பல விஷயங்களில் என்னோடு கருத்து மோதல் புரிந்த சில்சாமின் ஏடாகூடமான தரமற்ற வாதப்போக்கினால், அவரோடு வாதம் செய்வதை நான் தவிர்த்து வந்தேன்.
தற்போது அவரது போக்கில் நல்ல மாற்றம் காணப்படுகிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் எனும் கூற்றுப்படி, சமீபத்தில் சில்சாமின் தளத்தில் அவர் பதிந்துள்ள ஒரு மல்லிகைப் பதிவு, சிறப்பாக மணம் கவிழ்கிறது. அப்பதிவைப் படிக்க பின்வரும் தொடுப்பை சொடுக்கவும்.
தற்கால “பெரும்பான்மை பாபிலோன் சபையைச்” சேர்ந்தவர்களும், “சிறுபான்மை எருசலேம் சபையைச்” சேர்ந்தவர்களும் எப்படி ஜெபிக்கின்றனர் என்பதை அழகாக கற்பனை வடிவில் கட்டுரையாளர் கூறியுள்ளார்.
பதிவைத் தந்த சில்சாமுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
அப்பதிவின் ஒரேயொரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு கேள்வி எழுப்பியுள்ளேன்.
பதிவின் ஒரு பகுதி: //இன்றைய கிறிஸ்தவத்தில் நூற்றுக்கணக்கான சபைப் பிரிவுகள் இருந்தாலும் கர்த்தரின் பார்வையில் இரண்டே இரண்டு பிரிவு மாத்திரமே உண்டு. ஒன்று மெஜாரிட்டி பாபிலோன் மற்றொன்று மைனாரிட்டி எருசலேம். பாபிலோன் திருச்சபை ”உலகப்பொருள்” எனும் கடவுளை(!) மையமாகக் கொண்டது. எருசலேம் திருச்சபை “இயேசு கிறிஸ்து” எனும் உண்மைக் கடவுளை மையமாகக் கொண்டது.//
“உலகப்பொருள்” எனும் கடவுளை மையமாகக் கொண்டுள்ள சபை, பாபிலோன் சபை.
“இயேசு கிறிஸ்து” எனும் கடவுளை மையமாகக் கொண்டுள்ள சபை, எருசலேம் சபை.
அவ்வாறெனில் இஸ்ரவேலின் தேவனாகிய “யெகோவா” எனும் கடவுளை மையமாகக் கொண்டுள்ள சபை எந்தப் பிரிவில் வருகிறது?
இந்த சபையும் ஒருவேளை பாபிலோன் சபைதான் எனக் கட்டுரையாளர் கூறுகிறாரா?
இக்கேள்விக்கு சம்பந்தப்பட்ட கட்டுரையாளரோ, அல்லது பதிவைத் தந்த சில்சாமோ பதில் தரும்படி வேண்டுகிறேன்.