நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூமி தட்டையானது என வேதாகமம் கூறுகிறதா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
பூமி தட்டையானது என வேதாகமம் கூறுகிறதா?
Permalink  
 


தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு திரியில், அறிவியல் உண்மைகளுக்கு மாறான சில விஷயங்களை வேதாகமம் கூறியுள்ளதாகச் சொல்லி ஒரு சகோதரர் விவாதம் செய்து வருகிறார். அவரது விவாதங்களும் எதிர் விவாவதங்களும் வேதாகமத்தின் நம்பத்தன்மை சம்பந்தமானதாக இருப்பதால், அவை இத்தள அன்பர்களுக்கும் பயனாயிருக்கும் என நான் கருதுகிறேன்.

எனவே அத்திரியின் சில விவாதங்களை இத்தளத்தில் பதிக்க விரும்புகிறேன்.

இத்தள அன்பர்கள் அவற்றைப் படித்து தங்களது மேலான கருத்துக்களைப் பதிக்கும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Quote from Tamil Christian Forum:
//தமிழ் வேதாகமத்தில் ஏசாயா 40:22 பின்வருமாறு கூறுகிறது.

தேவன் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

இதே வசனத்தை ஆங்கில வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது.

It is he that sitteth upon the circle of the earth, and the inhabitants thereof are as grasshoppers; that stretcheth out the heavens as a curtain, and spreadeth them out as a tent to dwell in:

தமிழ் வேதாகமத்தில் காணப்படும் “பூமி உருண்டை” எனும் வாசகங்கள், ஆங்கில வேதாகமத்தில் “circle of the earth” எனக் காணப்படுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறபடி பூமி உருண்டையானது என வேதாகமம் கூறுகிறதா, அல்லது ஆங்கில
மொழிபெயர்ப்பு கூறுகிறபடி பூமி தட்டையானது என வேதாகமம் கூறுகிறதா?//

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஏசாயா 40:22-ன் மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்க்கையில், தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறபடி “பூமி உருண்டை” என்றில்லாமல் “பூமி வட்டம்” என்றே இருப்பதாக அறிகிறோம். எனவே ஏசாயா 40:22-ல் “தேவன் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்” எனும் வாசகங்கள், “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” என ஏசாயா 40:22 கூறுவதை வைத்து, “பூமி தட்டையானது” என அவ்வசனம் கூறுவதாகக் கருதமுடியாது. இதை சற்று ஆராய்ந்தறிவோம்.

வட்டம் என்பது, 2 பரிமாணம் (2 dimensions) மட்டுமே உடையது. ஆனால் எந்தவொரு திடப்பொருளுக்கும் கட்டாயம் 3 பரிமாணம் (3 dimensions) உண்டு. பூமியுங்கூட முப்பரிமாணமுடையதுதான். ஆனால் முப்பரிமாணமுள்ள பூமியை நாம் பூமிக்கு வெளியேயிருந்து பார்த்தால் அதன் 2 பரிமாணத்தைத்தான் பார்க்கமுடியும். உதாரணமாக, பூமியிலிருந்து சந்திரனைப் பார்த்தால், அது முப்பரிமாணமுள்ளதாகத் தெரியாமல், 2 பரிமாணமுள்ளதாகத்தான் நமக்குத் தெரியும். ஆனால் உண்மையில், சந்திரன் முப்பரிமாணமுள்ளதுதான்.

அவ்வாறே, பூமிக்கு வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் அது 2 பரிமாணமுள்ள வட்டமாகத்தான் தெரியும்.

சந்திரன் மீது சில “கரும்புள்ளிகள்” தெரிவதை நாம் அறிவோம். அக்கரும்புள்ளைகளை, “சந்திர வட்டத்தின் மீதுள்ள கரும்புள்ளிகள்” அல்லது “சந்திரன் மீதுள்ள கரும்புள்ளிகள்” என்றுதான் நாம் சொல்வோமேயன்றி, “சந்திர உருண்டையின் மீதுள்ள கரும்புள்ளைகள்” என நாம் சொல்வதில்லை.

அதேவிதமாகத்தான் “பூமி உருண்டையின் மீது” தேவன் வீற்றிருக்கிறார் என ஏசாயா கூறாமல், “பூமி வட்டத்தின் மீது” தேவன் வீற்றிருக்கிறார் எனக் கூறுகிறார். அவரது கூற்றிற்குள் பூமி உருண்டையானதுதான் எனும் கருத்தும் அடங்கியுள்ளது. இதைக் குறித்து அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பூமிக்கு வெளியிலிருந்து பார்க்கையில் பூமியானது வட்ட வடிவமாகத் தோன்றுவதால், அது ஒரு கோளமாக (sphere) இருக்கவேண்டும், அல்லது உருளையாக (cylinder) இருக்க வேண்டும்.

“தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” என ஏசாயா 40:22-ல் கூறின ஏசாயா, பூமியை ஒரு கோளமாகக் கருதி அப்படிச் சொல்லியிருப்பாரா, அல்லது ஒரு உருளையாகக் கருதி அப்படிச் சொல்லியிருப்பாரா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஏசாயாவின் தரிசனங்கள் யாவும் தேவனிடமிருந்தே பெறப்பட்டவை எனில், “பூமி ஒரு கோளம்” என்பதை தேவன் அறிவாரென்பதால், ஏசாயாவும் “பூமி ஒரு கோளம்” என்ற புரிந்துகொள்தலில்தான் “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” எனும் கூற்றைக் கூறியிருப்பார்.

ஒருவேளை, ஏசாயாவின் தரிசனங்கள் யாவும் தேவனிடமிருந்து பெறப்படாமல், ஏசாயா சுயமாக அவற்றைக் கூறியிருந்தால், பூமி வட்ட வடிவமானது என்பதை ஏசாயா தனது சுயஅறிவின் மூலம்தான் அறிந்திருப்பார்.

பூமியின் எல்லைகளைத் தெளிவாக ஆராய்ந்தறியாமல், அது வட்ட வடிவமானது எனும் முடிவுக்கு ஏசாயா வந்திருக்கமுடியாது. பூமியின் எல்லைகளை ஆராய்கையில், அது ஒரு கோளமா, அல்லது உருளையா என்பதையும் ஏசாயா நிச்சயமாக அறிந்திருப்பார்.

எனவே ஏசாயா தன் சுய அறிவின்மூலம் “பூமி வட்டத்தின்மேல் தேவன் வீற்றிருக்கிறார்” எனக் கூறியிருந்தாலும், பூமி ஒரு கோளம் என்ற புரிந்துகொள்தலுடன்தான் அவர் அக்கூற்றைக் கூறியிருப்பாரேயொழிய, பூமி ஒரு உருளை என்ற புரிந்துகொள்தலுடன் அவர் கூறியிருக்கமாட்டார்.

எனவே எப்படிப் பார்த்தாலும், பூமி ஒரு கோளம் என்ற புரிந்துகொள்தலுடன்தான் ஏசாயா 40:22-ஐ ஏசாயா கூறியிருப்பாரேயொழிய, பூமி தட்டையானது என்ற புரிந்துகொள்தலுடன் அவர் அதைக் கூறியிருக்கமாட்டார்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Quote from Tamil Christian Forum:

//மத்தேயு 4:8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:..

பூமிப்பந்தில் எவ்வளவுதான் உயரமான மலைக்கு சென்றாலும் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் பார்க்கமுடியுமா? ஒரு தட்டையான உலகத்திலேயே அது சாத்தியம்.//


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பூமிப்பந்தில் எவ்வளவுதான் உயரமான மலைக்கு சென்றாலும் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் பார்க்கமுடியாது என்பது மெய்தான். தட்டையான பூமியில்தான் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் பார்க்கமுடியும் என்பதும் மெய்தான்.

ஆனால் உலகின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமைகளையும் நம் மாம்சக் கண்களால் துல்லியமாக/தெளிவாகப் பார்க்கமுடியுமா எனக் கேட்டால், உலகம் தட்டையாக இருந்தாலும் கோளமாக இருந்தாலும் அது சாத்தியமல்ல என்பதுதான் பதிலாக இருக்கும்.

பூமி தட்டையாக இருந்தால்கூட, பூமியின் எவ்வளவு உயர்ந்த மலைக்குச் சென்று பார்த்தாலும் நம் அருகாமையில் அதிகபட்சம் ஒரு 10 கிலோமீட்டர் ஆரமுள்ள வட்டப்பகுதியிலுள்ளவற்றை மட்டுமே ஓரளவு தெளிவாகப் பார்க்கமுடியுமேயன்றி, அதற்கும் மேலாக பல்லாயிரம் கி.மீ. தூரத்தில் உள்ளவற்றை ஒரு கடுகளவிற்குக்கூட காண இயலாது என்பதே உண்மை.

எனவே சாத்தான் இயேசுவை உயரமான மலைக்குக் கொண்டுசென்றதன் நோக்கம்: சொல்லர்த்தத்தின்படி இவ்வுலகின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் இயேசுவின் மாம்சக் கண்களுக்குக் காட்டுவதற்காக அல்ல. பரந்த இவ்வுலகின் மகிமைகளை முடிந்தவரை அதிகபட்சம் காட்டி, இயேசுவின் மனக்கண்களுக்குள் இவ்வுலகின் முழு மகிமையையும் கொண்டுவந்து, இயேசுவை உலக இச்சைக்குள் வீழ்த்தவேண்டும் என்பதே.

ஆதியில் தேவனோடிருந்து இவ்வுலகை சிருஷ்டித்த தேவகுமாரனான இயேசுவுக்கு, இவ்வுலகின் மகிமைகளை சாத்தான் காட்டித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆகிலும் இயேசு இவ்வுலகில் ஒரு மனுஷனாக மாம்சத்தில் இருந்ததால், அவர் கண்களின் இச்சைக்கு மசிந்துவிடுவார் எனக் கருதிய சாத்தான், அவரது மாம்சக் கண்களுக்கு முன்பாக இவ்வுலக மகிமைகளில் சிலவற்றைக் காட்டி, முழு உலகின் மகிமைகளையும் அவரது மனக்கண்களுக்குள் கொண்டுவந்தான்.

மற்றபடி, பூமி உருண்டையாக இருந்தாலும் தட்டையாக இருந்தாலும், இவ்வுலகின் முழு மகிமைகளையும் நேரடியாக இயேசுவின் மாம்சக்கண்களின் பார்வைக்குள் கொண்டுவருவது நிச்சயமாக சாத்தியமல்ல.

எனவே மத்தேயு 4:8-ல், உலகம் உருண்டையா, தட்டையா எனும் கேள்விக்கான பதிலை அறியக்கூடிய தகவல் எதுவுமில்லை என்பதே உண்மை.

எனவே உலகம் தட்டையானது என வேதாகமம் கூறுவதாகச் சொல்வதற்கு ஆதாரமாக மத்தேயு 4:8-க் காட்ட இயலாது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Quote from Tamil Christian Forum:

//பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார் என யோபு 9:6 கூறுகிறது.

பூமிக்குத் தூண்கள் உண்டா?

ஆம் எனில், பூமி அந்தரத்தில் இல்லை என்றாகிவிடுமே?//


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பூமியின் தூண்களைப் பற்றி சொன்ன அதே யோபு, பூமி அந்தரத்தில் தொங்குவதைப் பற்றியும் பின்வரும் வசனத்தில் கூறுகிறார்.

யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

எனவே யோபு சொல்கிற தூண்கள் என்பது மரம், இரும்பு போன்ற திண்ணமான பொருட்களாலான தூண்கள் அல்ல.

திண்ணமில்லாத தூண்களைப் பற்றி வேதாகமத்தின் வேறொரு இடத்தில் கூறப்பட்டுள்ளது.

யாத்திராகமம் 13:21,22 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும் (மேகத் தூண்), இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் (அக்கினித் தூண்) அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் நம் கண்களால் காணக்கூடிய ஸ்தம்பங்களேயாயினும், அவற்றின்மேல் கனமாக பொருட்களை வைக்கமுடியாது என்பதை நாம் அறிவோம். அவ்வாறே காற்றினாலான ஸ்தம்பத்திலும் கனமான பொருட்களை வைக்கமுடியாது.

நம் கண்களுக்குத் தெரியாத காற்றினாலான தூணைப் போன்றதொரு தூணையே யோபு 9:6-ல் யோபு கூறுகிறார். அத்தூண் என்னவாக இருக்கமுடியும்?

பூமி மற்றும் அதைச் சுற்றியுள்ள கோள்களில் உள்ள ஈர்ப்புவிசையின் காரணமாகத்தான் அவை யாவும் ஒரு குறிப்பிட்ட பாதையில் அந்தரத்தில் சுற்றி வருகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வாறெனில் நம்மைப்பொறுத்தவரை பூமி அசையாமல் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதற்குக் காரணமென்ன? அதைச் சுற்றிலுமுள்ள பிறகோள்களின் ஈர்ப்புவிசை, மற்றும் பூமியின் சுய ஈர்ப்புவிசை ஆகியவையே.

எனவே ஈர்ப்புவிசை எனும் விசையினாலான தூண்களில்தான் பூமி நிலையாக நிற்கிறது. ஈர்ப்புவிசையிலான இத்தூண்களைக் குறித்துதான் யோபு கூறுகிறார். இத்தூண்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை (காற்றுத்தூணைப் போல). ஆயினும் காற்றுத்தூண் எப்படி நம் அறிவுக்கு எட்டுகிறதோ அதேவிதமாக ஈர்ப்புவிசையிலான தூண் யோபுவின் அறிவுக்கு எட்டியிருக்க வேண்டும். எனவேதான் அத்தூண்களை பூமியின் தூண்கள் என அவர் கூறுகிறார்.

மற்றபடி, நாம் நினைப்பதுபோல் சாதாரண இரும்பு அல்லது மரத்தூணைப் பற்றிதான் யோபு கூறினாரெனில், யோபு 26:7-ல் “தேவன் பூமியை அந்தரத்தில் தொங்க வைக்கிறார்” எனும் உண்மையை அவரால் எப்படிக் கூறஇயலும்?

எனவே யோபு கூறுகிற “பூமியின் தூண்கள்”: திண்ணமானதும் கண்களுக்குத் தெரிகிறதுமான தூண்கள் அல்ல, நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிற “ஈர்ப்பு விசை” எனும் தூணே என்பதை அறிவோமாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard