எனக்கு இருக்கும் ஒரு முக்கிய சந்தேகத்தை இங்கு தங்கள் விளக்கத்துக்காக முன்வைக்கிறேன். வசனத்தின் அடிப்படையில் ஆழமான விளக்கங்களை தரும் தங்களின் விளக்கம் இந்த கேள்விக்கும் எனக்கு தேவைப்படுகிறது.
எசேக்கியல் புத்தகம் இவ்வாறு சொல்கிறது:
14:13 மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன். 14அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட காலம் இஸ்ரவேலர் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த காலம். அக்காலத்த்துகு அனேகநாட்களுக்கு முன்னரே "நோவா. யோபு" இவர்கள் இருவரும் பிறந்து வாழ்ந்து மரித்து போனவர்கள்.
இந்நிலையில் கர்த்தர் அழிக்கபோகும் தேசத்தின் நடுவில் அவர்கள் இருந்தால் என்று தீர்க்கதரிசி எவ்வாறு கூற முடியும்? இதற்க்கு வசன அடிப்படையில் விளக்கம் என்ன?
"யோபு, நோவா போன்றவர்கள்" என்று வேதம் குறிப்பிடாமல் நோவா யோபு என்றே குறிப்பிட்டுள்ளதை கருத்தில்கொண்டு பதில் தருமாறு வேண்டுகிறேன்!
-- Edited by SUNDAR on Wednesday 29th of December 2010 12:49:45 PM
மறுபிறவி அல்லது மறுஜென்மம் பற்றிய நம்பிக்கை உங்கள் மனதின் ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதால், உங்கள் நம்பிக்கையையொட்டி வேதாகமத்தில் காணப்படும் வசனங்களெல்லாம் மறுபிறவி அல்லது மறுஜென்மம் உண்டு எனும் கருத்தை ஆதரிப்பதாகக் கருதுகிறீர்கள்.
நீங்கள் குறிப்பிட்ட எசேக்கியேல் 14:14 வசனத்தின் கருத்து மிகவும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.
நோவாவும், யோபுவும், தானியேலும் நிச்சயமாக மீண்டும் பிறந்து வரப்போவதில்லை. ஆனால் அவர்களின் நடக்கைகளின்படியே நடக்கக்கூடியவர்கள் பிறப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு. அதைத்தான் எசே. 14:14 வசனம் கூறுகிறது.
இக்கருத்து உங்களுக்குப் புரியாமலில்லை. எனவேதான் “யோபு, நோவா போன்றவர்கள்” என்ற சொற்றொடரை நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். ஆனாலும், மறுபிறவி பற்றிய நம்பிக்கை உங்கள் மனதில் இருப்பதால், மரித்துப் போன யோபுவும் நோவாவும் மறுபடி பிறக்க வாய்ப்புள்ளது எனும் கருத்தையே எசே. 14:14 சொல்வதாக எண்ணுகிறீர்கள். உங்கள் எண்ணம் நிச்சயமாகத் தவறே.
உங்களைப் போலவே எண்ணமுடைய ஜனங்கள் வேதாகம காலத்திலும் குறிப்பாக இயேசுவின் நாட்களிலும் இருந்தனர். பின்வரும் வசனம் இதற்கு ஆதாரமாயுள்ளது.
மத்தேயு 16:14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
அன்றைய ஜனங்களில் சிலர் யோவான்ஸ்நானகன்தான் இயேசு எனக் கருதினார்கள்; சிலர் எலியாதான் இயேசு எனக் கருதினார்கள்; சிலர் எரேமியாதான் இயேசு எனக் கருதினார்கள். அதாவது யோவான் அல்லது எலியா அல்லது எரேமியாதான் மறுபிறவி எடுத்து இயேசுவாக வந்துள்ளதாக அவர்கள் கருதினர். ஆனால் அவர்கள் நினைத்தபடி தாம் யோவான்ஸ்நானகனோ, அல்லது எலியாவோ, அல்லது எரேமியாவோ அல்ல என்பதை இயேசு தெளிவுபடுத்திவிட்டார்.
ஆகிலும் யோவான்ஸ்நானகனைக் குறித்து கூறுகையில் இயேசு பின்வருமாறு சொன்னார்.
மத்தேயு 11:14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
மத்தேயு 17:11-13 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
எலியாதான் யோவான்ஸ்நானகன் என இயேசு சொல்வதால், அவர் மறுபிறவி கோட்பாட்டை ஆதரிக்கிறாரோ என நாம் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இயேசு சொன்னது வேறு அர்த்தத்தில் என்பதை பின்வரும் வசனம் தெளிவாகக் கூறுகிறது.
எலியாவின் ஆவி யோவான்ஸ்நானகனிடம் இருந்ததை வைத்துதான், யோவான்ஸ்நானகனை எலியா என இயேசு குறிப்பிட்டார். “எலியாவின் ஆவி” என்றால் என்ன? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
2 ராஜா. 2:9,10 அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான். அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான்.
2 ராஜா. 2:15 எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, “எலியாவின் ஆவி” எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி: ....
எலிசா கேட்டுக்கொண்டபடி “எலியாவின் ஆவி” எலிசாவிடம் இறங்கினது மெய்தான். ஆனால் இதைவைத்து எலியாவின் மறுபிறவிதான் எலிசா எனக் கூறமுடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில் எலியா உயிரோடு இருக்கும்போதே எலியாவும் இருந்தார். அதாவது எலியாவும் எலிசாவும் நிச்சயமாக வேறுவேறாகத்தான் இருந்தனர். ஆனால் எலியாவின் ஆவி மட்டும் எலிசாவிடம் இறங்கியதாக வேதாகமம் கூறுகிறது.
“எலியாவின் ஆவி” என்றால் “எலியாவின் சிந்தை, பலம், வல்லமை” எனக் கூறலாம். எலியாவிடம் எலிசா கேட்டது: எலியாவிடத்திலுள்ள ஆவியின் இரட்டிப்பான வரம். அதாவது எலியா எத்தனை வல்லமையாய்/வைராக்கியமாய் கர்த்தருடைய பணியைச் செய்தாரோ அதைவிட 2 மடங்கு வல்லமையுடனும் வைராக்கியத்துடனும் தான் கர்த்தருடைய பணியைச் செய்யவேண்டும் என்பதுதான் எலிசாவின் விருப்பம். “எலியாவின் ஆவி” என்றதும் எலியாவிடமிருந்து பிரிந்து சென்ற அதே ஆவி என நாம் நினைத்தால், நாம் நினைப்பது தவறே.
ஒரு மனிதனிடமிருந்து பிரிகிற ஆவி, அந்த ஆவியைத் தந்த தேவனிடமே சென்றடையும் என பிரசங்கி 12:7 கூறுகிறது. எனவே ஒருவனுடைய ஆவி மற்றொருவனிடம் சென்று அவன் மறுபிறவி எடுப்பது அல்லது மறுஜென்மம் எடுப்பது என்பது வேதாகமத்தில் இல்லாத ஒன்று.
ஒருவனுடைய ஆவி மற்றொருவனிடம் செல்கிறதென்றால்: இருவரும் ஒரே சிந்தை, ஒரேவித வல்லமை உடையவர்களாக இருக்கின்றனர் என்பதே பொருளாகும்.
எலியாவின் ஆவி எலிசாவிடம் இரட்டிபாக இறங்கியதென்றால்: எலியாவிடம் இருந்த ஆவிக்குரிய வல்லமை, சிந்தை யாவும் எலிசாவிடம் இரட்டிப்பாக உண்டானது என்பதே பொருள். இதேவிதமாகத்தான் யோவான்ஸ்நானகனும் “எலியாவின் ஆவியை” உடையவனாக இருந்தார். அதனடிப்படையில்தான் யோவான்ஸ்நானகனை எலியா என இயேசு கூறினார். ஆனால், தான் எலியா அல்ல என்பதை (அதாவது தான் எலியாவின் மறுபிறவி அல்ல என்பதை) பின்வரும் வசனத்தில் யோவான்ஸ்நானகனே தெளிவாகக் கூறிவிட்டார். யோவான் 1:21 அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
எப்படி “எலியாவின் ஆவி” எலிசாவிடம் இருந்ததோ, எப்படி “எலியாவின் ஆவி” யோவானிடம் இருந்ததோ அதேவிதமாக, “யோபுவின், நோவாவின், தானியேலின் ஆவியும்” சிலரிடம் இருக்கக்கூடும். அதாவது “யோபு, நோவா, தானியேலைப் போன்ற” சிந்தையுடைய நீதிமான்களாக பலர் இருக்கக்கூடும். அப்படி எத்தனைபேர் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியால் தங்களை மட்டுமே தப்புவிக்க முடியுமேயன்றி மற்ற எவரையும் தப்புவிக்க முடியாது என்பதையே எசேக்கியேல் 14-ம் அதிகாரம் கூறுகிறது.
நோவா, யோபு, தானியேல் மாத்திரம் அல்ல, ஆதாம் தொடங்கி அனைவரும் மீண்டும் வருவார்கள்!! ஆனல் அதற்குப் பெயர் மறுபிறவி கிடையாது, அதற்குப் பெயர் உயிர்த்தெழுதல்!!
இது தானே வேதத்தில் காணும் மாபெறும் நற்செய்தி!!
"ஆதாமிற்குள் எல்லோரும் மரிப்பது போல் கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்த்தெழுவார்கள்"
அன்பு அவர்களே,
ஆவியை குறித்ததான தங்களின் விளக்கம், அபாரம்!! எலியாவின் ஆவி எப்படி எலியா கொண்டிருக்கும், சிந்தை, வல்லமை, பலம் போன்றவைகளோ, அப்படியேதான் வேதத்திலிருக்கும் பரிசுத்த ஆவி!! பரிசுத்தமான தேவனின் சிந்தை வல்லமை பலம் போன்ற தன்மைகளே அன்றி வேறு ஒன்றும் இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17