தெரிந்த எதிர்மறை வசனங்களில் ஒன்றை வேறொரு திரியில் பதியுங்கள். அதற்கான விளக்கத்தை தர நான் முயற்சிக்கிறேன்.

sundar wrote:
//வேதத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் படித்து அதை அப்படியே உங்கள் வாழ்வில் நீங்கள் கைக்கொண்டு நடந்துவிட முடியுமா?//

நீங்களும் நானும் அனைத்து பகுதிகளையும் கைக்கொள்கிறோமா இல்லையா என்பதை வைத்து மற்றவர்கள் நியாயந்தீர்க்கப்படப்போவதில்லை. இயேசு சொல்வதைக் கேளுங்கள்.

யோவான் 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

எனவே இயேசு சொன்ன அத்தனை வசனங்களையும் சொல்லிப் போதிப்பதுதான் என் வேலை. இப்படிச் சொல்வதால் நான் அத்தனை வசனங்களின்படியும் நடக்கிறேன் என “declaration" கொடுப்பதாக நீங்கள் நினைக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள் என வேதவசனம் கூறுகிறது, நீங்கள் தவறு செய்தால் நான் புத்தி சொல்லவேண்டும், நான் தவறு செய்தால் நீங்கள் புத்தி சொல்லவேண்டும்.

ஒருவன் போதித்தால் வேதவாக்கியங்களின்படி போதிக்கக்கடவன் என 1 பேதுரு 4:11 கூறுகிறது. அதன்படி நான் போதிக்கிறேன். வேதவாக்கியங்களுக்கு அப்பாற்பட்டு எனது போதனை ஏதேனும் இருந்தால் அதைக் கண்டிப்பாகத் தெரியப்படுத்துங்கள். அதை விடுத்து, உன்னால் முடியுமா. நீ கடைப்பிடிக்கிறாயா என்பது போன்ற தேவையற்ற கேள்விகளைக் கேட்காதீர்கள். எனது தனிப்பட்ட வாழ்வில் நான் வசனத்துக்கு விரோதமாக செய்வதை தாராளமாகச் சொல்லி கண்டியுங்கள். வசனத்தைச் சொல்லி போதித்தால், உடனே நீ நடக்கிறாயா என உங்களைப் போல் பலர் கேள்வி கேட்பதால்தான், இந்நாட்களில் வசனத்தின்படி போதிப்பதற்கு பலர் தயங்குகின்றனர்.

sundar wrote:
//வேதத்தில் உள்ள அனைத்து  பகுதிகளையும் படித்து அதை அப்படியே உங்கள் வாழ்வில்  நீங்கள் கைக்கொண்டு நடந்துவிட முடியுமா? அல்லது நடந்துவிட முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? செய்யமுடியாத அனேக சிறிய சிறிய காரியங்கள் உண்டு என்பது உங்களுக்கும் தெரியும், அனைவருக்கும் தெரியும்.//

மனுஷனால் செய்யமுடியாத தேவகட்டளைகள் உண்டு எனக் கூறுவது தேவகட்டளையை அவமதிப்பதாகும். மனுஷரால் முடியாததைச் செய்யும்படி தேவன் கூறினால், அவரது அக்கட்டளை அர்த்தமற்றதாகிவிடும்.

sundar wrote:
//அப்படி முழுமையான பரிசுத்தவானாகி, தமது கட்டளைகள்படி நடப்பவனை மட்டும் தேவன் நித்திய ஜீவனுக்கென்று தேர்ந்தெடுத்தால் ஒருவருமே தப்பிக்க முடியாது, ஏதாவது ஒரு வசனத்தின் அடிப்படையில் நம்மை குற்றவாளி என்று தேவனால் தீர்க்க முடியுமல்லவா?

இதை ஒத்துகொள்வீர்கள் என்று கருதுகிறேன்.//


நமது குறைகளினிமித்தம் நம்மை சமாதானப்படுத்திக் கொள்வதற்காக இப்படிப்பட்ட கேள்விகளை நாம் கேட்டுக்கொள்கிறோம். தேவகட்டளைகளின்படி முழுமையாக நடப்பவன் ஒருவனாகிலும் இருக்கமாட்டான் என நீங்களோ நானோ முடிவெடுக்க இயலாது, அது நமக்கு அவசியமுமில்லை. யார் எப்படி நடந்தாலும் அதை வைத்து நாம் நியாயந்தீர்க்கப்படப்போவதில்லை. ஆயினும் பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

இம்மக்களை பரிசுத்தவான்களென தேவன் சாட்சி கூறுகிறார். இந்த பரிசுத்தவான்களில் ஒருவராகும்படி நாம் ஏன் முயலக்கூடாது? சிலர் சொல்கின்றனர், இந்தப் பரிசுத்தவான்களெல்லாம் உலகத்தோற்றக்கு முன்னமேயே முன்குறிக்கப்பட்டவர்கள் என்று. அது உண்மையெனில் தேவன் பட்சபாதமுள்ளவர் என்றாகிவிடும். எனவே மெய்யாகவே முழுமனதோடு முழுபலத்தோடு முழுஆத்துமாவோடு இயேசுவின் கட்டளைகளின்படி நடக்க வாஞ்சித்து முயன்றால், நம் முயற்சி வெற்றிபெற தேவன் நிச்சயம் உதவிசெய்வார், முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறும் பாக்கியத்தையும் தருவார். அந்த பாக்கியத்தைப் பெற நாம் ஏன் முயலக்கூடாது?

முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையும் பரிசுத்தவான்கள் பலர் இருக்கும்போது, நித்திய ஜீவனுக்கு தகுதி பெறுகிறவர்கள் இருக்க மாட்டார்களா? பின்வரும் வசனங்களைப் படித்துப் பார்த்தால் உங்கள் கேள்விக்கு முழுமையான விடை கிடைக்கும்.

1 யோவான் 5:16,17  மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

மரணத்திற்கேதுவல்லாத பாவங்கள் உண்டென வசனம் சொல்கிறதல்லவா? எனவே அப்பாவங்களைச் செய்தவர்கள் இயேசுவின் 1000 வருட ராஜ்யத்தில் திருத்தப்பட்டு நித்தியஜீவனைப் பெறமுடியும்.

நீங்கள் சொல்கிறபிரகாரம் நம்மிடம் சில பாவங்கள் இருந்தாலும், பிறரை மன்னித்தல் எனும் சுபாவம் நமக்குக் கட்டாயம் வேண்டும். அப்படி மன்னிக்கவில்லையெனில், நம் பாவங்களும் நிச்சயமாக மன்னிக்கப்படாது என நான் சொல்லவில்லை, இயேசு சொல்கிறார்.

அடுத்து, இரக்கம் எனும் சுபாவமும் நம்மிடம் கட்டாயம் வேண்டும். இரக்கம் இல்லாவிடில் இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும் என நான் சொல்லவில்லை, இயேசுவால் அப்போஸ்தலரென அழைக்கப்பட்ட யாக்கோபு கூறுகிறார்.

மன்னித்தல், இரக்கம் எனும் 2 சுபாவங்களுக்கும் அடிப்படை அன்பு. எனவேதான் அன்புகூருதல் எனும் கற்பனையை இயேசு பிரதானப்படுத்தியுள்ளார், பவுலும் அன்பே பிரதானம் என்கிறார்.
ஆக, மன்னித்தல் இரக்கம் எனும் 2 கிரியைகள் இல்லாதவர்களிடம் தேவகிருபை பலிக்காது என்றே வசனம் கூறுகிறது. அப்படிப்பட்டவர்கள் நித்திய ஜீவனை இழக்கக்கூடிய அபாயம் நிச்சயமாக உண்டு. எனவேதான் அவற்றைக் குறித்து நான் அதிகமாகச் சொல்லி எச்சரிக்கிறேன். இப்படி எச்சரித்தால், நீ என்ன பெரிய யோக்கியனா எனக் கேள்விகேட்கிறீர்கள். நீ சுயநீதியை நம்புகிறாய், உன்னை நீயே மேன்மைப்படுத்துகிறாய் என்றெல்லாம் சொல்லி, என்மீது சுயநீதிக்காரன் எனும் முத்திரையைக் குத்துகிறீர்கள்.

sundar wrote:
//இங்குதான் கிரியையின் பலனற்ற நிலை தெரியவரும்.//

கிரியை என்பது நம் கையிலுள்ளது. கிருபை என்பது தேவனின் கையிலுள்ளது. அவர் தமது கிருபையை இயேசுவின் மூலம் ஏற்கனவே செய்துமுடித்துவிட்டார். அந்தக் கிருபை நம்மெல்லோருக்கும் ஏற்கனவே கிடைத்தும்விட்டது. அக்கிருபைக்காக நாம் தேவனை எவ்வளவாய் ஸ்தோத்தரித்தாலும் அது தகும். அதற்காக கிருபை இருக்கிறதே என நினைத்து கிரியையில் அலட்சியமாயிருந்தால், கிருபை பலனற்றதாகிவிடும் என்பதே உண்மை. மத்தேயு 5:14,15; யாக்கோபு 2:13 வசனங்களை மீண்டும் படித்துப் பாருங்கள்.

sundar wrote:
//உங்களின் நன்னடத்தைகளும் நற்கிரியைகளும்  அவசியமே அதற்க்கு பலன் நிச்சயம்  உண்டு. ஆகிவும் அதற்காக  நல்லவன் மட்டும்தான் நித்தியஜீவனை பெறுவான் தீயவன் எல்லோரும் அழிந்துபோக  வேண்டுமென்று எண்ணுவது  தேவனின் இரக்கத்துக்கு எதிரான செயல்.//

எனது எழுத்துக்களை மட்டுமே படித்த நீங்கள், எனது நன்னடத்தை மற்றும் நற்கிரியைக்கு எப்படி சாட்சி கூறுகிறீர்கள்? என்னோடு நன்கு பழகி என்னைப் பற்றி நன்கறிந்தால்கூட “காலத்துக்கு முன்னே யாதொன்றையும் குறித்து தீர்ப்பு சொல்லாதிருங்கள் (1 கொரி. 4:5)”. தேவனால் நான் நற்சாட்சி பெறவே விரும்புகிறேனேயன்றி, மனிதரால் அல்ல.

தீயவன் அழிவான் என வேதம் சொன்னதை எடுத்துரைத்தால், தீயவன் அழியவேண்டும் என நான் விரும்புவதாக ஆகிவிடுமா? தீயவன் அழியக்கூடாது என நீங்கள் நினைப்பதால், தேவன் தீயவனை அழிக்காமல் இருக்கப்போவதுமில்லை, தீயவன் அழியவேண்டும் என நான் எண்ணுவதால் தேவன் அவனை அழிக்கப்போவதுமில்லை.

வசனம் என்ன சொல்கிறதோ அதுதான் நடக்கப்போகிறது. எனவே வசனத்துக்குக் கீழ்ப்படியுங்கள் என நான் சொல்கிறேன். இது தவறா?

sundar wrote:
//தேவன் எல்லோரையும் மீட்டுவிடுவார் என்று சொல்லி  தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட காரியங்களை கவனியாதிருக்கும் நண்பர்களை நான் ஏற்ப்பதில்லை அதே நேரத்தில் தேவன் எல்லோரையும் மீட்ககூடாது நியாயம் நீதி செய்பவர்களை மட்டும்தான் மீட்கவேண்டும் என்று விரும்புகிறவர்களும் தேவனின் இருதயநிலைக்கு ஏற்றவர்கள் அல்ல என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.//

தேவன் எல்லாரையும் மீட்டுவிடுவார் என்றும் நான் சொல்லவில்லை, நீதி நியாயம் செய்வோரைத்தவிர மற்றவர்களை தேவன் மீட்கக்கூடாது என்றும் நான் சொல்லவில்லை. வசனம் சொல்கிறபடி நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என்று மட்டுந்தான் சொல்கிறேன். தயவு செய்து இம்மாதிரி தேவையற்றதும் அபாண்டமானதுமான கருத்துக்களைச் சொல்லி உங்கள்/எனது நேரத்தை இனி வீணடிக்காதீர்கள்.

sundar wrote:
//தேவனின் எதிர்பார்ப்பு என்ன என்பதை ஆராய்ந்து அவரின் சிந்தை நமக்கும் உண்டாயிருக்க வேண்டும். "ஒருவரும்  கெட்டுபோக கூடாது என்பதுதான் தேவனின் விருப்பம்". அதுவே நமது விருப்பமாகவும் அது நிறைவரவேண்டும் என்று வாஞ்சிப்பவர்களாகவுமே எந்நாளும் இருக்கவேண்டும்.//

ஒருவரும் கெட்டுப்போகக் கூடாது என தேவன் விருப்பப்பட்டாலும் சரி, நீங்களும் நானும் விருப்பப்பட்டாலும் சரி, இறுதியில் தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பின்படிதான் ஒருவன் கெட்டுப் போவான், அல்லது பிழைப்பான். தேவனின் விருப்பம் வேறு, நீதியான நியாயத்தீர்ப்பு வேறு. பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

எசேக்கியேல் 18:23 துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

மல்கியா 4:1 இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


ஒருவரும் கெட்டுப்போகக்கூடாது என்பதே தேவனின் விருப்பமென்பது எசேக்கியேல் தீர்க்கதரிசி காலத்திலேயே கூறப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல, துன்மார்க்கன் மனந்திரும்பி பிழைக்க வேண்டும் என்பதும் தேவனின் விருப்பம்தான். ஆனால் இந்த 2-வது விருப்பத்தை நாம் மறந்துவிட்டு, அவரது முதல் விருப்பத்தின்படி ஏதேனும் செய்து நாம் கெட்டுப்போகாதபடி பார்த்துக் கொள்ளட்டும் என நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நடக்கப்போவது எது? நாம் மனந்திரும்பாவிடில், மல்கியா 4:1-ன் நடக்கும் என்பதே உண்மை.

sundar wrote:
//அவர் எச்சரிக்கிறார் அது உண்மைதான்! அதற்காக அவர் எல்லோரையும் அப்படியே கீழ்ப்படியாதவர்களை அழிவில் விட்டுவிடுவார் என்று கருதுவதும் தவறு; அதே நேரத்தில் அவர் இப்படித்தான் எச்சரிப்பார் ஆனாலும் நாள் நாம் துன்பப்படும்போது எப்படியும் நம்மை காப்பாற்றுவார் என்றெண்ணி அவர் எச்சரிப்பை கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு.//

அன்பான சகோதரரே! எல்லோரையும் நியாயந்தீர்க்கப்போவது கிறிஸ்துவின் வசனங்கள்தானேயொழிய உங்கள்/எனது விருப்பங்கள் அல்ல. பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

2 தெச. 1:7-10 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு .... வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே .... அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

கீழ்ப்படியாதவர்கள் நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள் என வேதவாக்கியம் சொல்லும்போது, சகோ.சுந்தர் சொல்கிறாரே என்பதற்காக கீழ்ப்படியாதவர்களை அழிவில் விடமாட்டார் என நான் கருத முடியுமா? நீங்கள் வேண்டுமானால் அவ்வாறு கருதி தேவநீதிக்கு எதிர்த்து நில்லுங்கள். நான் நிச்சயமாக அப்படி கருதமுடியாது.

sundar wrote:
//நீங்கள் என்னவென்றால் ஏதாவது சில வசனங்களை காண்பித்து மற்றவர்களை குற்றவாளி என்று தீர்ப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.//

இப்படி பொதுப்படையான விமர்சனத்தைக் கூறாமல், நான் மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறபடியான எனது ஒரு பதிவை தனியே எடுத்துக் காண்பியுங்கள்; அதன்பின் அதற்குப் பதில்சொல்கிறேன்.

sundar wrote:
//பரிசுத்தமான தீர்க்கதரிசி  எசேக்கியேலை கர்த்தர் அழைத்து எவனோ இஸ்ரவேலரும்  யூதாவினரும் ஆண்டுகணக்கில்  செய்த அக்கிரமத்தை சுமக்க சொல்கிறார். அக்கிரமம் செய்தவன் எவனோ அனால் இங்கு அவர்களுக்கான சுமையை சுமப்பவன் எவனோ. இங்கு எசேக்கியேல் "எவன் அக்கிரமத்தையோ என்னை சுமக்க சொல்கிறீர்களே ஆண்டவரே, அவனவன் அக்கிரமத்தை அவனனவன் தலையில் சுமத்தும்"  என்று சொல்லி தேவனுக்கு எதிர்த்து பேசவில்லை. கேள்வியேதும் கேட்காமல் சுமந்தான். அங்கு தேவனின் மிகபெரிய திட்டம் நிறைவேறியது.//

எசேக்கியேல் தீர்க்கதரிசியிடம் தேவன் சொன்ன காரியங்கள் அனைத்தும் அடையாளங்களாகும் (அல்லது மாதிரிகளாகும்). வசனம் 3-ஐப் படித்துப் பாருங்கள். இஸ்ரவேலரின் அக்கிரமத்தை அடையாளமாகத்தான் எசேக்கியேல் சுமந்தார். எசேக்கியேலின் அச்செயலால் இஸ்ரவேலரின் அக்கிரமத்தின் பலன் நீங்கிவிடவில்லை. வசனங்கள் 13,16,17 மற்றும் 5-ம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள். இவற்றிற்கெல்லாம் ஓரிரு வரிகளில் பதில் சொல்லிவிடமுடியாது. இஸ்ரவேலரின் அக்கிரமத்தின் பலன் இஸ்ரவேலரிடம்தான் விழுந்தது, எசேக்கியேல் அதற்கு அடையாளமாக 430 நாட்கள் தேவன் சொன்னபடி சில காரியங்களைச் செய்தார்.

எசேக்கியேலின் கீழ்ப்படிதல் நிச்சயம் பாராட்டுக்குரியதுதான். அதுபோலவே நாமும் கீழ்ப்படிய வேண்டும் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால், நீங்கள் சொல்வதுபோல் இஸ்ரவேலரின் அக்கிரமத்தின் முழுபலனையும் எசேக்கியேல் மீது தேவன் சுமத்தவில்லை. இம்மாதிரி வேதபகுதிகளுக்கு நாம் ஓரிரு வரிகளில் வியாக்கியானம் கொடுத்துவிடவும் முடியாது; திட்டமாகத் தெரியாமல் எதையும் சொல்லிவிடவும் கூடாது.

தேவனின் மிகப்பெரிய திட்டம் நிறைவேறியதாகச் சொல்கிறீர்கள். அத்திட்டத்தை சற்று விளக்கமாக வேதாகம தீர்க்கதரிசனங்கள் என்ற பகுதியில் ஒரு திரி துவக்கி பதியும்படி வேண்டுகிறேன்.

sundar wrote:
//1. தேவன் தனக்கு ஏனென்று கேட்காமல் கீழ்படியும் ஒரே ஒருவரை வைத்து  எல்லா காரியங்களும் சாதித்துவிட முடியும் 

2. நம்மை பயன்படுத்தி அல்லது நம்மை துன்பத்துக்கு ஒப்பு கொடுத்து அதனால்  ஒரு ஆத்துமாவை மீட்க தேவன் சித்தமாக. இருந்தாலும் அதற்க்கு நாம் மகிழ்ச்சியோடு உடன்படவேண்டும்.//


இவ்விரு குறிப்புகளிலும் ஏதோவொரு தவறான கருத்து இருப்பதாகத்தான் எனக்குத் தெரிகிறது. உங்கள் கருத்தை இன்னும் சற்று தெளிவாகச் சொன்னால் நல்லது.

sundar wrote:
//தேவனிடம் நியாயம் பேசிக்கொண்டு இருப்பது சரியானது அல்ல!//

நான் அப்படிப் பேசவில்லை.

sundar wrote:
//நாம் மட்டும் தப்பித்துவிட வேண்டும், அல்லது அவர் வார்த்தைகள்படி  நடப்பவர் மட்டுமே   தப்பிக்க  வேண்டும் என்று  இருக்குமாயின், அது சுயநீதி அடிப்படையில் தேவநீதியை தேடுவதே  அதனால் பயனேதும் இல்லை!//

என்ன சகோதரரே! நான் மட்டும் தப்பிக்கவேண்டும் என நினைத்தா, இத்தனை சிரத்தையெடுத்து இப்பதிவுகளை நான் தந்துகொண்டிருக்கிறேன்?

தேவவார்த்தையின்படி நடப்பவர் மட்டுமே தப்பிக்கவேண்டும் என இயேசு சொல்கிறார். அவருக்கும் மேலாக நான் சொல்ல என்ன இருக்கிறது?

மத்தேயு 7:24-27 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

மத்தேயு 13:40-43 ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.


-- Edited by anbu57 on Monday 15th of March 2010 06:27:50 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

ஒரு கீழ்படியும் வாழ்க்கையை  வாழ்ந்தாலும் நான் மேன்மை பாராட்ட இங்கு எதுவும்  இல்லை!   என்னை நிலைநிருத்துகிறவர் கர்த்தரே! அவரின் கிருபை இல்லாமல் என்னால் ஒரு நாள்கூட  நிற்கமுடியாது  நான் ஒன்றுமில்லை  என்றே கருதுகிறேன். அவராலே எல்லாம் ஆகும்!
 
ரோமர் 9:16 ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
I கொரிந்தியர் 9:15  இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்
 
என்று கருதி என்னுடைய நன்னடத்தயிநிமித்தம் நான் எங்கும் மேன்மை பாராட்டுவதும், நான் சரியாக நடக்கிறேன் எனவே சரியாக நடக்காதவர்கள் தகுதியற்றவர்கள் என்று கருதாமல் அனைவரின்  மீட்புக்காகவும் ஜெபிபதோடு,   தேவன் எல்லோரையும் மீட்டுவிட வேண்டும் ஒருவரும் கெட்டுபோககூடாது  என்றும்  கண்ணீரோடு மன்றாடுகிறேன். இதுதான் "அன்பு" என்ற சொல்லுக்கு வரும் பொருள்  என்று நான் கருதுகிறேன்.  தன்னை அடிப்பவனையும் மிதிப்பவனையும் துன்மார்க்கமாய் நடப்பவனையும் கூட மன்னித்து அவர்களுக்கும் எதுவும் தீமை  நடந்துவிடகூடாது  கெஞ்சுவதுதான் உண்மையான அன்பு. அதைதான் இயேசு செய்தார்.  
 
லூக்கா 23:34 அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே  
 
ஒருபுறம் துன்மார்க்கமாய் நடந்துகொண்டவர்களை  கடிந்துகொண்டாலும் ஒருபுறம்  கண்ணீர்விட்டு  அழுதார். அதுதான்  உண்மை அன்பு மற்றும் இரக்கம் என்பது    
 
லூக்கா 19:41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,

துன்மார்க்கன் அழிவான் என்று வசனம் சொல்கிறது எனவே அவன்  நிச்சயம்  அழித்தே  ஆகவேண்டும்  என்று  வாதிட்டு நான் அன்பு நிறைந்தவன் என்று சொல்வது  .எதிர்மறையான  கருத்து என்றே கருதுகிறேன். .
 
உண்மையான் அன்பு என்ன செய்யும்? தன்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கும்!. தான் எவ்வாறு மீட்கப்படவேண்டும் என்று விரும்புகிறோமோ அதேபோல் எல்லோரும் எவ்விதத்திலாவது மீட்கப்படவேண்டும் என்றுதான்   நினைக்கும் அதுதான் உண்மையான அன்பு. மற்றபடி (வேதவார்த்தையின் அடிப்படையில்கூட)  பிறரை நியாயம்தீர்க்க   நினைக்கும்  நிலையென்பது  தனைப்போல் பிறரை நேசிக்க சொல்லும்  இயேசுவின் முதல் கட்டளையே 
சரியாக கைகொள்ளாத  நிலை என்றுதான் பொருள்படும் என்று நான் கருதுகிறேன்.       
 
உபாகமம் 32:35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; 
 
என்று  கர்த்தர் சொல்கிறார் அவர் அதை செய்ய தகுதியுடையவர் அவரை ஏனென்று நம்மால் கேட்கமுடியாது. . ஆனால் மனிதர்களாகிய  நமக்கு, நம்மைபோன்ற  சக மனிதர்களை  மன்னிப்பதும்  எல்லோரையும் மன்னிக்கும்படி  வேண்டுவதும்  மட்டுமே தகுதியானது. 
 
I தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

முரட்டாட்டம் செய்த இஸ்ரவேல் ஜனங்களால் கோபமடைந்த  தேவன்

12. நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

இதை கேட்ட மோசே ஆ! ஆண்டவரே சொல்லிவிட்டார், அப்படியே செய்யும் இதில்  இடையில்  நான் சொல்ல என்ன இருக்கிறது எனக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தால்  போதும்  என்று  விலகிவிடவில்லை  
 
19. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். 20. அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

என்றார். இங்கு மோசே மிகுந்த சாந்த குணம் உள்ளவன் என்று பெயர்பெற்றான். அதுபோல் அழிப்பதும் அழிக்காதிருப்பதும்  தேவனின் விருப்பம்.  மனுஷனாகிய நம்மை  பொறுத்தவரை  எப்பொழுதும்  தாழ்மையோடு  தன் ஜனங்களுக்காக மன்றாடும்   நிலையிலேயே இருக்கவேண்டும் அதுதான் உண்மையான அன்பு என்று நான் கருதுகிறேன். தானியேல் நெகேமியா  சாமுவேல்   போன்றவர்கள் அதைதான் செய்தார்கள்.  
 
உங்கள் வாழ்க்கை நிலைபற்றி எனக்கு தெரியாது வசனத்தின் மேல் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அதை கைகொள்ளுகிறேன் என்று ஆணித்தரமாக வாதிடும்முறை இவற்றை கருத்தில் கொண்டு தங்களைவிட நான்  தகுதியற்ற நிலையில் நான்  இருந்தால்  சில ஆலோசனைகளை பெறலாமோ என்ற கருத்திலேயே  என்னுடைய நிலையே நான் எழுதினேன் மற்றபடி எவ்விதத்திலும் மேன்மைபாராட்ட அல்ல! 
 
உங்கள் கொள்கையில் எவ்விதத்திலும்  நான்  தலையிட விரும்பவில்லை. எனக்கு  வசன ஆதாரத்துடன் விளக்கம் தந்து  தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்கிறேன்.
 
"எழுத்து கொல்லும் ஆவிதான் உயிர்ப்பிக்கும்"  
 
நன்றி!


-- Edited by SUNDAR on Friday 12th of March 2010 06:14:59 PM

-- Edited by SUNDAR on Saturday 13th of March 2010 06:43:31 AM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே!

உங்கள் பதிவுக்கு வரிக்கு வரி பதில் தந்தபோதிலும் அவற்றைக் குறித்து எதுவும் எழுதாமல் மீண்டும் பழைய பல்லவியையே பாடியுள்ளீர்கள். ஏதோ நான் மேன்மை பாரட்டுவதாகவும், இரக்கம்/அன்பு இல்லாமல் எல்லோரும் அழிவுக்குப் போகவேண்டுமென நினைப்பதாகவும், எல்லோரும் பழிவாங்கப்படவேண்டும் என நினைப்பதாகவும் கருதி பல வசனங்களைப் பதித்து அவற்றிற்கு விளக்கமும் தந்துள்ளீர்கள்.

உங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானவை, அவற்றை நான் மறுக்கிறேன்.

ஒரு புதைகுழி அருகே, “இங்கு செல்லாதே, சென்றால் உயிரை இழப்பாய்” என ஓர் எச்சரிக்கை பலகை வைத்திருந்தால், “இந்தப் பலகைக்கு அன்பே இல்லை, என்னைப் பார்த்து உயிரை இழப்பாய் என்கிறதே!” என்று சொல்வீர்கள் போலிருக்கிறது.

தேவன் முதன்முதலாக மனிதனிடம் சொன்ன கட்டளை: “இக்கனியைப் புசிக்காதே, புசித்தால் சாகவே சாவாய்” என்பதுதானே? தேவன் இப்படிச் சொன்னதால் அவரையுங்கூட அன்பில்லாதவர் எனச் சொல்வீகள் போலும்.

sundar wrote:
//உங்கள் கொள்கையில் எவ்விதத்திலும்  நான்  தலையிட விரும்பவில்லை.//

உங்கள் கொள்கை எனது கொள்கை என பிரித்துப் பார்க்குமளவு, தனிப்பட்ட முறையில் வேதவசனத்திற்கு அப்பாற்பட்டு நான் என்ன எழுதியுள்ளேன்? அதை தனியே எடுத்துக்காட்டும்படி வேண்டுகிறேன். அப்படி எடுத்துக்காட்ட மனமில்லையெனில், இம்மாதிரி வார்த்தைகளை இனி பயன்படுத்தாதீர்கள்.

sundar wrote:
//உங்கள் வாழ்க்கை நிலைபற்றி எனக்கு தெரியாது வசனத்தின் மேல் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அதை கைகொள்ளுகிறேன் என்று ஆணித்தரமாக வாதிடும்முறை இவற்றை கருத்தில் கொண்டு தங்களைவிட நான்  தகுதியற்ற நிலையில் நான்  இருந்தால்  சில ஆலோசனைகளை பெறலாமோ என்ற கருத்திலேயே  என்னுடைய நிலையே நான் எழுதினேன் மற்றபடி எவ்விதத்திலும் மேன்மைபாராட்ட அல்ல!//

கற்பனைகளை நான் கைக்கொள்கிறேன் என ஆணித்தரமாக ஒருபோதும் நான் வாதிடவில்லை. இதுவும் ஓர் அபாண்டமான கூற்றுதான்.

sundar wrote:
//இவ்வாறு ஒரு கீழ்படியும் வாழ்க்கையை  வாழ்ந்தாலும் நான் மேன்மை பாராட்ட இங்கு எதுவும்  இல்லை!   என்னை நிலைநிருத்துகிறவர் கர்த்தரே! அவரின் கிருபை இல்லாமல் என்னால் ஒரு நாள்கூட  நிற்கமுடியாது  நான் ஒன்றுமில்லை  என்றே கருதுகிறேன். அவராலே எல்லாம் ஆகும்!

ரோமர் 9:16 ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
I கொரிந்தியர் 9:15  இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்

என்று கருதி என்னுடைய நன்னடத்தயிநிமித்தம் நான் எங்கும் மேன்மை பாராட்டுவதும், நான் சரியாக நடக்கிறேன் எனவே சரியாக நடக்காதவர்கள் தகுதியற்றவர்கள் என்று கருதாமல் அனைவரின்  மீட்புக்காகவும் ஜெபிபதோடு,   தேவன் எல்லோரையும் மீட்டுவிட வேண்டும் ஒருவரும் கெட்டுபோககூடாது  என்றும்  கண்ணீரோடு மன்றாடுகிறேன். இதுதான் "அன்பு" என்ற சொல்லுக்கு வரும் பொருள்  என்று நான் கருதுகிறேன்.  தன்னை அடிப்பவனையும் மிதிப்பவனையும் துன்மார்க்கமாய் நடப்பவனையும் கூட மன்னித்து அவர்களுக்கும் எதுவும் தீமை  நடந்துவிடகூடாது  கெஞ்சுவதுதான் உண்மையான அன்பு. அதைதான் இயேசு செய்தார்.//


உங்கள் கீழ்ப்படிதலை எழுதி, அதன் பின்னே ஓர் முடிவுரையையும் எழுதி, அதில் எனக்கு ஒரு பாடத்தையும் சொல்லிவிட்டு, பின்னர் உங்கள் கீழ்ப்படிதல் பற்றி எனது ஆலோசனையையும் கேட்டுள்ளீர்கள். உங்களின் இந்த அணுகுமுறை சரியல்ல சகோதரரே!

sundar wrote:
//"எழுத்து கொல்லும் ஆவிதான் உயிர்ப்பிக்கும்"//

இவ்விஷயத்தில் ஒன்றைச் சொல்லவிரும்புகிறேன் சகோதரரே!

சுருக்கமாக வெளியிடப்படும் பல வேதபகுதிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட அதிக வாய்ப்புண்டு. எனவே இம்மாதிரி வெளியிடுகையில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும்.

“அன்பே பிரதானம்” என்ற 2 வார்த்தைகள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதால் அவற்றை தனியே வெளியிடுவதால் யாரும் இடறலடையப் போவதில்லை. ஆனால், “நீங்கள் சாகவே சாவதில்லை” என்ற சொற்றொடரில் 3 வார்த்தைகள் உள்ளபோதிலும், இவற்றை தனியே வெளியிடுகையில் விவரமறியாத பலர் இடறலடைய வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் இடறலடைந்தால் அதை வெளியிட்டவர் தேவனிடம் கணக்கு ஒப்புவிக்கவேண்டியதிருக்கும்.

நான் கேட்ட சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் தரவில்லை. அவை:

anbu57 wrote:
//யார் தேவனின் பிள்ளைகள், யார் சாத்தானின் பிள்ளைகள்? மரித்தவர்களில் எவர்களை சாத்தானிடம் தேவன் ஒப்படைப்பார்? எவர்களை தமது நியாயத்தீர்ப்புக்குக் கொண்டு செல்வார்?//


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

உணர்த்துதலுக்காக எழுதிய சில வரிகளை எனது முந்தய  பதிவிலிருந்து நீக்கிவிட்டேன்.


/////உங்கள் கீழ்ப்படிதலை எழுதி, அதன் பின்னே ஓர் முடிவுரையையும் எழுதி, அதில் எனக்கு ஒரு பாடத்தையும் சொல்லிவிட்டு, பின்னர் உங்கள் கீழ்ப்படிதல் பற்றி எனது ஆலோசனையையும் கேட்டுள்ளீர்கள். உங்களின் இந்த அணுகுமுறை சரியல்ல சகோதரரே!////


உங்களுக்கு பாடம் சொல்வதை விட எது உண்மை அன்பு எது உண்மை கீழ்படிதல் என்று நான் எண்ணிக்கொண்டு இருக்கிறேன் என்பதையே நான் விளக்கினேன்  

நானும் வசன ஆதாரங்களுடன்தான் பதில் தருகிறேன் ஆனால் எந்த வசனங்களை எடுத்தாலும் அதை அப்படி தீர்மானிக்ககூடாது இதை இப்படி எடுக்ககூடாது  அதற்க்கு தவறான பொருள் வந்துவிடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு வாத்தியார்போல கூறுவதால்,  உங்களில் நிலை என்னவேற்று என்னால் புரியமுடியவில்லை. எது சொன்னாலும் அபாண்டம்  என்று வேறு சொல்கிறீர்கள். புரியாத ஒரு கருத்தைபற்றி விமர்சிப்பது  தவறு என்று கருதுகிறேன் எனவே   வரிக்கு வரி பதில்  தருவதில் பயனில்லை       
 
நமக்கு தெரிவிக்கப்பட்ட பல்லவியைத்தான் பாட முடியும். தெரியாத பல்லவியை துணித்து பாடமுடியாது. எனவே எனக்கு தெரிந்ததை திருப்ப திரும்ப சொன்னேன்.

தேவன்  கையில் விட்டுவிடுவோம் நன்றி!
 
 

-- Edited by SUNDAR on Saturday 13th of March 2010 09:10:41 AM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

அன்பான சகோதரர்களே!

இதுவரை சகோ.சுந்தர் அவர்களுடனான விவாதத்தில், இத்திரியின் தலைப்பு சம்பந்தமான ஒரு முக்கியமான வசனத்தைப் பார்த்தோம். இவ்வசனம் இயேசு நேரடியாகச் சொன்னதாகும். அது:

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

தேவன் மனிதனின் தப்பிதங்களை மன்னிக்கவேண்டுமெனில், அவர் மனிதனிடம் எதிர்பார்க்கிற ஒரு நிபந்தனையை அவன் நிறைவேற்றியேயாக வேண்டும். தேவன் கிருபையுள்ளவர், இரக்கமுள்ளவர், அன்புள்ளவர் என்றெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லி பிறரை மகிழ்வித்து நாமும் மகிழ்கிற நாம், அவர் நீதியுள்ளவர் என்பதைச் சொல்வதற்கு ஏனோ தயங்குகிறோம். தேவன் நீதியுள்ளவராக இருப்பதால், அவர் நம் தப்பிதங்களை மன்னிக்க வேண்டுமெனில், நாம் பிறரது தப்பிங்களை மன்னித்தேயாக வேண்டும் எனும் நிபந்தனையை விதித்துள்ளார்.

தேவனின் இந்நீதியை நாம் புரிந்துகொள்ள ஏதுவாக மத்தேயு 18:23-35 வசனங்களில் இயேசு ஓர் உவமையைச் சொல்லியுள்ளார். இவ்வுவமை நம்மில் அனேகர் நன்கறிந்த ஓர் உவமைதான். இந்த உவமையில் ஒரு ராஜா, அவனிடம் பதினாயிரம் தாலந்து கடன்பட்ட வேலைக்காரன், அந்த வேலைக்காரனிடம் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்ட அவனது உடன் வேலைக்காரன் என 3 பாத்திரங்களைப் பார்க்கிறோம்.

ராஜாவிடம் பதினாயிரம் தாலந்து கடன்பட்ட வேலைக்காரன் தனது கடனுக்காக பொறுமையாயிருக்கும்படி ராஜாவிடம் வேண்டினபோது, ராஜா அவனது கடன் முழுவதையும் மன்னித்து அனுப்பினான். ஆனால் அவன் தன்னிடம் 100 வெள்ளிப்பணம் கடன்பட்ட தனது உடன் வேலைக்காரனைப் பிடித்து, அவனிடம் மிகக் கடுமையாக நடந்து தனது கடனைக் கேட்டான். அந்த உடன் வேலைக்காரன் தன்னிடம் பொறுமையாயிருக்கும்படி எவ்வளவோ கெஞ்சியும், அவன் அவனைக் காவலில் போட்டுவித்தான்.

இதைக் கேள்விப்பட்ட ராஜா, மிகுந்த கோபமடைந்து, அந்த வேலைக்காரன் தனது கடனைக் கொடுத்து தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புவித்தான்.

இந்த உவமையைச் சொல்லி முடித்த இயேசு இறுதியில் பின்வருமாறு கூறினார்.

மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.

இயேசுவின் இந்த உவமை, பரலோக ராஜ்யத்தைக் குறித்த ஓர் உவமையே (வசனம் 23). எனவே, தங்கள் சகோதரனின் தப்பிதங்களை மன்னிக்காத அனைவரும், தங்கள் தப்பிதங்கள் மன்னிக்கப்படாமல், பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் உரிமையை இழப்பார்கள் என திட்டவட்டமாக அறிகிறோம்.

இத்தனை தெளிவாக இயேசு கூறியுள்ள இம்மாதிரி சத்தியங்களை எடுத்துச் சொல்லி ஜனங்களை எச்சரிக்காமல், இன்றைய ஊழியர்களில் பலர் ஜனங்களுக்கு போலியான மகிழ்வைத் தருகிற காரியங்களையே மீண்டும் மீண்டும் சொல்லி ஜனங்களுக்கு இடறலை வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒருசில ஊழியர்கள் அழிந்துபோகும் இவ்வுலகக் காரியங்களையே மீண்டும் மீண்டும் சொல்கின்றனர்.

மற்றும் சிலர், தேவகிருபை மட்டும் போதும், நாம் எதுவும் செய்யவேண்டியதில்லை, நம்மனைவருக்கும் நித்திய ஜீவன் உண்டு என்று சொல்கின்றனர்.

மற்றும் சிலர், தேவகிருபையோடு நம் கிரியையும் வேண்டும்தான், ஆனால் அதைப் போதிக்கும்போது அன்போடு போதிக்கவேண்டும், பாவத்தின் தண்டனைகளைச் சொல்லி மிரட்டக்கூடாது, அன்புள்ள தேவன் எல்லா பாவங்களையும் மன்னிக்கக்கூடியவரென்பதால், இப்படிச் செய்தால் இதுதான் தண்டனை எனும் கடுமையான வார்த்தைகளைக் கூறவேண்டாம் என்கின்றனர்.

அதாவது ஜனங்களின் மனதை நோகச்செய்யாமல் போதிக்கவேண்டும், அதுதான் அன்பு என்கின்றனர். இப்படியெல்லாம் இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது பின்வரும் வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

எசேக்கியேல் 13:10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

அன்றைய பொய்த்தீர்க்கதரிசிகள் ஜனங்களிடம் எதைச் சொன்னதன் மூலம், மண்சுவரை வைத்து, சாரமில்லாத சாந்தினால் அதைப் பூசினார்கள்? பின்வரும் வசனத்தைப் படிப்போம்.

எரேமியா 14:13-15 அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.


மெய்யான தீர்க்கதரிசியாகிய எரேமியா, ஜனங்களுக்கு வரப்போகிற ஆபத்துக்களைச் சொல்லி எச்சரித்தார். ஆனால் பொய்யான தீர்க்கதரிசிகளோ, இரக்கமுள்ளவராகிய தேவன், அம்மாதிரி ஆபத்துக்களை வருவிக்கமாட்டார், சமாதானத்தைத்தான் தருவார் என்று சொன்னதன் மூலம், மண்சுவரை வைத்து, சாரமில்லாத சாந்தை பூசினர்.

இதேவிதமாகத்தான் இன்றைய பல பொய் ஊழியர்களும் இல்லாத சமாதானத்தைச் சொல்லி ஜனங்களை மோசம்போக்கி வருகின்றனர்.

தேவன் இரக்கமுள்ளவர்தான், கிருபையுள்ளவர்தான். ஆனால் அந்த இரக்கத்தை எப்போது காட்டுவார், உக்கிரகோபத்தை எப்போது காட்டுவார் என்பதை வகையறுத்துச் சொல்பவன்தான் ஜனங்களின்மீது மெய்யாகவே கரிசனையுடைய ஊழியன்.

இயேசு சொன்ன உவமையில், அடுத்தவனை மன்னிக்காத வேலைக்காரன் மீது ராஜா கோபமடைந்தான் என வசனம் 34-ல் கூறுகிறார். இதேவிதமாகத்தான் நம் பரமபிதாவும் செய்வார் என வசனம் 35-ல் கூறுகிறார். எனவே பிறரது தப்பிதங்களை நாம் மன்னிக்காவிடில், பரமபிதா நம்மீது கோபமடைந்து நம் தப்பிதங்களை மன்னிக்கமாட்டார் என்பதே உண்மை.

இப்படியாக இயேசு தெளிவாகக் கூறியிருக்கையில், தேவன் கிருபையுள்ளவர், அவர் நம் எல்லா பாவங்களையும் மன்னித்துவிடுவார் என மீண்டும் மீண்டும் சொல்லி ஜனங்களின் மனதுக்கு இதமான காரியங்களைச் சொல்லி, தாங்கள்தான் ஜனங்கள்மீது மிகுந்த அன்புள்ளவர்கள் என்பதுபோல சிலர் காட்டிக்கொள்கின்றனர்.

மாத்திரமல்ல, மத்தேயு 18:35-ஐச் சுட்டிக்காட்டி ஜனங்களின் எல்லா தப்பிதங்களையும் நாம் மன்னிக்கவேண்டும், அதுதான் மெய்யான அன்பு என்றும் சொல்கின்றனர்.

ஜனங்களின் எந்தெந்த தப்பிதங்களை நாம் மன்னிக்கவேண்டும், எந்தெந்த தப்பிதங்களை நாம் மன்னிக்கவேண்டியதில்லை என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


-- Edited by anbu57 on Monday 15th of March 2010 06:29:34 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

மனிதர்களை மன்னிக்க சொல்லி விட்டு, தேவன் மன்னியாது இருந்தார் என்றால் எப்படி! அவர் போதிப்பது ஒன்று நடந்து கொள்வது வேற் மாதிரியா!! தேவன் நீதியுள்ளவர் என்பது அவரது கோபத்தை அல்ல மாறாக அவரின் அன்பை தான் வெளிப்படுத்துகிறது. வசனங்களை சரியாக புரிந்துக்கொள்ளாமல், தேவனை ஒரு பயங்கரமானவர் போல் தோற்றத்தை கொடுப்பவர்கள் பிரசிங்கியார்கள் தான். தேவனை பற்றியான உண்மையான புரிந்துக்கொள்ளுதலே இராஜியத்தில் தான் நடக்கும். அது வரை பொறுத்திருப்போம்!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:
//மனிதர்களை மன்னிக்க சொல்லி விட்டு, தேவன் மன்னியாது இருந்தார் என்றால் எப்படி! அவர் போதிப்பது ஒன்று நடந்து கொள்வது வேறு மாதிரியா!!//

வசனங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்கிறீர்கள்.

“நீங்கள் மன்னித்தால் பரமபிதா மன்னிப்பார், நீங்கள் மன்னியாவிட்டால் பரமபிதா மன்னிக்கமாட்டார்” என்ற நிபந்தனையோடு இயேசு சொல்லியுள்ளபோதிலும், கொஞ்சமும் “Logic" இல்லாமல் “நம்மை மன்னிக்கச்சொல்லிவிட்டு அவர் மன்னியாதிருந்தால் எப்படி” எனும் கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.

நம்மை மன்னிக்கச்சொன்னபடி நாம் மன்னித்தால்தான், அவர் நம்மை மன்னித்து விடுவாரே! நாம் மன்னிக்காவிட்டால்தான் அவர் நம்மை மன்னிக்கவிட்டார். எத்தனை தெளிவாக ஒர் உதாரணத்தோடு விளக்கிச் சொல்லியிருந்தும், அவர் மன்னியாதிருந்தால் எப்படி எனக் கேட்கிறீர்கள்.

உங்களைப் பொறுத்தவரை: “சகோதரனை மன்னியாத மனிதர்களை தேவன் மன்னிக்கமாட்டார்” எனும் கூற்றை உங்களால் ஏற்க இயலவில்லை. இதை ஏற்றால், உங்கள் “அரும்பெரும் கோட்பாட்டிற்கு” அது பாதகமாகிவிடும். எனவேதான் “Logic" இல்லாமல் ஏதேதோ கேள்வி கேட்கிறீர்கள்.

சகோதரனின் தப்பிதங்களை மன்னியாதவர்களின் தப்பிதங்களை பரமபிதா மன்னிக்கமாட்டார் என்பது மத்தேயு 18:35 மற்றும் 6:14,15 வசனங்கள் கூறுகிற அசைக்க முடியாத உண்மை. இதற்கு பதில் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள். அதைவிடுத்து சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்காதீர்கள். (உங்கள் “Doctrine" படி, மத்தேயு 18:35 மற்றும் 6:14,15 வசனங்களுக்கு நேர்மையான பதிலை உங்களால் நிச்சயம் சொல்லமுடியாது என்பதே என் கருத்து)


-- Edited by anbu57 on Monday 15th of March 2010 06:13:47 AM

-- Edited by anbu57 on Monday 15th of March 2010 06:14:23 AM

-- Edited by anbu57 on Monday 15th of March 2010 06:28:45 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

மன்னிக்கனும், நான் தான் தெரியாமல் பதிந்து விட்டேன். நான் ஏதோ ஒரு விவாத மேடையில் பதிவு செய்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் கருத்து வேறுப்பட்டால் அதற்கு இந்த தளத்தில் இப்படி தான் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்காமல் இருந்தது என் தவறு தான்.

என் கேள்வியை புறிந்துக்கொள்ள முடியாமல் என்னை குற்றம் கண்டுபிடிப்பது நோக்கமாக வைத்திருக்கிறிர்கள் போல். மீண்டும் மன்னிக்கனும்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:
//மன்னிக்கனும், நான் தான் தெரியாமல் பதிந்து விட்டேன். நான் ஏதோ ஒரு விவாத மேடையில் பதிவு செய்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் கருத்து வேறுபட்டால் அதற்கு இந்த தளத்தில் இப்படி தான் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் இருந்தது என் தவறுதான்.

என் கேள்வியை புரிந்துகொள்ள முடியாமல் என்னை குற்றம் கண்டுபிடிப்பது நோக்கமாக வைத்திருக்கிறீர்கள் போல். மீண்டும் மன்னிக்கனும்!!//


anbu57 wrote:
//சகோதரனின் தப்பிதங்களை மன்னியாதவர்களின் தப்பிதங்களை பரமபிதா மன்னிக்கமாட்டார் என்பது மத்தேயு 18:35 மற்றும் 6:14,15 வசனங்கள் கூறுகிற அசைக்க முடியாத உண்மை. இதற்கு பதில் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள். அதைவிடுத்து சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்காதீர்கள். (உங்கள் “Doctrine" படி, மத்தேயு 18:35 மற்றும் 6:14,15 வசனங்களுக்கு நேர்மையான பதிலை உங்களால் நிச்சயம் சொல்லமுடியாது என்பதே என் கருத்து)//

நேர்மையான பதிலை உங்களால் நிச்சயம் தரமுடியாது எனும் எனது கூற்றை மெய்ப்பித்துவிட்டீர்கள் சகோதரரே!

மத்தேயு 18:35 மற்றும் 6:14,15 வசனங்களின் கருத்து மிகமிகத் தெளிவாக உள்ளபோதிலும், அது உங்கள் கோட்பாட்டிற்கு எதிராக இருப்பதால், ஏதேதோ சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு மழுப்பி வந்த நீங்கள், இறுதியாக நான் விவாதம் செய்யும் முறையில் தவறு இருப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, விவாதத்தை திசைதிருப்புகிறீர்கள்.

நீ மற்றவர்களை மன்னித்தால் நான் உன்னை மன்னிப்பேன், நீ மற்றவர்களை மன்னிக்காவிட்டால் நான் உன்னை மன்னிக்கமாட்டேன் எனும் நிபந்தனையோடு கூடிய ஒரு கூற்று இத்தனை தெளிவாகக் கூறப்பட்டுள்ளபோதிலும், “மனிதர்களை மன்னிக்கச் சொல்லிவிட்டு, தேவன் மன்னியாது இருந்தார் என்றால் எப்படி!” என தேவனைக் குற்றப்படுத்தும் கேள்வியை நீங்கள் கேட்டுவிட்டு, அதற்கு நான் பதில் சொன்னால், நான் உங்களைக் குற்றம் கண்டுபிடிக்கிறேன் என்கிறீர்கள்.

மத்தேயு 18:35-ன் அடிப்படையில் இப்போதல்ல, 1-11-2009-லேயே Truth Seekers தளத்தில் உங்களிடம் நான் கீழ்க்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளேன்.

//மத்தேயு 18:35 இன்னுமோர் விஷயத்தையும் கூறுகிறது. நாம் நம் சகோதரரை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், பரமபிதாவும் நம் பாவங்களை மன்னிக்கமாட்டார் என அவ்வசனம் கூறுவதைக் கவனியுங்கள்.

இவ்விதமாக மன்னிக்கப்படாதவர்கள், உங்கள் கூற்றுப்படி, உயிர்த்தெழமுடியாதல்லவா? கண்டிப்பாக பதில் தரவும்.//

கண்டிப்பாக பதில் தரவும் என நான் கேட்டிருந்தபோதிலும், நீங்கள் பதில்தரவில்லை. பின்வரும் தொடுப்பிற்குச் சென்று படித்துப்பாருங்கள்.

http://kovaibereans.activeboard.com/index.spark?aBID=128972&p=3&topicID=31787734&page=2&sort=oldestFirst

இனிமேலும் இவ்விஷயத்தில் நான் உங்களை வலியுறுத்தப்போவதில்லை. மெய்யாகவே “உண்மையைக் கண்டறிய” நீங்கள் விரும்பினால், மத்தேயு 18:35 மற்றும் 6:14,15 வசனங்களின் அடிப்படையில் நான் எழுப்பியுள்ள கேள்விக்கு நேர்மையான பதில்தர முயலுங்கள்.

யாருடைய மனதையும் நோகச்செய்வது எனது நோக்கமல்ல. நாம் எல்லோரும் “உண்மையைக் கண்டறிவதே” எனது நோக்கம். ஒருவேளை உண்மையைக் கண்டறிய முடியாவிட்டாலும், நம்மில் யாரும் “பொய்யை நம்பிக்கொண்டிருக்கக்கூடாது” என்பதில் நான் அதிக பாரப்படுகிறேன். மற்றபடி யாரையும் நோகச்செய்வது எனது நோக்கமல்ல என்பதை மீண்டும் தெரிவிக்கிறேன்.


-- Edited by anbu57 on Tuesday 16th of March 2010 04:56:29 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

அன்பான சகோதரர்களே!

நம் சகோதரனின் தப்பிதங்களை மன்னித்தால்தான், நமது தப்பிதங்களை நம் பரமபிதா மன்னிப்பார் என்பதை மத்தேயு 18:35 மற்றும் 6:14,15 வசனங்களிலிருந்து தெளிவாக அறிந்தோம். இனி, நம் சகோதரனின் எந்தெந்த தப்பிதங்களை மன்னிக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

நம் சகோதரனின் தப்பிதங்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.

1. நமக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்கள், 2. பிறருக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்கள், 3. தேவனுக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்கள்.

இம்மூன்று வகையான தப்பிதங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தேவனுக்கும் அவருக்கு அடுத்தபடியாக இயேசுவுக்கும் உள்ளது (மாற்கு 2:3-12). ஆனால் நம்மைப் பொறுத்தவரை, முதலாம் வகையான தப்பிதங்களை மன்னிக்கிற அதிகாரம் மட்டுமே உள்ளது. ஏனெனில் இவ்வகையான தப்பிதங்கள் மட்டுமே நம்மோடு சம்பந்தமுடையவை. மற்ற 2 வகையான தப்பிதங்களும் பிறரோடு அல்லது தேவனோடு சம்பந்தமுடையவை. எனவே அவற்றை மன்னிப்பதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது.

நம் சகோதரன் நமக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்களை மன்னிக்கிற அதிகாரம் மட்டுமே நமக்கு உள்ளது. இதை அதிகாரம் என்று சொல்வதைவிட, கடமை என்றும் சொல்லலாம். ஏனெனில் இக்கடமையை நாம் செய்தால்தான், நமது தப்பிதங்களை தேவன் மன்னிப்பார். இதைத்தான் மத்தேயு 18:35 மற்றும் 6:14,15 வசனங்களில் இயேசு கூறுகிறார்.

இதைப் புரிந்துகொள்ளாத சிலர், பிறர் செய்கிற எல்லாவிதமான குற்றங்களையும் நாம் மன்னிக்கவேண்டும், அதுதான் நமது அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்கின்றனர். உண்மையில், பிறர் நமக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்களைத் தவிர மற்ற எல்லா தப்பிதங்களையும் மன்னிப்பது நமக்கு மிகமிக எளிதானதே.

உதாரணமாக, யாரோ ஒருவரின் வீட்டிலுள்ள பொருட்களை ஒரு திருடன் திருடுகையில் அவனை மன்னிப்பது நமக்கு மிகவும் எளிது. ஆனால் அத்திருடன் நம் வீட்டிலுள்ள பொருட்களைத் திருடுகையில் அவனை மன்னிப்பதுதான் கடினமானது.

இதைப் புரிந்துகொள்ளாத சிலர், பிறரது பாவங்களினிமித்தம் வரக்கூடிய ஆக்கினைகளைச் சொல்லி எச்சரிப்பவர்களை அன்பில்லாதவர்கள் என்றும், பிறரது பாவங்களை மன்னிக்க மனமில்லாதவர்கள் என்றும் கூறுகின்றனர்.

பிறரது பாவங்களை தேவன் மன்னித்தால்தான் அவர்கள் அழிவிலிருந்து தப்பமுடியுமேயொழிய, நாம் அவர்களை மன்னிப்பதால் அவர்கள் அழிவிலிருந்து தப்பமுடியாது. பிறர் நமக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்களை நாம் மன்னித்தால்கூட, அது நமக்கு மட்டுமே நன்மை பயக்குமேயொழிய அவர்களுக்கு அதனால் எந்த நன்மையும் கிடைக்காது. இவ்வுண்மையை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மத்தேயு 18:35 மற்றும் 6:14,15 வசனங்களில் இயேசு மன்னிக்கச் சொல்வது, நம் சகோதரன் நமக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்களையேயொழிய வேறெந்த தப்பிதங்களையும் அல்ல என்பதோடு, வேறெந்த தப்பிதங்களையும் மன்னிக்க நமக்கு அதிகாரம் கிடையாது என்பதே உண்மை.

இதைப் புரிந்துகொண்டவர்களாக, நம் சகோதரன் நமக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்களை நாம் மனப்பூர்வமாக் மன்னிப்போம், அப்போது நம் பரமபிதா நமது தப்பிதங்களை மன்னிப்பார். மாறாக, நம் சகோதரன் நமக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்களை நாம் மன்னிக்கத் தவறினால், நம் பரமபிதா நமது தப்பிதங்களை மன்னிக்கமாட்டார், அதன் விளைவாக நாம் நித்திய ஜீவனை இழக்கக்கூடும் என்பதை அறிவோமாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard