நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


சமீபத்தில் TRUTH SPEAKS விவாத மேடையின் ஒரு திரியில், தள நிர்வாகி சகோ.சந்தோஷ் பின்வரும் சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

//தேவனுடைய ராஜ்ஜியத்தில் பொக்கிஷத்தை பெறுவதற்கு ஒரு வழியான மற்ற மக்களின் மீது கொண்ட அன்பினால் அவர்களுக்கு உதவி செய்தலை பற்றி இந்த தளம் நிச்சயம் போதிக்கும்.

அதையும் பொக்கிஷத்தை பெறுவதற்காக செய்யாமல், நித்திய ஜீவனையோ அல்லது பிற பலன்களை எதிர்பார்த்தோ செய்யாமல், பலனை எதிர்பாராது மற்ற மக்களின் மீது கொண்ட அன்பினால் மட்டுமே செய்யும்படி இந்த தளம் போதிக்கும்.

அதாவது நித்திய ஜீவன் கிடைக்காவிட்டாலும், தேவ ராஜ்ஜியத்தில் நுழைய முடியாவிட்டாலும் மற்ற மக்களிடம் இந்த உலக உயிர்களிடமும் அன்பு கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அந்த தன்மையை பெறுவதற்கான வழிகள் பற்றியும் இந்த தளம் போதிக்கும். நமக்கு ஏதாவது கிடைக்கும் என்று பிற மனிதர்களிடம் அன்பு செலுத்துவதற்க்கு பெயர் அன்பல்ல. அது வியாபாரம்.

இவ்வாறு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் மற்ற மனிதர்களின் மேல் அன்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் அனேக மக்களை கிருத்துவம் எப்போதும் தந்து வந்திருக்கிறது.
தேவனிடமோ அல்லது மனிதர்களிடமோ பயன் கருதாது செய்யப்பட்ட அவர்களின் தன்னலமற்ற சேவையினால் அனேகர் தேவனை தெரிந்து கொண்டனர்.

ஆனால் இன்றோ பிற மனிதர்களிடம் அன்பு கொள்வதற்கும், தேவனிடத்தில் ஏதாவது பலன் கிடைக்குமா என்று ஆராய்ந்து பார்த்து அவ்வாறு கிடைக்கும் என்று சொல்லும் வேத வசனங்கள் தேவைப்படுகின்றன. இது மனிதர்கள் எவ்வாறு வியாபார தன்மையுடையவர்களாய் மாறி விட்டனர் என்பதை காட்டுகிறது.

தாயோ, தந்தையோ தன் மகன் பிற்காலத்தில் தனக்கு உதவி செய்வான் என்று கருதி தங்கள் பிள்ளைகள் மேல் அன்பு செலுத்துவதில்லை. ஒன்றாய் பிறந்த சகோதரர்கள் சிறு வயதில் என் அண்ணன் எனக்கு பிற்காலத்தில் உதவி செய்வான் என்று எண்ணி அன்பு செலுத்துவதில்லை.  அது போலவே தம்பியும். ஆனால் வளர்ந்த பிறகு அன்பு சில நேரங்களில் வியாபாரமாகி விடுகிறது.

பிற மனிதர்களையும் நம் சகோதர, சகோதரிகளாக கருதும் நிலை வரும் போது அவர்களின் மேல் தானாகவே அன்பு வருகிறது. இத்தகைய ஒரு மனநிலை அனேகருக்கு வருவதில்லை. தேவனிடத்தில் அன்பு செலுத்துவதின் மூலமாக இத்தகைய ஒரு மனநிலையை பெறுவதே இந்த தளத்தின் நோக்கமாகும்.//


மறுமையின் பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூருவது அன்பல்ல, அது ஒரு வியாபாரம் என சகோ.சந்தோஷ் கூறுகிறார். இது ஒரு கருகலான கருத்தாக உள்ளது.

ஏனெனில், இவரது கருத்தில் நியாயம் இருப்பதுபோல் தோன்றினாலும், வியாபாரம் எனும் வார்த்தை வேதவசனங்களையே குற்றப்படுத்துவதாக அல்லது கொச்சைப்படுத்துவதாக உள்ளது.

நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு இயேசு சொன்ன பதில்:

தேவனிடம் அன்புகூர், பிறனிடம் அன்புகூர், கற்பனைகளைக் கைக்கொள் என்பதே.

இப்பதிலைக் கேட்பவர் மனதில் என்ன தோன்றும்?

நித்திய ஜீவன் வேண்டுமெனில் இதையெல்லாம் செய்யவேண்டும் என்றுதானே தோன்றும்? இதையெல்லாம் செய்தால்தான் நித்திய ஜீவன் கிடைக்கும் என்றுதானே தோன்றும்? அவ்வாறெனில் இந்த எண்ணம் உருவாக யார் காரணம்? இயேசுதானே?

அந்த எண்ணத்தை வியாபார சிந்தை என சந்தோஷ் கூறுகிறார். அவ்வாறெனில் அந்த வியாபார சிந்தை உருவாக யார் காரணம்? இயேசுதானே?

இக்கேள்விக்கு சகோ.சந்தோஷ் பதில் தருமாறு வேண்டுகிறேன். பிற அன்பர்களும் இது குறித்து தங்கள் கருத்தைக் கூறுமாறு வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
RE: பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


சகோதரர் சந்தோஷ் அவர்களின் இந்த கருத்தில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.
 
எந்த ஒரு எதிர் பலனையும் எதிர்பாக்காமல் அன்பு மற்றும் இரக்கத்தின் மிகுதியால் செய்யப்படும் செயல்களே தேவனிடத்தில் நன்மதிப்பை பெரும்.
 
அதற்காக நித்திய  ஜீவன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்யக்கூடாதா? என்று கேட்டால் அதிலும் எந்த தவறும் இல்லை! ஆனால் அதில் பெரிய  மேன்மை ஒன்றும் இல்லை! கூலிக்கு வேலை செய்வது என்பது எல்லோரும் செய்வதுதானே இதில் என்ன பெரிய மேன்மை?
 
அதாவது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாகவே துன்பப்படும்  ஒருவரை  காப்பற்றுவதற்காக ஒருவர் ஓடிக் கொண்டு இருந்தார் அந்நேரத்தில் ஒரு அறிவிப்பு வந்தது, "ஓட்டத்தில் முதலில் வருபவர்களுக்கு கிரீடம் உண்டு" என்று! அதை அறிந்த அவர் தனது இயல்பான ஓட்டத்தை இன்னும் சற்று அதிகமாக்கி அல்லது ஒழுங்குபடுத்தி  அந்த கிரீடத்தையும்  பெற முயற்ச்சிக்கிறார். 
 
இங்கு இரண்டு நன்மைகள் விளைகிறது ஓன்று அந்த துன்பப்படும் நபர் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் காப்பாற்ற முடியும் அடுத்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடியவரும் கிரிடம் என்ற நன்மையை பெறமுடியும்.
 
கிரீடமே எனக்கு வேணாம் என்று ஒதுக்கினால் தேவனின்
நியமனத்தை நாம் அசட்டை செய்கிறோம். எது 
எப்படி போனால் எனக்கென்ன எனக்கு கிரீடம்தான் முக்கியம் என்று எண்ணி ஓடினால் கூலிக்காக வேலை செய்யும் நிலையில் இருக்கிறோம். இரண்டையும் தேவன் விரும்புகிரவறல்ல என்றே நான் கருதுகிறேன்!    
 


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//சகோதரர் சந்தோஷ் அவர்களின் இந்த கருத்தில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.//

சகோ.சுந்தர் அவர்களே!

சந்தோஷின் கருத்து சரியா தவறா என்ற கேள்வியை நான் எழுப்பவில்லை. நித்திய ஜீவனைப் பெறுவதற்காக அன்புகூர்வதை வியாபாரம் என அவர் சொல்லியிருந்தார். அந்த வியாபார சிந்தை உருவாவதற்கு இயேசுதானே காரணம் என்பதுதான் என் கேள்வி. இக்கேள்விக்கு பதில் சொல்லாமல் எது மேன்மை என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளீர்கள்.

பலனை எதிர்பாராமல் அன்புகூர்வதுதான் மேன்மை என்பது அனைவரும் அறிந்ததே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


சகோதரர் சந்தோஷிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்வதாக அவரது தளத்தில் கூறியுள்ளார். அவர் எப்போது பதில் சொல்வார் என்பது தெரியவில்லை. அவருக்குச் சமயம் கிடைக்கும்போது அவர் பதில் சொல்லட்டும். அதுவரை காத்திருக்காமல் இவ்விஷயத்தில் மேலும் சில கருத்துக்களை சொல்ல நான் ஆசிக்கிறேன்.

நித்திய ஜீவனுக்காக அன்புகூர்தல் வியாபாரம் என சந்தோஷ் கூறியிருந்தார். ஆனால் அந்த வியாபார சிந்தை உருவாக இயேசுதானே காரணம் என தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் நான் கேள்வி எழுப்பியிருந்தேன். இக்கேள்விக்கு என்ன பதிலை சந்தோஷ் கூறினாலும், என்னைப் பொறுத்தவரை நித்திய ஜீவனுக்காக அன்புகூர்தல் எனும் சிந்தைக்குக் காரணம் இயேசுதான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அதை ஒரு வியாபாரம் என சந்தோஷ் கூறுகிறார். அவர் கூறுகிறபடி அது வியாபாரமாக இருந்தாலும், அதில் தவறு எதுவுமில்லை என்பதுதான் எனது கருத்து.

அன்பும் இரக்கமும் இயல்பாக வரவேண்டியவை. ஆயினும் பிறரது உபதேசத்தின் மூலமாக அன்பும் இரக்கமும் உண்டானால்கூட அதுவும் வரவேற்கத்தக்க நல்ல விஷயந்தானேயொழிய அது இழுக்கானதல்ல.

யார் என்ன சொன்னாலும் சரி, நான் யாரிடமும் அன்புகூர மாட்டேன், எனது சுயநலத்தை மட்டுமே பார்ப்பேன் என்றிருப்பதுதான் இழுக்கு.

Somthing is better than nothing என்று சொல்வார்கள். தேவன் சொன்னதை செய்யாமலேயே இருப்பதைவிட, பலனை எதிர்பார்த்தாவது தேவன் சொன்னதைச் செய்வது நிச்சயமாக நல்லதுதான்.

ஒரு செயலைச் செய்யும்படி தேவன் நம்மிடம் சொல்லி, கூடவே அச்செயலைச் செய்தால் நான் உனக்கு இப்பலனைத் தருவேன் என அவர் சொல்லியிருக்கையில், அவர் சொன்ன பலனை மனதில் வைத்து அவர் சொன்னதைச் செய்வதில் எந்தத் தவறுமில்லை, அப்படிச் செய்வது இழுக்குமில்லை.

தேவன் சொன்ன செயலைச் செய்வதற்கான பலனை தேவனிடம் எதிர்பார்க்காமல் மனிதரிடம் எதிர்பார்ப்பதுதான் தவறும் இழுக்கானதுமாகும். இன்றைய ஊழியர்களில் 99 சதவீதம் தேவனுக்கு ஊழியம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு மனிதர்களிடம் அதற்கான கூலியை காணிக்கை என்ற பெயரில் கேட்கின்றனர். இதுதான் மட்டமான வியாபாரமும் இழுக்குமாகும்.

தேவனுக்கு ஊழியஞ்செய்து அதற்கான பலனை தேவனிடம் எதிர்பார்ப்பது தவறுமல்ல, இழுக்குமல்ல. தேவனிடம் வாய்திறந்து பலனைக் கேட்பதுகூட தவறுமல்ல, இழுக்குமல்ல. இதற்கான வேதஆதாரங்கள்:

நெகேமியா 5:19 என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

மத்தேயு 19:27 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.

பேதுரு இவ்வாறு கேட்டபோது, அவரிடம் இயேசு எந்த விமர்சனமும் சொல்லவில்லை. மாறாக, அவர் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதில் சொன்னார். அவ்வாறே, நெகேமியா தேவனிடம் வேண்டினதையும் ஓர் இழுக்காக வேதாகமம் விமர்சிக்கவில்லை.

வேதாகமமும் இயேசுவும் சொல்வதுதான் முக்கியம், சந்தோஷ் மற்றும் சுந்தர் போன்ற மனிதர்கள் சொல்வது முக்கியமல்ல.

தேவன் சொன்னதைச் செய்வதும், அதற்கான பலனை தேவனிடம் எதிர்பார்ப்பதும் வியாபாரமுமல்ல, இழுக்கானதுமல்ல.

வியாபாரி என்பவன் நம்மோடு சமநிலையில் உள்ளவன். ஆனால் எஜமானன் என்பவன் அப்படியல்ல. எஜமானன் என்பவன் ஊழியனைவிட மேலான நிலையில் உள்ளவன்.

நம்மெல்லோருக்கும் தேவன் எஜமானனாக இருக்கிறார். நாமெல்லோரும் அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படியவேண்டிய ஊழியர்களாக இருக்கிறோம். அதன்படி தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவருக்கு ஊழியஞ்செய்கையில், அவரிடம் பலனை எதிர்பார்ப்பதில் தவறு எதுவுமில்லை, அதில் இழுக்குமில்லை.

மேலான நிலையிலுள்ள நம் எஜமானனாகிய தேவனுக்கு ஊழியஞ்செய்துகொண்டு, நம்மோடு சமநிலையிலுள்ள மனிதர்களிடம் பலனை எதிர்பார்ப்பதுதான் வியாபாரம், இழுக்கு எல்லாம்.

இயேசு சொன்ன பின்வரும் வசனங்களைச் சற்று படிப்போம்.

லூக்கா 6:32-35 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்;

இப்படிச் செய்வதால் உங்களுக்குப் பலன் என்ன, அப்படிச் செய்வதால் உங்களுக்குப் பலன் என்ன என அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்ட இயேசு, இறுதியில் இப்படியிப்படி செய்தால்தான் உங்களுக்குப் பலன் என்று சொல்லி பலனை முக்கியப்படுத்துகிறார்.  அவர் சொன்ன அந்த பலன் “உன்னதமானவருக்கு பிள்ளைகளாய் இருப்பதன் மூலம் பெறப்போகிற பரலோகப் பலனாகிய உன்னத பலனே”. இயேசு இவ்வாறு சொல்லியிருக்கையில், நம் சுயஞானத்தின்படி, தேவனிடம் பலனை எதிர்பார்ப்பதை “வியாபாரம்” என்று சொல்வது, இயேசுவையும் வியாபாரியாக்குகிற செயலாகும்.

இயேசுவை மகிமைப்படுத்துவதாக நினைத்து அவரது படம் எனக் கருதப்படுகிற ஓர் உருவத்தை மகிமைப்படுத்துகிறவர்களுக்கு இம்மாதிரி விஷயங்கள் புரியாது.

தேவனும் நாமும் எஜமானன்/ஊழியன் என்ற நிலையில் இருக்கிறோம், அல்லது பிதா/மகன் என்ற நிலையில் இருக்கிறோம். எஜமானனிடம் ஊழியன் பலனை எதிர்பார்ப்பதும் இயல்பானதே, பிதாவிடம் மகன் பலனை எதிர்பார்ப்பதும் இயல்பானதே.

இதற்கு மிஞ்சி தனது சுயஞானத்தில், வேதாகமத்தில் இல்லாததையும் வேதாகமம் சொல்லாததையும் சொல்கிற சந்தோஷின் கூற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
RE: பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


இந்த உலகில்  சம்பளம் தெரியாமல் யாரும் வேலைக்கு போவது இல்லை அதுபோல் ஏதாவது  பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்வதில் தவறு இல்லை என்பதை வேதம் பல இடங்களில் போதிப்பது நாம் அறிந்ததே.  
 
ஆகினும் என்னை பொறுத்தவரை எந்த ஒரு காரியத்திலும் GOOD/ BETTER/ BEST
என்ற நிலைகள் இருப்பதை  நாம் பார்க்கிறோம்  இம்மூன்றில்  எது மிக மேன்மையானது என்று அராய்ந்து  அதை செய்வதுதான் சிறந்தது என்று  நான் கருதுகிறேன்.  
 
உதாரணமாக
 
I தீமோத்தேயு 5:18  , வேலையாள் தன் கூலிக்குப்
பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

என்ற வசனத்தின் அடிப்படையிலும் கர்த்தரின்  ஆலயத்துக்கு வரும் தசமபாகம் லேவியருக்கு கூலி போன்றது என்ற அடிப்படையில் ஆலய பணிவிடைகளுக்கு அவ்வித கூலியை பெறுவது எவ்விதத்திலும் தவறு அல்ல!   
 
ஆனால் கர்த்தரோ!  

மல்கியா 1:10 உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள், உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
 
கூலியை அல்லது பலனை எதிர்பார்க்காமல் அன்பின் மிகுதியால் செய்யப்படும் காரியத்திலேயே அவர் பிரியப்படுகிறார் என்பதை ஆதங்கத்தோடு சொல்கிறார் கூலியாகிய பலனை எதிர்பார்த்து காரியங்களை செய்பவன்மேல் எனக்கு பிரியமில்லை என்று சொல்கிறார் .  
 
ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைதான் முக்கியம் என்கிறீர்கள் நிச்சயமாக உண்மை! ஆனால் அந்த ஆண்டவராகிய இயேசு என்ன பலனை எதிர்பார்த்து இந்த பூமிக்கு வந்தார்? என்பதை சற்று யோசித்து பாருங்கள்.  நாம் ஒன்றுக்கும் உதவாத
பாவிகளாக இருக்கும்போது  நம்மேல் உள்ள அன்பினாலேயே  நம்மை  மீட்பதற்காக இந்த பூமிக்கு வந்து  அவமானமும் நிந்தையும் அடி உதையும் வாங்கினார்.
 
அவர் வழியை நாமும் பின்பற்றுவதுதானே சிறந்தது?
 
என்ன சொன்னாலும் நன்மையை செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும்
அல்லது ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்தே காரியங்களை செயும் மனிதர்களுக்கு
"நீ தீமைசெய்தால் தண்டனை உண்டு,  நீ நன்மையை செய்தால் உனக்கு மேன்மை உண்டு! என்றும் அதற்க்கு
நித்தியஜீவன் என்ற பலன் கிடைக்கும் என்று இயேசு சொன்னது உண்மையே! 
 
ஆனால் அவரது இருதய நோக்கம் என்ன  என்பதை நல்ல சமாரியன் உவமையின் மூலம் நாம் சுலபமாக அறியமுடியும்!  
 
அந்த நல்ல சமாரியன் எந்தபலனையும் எதிர்பார்த்து கள்ளன் கையில் அகப்பட்டவனை காப்பாற்றியதாக எழுதப்படவில்லை. வெறும் அன்பு இரக்கம் இவற்றின் அடிப்படையிலேயே தனது சொந்த பணத்தை செலவு செய்து அவனை காப்பாற்றினான் என்று வேதம் சொல்கிறது. அவ்வாறு செய்வதுதான் ஒரு மேலான நிலை.   
 
லுக் 10௦:37. . அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

எனவே
பலனை எதிர்பார்த்து நன்மை செய்வது ஒரு தவறு என்று நான் சொல்ல வரவில்லை! அனால் அது  மேன்மையானது அல்ல!   எந்த பலனையும் எதிர்பாராமல் அன்பினால் ஒரு காரியத்தை செய்வதே மேன்மையானது  என்பதே எனது கருத்து!         



__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


நிபந்தனையற்ற அன்பு தேவனிடத்திலிருந்து மாத்திரமே வெளிப்படுகிறது. மனிதன் செலுத்தும் அன்பில் நிச்சயமாக நோக்கம் இருக்கிறது. இல்லை என்று சொல்லுபவர்கள் நடிக்கிறார்கள் என்றே அர்த்தம்!! எந்த ஒரு மனிதனும் ஒரு எதிர்பார்ப்புடன் தான் அன்பு செலுத்துகிறான். கிறிஸ்தவர்கள் அதற்கு விலக்கு அல்ல, கிறிஸ்தவர்களும் மனிதர்களே!! எதிர்பார்ப்புடன் செலுத்தும் அன்பை ஒரு வியாபாரத்திற்கு ஒப்பீட முடியாது!! வியாபாரம் மற்றோரு மனிதனை துன்பப்படுத்தினாலும் கூட உண்டாகும். ஆனால் அன்பு அப்படி அல்ல!!

பவுல் நல்ல ஒரு ஓட்டத்தை ஒடியதும், விசுவாசத்தை காத்துக்கொண்டதும் கூட கிரீடத்திற்காகத்தான்!! பலனை எதிர்ப்பார்க்காமல் அன்பு செய்வது என்பது வாசிக்கவும், உபதேசிக்கவும் நல்லா தான் இருக்கும், ஆனால் மாம்சத்தில் அது சாத்தியம் அல்ல. ஏனென்றால் தேவன் ஒருவரே அப்படிப்பட்ட அன்பை செலுத்துகிறார்!! நாம் தேவ சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் தேவனாக அல்ல‌!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைதான் முக்கியம் என்கிறீர்கள், நிச்சயமாக உண்மை! ஆனால் அந்த ஆண்டவராகிய இயேசு என்ன பலனை எதிர்பார்த்து இந்த பூமிக்கு வந்தார்? என்பதை சற்று யோசித்து பாருங்கள்.  நாம் ஒன்றுக்கும் உதவாத பாவிகளாக இருக்கும்போது  நம்மேல் உள்ள அன்பினாலேயே  நம்மை  மீட்பதற்காக இந்த பூமிக்கு வந்து  அவமானமும் நிந்தையும் அடி உதையும் வாங்கினார்.

அவர் வழியை நாமும் பின்பற்றுவதுதானே சிறந்தது?//


இயேசுவின் செயல்களைப் பின்பற்றுவது வேறு, அவரது வார்த்தைகளின்படி நடப்பது அல்லது அவரது
வழியைப் பின்பற்றுவதென்பது வேறு. இரண்டையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி குழப்பாதீர்கள் சகோ.சுந்தர் அவர்களே!

இயேசுவின் பாடு மரணத்தை சுட்டிக் காட்டும் நீங்கள், அவர் செய்த எல்லா செயல்களையும் செய்யமுடியுமா? அவர் பிரம்மச்சாரியாக இருந்தார், 5 அப்பம் 2 மீன்களால் 5000 பேரைப் போஷித்தார், இது போன்ற பல அற்புதங்களைச் செய்தார், ஏராளமான வியாதியஸ்தரைக் குணமாக்கினார். இவ்வாறான அவரது செயல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்துள்ளீர்களா, அல்லது உங்களால் செய்ய முடியுமா?

அவரவர்க்கு தேவன் நியமித்துள்ள செயல்களைச் செய்தால் போதுமானது. தேவன் தனக்கு நியமித்தவற்றை இயேசு செய்தார். அதுபோல தேவன் உங்களுக்கு என்னென்ன செயல்களை நியமித்துள்ளாரோ, நீங்கள் என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாரோ அவற்றை ஒழுங்காகச் செய்தால் போதுமானது. அதற்கு மிஞ்சி இயேசு செய்த எல்லா செயல்களின்படியும் செய்ய வேண்டும், அதுதான் மேன்மையானது எனச் சொல்வதெல்லாம் வெறும் வாய்ச்சவடால்களாகத்தான் இருக்குமேயொழிய நடைமுறைக்கு அது சாத்தியப்படாது.

இயேசு செய்த எல்லா செயல்களின்படியும் உங்களால் நடக்கமுடிந்தால் நடந்து காட்டுங்கள். அதைவிடுத்து, இயேசு செய்த செயல்களின்படி நடப்பதுதான் மேன்மையானது, மற்றவை மட்டமானது எனச் சொல்லி, வேதாகமத்தில் இல்லாத உங்கள் சுயகருத்துக்களைக் கூறாதீர்கள்.

நல்ல சமாரியன் உதாரணத்தைச் சொன்னீர்கள். அவன் தன்னைப் போன்ற மனிதரிடம் பலனை எதிர்பார்க்கவில்லை என்பது மெய்தான். ஆனால் தனது நற்கிரியைகளினிமித்தம் தேவன் தனக்கு மறுமையின் பலன்களைத் தருவார் என நினைத்திருக்க மாட்டான் என எவ்வாறு கூறஇயலும்?

நல்ல சமாரியனைப் போல் நீயும் செய் என இயேசு சொன்னதன் அர்த்தம்: அவன் எந்த மனிதனிடமும் பலனை எதிர்பாராமல் அன்புகாட்டினானே அதைப் போல நீயும் செய் என்பதுதான். மற்றபடி, பரலோகப் பலனை எதிர்பார்க்காமல் நீ அன்புசெய் என இயேசு கூறவில்லை. அந்த சம்பவத்தின் ஆரம்ப வரிகளை சற்று படித்துப் பாருங்கள் சகோதரரே!

நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க நான் என்ன செய்யவேண்டும் எனும் கேள்விக்கு இயேசு பதில் சொன்னதன் தொடர்ச்சியாகத்தான் நல்ல சமாரியன் உதாரணத்தை அவர் கூறினார் (லூக்கா 10:25). நித்தியஜீவனைச் சுதந்தரிக்கவேண்டுமெனில் அந்த நல்ல சமாரியனைப் போல் அன்புகூரவேண்டும் என்பதே இயேசு சொல்ல வந்த கருத்து. எனக்குப் பிறன் யார் எனும் கேள்விக்குப் பதில் சொல்லும்படியாகத்தான் நல்ல சமாரியன் உதாரணத்தை இயேசு சொன்னாரேயொழிய, எவரிடமும் பலனை எதிர்பாராமல் அன்பு செய்யவேண்டும் எனும் கருத்தைக் கூறுவதற்காக அவ்வுதாரணத்தை அவர் சொல்லவில்லை. வேதாகமம் சொல்லாத கருத்தை நீங்களாக உருவாக்காதீர்கள் சகோதரரே!

நித்திய ஜீவனை எதிர்பார்த்து அன்புகூருவது வியாபாரம் என சகோ.சந்தோஷ் கூறினார். அவர் அவ்வாறு சொன்னதில் தவறில்லை என்றும் சொல்கிறீர்கள்; கூடவே, பலனை எதிர்பார்த்து நன்மை செய்வது தவறு என நான் சொல்லவரவில்லை என்றும் கூறுகிறீர்கள். அப்படியானால், நித்திய ஜீவன் எனும் பலனை எதிர்பார்த்து அன்பு கூருகிற வியாபாரத்தைச் செய்வதில் தவறில்லை எனக் கூறுகிறீர்களா?

மல்கியா 1:10-ஐச் சுட்டிக்காட்டினீர்கள். தேவனுக்கு ஊழியம் செய்பவன் மனிதனிடம் கூலியை எதிர்பார்க்கக் கூடாது எனும் கருத்தின் அடிப்படையில்தான் அவ்வசனத்தை தேவன் கூறினாரேயொழிய, தேவனிடம் கூலியை எதிர்பார்க்கக்கூடாது எனும் கருத்தில் அவ்வசனத்தை அவர் கூறவில்லை.

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்: தேவனுக்கு ஊழியம் செய்தாலும் சரி, மனிதருக்கு சேவை செய்தாலும் சரி, அதற்கான கூலியை அல்லது பலனை மனிதரிகளிடமிருந்து எதிர்பார்க்கக் கூடாது என்றுதான் வேதாகமம் சொல்கிறது. மற்றபடி, நாம் எதைச் செய்தாலும் அதற்கான பலனை அல்லது கூலியை தேவனிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது என வேதாகமம் ஒருபோதும் கூறவில்லை. அப்படி எதிர்பார்ப்பது தவறு என்றும் வேதாகமம் சொல்லவில்லை.

இம்மாதிரி விஷயங்களில்: எது மேன்மையானது, எது மட்டமானது என வேதாகமம் சொல்லாததை நாம் வியாக்கியானம் செய்யவேண்டியதில்லை. இதுதான் மேன்மையானது என நீங்கள் கருதினால் அதை நீங்கள் தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் அதை ஒரு போதனையாகச் சொல்லாதீர்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


இயேசு சொன்னது:
யோவான் 6:27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்.


சந்தோஷ் சொல்வது:
நித்தியஜீவன் எனும் பலனை எதிர்பார்க்காமல் கிரியை நடப்பியுங்கள்.

சுந்தர் சொல்வது:
நித்தியஜீவன் எனும் பலனை எதிர்பார்க்காமல் கிரியை நடப்பிப்பதுதான் மேன்மையானது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


anbu57 wrote:
//நித்திய ஜீவனை எதிர்பார்த்து அன்புகூருவது வியாபாரம் என சகோ.சந்தோஷ் கூறினார். அவர் அவ்வாறு சொன்னதில் தவறில்லை என்றும் சொல்கிறீர்கள்; கூடவே, பலனை எதிர்பார்த்து நன்மை செய்வது தவறு என நான் சொல்லவரவில்லை என்றும் கூறுகிறீர்கள். அப்படியானால், நித்திய ஜீவன் எனும் பலனை எதிர்பார்த்து அன்பு கூருகிற வியாபாரத்தைச் செய்வதில் தவறில்லை எனக் கூறுகிறீர்களா?//

தேவனிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதை வியாபாரம் என்று சொல்லி அதைக் கொச்சைப்படுத்த வேண்டம் சகோ.சந்தோஷ் மற்றும் சுந்தர் அவர்களே!

தேவன் நமக்கு பிதா ஸ்தானத்தில் இருக்கிறார், அவருடைய பிள்ளைகள் ஸ்தானத்தில் நாம் இருக்கிறோம். பிள்ளைகள் பிதாவிடம் எதிர்பார்ப்பதை, உரிமை என்றுதான் சொல்லவேண்டுமேயொழிய வியாபாரம் என்று சொல்லக்கூடாது.

ஒருவேளை தேவனை எஜமானாகவும் நம்மை ஊழியராகவும் கருதி தேவனிடம் கூலியை எதிர்பார்த்தால் அதுவுங்கூட ஓர் உரிமைதானேயொழிய வியாபாரம் அல்ல.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


sandosh wrote on 06-10-10 at http://www.truthspeaks.activeboard.com/forum.spark?aBID=136947&p=3&topicID=38577598
//தேவனை தேவனுக்காக மட்டுமே பார்ப்பது என்பதை பற்றியும், அவரிடம் ஐக்கியம் கொள்ள வேண்டிய அவசியத்தை பற்றியும், தேவனுடைய இராஜ்ஜியத்தில் இப்போதே சேர்வது எப்படி போன்ற இந்த தளத்தின் நோக்கத்தை வலியுறுத்தும் உண்மைகளே எழுதப்படும்.//

//தேவ இராஜ்ஜியத்தில் இருப்பது என்றால் தேவனோடு இருப்பது அல்லது அவர் அருகாமையில் இருப்பது என்று பொருள்படும். ஆகவே இதை தேவனுடனான ஐக்கியம் என்றும் சொல்லலாம். இதன் பல பெயர்கள்:

1. பரலோக ராஜ்ஜியம் 2. தேவனுடனான ஐக்கியம் 3. கிருஸ்துவுடனான ஆத்துமாவின் கல்யாணம் 3. புது சிருஷ்டியாதல் 4. இடைவிடாமல் ஜெபித்தல் 5. சுயம் அழிதல் 6. தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக மாறுதல் 7. இடுக்கமான வாசல் வழியே பிரவேசித்தல் 8. தேவனோடு சஞ்சரித்தல் 9. இயேசுவை போல மாறுதல் 10. சிறு பிள்ளைகளை போல் ஆதல்
இப்படி பல பெயர்களால் சொல்லப்பட்டுள்ளது. இவைகளை பற்றி எழுதி கொண்டிருந்தால், எழுதி கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அதிகமான இடதத்தில் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அடுத்ததாக தேவ ராஜ்ஜியத்தை பற்றின ஒரு நற்செய்தி என்னவெனில் அது எதிர்காலத்தில் வர வேண்டியதாக இல்லாமல் இப்போது, இங்கேயே இருக்கிறது என்பதே.//

//ஒரு மனிதன் இயேசு கிருஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளும் அதே நேரத்தில் அவனுக்குள்ளே வாசம் செய்ய தேவன் வந்து விடுகிறார். அவரது ராஜ்ஜியம் நம்முள் ஆரம்பமாகிறது. அவன் இதுரை அனுபவித்திராத சந்தோஷத்தை, சமாதானத்தை பெறுகிறான். ஆனால் நாளாக, நாளாக மனிதனை ஆசைகள் ஒரு பக்கம் இழுக்க, இச்சைகள் ஒரு பக்கம் இழுக்க, துன்பங்கள் ஒரு பக்கம் இழுக்க, உலக கவலைகள் ஒரு பக்கம் இழுக்க அவன் தேவ இராஜ்ஜியத்தை விட்டு விலகி விடுகிறான். எப்போதாவது சில சமயம் மட்டுமே தேவனுடனான தொடர்பை பெறுகிறான். ஆனால் தேவனுடனான தொடர்பு எல்லா நாட்களும், 24 மணி நேரமும் இருக்க வேண்டிய ஒன்று என வேதம் சொல்கிறது.

இவ்வாறு ஒரு மனிதன் தேவனோடு ஐக்கியம் கொண்டிருக்கும் போது அந்த மனிதனுக்கு ஏற்படும் துன்பங்கள், பிரச்சனைகள் எதுவுமே அந்த மனிதனுடையது அல்ல. அது தேவனுடையது. அவரே அவைகளை எதிர் கொள்ளுவார். அந்த மனிதனோ தேவனுக்குள் இளைப்பாறலை அடையலாம்.

மத்தேயு 11.28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

இங்கே நுகம் என சொல்லப்பட்டுள்ளது தேவனோடு எப்போதும் சேர்ந்திருக்க எடுக்கப்படும் முயற்சிகளே.

இத்தகைய ஒரு உன்னதமான இலக்கை நோக்கி மிகவும் சுலபமான முறையில் பயணம் செய்வதற்கே இந்த தளம் ஆரம்பிக்கபட்டுள்ளது. இந்த தளம் ஆரம்பிக்க இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இதன் நிர்வாகியின் சொந்த ஆன்மிக முன்னேற்றம் மற்றொன்று மற்றவர்களின் ஆன்மிக முன்னேற்றம்.//

sandosh wrote on 25-09-10 at http://www.truthspeaks.activeboard.com/index.spark?aBID=136947&p=3&topicID=38426647
//இந்த தளம் பலன்களின் மேல் நோக்கம் கொண்ட ஒரு தளமாகும். அதாவது ஒரு செய்தி கேட்டோம் நன்றாக இருந்தது என போகாமல், அதற்குண்டான பலனை அடைந்த தீர வேண்டும் என எதிர்பார்த்து அதற்கான வழிகளைச் செய்யும் தளமாகும்.//

sandosh wrote on 06-10-10 at http://www.truthspeaks.activeboard.com/index.spark?aBID=136947&p=3&topicID=38621973
//இந்த தளம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், அந்த இலக்கை அடைவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதாகும். இந்த தளம் பலன்கள் மேல் நோக்கம் கொண்டது. அந்த ஒரே வழியை அடைவதற்காக அனேக வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த தளம் இடுக்கமான வாசல் வழியே தனது பயணத்தை தொடர்கிறது.//

இப்படியாக இத்தளம் சிறந்த நோக்கங்களைக் கொண்டிருந்ததால், இத்தளத்தைக் குறித்து பின்வருமாறு கூறியிருந்தேன்.

anbu57 wrote on 07-10-10 at http://www.truthspeaks.activeboard.com/index.spark?aBID=136947&p=3&topicID=38621864
//இத்தளத்தின் நோக்கம் வரவேற்கத்தக்கது, புதுமையானது என்றும் சொல்லலாம்.//
//சகோதரரின் திரித்துவ நம்பிக்கையைத் தவிர மற்ற அனைத்து காரியங்களும் ஏற்புடையவைகளே.//


ஆனால் எனது இப்பதிவுக்குப் பின்னர் இத்தள நிர்வாகி பதித்துள்ள ஒரு கருத்து, அவரது முந்தின ஒரு கருத்துக்கு முரணாக உள்ளது.

இத்தளம் “பலன்கள்மேல் நோக்கமாகக் கொண்டது” என முன்பு கூறிய அவர், “நித்திய ஜீவனையோ அல்லது பிற பலன்களை எதிர்பார்த்தோ செய்யாமல், பலனை எதிர்பாராது மற்ற மக்களின் மீது கொண்ட அன்பினால் மட்டுமே செய்யும்படி” இந்த தளம் போதிக்கும் என இத்தொடுப்பில் கூறியுள்ளார்.

http://www.truthspeaks.activeboard.com/index.spark?aBID=136947&p=3&topicID=38621864

இத்தளம் இடுக்கமான வாசல் வழியே தனது பயணத்தைத் தொடர்கிறது என்கிறார். அந்த இடுக்கமான வாசல் என்பது நித்திய ஜீவனுக்குப் போகிற வாசலே என இயேசு கூறுகிறார் (மத்தேயு 7:14). எனவே இத்தளத்தின் நோக்கம் மற்றும் எதிர்பார்க்கும் பலன் நித்தியஜீவனே என்றாகிறது. ஆனால் நித்திய ஜீவனை எதிர்பாராமல் அன்புகூர வேண்டும் என தற்போது தள நிர்வாகி கூறுகிறார். ஒருபுறம் பலன் தான் இத்தளத்தின் நோக்கம் என்கிறார்; மறுபுறம் பலனை எதிர்பாராமல் அன்புகூர வேண்டும் என்கிறார். இது அவரது நிலையில் உள்ள முரண்பாட்டைக் காட்டுகிறது.

இத்தள நிர்வாகி கூறுகிற பயிற்சிகளும் வேதவசனங்களின் அடிப்படையில் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இத்தளத்தைக் குறித்து நான் எழுதின பின்வரும் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

//சகோதரரின் திரித்துவ நம்பிக்கையைத் தவிர மற்ற அனைத்து காரியங்களும் ஏற்புடையவைகளே.//


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

சகோதரர் அன்பு அவர்களே,

உங்கள் கேள்விக்கு, என் கருத்தை சொல்ல இந்த கேள்விக்கு உங்களின் பதில் தேவைப்படுகிறது. ஆகவே இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகன் பிற மனிதர்களிடத்தில் அன்பாக இருந்து அவர்களுக்கு தன்னாலியன்ற உதவுகளை செய்கிறான் என வைத்துக் கொள்வோம். இப்போது அவன்

நித்திய ஜீவனை அடைவானா? இல்லையா?

இவனை போலவே அன்பு செலுத்தும், பிற மதத்திலுள்ள ஒரு மனிதனும்

நித்திய ஜீவனை அடைவானா? இல்லையா?


__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


நாம் யாவரும் எழுதித்தள்ளும் எந்த ஒரு தளமும் நம்மை பரலோகமோ, நித்தியஜீவனுக்கோ கொண்டு போக முடியாது!! அவரவர் புரிந்துக்கொள்ளுதலின் பதிவுகள் தான் இந்த தளங்கள் வெளியிடுவது!! தேவனின் தெரிந்துக்கொள்ளுதலே நம்மை கிறிஸ்துவின் சாயலில் அந்த உன்னதத்திற்குள் பிரவேசிக்க வைக்க முடியுமே தவிர, நாம் நடத்தும் தளங்கள் அல்ல!! "இந்த தளம் இடுக்கமான வாசல் வழியே பயனத்தை தொடர்கிறது" என்பதெல்லாம் அபத்தமான போதனைகள், தளத்தை மேன்மைப்படுத்தும் விதம்! இடுக்கமான வாசலை அநேகர் கண்டுபிடிப்பதில்லை என்கிறது வேதம், ஆனால் இந்த தளத்தின் கருத்துக்கள் (ஒரு சிலவற்றை தவிற) அநேகர் பின்பற்றும் கிறிஸ்தவர்களின் கோட்பாடுகளை (திருத்துவம் உட்பட) இந்த தளமும் இதை நடத்தும் நிர்வாகி பின்பற்றுகிறார்கள்! அநேகர் நடப்பது விசாலமான பாதை, அது இடுக்கமான வாசல் அல்ல என்பதை அந்த தளத்தை நடத்தும் நிர்வாகி திரு சந்தோஷ் அவர்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்!! தளத்தில் பதியப்படும் விஷயங்கள் "புதிய குப்பியில் பழைய சரக்கு"ஆக‌ () தான் இருக்கிறது (மிகவும் ஒரு சில தனிப்பட்ட அனுபவங்களை தவிர‌)!! இந்த கருத்தை இந்த தளத்தில் பதிவு செய்வது எவ்வுளவு சரி என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் பதிந்து விட்டேன்!! இத்தள நிர்வாகியின் சுதந்திரத்திற்கு என் கருத்துக்கள் கட்டுப்படும்!! (அதாவது நீக்கினாலும் பரவாயில்லை என்பதை எனக்கு தெரிந்த தமிழில் எழுதிவிட்டேன்)!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


sandosh wrote:
//உங்கள் கேள்விக்கு, என் கருத்தை சொல்ல இந்த கேள்விக்கு உங்களின் பதில் தேவைப்படுகிறது. ஆகவே இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகன் பிற மனிதர்களிடத்தில் அன்பாக இருந்து அவர்களுக்கு தன்னாலியன்ற உதவிகளைச் செய்கிறான் என வைத்துக் கொள்வோம். இப்போது அவன் நித்திய ஜீவனை அடைவானா? இல்லையா?

இவனை போலவே அன்பு செலுத்தும், பிற மதத்திலுள்ள ஒரு மனிதனும் நித்திய ஜீவனை அடைவானா? இல்லையா?//

சகோ.சந்தோஷ் அவர்களே! தங்கள் கேள்விக்கு வேதாகமத்திலேயே பதிலுள்ளது. பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

ரோமர் 2:6-16 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் (புறஜாதியினர்) பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். தேவனிடத்தில் பட்சபாதமில்லை. எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.  நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

இயேசுவுங்கூட பின்வரும் வசனங்களில் கூறுவதைப் படியுங்கள்.

மத்தேயு 25:34-36,40-43,46 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் ... மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். ... அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

எனவே தேவனையறியாத ஒருவன்கூட, நித்தியஜீவனுக்கேற்ற கிரியைகளைச் செய்தால் அவன் நித்தியஜீவனைப் பெறுவான் என அறிகிறோம். அவ்வாறெனில் ஒருவன் தேவனை/இயேசுவை விசுவாசிக்க வேண்டியதில்லையா என நீங்கள் கேட்கலாம். ஒருவன் நித்தியஜீவனைப் பெறுவதற்கு தேவனை/இயேசுவை விசுவாசிக்கத்தான் வேண்டும். ஆனால் இவ்வுலக வாழ்வில் அவன் அதைச் செய்யத்தவறினாலும், இயேசுவின் 1000 வருட அரசாட்சி காலத்தில் அவன் தேவனை/இயேசுவை அறிவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என நான் கருதுகிறேன்.

இப்போது நீங்கள் இவ்வாறு கேட்கலாம். தேவனை/இயேசுவை அறியாத ஒருவன் பிற மனிதர்களிடத்தில் அன்புகூர்ந்து நற்கிரியைகளைச் செய்தால், அவன் பலனை எதிர்பார்க்காமல்தானே அவ்வாறு செய்திருப்பான்? அது மேன்மையானதுதானே? என நீங்கள் கேட்கலாம்.

நிச்சயமாக மேன்மையானது எனச் சொல்லலாம்தான். ஆனால் அதற்காக நித்தியஜீவன் எனும் பலனை எதிர்பார்த்து அன்புகூருவதை மட்டுப்படுத்தி, அதை வியாபாரம் எனச் சொல்லக்கூடாது என்பதே எனது கருத்து.

பின்குறிப்பு: தேவனை/இயேசுவை அறியாத ஒருவன், தான் செய்த நன்மைகளுக்கான பலனை தேவனிடம் எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால் சகமனிதர்களிடம் பலனை எதிர்பார்க்காமல் இருப்பானா என்பது கேள்விக்குறியே. மாத்திரமல்ல, தேவனை/இயேசுவை அறியாத ஒருவனால், அதாவது தேவஅன்பை அறியாத ஒருவனால், தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்தமுடியுமா என்பதும் கேள்விக்குறியே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:
//இந்த கருத்தை இந்த தளத்தில் பதிவு செய்வது எவ்வுளவு சரி என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் பதிந்து விட்டேன்!! இத்தள நிர்வாகியின் சுதந்திரத்திற்கு என் கருத்துக்கள் கட்டுப்படும்!! (அதாவது நீக்கினாலும் பரவாயில்லை என்பதை எனக்கு தெரிந்த தமிழில் எழுதிவிட்டேன்)!!//

அன்பான சகோதரரே! ஏறக்குறைய ஒரேயொரு விஷயத்தில்தான் நமக்குள் கருத்துவேறுபாடு உள்ளது. அதைக் குறித்து எவ்வளவோ எழுதி, விவாதித்து, அதை நிறுத்தியும் விட்டோம். தற்போதைய தங்கள் பதிவில் நீக்கப்படுமளவிற்கு நீங்கள் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் உங்கள் பதிவின் சில பகுதிகளில் மட்டும் சிறு திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

1. //தேவனின் தெரிந்துக்கொள்ளுதலே நம்மை கிறிஸ்துவின் சாயலில் அந்த உன்னதத்திற்குள் பிரவேசிக்க வைக்க முடியுமே தவிர, நாம் நடத்தும் தளங்கள் அல்ல!!//

இதன் திருத்தம்:

//தேவனின் வார்த்தைகளின்படி நடப்பதுதான் நம்மைக் கிறிஸ்துவின் சாயலில் அந்த உன்னதத்திற்குள் பிரவேசிக்க வைக்க முடியுமே தவிர, நாம் நடத்தும் தளங்கள் அல்ல!!

2.//இடுக்கமான வாசலை அநேகர் கண்டுபிடிப்பதில்லை என்கிறது வேதம்,//

இதன் திருத்தம்:

இடுக்கமான வாசலை அநேகர் கண்டுபிடிப்பதில்லை எனச் சொல்கிற வேதம், இடுக்கமான வாசலைக் கண்டுபிடிப்பவர்கள் சிலரே என்றும் கூறுகிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

anbu57 wrote:

இதன் திருத்தம்://தேவனின் வார்த்தைகளின்படி நடப்பதுதான் நம்மைக் கிறிஸ்துவின் சாயலில் அந்த உன்னதத்திற்குள் பிரவேசிக்க வைக்க முடியுமே தவிர, நாம் நடத்தும் தளங்கள் அல்ல!!

என் பதிவிற்கு நான் ஆதாரமாக எடுத்துக்கொண்ட வசனம்,

யோவான் 6:44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.; 65. ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.

இதை சொன்னவுடன் அவரின் சீஷர்களில் பலர் பின் வாங்கி போனார்களாம்!! மனுஷ முயற்சியில் நாம் பின் தொடர்வோமென்றால் இது தான் நிலை. அவரின் வார்த்தைகளின் படி நடக்கவேண்டும் என்றால் முதலில் யோவான் 6:44, 65ம் நிறைவேறனுமே!! பிதாவின் சித்தம் இல்லாமல் ஒருவனும் கிறிஸ்துவிடம் வர முடியாது!! அவர் தன் அப்போஸ்தலர்களை தெரிந்து எடுக்கவும் பிதாவிடம் தான் கேட்டார்!! மாசத்தில் இருந்த கிறிஸ்து தன் இஷ்டப்படி எதையும் வெய்யவில்லை என்கிறது வேதம். அவர் செய்வது, சொல்லுவது அனைத்தும் அவரை அனுப்பிய பிதாவிடம் இருந்து தான் பெற்றுக்கொள்கிறார் என்று பல இடங்களில் சொல்லியும் இருக்கிறார். 



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

உங்கள் பதிவிற்கு ஆதாரமாக நீங்கள் எடுத்துக்கொண்ட யோவான் 6:44,65 வசனங்களின் கருத்து சம்பந்தமாக சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

யோவான் 6:44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.; ...
65 ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.


44-ம் வசனத்தின்படி பார்க்கையில், பிதா எவர்களை இழுக்கிறாரோ அவர்களை மட்டுமே கடைசிநாளில் இயேசு எழுப்புவார் எனக் கருதலாமா?

சிலரை மட்டுமே பிதா இழுப்பாரெனில், அந்த சிலரைத் தவிர மற்றவர்கள் உயிர்த்தெழமாட்டார்கள் எனக் கருதலாமா?

மற்றவர்கள் உயிர்த்தெழமாட்டார்கள் எனில், அது 1 கொரி. 15:22-க்கு முரணாகிவிடுமே?

இக்கேள்விகளுக்கு தெளிவான பதில் தரும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

1 கொரி 15:22 முற்றிலும் சரியான வசனம்!! உயிர்த்தெழுதல் அனைவருக்கும் உண்டு!! ஆனால் உயிர்த்தெழுந்த அனைவரும் கிறிஸ்துவிடத்திற்கு போகமாட்டார்கள்!! அதாவது இன்றை போதகர்களின் படி அனைவரும் 'பரலோகத்திற்கு' போக மாட்டார்கள்!!

1 யோவான் 3:2. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

லூக்கா 12:32 பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.

சிலருக்கு ஆளுகைக்கான சிங்காசனமும், மீதியானவர்களுக்கு நீதியை கற்றுக்கொள்ளும் நியாயத்தீர்ப்பின் நாட்கள்!!

அழைக்கப்பட்டவர்கள் பலர் ஆனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் சிலரே!!

பிதா இழுத்துக்கொள்பவர்கல் கிறிஸ்துவின் சாயலை தரித்துக்கொள்வார்கள், அதற்காக மற்றவர்கள் கைவிடப்பட்டவர்கள் என்பது அல்ல, மற்றவர்கள் கிறிஸ்து அண்டையில் போகமாட்டாரகள், மாறாக கிறிஸ்துவின் ராஜ்யத்தில் நீதியை கற்று கொள்வார்கள்!!

எல்லோருக்கும் உயிர்த்தெழுதல், சிலர் கிறிஸ்துவின் சாயலை தரித்துக்கொள்வார்கள்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Member

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

சகோதரர் அன்பு அவர்களே,

நீங்கள் ஒரு மனிதன் கிரியையினால் நித்திய ஜீவனை அடைய முடியும் என்று வேதத்தை கொண்டு கூறுகிறீர்கள். இங்கே இன்னொருவரோ அதே வேதத்தை கொண்டு கிரியையினால் அல்ல என்று சொல்கிறார்.

உங்களின் பதிவுகள் அனேகம் நன்றாயிருக்கின்றன. ஆனால் திரித்துவம் என்பதையும், இயேசுவை வணங்க வேண்டும் என நீங்கள் சொல்லாததையும் வைத்து உங்கள் தளம் ஒரு வித்தியாசமான தளம் என அனேகரால் நம்பப்படுகிறது.

எவ்வளவோ நல்ல கருத்துக்கள் இருந்தும் அவைகள் மதிக்கப்படாமல் போகிறது. (நான் அப்படி இல்லை நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் அந்த கருத்துக்களை (மட்டும்) வரவேற்ப்பவன்)

இன்று பிறருக்கு உதவி செய்வதை பற்றி பெரும்பாலும் போதிப்பதில்லை. மனிதர்களின் மனங்களில் அன்பை உருவாக்கும் காரியம் செய்யப்படுவதில்லை. ஊழியத்திற்க்கு காணிக்கை என்பது பற்றியே போதிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் கிரியையினால் நித்திய ஜீவனை அடைய முடியும் என்று சொன்னால்

பத்தில் எட்டு பேர் அப்படி இல்லை என்று அதே வேதத்தை வைத்து சொல்ல காத்திருக்கின்றனர்.

பிற மனிதனுக்கு உதவி செய்ய வேண்டியது என்பது நித்திய ஜீவனுக்காக மட்டுமல்ல, அதற்கும் முன்பதாக ஒரு மனிதனாக பிறந்த அவன் இந்த உலகில் செய்ய வேண்டிய கடமை என்பதை சொல்லும் போது (முடிந்த வரை வேதத்திலிருந்து) ஒருவன் சாக்கு போக்கு சொல்ல, கிரியை செய்வது முக்கியமானதல்ல என்று சொல்ல வாய்ப்பிருக்காது. இதுவே என் அணுகுமுறை.


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


சகோ.சந்தோஷ் அவர்களே!

(நித்திய ஜீவன் எனும்) பலனை எதிர்பார்த்து அன்புகூர்தல் வியாபாரத்திற்குச் சமம் என நீங்கள் கூறியதன் அடிப்படையில்தான் இத்திரி துவக்கப்பட்டது. ஆனால் உங்களது அக்கூற்றை நியாயப்படுத்தி நீங்கள் வாதிடவுமில்லை, அல்லது அது தவறுதான் என்று சொல்லி தவறை ஒத்துக்கொள்ளவுமில்லை. மாறாக, வேறு சில விஷயங்களில் உங்கள் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள். சரி, போகட்டும்.

sandosh wrote:

//நீங்கள் ஒரு மனிதன் கிரியையினால் நித்திய ஜீவனை அடைய முடியும் என்று வேதத்தை கொண்டு கூறுகிறீர்கள். இங்கே இன்னொருவரோ அதே வேதத்தை கொண்டு கிரியையினால் அல்ல என்று சொல்கிறார்.//

வேதாகமத்தில் சில கருத்துக்கள் இம்மாதிரி முரண்பாடாகத் தோன்றினாலும், வேதாகமம் முரண்பாடு உடையதல்ல என்ற நியதியின் அடிப்படையில் நாம் தியானித்து ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும். மாறாக, நம் வசதிக்கேற்றபடி ஒரு கருத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி அடுத்ததைப் புறக்கணித்தால் நாம் வஞ்சிக்கப்பட்டுப்போக மிகவும் வாய்ப்புள்ளது.

இயேசுவின் நாட்களில் வேதபாரகரும் பரிசேயரும் வேதாகமத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே முன்னிலைப்படுத்திவிட்டு அடுத்த பக்கத்தைப் புறக்கணித்ததால்தான் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடி கண்டனம் பண்ணவேண்டியதாயிருந்தது.

அவர்கள் முன்னிலைப்படுத்தியவை: விருத்தசேதனம், பலி, ஒய்வுநாள் ஆசரிப்பு, கைகழுவுதல் போன்ற பல ஆசரிப்புகள், பண்டிகை ஆசரிப்பு, தசமபாகம் கொடுத்தல் போன்றவைகளே. இம்மாதிரி கிரியைகளில் நம்பிக்கை வைத்த அவர்கள், நீதி இரக்கம் விசுவாசம் போன்ற மேன்மையான கிரியைகளை நினைக்கவுமில்லை, செயல்படுத்தவுமில்லை (மத்தேயு 23:23).

அன்றைய வேதபாரகர் பரிசேயரின் நிலையில்தான் இன்றைய பெருவாரியான கிறிஸ்தவர்களும் சபைத்தலைவர்களும் இருக்கின்றனர். எப்படியெனில் அன்றைய வேதபாரகர் பரிசேயரைப் போலவே இவர்களும் சில சடங்காச்சார கிரியைகளில் மட்டும் நம்பிக்கை வைத்து அவற்றை முன்னிலைப்படுத்திவிட்டு, மேன்மையான பல கிரியைகளில் பின்தங்கி விடுகின்றனர்.

இவர்கள் முன்னிலைப்படுத்துகிற சடங்காச்சார கிரியைகள்: ஞானஸ்நானம் (பரிசுத்தஆவியால் ஞானஸ்நானம் அல்ல, வெறும் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம்), காணிக்கை, பண்டிகை, திருவிருந்து, தசமபாகம் போன்றவைகளே. ஒருபுறம் இம்மாதிரி கிரியைகளை முக்கியப்படுத்திவிட்டு, கூடவே கிரியைகளால் நாம் நீதிமான்களாவதில்லை என்றும் சொல்லிக் கொள்கின்றனர்.

கிரியைகளால் நீதிமான்களாவதில்லை எனக் கூறும் அவர்கள்: ஞானஸ்நானம், திருவிருந்து போன்ற கிரியைகளை மட்டும் ஏன் முக்கியப்படுத்த வேண்டும்?

அன்றைய வேதபாரகரும் பரிசேயரும் தங்கள் கிரியைகளால்தான் தாங்கள் நீதிமான்களாவதாக நம்பி, அக்கிரியைகளைச் செய்துவந்தனர். ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களோ, தங்கள் கிரியைகளால் தாங்கள் நீதிமான்களாவதில்லை என ஒருபுறம் சொல்லிக்கொண்டு, மறுபுறம் சில கிரியைகளை முக்கியப்படுத்திக்கொண்டும் இருக்கின்றனர்.

இவர்களைப் பொறுத்தவரை, இவர்கள் முக்கியப்படுத்துகிற ஞானஸ்நானம், திருவிருந்து, காணிக்கை, பண்டிகை, தசமபாகம் போன்றவை கிரியைகளாகத் தெரிவதில்லை. ஆனால் இயேசு முக்கியப்படுத்திக் கூறின நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையிலான கற்பனைகள்தான் கிரியைகளாகத் தெரிகின்றன. எனவேதான் அம்மாதிரி நீதியின் கிரியைகளால் நாம் நீதிமான்களாவதில்லை என்று சொல்லி ஜனங்களை வஞ்சித்து வருகின்றனர்.

இவர்கள் பின்வரும் வசனத்தில் பவுல் கூறுவதை சற்று கவனிப்பார்களாக. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் நாம் நீதிமான்களாவதில்லை எனக் கூறிய அதே பவுல் (கலாத்தியர் 2:16), பின்வரும் வசனத்தில் இவ்விதமாகக் கூறக்காரணமென்ன என்பதை அவர்கள் சிந்திப்பார்களாக.

ரோமர் 2:16 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

மத்தேயு 23:23-ல் இயேசு சொன்ன நியாயப்பிரமாண கிரியைகளான நீதி, இரக்கம், விசுவாசத்தை செயல்படுத்தினால்தான் நாம் நீதிமான்களாக்கபடுவோமேயொழிய, அவற்றைச் செயல்படுத்தாமல் நாம் நிச்சயமாக நீதிமான்களாக்கப்படப்போவதில்லை.

எனவேதான் இத்தளத்தில் நித்தியஜீவனைப் பெற (நீதி, இரக்கம், விசுவாசம் போன்ற) கிரியைகள் அவசியம் என வலியுறுத்திக் கூறிவருகிறேன்.

கிரியைகளால் நாம் நீதிமான்களாவதில்லை எனும் எளிதான போதனையைச் சொல்லி விரிவான வாசலுக்கு அழைக்கிற போதகர்கள் ஏராளமாக உண்டு. ஆனால் நீதி, இரக்கம், விசுவாசம் போன்ற கிரியைகளைச் செய்தால்தான் நித்தியஜீவனைப் பெறமுடியும் எனும் கடினமான போதனையைச் சொல்லி இடுக்கமான வாசலுக்கு அழைப்பவர்கள் மிகமிகக் குறைவுதான்.

sandosh wrote:

//உங்களின் பதிவுகள் அனேகம் நன்றாயிருக்கின்றன. ஆனால் திரித்துவம் என்பதையும், இயேசுவை வணங்க வேண்டும் என நீங்கள் சொல்லாததையும் வைத்து உங்கள் தளம் ஒரு வித்தியாசமான தளம் என அனேகரால் நம்பப்படுகிறது.

எவ்வளவோ நல்ல கருத்துக்கள் இருந்தும் அவைகள் மதிக்கப்படாமல் போகிறது.//


திரித்துவத்தையும் இயேசுவை வணங்கவேண்டுமென்பதையும் வேதாகமம் எங்கும் சொல்லவில்லை. வேதாகமம் சொல்லாததை நான் ஏன் சொல்லவேண்டும்?

சில நாட்களுக்கு முன் சில்சாம் தனது தளத்தின் ஒரு திரியில் ஒரு கருத்தை அழகாகச் சொல்லியிருந்தார்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38324925

//வேதத்தில் நேரடியாகச் சொல்லப்பட்டதை இல்லையென்று சொல்பவன்;
வேதத்தில் நேரடியாகச் சொல்லப்படாததை இருக்கிறதென்று சொல்பவன்


-ஆகிய இவ்விருவருமே கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.//


இக்கூற்று வேதாகமத்தில் நேரடியாகக் கூறப்படவில்லை. எனவே சில்சாம் சொன்னபடி “இவ்விருவரும்” கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்தானா என்பதை என்னால் கூறஇயலாது. ஆனால் “இவ்விருவரும்” வேதத்திற்கு எதிரானவர்கள் என்பதை என்னால் திட்டமாகக் கூறமுடியும்.

அதன்படி, வேதத்தில் நேரடியாகச் சொல்லப்பட்டதான, “நித்தியஜீவனைச் சுதந்தரிக்க வேண்டுமெனில் கற்பனைகளைக் கைக்கொள்” எனும் போதனையை இல்லையெனக் கூறுகிறவர்களும் வேதத்திற்கு எதிரானவர்களே!

வேதத்தில் நேரடியாகச் சொல்லப்படாததான, “திரித்துவம், இயேசுவை வணங்க வேண்டும்” எனும் போதனைகள் இருக்கிறதெனக் கூறுகிறவர்களும் வேதத்திற்கு எதிரானவர்களே!

நித்தியஜீவனைச் சுதந்தரிக்க கிரியை அவசியம் எனும் உண்மையை நேரடியாகக் கூறுகிற அநேக வசனங்களில் இரு துளிகள் மட்டும்:

மத்தேயு 19:16,17 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

ரோமர் 2:7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

இதுபோல “திரித்துவம், இயேசுவை வணங்குதல் (அதாவது ஆராதித்தல்)” எனும் போதனை வேதாகமத்தில் நேரடியாகக் கூறப்பட்டிருந்தால் அதை எடுத்துரைக்கும்படி சந்தோஷ் உட்பட அனைவரையும் வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
RE: பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


சந்தோஷ் அவர்களே, அந்த இன்னோருவரும் சொல்லுவது வசனத்தை வைத்து தான்!! வசனம் இல்லாத திருத்துவம் போன்றவற்றை போதிப்பதில்லை!!

சகோ அன்பு அவர்களே,

மத்தேயு 19:16,17 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

தாங்கள் நித்திய ஜீவன் என்று எதை சொல்லுகிறீர்கள் என்பதில் நான் தெளிவாக இல்லை!!

யூதர்களிடம் போதிக்கப்பட்ட நித்தியஜீவன் இந்த பூமிக்குறியதே!! கிறிஸ்தவர்களிடம் "கிறிஸ்துவின் சபையாக" இருப்போருக்கு அவரின் சாயலில் உண்டான நித்தியம்!! பூமியில் நித்திய ஜீவனை பெற நற்கிரியைகள் என்பது அடிப்படையே!! இதையே தான் மத். 25ம் அதிகாரத்தில் ஆடுகலை பிரிக்கும் போது கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது! அந்த இடத்தில் உங்களில் யார் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டீர்கள் என்று கேட்கப்படவில்லையே!! ஏனென்றால் நீதி வாசமாக இருக்க போகும் வரயிருக்கும் அந்த பூமியில் நற்கிரியைகளே இருக்கும்!!

ஆனால் பரலோகம் என்கிற நித்த்யத்திற்கு உண்டானது அவரின் கிருபையினாலே அன்றி வேற் இல்லை என்பதை சொல்லுகிறேன்!! நற்கிரியைகள் தேவை இல்லை என்று சொல்லவில்லை!! அதாவது நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இருக்கிறேன் ஆனால் நற்கிரியை செய்ய மாட்டேன், துன்மார்க்கனாக தான் வாழ்வேன் என்பது எப்படி சரியாகும்!! கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் நற்கிரியைகள் அவனுடன் இருக்கும் ஒரு பகுதியே அதில் மேன்மை பாராட்ட ஒன்றும் இல்லையே என்பது தான் என் வாதம்!! ஆகவே தான் கிரியைகள் ஒன்றுக்கும் உதவாது என்று சொல்லுவது!! கிரியைகள் உதவாது என்று சொல்லுவது கிரியைகள் செய்யக்கூடாது என்று அர்த்தம் கொள்வது அல்ல!! ஆனால் கிருபை அன்றி கிரியைகள் செய்வோரும் இருக்கிறார்களே!! கிறிஸ்துவை ஏற்காத எத்துனையோ சன்மார்க்கர் இருக்கிறார்கள், நற்கிரியைகளையே தங்கள் வாழ்க்கையாக கொண்டு எத்துனையோ பேர் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்களே!! நீங்கள் வழியுறுத்தும் "நித்தியஜீவனுக்கு" நிச்சயமாக அவர்கள் தகுதியானவர்களே, ஆனால் கிறிஸ்துவுடன் உண்டான அந்த உன்னதமான ராஜியத்தில் அவர்கள் பிரவேசிப்பதில்லை!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard