நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எல்லா மனுஷரும் புகழ்ச்சியாய் பேசினால் ..


Militant

Status: Offline
Posts: 830
Date:
எல்லா மனுஷரும் புகழ்ச்சியாய் பேசினால் ..
Permalink  
 


பொதுவாக ஓர் ஊழியரைப் பொய்யான ஊழியர் எனச் சொல்வதற்கு பலரும் தயங்குவதுண்டு. குறிப்பாக அபிஷேகம் பெற்ற ஊழியரைக் குறித்து ஏதாகிலும் சொல்லிவிட்டால் பெரும் சாபம் நேரிட்டுவிடுமோ எனப் பலர் அச்சப்படுவதுண்டு.

தேவனால் அபிஷேகிக்கப்பட்ட சவுல் ராஜாவுக்கு தீங்குசெய்ய தாவீது பயந்தது, மற்றும் தேவஊழியனாகிய மோசேயைக் குறித்து தவறாகப் பேசின மிரியாம் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டது ஆகிய சம்பவங்களால், தேவஊழியர்களின் குறைகளைச் சுட்டிக்காட்ட பலரும் தயங்குவதுண்டு. இத்தயக்கத்திற்கு அவர்கள் சொல்கிற காரணங்கள் சரிதானா என்பதை முதலாவது பார்ப்போம்.

சவுல் ராஜா தேவனால் அபிஷேகிக்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மை. சவுலின் காரியத்தில் எதைச் செய்வதற்கு தாவீது அஞ்சினார்? சவுலின் செயல்பாடுகள் குறித்து தாவீது என்னவிதமான கருத்தைக் கொண்டிருந்தார்? பின்வரும் வசனங்களைப் பார்ப்போம்.

1 சாமுவேல் 26:9-11 தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான். பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய, நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்;

கர்த்தர் அபிஷேகம் பண்ணின சவுலின் மீது கைபோட்டு அவரைக் கொல்வதற்கு மட்டுமே தாவீது அஞ்சினார். இந்நாட்களில் நம்மில் யாருக்கும் யாரையும் கொல்ல அதிகாரம் இல்லை என்பதால், அபிஷேகிக்கப்பட்ட சவுலை தாவீது கொல்லாதிருந்ததை ஒரு திருஷ்டாங்கமாக எடுப்பதற்கு தற்போது அவசியம் இல்லை. சவுலைக் கொல்வதற்கு அஞ்சின தாவீது, தனக்கு விரோதமாக குற்றம்செய்த சவுலை “கர்த்தர் அடித்தால் அடிக்கட்டும்” என்றே நினைத்தார். எனவே சவுலின் குற்றத்தை தாவீது கண்டுகொள்ளவில்லை எனக் கூறமுடியாது. சவுலின் குற்றம் தாவீதுக்கு எதிரான தனிப்பட்ட குற்றமாக இருந்ததால், அதைக் குறித்து பொதுப்படையாக யாரிடமும் தாவீது கூறவில்லை, அவ்வளவே.

தற்போதைய பொய்யான ஊழியர்கள் விஷயத்தில், அவர்கள் நமக்கு விரோதமாக தனிப்பட்ட முறையில் செய்கிற தவறுகளை நாம் பொதுப்படையாக பேசவேண்டியதில்லைதான். ஆனால் அப்பாவி விசுவாசிகளை வஞ்சிக்கிற செயல்களில் அவர்கள் ஈடுபடுகையில் அதைக் குறித்து விசுவாசிகளிடம் சொல்லி எச்சரிப்பது அவசியமே.

அடுத்து, மோசேயைக் குற்றப்படுத்தி பேசின மிரியாமின் காரியத்தைப் பார்ப்போம் (எண்ணாகமம் 12). இச்சம்பவத்தில் கூறப்பட்டுள்ள மிரியாமும் ஆரோனும் மோசேயின் உண்மையான ஊழியத்தை நன்கறிந்தவர்கள். ஆனால் தங்களின் இளைய சகோதரனாகிய மோசேயை தங்களுக்கு மேலான நிலையில் தேவன் வைத்திருந்ததால், மோசேமீது அவர்கள் பொறாமை கொண்டிருக்கக்கூடும். அதனால், மோசேயிடம் ஏதாவது குற்றங்கண்டுபிடித்து அவரை மட்டந்தட்ட நினைத்திருக்கக்கூடும். அதன்படியே அவர்கள் மோசேயைக் குற்றஞ்சாட்டினர். அவர்கள் மோசேயைக் குற்றஞ்சாட்டிப் பேசின வார்த்தைகளைப் படித்தால், மோசேமீது அவர்களுக்கிருந்த பொறாமையை நாம் உணரமுடியும்.

எண்ணாகமம் 12:1,2 எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள்.

மோசேயின் ஊழியத்தில் எந்தக் குற்றமும் காணஇயலாத அவர்கள், அவரது தனிப்பட்ட வாழ்வின் ஒரு நிகழ்வினிமித்தம் அவரைக் குற்றப்படுத்தி, தங்கள் பொறாமையை வெளிப்படுத்தினர். இச்செயல் தேவனின் பார்வையில் குற்றமாகக் காணப்பட்டதால் அவர்கள் தேவனால் கடிந்துகொள்ளப்பட்டனர். எனவே நாமுங்கூட ஓர் உண்மை ஊழியரை நன்கு அறி்ந்துள்ள போதிலும், நமக்கு அவர்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக, அவரது தனிப்பட்ட வாழ்வைக் குற்றப்படுத்தி பேசுவது கூடாது என்பதற்கு, இச்சம்பவம் ஒரு திருஷ்டாந்தமாக உள்ளது.

மற்றபடி, பொய்யான ஊழியர்கள் அப்பாவி ஜனங்களை வஞ்சிக்கும் செயல்களைக் குறித்து ஜனங்களை எச்சரிப்பது அவசியம் என்றுதான் வேதாகமம் கூறுகிறதேயன்றி, அதைத் தவறு என ஒரு இடத்திலும் கூறவில்லை.

இனி எல்லா மனுஷராலும் புகழப்படுகிற பொய்யான ஊழியர்களைக் குறித்து வேதாகம் கூறுவதைப் படிப்போம்.

லூக்கா 6:26 எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

இவ்வசனம் இயேசு நேரடியாகச் சொன்ன ஒரு வசனமாகும். உண்மையில், மெய்யான தீர்க்கதரிசிகளுக்கு ஓர் எச்சரிப்பாகத்தான் இவ்வசனத்தை இயேசு கூறியுள்ளார்.

அதாவது, ஒரு தீர்க்கதரிசியை எல்லாரும் புகழ்ச்சியாக பேசத்தொடங்கிவிட்டால், அவர் மெய்யான தீர்க்கதரிசி எனும் நிலையிலிருந்து, கள்ளத்தீர்க்கதரிசி எனும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து, அவர் எச்சரிப்படைவதற்காகவே இவ்வசனத்தை இயேசு கூறியுள்ளார்.

எனவே, மெய்யான ஒரு தீர்க்கதரிசி, தன்னைக் குறித்து எல்லாரும் புகழ்ச்சியாகக் கூறினால், அப்புகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு தூரப்போய்விடவேண்டும், அல்லது தனது தவறை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும்.

இப்படிச் செய்யாமல், மற்றவர்களின் புகழ்ச்சியை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டிருந்தால், அவர் கள்ளத்தீர்க்கதரிசி எனும் நிலையை எட்டிவிட்டார், அல்லது எட்டிக் கொண்டிருக்கிறார் என அர்த்தமாகும்.

லூக்கா 6:26-ல் இயேசு கூறுவது, தீர்க்கதரிசிகளுக்கு ஓர் எச்சரிப்பாக இருப்பதோடு, ஜனங்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளை கண்டுகொள்வதற்கான ஓர் அடையாளமாகவும் உள்ளது.

தேவஊழியர் எனச் சொல்லிக்கொள்ளும் ஒருவரை, எல்லா மனுஷரும் புகழ்ச்சியாய் பேசினால், அவ்வூழியர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது.

இந்நாட்களில், தமிழகத்தின் ஒரு பிரபல தேவஊழியரான சகோ.பால் தினகரனை “இந்நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி” என யாரோ புகழ்ந்ததாக, ஓர் இணையதள செய்தி கூறுகிறது. இவ்விதமாக அனைத்து தரப்பு மக்களும் அவரைப் புகழ்ச்சியாய் பேசுவதை நம்மில் பலரும் அறிவோம். அப்படிப்பட்ட அவர், லூக்கா 6:26-ல் இயேசு கூறுவதன் அடிப்படையில், ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது என்பதை ஜனங்கள் அறிந்து எச்சரிக்கையாயிருப்பார்களாக.



-- Edited by anbu57 on Friday 26th of March 2010 02:04:55 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard