நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வீறுநடை போடும் திரித்துவக் குழப்பம்


Militant

Status: Offline
Posts: 830
Date:
வீறுநடை போடும் திரித்துவக் குழப்பம்
Permalink  
 


சில நாட்களுக்கு முன்னர் இத்தளத்தின் ஒரு திரியில் நான் பின்வருமாறு கூறியது தள சகோதரர்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்.

//திரித்துவம் திரித்துவம் என வாய்கிழியப் பேசும் அனைவருக்கும் ஓர் அறைகூவல் விடுக்கிறேன். உங்கள் திரித்துவத்தில் மெய்யாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், திரித்துவக் கொள்கைகள் என்னென்ன என்பதை தகுந்த வசன ஆதாரத்துடன் விபரமாக எழுதி எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும்படி கேட்கிறேன். பிறரோடு கலந்தாலோசிக்காமல் திரித்துவம் பற்றி நீங்கள் அறிந்ததை அப்படியே எழுதி அனுப்பும்படி கேட்கிறேன். அதன்பின் உங்கள் கொள்கை விபரீதங்கள் என்னென்ன என்பதை வசனஆதாரத்துடன் நான் வெளிப்படுத்திக் காட்டுகிறேன்.//

இந்த அறைகூவலை நேரடியாக வசனஆதாரம் மூலம் சந்திக்க முடியாத தமிழ் கிறிஸ்தவ தளத்தின் திரித்துவ நம்பிக்கையாளர்கள் மற்றும் யௌவன தள நிர்வாகி ஆகியோர், தங்கள் குழப்பங்களை தங்கள் இணையதளங்களில் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் குழப்பங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்:

யௌவன ஜன தள நிர்வாகி சில்சாம் தனது தளத்தின் ஒரு திரியில் (http://www.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=40179640) கூறியது:
//அறைகூவல் என்றால் என்ன‌.? அறையிலிருந்து கூவிக் கொண்டிருப்பது அறைகூவல் எனப்படும்; நைனா, இங்கே யாரும் ஒருபோதும் திரித்துவம் என்ற வார்த்தையை எமது உபதேசத்துக்கு ஆதாரமாகப் பயன்படுத்தவே இல்லை;//

சில்சாமின் “அறைகூவல் விளக்கத்தின்படி” நான் எனது கணினி அறையிலிருந்து கூவின செய்தியை சில்சாமின் கணினி அறை வரை எட்டச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.

திரித்துவத்தை தனது உபதேச ஆதாரமாக தனது தளத்தில் பயன்படுத்தாத சில்சாமின் அறிவுடைமையைப் பாராட்டலாம் என நான் எண்ணி சற்று நேரத்திற்குள்ளாக, தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு திரியில் (http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=28&topic=2030&Itemid=287) சில்சாம் இப்படிக் கூறியுள்ளார்:
//இந்த திரியில் தரப்பட்டிருக்கும் தொடுப்புக்குச் சென்று கவனித்தால் திரித்துவ சத்தியத்துக்கு அற்புதமான ஒரு விளக்கத்தை புதிய கோணத்தில் செய்தியாளர் தருகிறார்; இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; காலங்காலமாக சந்திரக் கடவுளான அல்லாவையும் அவரது தூதராகத் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்ட முகமதுவின் குரானையும் ஓதி தொழுதவர்கள்; அவர்களை விட திரித்துவத்தை சரியாக உணர்ந்தோர் யார் இருக்கமுடியும்..? எனக்கு சமயம் கிடைக்குமானால் அந்த காணொளிப் படத்தின் விவரங்களை எழுத்து வடிவில் கொண்டு தருகிறேன்.//

மாத்திரமல்ல, சில்சாம் தனது தளத்தின் மற்றொரு திரியில் (http://www.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=40541149)இவ்வாறு கூறியுள்ளார்:
//

திரித்துவம் என்பதே வேதத்தில் இல்லை..!?
Printer Friendly


trinity-godhood.giftrinity.jpg

திரித்துவம் சம்பந்தமான போதனையை எழுத்துக்களால் விவரிக்க ஒருவராலும் கூடாது, அது உணர்வு பூர்வமானது என்று சொன்னாலும் நம்முடைய எதிரிகள் அதனை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து புழுதி கிளப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்; சரி,நாமும் முயற்சிப்போமே என்று களத்தில் இறங்கியுள்ளோம்; மேற்கண்ட விளக்க சித்திரம் ஒரு துருபதேசத் தளத்திலிருந்து எடுத்ததாகும்; "திரித்துவம் என்பதே வேதத்தில் இல்லை திரியேக தேவன் என்பதே கட்டுக்கதை" என்பார், ஏன் இதுபோன்றதொரு விளக்கச் சித்திரத்தைப் பதித்தார்களோ அறியோம்; ஆனாலும் நம்முடைய தள நண்பர்கள் இந்த விளக்க சித்திரத்தைக் குறித்த தங்கள் கருத்தை முன் வைத்தால் நாமும் ஆரோக்கியமான விவாதத்தின் மூலம் சத்தியத்தை அறியும் வாய்ப்பு கிட்டும்.

ஒரு சிறு திருத்தம்:
மேற்காணும் விளக்க சித்திரங்களில் ஒன்று திரித்துவத்தை மறுக்கும் எதிரிகளால் பயன்படுத்தப்பட்டாலும் அதனைத் தொடரும் செய்தியானது எதிரானதாகவே இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்;அதன் தொடுப்பைத் தொடருவது பெரிய விஷயமல்ல;அதனைத் தருவதிலும் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை;யாராவது இதில் ஆர்வம் காட்டினால் அதனை இணைக்க ஆயத்தமாக இருக்கிறேன்.
//

தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு திரியில் (http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=27&topic=713&Itemid=287) pgolda எழுதியது:
//ஒரே தேவன் மூவராகவும் இருப்பது நம் சிறு மூளையால் முழுவதும் புரிந்து கொள்ள முடியாதது.//

இப்படிச் சொன்னவர் தனது சிறு மூளையால் புரிந்துகொண்டது:
//பிதா சேரக் கூடாத ஒளியில் எப்போதும் பரலோகில் வாசம் செய்கிறார். (ஆனால் யோவான் 14:23-ம் வசனமோ இயேசுவும் பிதாவும் மனிதரான நம்மிடமும் வாசம் பண்ணுவார்கள் எனச் சொல்கிறது)
இயேசு உலகிற்கு ஒளியாக வந்தார்.
பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒளியாய் மாற்றுகிறார்.
//

ஒரே தேவன் மூவராக இருப்பதாகக் கூறுகிற pgolda, மூவரும் ஒன்றில்லை என அற்புதம் கூறியுள்ளதை பாராட்டவும் செய்கிறார்.

pgolda wrote in the Thread http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=27&topic=713&Itemid=287:
//அற்புதம் அவர்களின் விளக்கம் அருமை!//

arputham wrote in the same Thread:
//பிதாவாகிய தேவன், குமாரனாகிய கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர் இவர்கள் மூவரும் ஒன்றாயிருக்கின்றனர், ஆனால் ஒருவர் அல்ல.//

அற்புதம் சொன்னதாக ஒரு திரியில் (http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2018&Itemid=287&limitstart=40) ராஜ்குமார் சொன்னது:
//திரித்துவம் என்று பைபிளில் சொல்லப்படவில்லை; அப்படி சொல்லப்படாதை நாம் நம்பவேண்டுவதில்லை, ஆனால் பிதாவாகிய தெய்வம் உண்டு, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் உண்டு, பரிசுத்த ஆவியானவரும் உண்டு, ஆனால் மூவரும் ஒன்று இல்லை, உதாரணமாக நீங்களும் நானும் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தில் ஒன்று ஆனால் நாம் இருவரும் ஒருவரா அதுபோலத்தான் என்று விளக்கினார், திருப்தியானபதிலாக இருந்தது.//

arputham wrote in http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=27&topic=713&Itemid=287:
//இன்று கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் திரித்துவ உபதேசத்தை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் திரித்துவ உபதேசத்தை சற்று விளக்குங்கள் என்று சொன்னால் காததூரம் ஓடிப் போவார்கள். மிகப் பெரிய ஊழியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அசெம்ப்ளிஸ் ஆஃப் காட் சபை தலைவர் பாஸ்டர் ராஜாமணி அவர்களே கூட திரித்துவம் குறித்து அவர்களுடைய வேதாகமக் கல்லூரிக்கு எழுதிய புத்தகத்தில் , “திரித்துவத்தின் அமைப்பை நாம் ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்ள முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.//

திரித்துவத்தை நம்புவோரிடம் திரித்துவக் குழப்பம் இருப்பதாக சொல்கிற அற்புதத்தின் கருத்துக்களை “திரித்துவத்தை நம்புவோர்” பாராட்டுகின்றனர்.

அற்புதமும் மைகோவையும் திரித்துவ விஷயத்தில் முரண்படுவதாக சில்சாம் கூறுகிறார் (http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=27&topic=713&Itemid=287):
//// ஒரே தேவனின் மூன்று வெளிப்பாடுகள் என்பதும் தவறான் வாதம் ஆகும். ஏனெனில் பல இடங்களில் ஒரே சமயத்தில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் செயல்களைக் காண்கிறோம். இதற்கு மிகவும் அழகான ஒரு உதாரணம்: இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் (லூக்கா 3:21,22). //

நண்பர் அற்புதம் இதனைச் சற்று விளக்கவேண்டும்;ஏனெனில் நண்பர் மைகோவை அவர்கள் இதற்கு நேரெதிரான விளக்கத்தைக் கொடுத்திருப்பது போலத் தோன்றுகிறது.
//

இப்படி இவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்தை வைத்திருப்பதால்தான், இவர்கள் ஒருவரையொருவர் கலந்தாலோசிக்காமல் திரித்துவம் குறித்த தங்கள் கருத்தைக் கூறும்படி கேட்டிருந்தேன். நான் கேட்டுக்கொண்டபடி அவர்கள் செய்தால் அவர்களிடையே எத்தனை குழப்பங்கள் இருக்கின்றன என்பதை என்னால் எடுத்துக்காட்ட முடியும்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தமிழ் கிறிஸ்தவ தளத்தில் இவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் discussion செய்யட்டும். ஆனாலும் திரித்துவத்தின் தெளிவான ஒருமித்த கொள்கையை இவர்கள் ஒருபோதும் எட்டஇயலாது என்பது நிச்சயம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

பிற மார்க்கங்களில் உள்ள திரித்துவ தேவர்கள் கோட்பாட்டிலிருந்து தழுவப்பட்டு கிறிஸ்துவம் என்கிற மார்கத்தில் வழி தப்பி வந்த அல்லது சேர்த்துக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான கோட்பாடு தேவதூஷனமே அன்றி வேறு ஒன்றும் இல்லை!! சரி திரித்துவம் சொல்லுபவர்களாவது ஒரே கருத்தை சொல்லுவார்கள் என்றால் இல்லை,

ஒருவர் ஒரே தேவன் மூன்றாக இருக்கிறார், மற்றொருவர் இல்லை இல்லை, மூன்று பேர் ஒருவராக இருக்கிறார்கள், இன்னொருவர் மூன்று தனி நபர்கள் ஒரே வல்லமையுடன் மூன்றாக செயல்ப்படுகிறார்கள் என்பார்கள்!! மொத்தத்தில் தழுவப்பட்டு அல்லது பிரியப்பட்டு இந்த கோட்பாட்டை கிறிஸ்தவத்திற்குள் வைத்திருப்பதினால் குழப்பத்தின் உச்சியில் இருக்கும் இவர்கள் துருபதேசம் தந்துகொண்டு, தாங்கள் இருக்கும் நிலையை அறியாதவர்களாக அடுத்தவர்கள் மேல் கல்லை எறிந்துகொண்டு இருக்கிறார்கள்!!

சில்சாமிற்கு திரித்துவம் என்பது "உணர்வு பூர்வமான" விசுவாசமாம்!! இதற்கு எழுத்து தேவை இல்லையாம்!! அரைவேக்காடான சிலர் மதம் மாறி வந்து திரித்துவத்தை வீடியோ போட்டு காண்பித்தால் அருமையான விளக்கமாம்!! திரித்துவத்தை நான் பேசுவதில்லை என்பாராம், பிறகு இன்னொரு பதிவு கொடுத்து நான் இப்படி எங்கேயும் சொன்னதே கிடையாது, என் எதிரிகள் (அவருக்கு யார்தான் எதிரி இல்லை என்று தெரியவில்லை) செய்த சூழ்ச்சி இது, என்று தொடங்கிவிடுவார்!! தேவனை அறிகிற அறிவில் வளராதவர்கள் அவர்கள், ஆகவே குழப்பத்தின் உச்சியில் இருகிறார்கள்,

2 தெச 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

இவர்களை குறித்துதான் இந்த வசனம்!! இல்லாத ஒன்றை பாரம்பரியமாக விசுவசிக்கிறவர்களுக்கு தேவனே வஞ்சகத்தை அனுப்புவார், அவர்கள் குழம்பி நிற்பவர்கள், ஒருவர் கருத்துக்கு இன்னொருவர் (அது என்னவாக இருந்தாலும் சரி, சொந்த அறிவை பயன்படுத்தாமல், இன்னார் எது எழுதினாலும் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து) ஆமாம் போட்டே காலம் தள்ளுபவர்களின் கூட்டம் அவர்கள், நேர்மையான விவாதம் செய்ய தேரியாதவர்கள், வசனத்தை திரித்து பேசுபவர்கள் அல்லது!! பெரிய தமாசே மைகோவை அவர்கள் எழுதியதுதான்,

த‌மிழ் கிறிஸ்த‌வ‌ த‌ள‌த்தில் மைகோவை எழுதிய‌து: (http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2018&Itemid=287)
//உதாரணம் திரித்துவம் போன்றவை. திரித்துவம் பொருத்தவரை தெளிவாக அறியாவிட்டாலும் நண்பர்கள் அந்த விசுவாசத்தில் உறுதியாகவே உள்ளனர்.//

அதாவது ஒரு விஷயம் தெளிவாக அறியாமல் ஏற்றுக்கொள்வதுதான் அவர்களின் பார்வையில் விசுவாசம்!! இவர்கள் கிறிஸ்தவர்களா, அல்லது கிறிஸ்துவம் என்கிற ஒரு மார்க்கத்தின் பகுதிகளா!?? இவர்களின் இப்படிப்பட்ட விசுவாசத்தைக்கொண்டுதான் இவர் 20 வருடங்களாக பலரை வெட்கப்படுத்தியிருக்கிறாராம்!! எனக்கு தெரியும் இவர் வெட்கப்படுத்தும் தந்திரம்!! விவாதத்திற்கு வந்தவர்களிடம் அநாகரீகமாக அவர்களை கொச்சைப்படுத்தி தனிப்பட்ட விமர்சனங்களினால் இவரும் இவரின் அணியினரான உடன் திரித்துவவாதிகளும் பேசி வருவ‌தால் நிச்சயமாக யாருமே வெட்கப்படத்தான் செய்வார்காள்!! இதைத்தான் இவர்கள் வெட்கப்படுத்தினோம் என்று சொல்லுகிறார்களே தவிர‌ விஷயம் தெரிந்து பேசுபவர்கள் அல்ல இவர்கள்!!

த‌ள‌ நிர்வாகி அன்பு எழுதிய‌து:
//இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தமிழ் கிறிஸ்தவ தளத்தில் இவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் discussion செய்யட்டும். ஆனாலும் திரித்துவத்தின் தெளிவான ஒருமித்த கொள்கையை இவர்கள் ஒருபோதும் எட்டஇயலாது என்பது நிச்சயம்.//

இல்லாத‌ ஒன்றை எப்ப‌டி முய‌ன்றாலும் எட்ட‌ முடியாதே!! 30% ச‌த்திய‌த்தைக்கூட தாங்க‌முடியாம‌ல் இப்ப‌வே புல‌ம்ப‌ல் ஆரம்ப‌மாகி விட்ட‌தே!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard