இக்கேள்விக்குப் பதிலாக வேதாகமத்தில் காணப்படும் வசனங்கள்:
யாத்திராகமம் 34:7 குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்.
எசேக்கியேல் 18:1-4,20 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன? இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
இம்மாதிரி எதிரெதிர் கருத்தாகத் தோன்றுகிற பல வசனங்கள் வேதாகமத்தில் உள்ளன. இம்மாதிரி கருத்துக்களில் எதை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் எனும் கேள்விக்குப் பதிலாக, இறைவன் தளத்தின் ஒரு திரியில் சகோ.சுந்தர் அவர்கள் இப்படிக் கூறியுள்ளார்.
//இதுபோன்று வேதவசனமானது நேர் எதிர்புறமாக இரண்டு புறமும் பேசும்போது, அதன் உண்மைத் தன்மை என்னவென்பதை தேவனின் பாதத்தில் அமர்ந்து ஜெபித்து நிதானித்து அறிவதையே நான் வெளிப்பாடு என்று சொல்கிறேன்.
அவ்வாறு தேவனிடமிருந்து பெற்ற தெளிவு இல்லையெனில் நீங்கள் ஒரு வசனத்தைப் பிடித்துக்கொண்டு இதுதான் உண்மை என்பீர்கள், நான் ஒரு வசனத்தைப் பிடித்துக்கொண்டு இதுதான் உண்மை என்று சாதிப்பேன். பிறகு எந்த முடிவும் ஏற்படாது. அந்த விவாதத்தினால் யாருக்கு என்ன பயன்?//
அவரவர் எண்ணங்களுக்கும் விசுவாசத்துக்கும் தகுந்த செயல்களையே தேவனிடமிருந்து பெறமுடியும்.//
ஒருபுறம் தேவனின் வெளிப்பாட்டுக்காக ஜெபித்து காத்திருக்கவேண்டும் எனக் கூறுகிற சுந்தர், மற்றொருபுறம் “மேன்மையானதை விசுவாசித்து, அதை தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார்.(மேன்மையானதை விசுவாசித்து அதைத் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் கருத்தை நான் எதிர்க்கவில்லை; ஆனால் எதிரெதினான கருத்துக்கள் விஷயத்தில் இக்கூற்று பொருந்தாது என்றே நான் சொல்கிறேன்.)
ஒருபுறம் வெளிப்பாட்டுக்காக காத்திருக்கவேண்டும் என்றும் மறுபுறம் மேன்மையானதை விசுவாசிக்க வேண்டும் என்றும் சொல்லி சகோ.சுந்தர் தான் எதிரெதிரான கருத்தைச் சொல்லியுள்ளாரேயொழிய வேதாகமம் எதிரெதிரான கருத்தைச் சொல்லவில்லை.
வேதாகமத்தில் ஒரு வசனத்தைக் காட்டிலும் மேன்மையான மற்றொரு வசனம் உண்டு என்பது மெய்தான். ஆனால் ஒரே விஷயத்தில் கூறப்படும் கருத்துக்களை ஒப்பிட்டு, இது மேன்மையானது, இது மட்டமானது எனச் சொல்வதற்கு ஏதுவாக ஒரே விஷயத்தில் எதிரெதிர் கருத்துக்கள் வேதாகமத்தில் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். இதை நாம் புரிந்துகொள்வதற்காகத்தான் “எதிரெதிர் கருத்தில் தோன்றும் வசனங்கள் ...” எனும் தலைப்பிலான இந்த விவாத மேடையில் பல எதிரெதிர் வசனங்களை தனித் தனி திரிகளில் நாம் பார்க்கப் போகிறோம்.
முதலாவது இத்திரியில் கூறப்பட்டுள்ள எதிரெதிர் கருத்தில் தோன்றும் வசனங்களைப் பார்ப்போம்.
இவ்வசனங்கள் எதிரெதிர் கருத்துடையவை அல்ல என்பதை எசேக்கியேல் 18:3-ம் வசனத்திலிருந்து மிக எளிதில் நாம் புரிந்து கொள்ளமுடிகிறது.
அதாவது, ஒரு காலத்தில் பிதாக்கள் திராட்சைக்காய்களைத் தின்றால் பிள்ளைகளின் பற்கள் கூசினது எனும் பழமொழி இஸ்ரவேலில் இருந்தது மெய்தான் (அதாவது பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடம் விசாரிக்கப்பட்டது மெய்தான்); ஆனால் இனிமேல் அப்பழமொழி இஸ்ரவேலில் இருக்காது (அதாவது பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடம் விசாரிக்கப்படுவதில்லை) என 2,3-ம் வசனங்கள் கூறுகின்றன. இக்கருத்து யாத். 34:7-க்கு எவ்விதத்திலும் எதிரானது அல்ல.
ஒரு காலத்தில் யாத். 34:7-ன் படி நடந்தது; ஆனால் இனி அப்படி நடவாமல் எசே. 18:20-ன்படித்தான் நடக்கும் எனும் கருத்தைத்தான் யாத். 34:7 மற்றும் எசே. 18:20-லிருந்து நாம் பெறுகிறோம். இதில் “எதிரெதிர் கருத்து” என்ற பேச்சுக்கே இடமில்லை.
எனவே இவ்வசனங்களைப் பொறுத்தவரை, சகோ.சுந்தர் சொல்கிற பிரகாரம் நாம் தேவனின் “வெளிப்பாட்டுக்காக” ஜெபித்துக் காத்திருக்கவும் வேண்டியதில்லை, அல்லது மேன்மையான ஒரு கருத்தைத் தெரிவுசெய்து, அதை மட்டும் விசுவாசித்துவிட்டு, அடுத்ததைப் புறக்கணிக்க வேண்டியதுமில்லை.
////ஒருபுறம் வெளிப்பாட்டுக்காக காத்திருக்கவேண்டும் என்றும் மறுபுறம் மேன்மையானதை விசுவாசிக்க வேண்டும் என்றும் சொல்லி சகோ.சுந்தர் தான் எதிரெதிரான கருத்தைச் சொல்லியுள்ளாரேயொழிய///
சகோதரர் அவர்களே! இதை எதிர் கருத்து என்று என்ன இருக்கிறது இரண்டு வெவேறு விதமான வசனம் சொல்லப்படும்போது அதில் மேன்மையானது எதுவென்று என்னால் தீர்மானிக்க முடியாததால் ஆண்டவரிடம் விசாரிக்கிறேன் இதில் என்ன எதிரெதிரான கருத்து என்று சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
அன்பு wrote
////யாத்: 34:7 பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்.
இவ்வசனங்கள் எதிரெதிர் கருத்துடையவை அல்ல என்பதை எசேக்கியேல் 18:3-ம் வசனத்திலிருந்து மிக எளிதில் நாம் புரிந்து கொள்ளமுடிகிறது///.
இந்த இரண்டு வசனங்களும் எதிர் கருத்துக்களை சொல்கிறது என்பதை சாதாரண மனிதர்கள் கூட புரிந்துகொள்ள முடியும் ஆனால் தங்களுக்கு
எதிர் கருத்து அல்ல என்பது எப்படி எளிதாக புரிகிறதோ?.
நேற்று ஒருவர் "உன் கடனை உன் பிள்ளையிடத்திலாவது வசூலிக்காமல் விட மாட்டேன்" என்று சொன்னார் இன்றோ "உன் கடன் உன்னிடம்தான் வசூலிக்கப்படும் உன் பிள்ளையிடத்தில் வசூலிக்கப்படாது" என்று சொன்னால் அதற்க்கு பெயர் எதிர் நிலையா அல்லது இரண்டும் ஒன்றுதானா?
எதிர் கருத்துக்கு காரணம் அல்லது விளகம் என்று சொல்லி "ஓன்று முன்னர் சொல்லப்பட்டது பின்னர் இவ்வாறு மாற்றப்பட்டது" என்று வேண்டுமானால் சொல்லுங்கள் அதை ஏற்றுக்கொள்ளகாம் அதற்காக இரண்டும் ஒரே கருத்துதான் என்று நிலைநாட்ட நினைப்பது ஏற்றதல்ல.
அன்பு wrote////அதாவது, ஒரு காலத்தில் பிதாக்கள் திராட்சைக்காய்களைத் தின்றால் பிள்ளைகளின் பற்கள் கூசினது எனும் பழமொழி இஸ்ரவேலில் இருந்தது மெய்தான் (அதாவது பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடம் விசாரிக்கப்பட்டது மெய்தான்); ஆனால் இனிமேல் அப்பழமொழி இஸ்ரவேலில் இருக்காது (அதாவது பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடம் விசாரிக்கப்படுவதில்லை) என 2,3-ம் வசனங்கள் கூறுகின்றன. இக்கருத்து யாத். 34:7-க்கு எவ்விதத்திலும் எதிரானது அல்ல. ஒரு காலத்தில் யாத். 34:7-ன் படி நடந்தது; ஆனால் இனி அப்படி நடவாமல் எசே. 18:20-ன்படித்தான் நடக்கும் எனும் கருத்தைத்தான் யாத். 34:7 மற்றும் எசே. 18:20-லிருந்து நாம் பெறுகிறோம். இதில் “எதிரெதிர் கருத்து” என்ற பேச்சுக்கே இடமில்லை.////
ஒரு காலத்தில் அப்படி இருந்தது பின்னர் இப்படி மாற்றப்பட்டது என்று சொல்கிறீர்கள். சரி உங்கள் கருத்துபடியே முன்னர் சொல்லபட்டது பின்னர் எசேக்கியேல் காலத்தில் மாற்றப்பட்டது என்று எடுத்து கொண்டாலும் அது எசேக்கியேல் காலத்தில் மாற்றப்பட வில்லை அதே நியாயபிரமாண காலத்திலேயே அதற்க்கு மாற்று வசனம் இருக்கிறது.
நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டது:
யாத் 20:5பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். யாத் 34:7 பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர். உபா 23:3அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது
இது பிதாக்களின் அக்கிரமம் பிள்ளையை கொல்லாது என்பதை வலியுறுத்தும் வசனம்.
எரேமியா மற்றும் தானியேல் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது:
எரேமியா 32:18 பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் , தானியேல் 9:16எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.
இவை எல்லாம் பிதாக்கள் அக்கிரமம் பிள்ளையை தொடரும் என்பதை வலியுறுத்தும் வசனம்
அதே சமகால தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் சொன்னது:
எசேக்கியேல் 18:௨௦ குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்
இது பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகள் சுமப்பதில்லை என்பதை வலியுறுத்தும் வசனம்
அதன் பின்னர் இயேசு சொன்னது:
லூக் 11 50.ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51. நிச்சயமாகவே இந்த சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இது பிதாக்களின் அக்கிரமம் பின் சந்ததியிடம் கேட்கப்படும் என்று சொல்லும் வசனம்.
இப்படி தேவ ஞானத்தால் சொல்லப்பட்டுள்ள தேவனின் வார்த்தையை உடனடியாக புரியும் அளவுக்கு எனக்கு போதிய ஞானம் இல்லை எனவே நான் தேவனின் பாதத்தில் அமர்ந்து விசாரிக்கிறேன்.
"பிக் பேங்க்" தியரியை உறுதியாக நம்பும் மனிதன் "தேவன் உலகத்தை படைத்தார்" என்பதை எப்படி நம்புவதில்லையோ அதேபோல் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டுள்ள தேவ ஞானத்தை மனித ஞானத்தால் "இது இப்படித்தான்" என்று முடிவாக தீர்மானித்து விட்டவர்களுக்கு அவ்வாறு தேவனிடம் விசாரித்தல் நிச்சயம் தேவைப்படாது. நன்றி!
sundar wrote: //லூக் 11 50. ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51. நிச்சயமாகவே இந்த சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இது பிதாக்களின் அக்கிரமம் பின் சந்ததியிடம் கேட்கப்படும் என்று சொல்லும் வசனம்.
இப்படி தேவ ஞானத்தால் சொல்லப்பட்டுள்ள தேவனின் வார்த்தையை உடனடியாக புரியும் அளவுக்கு எனக்குப் போதிய ஞானம் இல்லை. எனவே நான் தேவனின் பாதத்தில் அமர்ந்து விசாரிக்கிறேன்.//
சரி சகோதரரே!
மேற்கூறிய விஷயத்தில் நீங்கள் தேவனின் பாதத்தில் அமர்ந்து விசாரித்து அறிந்ததை சொல்லுங்களேன்.
sundar wrote: //ஒரு காலத்தில் அப்படி இருந்தது பின்னர் இப்படி மாற்றப்பட்டது என்று சொல்கிறீர்கள். சரி உங்கள் கருத்துபடியே முன்னர் சொல்லபட்டது பின்னர் எசேக்கியேல் காலத்தில் மாற்றப்பட்டது என்று எடுத்துக் கொண்டாலும் ...//
ஒரு காலத்தில் பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் விசாரித்த தேவன், பின்னொரு காலத்தில் அவனவன் அக்கிரமத்தை அவனவனிடம்தான் விசாரிப்பேன் என மாற்றிச் சொன்னதற்குக் காரணமும் உண்டு, அப்படிச் சொல்வதற்கு அவருக்கு உரிமையும் உண்டு.
நம் ஆதிப் பிதாவான ஆதாமின் அக்கிரமத்தினிமித்தம் ஆதாம் மட்டுமின்றி அவரது சந்ததி முழுவதும் மரணத்திற்குள்ளாயினர். இந்த ஆக்கினை ஆதாமை மிகுந்த வேதனைப்படுத்தியிருக்கும். ஆபேல் மரணமடைகையில் இதை ஆதாம் நன்குணர்ந்திருப்பார். தனது அக்கிரமத்தால் தன் சந்ததிகளும் வேதனைக்குள்ளாவதைச் சகிக்கமுடியாத ஆதாம், அதன் பின் தன்னைத் திருத்திக் கொண்டிருப்பார் என நிச்சயமாக நம்பலாம். கனி விஷயத்தில் ஆதாம் செய்த மீறுதல் ஒன்றைத் தவிர வேறெந்த அக்கிரமும் ஆதாம் செய்ததாக வேதாகமத்தில் கூறப்படவில்லை.
தனது தவறுக்காக தான் தண்டிக்கப்படுவதைச் சகித்துக்கொள்ளும் மனிதன், தனது தவறுக்காக தன் பிள்ளைகள் தண்டிக்கப்படுவதைக் காணச் சகிக்கமாட்டான் என்பதால்தான், அப்படியொரு ஆக்கினையை தேவன் நியமித்திருப்பார்.
தாவீதின் பாவத்துக்காக ஒருமுறை அவரது மகன் அடிக்கப்பட்டபோதும், மற்றொருமுறை அவரது தேசத்தின் ஜனங்கள் அடிக்கப்பட்டபோதும் தாவீது மிகுந்த வேதனைக்குள்ளானதை பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.
2 சாமு. 12:16,17 அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளே போய், இராமுழுதும் தரையிலே கிடந்தான். 17 அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.
2 சாமு. 24:17 ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.
தனது பாவத்துக்காக தனது பிள்ளையோ தனது ஜனமோ தண்டிக்கப்பட்டபோது தாவீதின் இருதயம் மிகவும் வாதிக்கப்பட்டது. இதேவிதமாக அக்கிரமம் செய்கிற ஒவ்வொருவரின் இருதயமும் வாதிக்கப்படும் என்றுதான் பிதாவின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் விசாரிக்கும் நியமனத்தை தேவன் உண்டாக்கியிருந்தார். ஆனால் நாளாவட்டத்தில் ஜனங்களின் இருதயம் கடினப்பட்டுப் போயிற்று. தனது அக்கிரமத்தால் தன் பிள்ளை/சந்ததி ஆக்கினைக்குள்ளாவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினர். இதற்கு ஓர் உதாரணமாக எசேக்கியா ராஜா விளங்குகிறார்.
2 ராஜா. 20:16 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும். 17 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். 18 நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 19 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
தனது பாவத்தினிமித்தம் தனது சந்ததிக்குக் கூறப்பட்ட ஆக்கினை குறித்து எசேக்கியா ராஜா வருந்தாமல், தனது நாட்களில் சமாதானம் இருக்கும் எனக் கூறப்பட்டதை நல்லது எனச் சொல்லி மகிழ்கிறார்.
இதேவிதமாகத்தான் ஜனங்களிலும் பலர் இருந்து, அக்கிரமத்தைவிட்டுத் திரும்பாமல் இருந்திருப்பார்கள். எனவேதான் தேவன் தாம் முன்பு சொன்னதை மாற்றி, அவனவன் அக்கிரமத்தை அவனவன்தான் சுமக்க வேண்டும் எனக் கூறியிருப்பார். இப்படி மாற்றிச் சொல்ல நியாயமான காரணமும் உண்டு, தேவனுக்கு உரிமையும் உண்டு. எனவே இதைவைத்து வேதாகமம் எதிரெதிர் கருத்தைக் கூறுகிறது எனச் சொல்லமுடியாது.
உங்கள் வார்த்தைப்படியே உங்களுக்கு நான் சொல்கிறேன்:
“வேதாகமம் எதிரெதிர் கருத்தைக் கூறுகிறது என நீங்கள் விசுவாசித்தால், சில கருத்துக்கள் உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்; மாறாக,
வேதாகமம் எதிரெதிர் கருத்தைக் கூறாது என நீங்கள் விசுவாசித்தால், எந்தக் கருத்தும் எதிரெதிரானது அல்ல என்பது உங்களுக்கு எளிதாகப் புரிந்துவிடும்”
sundar wrote: //ஒரு காலத்தில் அப்படி இருந்தது பின்னர் இப்படி மாற்றப்பட்டது என்று சொல்கிறீர்கள். சரி உங்கள் கருத்துபடியே முன்னர் சொல்லப்பட்டது பின்னர் எசேக்கியேல் காலத்தில் மாற்றப்பட்டது என்று எடுத்துக் கொண்டாலும், அது எசேக்கியேல் காலத்தில் மாற்றப்படவில்லை, அதே நியாயப்பிரமாண காலத்திலேயே அதற்கு மாற்று வசனம் இருக்கிறது.//
இப்படிச் சொல்லி பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளீர்கள்.
சகோதரரே! இப்படி மேம்போக்காக வசனத்தைப் படித்தால் எல்லா வசனமும் நமக்குத் தவறாகத்தான் தெரியும். ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்னால், “உங்களுக்குத்தான் ஞானமுள்ளது, எனக்கு ஞானமில்லை” என்று சொல்லிவிட்டு, “நான் வெளிப்பாட்டுக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறீர்கள். இப்படிச் செய்வது உங்கள் தனிப்பட்ட விருப்பம், அதுபற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், “ஞானத்தில் குறைவுள்ளவன் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவராகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்” என யாக்கோபு 1:5 கூறுவதையாவது பரிசீலனை செய்யும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
உபா. 24:16 மற்றும் யாக். 20:5-ஐ எடுத்துக்கொள்வோம். இவ்விரு வசனங்களையும் ஆராய்ந்து படியுங்கள், வித்தியாசத்தை உணர்வீர்கள்.
யாக். 20:5-ல் தேவன் சொல்வது ஒருவனின் அக்கிரமத்தினிமித்தம் அவர் நேரடியாக எடுக்கவிருக்கும் நடவடிக்கையாகும். ஒருவனின் அக்கிரமத்தை அவனது தலைமுறைகளில் அவர் விசாரிக்கவும் செய்வார்; ஒருவனின் நீதியினிமித்தம் அவனது பல தலைமுறைகளுக்கு தேவன் இரக்கமும் செய்வார். இது தனிப்பட்ட மனிதருக்கு தேவன் தரும் எச்சரிக்கையாகவும் வாக்குத்தத்தமாகவும் உள்ளது.
ஆனால் உபா. 24:16-ல் தேவன் சொல்வது, நியாயத்தீர்ப்பு சங்கத்திற்கான கட்டளை. தேவன் தமது விருப்பப்படி எடுக்கிற நடவடிக்கை வேறு; நியாயத்தீர்ப்பு சங்கத்திற்கான கட்டளை வேறு. இரண்டையும் நீங்கள் சமமாகப்பாவிப்பதால்தான் இக்குழப்பம்.
தானியேல் 9:16-ல் தானியேல் கூறுகிற அறிக்கை, இஸ்ரவேலர் எனும் மொத்த ஜனக்கூட்டத்திற்கான ஒரு பொதுவான அறிக்கை. அதையும் தனிப்பட்ட மனிதருக்கான ஆக்கினையையும் இணைத்து குழம்பவேண்டாம்.
லூக்கா 11:50 விஷயத்தில் உங்களுக்கு உண்டான வெளிப்பாடு என்னவென்பதைக் கேட்டிருந்தேன். பதில் சொல்ல விருப்பமானால் சொல்லுங்கள்; அல்லது பதில் சொல்ல விருப்பமில்லை என்பதைத் தெரிவியுங்கள்.
எதிராக தோன்றும் வசனங்கள் எல்லாம் வெவ்வேறு காலத்திற்கான வசனங்களே,
ஆதாம் பாவம் செய்த போது, அவனக்கு மரணம் வந்தது, அவன் மூலமாக மனித குலத்திற்கு மரணம் வந்தது, ஆனால் மரணத்தை தந்த தேவன் கிறிஸ்து மூலமாக உயிர்த்தெழுதலையும் தருகிறாரே!! இந்த இரண்டு காரியத்திலும் எது சரி ஆண்டவரே என்று அவர் பாதத்தில் அமர்ந்து கேட்டால் அவர் வெளிப்படுத்துவது என்னவாக இருக்கும், இரண்டையும் சேர்த்து,
என் பாதத்தில் அமர்ந்திருக்கும் என் பக்தா, நான் பாவத்திற்கு மரணம் தான் தண்டனையாக கொடுத்தேன், ஆனால் அது ஒரு காலம் மட்டும் தான், இயேசு கிறிஸ்துவின் மூலமாக நித்திய ஜீவன் உண்டாகும் பொருட்டாகவே நான் கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பித்து இரட்சிப்பையும் நிறைவேற்றினேன் என்பார்!!
மரணத்தை கொடுத்த தேவன் உயிர்த்தெழுதலையும் தருகிறார்!! எதிரான வசனங்கள் தான், வெவ்வேறு காலங்களுக்கு தான் பொருந்தும்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
இந்த வசனத்தின் அடிபடையில் தேவனின் பாதத்தில் அமர்ந்து கேட்கும் ஞானத்தையே நானும் சொல்கிறேன். அந்த ஞானம்தானே வசனத்தை விளங்க வைக்கும். தேவ ஞானம். "நான் பாதத்தில் அமரவேமாட்டேன் எனக்கு அப்படி எதுவும் வேண்டாம்" என்று சொல்கிறீர்கள். பிறகு வசனத்தை மட்டும் சுட்டுகிறீர்கள்!
BRO. ANBU WROTE ----------------------------------------------------------------------------------------------------- sundar wrote: //லூக் 11 50. ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51. நிச்சயமாகவே இந்த சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இது பிதாக்களின் அக்கிரமம் பின் சந்ததியிடம் கேட்கப்படும் என்று சொல்லும் வசனம்.
இப்படி தேவ ஞானத்தால் சொல்லப்பட்டுள்ள தேவனின் வார்த்தையை உடனடியாக புரியும் அளவுக்கு எனக்குப் போதிய ஞானம் இல்லை. எனவே நான் தேவனின் பாதத்தில் அமர்ந்து விசாரிக்கிறேன்.//
சரி சகோதரரே!
மேற்கூறிய விஷயத்தில் நீங்கள் தேவனின் பாதத்தில் அமர்ந்து விசாரித்து அறிந்ததை சொல்லுங்களேன். --------------------------------------------------------------------------------------------------------
நல்லது சகோதரரே, தாங்கள் நிலையில் உறுதியாக இருப்பதற்கு நன்றி. ஆகினும் தாங்கள் கேட்டுகொண்டதிநிமித்தம் நான் அறிந்த உண்மையை கீழ்கண்ட தொடுப்பில் தந்துள்ளேன்.
sundar wrote: //Bro அன்பு wrote ///ஆனால், “ஞானத்தில் குறைவுள்ளவன் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவராகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்” என யாக்கோபு 1:5 கூறுவதையாவது பரிசீலனை செய்யும்படி அன்புடன் வேண்டுகிறேன்///
இந்த வசனத்தின் அடிப்படையில் தேவனின் பாதத்தில் அமர்ந்து கேட்கும் ஞானத்தையே நானும் சொல்கிறேன். அந்த ஞானம்தானே வசனத்தை விளங்க வைக்கும். தேவ ஞானம். "நான் பாதத்தில் அமரவேமாட்டேன் எனக்கு அப்படி எதுவும் வேண்டாம்" என்று சொல்கிறீர்கள். பிறகு வசனத்தை மட்டும் சுட்டுகிறீர்கள்!//
சகோதரரே! ஒருநேரம் “ஞானம்” என்கிறீர்கள், ஒருநேரம் “வெளிப்பாடு” என்கிறீர்கள். உங்கள் நிலையை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஞானத்தில் குறைவுள்ளவன்தான் தேவனிடத்தில் கேட்கவேண்டும் என வசனம் சொல்கிறது. ஏற்கனவே ஒரு வசனத்தை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் ஞானம் நமக்கு இருந்தால், அது பற்றி தேவனிடம் நாம் கேட்கவேண்டியதில்லை.
உதாரணமாக: இத்திரியில் நாம் எடுத்துக்கொண்ட எதிரெதிராகத் தோன்றும் வசனங்களையே எடுத்துக்கொள்வோமே!
நியாயப்பிரமாண காலத்தில் “பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடத்தில் விசாரிக்கப்படும்” எனச் சொன்ன தேவன், அந்த நியமனத்தை எசேக்கியேல் காலத்தில் மாற்றி, “இனி அவனவன் அக்கிரமத்தை அவனவன்தான் சுமப்பான்” என்று தெளிவாகச் சொல்லியிருக்கையில், இவ்விஷயத்தில் மேற்கொண்டு தேவனிடம் கேட்க எதுவுமில்லைதானே?
நியாயப்பிரமாண கால நியமனம் மற்றும் எசேக்கியேல் கால நியமனம் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் புரியாததால்தான் எதிரெதிரான கருத்தை வசனங்கள் கூறுவதாக நீங்கள் கருதுகிறீர்கள். இப்படி கருதும் நீங்கள் தேவஞானத்திற்காக வேண்டுவது அவசியந்தான். மற்றபடி ஒரு வசனத்தின் கருத்து தெளிவாகப் புரிந்திருக்கையில் அதுபற்றி தேவனிடம் கேட்க எதுவுமில்லை என்பதே என் கருத்து.
ஞானத்தில் குறைவிருந்தால், அதாவது வசனத்தைப் புரிந்துகொள்ள இயலாத நிலையில் நாம் இருந்தால் கண்டிப்பாக தேவனிடம் தேவஞானத்தைக் கேட்க வேண்டும். அப்போது தேவன் “வெளிப்பாட்டைத்” தரமாட்டார்; “தேவஞானத்தையே” தருவார். அந்த “ஞானத்தைக்” கொண்டு வசனத்தை ஆராய்ந்து அதன் கருத்தைப் புரிந்துகொள்வது நமது கடமை.
தேவனின் பாதத்தில் உட்காரமாட்டேன் என நான் அடம்பிடிக்கவில்லை. எப்பொழுது தேவஞானத்தில் குறைவுள்ளவனாக நான் கருதுகிறேனோ அல்லது எப்பொழுது ஒரு வசனத்தின் கருத்து எனக்குக் குழப்பமாயிருக்கிறதோ அப்போது நான் தேவனின் பாதத்தில் அமர்ந்து தேவஞானத்தைக் கேட்பேன்; அப்படித்தான் இதுவரை நான் செய்தும்வருகிறேன்.
இதற்கு உதாரணமாக யோவான் 5:4 வசனத்தை நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அவ்வசனத்தை நான் படித்த ஆரம்ப காலத்தில் அது கூறுகிற காரியம் தேவநீதியாக எனக்குத் தோன்றவில்லை. அப்போது எனக்கு அது மிகுந்த குழப்பமாகத்தான் இருந்தது. எனவே அக்காரியத்தை தேவனின் பாதத்தில் வைத்துவிட்டு, பிற வசனங்களில் கவனம் செலுத்தினேன். சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு, அவ்வசனம் மூலப் பிரதியில் இல்லை எனும் தகவலை அறிந்தபின்தான் அவ்விஷயத்தில் என் குழப்பம் நீங்கியது.
நீங்களோ "மூலப்பிரதி ஆராய்ச்சியெல்லாம் செய்யமாட்டேன்; தேவன் எனக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார்" என்கிறீர்கள்.
இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்: யோவான் 5:4 மூலப்பிரதியில் இல்லை எனும் தகவலை ஓரங்கட்டிவிட்டு, அவ்வசனத்திற்கு தேவனிடம் வெளிப்பாடு பெற்று அதை எனக்குச் சொல்லுங்கள்.
ஏற்கனவே லூக்கா 11:50 பற்றிய கேட்டிருந்தேன்; நீங்கள் இன்னமும் பதில் தரவில்லை. உங்கள் தளத்தின் தொடுப்பை மட்டும் தந்திருந்தீர்கள்; அதிலும் அவ்வனத்திற்கு விளக்கம் இல்லை.
நான் கேட்டுள்ள வசனங்களுக்கான விளக்கங்களை வெளிப்பாடு மூலம் நீங்கள் அறிந்து சொன்னால்தானே உங்கள் வெளிப்பாட்டின் மூலம் நான் விஷயங்களைப் புரியமுடியும்? இப்படி மவுனம் சாதித்தால் என்ன அர்த்தம்?
anbu wrote: ////சகோதரரே! ஒருநேரம் “ஞானம்” என்கிறீர்கள், ஒருநேரம் “வெளிப்பாடு” என்கிறீர்கள். உங்கள் நிலையை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடிய வில்லை.////
சகோதரர் அவர்களே தேவனிடம் ஜெபித்து ஞானத்தை பெற்று அந்த தேவ ஞானத்தால் ஒரு வசனத்தின் உண்மை பொருளை அறிவதே நான் "வெளிப்பாடு" என்று சொல்கிறேன்.இவ்வாறு நான் சொல்ல காரணம் என்னவெனில். தேவன் ஒரு வார்த்தையை தீர்க்கதரிசிமூலம் சொன்னாலும் அவர் எந்த பொருளின் அடிப்படையில் ஒரு வார்த்தையை சொன்னார்கள் என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும். எந்த மனிதனுக்கும் தெரியாத உதாரணமாக "பாதாளம்" என்ற வார்த்தை பூமிக்கு அடியில் உள்ள ஒரு குழியை குறிக்கிறது அதை நீங்கள் "மனிதனை புதைக்கும் குழி" என்று சொல்கிறீர்கள். எனக்கோ அது வேறுவிதமாக தேவனால் உணர்த்த பட்டுள்ளது. இரண்டுக்குமே வசன ஆதாரங்கள் இருக்கிறது எனவே இதன் உண்மை என்னவென்பதை அறிய, ஜெபித்து அவர் தரும் ஞானத்தால் அந்த பாதாளம் என்ற சொல்லுக்கான உண்மை பொருளை அறிய முனைவதும் அவ்வாறு அறிந்துகொண்டதயுமே வெளிப்பாடு என்று சொல்கிறேன். எனவே இங்கு ஜெபித்து தேவஞானத்தை பெறுவதும் அதன்மூலம் ஒரு வசனத்தின் உண்மை பொருளை அறிவதும் நெருங்கிய தொடர்புடையதே. தெரியாத ஒன்றை அறிவதை "வெளிப்பாடு" என்ற பெயரில் நான் குறிப்பிடுகிறேன். அதற்க்கு வேறு ஏதாவது வார்த்தை இருந்தால் தெரிவியுங்கள் இனி அதை மாற்றிகொள்கிறேன்.
மேலும் இந்தஉலகத்தில் கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் நாம் அறிந்தவைகளை மட்டுமே வைத்து ஒன்றை ஆராய்வோமானால் நாம் நிச்சயம் உண்மையை அறியமுடியாது. "வானம் திறக்கப்பட தேவ தரிசனங்களை கண்டேன்" என்று எசேக்கியேல் சொல்கிறார். அந்த தரிசனம் நமது மாம்ச கண்களுக்கு தெரியாது. புதியதாக தரிசனம் இல்லை என்றாலும் அட்லீஸ்ட் அவர் கண்ட தரிசனத்தை நாமும் காண முடியும் என்றாவது விசுவாசம் வேண்டும். "இல்லை" "முடியாது" "தெரியாது" போன்ற அவிசுவாச வார்த்தைகளால் உள்ளம் நிரம்பியிருந்தால் ஒன்றுமே பார்க்கமுடியாது.
நீங்கள் முற்றிலும் உலக ஞானம் உலக நடைமுறையோடு, அறிந்து தொட்டு உணர முடிவது போன்ற காரியங்களின் அடிப்படையிலே விவாதிக்கிறீர்கள். என்னால் அப்படி முடியாது சகோதரரே. நான் கண்ட காரியங்கள் அநேகமானவை இயற்க்கைக்கு அப்பாற்பட்டவை. அதை நான் எடுத்து சொன்னால் ஒரு பிற மதத்தார்கூட நம்பிவிடுவார்கள் ஆனால் கிறிஸ்த்தவர்கள் நம்பமாட்டார்கள் பிறகு அதை விவரிப்பதில் என்ன பயன்? சொல்லுங்கள். உங்கள் கண்களை தேவன் ஒருநாள் திறந்து நீங்களும் அதுபோல காரியங்களை கண்டால் மட்டுமே உங்களால் ஏற்க்க முடியும் என்றே நான் கருதுகிறேன். அதுவரை என்னை நீங்கள் கள்ளனாகவோ அல்லது நல்லவனாகவோ எப்படி வேண்டுமானால் தீர்மானித்து கொள்ளலாம்
Anbu Wrote: ///நியாயப்பிரமாண காலத்தில் “பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடத்தில் விசாரிக்கப்படும்” எனச் சொன்ன தேவன், அந்த நியமனத்தை எசேக்கியேல் காலத்தில் மாற்றி, “இனி அவனவன் அக்கிரமத்தை அவனவன்தான் சுமப்பான்” என்று தெளிவாகச் சொல்லியிருக்கையில், இவ்விஷயத்தில் மேற்கொண்டு தேவனிடம் கேட்க எதுவுமில்லைதானே?////
இத்தோடு முடிந்துவிட்டால் நிச்சயம் நான் கேட்க வேண்டிய தேவை இல்லைதான். ஆனால் அதன் பின்னர் ஆண்டவராகிய இயேசு மீண்டும்
சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51. நிச்சயமாகவே இந்த சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
தீர்க்கதரிசிகளின் இரத்தபழி அவர்களின் பிள்ளைகளாகிய இந்த சந்ததியிடம் கேட்கப்படும் என்று வசனத்தை சொல்லியிருப்பதாலேயே நாம் அதன் உண்மை பொருளை அறியவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்படுகிறது.
நான் இயேசு சொன்னதற்கு விளக்கம் கொடுக்க இங்கு அந்த வசனத்தை குறிப்பிடவில்லை. அது தெளிவாக இருக்கிறது. எசேக்கியேலில் தேவன் "பிதாக்களின் அக்கிரம் பிள்ளைகளை தொடராது" என்று சொல்லி விட்ட பிறகு, இயேசு லூக்கா 11.50ல எதற்க்காக தீர்க்கதரிசிகளின் அக்க்ரமம் இந்த சந்ததியிடம் கேட்கப்படும் என்று குறிப்பிடவேண்டும் என்பதை அறிவுறுத்தவே அந்த வசனத்தை சுட்டினேன். மீண்டும் வசனம் இவ்வாறு வருவதால் தாங்கள் சொல்வதுபோல் முன்னர்சொல்லப்பட்ட வார்த்தைகள் பின்னர் மாற்றப்படவில்லை மனுஷனால் வழங்கப்பட்டுவந்த பழமொழியே தேவன் மாற்றினார் அனால் உண்மையில் பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளில் சிலருக்கு தொடரும் சிலருக்கு தொடராது என்பதை அறியமுடிகிறது.
அது யார் யாருக்கு தொடரும் யார்யாருக்கு தொடராது என்பதன் விளக்கத்தை நான் கொடுத்திருந்த திரியில் விளக்கியிருந்தேன்.
ANBU WROTE: //////நீங்களோ "மூலப்பிரதி ஆராய்ச்சியெல்லாம் செய்யமாட்டேன்; தேவன் எனக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார்" என்கிறீர்கள்.
இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்: யோவான் 5:4 மூலப்பிரதியில் இல்லை எனும் தகவலை ஓரங்கட்டிவிட்டு, அவ்வசனத்திற்கு தேவனிடம் வெளிப்பாடு பெற்று அதை எனக்குச் சொல்லுங்கள்////
இயேசு தனது நாளில் அனேக அற்ப்புதங்களை செய்திருக்கிறார் அதில் இதுவும் ஓன்று. இதில் பெரிதாக தேவனிண்டம் அமர்ந்து விசாரிக்க எதுவும் இல்லை மேலும் தற்க்காலத்தில் தேவன் அற்ப்புத அதிசயங்கள் செய்வதை அதிகம் விரும்பவில்லை என்பதை எனக்கு உணர்த்தி யிருப்பதால் அவ்வாறு ஒரு குளம் இருந்ததா? என்பதை அறிந்து கொளவதால் எனக்கு எந்த பயனும் இல்லை என்று தோன்றுவதால் அது சம்பந்தமான உண்மையை நான் அறிய விரும்பவில்லை. கடந்தகாலத்தில் என்ன நடந்தது என்பதைவிட அதன்மூலம் தற்காலத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என்பது அறிவுறுத்தப் படுகிறது அறிவதிலேயே பயன் உள்ளதாக நான் கருதுகிறேன்.
ஞானம் என நான் சொல்வதும் வெளிப்பாடு என நீங்கள் சொல்வதும் கிட்டத்தட்ட ஒரே விஷயமாகத் தோன்றினாலும் இரண்டிற்கும் வேறுபாடு இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன்.
இயேசு சொன்ன தாலந்து உவமானம் நாம் நன்கு அறிந்ததே (மத்தேயு 25:15-29). தேவன் நமக்குத் தந்துள்ள ஞானமும் ஒருவித தாலந்துதான். அந்த தாலந்தை அவரவர் திறமைக்கேற்ப ஏற்கனவே தேவன் நமக்குத் தந்துள்ளார். அந்த ஞானத்தைக் கொண்டு வேதஅறிவைச் சம்பாதிப்பது நம் கடமையாகும். அந்தக் கடமையை நாம் செய்யும்போது, நம் தேவைக்கேற்றபடி இன்னும் அதிக ஞானத்தை (தாலந்தை) தேவன் தருவார்.
ஆம், தனக்குக் கொடுக்கப்பட்ட ஞானமாகிய தாலந்தைக் கொண்டு வேதவசனங்களை ஆராயும் முயற்சியும் ஆர்வமும் உள்ளவன் எவனோ அவனுக்கு இன்னும் அதிக ஞானத்தைத் தந்து இன்னும் அதிகமாக வேதஞானத்தில் வளர தேவன் கிருபை செய்கிறார்.
ஆனால் நீங்கள் சொல்வதோ, நமக்கு வேதத்தை ஆராய்வதற்கான ஞானம் எனும் தாலந்து இல்லாதவர்களாக(அதாவது வெறுமையானவர்களாக) நம்மைக் காட்டுகிறது. வெறுமையான நாம் தேவனின் பாதத்தில் அமர்ந்து ஜெபித்தால்தான் காரியங்கள் வெளிப்படும் என நீங்கள் சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது.
இவ்விஷயத்தில் நம்மிடையேயான வித்தியாசம் ஒரு பொருட்டல்ல என நான் நினைக்கிறேன். எனவே அந்த வித்தியாசத்தை அப்படியே விட்டுவிட்டு, எடுத்துக்கொண்ட விஷயத்தில் நம் கவனத்தை செலுத்துவோம்.
லூக்கா 11:50-ம் வசனத்திற்கு தங்கள் விளக்கத்தைக் கூறியுள்ளீர்கள். ஆனால் அவ்விளக்கம் சரியல்ல என நான் கருதுகிறேன்.
லூக்கா 11:50 ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51 நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இவ்வசனத்தில் ஒரு பகுதி மட்டுமே உங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது “சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக ... ” என்கிற பகுதி மட்டுமே உங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் “ (அவர்கள்) அப்படிச் செய்வார்கள்” எனும் வார்த்தைகளை நீங்கள் கண்டுகொள்ளவில்லை.
அதாவது “இந்த சந்ததியைச் சேர்ந்த அவர்களும் தங்கள் பிதாக்கள் செய்த பிரகாரமே செய்வார்கள்” என வசனம் சொல்கிறது.
எப்படி அன்றைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தத்தைச் சிந்தினார்களோ, அதேவிதமாக அவர்களின் சந்ததியினரான இவர்களும் தீர்க்கதரிசிகளின் இரத்தத்தைச் சிந்துவார்கள் என்றே இயேசு கூறுகிறார்.
அவ்வசனத்தில் இரத்தப்பழி எனும் வார்த்தைக்கு நிகராக ஆங்கில வேதாகமத்தில் (NIV) responsible எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்ததியினரின் பிதாக்கள் சிந்திய தீர்க்கதரிசிகளின் இரத்தத்திற்கு பொறுப்பாவதற்குத் தக்கதாக இவர்களும் தீர்க்கதரிசிகளின் இரத்தத்தைச் சிந்துவார்கள் என்பதே இயேசு சொன்ன வாக்கியம்.
அதாவது தங்கள் பிதாக்களைப் போலவே இவர்களும் தீர்க்கதரிசிகளின் இரத்தத்தைச் சிந்தி அதற்குப் பொறுப்பாகின்றனர் என்பதே இயேசு சொல்லவரும் கருத்தாகும்.
இன்றைய சந்ததியினரான இவர்கள் அப்பாவிகளல்ல; இவர்களும் தீர்க்கதரிகளின் இரத்தத்தைச் சிந்துபவர்கள்தான். எனவே அவர்களின் பிதாக்களோடுகூட இவர்களையும் தீர்க்கதரிசிகளின் இரத்தத்திற்குப் பொறுப்பாக்குவது நியாயமானதே. இது இவர்கள் தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தைச் சுமப்பதாக ஆகாது. இவர்களின் அக்கிரமத்தைத்தான் இவர்கள் சுமப்பதாக ஆகும். ஆனால் இவர்கள் செய்யும் அக்கிரமம், அவர்கள் பிதாக்களின் அக்கிரமத்திற்கு ஒத்ததாயுள்ளது என்பதைத்தான் இயேசு எடுத்துரைக்கிறார்.
லூக்கா 11:50-ல் கூறப்பட்டுள்ள “இந்த சந்ததியினரும்” அக்கிரமம் செய்தவர்களே. அவர்களின் அக்கிரமத்திற்கு அவர்கள் பொறுப்பாவார்கள் என்பதையே இயேசு சொல்கிறார்.
இது எசேக்கியேல் 18:20-க்கு எதிரானதல்ல என்றே நான் கருதுகிறேன்.