நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: பலன்களை எதிர்பார்த்து பிறரிடம் அன்புகூரலாமா?
Permalink  
 


sandosh wrote:

//உங்களின் பதிவுகள் அனேகம் நன்றாயிருக்கின்றன. ஆனால் திரித்துவம் என்பதையும், இயேசுவை வணங்க வேண்டும் என நீங்கள் சொல்லாததையும் வைத்து உங்கள் தளம் ஒரு வித்தியாசமான தளம் என அனேகரால் நம்பப்படுகிறது.

எவ்வளவோ நல்ல கருத்துக்கள் இருந்தும் அவைகள் மதிக்கப்படாமல் போகிறது.//


மற்றவர்களால் எனது கருத்துக்கள் மதிக்கப்படவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. “எனது கருத்து” எனத் தனியாக எதுவும் கிடையாது. வேதாகமத்தின் கருத்துதான் எனது கருத்து. வேதாகமத்தின் போதனைதான் எனது போதனை.

கிறிஸ்து ஒருவரே நம்மெல்லோருக்கும் ஒரே போதகராயிருக்கிறார் (மத்தேயு 23:8). எனவே நமக்கென்று தனி போதனையோ கருத்தோ இருக்கக்கூடாது. இன்றைக்கு பலரும் தங்களைத் தாங்களே போதகரென்றும் பாஸ்டரென்றும் சொல்லிக்கொண்டும் அவ்விதமாக அழைக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர். அவர்கள்தான் தங்கள் சுயமாக திரித்துவம் போன்ற போதனைகளை உருவாக்கி போதித்துவருகின்றனர்.

சுயபோதனைகளைக் கூறுகிற ஏராளமான கூட்டத்தாரின் போதனையை நீங்களும் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். மாத்திரமல்ல, பயிற்சி என்ற பெயரில் நீங்களுங்கூட உங்கள் சுயபோதனைகளை தொகுத்து வழங்கிவருகிறீர்கள்.

என்னைப் பொறுத்தவரை பின்வரும் வசனம் கூறுவதுதான் எனக்கு முக்கியம்.

கலாத்தியர் 1:10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.

ஆம், மனுஷரைப் பிரியப்படுத்துவது என் பணியல்ல. மனுஷர்கள் என் கருத்தை மதிக்கவேண்டும் என்பதும் என் நோக்கமுமல்ல. கிறிஸ்துவின் போதனைகளைச் சொல்லி, கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்து, தேவனைப் பிரியப்படுத்துவது மட்டுமே என் பணி. மற்ற எதைக்குறித்தும் நான் கவலைப்படப்போவதில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.சந்தோஷ் தனது தளத்திலும் இத்தளத்திலும் 2 விதமான அன்புகளைப் பற்றி எழுதியிருந்தார்.

1 பலனை எதிர்பாராமல், இரத்தப்பாசத்தால் பெற்றோர், பிள்ளைகள், சகோதரரிடையே உண்டாகும் அன்பு

2. நித்திய ஜீவன் எனும் பலனை எதிர்பாராமல், ஒரு நாத்திகன் சக மனிதர்களிடம் காட்டுகிற அன்பு.


மேலோட்டமாகப் பார்க்கையில், இவ்விரு அன்புகளும் பலனை எதிர்பாராத அன்புகளாகவே நமக்குத் தோன்றும். ஆனால் இவைகளும் கூட பலனை எதிர்பார்க்கிற அன்புகள்தான்.

முதலில் இரத்தப்பாசத்தின் அன்பை எடுத்துகொள்வோம்.

காலம் மாறுகையில் இவ்வன்பு மாறக்கூடுமென்பதை சந்தோஷும்கூட  ஒத்துக்கொண்டுள்ளார்.

sandosh wrote:

//தாயோ, தந்தையோ தன் மகன் பிற்காலத்தில் தனக்கு உதவி செய்வான் என்று கருதி தங்கள் பிள்ளைகள் மேல் அன்பு செலுத்துவதில்லை. ஒன்றாய் பிறந்த சகோதரர்கள் சிறு வயதில் என் அண்ணன் எனக்கு பிற்காலத்தில் உதவி செய்வான் என்று எண்ணி அன்பு செலுத்துவதில்லை.  அது போலவே தம்பியும். ஆனால் வளர்ந்த பிறகு அன்பு சில நேரங்களில் வியாபாரமாகி விடுகிறது.//

வளர்ந்த பின் மாறுகிறதான அன்பு எப்படி பலனை எதிர்பாராத அன்பாக இருக்கமுடியும்?

சிறு வயதில் குழந்தைகளிடம் பலனை எதிர்பார்க்க இயலாது. எனவே அப்போது பெற்றோர் பிள்ளைகளிடம் பலனை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் தன் பிள்ளை வளர்ந்து நல்லவேலையில் அமர்ந்து மாதம் ரூ.50000 சம்பாதிக்கையில், குறைந்தபட்சம் தங்கள் ஜீவனத்துக்கானதையாவது பிள்ளையிடம் பெற்றோர் எதிர்பார்க்கத்தானே செய்வார்கள்? அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறாதபோது பிள்ளையிடம் இருந்த அன்பு குறையவோ அல்லது மறையவோதானே செய்யும்?

சிறுவயதில் தன் குழந்தை மிதித்தால்கூட அதை அன்போடு ஏற்றுக்கொள்ளும் தாய், குழந்தை பெரியவனான பின், தன்னைத் துன்புறுத்தினால் அதை ஏற்றுக்கொள்வாளா? வாதத்திற்காக ஏற்றுக்கொள்வாள் எனக் கூறலாம். ஆனால் நடைமுறை வாழ்வில், பிரச்சனை என வந்துவிட்டால் பெற்ற பிள்ளையோடுகூட பெற்றோர் சண்டையிடுவதுதான் உலக நியதியாயுள்ளது.

அடுத்து, ஒரு நாத்திகன் சக மனிதர்களிடம் காட்டுகிற அன்பை எடுத்துக் கொள்வோம்.

ஒரு பிச்சைக்காரனிடம் அன்பு பாராட்டும் ஒருவன், 1 ரூபாயும் பிச்சையிடலாம், 10 ரூபாயும் பிச்சையிடலாம், 100 ரூபாயும் பிச்சையிடலாம். ஆனால் இயேசுவோ உங்களுக்குள்ளவைகளை விற்று பிச்சையிடுங்கள் என்றார் (லூக்கா 12:33). இதுதான் அன்பின் தரத்தை தீர்மானிக்கிறது. ஒரு கோடீஸ்வரன் 100 ரூபாயை பிச்சையிட்டுவிட்டு தான் பிச்சைக்காரனிடம் அன்புகூர்ந்ததாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவனது அன்பு, 1 ரூபாய் மட்டுமே பிச்சையிடுகிற ஒரு தரித்திரனின் அன்புக்கு இணையாகாது.

தங்கள் கொடிய தரித்திரத்திலும் மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்த மக்கெதோனியா சபையாரைப் பாராட்டி பவுல் கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் (2 கொரி. 8:2).

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால், நாத்திகனாகிய உலக மனிதன், “அன்பு” எனும் வார்த்தைக்குக் கொடுக்கும் வரையறையும், வேதாகமம் “அன்பு” எனும் வார்த்தைக்குக் கொடுக்கும் வரையறையும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பதாலேயே.

நாத்திகனாகிய உலக மனிதரில் பலர், பிறரிடம் அதிகமாக அன்பு கூரக்கூடும் என்பது மெய்தான். ஆனால் அவர்களுங்கூட, தங்களுக்கு ஒரு கஷ்டம் நேரும்போது, தங்களிடம் உதவிபெற்றவர்களிடம் சற்றாகிலும் பதிலுதவி எதிர்பார்க்கத்தான் செய்வார்கள். ஒருவேளை தங்களிடம் உதவி பெற்றவர்கள் தங்களுக்கு பதிலுதவி செய்ய மறுத்தால், அவர்களுக்கு தாங்கள் உதவிசெய்ததற்காக வருந்தவும் செய்வார்கள். இதுதான் மனித இயல்பு.

சந்தர்ப்பம் சூழ்நிலை சாதகமாக இருக்கும்வரை எல்லோரும் சக மனிதர்களிடம் அன்புகூரத்தான் செய்வார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை மாறும்போதுதான் மனிதனின் அன்பு மாறும். அப்போதுதான் அவனது அன்பு எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ள இயலும்.

ஆனால் தேவனும் அவரது குமாரனாகிய இயேசுவும் அப்படியல்ல. அவர்கள் மனிதரிடம் காட்டின அன்பு ஒன்றுதான் பலனை எதிர்பாராததாகும்.

தேவனாகிய பிதா, தமது ஒரே பேரான குமாரனை இவ்வுலகிற்குத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். குமாரனாகிய இயேசுவோ தம்மையே இவ்வுலகிற்குத் தந்தருளி, இவ்வுலகத்தில் அன்புகூர்ந்தார்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

bereans wrote:
//சகோ அன்பு அவர்களே,

தாங்கள் நித்திய ஜீவன் என்று எதை சொல்லுகிறீர்கள் என்பதில் நான் தெளிவாக இல்லை!!//


நித்தியஜீவன் எதுவென்பதில் தங்களுக்கு ஏன் தெளிவில்லை சகோதரரே?

இறுதி நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் மரணம் இல்லாமல் நித்திய காலமாக மனிதன் ஜீவிப்பதுதான் நித்தியஜீவன்.

இந்த நித்தியஜீவனைக் குறித்துதான் பல வசனங்கள் கூறுகின்றன.

மத்தேயு 18:7 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

மத்தேயு 25:46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

லூக்கா 10:25-28 அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.

யோவான் 4:36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.

யோவான் 5:24,39 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

யோவான் 6:53-58 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

யோவான் 12:49,50 நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

கலாத்தியர் 6:8,9 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

1 தீமோத்தேயு 6:17-19 இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.

மத்தேயு 16:24-27 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் (தற்காலிக உலக) ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை (நித்திய ஜீவனை) இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் (தற்காலிக உலக) ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் (நித்திய ஜீவனை) கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் (நித்திய) ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் (நித்திய) ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

இவ்வசனங்களில் கிரியைகளால், விசுவாசத்தால், கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசிப்பதால், ஆவிக்கேற்றபடி விதைப்பதால் என்பது போன்ற பல செயல்களால் நித்தியஜீவனைப் பெறமுடியும் எனப் பார்க்கிறோம். இதில் ஏதேனும் சந்தேகம் உள்ளவர்கள் தங்கள் சந்தேகத்தைக் கேட்கலாம். அவர்களுக்குப் பதில் தரப்படும்.

bereans wrote:

//கிறிஸ்துவை ஏற்காத எத்துனையோ சன்மார்க்கர் இருக்கிறார்கள், நற்கிரியைகளையே தங்கள் வாழ்க்கையாக கொண்டு எத்துனையோ பேர் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்களே!! நீங்கள் வழியுறுத்தும் "நித்தியஜீவனுக்கு" நிச்சயமாக அவர்கள் தகுதியானவர்களே, ஆனால் கிறிஸ்துவுடன் உண்டான அந்த உன்னதமான ராஜியத்தில் அவர்கள் பிரவேசிப்பதில்லை!!//

வெளி. 20:6 கூறுகிற பிரகாரம் முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பாத்திரராகி, கிறிஸ்துவோடுகூட உன்னதமான ராஜ்யத்தை ஆளுகை செய்கிற பாக்கியத்தைப் பெறுவதுதான் நம் நோக்கமாக இருக்கவேண்டுமென்பதில் 2-வது கருத்து இருக்கமுடியாது.

ஆனால், நித்தியஜீவனைப் பெறுவதற்கே பாத்திரமில்லாத ஒருவன், முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறும் பாக்கியத்தை எவ்வாறு பெற இயலும்? எனவேதான் நித்தியஜீவனுக்கடுத்த உபதேசங்களை இத்தளத்தில் அதிகமாக வலியுறுத்தி கூறிவருகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard