நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசமபாகம் செலுத்துவது பற்றி!


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
RE: தசமபாகம் செலுத்துவது பற்றி!
Permalink  
 


தங்களின் பதிவிலிருந்து சில கேள்விகல்:

1. ஆபிரகாம் தசமபாகம் கொடுத்த பிறகு தான் தேவன் அதை கட்டளையாக கொண்டு வந்தாரா?

2. "இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டு விடாதிருக்கவேண்டுமே" என்று கிறிஸ்தவர்களிடத்தில் பார்த்து சொன்னாரா, யூதர்களிடதில் சொன்னாரா?? ஏனென்றால் வேத‌த்தில் ஒருவ‌ருக்கு சொல்லிய‌தை ம‌ற்ற‌வ‌ரோ அல்ல‌து அதை வாசிப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் அது எழுதிய‌து என்று எடுத்துக்கொண்டால் விப‌ரீத‌மான‌ அர்த்த‌ங்க‌ள் தான் மிஞ்சும்!! யூதாஸீட‌ம் இயேசு கிறிஸ்து, "நீ செய்ய‌ வேண்டிய‌தை, இப்பொழுதே போய் செய்" போன்ற‌ வார்த்தைக‌ளும் த‌ங்க‌ளுக்கு தான் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்று வேத‌த்தை வாசிப்ப‌வ‌ர்க‌ள் எடுத்துக்கொண்டால் விப‌ரீத‌ம் தானே!!

3. "இயேசுவோ அல்லது அப்போஸ்தலரோ கூட  "தசமபாகம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று எங்கும் நேரடியாக சொல்ல வில்லை" என்று இருந்தாலும் "கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ளே, நீங்க‌ள் புதிய‌ சிருஷ்டியாக‌ மாறியிருந்தாலும் யூத‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட்ட‌ளையான‌ த‌ஃப‌ம‌பாக‌த்தை (மாத்திர‌ம்) இன்னும் கைக்கொள்ள‌ வேண்டும்" என்று கூட‌ தான் "நேர‌டியாக‌" சொல்ல‌ப்ப‌ட‌வில்லையே!! இல்லாத‌ ஒரு விஷ‌ய‌த்தை "இருக்கிற‌து" என்று இத்துனை பெரிய‌ விவாத‌மே "அர்த்த‌ம‌ற்ற‌தாகுது"!!

4. " பின்னால் எங்கும் அப்போஸ்த்தலர்களால்  கட்டளை ஆக்கப்படவில்லை"!! ஆமா, க‌ட்ட‌ளைக்க‌ள் கொண்டு வ‌ந்த‌தே ந‌வீன‌ ஊழிய‌ர்க‌ள் தான், 'த‌ச‌ம‌பாக‌ க‌ட்ட‌ளை உட்ப‌ட‌'!! கிறிஸ்துவிற்குள் ஒருவ‌ன் சுத‌ந்திர‌மாக‌ இருக்கிறான்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:

//என்னை பொறுத்தவரை கர்த்தர் இட்ட தனது கட்டளையை மாற்றி இயேசுவோ அல்லது அப்போஸ்தலரோ கூட  "தசமபாகம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று எங்கும் நேரடியாக சொல்லவில்லை எனவே நாமாக ஒரு முடிவுக்கு வந்து அதை மாற்றகூடாது என்று கருதி நான் கட்டளைப்படி கொடுக்க விரும்புகிறேன்.//

அன்பான சகோதரரே!

தசமபாகம் கொடுக்கவேண்டியதில்லை” என வேதாகமம் நேரடியாகச் சொல்லவில்லை என்பது நூற்றுக்கு நூறு மெய்தான். எனவே நாமாக ஒரு முடிவுக்கு வந்து தசமபாகக் கட்டளையை மாற்றக்கூடாது எனும் உங்கள் கருத்தில் தவறு இல்லை. ஆனால் அதேசமயம் தசமபாகக் கட்டளை என்ன சொல்கிறதோ அதைச் சற்றும் மாற்றக்கூடாது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். தங்கள் கவனத்திற்காக தசமபாகக் கட்டளை குறித்து வேதாகமம் கூறுகிற சில முக்கிய விதிகளைப் பட்டியலிட்டுத் தருகிறேன்; நீங்கள் அவற்றின்படித்தான் தசமபாகக் கட்டளையை நிறைவேற்றுகிறீர்களா, அல்லது உங்கள் மனம்போல அவற்றை மாற்றியுள்ளீர்களா என்பதை தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.

விதி 1. நாம் விதைக்கிற விதைப்பினால் வயலில் விளைகிற எல்லாப் பாகத்திலும் தசமபாகத்தைப் பிரித்துக்கொடுக்கவேண்டும் என்பது ஒரு முக்கியமான விதி (உபாகமம் 14:22)

(இவ்விதியை மாற்றி, நாம் செய்கிற ஊதியத்தின் சம்பளப் பணத்தில் தசமபாகம் கொடுக்கவேண்டும் என எந்த வேதவசனம் சொல்கிறது? விளைச்சலில் தசமபாகம் எனும் விதியை சம்பளப் பணத்தில் தசமபாகம் என மாற்றியது யார்?)

விதி 2. தசமபாகத்தை தேவன் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தலத்தில்தான் படைக்கவேண்டும் என்பது அக்கட்டளையின் மற்றொரு முக்கிய விதி (உபாகமம் 14:23)

(தேவன் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்தைக் குறித்து, தேவனே நேரடியாகச் சொல்வதை சற்று படியுங்கள்.

உபாகமம் 12:11-13 உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக. கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

தேவன் தெரிந்து கொண்ட அந்த ஓர் இடம் எருசலேம் தேவாலயமே என்பதற்கு, பின்வரும் வசனம் ஆதாரமாயுள்ளது.

1 ராஜா. 8:29 உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.

நீங்கள் எருசலேம் தேவாலயத்தில்தான் தசமபாகம் செலுத்துகிறீர்களா, அல்லது கண்ட கண்ட இடத்தில் தசமபாகம் செலுத்துகிறீர்களா? ஒருவேளை கண்ட இடத்தில்தான் நீங்கள் தசமபாகம் செலுத்திவந்தால், அவ்வாறு செலுத்தும்படி தசமபாகக் கட்டளையை எந்த வசனம் மாற்றிச்சொல்கிறது? அல்லது எந்த மனிதன் கட்டளையை மாற்றிச் சொன்னான்?)

விதி 3. தேவன் தெரிந்துகொள்ளும் ஸ்தலம் வெகுதூரமாக இருந்தால்கூட, அங்குதான் சென்று தசமபாகம் கொடுக்கவேண்டும் (உபாகமம் 14:24-26)

(இத்தனை தெளிவாக தேவன் கூறியுள்ளதால், எருசலேம் தேவாலயத்தைத் தவிர வேறெந்த ஆலயத்திலோ அல்லது ஸ்தலத்திலோ தசமபாகம் கொடுப்பது தேவகட்டளைக்கு எதிரானதுதானே?)

விதி 4. தேவன் தெரிந்து கொள்ளும் ஸ்தலம் வெகுதூரமாயிருப்பதினிமித்தம் தசமபாகத்தை பணமாக மாற்றினால், தேவன் தெரிந்து கொள்ளும் ஸ்தலத்திற்கு அப்பணத்தைக் கொண்டுசென்று, அங்கு ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் போன்றவற்றை வாங்கி நீங்களும், உங்கள் குடும்பத்தாரும், லேவியரும் புசித்து சந்தோஷப்படவேண்டும் (உபாகமம் 14:24-26).

(தசமபாகக் கட்டளையை மாற்றக்கூடாது எனக் கூறுகிற நீங்கள், தேவனின் இந்த 4-ம் விதிப்படித்தான் தசமபாகக் கட்டளையை நிறைவேற்றுகிறீர்களா, அல்லது உங்கள் மனம்போல் தசமபாகக் கட்டளையை மாற்றியுள்ளீர்களா?

விதி 5. நம் வீட்டு வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் புசித்து திருப்தியடையத்தக்கதாக, மூன்றாம் வருஷத்தின் முடிவில் நம் தசமபாகத்தைப் பிரித்து நம் வீட்டு வாசல்களில் வைக்க வேண்டும் (உபாகமம் 14:28).

(தேவனின் இவ்விதிப்படி உங்கள் தசமபாகத்தை ஒவ்வொரு 3-ம் வருஷத்தின் முடிவில், உங்கள் வீட்டு வாசலில் வைக்கிறீர்களா? அல்லது உங்கள் மனம்போல் தேவகட்டளையை மாற்றி, நீங்கள் வழக்கமாக தசமபாகம் கொடுக்கிற இடத்தில்தான் 3-ம் வருஷ தசமபாகத்தையும் கொடுக்கிறீர்களா?)

விதி 5. தேவனின் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கத்தக்கதாக, நாம் கொடுக்கிற தசமபாகமானது ஆலயத்தின் பண்டசாலையில் சேரவேண்டும். (மல்கியா 3:10)

(எருசலேம் தேவாலயத்தைத் தவிர வேறெந்த ஆலயத்தில் நீங்கள் தசமபாகம் கொடுத்தாலும், அது தேவகட்டளைக்கு எதிரானதுதான்.

மாத்திரமல்ல, உங்கள் தசமபாகமானது ஆலயத்தின் பண்டசாலையில் சேர்க்கப்பட வேண்டும், அங்கு எப்போதும் ஆகாரம் உண்டாயிருக்கவேண்டும் என்பதும் தேவனின் விதி. நீங்கள் தசமபாகம் கொடுக்கிற ஸ்தலத்தில் இந்த விதிப்படி நடக்கிறதா என எப்போதாவது கண்காணித்துள்ளீர்களா?)

தசமபாகக் கட்டளையை வேதாகமம் நேரடியாக மாற்றவில்லை எனக் கூறுகிற நீங்கள், அக்கட்டளை சம்பந்தமான மேற்கூறிய 5 விதிகளை சற்றும் மாற்றமால், அவற்றின்படிதான் தசமபாகம் கொடுக்கிறீர்களா என்பதை எனக்குத் தெரிவிக்கவும்.

அதைத் தெரிவிக்கையில், பின்வரும் வசனத்தையும் கவனத்தில் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

உபாகமம் 12:32 நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

கவனம்: லேவியருக்கும், திக்கற்றவருக்கும், பரதேசிக்கும், விதவைக்கும்தான் தசமபாகம் என வேதாகமம் கூறுவதைக் குறைக்கவும் வேண்டாம்; தேவனுடைய ஊழியர்களுக்குத்தான் தசமபாகம் என வேதாகமம் சொல்லாததைக் கூட்டவும் வேண்டாம்.

எருசலேம் தேவாலயத்தில்தான் தசமபாகம் கொடுக்கவேண்டும் என வேதாகமம் கூறுவதைக் குறைக்கவும் வேண்டாம்; கண்ட கண்ட ஆலயத்திலும் தசமபாகம் கொடுக்கலாம் என வேதாகமம் சொல்லாததைக் கூட்டவும் வேண்டாம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

 தசமபாகக் கட்டளையை வேதாகமம் நேரடியாக மாற்றவில்லை எனக் கூறுகிற நீங்கள், அக்கட்டளை சம்பந்தமான மேற்கூறிய 5 விதிகளை சற்றும் மாற்றமால், அவற்றின்படிதான் தசமபாகம் கொடுக்கிறீர்களா என்பதை எனக்குத் தெரிவிக்கவும்.

அதைத் தெரிவிக்கையில், பின்வரும் வசனத்தையும் கவனத்தில் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

உபாகமம் 12:32 நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

கவனம்: லேவியருக்கும், திக்கற்றவருக்கும், பரதேசிக்கும், விதவைக்கும்தான் தசமபாகம் என வேதாகமம் கூறுவதைக் குறைக்கவும் வேண்டாம்; தேவனுடைய ஊழியர்களுக்குத்தான் தசமபாகம் என வேதாகமம் சொல்லாததைக் கூட்டவும் வேண்டாம்.

எருசலேம் தேவாலயத்தில்தான் தசமபாகம் கொடுக்கவேண்டும் என வேதாகமம் கூறுவதைக் குறைக்கவும் வேண்டாம்; கண்ட கண்ட ஆலயத்திலும் தசமபாகம் கொடுக்கலாம் என வேதாகமம் சொல்லாததைக் கூட்டவும் வேண்டாம்.



சகோதரர் அவர்களே மிக தெளிவாகவும் விளக்கமாகவும் தசமபாகம் பற்றிய கர்த்தரின்  கட்டளைகளை ஆராய்ந்து எழுதியமைக்கு மிக்க நன்றி!
 
இங்கு மற்றவர்கள் எந்த வசனத்தின் அடிப்படையில் மாத மாதம் தசமபாகம் வாங்குகிறார்கள் என்பது எனக்கு தெரியாது! நான்  எந்த வசனத்தின் அடிப்படையில் என்ன செய்கிறேன் என்பதை  மட்டும் இங்கு எழுதுகிறேன்.  நான் செய்வது சரியா என்பதை சோதித்தறிந்து திருத்திக்கொள்ள இந்த விவாதத்தை  ஒரு நல்ல சந்தர்ப்பமாகவே கருதுகிறேன் 
 
தசமபாகம் இரண்டு வகைப்படும் என்பது தங்களுக்கு தெரியும்  
 
1. வருடா வருடம் கொடுக்கும் தாசமபாகம் 

லேவியராகமம் 27:30
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
லேவியராகமம் 27:32
கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

இந்தவகை தசமபாகத்தை பொறுத்தவரை தாங்கள் குறிப்பிடுவது போல் கர்த்தரின் ஆலயத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான்  கட்டளை. ஆனால் நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று போதிப்பவர்கள் எதன் அடிப்படையில் சம்பளத்தில் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்றும் அதை
சபைக்கு கொடுக்க வேண்டும் என்றும் போதிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.   

சபை தேவைகளுக்காக ஊழியர்களுக்காக தசமபாகம் வாங்குவதில்
தவறில்லை அனால் அது  கட்டாயம்என்றோ அதை கொடுக்காவிடில் சாபம் என்றோ போதிப்பது புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் சரியான கருத்து அல்ல என்றே நான் கருதுகிறேன்.
 
என்னை பொறுத்தவரை இவ்வித வருமானம் எதுவும் இல்லை எனவே இந்த கட்டளையில் இருந்து நான் விடுபடுகிறேன்.
 
2. மூன்று வருடத்துக்கு ஒருமுறை கொடுக்கும் தசமபாகம்!
  
உபாகமம் 26:12  தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,

 26:12 When you finish tithing all17 your income in the third year (the year of tithing), you must give it to the Levites, the resident foreigners, the orphans, and the widows18 so that they may eat to their satisfaction in your villages.
 
இங்கு மூன்றாம் வருஷம் என்பது தசம பாகம் செலுத்தும் வருஷமாக தேவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு வசனத்தின்  அடிப்படையில்  கவனிக்க வேண்டிய முக்கிய  காரியங்கள்
 
1. மூன்றாம் வருடம்  (PERIODICITY)

இந்த மூன்றாம் வருடம் என்பது நாம் தேவனின்  உடன்படிக்கையின்  கீழ் வந்ததில் இருந்து மூன்றாவது வருடமாகவோ அல்லது நாம் நிர்ணயித்த வருடம் அதை தொடர்ந்து வரும் மூன்றம் வருடமாகவோ இருக்கலாம். (மூன்று வருடத்துக்கு ஒருமுறை என்பது எனது கருத்து)    
 
2. உன் வரத்திலெல்லாம்   (COVERAGE OF INCOME)

இந்த வரத்தில் எல்லாம் என்பதில் சம்பளம் மற்றும் எவ்வித வருமானமாகிலும் அதனுள்  அடங்கிவிடுகிறது.
 
3. உன் வாசல்களில்: (எங்கு கொடுக்க வேண்டும்)

இங்கு "VILLAGES" என்ற வார்த்தை வாசல்களில் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அதை ஒரு PRESCRIBED ஏரியாவாக எடுத்து கொள்ளலாம். (அதாவது "உன் வாசல்களில் உன்னை முற்றிக்கைப்போட்டு" என்று வசனம் குறிப்பிடுவதால் நமது  வீட்டு வாசல் என்பது அருத்தமல்ல ஒரு குறிப்பிட்ட
பகுதி ஊர் அல்லது வரையறுக்கப்பட்ட இடம் என்று எடுத்து கொள்ளலாம்.)
 
4..லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும்        

யாருக்கு கொடுக்கவேண்டும் என்பதை இவ்வார்த்தைகள் போதிக்கின்றன.
 
லேவியன் : லேவி கோத்திரத்தான் யாரும் நமது நாட்டில் நமக்கு தெரிந்து இல்லை என்றே நான் கருதுகிறேன்.  
 
பரதேசி       :   இவ்வார்த்தையை நான் தேவபிள்ளைகள் மற்றும் தேவ மனிதர்களை குறிப்பதாக எடுத்துகொள்கிறேன்  

(ஆதார வசனம்)

I பேதுரு 1:2 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது
 
இவ்வுலகத்தை பொறுத்தவரை தேவனுடைய பிள்ளைகள் எல்லோருமே பரதேசிகளே. எனவே பரதேசியாக வாழும் இவ்வுலகில் நிறைவு உள்ளவர்கள் குறைவு உள்ளவர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ தசமபாகத்தில் பங்கு கொடுப்பதில் தவறில்லை என்பது எனது கருத்து.
 
திக்கற்ற பிள்ளைகள் : தகப்பனையும் தாயையும் இழந்த அ நாதை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் 
 
விதவைகள் : கணவனை இழந்த கைம்பெண்களுக்கு கொடுக்கலாம்    
  
அதாவது கர்த்தர் குறிப்பிடும் அந்த மூன்றாம் வருடம் சரியாக கணக்கு பார்த்து  தசமபாகத்தை செலுத்துகிறேன். மற்ற வருடங்களில் எந்த கணக்கும் இன்றி இஸ்டம்போல்  செய்கிறேன்!
 
இதில் தவறு எதுவும் இருந்தால் சுட்டி காட்டவும்!  திருத்தி கொள்கிறேன்.
 

 



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//நான் செய்வது சரியா என்பதை சோதித்தறிந்து திருத்திக்கொள்ள இந்த விவாதத்தை  ஒரு நல்ல சந்தர்ப்பமாகவே கருதுகிறேன்.//

இந்த விவாதத்தை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதி தொடர்வதற்காக நன்றி சகோதரரே!

பொதுவாக வேதாகமத்தின் குறிப்பிட்ட வசனத்தை அல்லது வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு முடிவெடுப்பதை நம்மில் பலரும் செய்துவருகிறோம். இதுதான் பல தவறான முடிவுகளுக்குக் காரணமாகிவிடுகிறது. சகோ.சுந்தர், நீங்களுங்கூட ஒரு வசனத்தை அல்லது வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு தசமபாக விஷயத்தில் முடிவெடுத்துள்ளீர்கள்.

நீங்கள் எந்த வசனத்தின் அடிப்படையில் தசமபாகம் கொடுக்கிறீர்கள் என்பதைச் சொல்லி, அவ்வசனத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் சொல்லியுள்ளீர்கள். அதில் ஒரு வார்த்தைக்கான விளக்கமாக பின்வருமாறு கூறியுள்ளீர்கள்.

sundar wrote:
//2. உன் வரத்திலெல்லாம்   (COVERAGE OF INCOME)

இந்த வரத்தில் எல்லாம் என்பதில் சம்பளம் மற்றும் எவ்வித வருமானமாகிலும் அதனுள்  அடங்கிவிடுகிறது.//


உங்கள் சம்பளப்பணத்தில் தசமபாகம் கொடுத்தேயாக வேண்டும் எனும் எண்ணம் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்துள்ளதால் உபாகமம் 26:12-ல் “வரத்து” எனும் வார்த்தைக்கு சம்பளப்பணம் உட்பட்டதான வருமானம் என அர்த்தம் எடுத்துள்ளீர்கள். ஆனால், உண்மையில் அந்த அர்த்தத்தில்தான் அவ்வார்த்தை கூறப்பட்டுள்ளதா? பின்வரும் வசனங்களைப் நிதானமாகப் படியுங்கள்.

உபாகமம் 26:1-3 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய், அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.

உபாகமம் 26:10,11 இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து, நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.

உபாகமம் 26:12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு, ...


நிலத்தின் கனிகளில் முந்தின பலனைக் (அல்லது முதற்பலனை) குறித்துதான் உபாகமம் 26:1-3,10,11 வசனங்கள் கூறுகின்றன. அவ்வசனங்களின் தொடர்ச்சியாகத்தான் உபாகமம் 26:12-ஐ தேவன் கூறுகிறார். எனவே உபாகமம் 26:12-ல் தேவன் கூறுகிற “வரத்து” என்பது, முந்தின வசனங்களில் கூறப்பட்டுள்ள "நிலத்தின் கனிகளே".

உபாகமம் 26:12-ல் கூறப்பட்டுள்ள “வரத்து” என்பது நிலத்தின் கனிகள்தான் என்பதற்கு ஆதாரம் அதே வசனத்திலேயே உள்ளது. லேவியன், பரதேசி, திக்கற்ற பிள்ளை, விதவை ஆகியோர் புசித்துத் திருப்தியாகும்படி என அவ்வசனத்தின் பின்பகுதி கூறுவதன் கருத்தை சற்று சிந்தியுங்கள். புசித்து திருப்தியாகும்படி கொடுக்கப்பட வேண்டியது நிலத்தின் கனிகளேயன்றி, பணமோ அல்லது வேறுபொருளோ அல்ல. இதுதான் எனது புரிந்துகொள்தல்.

அடுத்து, பரதேசி என்ற வார்த்தைக்கான உங்கள் புரிந்துகொள்தலைப் பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டில் பரதேசி எனும் வார்த்தைக்கான மூலபாஷை வார்த்தைக்கு guest, foreigner எனும் அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஏற்பாட்டில் (குறிப்பாக 1 பேதுரு 1:2-ல்) பரதேசி எனும் வார்த்தைக்கான மூலபாஷை வார்த்தைக்கு an alien alongside, i.e. a resident foreigner எனும் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்களோ தேவனுடைய பிள்ளைகள் எல்லோரும் பரதேசிகளே என்கிறீர்கள்.

பேதுருவின் முதலாம் நிருபத்தை முழுமையாகப் படித்துப் பார்த்தால், அதில் பேதுரு குறிப்பிடுகிற பரதேசிகள், கிறிஸ்துவினிமித்தம் அதிக பாடு பட்டவர்கள் என்பதை அறியலாம் (உ-ம்: 1:6; 2:19; 3:17; 4:1).

திக்கற்றவர்கள் என்றால் அனாதைப் பிள்ளைகள் என்கிறீர்கள்; விதவைகள் என்றால் கணவனை இழந்த கைம்பெண்கள் என்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் தசமபாகக் கட்டளையை தேவன் சொன்ன அந்நாட்களில் இருந்த அனாதைப் பிள்ளைகளும் விதவைகளும் தங்கள் ஜீவனத்துக்கு வழியின்றி கஷ்டப்பட்டனர். ஆனால் இந்நாட்களில் பல விதவைகள் ரூ.10000-க்கு மேலாக பென்ஷன் பெறுகின்றனர்; அனாதைப் பிள்ளைகள் பலருங்கூட பெற்றோரின் பென்ஷனைப் பெறுகின்றனர்.

எனவே அனாதைப் பிள்ளைகள், விதவைகள் என்பதை அப்படியே வார்த்தையின்படி எடுத்து அவர்களுக்கு தசமபாகம் கொடுக்கத்தான் வேண்டுமா?

தேவகட்டளையின் நோக்கம் ஆகாரத்திற்கு வழியில்லாதோருக்கு ஆகாரம் கிடைக்கவேண்டும் என்பதே. அது திக்கற்றவரோ, பரதேசியோ, லேவியனோ, விதவையோ யாராயிருந்தாலும் சரி. அவரது அந்த நோக்கத்தின்படியே இந்நாட்களில் நாம் தசமபாகம் கொடுக்கலாம். ஆயினும் உங்களுக்கு உள்ளவைகளை விற்று பிச்சையிடுங்கள் எனும் இயேசுவின் கற்பனையின்படி நாம் நடந்தால், தேவனின் தசமபாகக் கட்டளையின் நோக்கம் தானாக நிறைவேறி விடுமல்லவா?

எனவேதான் இந்நாட்களில் தசமபாகம் எனும் ஒரு அளவை நாம் எடுக்கவேண்டியதில்லை என நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். இயேசுவின் கற்பனைகளின்படி நடக்க முன்வந்தாலே போதும், தசமபாகக் கட்டளை அதில் தானாக நிறைவேறிவிடும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard