நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?


Newbie

Status: Offline
Posts: 3
Date:
இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?
Permalink  
 


இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா? என்பதைப் பற்றி என் சிறிய கருத்தை பதிக்கின்றேன்.

எபிரெயர் 1
6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது:
தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்

இங்கு தேவன் தேவதூதர் யாவரும்  தன்னுடைய குமாரனைத் தொழுது கொள்ளவேண்டும் என்கிறார். இப்படி இருக்க மனிதன் அவரைத் தொழுது கொள்ளக் கூடாதா சகோதரரே?
இயேசு தொழத்தக்க தெய்வமா அல்லது இல்லையா என்று இங்கு பிதாவாகிய தேவனே
நிச்சயபடுத்தி இருக்கின்றார்.
இப்படி இருந்தும் ஆங்கிலத்தில் இப்படி எழுதி இருக்கின்றது, எபிரேய வேதத்தில் இப்படி எழுதி இருக்கின்றது என்றால்,
எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு தெரிந்த தமிழ் வேதத்தில் இருந்து பதிவு செய்து இருக்கின்றேன்.


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இயேசுவைத் தொழுதுகொள்தல் பற்றின சில புதியஏற்பாட்டு வசனங்களையும் சகோ.சுந்தர் தந்துள்ளார். அவை:

அப்போஸ்தலர் 7:59 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

1 கொரி. 1:2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

எல்லா வசனங்களுக்கும் மீண்டும் மீண்டும் மொழிபெயர்ப்பைத்தான் சொல்லவேண்டியதாயுள்ளது. இது பலருக்கு எரிச்சலைத் தரலாம். ஆகிலும் வசனத்தில் தெளிவுபெற வேண்டுமெனில் இவ்வித ஆராய்ச்சியை செய்துதானாக வேண்டியதுள்ளது.

முதலாவது அப்போஸ்தலர் 7:59-ன் மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்.

Acts 7:59 And they stoned Stephen, calling upon God, and saying, Lord Jesus, receive my spirit. - KJV

While they were stoning him, Stephen prayed, "Lord Jesus, receive my spirit." - NIV


இவ்விரு ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் “தொழுதுகொள்தல்” எனும் வார்த்தைக்கு இணையான வார்த்தை எதுவுமில்லை. அழைத்தல் மற்றும் ஜெபித்தல் எனும் வார்த்தைகளுக்கு இணையாக "calling மற்றும் prayed" எனும் வார்த்தைகள்தான் இடம்பெற்றுள்ளன. மாத்திரமல்ல, KJV மொழிபெயர்ப்பிலுள்ள “God" எனும் வார்த்தை NIV மொழிபெயர்ப்பில் இல்லை. மூலபாஷையிலும்
“God" எனும் வார்த்தைக்கு இணையான வார்த்தை இல்லை. ஆகிலும் “Lord Jesus" என ஸ்தேவான் கூறுவதால், அவர் இயேசுவை அழைத்து, அவரிடமே “எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” எனக் கூறியிருக்கவேண்டும் என நாம் அனுமானிக்கலாம். இதன்படி பார்த்தால், அவ்வசனம் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் ஜெபிக்கையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அல்லது

அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் அழைக்கையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

நம் “பரிசுத்த வேதாகம” மொழிபெயர்ப்பின் “தொழுதுகொள்தல்” எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தை: epikaleomai என்பதாகும். இதன் அர்த்தம்: to entile; by implication, to invoke (for aid, worship, testimony, decision, etc.): என்பதாகும்.

அதாவது "அழைத்தல் அல்லது வேண்டுதல்" எனச் சொல்லலாம். இவ்விரு அர்த்தங்களின்படியே KJV மற்றும் NIV மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்துள்ளதை நாம் காணலாம்.

அடுத்து, 1 கொரி. 1:2-ன் மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்.

1 Cor 1:2 To the church of God in Corinth, to those sanctified in Christ Jesus and called to be holy, together with all those everywhere who call on the name of our Lord Jesus Christ-their Lord and ours: - NIV

1 Cor 1:2 Unto the church of God which is at Corinth, to them that are sanctified in Christ Jesus, called to be saints, with all that in every place call upon the name of Jesus Christ our Lord, both theirs and ours: - KJV


இவ்வசனத்திலும் தமிழில் “தொழுது கொள்தல்” என்ற வார்த்தைக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்புகளில் “call on” எனும் வார்த்தைகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி அவ்வசனம் தமிழில் இவ்விதமாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் சரியாக இருக்கும்.

கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிற (அல்லது அழைக்கிற) அனைவருக்கும் எழுதுகிறதாவது:

இவ்வசனத்திலும் மூலபாஷையில் epikaleomai எனும் வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் "அழைத்தல் அல்லது வேண்டுதல்" என ஏற்கனவே பார்த்தோம்.

கிறிஸ்துவுக்குள் அன்பான தள அன்பர்களே, இப்படியெல்லாம் மொழிபெயர்ப்புகளைச் சொல்லி நான் விளக்குவதால், கிறிஸ்துவை நான் மட்டுப்படுத்துவதாக யாரும் கருத வேண்டாம். கிறிஸ்துவுக்குரிய கனம், மகிமையை நான் கொடுக்கத்தான் வேண்டும். தொடர்ந்து இத்திரியைப் படித்தால் நான் சொல்ல வருவதை சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்.

தொடரும் ....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

தங்கள் மேலான கருத்தை வரவேற்கிறேன் சகோ.எட்வின் அவர்களே!

இயேசுவைத் தொழவேண்டும் என்பதற்கு ஆதாரமாக சுந்தர் குறிப்பிட்ட அப்போஸ்தலர் 7:59 மற்றும் 1 கொரி. 1:2-ஐக் காட்டிலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் அதிக பொருத்தமாக உள்ளது. ஆகிலும், மீண்டும் மொழிபெயர்ப்புப் பிரச்சனைக்குச் செல்வதற்கு மன்னிக்கவும் சகோதரரே!

எபிரெயர் 1:6-லுள்ள “தொழுதுகொள்ளக்கடவர்கள்” எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தை: proskuneo. இதன் அர்த்தம்:

(meaning to kiss, like a dog licking his master's hand); to fawn or crouch to, i.e. (literally or figuratively) prostrate oneself in homage (do reverence to, adore):

fawn என்ற வார்த்தைக்கு “வாலைக் குழைத்து” எனும் அர்த்தமும், crouch எனும் வார்த்தைக்கு “கீழே குனிதல் அல்லது பணிதல்” எனும் அர்த்தங்களும் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி proskuneo எனும் வார்த்தையை மொழிபெயர்த்தால், எபிரெயர் 1:6-ம் வசனம் இவ்விதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

எபிரெயர் 1:6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைப் பணிந்துகொள்ளக்கடவர்கள் என்றார்.

எல்லா வசனத்தையும் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் இப்படி நான் மாற்றுவதாக நினைக்க வேண்டாம். எபிரெயர் 1:6-ல் பயன்படுத்தப்பட்டுள்ள proskuneo எனும் அதே வார்த்தை வேறு பல வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வசனங்களில் அவ்வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்த்துள்ளனர் என்பதை சற்று கவனியுங்கள்.

மத்தேயு 2:2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.

மத்தேயு 2:8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லெகேமுக்கு அனுப்பினான்.

மத்தேயு 8:2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.

மத்தேயு 15:25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.

மத்தேயு 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

வெளி. 3:9 இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.

“தொழுதுகொள்தல்” எனும் வார்த்தை, நம்மைப் பொறுத்தவரை “ஆராதனை” எனும் வார்த்தைக்குச் சமமானதாகும். அதன் அடிப்படையில்தான் “இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?” எனும் தலைப்பு இத்திரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இம்மாதிரி ஒரு தலைப்பில் விவாதம் செய்யும் நிலைக்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஏனெனில் இயேசுவைப் பொறுத்தவரை “தாம் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்கிறதில்லை” என்றும் “தம்மை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்வதைவிட பிதாவின் சித்தத்தைச் செய்வதுதான் அவசியம்” என்றும் யோவான் 5:41 மற்றும் மத்தேயு 7:21-ல் கூறிவிட்டார். அப்படிப்பட்ட அவரைத் தொழலாமா தொழக்கூடாதா எனக் கூறுபோட்டு ஆராய்வது அவரை ஒருவிதத்தில் நிந்தனைக்குள்ளாக்குவதைப்போல் நான் கருதுகிறேன்.

தேவன், தேவனுடைய குமாரன், ஆராதனை போன்ற விஷயங்களில்வேதாகமம் என்ன சொல்கிறதோ அல்லது ஆதிக்கிறிஸ்தவர்கள் என்ன செய்தனரோ அதை அப்படியே நாமும் பின்பற்றி வந்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது.

சகோ.எட்வின் அவர்களே! நீங்களே நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஆதிக்கிறிஸ்தவர்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் பிதாவுக்கும் இயேசுவுக்கும் என்ன தொடர்பு என்றோ, யாருக்கு யார் சமமானவர் என்றோ, யார் ஆராதனைகுரியவர் என்றோ விவாதித்தார்களா? அல்லது இயேசுவை ஆராதிப்போம் என எப்போதாவது சொன்னார்களா?

ஒரே தேவன், ஒரே மத்தியஸ்தர் என்ற கோட்பாட்டை மட்டுந்தானே கூறினார்கள். மூவரில் ஒருவர் ஒருவரில் மூவர் எனும் கோட்பாட்டைச் சொன்னார்களா, அல்லது திரித்துவத்தைச் சொன்னார்களா? அவர்கள் எதுவும் சொல்லாதிருக்கையில், வேதாகம காலத்திற்குப் பின்வந்த சபையார் அவர்களாக ஆராய்ச்சி செய்து திரித்துவத்தைச் சொல்லி, பிதா தான் இயேசுவாக வந்தார் எனச் சொல்லி, தற்போது “இயேசுவை ஆராதிப்போம்” என்ற நிலை வரை வந்துள்ளனர்.

எனக்குத் தெரிந்து தற்போது எங்கு பார்த்தாலும் “இயேசுவை ஆராதிப்போம்” என்ற தொனிதான் கேட்கிறதேயொழிய “தேவனை ஆராதிப்போம்” எனும் தொனி கேட்கவில்லை.

நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன்: “ஆராதனை” முறை எல்லாம் பழையஏற்பாட்டில்தான் சொல்லப்பட்டுள்ளதேயொழிய புதியஏற்பாட்டில் ஆராதனை முறை எதுவும் சொல்லப்படவில்லை என.

புதியஏற்பாட்டுக் காலத்தில் மெய்யான/புத்தியுள்ள “ஆராதனை” என்றால் என்னவென்பதையும் ஏற்கனவே சொல்லியுள்ளேன் (ரோமார் 12:1; யாக்கோபு 1:27). இவ்வசனங்கள் கூறுகிற ஆராதனையும் பக்தியும் போதுமானது. ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு “இயேசுவை ஆராதித்தால்தான் உண்டு” என்பதுபோன்ற நிலையை உண்டாக்குவதால்தான், இம்மாதிரி திரிகளை உண்டாக்கி விவாதிக்க வேண்டியதாகிறது.

ஒரே தேவன் (Unique God), தேவனுடைய குமாரன் எனும் இருவரை வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. இயேசுவானவர் தேவனுடைய குமாரனாக இருந்தாலும், அவரும் ஒருவகையில் தேவன்தான் (யோவான் 10:35-ஐப் படித்துப் பார்க்கவும்). ஆகிலும், ஒரே தேவன் (Unique God) என்பவர், இயேசுவைவிட நிச்சயம் பெரியவரே (யோவான் 14:28-ஐப் படித்துப் பார்க்கவும்). பெரியவராகிய அவரை இயேசுவுக்கு மேலாக நாம் காட்டக்கூடிய ஒரே வித்தியாசம், “ஆராதனை” மட்டுந்தான். ஆகிலும் “தேவனுக்கு ஆராதனை, பிதாவுக்கு ஆராதனை, யெகோவாவுக்கு ஆராதனை” என நாம் சொல்லவேண்டிய அவசியம்கூட புதியஏற்பாட்டுக் காலத்தில் கிடையாது.

ஏனெனில் ஆராதனை முறைமைக்கு முக்கியமான தேவை “பலி” (யாத்திராகமம் 12,29,30 அதிகாரங்களைப் படிக்கவும்). இயேசுவானவர் தம்மையே ஒரே பலியாகக் கொடுத்ததன் மூலம் “அந்த ஆராதனை முறைமை” தற்போது ஒழிந்து போய்விட்டது. அப்படியிருக்க, ஆராதனைக்குரிய பலியான இயேசுவை ஆராதிப்போம் எனக் கூறுவது பொருத்தமானதா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரரே!

பொருத்தமில்லாத கூற்றுக்களையும் வேதாகமம் போதிக்காத திரித்துவக் கோட்பாட்டையும் போதிப்பதால்தான், “உண்மையை” வெளிக்கொணரும்படியாக இம்மாதிரி திரிகள் மூலம் பல விஷயங்களையும் எடுத்துக்கூற வேண்டியதாகிறது. இன்னமும் சந்தேகம் இருந்தால் தாராளமாகக் கேளுங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இத்திரி சம்பந்தமாக இறைவன் தளத்தில் சகோ.சுந்தர் கூறியுள்ள மேலும் சில கருத்துக்கள்:

//பரிசுத்த ஆவியை பெற்றவர்களுக்கு மட்டுமே இயேசு கர்த்தரென்று சொல்லமுடியும் என்பதை தெரிவிக்கும் வசனம்.

1 கொரிந்தியர் 12:3  பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

பிதாவாகிய தேவனை எல்லோரும் அறிந்துகொள்ள முடியாது என்பதை தெரிவிக்கும் வசனம்:

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப் பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

இந்த வசனப்படி பிதாவை யாரென்று இயேசு ஒருவருக்கு வெளிப்படுத்தாதவரை அவர்கள் இயேசுதான் பிதா என்று சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். இவ் வார்த்தைகளை நாம் தவறு என்றும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில் சென்னை பக்கத்தில் உள்ள  "வங்க கடலை" அறிந்த ஒருவர் இதுதான் பசிபிக் பெருங்கடல் என்று சொன்னால், வங்க கடல் ஒருபுறம்  இந்துமாக சமுத்திரத்தில் சேர்ந்து அந்த இந்துமகாசமுத்திரம் பசுபிக் கடலில்  சேர்ந்துள்ளதால் அதிலும் சில உண்மைகள்  இருப்பதுபோல் இக்காரியம்  உண்மையாகிறது.

அதுபோல் இயேசுவும் தேவனும் ஒன்றுக்குள் ஒன்றானவர்களே!
//

பரிசுத்த ஆவி உள்ளவன் மட்டுமே இயேசுவைக் கர்த்தர் எனக் கூறமுடியும் என 1 கொரி. 12:3-ல் பவுல் கூறுகிறார். இது ஒரு யதார்த்தமான உண்மை. கர்த்தர் என்பதற்கு மூலபாஷையில் kurios எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம்:

from kuros (supremacy); supreme in authority, i.e. (as noun) controller; by implication, Mr. (as a respectful title):

அதிகபட்ச அதிகாரத்தையுடைய ஒருவருக்குக் கொடுக்கப்படும் மரியாதைக்குரிய பட்டப்பெயர்தான் “கர்த்தர்” என்பது. இயேசுவானவர் பிதாவிடமிருந்து சகல அதிகாரத்தையும் பெற்றவர் என்பதால் (மத்தேயு 28:18) அவருக்கு “கர்த்தர்” எனும் பட்டப்பெயர் மிகவும் பொருத்தமானது. ஆனால் ஒருவன் இதை அறிந்து ஏற்கவேண்டுமெனில் அவனிடம் பரிசுத்த ஆவி இருக்க வேண்டும். பரிசுத்தஆவி உள்ளவன் மட்டுமே இயேசுவைக் கர்த்தர் என (அதாவது சகல அதிகாரமும் உடையவர் என) ஏற்றுக்கொள்வான். பரிசுத்த ஆவி இல்லாதவன் அதை ஏற்க மாட்டான்.

இதிலிருந்து நாம் அறிவதென்ன? ஒருவன் எப்போது இயேசுவை ஏற்றுக்கொள்கிறானோ அப்போதே அவனிடம் பரிசுத்தஆவி வந்துவிட்டது என அர்த்தம். இன்று பலரும் நினைப்பதுபோல், பரிசுத்தஆவி வருதல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அடையாளங்களுடன்தான் (உ-ம்: அந்நிய பாஷை பேசுதல்) நிகழவேண்டுமென்பதில்லை. ஒருவன் இயேசுவை அறியும்போது அவனிடம் பரிசுத்தஆவி வந்துவிடுகிறது, அல்லது ஒருவனிடம் பரிசுத்தஆவி வரும்போது அவன் இயேசுவை அறிந்தவனாகிறான். இவ்விரு நிகழ்வுகளும் (அதாவது பரிசுத்தஆவி வருதலும், இயேசுவை அறிதலும்) ஒரே சமயத்தில் நிகழ்பவைகளாக இருக்கின்றன.

கொர்நேலியு மற்றும் அவனோடு இருந்தவர்களிடம் இயேசுவைப் பற்றி பேதுரு பேசவும் அவர்களிடம் பரிசுத்தஆவி இறங்கியதாக அப். 10:34-44 வசனங்களில் பார்க்கிறோம். பரிசுத்தஆவியை அறியாத அந்நாட்களில் பரிசுத்தஆவி இறங்கியுள்ளது என்பதற்கு அடையாளமாக அவர்கள் பல பாஷைகளில் பேசினார்கள். ஆனால் இந்த அடையாளம் எப்போதும் நடக்கவேண்டுமென்தில்லை.

அடுத்து பிதாவையும் குமாரனையும் அறிதல் சம்பந்தமான ஒரு வசனத்தை சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப் பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்..

இவ்வசனத்தைக் குறித்த விளக்கத்தை ஏற்கனவே இத்திரியில் கூறியுள்ளோம்.

பிதாவையானாலும் சரி, குமாரனையானாலும் சரி, அவர்களை எவனுக்கு வெளிப்படுத்த குமாரன் சித்தமாயிருக்கிறாரோ அவனுக்கு அவர்களை அவர் வெளிப்படுத்துவார். குமாரனின் சித்தமென்பது பட்சபாதமானதும், யாருக்கும் எளிதில் கிடைக்கக்கூடாததுமானதல்ல. எவனொருவன் தன்னை பாலகனைப் போல தாழ்த்தி வருகிறானோ அவனுக்கு வெளிப்படுத்த குமாரன் சித்தமுள்ளவராயிருக்கிறார் (மத்தேயு 11:25,26).

sundar wrote:

//இந்த வசனப்படி பிதாவை யாரென்று இயேசு ஒருவருக்கு வெளிப்படுத்தாதவரை அவர்கள் இயேசுதான் பிதா என்று சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.//

ஆம், சுந்தரின் இக்கூற்று 100-க்கு 100 சரியே. இந்நாட்களில் பலர் “இயேசுதான் பிதா” என்றும் “பிதாவே இயேசுவாக வந்தார்” கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். காரணம், பிதா யாரென இவர்களுக்குக் குமாரன் வெளிப்படுத்தவில்லை. குமாரன் வெளிப்படுத்தாதற்குக் காரணம்: இவர்கள் பாலகரைப் போல் தங்களைத் தாழ்த்தாமல், “எல்லாம் எங்களுக்குத் தெரியும், பல வேத ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துதான் பிதாவும் இயேசுவும் ஒன்று என்றும் பரிசுத்தஆவியும் ஒரு தேவன்தான் என்றும் கண்டுபிடித்து, திரித்துவ தேவன் கோட்பாட்டை உருவாக்கியுள்ளனர், இதற்குமேல் எங்களுக்கு எதுவும் தேவையில்லை” எனக் கூறுவதுதான்.

சுந்தர் சொன்ன பின்வரும் உவமானமும் கருத்தும் ஏற்கக்கூடியதாக இல்லை.

//இந்த வசனப்படி பிதாவை யாரென்று இயேசு ஒருவருக்கு வெளிப்படுத்தாதவரை அவர்கள் இயேசுதான் பிதா என்று சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். இவ்வார்த்தைகளை நாம் தவறு என்றும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில் சென்னை பக்கத்தில் உள்ள  "வங்க கடலை" அறிந்த ஒருவர் இதுதான் பசிபிக் பெருங்கடல் என்று சொன்னால், வங்கக் கடல் ஒருபுறம் இந்துமகா சமுத்திரத்தில் சேர்ந்து அந்த இந்துமகாசமுத்திரம் பசுபிக் கடலில் சேர்ந்துள்ளதால் அதிலும் சில உண்மைகள் இருப்பதுபோல் இக்காரியம் உண்மையாகிறது.//

வங்கக்கடலையும் பசிபிக் கடலையும் அறியவேண்டிய பிரகாரமாக ஒருவன் அறிந்தால், அவன் “இதுதான் வங்கக்கடல், இதுதான் பசிபிக் கடல்” எனத் தெளிவாகச் சொல்லிவிடுவான். அவற்றை அறியவேண்டிய பிரகாரமாக அறியாதவன்தான் இரண்டையும் ஒன்றோடொன்று இணைத்து தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவான்.

இறுதியாக, “இயேசுவும் தேவனும் ஒன்றுக்குள் ஒன்றானவர்களே” எனும் கருத்தை சுந்தர் கூறியுள்ளார். இதை அவர் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்பது புரியவில்லை. ஒருவேளை “புருஷனும் மனைவியும் ஒரே மாம்சமாக ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பதுபோல்” என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருந்தால், அவரது கூற்று சரியானதே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இறைவன் தளத்தில் சகோ.சுந்தர் கூறியுள்ள மேலும் சில கருத்துக்கள்/வசனங்கள்:

//ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யாரென்பதை நிதானிக்கையில் நாம் மிகவும் ஆராய்ந்து நிதானிப்பது அவசியம். காரணம், அவர் ஒருபுறம் மனுஷதன்மையோடு மனுஷனாக வந்தவர், இன்னொரு புறமோ உன்னதத்தில் இருந்து தேவனின் குமாரனாக வந்தவர். எனவே இரண்டு நிலைக்கும் ஏற்ற வசனங்கள் வேத புத்தகத்தில் இருப்பதை நாம் காணமுடியும்.   

இயேசுவானவர் ஆதியிலே தேவனோடு வார்த்தையாக இருந்து, பின்னர் அவரில் இருந்து மனுஷனாக வந்தாலும், பிதாவாகிய தேவனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தனித்தனி ஆள்தத்துவம் உள்ளவர்கள். இதை இயேசு அனேக இடங்களில் மிக விளக்கமாகக் குறிப்பிட்டதோடு, தான் பிதாவைவிட பெரியவர் அல்ல என்பதையும், தன்னைவிட பிதா மேலானவர்  என்பதையும் உறுதியாக கூறியிருக்கிறார்.

யோவான் 13:16 அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
யோவான் 10:29 என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.


பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்டு குமாரனாகி அனுப்பப்பட்ட இயேசுவானவர், மரித்து உயிர்தெழுந்த பின்னர் தேவனின் வலது பாரிசத்தில் சென்றுதான் அமர்ந்தாரே தவிர, பிதாவோடு ஐக்கியமாகி விடவில்லை என்பதை வசனம் பல இடங்களில் தெளிவாக சொல்கிறது:

மாற்கு 16:19 இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் 

எபிரெயர் 12:2 அவர் ...... அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.


இப்பொழுதும் தேவனுடய சிங்காசனம் ஒன்று இருக்கிறது: அதில் அவர் தேவனாக இருக்காமல் தேவனின் வலது பாரிசத்தில்தான் இருக்கிறார் என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. 

1 பேதுரு 3:22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்.

ஸ்தேவான் கல்லெறியுண்டபோது மிகத் தெளிவாகப் பார்க்கிறான்.

அப்போஸ்தலர் 7:56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்.

அந்த தேவன் யார் என்பதை வெளிப்படுத்தின விசேஷம் தெளிவாக சொல்கிறது.

வெளி 4:2. உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். 8.  : இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.

அவருக்கு முன்னால் ஜெயம்கொண்டு வந்து நின்ற ஆட்டுக்குட்டியானவரே, ஆண்டவராகிய இயேசு! 

5. இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். 7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

அடுத்து ஆண்டவராகிய இயேசுவை ஒரேயடியாக தூதன் நிலைக்கோ அல்லது தேவனால் உருவாக்கப்பட்ட ஒருமனுஷன் என்ற நிலையிலும் நாம் நிச்சயம் பார்க்க முடியாது. காரணம், அவர் உன்னதத்தில் இருந்து இறங்கி வந்தவர். 

யோவான் 3:31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; ...... பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.

அடுத்து அவர் தேவனால் படைக்கப்படவர் அல்ல, தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டவர்.

எபிரெயர் 1:5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்

உருவாக்குதலுக்கும் ஜெநிப்பித்தலுக்கும் வேறுபாடு தெரியும் என்று நினைக்கிறேன்; வேறு யாரையுமே ஜெனிப்பித்ததாக வசனம் சொல்லவில்லை.

தேவன் வேதபுத்தகத்தில் பலரை தன்னுடைய குமாரன் என்று சொல்லியிருந்தாலும் இயேசுவைப் பற்றி மட்டுமே பிதா பகிரங்கமாக உலகுக்குச் சாட்சி கொடுக்கிறார்.

மத்தேயு 17:5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

அடுத்து, இயேசுவை மனுஷனாகப் பாவித்து பல வசனங்கள் பழைய/புதிய ஏற்பாட்டில் இருந்தாலும் அவரை தேவனாகப் பாவித்து பல வசனங்கள் இரண்டு ஏற்பாட்டிலும் உண்டு.

ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
(இங்கு என் ஆண்டவர் என்பது இயேசுவை குறிக்கும் வார்த்தை)

ரோமர் 9:5 மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்

மத்தேயு 1:23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.


நம்முடைய பாவங்களுக்காக மரிப்பதற்காக தேவனால் ஜெனிப்பிக்கபட்டு அனுப்பபட்டவரே இயேசு! அவர் பிதாவிலும் பெரியவர் அல்ல என்பதை அவரே சொல்கிறார். இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க வேண்டியது நமது கடமை!  எனவே அவரை தேவனுக்கு மேலாக உயர்த்தாமல் தேவனுடய குமாரனாக பாவித்து அவருக்குக் கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையையும் செலுத்தவேண்டியது அவசியம்!

சுருக்கமாக சொன்னால் தேவன் தன் வார்த்தையை மாம்சமாக்கினார்; அதுவே இயேசு: 

யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகியது, அவரே இயேசு!


வெளி 19:11. பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். 13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

இயேசு யார்? அவர் தேவனுடய வார்த்தை! என்பது பற்றிய உண்மை நமக்கு தெளிவாகத் தெரிந்த ஒன்று! அதற்கான விளக்கம் நமது தளத்தில் இருக்கிறது. அதைக் குழப்பிவிடுவதற்கு முயலும் சிலர் "நானும் புரியும்படி சொல்லமாட்டேன், அடுத்தவனையும் எதுவும் சொல்ல விடமாட்டேன்"  என்ற முடிவான நிலையில் இருப்பது புரிகிறது. தேவன் வெளிப்படுத்தினால் புரிகிறவனுக்கு எனது எழுத்துக்கள் சாதரணமாக புரியும். மற்றவர்களுக்கு எனது எழுத்துக்கள் புரிவது கடினமே! எனவே நான் எழுதியவற்றில் விளக்கம் கேட்பவர்களுக்கு ஏற்ற விளக்கம் நிச்சயம் தரப்படும். மற்றபடி தெளிவாகத் தெரிந்த இந்த உண்மையைப் பற்றி இனிமேலும் விவாதிப்பது, நமக்கு மற்ற உண்மைகளைப் பற்றி ஆராய காலதாமத்தையே ஏற்படுத்தும். அதுவும் ஒரு சாத்தானின் திசைதிருப்பும் தந்திரமே!//

சகோ.சுந்தர் உரிய வசனங்களுடன் தெளிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். இறுதியில் அவரது முடிவுரையும் ஏற்புடையதுதான். இந்நாட்களில் சிலர் வேண்டுமென்றே தெளிவாகத் தெரிந்த விஷயங்களை, ஏதோ அறியக்கூடாத இரகசியம் என்பதாகப் பாவித்து, மற்றவர்களைக் குழப்புகின்றனர். இதெல்லாம் சுந்தர் சொன்னபடி: சாத்தானின் திசைதிருப்பும் தந்திரமே.

சுந்தரின் வசனங்கள் மற்றும் கருத்துக்களுக்கான எனது பதிலை தொடரும் பதிவுகளில் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Newbie

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

அன்பு எழுதியது
-------------------------------------------------------------------------------------------------------------
இதிலிருந்து நாம் அறிவதென்ன? ஒருவன் எப்போது இயேசுவை ஏற்றுக்கொள்கிறானோ அப்போதே அவனிடம் பரிசுத்தஆவி வந்துவிட்டது என அர்த்தம். இன்று பலரும் நினைப்பதுபோல், பரிசுத்தஆவி வருதல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அடையாளங்களுடன்தான் (உ-ம்: அந்நிய பாஷை பேசுதல்) நிகழவேண்டுமென்பதில்லை. ஒருவன் இயேசுவை அறியும்போது அவனிடம் பரிசுத்தஆவி வந்துவிடுகிறது, அல்லது ஒருவனிடம் பரிசுத்தஆவி வரும்போது அவன் இயேசுவை அறிந்தவனாகிறான். இவ்விரு நிகழ்வுகளும் (அதாவது பரிசுத்தஆவி வருதலும், இயேசுவை அறிதலும்) ஒரே சமயத்தில் நிகழ்பவைகளாக இருக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------------------------

இந்த கருத்தை நான் எற்றுகொள்கின்றேன்............


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 16th of December 2010 07:18:04 AM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

சகோ. அன்பு  wrote...
////இவரைத் தொழுவதாக இருக்கட்டும், அவரைத் தொழுவதாக இருக்கட்டும் என நாம் நம் விருப்பத்திற்குத் தக்கதாக எடுக்கமுடியாது. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லும்படி இயேசு கூறியுள்ளார். எனவே “சமரசம்” என்ற பேச்சுக்கே இடமில்லை///.
///ஒரே தேவன், ஒரே மத்தியஸ்தர் என்ற கோட்பாட்டை மட்டுந்தானே கூறினார்கள். மூவரில் ஒருவர் ஒருவரில் மூவர் எனும் கோட்பாட்டைச் சொன்னார்களா, அல்லது திரித்துவத்தைச் சொன்னார்களா? அவர்கள் எதுவும் சொல்லாதிருக்கையில், வேதாகம காலத்திற்குப் பின்வந்த சபையார் அவர்களாக ஆராய்ச்சி செய்து திரித்துவத்தைச் சொல்லி, பிதா தான் இயேசுவாக வந்தார் எனச் சொல்லி, தற்போது “இயேசுவை ஆராதிப்போம்” என்ற நிலை வரை வந்துள்ளனர்.///

////பிதா, இயேசு இருவரின் நிலை பற்றி சகோ.சுந்தரின் கருத்தை ஆமோதித்துள்ளீர்கள். ஆனால் சுந்தரின் கருத்தை என்னால் ஏற்கமுடியவில்லை. சுந்தர் தந்துள்ள உதாரணம், பொருந்தாத உதாரணம்.////


சகோதரர் அன்பு  அவர்களே தங்களின் பல கருத்துக்கள் என்னுடைய கருத்தோடு ஒத்திருந்தாலும் நான் சொல்லியிருக்கும்  கடல் மற்றும் சமுத்திரம் உவமையை தாங்கள் ஏற்காத பட்சத்தில்  நமது இருவருக்கும் இடையில் அடிப்படைகருத்தில் வேறுபாடு உண்டாகிறது. இயேசு யார் என்ற விஷயத்தில் தாங்கள் உண்மையை அறியாமல் சில கருத்துக்களை முன் வைக்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்.

வேதத்தின் அடிப்படையில் நான் அறிந்தபடி  பிதாவாகிய தேவன் ஆண்டவராகிய இயேசு மற்றும் ஆவியானவர் இம்மூவரும் மீட்பின் திட்டத்தில் வெவ்வேறு பணிகளை செய்யும் ஒருவரே. இவ்விதமான தேவனின் செயல்பாட்டுக்கு திரித்துவம் என்று விசுவாசிகளால் பெயரிடப்பட்டுள்ளது. திரித்துவம் என்ற அந்த வார்த்தை வேதத்தில் இல்லை என்பது மட்டும்தான் உண்மையே தவிர தேவனின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.     

இயேசுவின்  மூலம் தேவனை மட்டும் ஆராதிக்கலாம் என்ற கருத்தை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இயேசுவை தொழுவது
சரியல்ல என்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது.  காலம் வரும்வரை அவரைச் சேவிப்பதற்கு அவருக்கு தேவனால் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையே தானியேல் புத்தகம் சொல்கிறது. மேலும் "தேவன் தனி"  "இயேசு தனி" என்று நாம் முற்றிலும் தனியாகப் பிரித்து பார்க்கமுடியாது. எனவேதான் பவுல்கூட சில இடங்களில் இயேசுவையே  அந்த மெய்த் தேவனாக குறிப்பிடுகிறார்.

ரோமர் 9:5 மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன்.

1.தீமோ 3:16 தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,

இயேசுவையும் ஒரு தேவன்  என்று சொல்லும் நீங்கள் ஒரு பெரிய தேவன் இன்னொரு சின்ன தேவன் என்று இரண்டு தெய்வ கோட்பாட்டுக்கு கொண்டு செல்கிறீர்கள். தேவன் ஒருவரே! அந்த ஒரே தேவனின் மூன்று நிலைகளே  பிதா ஆவியானவர் மற்றும் இயேசு.   

சகோ. அன்பு  wrote...
////ஏனெனில் ஆராதனை முறைமைக்கு முக்கியமான தேவை “பலி” (யாத்திராகமம் 12,29,30 அதிகாரங்களைப் படிக்கவும்). இயேசுவானவர் தம்மையே ஒரே பலியாகக் கொடுத்ததன் மூலம் “அந்த ஆராதனை முறைமை” தற்போது ஒழிந்து போய்விட்டது. அப்படியிருக்க, ஆராதனைக்குரிய பலியான இயேசுவை ஆராதிப்போம் எனக் கூறுவது பொருத்தமானதா?///

இயேசு தேவனால்  படைக்கப்பட்ட ஒரு பலி அல்ல!  இக்கருத்து மிகவும் தவறானது. அவர் பாவங்களுக்குப் பலியாக வந்தாலும் அவர் தேவனின் வார்த்தையானவர்.
ஆராதனைக்கு முக்கிய தேவை பலி என்று கருதும் நீங்கள் அந்த பலியிடும்செய்கை ஏன்உருவானது என்பதையும் ஏன் "இயேசு தவிர வேறு ஒரு பலி இல்லை" என்று வேதம் சொல்கிறது என்பதையும் தீர ஆராய்ந்தால்தான் இயேசு யார் என்பதை அறியமுடியும். 
அதாவது இந்த உலகம் பாவத்தில் விழுந்தபோது  எந்த வார்த்தைகளால் இந்த உலகத்தையும் அதிலுள்ளவைகளையும் தேவன் படைத்தாரோ,  அந்த வார்த்தையையே மாமிசமாக்கி அதற்கான
பலியாக கிரயத்தைச் செலுத்தி மீட்டார். அதைத்தான் யோவான் "வார்த்தை மாம்சமானது" என்று சொல்கிறார்  பின்னர் அவர் பாடுகளை முடித்தபின்னர்  தேவனோடு சேர்ந்து ஐக்கியம் ஆகிவிடாமல்
தேவனின் வலது பாரிசத்தில் அமர்ந்துவிட்டார்.

"என் மகிமையை வேறொருவருக்கு கொடேன்"
என்று சொன்ன கர்த்தரே  "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாக காணும்" என்று ஏசாயா மூலம் குறிப்பிட்டார். வேறொருவருக்கு கொடுக்கா விட்டால் மாம்சங்கள் யாவும்  காணும்படி மகிமையின் பிரகாசமாய் வந்த இயேசு யார்?  அதுவும் அவராகத்தானே இருக்கமுடியும்? இவ்வாறு
தேவனின் வார்த்தையுடன் சேர்ந்து வெளிப்பட்ட கர்த்தரின் மகிமையே தேவனின் தற்சொரூபமான இயேசு.

எபிரெயர் 1:3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து

திரித்துவத்தை நம்பும் பலருக்கு அதன் உண்மைப் பொருள் மற்றும் நோக்கம் போன்றவை  சரியாக தெரியாத காரணத்தால் அவர்களால் விளக்க முடிய வில்லையே அன்றி மற்றபடி அந்த தத்துவம் உண்மையே!


கர்த்தர்தான் இயேசுவா -  ஆம் / இல்லை
தேவன்தான் இயேசுவா  -  ஆம் / இல்லை 

இதுவே எனது பதில்!

அற்ப மனிதனே இரண்டு மூன்று வேடங்களில் நடித்து நம்மை அசர வைத்துவிடுகிறான் அவ்வாறு இருக்க தேவனின் இந்த நிலைக்கு  மனித அறிவுக்கு எட்டும்படி விளக்கம் கூற முடியவில்லை.  

நான் குறிப்பிட்ட "கடல் உவமையில்" எப்படி எங்கோ இருக்கும் வங்காள விரிகுடா கடலில் இறங்கி பயணித்தால் நம்மால் பசுபிக் சமுத்திரத்தை அடைந்துவிட முடியுமோ அதேபோல் இயேசு என்னும் அவருக்குள் இறங்கி திறந்த மனதோடு  தேடினால்  தேவத்துவத்தின்  அனைத்தையும் அறிந்துவிட முடியும் என்பதே உண்மை!

இப்பொழுது ஆராதனை என்பதும் தொழுகை என்பதும் சேவிப்பது என்பதும் எனக்கு மூலபாஷை வரை சென்று ஆராயத்தெரியாது, அதற்கு அவசியமும் இல்லை. எனவே அதற்கான சரியான விளக்கத்தைக் கொடுக்க முடியவில்லை. ஆயினும் ஒரு விளக்கத்தை என்னால் கொடுக்க முடியும். 

வெளி 5 12. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

இந்த காரியத்தைத்தான் இன்றைய சபைகளில் செய்துகொண்டு இருக்கிறார்கள்,  ஆண்டவராகிய இயேசுவுக்கு ஸ்தோத்திரத்தையும்
கனத்தையும் மகிமையையும் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் ஜெபிக்கும்போது இயேசுவின் மூலமாக பிதாவிடத்தில் ஜெபத்தை ஏறெடுக்கிறார்கள். இதைத்தான் தொழுதல் ஆராதித்தல் என்று நான் கருதுகிறேன். மற்றபடி இதில் தவறு என்று நீங்கள் சுட்ட இங்கு ஒன்றும் இல்லை!


-- Edited by SUNDAR on Thursday 16th of December 2010 01:09:18 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//கர்த்தர்தான் இயேசுவா -  ஆம் / இல்லை
தேவன்தான் இயேசுவா  -  ஆம் / இல்லை

இதுவே எனது பதில்!//


மன்னிக்கவும் சகோதரரே! உங்கள் கேள்விகளும் புரியவில்லை, பதில்களும் புரியவில்லை.

//இயேசுவின்  மூலம் தேவனை மட்டும் ஆராதிக்கலாம் என்ற கருத்தை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இயேசுவைத் தொழுவது சரியல்ல என்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது. காலம் வரும்வரை அவரைச் சேவிப்பதற்கு அவருக்குத் தேவனால் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையே தானியேல் புத்தகம் சொல்கிறது.//

எவ்வளவோ எழுதிவிட்டேன், இனி தமிழ் வித்துவானிடம் “ஆராதனைக்கும்” “தொழுகைக்கும்” என்ன வித்தியாசம் எனக் கேட்டு அறிந்துவிட்டுத்தான் எழுதவேண்டும். அதுவரை உங்கள் எண்ணப்படியே நடவுங்கள் சகோதரரே!

//மேலும் "தேவன் தனி"  "இயேசு தனி" என்று நாம் முற்றிலும் தனியாகப் பிரித்து பார்க்கமுடியாது. எனவேதான் பவுல்கூட சில இடங்களில் இயேசுவையே  அந்த மெய்த் தேவனாக குறிப்பிடுகிறார்.

ரோமர் 9:5 மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன்.

1.தீமோ 3:16 தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,
//

இனி உங்களிடம் மூலபாஷையெல்லாம் சொல்லிப் பயனிருப்பதாகத் தெரியவில்லை. எனவே மேற்கூறிய வசனங்களுக்கு நான் அறிந்த சில ஆங்கில மொழிபெயர்ப்புகளை மட்டும் தருகிறேன். ஏதாவது புரிகிறதா எனப் பாருங்கள். (தலை சுற்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல; பலரும் நம்புகிறபடி, வேதாகமத்தை மொழிபெயர்க்கச் செய்த பரிசுத்தஆவியானவரே பொறுப்பு.)

Romans 9:5 Whose are the fathers, and of whom as concerning the flesh Christ came, who is over all, God blessed for ever. Amen. - KJV

Of whom are the fathers and from whom, according to the flesh, Christ came, who is over all, the eternally blessed God. Amen. - New KJV

Theirs are the patriarchs, and from them is traced the human ancestry of Christ, who is God over all, forever praised! Amen.   - NIV

Whose are the fathers, and of whom is Christ as concerning the flesh, who is over all, God blessed for ever. Amen. - ASV

Whose are the fathers, and from whom is the Christ according to the flesh, who is overall, God blessed forever. Amen. - New ASV

Great men of God were your fathers, and Christ himself was one of you, a Jew so far as his human nature is concerned, he who now rules over all things. Praise God forever! - Living Bible

To them belong the patriarchs, and of their race, according to the flesh, is the Christ. God who is overall be blessed for ever. Amen. - Revised Standard

They have the family roots. Christ, in the human sense, came from them. God is over everyone. Praise Him forever. Amen. - Simple English

To them belong the fathers and out of them, so far as physical descent is concerened, came Christ who is overall, God, blessed for ever. Amen. - New Jerusalem with Apocrypha

Theirs the patriarchs, and from them, according to the flesh, is the Messiah. God who is overall be blessed forever. Amen. - New American with Apocrypha

1 Timothy 3:16 Beyond all question, the mystery of godliness is great: He appeared in a body, was vindicated by theSpirit, was seen by angels, was preached among the nations, was believed on in the world, was taken up in glory. - NIV

1 Tim 3:16 And without controversy great is the mystery of godliness: God was manifested in the flesh, Justified in the Spirit, Seen by angels, Preached among the Gentiles, Believed on in the world, Received up in glory. - NKJV

1 Tim 3:16 And without controversy great is the mystery of godliness; He who was manifested in the flesh, Justified in the spirit, Seen of angels, Preached among the nations, Believed on in the world, Received up in glory. - ASV

1 தீமோ. 3:16 பற்றிய ஒரு கொசுறு தகவல்: இவ்வசனத்தின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் காணப்படும் “தேவன்” அல்லது "God" எனும் வார்த்தைக்கு இணையான வார்த்தை மூலபாஷையில் இல்லை.

நான் மேலே தந்துள்ள மொழிபெயர்ப்புகளைக் கொண்டு அவ்வசனங்களின் தெளிவான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளயமுடியவில்லையெனில், தமிழ் வேதாகமம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
முடிந்தால் ரோமர் 9:5 மற்றும் 1 தீமோ. 3:16 வசனங்களுக்கும் பின்வரும் வசனங்களுக்குமிடையே ஏதேனும் முரண்பாடு இருக்கிறதா எனப் பாருங்கள். முரண்பாடு இருப்பதாகத் தெரிந்தால் அதற்கான விளக்கம் தரமுடிந்தால் தாருங்கள்.

1 தீமோ. 2:5,6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;

1 கொரி. 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

//இந்த கருத்தை நான் எற்றுகொள்கின்றேன்............//

தேவனுக்கு ஸ்தோத்திரம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:
sundar wrote:
//கர்த்தர்தான் இயேசுவா -  ஆம் / இல்லை
தேவன்தான் இயேசுவா  -  ஆம் / இல்லை

இதுவே எனது பதில்!//


மன்னிக்கவும் சகோதரரே! உங்கள் கேள்விகளும் புரியவில்லை, பதில்களும் புரியவில்லை.

 -------------------------------------------------------------
சகோதரர்  அன்பு  அவர்களே, என்னுடைய இந்த கருத்துக்கு
விளக்கம் வேண்டுமென்றால். ஆசியா இந்தியா என்ற கருத்தின் அடிப்படையில் பார்க்கலாம்.    
 
கேள்வி: இந்தியா மட்டும்தான் தான் ஆசியாவா? 
பதில் :  இல்லை!  சீனா, ரஷ்யா போன்ற இன்னும் சில நாடுகள் ஆசியாவில் அடங்கியிருக்கிறது.  
 
அதுபோல்

இயேசு மட்டும்தான்தான் தேவனா?
பதில்:  இல்லை இன்னும் அவருக்கு மேலான பிதாவாகிய தேவன்  இருக்கிறார்.  

அடுத்து 

இந்தியாவும் ஆசியாவா?
ஆம்! ஆசிய கண்டத்தில்தான் இந்தியா இருக்கிறது    

இயேசுவும் தேவனா?
ஆம் தேவத்துவத்தின் ஒரு நிலையே இயேசு எனவே அவரும் தேவன்தான்.

ஆசியாவை ஆசியா என்றுதான் சொல்வோம் இந்தியாவை இந்தியா என்றுதான் சொல்லுவோம் ஆனால் இந்தியா இவ்வாறு சொல்ல முடியும் "என்னை காண்கிறவன்  ஆசியாவை காண்கிறான்" என்று சொல்ல முடியும்.     
இப்பொழுது ஆசியா என்று குறிப்பிட்டால் எல்லாம் அதில் அடங்கி விடுவதுபோல, தேவத்துவத்துக்குள் எல்லோரும்  அடங்கிவிடுகின்றனர்.    
 
தங்கள் சுட்டியுள்ள வசனம்:  
1 தீமோ. 2:5,6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;

இயேசுவின் மரணத்தின் மூலம் மனிதர்களுக்குள் தங்கும் வரத்தை பெற்று  தற்போது பூமியில் மீடபின் பணியில் ஈடுபட்டுள்ள பரிசுத்த ஆவியானவர் என்பவர் கர்த்தரின்  ஆவியானவரே. எனவே அவரும் தேவனும் ஒருவரே!  அவரே ஒன்றான மெய்தேவன்.எனவே  திரித்துவம் என்றொரு கோட்பாட்டை முற்றிலும்  சரி என்று ஏற்க்க முடியாது.
 
ஆனால் அவர் அனுப்பிய கிறிஸ்த்து எல்லோரையும் மீட்கும் பொருளாக தன்னை ஒப்பு கொடுத்தவர். இவர் மாம்சமாக பூமியில் வந்து பிறந்துவிட்டதால் இவர் ஒரு தனிப்பட்டவர் ஆகிவிடுகிறார்.  தனியாக பிதாவின் வலது பரிசத்தில் அமர்ந்துவிட்டார்  அவர் நம்மை போல மனுஷ குமாரனாக இருப்பதால் நியாயதீர்ப்பு செய்யும் அதிகாரத்தையும் பிதா
அவருக்கு கொடுத்தார்  அவரது ராஜ்யம்  நித்திய ராஜ்ஜிய மாகவும் இருக்கும்.
எனவே மேற்கண்ட வசனம் சரியானதே
 
இப்பொழுது தங்களின் நிலையாகிய தேவன் ஒருவரே பிதாவாகிய அந்த தேவன் இயேசுவிலும் மேலானவர் என்ற கருத்தை  நான் மறுப்பதற்கு இல்லை. ஏனெனில் இயேசுவே அதை சொல்லியிருக்கிறார். அந்த  பிதாவாகிய தேவன் ஆராதனைக்கும் தொழுகைக்கும் பாத்திரர் என்பதையும் நான் மறுக்கவில்லை.
 
ஆனால்
 
இயேசுவும் தேவத்துவத்துக்குள் ஒருவராக இருப்பதாலும் 
அவர்  மகிமையையும்/கனத்தையும் ஸ்தோத்திரத்தையும்
பெற்றுக்கொள்ள பாத்திரவான் என்பதை வெளி 5 12.
சொல்வதால்
அவருக்கு இவைகளை செலுத்துவதைதானே நாம் ஆராதனை என்று சொல்லுகிறோம் எனவே அதில் தவறில்லை என்பதே எனது கருத்து.    
 
 
சிரமம் பாராமல் இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்! 

பிதாவாகிய தேவன் இயேசுவை எவ்வாறு ஜெநிப்பித்தார்?
 
கர்த்தருடைய மகிமை மாம்சமான யாவும் காணும்படி வெளியரங்கம் ஆகும் என்று என்று ஏசாயா சொல்வது யாரை?

நாம் இந்த காரியத்தில் ஒரு சரியான தெளிவைபெற நன்கு ஜெபித்து தேவனிடமிருந்து வழி நடத்துதலை  பெற வாஞ்சிக்கலாம்.   
 

 



-- Edited by SUNDAR on Thursday 16th of December 2010 06:34:10 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே!

தாங்கள் முதலில் கேட்ட கேள்விகள்/பதில்கள் வேறு; எனக்கு விளக்கம் தரும்படியாக தற்போது குறிப்பிட்டுள்ள கேள்விகள்/பதில்கள் வேறு. இக்கேள்விகள்/பதில்களைப் புரிந்துகொள்வதில் எனக்குப் பிரச்சனையில்லை.

கேள்வி: இயேசு மட்டும்தான்தான் தேவனா?
பதில்:  இல்லை, இன்னும் அவருக்கு மேலான பிதாவாகிய தேவன்  இருக்கிறார்.


இதை நான் முழுதாக ஒத்துக்கொள்கிறேன்.

கேள்வி: இயேசுவும் தேவனா?
பதில்: ஆம். தேவத்துவத்தின் ஒரு நிலையே இயேசு; எனவே அவரும் தேவன்தான்.


இப்பதிலின் பின்பகுதியை, அதாவது “அவரும் தேவன்தான்” எனும் பகுதியை நான் முழுதாக ஒத்துக்கொள்கிறேன் ஆனால் முன்பகுதியைப் பொறுத்தவரை, அவர் தேவத்துவத்தின் ஒரு நிலையே என்பதைவிட அவர் தேவத்துவமுள்ளவர் எனச் சொல்வது அதிக பொருத்தமாயிருக்கும். ஏனெனில், மனுஷனின் குமாரன் மனுஷத்துவமுள்ளவனாக இருப்பதைப் போல, தேவனின் குமாரன் தேவத்துவமுள்ளவராகத்தான் இருப்பார். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை; இதைக் கண்டுபிடிக்க பெரும்ஆராய்ச்சியும் தேவையில்லை

வேதாகமம் நேரடியாகவே பல வசனங்களில் இயேசுவை தேவன் எனக் கூறியுள்ளன. அவற்றில் ஒன்று:

சங்கீதம் 45:6,7 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

இதில் 6-ம் வசனத்தில் “தேவனே” எனும் வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது. 7-ம் வசனத்தில் “உம்முடைய தேவன்” எனும் வார்த்தைகளில் “உம்முடைய” என்பது இயேசுவையும் “தேவன்” என்பது யெகோவாவையும் குறிப்பிடுகின்றன.

மொத்தத்தில், இயேசுவைத் தேவன் என்றும், யெகோவா தேவனை “இயேசுவுக்கும் தேவன்” என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன. இயேசு உட்பட அனைவருக்கும் தேவனாக யெகோவா தேவன் இருப்பதால்தான் அவரை “தேவாதி தேவன்” என வேதாகமம் கூறுகிறது (உபாகமம் 10:7; யோசுவா 22:22; சங்கீதம் 136:2; தானியேல் 11:36). “தேவாதி தேவன்” எனும் இச்சொற்றொடர் “யெகோவா” தேவனுக்கு மட்டுமே உரித்தானதாகும்.

யெகோவா தேவன் என்பவர் சர்வ லோகத்திற்கும் ஒரே தேவனாக (Unique God) இருக்கிறார். ஆனால் இயேசுவோ, யெகோவாவைத் தவிர்த்த சர்வ லோகத்திற்கும் தேவனாக இருக்கிறார்.

மோசேகூட பார்வோனுக்குத் தேவனாக இருந்தார் (யாத். 7:1); இன்னும் சாத்தானுங்கூட இப்பிரபஞ்சத்தின் தேவன் என அழைக்கப்படுகிறான் 2 கொரி. 4:4).

அன்றைய இஸ்லவேலரின் நியாயாதிபதிகளுங்கூட தேவர்கள் எனப்பட்டனர். ஆதாரம்:

சங்கீதம் 82:6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

இயேசுவின், பின்வரும் வசனத்தையும் கவனியுங்கள்.

யோவான் 10:33-36 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

தேவனிடமிருந்து தேவவசனத்தைப் பெற்றுக்கொள்பவன்கூட தேவன்தான் என வேதவாக்கியம் உரைப்பதாக இயேசு சொல்கிறார். இப்படியாக எத்தனை தேவர்கள் இருந்தாலும் “ஒரே தேவன்” (Unique God) எனப்படுபவர் யெகோவா மட்டுமே.

இக்கருத்தைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//இயேசுவும் தேவத்துவத்துக்குள் ஒருவராக இருப்பதாலும்
அவர்  மகிமையையும்/கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரவான் என்பதை வெளி 5 12.
சொல்வதாலும், அவருக்கு இவைகளைச் செலுத்துவதைதானே நாம் ஆராதனை என்று சொல்லுகிறோம்? எனவே அதில் தவறில்லை என்பதே எனது கருத்து.
//

இயேசு தேவத்துவத்துக்குள் ஒருவர் என்பதைவிட, இயேசுவும் தேவத்துவமுள்ளவர் என்பதே சரியானது என ஏற்கனவே கூறியிருந்தேன். பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இயேசு இருக்கிறார்.

யோசேப்பிடம் எப்படி அதிகாரம் முழுவதையும் பார்வோன் ஒப்புவித்தானோ, அதேவிதமாக இயேசுவிடம் அதிகாரம் முழுவதையும் தேவன் ஒப்புவித்துள்ளார். பார்வோனுக்குள்ள கனம் யோசேப்புக்கும் கொடுக்கப்பட்டதைப்போல, தேவனுக்குள்ள கனம் இயேசுவுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்பதை மறுக்கவில்லை. ஆகிலும் சிங்காசனத்தில் மட்டும், யோசேப்பைவிட பார்வோன் பெரியவனாயிருந்ததைப்போல, ஆராதனை விஷயம் மட்டும் யெகோவாவுக்கே உரித்தானது.

இந்த ஆராதனை முறைமையெல்லாம் பழையஏற்பாட்டில்தான் கூறப்பட்டுள்ளது; புதிய ஏற்பாட்டில் அப்படி எந்த முறைமையும் இல்லை. ஆனால் இயேசுவின்/தேவனின் வசனங்களுக்குச் செவிகொடுப்பதுதான் தற்போது நம்மிடம் தேவன் எதிர்பார்க்கிற ஆராதனை. இந்த ஆராதனையை ஒதுக்கிவிட்டு, இயேசுவுக்கு ஆராதனை என்ற சுலோகம் ஏன் என்பதுதான் என் கேள்வி.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//சிரமம் பாராமல் இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்!

பிதாவாகிய தேவன் இயேசுவை எவ்வாறு ஜெநிப்பித்தார்?

கர்த்தருடைய மகிமை மாம்சமான யாவும் காணும்படி வெளியரங்கம் ஆகும் என்று என்று ஏசாயா சொல்வது யாரை?
//

இறைவன் தளத்தில் நீங்கள் பதித்த வசனங்கள் மற்றும் கருத்துக்களுக்கு பதிலளிக்க முற்பட்டபோது, உங்கள் முதல் கேள்விக்கான பதிலைத்தான் முதலாவதாக எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் அதை எழுதி முடிப்பதற்குள் உங்கள் மற்ற பதிவுகள் வந்துவிட்டதால் தொடங்கியதை பாதியில் வைத்துவிட்டு, புதிய பதிவுகளுக்குப் பதில் எழுதத் தொடங்கிவிட்டேன்.

இப்போது உங்கள் முதல் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

பிதாவாகிய தேவன் இயேசுவை எவ்வாறு ஜெநிப்பித்தார்?

இக்கேள்விக்கு உங்கள் தளத்தின் பதிவில், ஏற்கனவே நீங்கள் ஒரு சிறிய விளக்கம் தந்திருந்தீர்கள். அது:

//உருவாக்குதலுக்கும் ஜெநிப்பித்தலுக்கும் வேறுபாடு தெரியும் என்று நினைக்கிறேன்; வேறு யாரையுமே ஜெனிப்பித்ததாக வசனம் சொல்லவில்லை//

உங்கள் கூற்று மிகச் சரியானதே. உருவாக்குதலுக்கும் ஜெநிப்பித்தலுக்கும் வேறுபாடு உள்ளதுதான். இந்த வேறுபாட்டை அறிய “ஜெநிப்பித்தல்” எனும் வார்த்தைக்கான முழு அர்த்தத்தையும் பார்ப்போம்.

சங்கீதம் 2:6 கூறுகிற ஜெநிப்பித்தலைத்தான் புதியஏற்பாட்டில் எபிரெய நிருபத்தின் ஆக்கியோன் கூறுகிறார். சங்கீதம் 2:6 கூறுகிற “ஜெநிப்பித்தல்” எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தை “yalad” என்பதாகும். இதன் அர்த்தம்: to bear young; causatively, to beget; medically, to act as midwife; specifically, to show lineage:

அதாவது: சிசுவைப் பெறுதல், பெற்றெடுத்தல், தாதியாக செயல்படுதல், சந்ததியைக் காட்டுதல் எனும் அர்த்தங்களைக் கூறலாம்.

"yalad" எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள வேறு சில வசனங்கள்:

ஆதி. 3:16 அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்;

ஆதி. 4:1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

ஆதி. 21:2,3 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.

இப்படி பல வசனங்களைக் கூறலாம். ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் செயலுக்கு "yalad" எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேவனுங்கூட ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுப்பதைப்போல, இயேசுவைப் பெற்றெடுத்தார் எனக் கூறலாம்.

அதாவது ஒரு குழந்தையானது அதன் தாயிடமிருந்து எப்படி நேரடியாக உருவாகி வருகிறதோ அதேவிதமாக இயேசுவும் தேவனாகிய பிதாவிடமிருந்து நேரடியாக உருவாகி வந்தார். ஆதாமைப் பொறுத்தவரை, மண்ணின் ஒரு பகுதியை எடுத்து, அதற்கு உருவத்தைக் கொடுத்து, பின்னர் தமது ஜீவசுவாசத்தை ஊதி, அவனை உண்டாக்கினார்.

ஆனால் இயேசுவையோ தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள தொடர்பைப் போன்ற ஒரு தொடர்பில் தம்மிடமிருந்து நேரடியாகக் பெற்றெடுத்தார். ஆதியில் தேவன் இயேசுவைப் பெற்றெடுக்கையில் இயேசு மாம்சத்தில் இராமல் ஆவியில் இருந்தார்; பின்னர் மரியாளிடம் இயேசுவை ஆவியாக அனுப்பி, மாம்சமாகப் பெறச் செய்தார். அதன் பின்னரே அவருக்கு “இயேசு” எனும் மாம்சீகப் பெயர் வழங்கலாயிற்று.

ஆதியில் தேவனால் பெற்றெடுக்கப்பட்டு “தேவகுமாரனாக” இருந்த இயேசு, மரியாளால் பெற்றெடுக்கப்பட்ட பின்னர் “மனுஷகுமாரனானார்”.

ஒரு குழந்தை தாயிடமிருந்தே பிரிந்து வந்தாலும், பிரிந்து வந்த குழந்தையை “தாயின் ஒரு பகுதி” என நாம் கூறுவதில்லை. அவ்வாறே, தேவனிடமிருந்து பிரிந்து தனி ஆள்த்தத்துவமாக வந்த இயேசுவை, “தேவனின் ஒரு பகுதி” எனக் கூறமுடியாது.

தாயிடமிருந்து பிரிந்து வந்த குழந்தை மீண்டும் தாயோடு ஐக்கியமாவதில்லை; அவ்வாறே தேவனிடமிருந்து பிரிந்து வந்தவரான இயேசு, மீண்டும் தேவனோடு ஐக்கியமாகாமல்தான் இந்நாள் வரை இருக்கிறார்.

தேவன் நினைத்தால் எக்கணத்திலும், இயேசுவும் அவரும் ஐக்கியமாக முடியும். ஆனால் இந்நாள் வரை தேவன் அதைச் செய்யவில்லை. ஆதாரம்: வெளி. 5:13-ம் வசனம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

//இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா? என்பதைப் பற்றி என் சிறிய கருத்தை பதிக்கின்றேன்.

எபிரெயர் 1:6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.

இங்கு தேவன் தேவதூதர் யாவரும் தம்முடைய குமாரனைத் தொழுது கொள்ளவேண்டும் என்கிறார். இப்படி இருக்க மனிதன் அவரைத் தொழுது கொள்ளக் கூடாதா சகோதரரே?
இயேசு தொழத்தக்க தெய்வமா அல்லது இல்லையா என்று இங்கு பிதாவாகிய தேவனே நிச்சயபடுத்தி இருக்கின்றார். இப்படி இருந்தும் ஆங்கிலத்தில் இப்படி எழுதி இருக்கின்றது, எபிரேய வேதத்தில் இப்படி எழுதி இருக்கின்றது என்றால், எனக்கு ஒன்றும் தெரியாது.

எனக்கு தெரிந்த தமிழ் வேதத்தில் இருந்து பதிவு செய்து இருக்கின்றேன்.
//

உங்கள் கருத்தை வரவேற்கிறேன் சகோதரரே!

உண்மையில் எபிரெயர் 1:6 போன்ற பல வசனங்கள் சொல்வதன்படி பார்த்தால் “இயேசுவும் தொழத்தக்க தெய்வமே” என்றுதான் கூறவேண்டும்; இதை யாரும் மறுக்க முடியாது. நானுங்கூட மறுக்கமுடியாது.

ஆனால் என் மனதில் எழுகிற பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

“உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என்று சொல்கிற அதே வேதாகமம் “தேவனுடைய குமாரனாகிய இயேசுவும் தொழத்தக்க தெய்வமே:” எனக் கூறுவது எப்படி?

“ஒரே தேவன், ஒரே மத்தியஸ்தர் இயேசு” எனக் கூறுகிற
அதே வேதாகமம், “இயேசுவும் தொழத்தக்க தெய்வமே:” எனக் கூறுவது எப்படி?

இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் உண்டு. இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் வண்ணமாகத்தான் “திரித்துவம்” எனும் கோட்பாட்டை அக்கால சபைத் தலைவர்கள் கண்டுபிடித்து நம் மனதில் பதித்துவைத்து விட்டனர். அவர்களின் கோட்பாட்டிற்கு ஆதரவாக பல வசனங்கள் உண்டு. அவற்றில் சில: யோவான் 1:1; 10:30; 14:9; ரோமர் 9:5; 1 தீமோ. 3:16; 1 யோவான் 5:7.

இவ்வசனங்களையெல்லாம் பார்க்கும்போது: “பிதாவும் இயேசுவும் ஒன்றாகத்தான் இருக்கணும், பிதாதான் இவ்வுலகுக்கு மனுஷனாக வரும்போது இயேசுவாக வந்திருக்கணும்” என ஒருபுறம் நினைக்கிறோம். அதே வேளையில் பல வசனங்கள் “இயேசுவை தேவனுடைய குமாரன் எனச் சொல்கிறதே”, “இயேசு பிதாவை நோக்கி ஜெபிப்பதாக/பேசுவதாக பல வசனங்கள் சொல்கிறதே? இது எப்படி?” எனும் கேள்விகள் வரும்போது, சகோ.விஜய் சொன்னபிரகாரம் “இதெல்லாம் நம் சுண்டைக்காய் மூளைக்கு எட்டாது” என்று சொல்லி நம்மை நாமே சமரசம் செய்துகொள்கிறோம்.

ஆனால் ஒரு விஷயத்தை நாம் சற்றும் நினைப்பதில்லை அல்லது மறந்துபோகிறோம். “நாம் படிக்கிற வேதாகமம் நேரடியாக நம் மொழியில் எழுதப்பட்டு வரவில்லையே, நாம் அறியாத ஒரு பாஷையில் எழுதப்பட்டு, பின்னர் அது பிரதி எடுக்கப்பட்டு, பிரதிக்குப் பிரதி எடுக்கப்பட்டு, பின்னர் மொழிபெயர்க்கப்பட்டு அல்லவா நம் கைக்கு வந்துள்ளது” என்பதை சற்றும் நினைப்பதில்லை.

இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்காதவரை நீங்கள் சொன்னபடி, எபிரெயர் 1:6 போன்ற பல வசனங்களைக் காட்டி, “இயேசுவும் தொழத்தக்க தெய்வமே” எனத் தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம். இதை யாரும் தவறு எனச் சொல்லமுடியாது. ஆனால் “முரண்பாடான வசனங்களைக் குறித்தும், மொழிபெயர்ப்பில் தவறு இருக்கக்கூடும் என்பதைக் குறித்தும் நாம் நினைக்காததோ, அல்லது அவை பற்றி கேள்வி எழுப்பாததோ தவறா எனக் கேட்டால் அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.

என்னைப் பொறுத்தவரை இம்மாதிரி விஷயங்களில் எனது அனுபவத்தைச் சொல்கிறேன்; சற்று பொறுமையுடன் படியுங்கள்.

யோவான் 5:4-ம் வசனம் ஒரு விஷயத்தைக் கூறுகிறது. அதாவது, பெதஸ்தா எனும் ஒரு குளத்தில் திடீரென தேவதூதன் இறங்கி குளத்தைக் கலக்குவானாம்; அவன் கலக்கியதும் முதன்முதலாக குளத்தினுள் இறங்குகிற எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனும் குணமாகிவிடுவானாம். இப்படியாக அவ்வசனம் கூறுகிறது.

அத்தோடு குளத்தினுள் இறங்கமுடியாமல் ஒரு வியாதிஸ்தன் 38 வருஷம் காத்துக் கொண்டிருந்தான் என்றும் தொடர்ந்து வரும் வசனங்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்தை எனது சிறு வயதில் (அதாவது சுமார் 13,14 வயதில்) படிக்கும்போதே, தேவதூதனின் செயல் “ஓர் அநீதியான செயல்” என நினைத்தேன். ஆகிலும் அப்போது வேதாகம மொழிபெயர்ப்பு பற்றியோ, இது மூலபாஷையல்ல என்பது பற்றியோ தீவிரமாக நினைக்கக்கூடிய அறிவு இல்லை. உள்மனது “இது அநீதி” எனச் சொன்னாலும், இதற்கெல்லாம் தேவன் ஒரு காரணம் வைத்திருப்பார், அது ‘நம் சுண்டைக்காய் மூளைக்கு’ எட்டாது என நினைத்து என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன். ஆகிலும், என் மனம் இவ்விஷயத்தில் முழுதிருப்தி அடையவே இல்லை.

பின்னர் எனது 26-ம் வயதில் வேதாகம மொழிபெயர்ப்புகளில் தவறுகள் உள்ளன எனும் தகவலை சில நண்பர்கள் கூறினர். அப்போதும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக நான் கருதவில்லை. குறிப்பாக “பழைய ஏற்பாட்டு கர்த்தரையும்” “புதியஏற்பாட்டு கர்த்தரையும்
இப்போது பலர் ஒரே அர்த்தத்தில் கருதுவதைப்போலத்தான் நானும் அப்போது கருதி வந்தேன்.

ஆகிலும் வேதாகமத்தில் பல முரண்பாடுகள் இருப்பதையும் அவ்வப்போது நான் கவனிக்கத்தான் செய்தேன். ஆனால் அதைக் குறித்து தீவிரமாக நான் சிந்திக்கவில்லை. பின்னர் சுமார் 30 வயதில் (அதாவது 1987-ல்) சில புத்தகங்கள் வாயிலாகவும் கலந்துரையாடல் மூலமாகவும் வேதாக மொழிபெயர்ப்பில் தவறுகள் உள்ளன என்பதை திட்டவட்டமாக அறிந்தேன். ஆகிலும் அப்போதுகூட முழுமுயற்சியுடன் வேதாகமத்தை ஆராயவில்லை.

அவ்வப்போது யார் மூலமாவது ஏதேனும் ஒரு “மொழிபெயர்ப்புத் தவறு” பற்றிய தகவல் எனக்கு வந்துகொண்டே இருக்கும்; அவற்றைக் காதில் வாங்கினாலும் முழுமையாக வேதாகமத்தை ஆராயவில்லை. பின்னர் எனது 46-ம் வயதில் ஏதேனும் ஒரு வகையில் தேவனுக்குப் பணி செய்யவேண்டும் என நான் உந்தப்பட்டபோது, முதலாவது வேதாகமத்தை நன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக நடுஇரவில் 3, 4 மணி நேரங்கள் உட்கார்ந்து வேதத்தைப் படித்து குறிப்புகள் எடுப்பேன். சிறுவயதிலிருந்தே நான் வேதாகமத்தை ஓரளவு படித்திருந்தாலும், எனது 46-ம் வயதில்தான் நான் ஓரங்கட்டியிருந்த தீர்க்கதரிசன புத்தகங்களைப் படித்தேன். அவ்வாறு படித்து ஓரளவு திருப்தி வந்த பின்னர்தான் எனது எழுத்துப்பணியைத் துவக்கினேன்.

அதற்குப் பிறகுதான் யோவான் 5:4 வசனம் மூலபாஷை பிரதியில் இல்லை எனும் தகவலை மின்னஞ்சல் செய்தி வாயிலாக அறிந்தேன். எனது 13 வயதில் எழுந்த கேள்விக்கு எனது 47-ம் வயதில்தான் விடை கிடைத்தது. அதன்பின் மேலும் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன; இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

எனவே நான் சொல்வது என்னவெனில்: “வேதாகமம் ஒரு விஷயத்தில் முரண்படுவதாகத் தோன்றினால், அவ்விஷயத்தில் நாம் எந்த முடிவும் எடுக்காமல் காத்திருக்க வேண்டும் என்பதே. அப்படிக் காத்திருக்கும்போது அதைக் குறித்த தெளிவான விளக்கத்தை வேண்டி தேவனிடம் ஜெபிக்கவேண்டும். நிச்சயமாக (ஆர்வமும் முயற்சியும்) உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும் (மத்தேயு 13:12). ஆனால் கொடுக்கப்படும்வரை நாம் காத்திருக்க வேண்டும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

சகோ. அன்பு  அவர்களே தங்களின் பதிந்துள்ள  மூல பாஷைக்கும் மொழி பெயர்ப்புக்கும் உள்ள வேறுபாடு மற்றும் விளக்கங்களை ஆராய்ம்போது. இந்த காரியம்  வேதம் மொழி பெயர்ப்புக்கு முன்னமே மனிதர்களின் மனதில் இருந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
 
ஜெனிப்பித்தல் சம்பந்தமான தாங்கள்  கருத்தும் என் பார்வைக்கு சரியானதே ஆனால் நான் அறிந்தவரை ஒரே ஒரு திருத்தம் ஒரு குழந்தை  ஜெனிப்பதர்க்கு தகப்பனுடைய ஏதோ ஒரு கருப்பொருள் தேவை அதேபோல் தேவனின் வார்த்தை என்னும்  கருப்பொருளே இயேசு ஜெனிபிக்கப் பட்டதன் அடிப்படை என்று யோவான் சொல்கிறது
 
மற்றவர்களின்  நிலை என்னவோ எனக்கு தெரியாது. என்னுடையநிலை சரியானதுதான் என்பதை மட்டுமே நான் ஆராய விரும்புகிறேன் நான் மூல பாஷைவரை சென்று ஆராயவில்லை ஆகினும் தேவன் என்னை  சரியாகவே  போதித்து நடத்தியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.    

எனது நிலை என்னவெனில்:

இயேசு தேவத்துவத்துவத்துக்குள் ஒருவர் அல்லது தாங்கள் சொல்வதுபோல் தேவத்துவம் உள்ளவர் என்றும் எடுத்துகொள்ளலாம்
 
ஆண்டவராகிய இயேசு பிதாவால்ஜெனிப்பிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பபட்டு நமது பாவங்களுக்கு பலியாகி ஜெயம்கொண்டு நம்மை மீட்டதால் அவருக்கு ஸ்தோத்திரம்/கனம்/மகிமை இவற்றைசெலுத்துகிறேன் செலுத்த கடமைபட்டுள்ளேன்.
இதை ஆராதனைஎன்று எடுப்பதா அல்லது தொழுகை என்று எடுப்பதா அல்லது கனம் செலுத்த்துதல் என்று எடுப்பதா என்பது தெரியவில்லை.
 
அதே நேரம்:
ஆவியோடும் உண்மையோடும் தேவனை தொழுது கொள்ள வாஞ்சிக்கிறேன்
பரிசுத்தம் என்னும் அலங்காரத்துடன் கர்த்தரை தொழுது கொள்ள வாஞ்சிக்கிறேன்
 
இயேசு ஜெபம் பண்ணுவதற்கு  கற்றுகொடுத்ததுபோல பரமண்டலங்களில் இருக்கும் பிதாவை நோக்கியே  இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் அவரது சித்தம் நிறைவேறவே வாஞ்சிக்கிறேன்.
 
எனக்கு தேவன் என்றால் நியாபகத்துக்கு வருவது தேவனாகிய கர்த்தரே!  
 
இதுவே எனது நிலை.

இதில் தாங்கள் அறிந்துகொண்ட தன் அடிப்படையில் 
தவறு  எதுவும் இருக்கிறதா என்பதை தெரிவிக்கவும்.
 
II கொரிந்தியர் 1:3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
II கொரிந்தியர் 11:31
என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர்

என்று
வசனங்கள் இருப்பதால் இயேசு கிறிஸ்த்துவின் பிதாவாகிய மேலான  தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை நிச்சயம் அறியமுடியும். 
 
அவ்வாறு இருக்க,   

"இயேசுதான் ஒரேதேவன்" அவருக்குமேல்யாரும் கிடையாது அவரை மட்டும்தான் தொழவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள், பிதாவை தொழுபவர்களை கள்ள உபதேசம் என்று காரணமின்றி சீறாமல்  கோபம்/சாபம் இவற்றை தள்ளி வைத்து விட்டு மூலபாஷையை ஆராய்ந்து வசன அடிப்படையில் நியாயமான முறையில் சகோ:அன்பு அவர்களின் கருத்தில் உள்ள தவறுகளை சுட்டவோ அல்லது அவரவர் புரிதல்களில் உள்ள நியாயத்தை முன்வைக்கலாம் அது என்போன்ற சரியான  உண்மையை அறிய விரும்புகிற வர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

அதற்க்கிடையில்:
எபேசியர் 1:17 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் (அவர்கள்)
அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும்  அளிக்கிற ஆவியை உங்களுக்குத(அவர்களுக்கு) தந்தருளவேண்டுமென்று,
 
அவர்களுக்காக  பிரார்த்திப்போம்.

 

-- Edited by SUNDAR on Friday 17th of December 2010 11:27:36 AM

__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

சத்தியம் என்பதும் உண்மை என்பதும் ஒன்று மாத்திரமே இருக்க முடியும்!! எனக்கு ஒரு சத்தியம், வேதத்தின் மூல பாஷையில் ஒரு சத்தியம், தமிழ் மொழிப்பெயர்ப்பை மாத்திரம் வாசிப்போருக்கு ஒரு சத்தியம் என்று இருக்க முடியுமா?

தேவன் யாரை நடத்துவதில்லை? ஆனால் அந்த தேவனை யார் அறிந்திருக்கிறார்கள் என்பதுதான் விஷயம்!! இன்று இத்தனை சபைகள் வைத்திருந்தாலும் எத்தனை பிரிவுகள், ஒரு சபை இன்னோரு சபையோடு ஒத்து போகுதா!? இதற்கு காரணமே தேவனை அறிகிற அறிவு இல்லாமைதான்!! தேவனை திரித்துவம் என்றும் திரியேகத்துவம் என்றும் ஆளாளுக்கு "தேவன் எனக்கு" புரியவைத்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்!! அப்படி என்றால் ஒரு குறிப்பிட்ட பாஷையில் தேவன் வேதத்தை அவரின் வார்த்தைகளை எழுத வைக்க ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா!! தேவன் எனக்கு வெளிப்படுத்துகிறார் என்றும் தேவன் என்னுடன் பேசுகிறார் என்றும் சொல்லுபவர்கள், "வேதத்தின் தேவன்" வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை விட்டு விடுகிறார்கள்!!

சுமார் 1500 வருடங்கள் வேதத்தை மறைத்து, அதைக் கிழித்து எரித்து எப்படி எல்லாமோ அழிக்க பார்த்தார்கள்!! எது வரையில், உலககெங்கும் இந்த வேதம் போனது, ஆனால் கூடவே சென்றது கலப்படமும் சேர்த்துக்கொள்ளப்பட்ட வசனங்களும், மனிதர்களின் கோட்பாடுகளும்!! ஆனாலும் தேவன் தொடர்ந்து சிலரை ஆராய வைத்து தம்மை இன்றும் வெளிப்படுத்துகிறார், குமரன் குகைகளின் கையெழுத்து பிரதிகள் இதற்கு சாட்சி!! இப்படித்தான் தேவன் வெளிப்படுத்துவாரே அன்றி நாம் படித்து அது நமக்கு பிடித்திருந்தால் அது உடனே தேவன் வெளிப்படுத்தினது என்று எண்ணுவது சரி கிடையாது!!

பிற மார்க்கத்தார் வைத்திருக்கும் புத்தகங்களைக்கூட தங்களுக்கு அது வெளிப்படுத்தப்பட்டது என்றுதான் அவர்களும் சொல்லுகிறார்கள்!! அவர்களிலும் ஆராய்ந்து பார்ப்பவர்கள்தான் உண்மையை நோக்கி வருகிறார்கள்!! ஆராயாமல் கிடைத்ததை அப்படியே தேவனின் வெளிப்பாடு என்று சொல்லுவது சரியல்ல!! இன்று ஆராய்வதும் தேடிப்பார்ப்பதும் சுலபமாகி விட்டன!! அப்படி இருந்தும் ஏன் பாரம்பரியங்களை மாத்திரமே நம்பி, இன்னும் அதையே சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்!!

தானியேல் 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

இதுவே தேவன் சொல்லுகிற அந்த காலம்!! ஆராய்ந்து பார்த்து வேதத்தின் தேவனை அறிந்துகொள்வோமே!!

துதி கன‌ம், மகிமை எல்லாம் உமக்கு ஒருவருக்கே செலுத்துகிறோம்! எங்கள் கர்த்தராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவன் உள்ள நல்ல பிதாவே!! என்று மாத்திரம் பாரம்பரியமாக சொல்லிக்கொள்கிறோம், அர்த்தம் தெரியாமலேயே!! வேதத்தை ஆராய விரும்பாதவர்கள் பாரம்பரியத்தையாவது ஆராய்ந்து பார்க்கலாமே!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//ஜெனிப்பித்தல் சம்பந்தமான தங்கள் கருத்தும் என் பார்வைக்கு சரியானதே. ஆனால் நான் அறிந்தவரை ஒரே ஒரு திருத்தம். ஒரு குழந்தை ஜெனிப்பதற்கு தகப்பனுடைய ஏதோ ஒரு கருப்பொருள் தேவை. அதேபோல் தேவனின் வார்த்தை என்னும் கருப்பொருளே இயேசு ஜெனிபிக்கப்பட்டதன் அடிப்படை என்று யோவான் சொல்கிறது.//

அன்பான சகோதரரே! தேவனின் வார்த்தைதான் இயேசு ஜெநிப்பிக்கப்பட்டதற்கான கரு எனத் தாங்கள் கூறுவதில் அர்த்தம் உள்ளது. ஆயினும் தேவன் நினைத்தால் எதையும் எந்த வழியிலும் செய்ய இயலும் என்பதால், இயேசுவை ஜெநிப்பிப்பதற்கு கண்டிப்பாக ஒரு கரு இருக்கத்தான் வேண்டுமென்ற அவசியமில்லை என்றும் நான் கருதுகிறேன்.

ஆகிலும் “தேவனுடைய வார்த்தைதான் இயேசு” என வேதாகமம் கூறுவதுபற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் அதை நான் அப்படியே ஏற்கிறேன். இயேசுவானவர் “தேவனுடைய வார்த்தை” என்பது ஒரு காரணப்பெயர் என்றும் நான் கருதுகிறேன். இதைப் புரிந்துகொள்ள ஆதியாகம சிருஷ்டிப்பின் வரலாறை சற்று உற்று நோக்குங்கள்.

ஆதியில் இது உண்டாகக்கடவது, அது உண்டாகக்கடவது என “வார்த்தைகளில்” தேவன் ஒவ்வொன்றாகச் சொன்னார்; அவர் சொல்லச்சொல்ல ஒவ்வொன்றும் உண்டானது. ஆனால் அவை தானாக உண்டாகவில்லை; அவற்றை உண்டாக்கியது “இயேசுவே” எனப் பின்வரும் வசனம் கூறுகிறது.

கொலோசெயர் 1:16 பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், ... அவரைக் கொண்டும் (இயேசுவைக் கொண்டு) அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டன.

ஆதியில் தேவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையில் கூறப்பட்டதையும் இயேசு அப்படியே செய்துமுடித்தார். எனவே அவர் “தேவனுடைய வார்த்தை” என்பது பொருத்தமான ஒரு காரணப்பெயர் எனச் சொல்லலாமல்லவா?

“இவன் என் வலது கை” எனச் சிலர் சொல்வதை நாம் கேட்பதுண்டு. இப்படி ஒருவர் சொல்வதால், “அவருடைய” வலது கையிலிருந்துதான் “இவர்” தோன்றினார் என நாம் கருதுவதில்லை. மாறாக, “அவருடைய” வலது கை அவருக்குப் பலவிதத்தில் எப்படியெல்லாம் உறுதுணையாக உள்ளதோ அதேவிதமாக “இவரும்” இருப்பார் எந்த அர்த்தத்தில்தான் நாம் எடுப்போம். அதேவிதமாகத்தான், தேவனின் வார்த்தைகளில் வந்ததையெல்லாம் இயேசு செய்துமுடித்ததால் அவர் “தேவனுடைய வார்த்தை” என அழைக்கப்படுவதாக நான் கருதுகிறேன்.

தேவனின் வார்த்தைகளை அப்படியே செய்பவராக மட்டும் இயேசு இருக்கவில்லை; இயேசுவுக்கென்று சுயமாக வார்த்தைகள் இல்லாமல், தேவனுடைய வார்த்தைகளை அப்படியே convey பண்ணுபவராகவும் அவர் இருந்தார். பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

யோவான் 14:10  நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

யோவான் 14:24  என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

யோவான் 7:16 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.

யோவான் 12:49,50 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.

இவ்விதமாக ஆதிமுதல் இயேசுவானவர் தேவனுடைய வார்த்தைகள் சொல்வதை அப்படியே செய்பவராகவும், தேவனுடைய வார்த்தைகளையே “convey" பண்ணுகிறவராகவும் இருப்பதால் அவருக்கு “தேவனுடைய வார்த்தை” என்பது காரணப்பெயரானது என நான் கருதுகிறேன்.

//எனது நிலை என்னவெனில்:

இயேசு தேவத்துவத்துவத்துக்குள் ஒருவர் அல்லது தாங்கள் சொல்வதுபோல் தேவத்துவம் உள்ளவர் என்றும் எடுத்துகொள்ளலாம்

ஆண்டவராகிய இயேசு பிதாவால்ஜெனிப்பிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பபட்டு நமது பாவங்களுக்கு பலியாகி ஜெயம்கொண்டு நம்மை மீட்டதால் அவருக்கு ஸ்தோத்திரம்/கனம்/மகிமை இவற்றைசெலுத்துகிறேன் செலுத்த கடமைபட்டுள்ளேன்.
இதை ஆராதனைஎன்று எடுப்பதா அல்லது தொழுகை என்று எடுப்பதா அல்லது கனம் செலுத்த்துதல் என்று எடுப்பதா என்பது தெரியவில்லை.
//

இயேசுவை நாம் மகிமைப்படுத்துதல் மற்றும் ஸ்தோத்தரித்தல் பற்றி ஒரு தனி பதிவில் விளக்கமாகக் கூறலாம் என நினைக்கிறேன். ஆனால் இயேவை நாம் கனம்பண்ணத்தான் வேண்டும், அதுவும் பிதாவைக் கனம்பண்ணுவதைப்போல் அவரையும் கனம்பண்ணவேண்டும் என இயேசு நேரடியாகக் கூறியுள்ளார் (யோவான் 5:22,23). எனவே அவரை நாம் கனப்படுத்துவதில் தவறில்லை என்பதோடு அது அவசியமுங்கூட.

ஆனால் “ஆராதனை” என்பது சர்வலோகத்திற்கும் ஒரே தேவனாக இருக்கிற யெகோவாவுக்கு மட்டும் செலுத்தவேண்டிய ஒரு சடங்காக பழையஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. எனவே புதியஏற்பாட்டு விசுவாசிகளான நாம் “ஆராதனை” எனும் சொல்லைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதை யெகோவா தேவனுக்கு மட்டுமே பயன்படுத்துவதுதான் “சரி” என நான் கருதுகிறேன்.

புதியஏற்பாட்டு விசுவாசிகளுக்கு, “சடங்கான ஆராதனை” பற்றி எந்த கட்டளையும் கொடுக்கப்படவில்லை. அதைப் பற்றி இயேசுவும் எதுவும் கூறவில்லை, அப்போஸ்தலரும் எதுவும் கூறவில்லை. எனவே “இவருக்கு ஆராதனை, அவருக்கு ஆராதனை” எனச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. ரோமர் 12:1 கூறுகிற “புத்தியுள்ள ஆராதனையைச்” செய்து,  யாக்கோபு 1:27 கூறுகிறபடி “மாசில்லாத சுத்தமான பக்தியுடன்” இருந்தால் போதுமானது.

இல்லையில்லை, “ஆராதனை” எனச் சொல்லி ஆராதனை நடத்தத்தான் வேண்டும், அதுவே எனக்குத் திருப்தியைத் தரும் என நாம் நினைத்தால்: “தேவனுக்கு ஆராதனை, பிதாவுக்கு ஆராதனை, யெகோவாவுக்கு ஆராதனை” எனக் கூறுவதோடு நிறுத்திக்கொள்ளலாமே. இதற்கு மேலாக “இயேசுவுக்கு ஆராதனை” எனச் சொல்வது மத்தேயு 4:10 உள்ளிட்ட பல வசனங்களை மீறுவதாக இருக்குமல்லவா?

“தேவனுக்கு ஆராதனை, பிதாவுக்கு ஆராதனை, யெகோவாவுக்கு ஆராதனை” எனச் சொல்வதால் “திரித்துவவாதிகளின்” எண்ணத்திற்கு பங்கம் உண்டாகப்போவதுமில்லை. ஏனெனில், அவர்கள்தான் “பிதா தான் இயேசு” என நம்புவோராயிற்றே! அவர்கள் நம்பிக்கைப்படி “தேவனுக்கு ஆராதனை, பிதாவுக்கு ஆராதனை, யெகோவாவுக்கு ஆராதனை” எனச் சொல்வது “இயேசுவுக்கு ஆராதனை” எனச் சொல்வதற்கு சமம்தானே?

//அதே நேரம்:
ஆவியோடும் உண்மையோடும் தேவனை தொழுது கொள்ள வாஞ்சிக்கிறேன்
பரிசுத்தம் என்னும் அலங்காரத்துடன் கர்த்தரை தொழுது கொள்ள வாஞ்சிக்கிறேன்

இயேசு ஜெபம் பண்ணுவதற்கு  கற்றுகொடுத்ததுபோல பரமண்டலங்களில் இருக்கும் பிதாவை நோக்கியே இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் அவரது சித்தம் நிறைவேறவே வாஞ்சிக்கிறேன்.

எனக்கு தேவன் என்றால் நியாபகத்துக்கு வருவது தேவனாகிய கர்த்தரே! 

இதுவே எனது நிலை.
//

உங்கள் நிலைதான் எனது நிலையும். குறிப்பாக, “பரிசுத்தம் என்னும் அலங்காரத்துடன் கர்த்தரைத் தொழுதுகொள்ள வாஞ்சிப்பதுதான்” மிகமிக அவசியம்.

இயேசுவானவர் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில், அடிக்கடி தேவனிடம் ஜெபம் செய்ததாகப் பார்க்கிறோம், தேவனின் வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்ததாகப் பார்க்கிறோம். ஆனால் எந்த ஆராதனை முறைமையையும் அவர் செய்ததாக எனக்குத் தெரியவில்லை (யாரேனும் அறிந்தால் சொல்லலாம்).

//அதற்கிடையில்:
எபேசியர் 1:17 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் (அவர்கள்) அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும்  அளிக்கிற ஆவியை உங்களுக்குத் (அவர்களுக்கு) தந்தருளவேண்டுமென்று,

அவர்களுக்காகப் பிரார்த்திப்போம்.
//

சரி சகோதரரே!

இதுவரை என்னொடுகூட இத்தியானத்தில் கலந்துகொண்டு பல வேத சத்தியங்களை வெளிக்கொணர தூண்டிய உங்களுக்கு எனது நன்றி.

ரோமர் 16:27  தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

2 கொரி. 13:14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

தேவனின் வார்த்தையாக கிறிஸ்து இருந்தார், என்றவுடன் தேவன் பேசிய வார்த்தை (சத்தம்) என்று நினைக்க வேண்டாம்!! கிரேக்க பாஷையில் அந்த வார்த்தை லோகோஸ் என்று உள்ளது!!

லோகோஸிற்கு அர்த்தங்கள்:

G3056  logos  log'-os

from G3004;

something said (including the thought); by implication, a topic (subject of discourse), also reasoning (the mental faculty) or motive; by extension, a computation; specially, (with the article in John) the Divine Expression (i.e. Christ).

இந்த அர்த்தங்கள் ஒருவரின் பேச்சை குறிப்பதாக இல்லை, மாறாக லோகோஸ் என்றால் ஒருவரின் வார்த்தைகளை, பேச்சை, எடுத்து சொல்லுபவர்.

To communicate or express the Words of one.

கிறிஸ்து தேவனின் வார்த்தையாக இருந்தார் என்றால், தேவன் மனிதர்களிடம் என்ன பேச நினைத்தாரோ அதை கிறிஸ்து பேசினார்.

இந்த லோகோஸ் என்கிற வார்த்தையிலிருந்து தான் லோகோ (Logo) என்கிற ஆங்கில வார்த்தை வந்தது. இந்த லோகோ ஒரு கம்பெனியின் பகுதியோ, அல்லது அதன் நிறுவனர் பேசும் வார்த்தை அல்லது சத்தமோ கிடையாது; மாறாக அந்த கம்பெனியை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை அல்லது பொருள்!!

கிறிஸ்துவும் அப்படியே தேவன் பேசியதை நமக்குக் கொடுத்தார். ஆகவேதான் அவர் தேவனின் வார்த்தை என்று வேதம் சொல்லுகிறது. மகா பரிசுத்தமும் காணக்கூடாதவருமாக இருப்பவர், மனிதர்களிடம் வந்து பேசவேண்டிய அவசியம்தான் என்ன! ஆகவே அவர் கிறிஸ்துவைப் படைத்தார், சிருஷ்ட்டித்தார் அல்லது ஜெனிப்பித்தார்!! ஜெனிப்பது என்பது உறவுமுறையாக ஏற்றுக்கொள்ளுதல்!! இங்கே தந்தை மகன் என்கிற உறவு!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

“வார்த்தை” எனும் தமிழ் பதத்திற்கு இணையான மூலபாஷை வார்த்தையான logos என்பதன் அர்த்தங்களை எடுத்துரைத்த சகோ.பெரியன்ஸ்-க்கு நன்றி.

அந்த அர்த்தங்களின்படி பார்த்தால், கிறிஸ்துவானவர் தேவனின் எண்ணம் மற்றும் வார்த்தைகளை மனிதர்களுக்கு convey செய்பவர் அல்லது வெளிப்படுத்துகிறவர் என்ற அடிப்படையில்தான் அவருக்கு “தேவனுடைய வார்த்தை” எனும் காரணப்பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அறிகிறோம்.

bereans wrote:
//ஆகவே அவர் கிறிஸ்துவைப் படைத்தார், சிருஷ்ட்டித்தார் அல்லது ஜெனிப்பித்தார்!! ஜெனிப்பது என்பது உறவுமுறையாக ஏற்றுக்கொள்ளுதல்!! இங்கே தந்தை மகன் என்கிற உறவு!//

சகோ.பெரியன்ஸ் அவர்களே! வேதம் சொல்கிற பிரகாரமாக தேவன் கிறிஸ்துவை “ஜெநிப்பித்தார்” என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோமே!

கிறிஸ்துவை சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர் என கொலோசெயர் 1:15 சொல்கிறது. அதாவது சர்வசிருஷ்டிகளில் சேர்க்கப்படாமல், அவற்றிற்கு முன்னதாகவே “ஜெநிப்பிக்கப்பட்டார்”  என்ற கருத்தைச் சொல்கிறது. எனவே கிறிஸ்துவைப் படைத்தார் அல்லது சிருஷ்டித்தார் எனச் சொல்வதைவிட “ஜெநிப்பித்தார்” எனச் சொல்வதே பொருத்தமானது என நான் கருதுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

சகோ: அன்பு  அவர்களே எனது புரிதலில் சிறு மாறுதல்களை செய்து அதை சகோ. பெரேயன்ஸ் கருத்துடன் இணைத்து பார்க்கும்போது அது ஒரு தவறான கொள்கைக்கு கொண்டு செல்வதுபோல் தோன்றுகிறது. இங்கு இடறுதலுக்கு நான் பொறுப்பாகி விடக்கூடாது. எனவே மீண்டும் எனது புரிதலை  விளக்க விரும்புகிறேன்.
அன்பு wrotes
/////தேவனின் வார்த்தைதான் இயேசு ஜெநிப்பிக்கப்பட்டதற்கான கரு எனத் தாங்கள் கூறுவதில் அர்த்தம் உள்ளது. ஆயினும் தேவன் நினைத்தால் எதையும் எந்த வழியிலும் செய்ய இயலும் என்பதால், இயேசுவை ஜெநிப்பிப்பதற்கு கண்டிப்பாக ஒரு கரு இருக்கத்தான் வேண்டுமென்ற அவசியமில்லை என்றும் நான் கருதுகிறேன்.////
தாங்கள் தேவனைப் பற்றி சொல்லுவது முற்றிலும் சரியே! அவர் நினைத்தால் எந்த ஒரு கருவும் இல்லாமல் ஒன்றை உருவாக்கவோ ஜெனிப்பிக்கவோ முடியும்தான்! அப்படித்தான் தேவன் ஒன்றும் இல்லாமையில் இருந்து இந்த உலகையும் தேவர்களையும்/தூதர்களையும் கூட உருவாக்கினார். ஆனால் இயேசுவின் ஜெனிப்பித்தல் விஷயத்தில் அவ்வாறு நடக்கவில்லை எனவேதான் மற்ற எல்லா படைப்புகளிலிருந்தும் அவர் வேறுபடுவதோடு தேவன் என்ற ஸ்தானத்தையும் விசேஷமாக எனது நேசகுமாரன் என்ற ஸ்தானத்தையும் கன மகிமை ஸ்தோத்திரம் பெரும் நிலையையும் அவர் பெறுகிறார்.

"பெரிய தேவனால்" பெற்றெடுக்கப்பட்ட "சின்ன  தேவன்" இயேசு என்பதோ  தேவனின் வார்த்தைகளை அப்படியே நிறைவேற்ற ஜெனிப்பிக்கபட்டவர்
இயேசு என்பதோ சரியான கருத்து அல்ல என்றே நான் கருதுகிறேன்! தேவனின் வார்த்தையே இயேசுவாக ஜெனிப்பிக்கப்பட்டு குமாரனானது! எனவே  இயேசு திட்டமாக "தேவனின் வார்த்தை" என்னும் கருப்பொருளால் உண்டானவர். எனவேதான் யோவான்  "அந்த வார்த்தை மாம்சமானது" என்று எழுதுகிறார். அதாவது எந்த ஒரு வார்த்தை என்னும்  வல்லமையின் மூலமாக தேவன் ஒன்றுமில்லாமையில் இருந்து எல்லாவற்றையும் படைத்தாரோ அந்த வார்த்தையே மரியாள் வயிற்றில் மாம்சமானது.  இதற்கு ஒரு முக்கிய  காரணம் உண்டு. அதை அறியவேண்டுமானால் பலி செலுத்துதல் ஏன் உண்டானது என்பதை அறியவேண்டும்

இப்பொழுது இங்கு "வார்த்தை" என்றால் என்ன என்பதையும் நாம் சற்று விளக்கமாக பார்க்கவேண்டும். அதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன்
.
இப்பொழுது ஒரு பிரதமமந்திரியை எடுத்துகொள்ளுவோம். அவர் தனது உதவியாளரை பார்த்து "நீ இந்த லெட்டரை டைப் செய்" என்று கூறுகிறார் என்று வைத்து கொள்வோம். உடனே அந்த உதவியாளர் அந்த லெட்டரை டைப் செய்ய ஆரம்பிக்கிறார்.

ஆனால்

அதே உதவியாளரை பார்த்து நான் "என்னுடைய  லெட்டரையும் டைப் செய்" என்று கேட்டால் அவர் செய்து தரமாட்டார். இங்கு நான் சொல்வதும் பிரதமர் சொல்வதும் ஒரே வார்த்தைதான்.ஆனால் எனது வார்த்தைக்கு பவர் இல்லை, பிரதமர் வார்த்தைக்குப் பவர் இருக்கிறது. ஆகினும் இரண்டும் வார்த்தைதான்.
அதுபோல் தேவனின் வார்த்தை வல்லமை நிறைந்தது. அவர் சொல்ல அது அப்படியே ஆகும்! அவர் கட்டளையிட அது அப்படியே நிற்கும். அந்த "வார்த்தை என்னும் வல்லமை அல்லது பவர்" இப்பொழுது மரியாளின் வயிற்றில் மாம்சமாகி விட்டது. எனவேதான் இயேசுவுக்கு இந்த உலகில் உள்ள அனைத்து படைப்புகளின்மேலும் அதிகாரம் இருந்தது. வாய் வார்த்தைகளாலேயே எல்லாவற்றையும் செய்ய முடிந்தது.
இந்த கருத்தின் அடிப்படையில் பார்த்தால்:

இயேசு = தேவன் என்ற கருத்து சரியாகவரும். அதே நேரத்தில் ஒரே தேவன்தான் என்ற கருத்தும்  மாறாது. தேவனிடம் இன்னொரு பலியை செலுத்த இன்னொரு வல்லமை நிறைந்த  வார்த்தை இல்லை. எனவே "வேறொரு பலி இல்லை". இயேசுவை அசட்டைசெய்தவர்கள் தண்டணையடைய நேரிடும் என்ற கருத்தும் சரியானதாகும்.
தேவன் வார்த்தையை மாம்சமாக்கிவிட்டார் ,எனவே அவர் ஊமையா? அவருக்குப் பேசமுடியாதா? என்று கேட்கலாம். இங்கு மீண்டும் நாம் பிரதமர் உவமையை பார்க்கவேண்டும். ஒருவேளை அதேபிரதமருக்கு பதவிபோய்விட்டது என்றால்
பின்னும் அவர் "தனது உதவியாளரை பார்த்து "இந்த லெட்டரை டைப் செய்" என்று சொல்ல முடியும். ஆனால் அது நிறைவேறாது. எனவேதான் தேவன் எப்பொழுது தனது வார்த்தையை பலியாக்க தீர்மானித்தாரோ அதன் பின்னர் வேதாகமத்தில் எங்குமே அவர் புதியதாக இன்னொன்றை சிருஷ்டிக்கவில்லை.
தேவன் என்பவர் இயேசுவோடு சேரும்போதுதான்  தேவத்துவம் முழுமைபெரும்! எனவே இயேசுவைத் தேவனாக ஏற்காமல் யகோவா தேவனைமட்டுமே தேவனாகக் கொள்வது ஒருதவறானநிலை. அது முழுமையற்றஒரு நிலையாகிறது.
ஆகினும் தேவனிடம் இந்தஒரேஒரு வல்லமை மட்டும்தான் இருந்தததா? இயேசுவாகிய வார்த்தை பலியாக தீர்மானித்த பின் தேவன்  வல்லமயற்றவராகிவிட்டாரா? என்பதை ஆராய நாம் பரிசுத்த ஆவியானவர் யார்?  பிதா யார்? அவர்கள் எப்படி ஒருவர் என்பதை ஆராய வேண்டும்
அதன்முன் இயேசுவை பற்றிய  இந்த கருத்தில் தாங்கள்  ஏற்க முடியாத கருத்து என்னவென்பதை வசன அடிப்படையில் சுட்டுங்கள். அது பற்றி ஆராயலாம்.


-- Edited by SUNDAR on Saturday 18th of December 2010 01:02:48 PM

__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard