நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்
Permalink  
 


தமிழ் கிறிஸ்தவ தளம் தனக்கென்று ஏதோ சில விதிமுறைகள் உள்ளதாகவும், அந்த விதிமுறைகளை மீறுவோரின் பதிவுகள் நீக்கப்படும் என்றும் அவ்வப்போது கூறிவருகிறது.

சமீபத்திலுங்கூட தனது விதிமுறைகளை ஒரு திரியில் கூறியுள்ளது. அவை:


*********************************

நம் தளத்தைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு எப்போதுமே இடம்
கொடுத்துள்ளோம். தள விவாதமேடையை சரியாக பயன்படுத்தாமல் அல்லது பயன்படுத்த
தெரியாதவர்களுக்கு தள நிர்வாகம் எப்போதுமே இடம் கொடுத்ததில்லை.

தளத்தில் மீண்டும் விவாதங்கள் அனல் பறப்பதற்கு முன்பு அனைவருக்கும் நிர்வாகக் குழு பழைய
தள விதிமுறைகளை நினைவுபடுத்த கடமைப் பட்டுள்ளது. புதிய கருத்துக்கள்
வரவேற்கபடுகின்றன.

#..நமது தளத்தில் யார் வேண்டுமானலும் உறுப்பினர் ஆகலாம்.
#.அவர் .எந்த மத நம்பிகை உடைவராக இருந்தாலும் படைப்புகள் 99% திருத்தப்படாது.
#.படைப்புகள் எழுதியவரின் எண்ணத்தை அதாவது கட்டுரையின் கருவை வைத்து
அனுமதிக்கப்படுகின்றது.
#.எல்லாத விதமான படைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.
#.பிறமதத்தை நேரடியாக தாக்கி எழுதும் படைப்புகள் அனுமதிக்கப்படமாட்டாது.
#.கட்டுரையில் கூறப்பட்டு இருக்கும் எண்ணங்கள் அதை எழுதியவருடையது.
#.இந்த தளம் தமிழ் கிறிஸ்தவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கின்ற ஒரு கண்ணாடியாக இருக்கும்.
#.திக்கெட்டும் பரந்து கிடக்கும் எம் தமிழ் கிறிஸ்தவ மக்களை இணையம் மூலம் இணைக்கும் ஒரு பாலம், இந்த தளம்.
#.இந்த தளத்திற்கு நிர்வாக்குழு உண்டு. இது ஒரு தனிப்பட்ட ஒருவரின் தளம் அல்ல.


மறந்து விடாதீர்கள்

இது எங்கள் தளமல்ல, நமது தளம்


நிர்வாக்கழுவின் சார்பாக
விஜய்



1. பயனுள்ள பதிவுகள் மட்டும் அனுமதிக்கபடும்
2. அடுத்தவரை துன்பபடுத்தும் பதிவுகள் அகற்றபடும்
3. சரியான பதிவு சரியான பகுதியில் தொடங்கவும்
4. ஆபாசங்களுக்கு இங்கு இடம் இல்லை
5. கெட்டவார்த்தைகள் மனதை புன்படுத்தும் வார்த்தைகள் பதிய அனுமதி இல்லை
6. விவாதங்கள் சர்சைகள் ஏற்படுத்தாவன்னம் இருத்தல் அவசியம்
7. தமிழில் மட்டும் பதிவுகள் ஏற்று கொள்ளபடும் (சில பதிவுகள் தவிர)


தள விதிமுறைகளை அவ்வப்போது நினைவுபடுத்துவது எங்கள் வழக்கம். இப்போதும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தள உறுப்பினர்கள் அனைவரும் நாம் ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். நம் தளத்தில் நம்முடைய சாட்சியையும் காத்துக் கொள்ள வேண்டும். மோதல் போக்கைக் கைவிட்டு சரியான மாறுத்தரங்களை மார்ஸ்மேடையில் முன் வைப்போம். நம் தளத்தில் பல காரியங்களைக் குறித்து விவாதிக்கிறோம். நாம் யாருக்கும் எதிரானவர்களோ அல்லது ஒருதலைப்பட்சமானவர்களோ அல்ல. எப்படியாகிலும் கிறிஸ்து மகிமைப்பட வேண்டும் என்பதும், ஒருவராவது தளத்தின் உள்ளத்தெளிவடைந்து தேவனிடம் நெருங்கிச் சேரவேண்டும் என்பதே எங்கள் ஆசை ஆகும். இதற்கு மாறாக, எப்பொழுதும் தனிநபர் தாக்குதல் மற்றும் தேவையற்ற விமர்சனங்களை வைப்பவர்கள் மீது தளம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.

தேவன் மகிமைப்படுவாராக!

*********************************

நாட்டில்தான் விதிமீறல்கள் நடக்கின்றனவென்றால், தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் விதிமீறல்கள் தாராளமாக நடக்கின்றன. நாட்டில் நடக்கும் விதிமீறல்களைக் கண்காணித்து சரிசெய்ய வேண்டிய அரசாங்கம், பாரபட்சமாக தனக்கு சாதகமான நேரங்களில் விதிமீறல்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும், தனக்குப் பாதகமான நேரங்களில் விதிமுறைகளை அமல்படுத்த தீவிரப்படுவதும் நாம் அறிந்ததே!

உலக அரசாங்கம் அநீதியானது, அது அப்படித்தான் இருக்கும்; அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. உலக அரசாங்கம் பாரபட்சமின்றி விதிமுறைகளை அமல் படுத்தினால்தான் அது ஆச்சரியம்.

ஆனால் “தமிழ் கிறிஸ்தவ தளம்” எனும் பெயரை வைத்துக் கொண்டு அதுவுங்கூட பாரபட்சமாக தனக்கு சாதகமான நேரங்களில் விதிமீறல்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும், தனக்குப் பாதகமான நேரங்களில் விதிமுறைகளை அமல்படுத்த தீவிரப்படுவதும் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

கிறிஸ்துவானவர் “நீதியின் அரசராக” இருக்கிறார். அந்தக் கிறிஸ்துவின் பெயரை உள்ளடக்கிய “தமிழ் கிறிஸ்தவ தளம்” நீதியின்றி நடப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கிறிஸ்துவை ஆராதிக்க வேண்டும், கனப்படுத்த வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாயிருக்கும் அத்தளம், கிறிஸ்துவின் நீதியை காலின் கீழ் போட்டு மிதித்து, கிறிஸ்துவை கனவீனப்படுத்தி வருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதை நான் தகுந்த ஆதாரத்தோடுதான் கூறுகிறேன். தொடரும் பதிவில் எனது ஆதாரத்தைத் தருகிறேன்.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்
Permalink  
 


அடுத்தவரைத் துன்பப்படுத்தும் பதிவுகள் அகற்றப்படும், கெட்டவார்த்தைகள் மனதைப் புண்படுத்தும் வார்த்தைகள் பதிய அனுமதி இல்லை எனும் விதிகள், தமிழ் கிறிஸ்தவ தளத்தின் 2-ம் மற்றும் 5-ம் விதிகள்.

இவ்விதிகளின்படி, பிறரைத் துன்படுத்தி புண்படுத்தும் பதிவுகள் தள நிர்வாகத்தினரால் அவ்வப்போது நீக்கப்படுவதென்னவோ மெய்தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் (தள நிர்வாகத்தின் பிரதான கொள்கைகளுக்கு ஒத்துப்போவோர் எனச் சொல்லலாம்) தங்களுக்குள் மோதும்போது மட்டும், அவ்வாறு செயல்படும் நிர்வாகம், இஸ்லாமியர் மற்றும் திரித்துவத்தை ஏற்காதவர்கள் ஆகியோரைத்  துன்பப்படுத்தி புண்படுத்தும் வார்த்தைகள் பதியப்படும்போது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கவே செய்கிறது. இதற்கான ஆதாரம்:

சில்சாம் என்பவர் தனது ஒரு பதிவில் இவ்வாறு எழுதியுள்ளார்:

**********************

உதாரணத்துக்கு ஒரு தலைப்பும் அதன் தொடுப்பும்

இவ்வுலகிற்கு இயேசு அனுப்பப்பட்டதன் நோக்கம்

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=40469001

இயேசு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை தானே சிறுவயது முதல் படித்த பள்ளியிலிருந்து தொடர்ந்து ஞாயிறு பள்ளியிலும் கற்று வருகிறோம்; தெரியலன்னா எங்கிட்ட கேளு, சொல்லித் தரோம், இதில் என்னய்யா ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கு..? சரி உன்னுடைய ஆராய்ச்சியின் போக்கு எப்படியிருக்கிறது, அதனால் யாருக்கு பிரயோஜனம் என்று உணர்ந்தாயா..?

'போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது." (1கொரிந்தியர்.3:11)

இதைச் சொன்னவன் பரிசுத்தவான் இல்லையா..? அப்படியானால் அஸ்திபாரத்தையே அசைப்பது போன்ற எதிர்மறையான கருத்துக்களை இங்கே விதைத்து யாரை வஞ்சிக்க திட்டம் போடுகிறாய் என்று கேட்கிறேன்..!

நான் மனிதர்களிடம் பேசாமல் அவர்களை ஆட்டிப்படைக்கும் பிசாசிடம் பேசியதால் ஒருமையில் எழுதவேண்டியதானது, நண்பர்கள் மன்னிக்கவும்.
**********************

சம்பந்தப்பட்ட நபரை ஒருமையில் அழைத்துவிட்டு, அதற்குச் சப்பைக்கட்டாக பிசாசைச் சொன்னதாக சொல்கிறார். ஒருவரை ஒருமையில் அழைத்தாலும் சரி, அல்லது அவரைப் பிசாசு எனச் சொன்னாலும் சரி, அது அவரைப் புண்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், அவ்வார்த்தைகளை தள நிர்வாகம் ஏன் அனுமதித்தது?

அவ்வார்த்தைகளால் தாக்கப்பட்டவர், திரித்துவத்தை ஏற்காத ஒரு நபர் என்பதே.

இன்னும் வரும் ...


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

சில்சாம் என்பவர் போதகர் என்று தன்னை அறிமுகப்படுத்தியது காரணமாக இருக்கலாம்!! இந்த சபைகள் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது சரி என்று சொல்லுகிறது, ஆனால் ஒருவர் தான் போதகர் என்பதை ஏனோ புரியாமல் நிற்கிறது!! போதகர் என்று தன்னை ஒருவன் சொல்லிக்கொண்டு வந்தால் போதும், அவன் காலில் விழுந்து அவனை பெரிய ஆளாக்கி விடுவார்கள்!! வேதத்தின் போதனைகள் இவர்களுக்கு முக்கியம் இல்லை!! இவர்களின் பெரும்வாரியான தலைப்புகள், ஒன்றுக்கும் உதவாத தன்னை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் இருப்பதை பார்க்கலாம்!! அடுத்தவரை பிசாசு என்றும் இன்னும் தகாத வார்த்தைகளால் சொல்லிக்கொண்டு வரும் சில்சாம் போன்றோருக்கும், அவரை போதகர் என்று அழைப்பதில் சுகம் கானும் சிலருக்கும் ஒரு வசனம் இருக்கிறது, இவர்கள் இயேசு கிறிஸ்து சொன்னதை கேட்காமல்,

யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

கிறிஸ்து பிதா அல்ல, பிதாவின் நாமத்தினால், அதாவது பிதாவின் பெயரால் வந்தவர் என்பதை வசனம் தெளிவாக சொல்லியிருந்தும் அதை ஏற்க மனதாயிராமல், சில்சாம் போன்ற போதகரின் (சுயமாக நியமித்துக்கொள்வது தான்) வாயிலிருந்து வரும் சேரியைவிட மோசமான வார்த்தைகளுக்கு மதிப்பு தருகிறது தமிழ் கிறிஸ்தவ தளம்!! இயேசு கிறிஸ்து யார் என்பதே தெரியாத ஒரு பெரிய குருடர்களின் கூட்டத்தை இன்று சில குருடாகி போன போதகர்களின் கைகளில் வைத்துக்கொண்டு நடைபோடுகிறது கிறிஸ்தவம்!!

ஆனால் நமக்கோ போதகர் பரலோகத்தில் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார், அவரின் சத்தியத்தின் ஆவியை கொண்டு வேதத்தில் அவர் சொல்லியதை மிஞ்சி எதையும் போதிப்பது கிடையாது என்பதை நிச்சயமாக நம்புகிறோம்!! மேலும் ஒருவன் போதகனாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும்,

I பேதுரு 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்;

ஆனால் இன்றோ தேவனின் வாக்கியங்கள் வேதபுத்தகத்தை தாண்டி, ஹோண்டா அக்கர்ட், பென்ஸ் கார்களுக்குள் வந்து விட்டது, தேவன் அறையில் தோன்றி பேசுவதும், சொப்பனத்தில் வந்து யோசேப்புக்கு சொன்னது போல், தானியேலிடம் பேசியது போல் இவர்களிடமும் பேசுகிறாராம்!! எந்த தேவன் இவர்களிடம் பேசினார்(ன்) என்பது கூட புரியாத அளவிற்கு இவர்கள் குருட்டட்டத்தில் இருக்கிறார்கள்!! சில்சாம் போதகர் என்று தன்னை அனைவரும் சொல்ல விருப்பம் உள்ளவராக இருந்தாலும், தேவனுடைய வாக்கியங்களின்படி போதிப்பது கிடையாது!! வசனங்களை காப்பி பேஸ்ட் செய்வது மாத்திரம் பத்தாது, அந்த வசனங்கள் என்ன சொல்லுகிறது என்று பார்க்க வேண்டாமா!!

மொத்தத்தில் தமிழ் கிறிஸ்தவ தளமும், நம் அரசியல்வாதிகளும் ஒன்றே,

THE LAW (RULE) MAKERS ARE THE LAW (RULE) BREAKERS!!

அவர்களின் விதிமுறைகள் என்பது கண்துடைப்பு, மார்ஸ் மேடை என்பது ஒரே ராகத்தை அனைவரும் சேர்ந்து பாடுவது, விவாதத்திற்கும் அதற்கு சபந்தமே கிடையாது என்பது தான் சரி!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

தனிப்பட்ட 3 தளத்தினரை “பிசாசு” எனச் சொல்லி ஒரு திரியில் சில்சாம் இவ்வாறு பதித்துள்ளார்.

*********************************
இந்த பிசாசுகளை அடையாளங் காண கீழ்க்காணும் தொடுப்புகளை சொடுக்கவும்...

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=1

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=1

முதலாவது பிசாசு மிகவும் கொடியது; இது "இயேசு தொழத் தக்க தெய்வமல்ல" என்று சொல்லும்; என்ன ஒரு ஆச்சரியமென்றால் மற்ற ரெண்டும் பல காரியங்களில் இதனுடன் ஒத்துப்போவதுடன் "இயேசு தொழத் தக்க தெய்வமல்ல" என்ற கருத்துடன் மிகவும் சாந்த சொரூபிகளாக வேடமிடும் ஓநாய்கள்; இவைகள் இதற்கு மேல் தெளிவடைய வாய்ப்பில்லை என்ற தீர்மானத்தின் காரணமாகவே நான் கடுமையாக எதிர்த்து அடையாளங் காட்டுகிறேன்;

இரண்டாவது பிசாசு பத்து கற்பனைகள் வழியாக மட்டுமே இரட்சிப்பு என்ற கருத்தை மேலோட்டமாகவும் அதன் அடுத்தடுத்த கட்டங்களில் வேதத்தில் உயிர்த்தெழுதல் முதலாக ஒவ்வொரு போதனையிலும் விகர்ப்பமானவற்றை போதிக்கும்;

மூன்றாவது பிசாசு மறுபிறவி கொள்கையை உடையது;வேதம் மாத்திரமே வேதமல்ல,புத்தர் போன்ற மகான்கள் மூலமும் ஆண்டவர் பேசியிருக்கிறார்;சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்,சர்வ வல்ல இறைவனுடைய செயல்களை யாரும் கட்டுப்படுத்தவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்று போதிக்கிறார்; இயேசுவுக்குப் பிறகு பிறந்த அனைவரும் இவரைப் பொறுத்தவரை மறுபிறவிகளே; அதாவது இயேசுவின் மீட்புக்குள் அனைவரையும் கொண்டு வர அவருடைய பிறப்புக்கு முன் பிறந்து வாழ்ந்து மறைந்த அனைவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இறைவன் பிறக்கச் செய்திருக்கிறார்;அந்த வகையில் தானும் கூட ஆதி காலத்தில் சிவபெருமானாகவும் இடைப்பட்ட காலத்தில் இவரும் இவரது சகோதரரும் பிரபலமான இஸ்ரவேலின் சகோதரத் தலைவர்களாகவும் வாழ்ந்தவர்கள்; தற்போது இவர் வாழ்ந்துகொண்டிருப்பது மூன்றாவது பிறவி; இவருக்கு முற்பிறவிகளின் பல காரியங்கள் இன்னும் நினைவில் இருப்பது இவருடைய தனிச்சிறப்பு; தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் இவருடைய தளத்தின் அதிமுக்கியமான கட்டுரையானது சொல்லும் சேதி என்னவென்றால் "இயேசுவானவர் சிலுவையில் கொன்றது சாத்தானின் பகை" யே; சாத்தானை சமாளிக்க வேறு வழியில்லாமல் தேவன் தம்முடைய மகனையே பலியாக செலுத்தி உலக மக்களை மீட்டுக்கொள்ளுகிறார்; மேலும் ஆதிமுதல் பலி செலுத்திய அனைவருமே சாத்தானை குளிர்விக்கவே பலிசெலுத்தினர், என்கிறார்;

'ஆண்டவரையே பிசாசு என்று சொன்னார்களே ' என்று இவை நீலிக்கண்ணீர் வடிக்கும் ஆபத்து இருப்பதால் நாம் இவற்றை பிசாசுகள் என்று சொல்லாதிருப்பதே நல்லது.

ஜாக்கிரதை.. ஜாக்கிரதை... ஜாக்கிரதை..!
*********************************

சில்சாமின் இப்பதிவை சிலர் கைதட்டி வரவேற்றனர்; சிலர் கடிந்துகொள்ளவும் செய்தனர். ஆனால் தள நிர்வாகமோ மவுனம் சாதித்தது.

சில்சாமின் புண்படுத்தும் வார்த்தைகளைக் கடிந்துகொண்டு ராஜ்குமார் இவ்வாறு எழுதியுள்ளார்:


*********************************
சில்சாம் அவர்கள் கவனத்துக்கு: தங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் நீங்கள் சொல்லவரும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும், அதோடுகூட சில தேவையில்லாத வார்த்தைகளைச் சேர்த்துவிடுகிறீர்கள். உங்களுக்கு புத்திசொல்லும் தகுதியோ அனுபவமோ எனக்கு இல்லை ஆனாலும் எழுதும்போது கொஞ்சம் உணர்ச்சிவயப்படாமல் இருந்தாலே உங்கள் கருத்துக்கள் மற்றவர்களின் மனதில் எதிர்ப்பின்றி பதியும். தாங்கள் ஒருசில சமயங்களில் மற்றவர்களைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்திவிடுகிறீர்கள். இந்த வார்த்தைகள் நீங்கள் சொல்லவந்த கருத்துக்களை விழுங்கி முடிவில் உங்கள் மீது ஒருவித வெறுப்பை உண்டாக்கிவிடுகிறது.
*********************************

ஆனால், இதே ராஜ்குமார் மற்றொரு பதிவில் அவரும் சில்சாமைப் போலவே “பிசாசு” என எழுதியுள்ளார்:

*********************************
அன்பு போன்ற பிசாசுகள் பிதாவை வணங்குங்கள் ஆராதியுங்கள் என்று நயவஞ்சகமாகச் சொல்லுவதன் நோக்கம் நம்முடைய இரட்சகர் தேவாதிதேவன் இயேசு மகாஜாராஜா அவர்கள் சிலுவையில் சம்பாதித்து வைத்திருக்கும் பாவ மன்னிப்பான பொக்கிஷத்தை எப்படியாவது மனிதர்கள் அடையாமல் தடுத்துவிட வேண்டும் என்ற மட்டமான புளித்துப்போன சாத்தானின் தந்திரங்களில் ஒன்றுதான் இத்தகைய பிசாசும் (அன்பு) என்பதை அறிந்துகொள்ளுங்கள்
*********************************

இதையெல்லாம் நான் எடுத்துக்காட்டுவது புண்படுத்தும் வார்த்தைகளால் நான் புண்பட்டதைச் சொல்வதற்காக அல்ல. கிறிஸ்துவின் சிலுவையை எடுத்து நடப்பவனுக்கு இதெல்லாம் சகஜம் என்பது நான் அறிந்ததே. ஆயினும் “தமிழ் கிறிஸ்தவ தளத்தின்” பாரபட்சத்தை எடுத்துக்காட்டவே இதெல்லாம்.

இது போன்ற ஆதாரங்கள் இன்னும் ஏராளமாக உள்ள்ன. சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவை எடுத்துக்காட்டப்படும். மற்ற அன்பர்களும் ஆதாரத்துடன் தாங்கள் அறிந்ததை எடுத்துரைக்கலாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
வேதாகம விசுவாசிகளையும் விட்டுவைக்காத “தமிழ் கிறிஸ்தவ தளம்”
Permalink  
 


தற்கால சகவிசுவாசிகளை தள விதிமுறைகளுக்கு மாறாக கேவலமான வார்த்தைகளால் திட்டுவதை அனுமதித்து வரும் “தமிழ் கிறிஸ்தவ தளம்”, தற்போது வேதாகம விசுவாசிகளைத் திட்டுவதையும் கொஞ்சகொஞ்சமாக அனுமதித்து வருகிறது.

உதாரணம் 1:

//தேவ மனிதன் (மோசே) கொலை செய்வானா? ஒரு கொலைகாரனை எப்படி கடவுள் தன் மக்களுக்கு தலைவனாக்க முடியும்? இல்லை இதெல்லாம் கட்டுக்கதையா?//

//விருத்தசேதனம் இல்லாமல் தன் பிள்ளைகளை அழைத்து வரும் மோசேயை தேவன் கொல்லப்பார்க்கிறார். மோசே உயிரோடு இருக்கவே தேவன் விரும்பவில்லை. அவன் தேவன் என்னோடு முகம் முகமாய் பேசினார் என்று சொல்லியிருக்கிறானே, இவனை விடப் பொய்காரனை இது வரை நான் பார்த்ததில்லை அப்படியானால் பைபிளில் வரும் மோசே ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று இந்த ஆதாரத்தை வைத்து நான் சொல்லுகிறேன்.//

//தேவன் கோலை நீட்டி கட்டளையிடச் சொன்னால் இவன் அடிக்கிறான்; இப்படி ஒரு சாதாரண கீழ்ப்படிதல் கூட இல்லாத வணங்காக் கழுத்துள்ளவனான மோசே எப்படி, “இலட்சக்கணக்கான மக்களை வழி நடத்திச் செல்வதற்கு தலைவனாக தேவன் என்னை நியமித்தார்” என்று கதை விட முடிகிறது?//

//முரடன் கள்ளத்தீர்க்கதரிசி சிறு வார்த்தைக்கு கூட கீழ்ப்படிய முடியாத முரட்டாட்டமுள்ள‌ அந்த மோசேயை தேவன் எழுப்பவே இல்லை என்று ஆதாரத்துடன் யாராவது நிரூபியுங்கள்.
அல்லது நான் சொல்வதை ஏற்றுக்கொண்டு மோசேயும் அவன் எழுதிய பஞ்சாகமமும் தவறு, அது ஒரு கட்டுக்கதை என்று நான் சொல்வதை ஒப்புக்கொண்டு விட்டு பிறகு தேவன் எழுப்பிய ஊழியர்களுக்கு விரோதமாகக் குறைசொல்ல வாருங்கள்//

//இன்னொருவனைப் பாருங்கள். இவனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனாலும் அடுத்தவன் மனைவி குளிப்பதைப் பார்க்கிறான். பைபிள் சொல்லுகிறது இவன் தேவனுடைய தாசனாம்.

இது போல தவறுகளைச் செய்பவர்களை நிச்சயமாக தேவன் எழுப்பியிருக்க மாட்டார், ஆகவே இவர்கள் எழுதிய புத்தகங்களை படித்து அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதற்காகவே நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆகவே இனி முரடனான மோசே எழுதிய 5 புத்தகங்களையும், அடுத்தவனின் மனைவியைக் கொள்ளை கொண்ட தாவீது என்பவன் எழுதிய சங்கீத புத்தகத்தையும் படிக்க வேண்டாம்.//

தான் கண்மூடித்தனமாக ஆதரிக்கிற ஒரு போலி ஊழியருக்கு வக்கலாத்து வாங்குவதற்காக, ராஜ்குமார் என்பவர் வேதாகம விசுவாசிகளைத் தரக்குறைவாக விமர்சிக்குமளவுக்கு மதிமயங்கிவிட்டார்.

அவரது வாதம் என்னவெனில்:
வேதாகம ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கப்படுமளவுக்கு குற்றம்புரிந்துள்ளனர்; ஆகிலும் தேவனும் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளார், நாமும் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதேபோல தற்கால போலி ஊழியர்களையும் நாம் ஏன் ஏற்கக்கூடாது என்பதே.

இவரது வாதம் அறிவீனமானது. தற்கால ஊழியர்கள் விமர்சிக்கப்படுவது அவர்களின் தனிப்பட்ட மாம்ச பெலவீனங்களால் செய்கிற பாவங்களுக்காக அல்ல; தேவஊழியத்தை ஆதாயத்தொழிலாக்கி, தங்கள் சுயஆதாயத்திற்காக (ராஜ்குமார் போன்ற?) அப்பாவி ஜனங்களை வஞ்சிக்கிற போலி ஊழியர்களாக இருப்பதால்தான் அவர்கள் விமர்சிக்கப்படுகின்றனர்.

மோசேயோ தாவீதோ போலி ஊழியர்கள் அல்ல; அதாவது, தங்கள் சுயஆதாயத்திற்காக ஜனங்களை வஞ்சித்து ஊழியம் செய்தவர்கள் அல்ல.

தனிப்பட்ட மனித/மாம்ச பலகீனத்தில் வழுக்கிவிழுதல் மற்றும் விசுவாசத்தில் குறைவுபடுதல் ஆகியவைகளே அவர்களின் தவறுகள். அவை தேவனுக்கு மட்டுமே விரோதமான பாவங்கள். (சங்கீதம் 51:4-ஐப் படித்துப் பார்க்கவும்)

தாவீதின் பாவம், தேவனின் சத்துருக்கள் தேவனை தூஷிக்கக் காரணமானது (2 சாமுவேல் 12:14).

கோலால் கன்மலையை அடித்த விஷயத்தில், மோசேயின் கீழ்ப்படியாமை கர்த்தரின் பரிசுத்தத்தைக் கேள்விக்குறியாக்கினது (எண்ணாகமம் 20:12).

ஆக, மோசேயின் மீறுதலும் தாவீதின் பாவமும் கர்த்தருக்கே விரோதமானவை. மனுஷருக்கு விரோதமானவையல்ல (உரியா கொலை செய்யப்பட்டதால், தாவீதின் செயல் உரியா எனும் தனிமனிதனுக்கு விரோதமாகக் காணப்பட்டாலும், தனிப்பட்ட உரியா மீது தாவீதுக்கு பகையோ வெறுப்போ கிடையாது. தேவனுக்கு விரோதமான தாவீதின் பாவத்தால் வந்த பின்விளைவே உரியா கொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். தாவீதின் மனச்சாட்சி உரியாவுக்கு விரோதமானது அல்ல; தேவனுக்கு மட்டுமே விரோதமானது). கர்த்தருக்கு விரோதமான மீறுதல்களை மோசேயும் தாவீதும் செய்ததற்குக் காரணம் முழுக்க முழுக்க அவர்களின் மாம்ச பெலவீனமேயன்றி, சுயஆதாயமோ வஞ்சகமோ அல்ல.

ஆனால் தற்போதைய போலி ஊழியர்கள் விமர்சிக்கப்படுவது அவர்களின் சுயஆதாய செயலுக்காகவும் வஞ்சக ஏமாற்றுக்காகவுமேயன்றி தனிப்பட்ட மாம்ச பலவீனங்களுக்காக அல்ல. (தனிப்பட்ட மாம்ச பெலவீனங்களுக்காக யாரையாவது யாராவது விமர்சித்தால் அது நிச்சயமாகத் தவறே. ஏனெனில் நாம் அனைவருமே மாம்ச பெலவீனங்களுக்கு ஆளாகக்கூடியவர்களே.)

ஊழியத்தின் பாதையில் தாவீதோ மோசேயோ யாரையும் வஞ்சித்து சுயஆதாயம் அடையவில்லை. ஆனால் இன்றைய போலி ஊழியர்களின் பிரதான தவறு சுயஆதாயத்திற்காக ஜனங்களை வஞ்சிப்பதுதான். இந்த கேடுகெட்ட போலி ஊழியர்களுடன் (தேவனால் சாட்சி பெற்ற) வேதாகம ஊழியர்களை ஒப்பிடுவதென்பது, தேவனையே தூஷிக்கிற அறிவீனமான செயலாகும்.

ராஜ்குமார் போன்றவர்கள் இன்றைய போலி ஊழியர்களை தாரளமாக ஆதரிக்கட்டும்; ஆனால் அதற்காக வேதாகம உத்தம ஊழியர்களை இவர்களுக்கு நிகராக ஒப்பிட்டு தங்களுக்கு
ஆக்கினையை வருவித்துக் கொள்ளவேண்டாம் என எச்சரிக்கிறேன்.

வேதாகம நல்ஊழியர்களை தரக்குறைவாக விமர்சித்து ராஜ்குமார் எழுதின பதிவுகளை அனுமதித்திருப்பது, தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிமுறை மீறல்களுக்கு மற்றுமொரு ஆதாரமாக உள்ளது.


உதாரணம் 2:

//இந்த ஆகார் பாருங்க, எவளுக்கும் வராத சூப்பர் ஐடியா கொடுக்குறா ஆபிரகாமுக்கு.... புருஷனையே ஷேர் பண்ணிக்க ஐடியா கொடுக்கிறா..... வீட்டுல வேலக் காரிய வச்சிக்கிட்டா எங்க புருஷன் வேலி தாண்டிடுவானோ என்று இந்த காலத்து பொம்பலைங்க எல்லாம் பயந்துகிட்டு இருக்கிற நிலையிலே, இந்த கொழுப்பு புடிச்ச ஆகார், வேலைக் காரி கூட படுக்க... ச்சீ, ச்சீ.... அபச்சாரம், அபச்சாரம்....//

//இந்த சாராள் பாருங்க, எவளுக்கும் வராத சூப்பர் ஐடியா கொடுக்குறா ஆபிரகாமுக்கு.... புருஷனையே ஷேர் பண்ணிக்க ஐடியா கொடுக்கிறா..... வீட்டுல வேலக் காரிய வச்சிக்கிட்டா எங்க புருஷன் வேலி தாண்டிடுவானோ என்று இந்த காலத்து பொம்பலைங்க எல்லாம் பயந்துகிட்டு இருக்கிற நிலையிலே, இந்த கொழுப்பு புடிச்ச சாராள், வேலைக் காரி கூட படுக்க... ச்சீ, ச்சீ.... அபச்சாரம், அபச்சாரம்.... //

முதலில் தவறாக ஆகார் எனக் குறிப்பிட்ட ரவாங்ஜான்சன் என்பவர், பின்னர் தவறைத் திருத்தி, சாராள் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஆகாரை விமர்சித்தாலும் சரி, சாராளை விமர்சித்தாலும் சரி, யாரையும் இப்படி தரக்குறைவாக, கொழுப்பு பிடிச்ச ஆகார்/சாராள் என்றெல்லாம் விமர்சிக்க அவருக்கு சற்றும் அருகதையில்லை. இப்படி அவர் எழுதினதை எப்படித்தான் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிமுறை அனுமதித்ததோ, தெரியவில்லை.

ஆகார் என்பவள் ஒரேயொரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மட்டுமே ஆபிரகாமுடன் புருஷ சம்போகத்தை அறிய அனுமதிக்கப்பட்டாள். அதுவும் அவளது விருப்பதை அறிந்து அனுமதிக்கப்படவில்லை. குழந்தையைப் பெற்றெடுத்தபின் அவள் ஆபிரகாமுடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டாள் என்பதோடு, பிற புருஷ சம்போகத்திற்கும் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டாள் என்றே நான் கருதுகிறேன். அப்படிப்பட்ட உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஆகாரை விமர்சிக்க அற்பர்களாகிய நமக்கு என்ன தகுதி உள்ளது?

ஆகார் செய்த ஒரே தவறு, தான் கர்ப்பவதியானதும் தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினது மட்டுமே (ஆதி. 16:4). மற்றபடி, அவளும் ஓர் உத்தமிதான். பாலைவனத்தில் தனது 13 வயது மகனை தோளில் சுமந்து சென்று, தண்ணீரில்லாமல் தவித்து, சாகக்கிடந்த வேளையிலும் தேவனை அவள் தூஷிக்கவில்லை. தேவதூதன் மூலம் தண்ணீரைக் கண்டு, தானும் தன் மகனும் உயிர் பிழைத்தபோது, ”நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று சொல்லி நன்றியோடு தேவனுக்குப் பெயர் சூட்டியவள் அவள்.

அவ்வேளையில் அவள் தனக்கு நேர்ந்த சிறுமையையெல்லாம் சற்றும் நினைத்துப்பார்க்கவில்லை, அவற்றினிமித்தம் தேவனிடம் முறுமுறுக்கவுமில்லை.

அடுத்து, சாராளைக் குறித்து பார்ப்போம். திருமணமாகி 3 மாதங்களில் குழந்தை உண்டாகாவிட்டால், இன்றைய பெண்கள் படுகிற பாட்டை நாம் அறிவோம்; அப்பாடுகளின் காரணமாக அப்பெண்கள் தேவனை நோக்கி முறுமுறுக்கத் துணிவதையும் நாம் அறிவோம். ஆனால் சாராளோ, 90 வயது வரை பிள்ளை இல்லாதிருந்தும் தேவனை நோக்கி முறுமுறுக்காமல், தனது அடிமைப்பெண்ணின் மூலமாவது தன் புருஷனின் சந்ததி தழைக்கட்டும் என்ற பரந்த மனம் உள்ளவராகவே இருந்தார். அப்படிப்பட்ட சாராளை, நாலாந்தர மனிதர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால் விமர்சிக்க ரவாங்ஜான்சனுக்கு எப்படி மனம் வந்ததோ, அதை அனுமதிப்பதற்கு தமிழ் கிறிஸ்தவ தள நிர்வாகிகளுக்கு எப்படி மனம் வந்ததோ, தெரியவில்லை.

அதிலும் “கொழுப்பு பிடிச்ச சாராள்” எனும் விமர்சனத்திற்கு ரவாங்ஜான்சன் தகுந்தவிதத்தில் தேவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை அறிவாராக.

ஜாதிகளுக்குத் தாயாக இருப்பாள் என தேவன் நேரடியாக சொல்லி ஆசீர்வதித்த சாராளை (ஆதி. 17:16), சற்றும் நாகூசாமல் விமர்சித்த ரவாங்ஜான்சனையும் அவரது பதிவை அனுமதித்த தமிழ் கிறிஸ்தவ தளத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ் கிறிஸ்தவ தளம் எத்தனை மட்டமான நிலைக்கு இறங்கிவிட்டது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

பன்றிகளின் தளமாகிப் போன தமிழ் கிறிஸ்தவ தளம் என ஒரு பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன். எனது கூற்றை அத்தளம் தற்போது வெளியரங்கமாக நிரூபித்துவருகிறது.

இதைப் படிக்கிற தமிழ் கிறிஸ்தவ தளத்தின் உறுப்பினர்களில் யாருக்காவது அத்தளத்தின் மீதும் தள உறுப்பினர்கள் மீதும் அக்கறையிருந்தால், இப்பதிவை அத்தளத்தில் பதிக்குமாறு வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்
Permalink  
 


bereans wrote:
//மொத்தத்தில் தமிழ் கிறிஸ்தவ தளமும், நம் அரசியல்வாதிகளும் ஒன்றே,

THE LAW (RULE) MAKERS ARE THE LAW (RULE) BREAKERS!!

அவர்களின் விதிமுறைகள் என்பது கண்துடைப்பு, மார்ஸ் மேடை என்பது ஒரே ராகத்தை அனைவரும் சேர்ந்து பாடுவது, விவாதத்திற்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது என்பது தான் சரி!!//

Well said Bro.bereans


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

தமிழ் கிருத்துவ தளத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறைதான் இன்று சில தளங்கள் புதிதாக உருவாகி வளர்ந்ததற்க்கு காரணம். தங்களுக்கு தெரிந்தவர்கள் சொல்லும் கருத்துக்கள் எவ்வளவு தவறானதாக இருந்தாலும், எவ்வளவு அபத்தமானதாக இருந்தாலும்  அதை அனுமதிக்கும் இந்த தளம், தங்களுக்கு பரிச்சியமில்லாதவர்கள் எதாவது நல்ல செய்திகளை எழுதினால் கூட அதை நீக்கி விடுவதும் உண்டு.
தங்களால் விவாதிக்க முடியவில்லை என்று தோன்றும் பட்சத்தில் எந்த அறிவுப்பும் இல்லாமல் மற்றவர்களின் கருத்துக்களை நீக்கி விடுவார்கள்.
இதை கிருத்துவ தளம் என்பதை விட இஸ்லாம் எதிர்ப்பு தளம் என அழைப்பதே சரியானது. அவர்களையும், அவர்கள் நபியையும் மட்டமாக விமர்சிக்கும் இவர்கள், அவர்கள் கேட்கும் ஒரு சில சரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்களின் விவாதங்களையே நீக்கி விடுவார்கள். (உதாரணம் : வேதத்தில் தேவன் கொலை செய்யவும், கொள்ளை அடிக்கவும் சொல்லி இருக்கிறாரே அது எப்படி சரியாகும் போன்ற கேள்விகள்) இத‌ற்கு பெயர்தான் மார்ஸ் மேடை.
ஒரு சில தெரிந்த உறுப்பின‌ர்க‌ள் க‌ட்டுரை எழுதினால் அவ‌ர்க‌ளை வான‌ளாவ‌ புக‌ழுவ‌தும், ஒரு சில‌ர் எழுதினால் அதை க‌ண்டு கொள்ளாம‌ல் விடுவ‌தும் இன்த‌ த‌ள‌த்தின் ப‌ண்பாகும்.



__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

7000 முறை யெகோவா என்று பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை தான் சொல்லப்பட்டது என்று ஒரு விநோதமான பதிவை பார்த்தேன்!! ஒரு நிமிஷம் ஆடி போய்விட்டேன்!! தேவ தூஷனத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது!! அதை அனுமதிக்கும் தமிழ் கிறிஸ்தவ தளமும் அதே தேவதூஷனத்தில் பங்கு உள்ளவர்களாக இருக்கிறார்கள்!!

சந்தோஷ் அவர்கள் மிகவும் சரியாக தான் சொல்லியிருக்கிறார்!! தமிழ் கிறிஸ்தவ தளம் என்பதற்கு பதிலாக தமிழ் இஸ்லாமியர்கள் ஹிந்துக்கள் எதிர்ப்பு தளம் என்று வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்!1

ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை அல்லது பதில் சொன்னால் அவர்களின் கோட்பாடுகள் இடிந்து விழும் என்று உனர்ந்தால் அந்த குறிப்பிட்ட பதிவை நீக்கி விடுவார்கள்!! இரவெல்லாம் கஷ்டப்பட்டு உட்கார்ந்து எழுதியதை எல்லாம் ஒரு வினாடியில் சுலபமாக நீக்கி விடுவார்கள்!! அடுத்தவர்களின் கஷ்ட்டம் புரியாதவர்களாக இருப்பவர்கள்!! பல முறை என் பதிவுகளை நீக்கியும் இருக்கிறார்கள்!! அவர்கள் நிர்வாகியிடம், சரி பதிவை நீக்கிவிட்டீர்கள், அதை என் தனி மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று கேட்டும் அந்த நிர்வாகத்திடமிருந்து ஒரு ஆறுதல் பதில் கூட கிடையாது, அத்துனை அநாகரீகமான ஒரு தளம், தமிழ் கிறிஸ்தவ தளம் என்று சொன்னால் மிகையாகாது!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இத்திரியில் பதிவைத் தந்து கருத்தைக் கூறிய சகோ.சந்தோஷ் மற்றும் பெரியன்ஸ்-க்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இன்று (09-02-2011) மூடப்பட்டுள்ள ஒரு திரியில்கூட (மதிகேடு நிறைந்த மனைவி யார்? ஏவாளா, சாராளா?), திரியை மூடியதில் தளநிர்வாகம் தனது விதிமீறலைக் காட்டியுள்ளது.

09-02-2011-ல் காலை 04:14-க்கு நாளை (அதாவது 10-02-2011) திரி மூடப்படும் என நிர்வாகிகளில் ஒருவரான அற்புதம் கூறியுள்ளார். உடனடியாக சில்சாமும் ரவாங்ஜான்சனும் தங்கள் பதிவைக் கொடுத்துள்ளனர். குறிப்பாக ரவாங்ஜான்சன் வேதாகம ஸ்திரீகளான ஏவாள் மற்றும் சாராளோடு விவாதத்தில் பங்குகொண்ட ஒரு சகோதரியையும் மிகவும் மட்டந்தட்டி இவ்வாறு பதித்துள்ளார்.

//ஒரு வேளை ஆதாமும் அப்படிதான் செய்திருப்பான். அந்தக் கனியை ஏவாள் கொண்டு வந்த போது, அவன் சும்மா இருந்திருக்க மாட்டான். நிச்சயமாக மனைவியைத் திட்டியிருப்பான். ஆனால், மதி மயங்கிப் போன மனைவியோ இங்குப் பதிக்கப்பட்ட கடுஞ் சொற்களைப் போன்றே ஆதாமைத் திட்டி தன் எண்ணத்தை நிறைவேற்றியிருப்பாள். சாராள் கூட அதே காரியத்தைத் தான் செய்திருக்க வேண்டும். மகப் பேறு இல்லாத நிலையில், தானும் ஒரு குழந்தையைக் கொஞ்சி மகிழவேண்டும் என்ற எண்ணத்தில் ஆபிரகாமிற்கு அப்படியொரு அபத்தமான ஆலோசனையை வழங்கிருப்பாள். விசுவாசத்தின் தந்தை என்று புகழப்பட்ட ஆபிரகாமோ, எவ்வளவோ வாக்கு வாதம் பண்ணியிருப்பான். இந்த புரோப்போசலை ரிஜெக்ட் பண்ண நினைத்த ஆபிரகாமை சாராள் எப்படியெல்லாம் திட்டியிருப்பாள் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்த வார்த்தைகளை நிச்சயமாக நான் இந்தத் தளத்தில் பதிக்க மாட்டேன். ஏன் என்றால், அவ்வளவு கேவலமான வார்த்தைகள் அவை. இவ்வளவு கேவலமான வார்த்தைகளால் ஆபிரகாம் மனமுடைந்து போயிருக்க வேண்டும். (இங்கு ஜோசப், சில்சாம் எல்லாம் மனமுடைந்து போன மாதிரி)//

ஜாதிகளின் தாயானவரும் தேவனால் நேரடியாக ஆசீர்வதிக்கப்பட்டவருமான சாராள், கேவலமான வார்த்தைகளால் ஆபிரகாமை திட்டியிருப்பார் எனும் தனது கற்பனையை துணிகரமாக அவர் பதித்துள்ளார். ஏற்கனவே “கொழுப்பு பிடிச்ச சாராள்” என அவர் சொன்னதை வேடிக்கை பார்த்த நிர்வாகம், இதையும் வேடிக்கை பார்ப்பதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. “நிர்வாகம் தனது பெண் உறுப்பினர்களை மதிக்கிறதோ இல்லையோ, வேதாகம பெண் விசுவாசிகளை மதிப்பதில்லை”.

திரி மூடல் அறிவிப்பு கொடுத்து ஒரு சில மணி நேரத்துக்குள் இருவர் பதிவைத் தந்ததும், 09-02-2011 காலை 6:44-க்கு திரி மூடப்பட்டுள்ளது. நாளை மூடப்படும் என அறிவித்துவிட்டு அவசர அவசரமாக 2 1/2 மணி நேரத்திற்குள் திரியை மூடியுள்ளனர். அதாவது விவாதத்தின் முக்கிய உறுப்பினரான சகோ.கோல்டா தனது பதிவைக் கொடுப்பதற்குமுன் மூடிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திரியை மூடியதாகத் தோன்றுகிறது. அவர்கள் எந்த நோக்கத்தில் மூடினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால், அறிவிப்பில் கூறப்பட்டபடி 24 மணி நேர அவகாசம் கொடாமல் 2 1/2 மணி நேரத்துக்குள்ளாக மூடியதுதான் அவர்களின் விதிமுறை மீறுதலாக உள்ளது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 18
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்
Permalink  
 


தளநிர்வாகிக்கும் மற்றும் சகோதரர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

இயலுமானவரை தமிழ் கிறிஸ்தவர்கள் தளம் தொடர்பான உங்கள் குற்றசாட்டுகளுக்கு  பதில் தர முயற்சிக்கிறேன். ஆயினும் இது எனது சொந்தக் கருத்தே!. கடந்த சில வருடங்களாக அங்கு பதிவிடுவதால் ஏற்பட்ட அனுபவங்கள் படிப்பினைகள் அடிப்படையில் பதில் எழுதுகிறேன்.

சகோ. அன்பு அவர்களே இது எனது பொதுவான கேள்வி

நீங்கள் இன்னும் தமிழ்கிறிஸ்தவ தளத்தின் ஒரு அங்கத்தினர் தானே!. உங்கள் குறிப்பிடும் குற்றசாட்டுக்களை ஏன் தமிழ்கிறிஸ்தவ தளத்தில் பதிக்கவில்லை? அல்லது ஒரு மெயிலாவது அனுப்பி தளநிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு போனீர்களா? தயவு செய்து அறியத் தாருங்கள்.

சகோ. அன்பு அவர்கள் எழுதியது

ஆனால் “தமிழ் கிறிஸ்தவ தளம்” எனும் பெயரை வைத்துக் கொண்டு அதுவுங்கூட பாரபட்சமாக தனக்கு சாதகமான நேரங்களில் விதிமீறல்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும், தனக்குப் பாதகமான நேரங்களில் விதிமுறைகளை அமல்படுத்த தீவிரப்படுவதும் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.


இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு ஏன் உரிய நேரத்தில் தளநிர்வாகத்திற்கு அறிவிக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் விதிமுறைகளை மீறும் பல பதிவுகளை நீக்கியே வந்திருக்கிறார்கள். சில தடவைகள் என்னுடைய பதிவுகளை நீக்கியுள்ளார்கள். எல்லாப் பதிவுகளையும் கண்காணிப்பது மிக சிரமமான விடயம். புதியவர்கள் வரும்போது அவர்களின் பதிவுகள் அதிகம் கண்காணிக்கப்படுகின்றன. தளத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்புடன் நடக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள். அப்படியும் ஒருசில மூத்த உறுப்பினர்கள் விதிமுறைகளை மீறிவிடுவதும் உண்டு. சில பதிவுகள் அவ்வாறு நீக்கப்படுகின்றன. இதன் போது நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல போகும் பதிவுகளும் உண்டு.

சகோ. அன்பு அவர்கள் எழுதியது

மிகத்தீவிரமாயிருக்கும் அத்தளம், கிறிஸ்துவின் நீதியை காலின் கீழ் போட்டு மிதித்து, கிறிஸ்துவை கனவீனப்படுத்தி வருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது

கிறிஸ்துவை கனவீனப்படுத்தும் பதிவினை தொடுப்பை சுட்டிக் காட்டுங்கள். மிக உபயோகமாக இருக்கும் சகோதரரே!


சகோ. அன்பு அவர்கள் எழுதியது

இவ்விதிகளின்படி, பிறரைத் துன்படுத்தி புண்படுத்தும் பதிவுகள் தள நிர்வாகத்தினரால் அவ்வப்போது நீக்கப்படுவதென்னவோ மெய்தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் (தள நிர்வாகத்தின் பிரதான கொள்கைகளுக்கு ஒத்துப்போவோர் எனச் சொல்லலாம்) தங்களுக்குள் மோதும்போது மட்டும், அவ்வாறு செயல்படும் நிர்வாகம், இஸ்லாமியர் மற்றும் திரித்துவத்தை ஏற்காதவர்கள் ஆகியோரைத்  துன்பப்படுத்தி புண்படுத்தும் வார்த்தைகள் பதியப்படும்போது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கவே செய்கிறது. இதற்கான ஆதாரம்:

தளநிர்வாகம் ஒழுக்க நடவடிக்கை விடயத்தில் மதபாகுபாடு பார்ப்பதில்லை. இஸ்லாமியர்கள தனிப்பட்ட விதத்தில் தாக்கும் பல பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. சிலரை தளநிர்வாக நேரடியாக எச்சரித்துள்ளது. வசதியாக அதனை மறைத்து விட்டீர்கள்.  இன்னும் சில இஸ்லாமியர்கள் அங்கு தொடர்ந்து அங்கத்தினராக இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.


சகோ. அன்பு அவர்கள் எழுதியது

சம்பந்தப்பட்ட நபரை ஒருமையில் அழைத்துவிட்டு, அதற்குச் சப்பைக்கட்டாக பிசாசைச் சொன்னதாக சொல்கிறார். ஒருவரை ஒருமையில் அழைத்தாலும் சரி, அல்லது அவரைப் பிசாசு எனச் சொன்னாலும் சரி, அது அவரைப் புண்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், அவ்வார்த்தைகளை தள நிர்வாகம் ஏன் அனுமதித்தது?

உங்கள் கருத்திற்கு உடன்படுகிறேன். தளநிர்வாகத்திற்கு இப்பதிவிலேயே அதுபற்றி அறிவித்து இருந்தேன்.
எல்லாம் சரி நீங்கள் மட்டும் சகோ. ராஜ்குமாருக்கு பேதையர், சகோ. சில்சாமிற்கு அறிவிலி என்ற பதங்களை பாவிப்பது எந்த வகையில் நியாயமானது என கருதுகிறீர்கள். இது உங்கள் தளத்தின் விதிமுறை மீறல் இல்லையா? சகோ. ராஜ்குமாருக்கு நான் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். உங்களை விளித்த முறை குறித்து அவருக்கு அறிவுறுத்தி எழுதியுள்ளேன்.


சகோ. அன்பு அவர்கள் எழுதியது

தான் கண்மூடித்தனமாக ஆதரிக்கிற ஒரு போலி ஊழியருக்கு வக்கலாத்துவாங்குவதற்காக, ராஜ்குமார் என்பவர் வேதாகம விசுவாசிகளைத் தரக்குறைவாக விமர்சிக்குமளவுக்கு மதிமயங்கிவிட்டார்.

இதற்காக உண்மையிலேயே அவர் மனம் வருந்தியது தங்களுத்துத் தெரியாத விடயம். எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் மெயில் அனுப்பியிருந்தார். அவர் எந்த ஊழியரையும் தற்போது சார்ந்திருக்கவில்லை என கூறுகிறார். ஏனென்றால் ஊழைியர்களால் பட்ட அவர் அவதி அதிகம்.

சகோ. அன்பு அவர்கள் எழுதியது

தற்கால சகவிசுவாசிகளை தள விதிமுறைகளுக்கு மாறாக கேவலமான வார்த்தைகளால் திட்டுவதை அனுமதித்து வரும் “தமிழ் கிறிஸ்தவ தளம்”, தற்போதுவேதாகம விசுவாசிகளைத் திட்டுவதையும் கொஞ்சகொஞ்சமாக அனுமதித்து வருகிறது.

அனுமதித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஏற்கனவே நான் கூறியபடி மூத்த உறுப்பினர்கள் பொறுப்பாக எழுதும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். தளநிர்வாகிகளுக்கு இந்த விடயத்தில் நம்பிக்கை உண்டு. அதையம் மீறி சிலர் செய்து விடுகிறார்கள். ஆயினும் சில சகோதரர்கள் இப்படிப்பட்ட பதிவுகளுக்கு பதில் எழுதுகிறார்கள்.

சகோ. அன்பு அவர்கள் எழுதியது
திரி மூடல் அறிவிப்பு கொடுத்து ஒரு சில மணி நேரத்துக்குள் இருவர் பதிவைத் தந்ததும்,09-02-2011 காலை 6:44-க்கு திரி மூடப்பட்டுள்ளது. நாளை மூடப்படும் என அறிவித்துவிட்டு அவசர அவசரமாக 2 1/2 மணி நேரத்திற்குள் திரியை மூடியுள்ளனர். அதாவது விவாதத்தின் முக்கிய உறுப்பினரான சகோ.கோல்டா தனது பதிவைக் கொடுப்பதற்குமுன் மூடிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திரியை மூடியதாகத் தோன்றுகிறது. அவர்கள் எந்த நோக்கத்தில் மூடினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால், அறிவிப்பில் கூறப்பட்டபடி 24 மணி நேர அவகாசம் கொடாமல் 2 1/2 மணி நேரத்துக்குள்ளாக மூடியதுதான் அவர்களின் விதிமுறை மீறுதலாக உள்ளது.

நல்ல அழகான கற்பனை. உங்கள் காலநேர கணிப்பு எங்கோ உதைக்கிறதே.
சகோ. கோல்டாவின் பல பதிவுகள் உடனுக்குடன் நீக்கப்பட்ட நிலையில் அவர் பதிவிடுவார் அதற்கு முன் மூடிவிடுவோம என தளநிர்வாகம் நினைத்ததா? பொருத்தற்ற குற்றசாட்டு அவர் அப்படியே பதிவிட்டிருந்தாலும் அது தளவிதிமுறையை மீறியிருந்தால் நீக்கப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லையெனில் நீக்கப்பட்டிருக்காது. .


__________________


Member

Status: Offline
Posts: 18
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்
Permalink  
 


Bro. SANDOSH Wrote
//தமிழ் கிருத்துவ தளத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறைதான் இன்று சில தளங்கள் புதிதாக உருவாகி வளர்ந்ததற்க்கு காரணம். //


அபத்தமான கருத்து. தளங்கள் புதிதாக உருவாகி வருவதற்கும் தமிழ் கிறிஸ்தவதளத்திற்கும் என்ன சம்பந்தம்? .தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்திலுள்ள பெரும்பாலான அங்கத்தினர்களிடம் சொந்த வலைத்தளங்கள் உண்டு. தளத்தில் பிரதான பங்கு வகிக்கும் தளநிர்வாகிகளுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட தளங்கள் உள்ளன.. அவற்றில் பல தமிழ்கிறிஸ்தவதளம் உருவாக்கப்பட்ட பின்னர் தோன்றிய தளங்களாகும்.

Bro. SANDOSH Wrote
//தங்களுக்கு தெரிந்தவர்கள் சொல்லும் கருத்துக்கள் எவ்வளவு தவறானதாக இருந்தாலும், எவ்வளவு அபத்தமானதாக இருந்தாலும் அதை அனுமதிக்கும் இந்த தளம், தங்களுக்கு பரிச்சியமில்லாதவர்கள் எதாவது நல்ல செய்திகளை எழுதினால் கூட அதை நீக்கி விடுவதும் உண்டு.//

இதுவும் தவறான கருத்துதான். தளவிதிமுறைகளுக்கு உட்படாத பதிவுகள் எவையானாலும் அவை நீக்கப்படும. எனது பதிவுகளும் பல நீக்கப்பட்டுள்ளன. முன்னர் நான் தளநிர்வாகத்திற்கு பரிச்சயமானவன் அல்ல ஆயினும் என் பல பதிவுகள் அந்த சந்தர்ப்பத்தி்ல் அனுமதிக்கப்பட்டன. அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரீட்சயமான பின்னரும் எனது பதிவுகள் நீக்கப்பட்டன. இன்னும் பல புதியவர்கள் பதிவுகள் எழுதுகிறார்கள். அவை அனுமதிக்கப்படுகின்றனவே! எனவே நீங்கள் கூறுவதில் எதுவித உண்மையும் இல்லை.

Bro. SANDOSH Wrote
//தங்களால் விவாதிக்க முடியவில்லை என்று தோன்றும் பட்சத்தில் எந்த அறிவுப்பும் இல்லாமல் மற்றவர்களின் கருத்துக்களை நீக்கி விடுவார்கள்.//

இதுவும் தவறான கருத்துதான். தளநிர்வாகியை விட பல சகோதர்களே அதிக பதிவுகளை தந்தவர்களாக இருக்கிறார்கள். விவாதத்தில் நிர்வாகிகளை விட மற்ற சகோதர்களின் பங்களிப்பே மகத்துவமானது. விவாதங்கள் தவறான பாதையில் சென்றாலே அறிவித்தலின்பின் நீக்கப்படுகின்றன.

Bro. SANDOSH Wrote
//இதை கிருத்துவ தளம் என்பதை விட இஸ்லாம் எதிர்ப்பு தளம் என அழைப்பதே சரியானது. அவர்களையும், அவர்கள் நபியையும் மட்டமாக விமர்சிக்கும் இவர்கள், அவர்கள் கேட்கும் ஒரு சில சரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்களின் விவாதங்களையே நீக்கி விடுவார்கள். (உதாரணம் : வேதத்தில் தேவன் கொலை செய்யவும், கொள்ளை அடிக்கவும் சொல்லி இருக்கிறாரே அது எப்படி சரியாகும் போன்ற கேள்விகள்) இத‌ற்கு பெயர்தான் மார்ஸ் மேடை.//

மிகமிக கண்டிக்கத்தக கருத்து. மட்டமாக யாரையும் விமர்சிக்க தளம் இடம் தருவதில்லை. இஸ்லாமிய ஆதார வசனங்களோடுதான் எழுகிறார்கள். சகோதரர்கள். ஆதாரமில்லாமல் எழுதப்பட்ட ஒருபதிவையேனும் சுட்டிக் காட்ட முடியுமா? பைபிள் குறித்தே இஸ்லாமியர்கள் மோசமான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கிறார்கள். பதில் அளிக்காமல் ஒதுங்கிக் கொள்ள சொல்கிறீர்களா? இறுதியாக தெரிவித்த கருத்திற்கு வேத ஆதார வசனம் தரவும்.
இன்று இஸ்லாமியர்கள் கூறும் பொய்களுக்கு தமிழில் பதில் எழுத குறிப்பிட்டு சொல்லும்படி சகோதரர் ஒருவர்தான் உள்ளார். ஆனால் கூகுளில் கிறிஸ்தவம் என தட்டித் தேடிப்பாருங்கள். எண்ணற்ற கிறிஸ்தவ எதிர்ப்புத் தளங்களே முக்கிய இடம் பிடிக்கும்.

Bro. SANDOSH Wrote
//ஒரு சில தெரிந்த உறுப்பின‌ர்க‌ள் க‌ட்டுரை எழுதினால் அவ‌ர்க‌ளை வான‌ளாவ‌ புக‌ழுவ‌தும், ஒரு சில‌ர் எழுதினால் அதை க‌ண்டு கொள்ளாம‌ல் விடுவ‌தும் இன்த‌ த‌ள‌த்தின் ப‌ண்பாகும். /

இதுவும் அர்த்தமற்ற குற்றசாட்டு. புதியவர்களின் எத்தனையோ பதிவுகள் பாராட்டப்பட்டுள்ளன. ஏன் நான் கூட சகோ. அன்புவின் பதிவுகளை பாராட்டியுள்ளேன். பாராட்டைப் பெறுவதற்காகவும் கைத்தட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுவதும் சரியான முறையில்ல. ஒரு பதிவு பாராட்டைப் பெறாவிட்டாலும் அதிக பார்வையாளர்களைக கொண்டிருப்பதையும் மார்ஸ்மேடையை அழுத்திக் கண்டுகொள்ளுங்கள். பாராட்டைப் பெற்ற பல பதிவுகளை விட பாராட்டு எதனையும் பெறாத பல பதிவுகள் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருப்பதையும் காணலாம்.

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

colvin wrote:
//நீங்கள் இன்னும் தமிழ்கிறிஸ்தவ தளத்தின் ஒரு அங்கத்தினர் தானே!. உங்கள் குறிப்பிடும் குற்றசாட்டுக்களை ஏன் தமிழ்கிறிஸ்தவ தளத்தில் பதிக்கவில்லை? அல்லது ஒரு மெயிலாவது அனுப்பி தளநிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு போனீர்களா? தயவு செய்து அறியத் தாருங்கள்.//

அன்பான சகோதரரே!

தமிழ் கிறிஸ்தவ தளத்தின் "யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?" என்ற திரியில் நான் பதித்த ஒரு பதிவை இங்கு பதிக்கிறேன்; அதை சற்று படியுங்கள்.

//
நண்பர்களே!

இத்தளத்தில் இஸ்லாமியரையோ அல்லது திரித்துவத்தை ஏற்காதவர்களையோ யார் எத்தனை கடினமான வார்த்தைகளால் சாடினாலும் அதைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் திரித்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களை வேறு யாராவது கொஞ்சம் சாடினால் போதும், “தனிநபர் தாக்குதல்” என்றும் “தளவிதி மீறல்” என்று சொல்லி நிர்வாகம் குறுக்கிடுகிறது.


(இத்தளத்தின் விதிகள் அடங்கிய திரியின் தொடுப்பை யாரேனும் தந்தால் இதை நான் தகுந்த ஆதாரத்துடன் கூறுவேன்.)

இந்நிலையில் தற்போது ஒருசில நண்பர்கள், “தனிநபர் தாக்குதலுக்குள்ளான” எங்களுக்காக (நான், சுந்தர், கோவைபெரியன்ஸ்) பரிந்து பேசி, தங்கள் நியாய உணர்வை வெளிப்படுத்தியமைக்காக அவர்களுக்கு நன்றி சொல்லி, தேவனைத் துதிக்கிறேன்.

பொதுவாக இறைக்கொள்கை விஷயத்தில் அவரவர் தாங்கள் நம்புகிறதே சரி என்ற பிடிவாதத்தில்தான் இருப்பார்கள். ஆகிலும்,


“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எனும் குறள் கூறும் கருத்தின் அடிப்படையிலும்,

“1 தெச. 5:21 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

1 கொரி. 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்”


எனும் வசனங்கள் சொல்வதன் அடிப்படையிலும், அவரவர் சொல்லும் கருத்துக்களை நிதானித்து ஆராய்ந்து நலமானதைப் பிடித்துக் கொள்வதே அறிவுடைமையாகும்.

ஒருவேளை யாராவது வசனத்திற்கு விரோதமாகக் கூறினால்கூட, அதைத் தகுந்த வசனஆதாரத்துடன் சுட்டிக் காட்டி, தகுந்த எச்சரிக்கைகளைக் கொடுத்துவிட்டு, அவரது தவறான கருத்துக்களை நீக்குவதும் அவரை இத்தளத்தில் தொடர்ந்து பதிவிட அனுமதியாதிருப்பதும், தளநிர்வாகத்தின் உரிமையும் கடமையுமாகும்.

மாறாக, தள உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் இழிவான வார்த்தைகளால் சாடுதல் சரியல்ல. இதை தற்போதாவது ஒருசில நண்பர்கள் புரிந்துகொண்டமைக்காக மகிழ்கிறேன்.

இத்தளத்தில் சமீபத்தில் திரித்துவத்திற்கு எதிரான எந்தக் கருத்தையும் நானோ கோவைபெரியன்ஸோ சுந்தரோ கூறியதாகத் தெரியவில்லை.
(அப்படி யாரேனும் கூறியிருந்தால் அதை எடுத்துக்காட்டும்படி வேண்டுகிறேன்). ஆகிலும் எங்கள் தளங்களில் இது சம்பந்தமான விவாதங்கள் உண்டு என்பதை மறுக்கவில்லை. அந்த விவாதங்களின் அடிப்படையில்தான் “யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?” எனும் இத்திரியில், எங்கள் தளங்களின் தொடுப்புகளைத் தந்து, பிசாசுகளாகிய எங்களை அடையாளங்காட்டுவதாக சில்சாம் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை சிலர் பாராட்டவும் செய்தனர்.

“யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?” எனும் தலைப்புள்ள இத்திரியில், எங்கள் தளங்களின் தொடுப்புகளைத் தந்து, எங்களைப் பிசாசு என்று சொன்னால் எங்களை “யேகோவா சாட்சிக்காரர்” எனச் சொல்வதாகத்தான் அர்த்தம். இதை சிறுபிள்ளைகூட அறியும். எனவேதான் “அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக” எனும் வசனத்தின்படி சகோ.சுந்தர் தனது மறுப்பைத் தெரிவித்துள்ளார். மற்றபடி சில்சாமின் தரக்குறைவான வார்த்தைகள் என்னையோ சுந்தரையோ கோவைபெரியன்ஸையோ நிச்சயம் புண்படுத்தாது.

வேதவசனங்களால் பண்படுத்தப்பட்ட எங்களை எவரது வார்த்தைகளும் நிச்சயம் புண்படுத்தாது. எனினும் தனிநபர் தாக்குதல் என்பது, எடுத்துக் கொண்ட கருப்பொருளைக் குறித்த விவாதத்தை திசைதிருப்பிவிடும் என்பதாலும் எல்லாராலும் எல்லா வார்த்தைகளையும் சகிக்கஇயலாது என்பதாலும் தனிநபர் தாக்குதல் என்பது தவிர்க்கப்படத்தான் வேண்டும்.

ஆயினும் ஒரு குறிப்பிட்ட செயலின் அடிப்படையில் வேதாகமம் நேரடியாகச் சிலர் மீது சாடுகிற பிரகாரமாக நாமும் தனிநபர் மீது சாடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன். உதாரணமாக: உலக சினேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று சொல்லி, உலகசினேகத்தில் இருப்போரை “விபசாரர்” என யாக்கோபு சாடுகிற பிரகாரமாக, நாமுங்கூட உலகசினேகிதர்களைச் சாடுவதில் தவறில்லை என நான் கருதுகிறேன்.

அவ்வாறே தங்கள் சுயஆதாயத்திற்காக அப்பாவி விசுவாசிகளை வஞ்சிப்போரை வேதாகமம் சாடுகிறபிரகாரமாக நாமும் இன்றைய வஞ்சகர்களைச் சாடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன்.

ஆயினும் இது முழுக்க முழுக்க என் சொந்தக் கருத்து. எனது கருத்தோடு இத்தள நிர்வாகம் ஒத்துப்போக வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எதுவாயினும் அதை தளவிதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிட்டு, அவ்விதிமுறைகள் மீறப்படாதபடி கண்காணிப்பது தளநிர்வாகத்தின் பொறுப்பு.

தற்போது ஒரேயொரு கேள்வியோடு முடிக்கிறேன்.


“யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?” எனும் இத்திரியில் இறைவன் தளத்தின் தொடுப்பைத் தந்து, அத்தளத்தை பிசாசு என அடையாளங்காட்டினால், அத்தளத்தினரை “யேகோவா சாட்சிக்கார” எனச் சொல்வதாகத்தானே அர்த்தம்? அப்படியிருக்க, சில்சாம் தன்னை “யேகோவா சாட்சிக்காரர்” என வர்ணிப்பதாகச் சொல்லி, சில்சாமின் அபாண்டமான கருத்துக்கு சகோ.சுந்தர் மறுப்பு தெரிவிக்கையில், “நான் சுந்தரை “யெகோவா சாட்சிக்காரர்” என எங்குமே குறிப்பிடவில்லை எனச் சொல்லி, சில்சாம் சப்பைக்கட்டு கட்டுவது முறையாகுமா?//

இப்பதிவுக்குப் பின்னரும், என்னை வசைபாடுதல் தளத்தில் தொடரத்தான் செய்தது, நிர்வாகமும் அதை வேடிக்கை பார்க்கத்தான் செய்தது.

மாத்திரமல்ல, நிர்வாகக்குழுவின் ஓர் அங்கத்தினரான அற்புதம் அவர்கள் பின்வருமாறு ஒரு பதிவையும் தந்திருந்தார்.

//சகோ.கொல்வின் உங்கள் உங்கள் கருத்துக்களைக் கண்டோம். நம் தளத்தில் சகோ.சில்சாம் குறித்து கூறிய கூற்றுகளுக்கு சகோ.மைகோவை அவர்கள் சொன்னதே நிர்வாகக்குழுவின் கருத்தும் ஆகும். சமீப காலங்களாக நம் தளத்தில் அவ்வப்போது தனி நபர் தாக்குதல் எழுவது வருத்தமளிக்கிறது. சகோ. சில்சாம் அவர்களிடமும் முன்பு பலமுறை நான் நிர்வாகக்குழு சார்பாக பேசியிருக்கிறேன்.
பிரச்சனை என்னவெனில், கூடுமானமட்டும் உறுப்பினர்கள் எழுதுபவைகளை நிர்வாகக் குழு நீக்க விரும்புவதில்லை. நிர்வாகக் குழுவுக்கு வரும் கருத்துக்களை ஆராய்ந்தே செயல்படுகிறோம். ஒவ்வொருமுறையும் சொல்லுவது என்பதை விட நம் சகோதரர்களே புரிந்து சரியான வார்த்தைகளை தேர்வு செய்து எழுதினால் எவ்வித குழப்பமுமில்லை.
நாம் கோபம் கொள்ளும்போது கூட வார்த்தைகளை ஜாக்கிரதையாக எழுத வேண்டும். ஏனெனில் நாம் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் எழுதுகிற நாமே பொறுப்பு. பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். (யூதா 1:9)
நாம் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல வேண்டும் என்பதே நம் தள உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.

சகோ.சில்சாமுக்கு நாங்கள் கூற விரும்புவது என்ன வெனில், உங்களைக் குறித்து ஒரு சிறு விமர்சனம் எழுந்தால் கூட நீங்கள் அதற்கு சரியான பதில் கூறாமல் கோபப்பட்டு உங்கள் பதிவுகளை நீங்களே நீக்கியும் விடுகிறீர்கள். இதினால் யாருக்கு என்ன லாபம். உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் மிகுந்த பிரயாசத்தில் போடப்படுபவைகள் தானே! பின்னர் ஏன் அவசரப்படுகிறீர்கள். இப்போதும் நாங்கள் பொறுமையாகவே இருக்கிறோம்.
கடைசியாக நாம் சகோதரர்கள். நமக்குள் வாக்குவாதம் வேண்டாம் என்கிற வேத வசனத்தை நினைவு கூர்ந்து சமாதானமாகவும் தேவனுக்கு மகிமையாகவும் நம் உறவைத் தொடர்வோம். சகோ.கோல்வின் மற்றும் சகோ.சில்சாம் தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம்.//


இப்பதிவையுங்கூட, என்னைப் போன்றோரின் மீதான தனிநபர்தாக்குதல் காரணமாக அற்புதம் பதிக்கவில்லை. உங்களுக்கும் சில்சாமுக்கும் இடையே உண்டான மோதலினிமித்தமே அவர் பதிந்துள்ளார். இது ஒன்றே போதும், நிர்வாகத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு சாட்சியாக.

இப்படி ஒரு தலைப்பட்சமாக இயங்கும் தளத்தில், ஏற்கனவே எனது grievence-ஐ கூறின நான் வேறென்னதான் சொல்வது?

வேறெதுவும் சொல்ல இயலாத நிலையில்தான் இத்தளத்தில் “மத்தேயு 7:6 கூறுகிற பன்றிகளுக்கு உதாரணமாகிப்போன தமிழ் கிறிஸ்தவ தளம்” எனும் திரியைத் துவக்கினேன்.

அதையடுத்து இத்திரியையும் துவக்கினேன்.

இவ்விளக்கத்தின் மூலம் தங்கள் கேள்விக்கு பதில் கிடைத்திருக்குமென நம்புகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

colvin wrote:
//கிறிஸ்துவை கனவீனப்படுத்தும் பதிவினை தொடுப்பை சுட்டிக் காட்டுங்கள். மிக உபயோகமாக இருக்கும் சகோதரரே!//

அன்பான சகோதரரே!

இத்திரியில் நான் பின்வருமாறு பதித்த பதிவின் அடிப்படையில்தான் இவ்வாறு கேட்டுள்ளீர்கள்.

//கிறிஸ்துவை ஆராதிக்க வேண்டும், கனப்படுத்த வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாயிருக்கும் அத்தளம், கிறிஸ்துவின் நீதியை காலின் கீழ் போட்டு மிதித்து, கிறிஸ்துவை கனவீனப்படுத்தி வருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.//

கிறிஸ்துவைக் கனவீனப்படுத்துதல் என்றால், அவரை நேரடியாக கனவீனமாகப் பேசுவது மட்டுமல்ல. “கிறிஸ்தவன்” என தன்னைச் சொல்லிக்கொண்டு, கிறிஸ்துவைத் துதிப்பதாகவும் ஆராதிப்பதாகவும் வைராக்கியத்துடன் சொல்லிக்கொண்டு, கிறிஸ்துவின் போதனைகளை  மீறுவதும் கிறிஸ்துவைக் கனவீனப்படுத்துவதுதான். பின்வரும் வசனத்தை சற்று படியுங்கள்.

ரோமர் 2:23 நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?

நியாயப்பிரமாணம் நியாயப்பிரமாணம் என வாய்கிழிய பேசிக்கொண்டு, அந்த நியாயப்பிரமாணத்தை மீறினால், அது நியாயப்பிரமாணத்தைத் தந்த தேவனைக் கனவீனப்படுத்துவதற்குச் சமமாகுமல்லவா? அதுபோலத்தான் “கிறிஸ்து, கிறிஸ்து” என வாய்கிழியச் சொல்லிக்கொண்டு, அவரது நியாயத்தின்படி நடவாவிடில், அது கிறிஸ்துவைக் கனவீனம் பண்னுவதற்குச் சமமாகும்.

இக்கருத்தின் அடிப்படையில்தான், நீதியரசரான கிறிஸ்துவின் நீதியை செயல்படுத்தாத தமிழ் கிறிஸ்தவ தளம், கிறிஸ்துவை கனவீனம் பண்ணுவதாகக் கூறினேன்.

விளக்கம் போதுமா சகோதரரே!


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

colvin wrote:
//தளநிர்வாகம் ஒழுக்க நடவடிக்கை விடயத்தில் மதபாகுபாடு பார்ப்பதில்லை. இஸ்லாமியர்கள தனிப்பட்ட விதத்தில் தாக்கும் பல பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. சிலரை தளநிர்வாக நேரடியாக எச்சரித்துள்ளது. வசதியாக அதனை மறைத்து விட்டீர்கள்.  இன்னும் சில இஸ்லாமியர்கள் அங்கு தொடர்ந்து அங்கத்தினராக இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.//

தளநிர்வாகம் மதபாகுபாடும் பார்க்கிறது, கொள்கை பாகுபாடும் பார்க்கிறது. எனவேதான், இஸ்லாமியரையோ திரித்துவத்திற்கு எதிரானவர்களையோ தாக்குகிற எந்தப் பதிவையும் நீக்காமல், திரித்துவவாதிகள் தங்களுக்குள் தாக்குகிற தாக்குதல்கள், மற்றும் திரித்துவவாதிகளை மற்றவர்கள் தாக்குகிற தாக்குதல்கள் ஆகியவற்றை மட்டும் நிர்வாகம் தணிக்கை செய்து நீக்குகிறது.

சிலரை தளநிர்வாகம் நேரடியாக எச்சரித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். ஆனால் எச்சரித்தல் என்பது வேறு, பதிவை நீக்குதல் என்பது வேறு என்பதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

colvin wrote:
//எல்லாம் சரி நீங்கள் மட்டும் சகோ.ராஜ்குமாருக்கு பேதையர், சகோ.சில்சாமிற்கு அறிவிலி என்ற பதங்களை பாவிப்பது எந்த வகையில் நியாயமானது என கருதுகிறீர்கள். இது உங்கள் தளத்தின் விதிமுறை மீறல் இல்லையா? சகோ. ராஜ்குமாருக்கு நான் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். உங்களை விளித்த முறை குறித்து அவருக்கு அறிவுறுத்தி எழுதியுள்ளேன்.//

சகோதரரே! ஒருவரை வேண்டுமென்றே தாக்கி புண்படுத்துதல் என்பது வேறு; ஒருவரைப் பற்றின உண்மையைச் சொல்லி கடிந்துகொள்வது வேறு.

சில்சாம் மற்றும் ராஜ்குமார் இருவரும் என்னையும் பிற நண்பர்களையும் பிசாசு எனச் சொன்னதற்கான முகாந்தரத்தையும், சில்சாம் மற்றும் ராஜ்குமாரை பேதையர் அறிவிலி என நான் சொன்ன முகாந்தரத்தையும் சற்று நடுநிலயுடன் ஆராய்ந்து பாருங்கள். யாருடைய வார்த்தைகள் தனிநபர்தாக்குதல் என்பதை புரிந்துகொள்வீர்கள்.

அப்படியே நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், முதன்முதலாக அம்மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்தியது சில்சாமும் ராஜ்குமாரும்தானேயொழிய நான் அல்ல என்பதை அறியுங்கள்.

இதுபற்றி மேலும் விளக்கம் வேண்டுமெனில், சில்சாமும் ராஜ்குமாரும் என்னை ஏன் பிசாசு எனக் கூறினர் என்பதற்கான காரணத்தை எடுத்துச் சொல்லி, கூடவே நான் அவர்களை எப்போது பேதையர் அறிவிலி எனக் கூறினேன் என்பதையும் மேற்கோள் காட்டுங்கள். அதன்பின் இவ்விஷயத்தில் இன்னும் அதிக விளக்கத்தை நான் தருகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

colvin wrote:
//இதற்காக உண்மையிலேயே அவர் மனம் வருந்தியது தங்களுத்துத் தெரியாத விடயம். எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் மெயில் அனுப்பியிருந்தார். அவர் எந்த ஊழியரையும் தற்போது சார்ந்திருக்கவில்லை என கூறுகிறார். ஏனென்றால் ஊழியர்களால் பட்ட அவர் அவதி அதிகம்.//

பொது தளத்தில் சொன்ன விஷயத்திற்கு அதே பொது தளத்தில் வருத்தம் தெரிவிப்பதுதான் முறை. உங்களிடம் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தது ஒரு பொருட்டல்ல.

ஊழியர்களால் ராஜ்குமார் ஏன் அவதிப்படவேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. எவர்கள் தேவன் மீதுள்ள நம்பிக்கையை ஊழியர்கள் மீது வைக்கிறார்களோ அவர்கள்தான் ஊழியர்களால் அவதிப்படுவார்கள். எனவே ராஜ்குமார் ஊழியர்களால் அவதிப்பட்டால் அது நியாயமான அவதியே.

colvin wrote:
//அனுமதித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஏற்கனவே நான் கூறியபடி மூத்த உறுப்பினர்கள் பொறுப்பாக எழுதும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். தளநிர்வாகிகளுக்கு இந்த விடயத்தில் நம்பிக்கை உண்டு. அதையம் மீறி சிலர் செய்து விடுகிறார்கள். ஆயினும் சில சகோதரர்கள் இப்படிப்பட்ட பதிவுகளுக்கு பதில் எழுதுகிறார்கள்.//

நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அதுதான் உண்மை என்பதை “அதையும் மீறி சிலர் செய்து விடுகிறார்கள்” எனும் உங்கள் வாசகமே உங்களுக்கெதிராக சாட்சி சொல்கிறது.

ஒருசிலரின் பதிவை நீக்குகிற நிர்வாகம், ஒரு சிலர் விஷயத்தில் மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்? இதைத்தான் பாரபட்சம் என்கிறேன். விதிமுறை என்றால் அனைவருக்கும் சமமானதே. மூத்த உறுப்பினர் இளைய உறுப்பினர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

மூத்த உறுப்பினர் எனச் சொல்லி நீங்கள்தான் சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள். உண்மைக் காரணம், திரித்துவவாதிகள் மீதுள்ள தனிப்பட்ட பட்சமே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

colvin wrote:
//நல்ல அழகான கற்பனை. உங்கள் காலநேர கணிப்பு எங்கோ உதைக்கிறதே.//

மொட்டையாக எங்கோ உதைக்கிறது எனச் சொன்னால் எப்படி? உதைக்கிறது எனச் சொல்கிற நீங்கள்தான் எங்கு உதைக்கிறது என்பதையும் சொல்லவேண்டும்.

நான் கொடுத்த விபரம் தெளிவாக உள்ளது. ஒரு பதிவு பதியப்படும் நேரம் என்பது, ஒவ்வொரு கணினியிலும் ஒவ்வொரு நேரமாக இருக்கலாம். அது அவரவர் கணினியின் நேரத்தைச் சார்ந்ததாகும். ஆனால் ஒரு பதிவுக்கும் மற்றொரும் பதிவிற்கும் இடையேயான இடைவெளி என்பது அனைத்து கணினியிலும் ஒரேவிதமாகத்தான் இருக்கும்.

நான் குறிப்பிட்ட அவ்விரு பதிவுகளும் (நாளை திரி மூடப்படும் எனும் அறிவிப்பு அடங்கின பதிவு,
திரி மூடப்பட்டது எனும் அறிவிப்பு அடங்கின பதிவு) பதியப்பட்ட நேரம் உங்கள் கணினியில் என்னவென்பதைப் பார்த்து, அவ்விரண்டிற்கும் இடையேயான இடைவெளியைக் காணுங்கள்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோதரர் கொல்வின் அவர்களே!

உங்களை மதித்து உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்துள்ளேன். ஆனாலும் அவர்கள் சார்பாக, அதாவது தமிழ் கிறிஸ்தவ தளம் மற்றும் ராஜ்குமார் சார்பாக, நீங்கள் இவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டியதுமில்லை; உங்களுக்கு நான் இவ்வளவு சிரத்தையாய் பதில் தரவேண்டியதுமில்லை. ஏனெனில் நான் சொல்வதையோ நீங்கள் சொல்வதையோ அவர்கள் சற்றும் பொருட்படுத்தப் போவதில்லை.

உங்களுக்கு ஒரு கேள்வி. “கொழுப்பு பிடிச்ச சாராள்” எனும் வாசகம் உங்களை சற்றாகிலும் பாதிக்கவில்லையா? வேதாகம விசுவாசியாகிய ஒரு ஸ்திரீயையே இப்படி விமர்சிப்பதும் அதை அனுமதிப்பதுமாக இருந்தால், மற்றவர்களின் கதி என்னாகும்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

சகோதரர் கொல்வின் அவர்களே தமிழ் கிறிஸ்த்தவ தளம் குறித்து இங்கு பதியப்பட்டுள்ள பல தகவல்கள் உண்மையானவைகள் என்பதை தாங்களே அறிவீர்கள்.
 
சகோ. ராஜ்குமார், சகோ. கோல்டா அவர்களின் பதிவுகள் மூலமும், ஏன் தாங்கள் கூட ஒரு இடத்தில் "ஓநாய்" என்று
குறிப்பிடப்பட்ட பதிவுக்காக வருந்தியது உண்டு. அது தங்களை குறிவைத்து எழுதவில்லை என்றவுடன் தாங்கள் சமாதானம் அடைந்துவிட்டீர்கள் என்று கருதுகிறேன்.
 
இங்கு கிறிஸ்த்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களிடம் நான் காணும் முக்கியமான காரியம் என்னவெனில் அவர்கள் கிறிஸ்த்துபோல மாறுவதைவிட அல்லது கிறிஸ்த்து சொன்ன வார்த்தையை கைகொள்ளுவதைவிட,   தங்கள் மார்க்கத்தை தக்க வைத்துகொள்வதிலும் தங்கள் கொள்கைகளை  நிலைநாட்டுவதிலும் தங்கள் கொள்கைக்கு ஒத்த கொள்கை உடையவன் எவ்வளவு  மோசமானவனாக இருந்தாலும் அவருடன் தொடர்பு வைத்துகொள்வதையும் விரும்புவது வேதனை அளிக்கிறது. பிற மதத்தவரும் அதை தானே செய்கிறார்கள்.
 
ஆண்டவருக்கு தேவை மத கோட்பாடுகளை சரியாக கடைபிடிக்கும் ஒருவனா? அல்லது தனக்கு கீழ்படிந்து தனது இருதயத்துக்கு  ஏற்றவைகளை செய்யும் மனிதனா?
 
நல்ல சமாரியன் உவமையில் வரும் சமாரியனை எடுத்துபாருங்கள் .    
 
எந்த  ஒரு மனிதன் இன்னொருவரை வசைபாடும்போது அல்லது திட்டும்போது "இவன் அவனைத்தானே திட்டுகிறான் நமக்கு என்ன?" என்ற நிலையில் சிந்திக்கிறார்களோ அப்பொழுது அவர்கள் இயேசுவின் பிரதான கட்டளையாகிய "உன்னை நேசிப்பதுபோல பிறரை நேசி" என்ற கட்டளையை  கைகொள்ள தவறிவிட்டான். பிறகு இயேசுவை பற்றி அவர் போதிப்பதில் என்ன பயன்? என்று எனக்கு தெரியவில்லை.
 
அடைக்கபட்டிருக்கும் நமது கண்களை ஆண்டவர் திறந்தால், இந்த உலகில் எல்லோருமே பிசாசுகளாக இருப்பதை அப்படியே பார்க்கமுடியும்.  அப்படி பாஸ்டரில் இருந்து விசுவாசிவரை எல்லோரையும் பிசாசாக நேரடியாக பார்த்த நானே  யாரையும் பிசாசு என்று சொல்ல துணிவதில்லை காரணம் பிறர் கண்கள் திறக்கபட்டால் நான் அவர்களுக்கு பிசாசாக தெரியலாமல்லவா?  
 
எல்லோரும் வழிவிலகி கெட்டு பிசாசின் பிடியினுள்  பிசாசாகவே இருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு  பாவிகளாகிய நமக்கு தேவனுக்கும் இடையில் ஒரு பாலத்தை ஏற்ப்படுத்தாவிட்டால்  யாருமே தப்பமுடியாது. இங்கு யாரும் மேன்மைபாராட்ட இடமில்லை இதில் ஒருவர் இன்னொருவரை பார்த்து "நீ பிசாசு" என்று எழுதுவதும் அதை நிர்வாகி  வேடிக்கைபார்ப்பதும் ஒருதலை பட்சமில்லையா?
 
பிறமத  தளங்களில் இருக்கும் ஒழுங்குகூட அங்கு இல்லை என்பதுபோல் எனக்கு தெரிகிறது. அங்கெல்லாம் இப்படி "பிசாசு" "ஓநாய்"  என்று தனி மனித தாக்குதல் நடத்தினால்  உடனே பயனர் பெயர் தடை செய்யப்படும்.
 
தங்கள் ஒருவர்தான் நல்ல கட்டுரைகளுக்கு  பாகுபாடு பார்க்காமல் பின்னூட்டமிடுபவர். மற்றவர்கள்  நான்
யாரையும்  தவறான நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லவரவில்லை. யாரையும் நான் நியாயம் தீர்க்கவும் விரும்பவில்லை. அப்படி ஒன்றை செய்யாதபடி ஆண்டவர் என்னை காப்பாராக!  அவர்களது பணி வேறு, என்னுடைய பணிவேறு. என்று கருதி  விலகி  இருப்பதே
நல்லது என்று விலகிவிட்டேன்.

யார் சரி? யார் தவறு? என்பது நியாயதீர்ப்பின்போதுதான் அறியமுடியும்.
 
கொரிந்தியர் 4:5   கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; 


__________________


Member

Status: Offline
Posts: 18
Date:
Permalink  
 

சகோ.அன்பு அவர்கள் எழுதியது
//உங்களை மதித்து உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்துள்ளேன். ஆனாலும் அவர்கள் சார்பாக, அதாவது தமிழ் கிறிஸ்தவ தளம் மற்றும் ராஜ்குமார் சார்பாக, நீங்கள் இவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டியதுமில்லை; உங்களுக்கு நான் இவ்வளவு சிரத்தையாய் பதில் தரவேண்டியதுமில்லை. ஏனெனில் நான் சொல்வதையோ நீங்கள் சொல்வதையோ அவர்கள் சற்றும் பொருட்படுத்தப் போவதில்லை.//

ஏன் சிரத்தை எடுக்கிறேன் என்றால் நான் நீண்டகாலமாக அத்தளத்தின் உறுப்பினராக .இருக்கிறேன். அங்குள்ள பல சகோதரர்களுடன் எனக்கு தனிப்பட்ட முறையிலும் பழக்கம் இருக்கிறது. எனவே அக்கறை இயல்பாகவே இருக்கும் சகோதரரே!
தளம் என்கருத்தை பொருட்படுத்தாது என நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள் என புரியவில்லை. சில தடவைகள் என் கருத்துக்களும் கருத்திற் கொள்ளப்பட்டிருக்கின்றது.
பதில் தருவதும் தாரமல் இருப்பதும் என் பதிவை நீக்குவதும் நீ்க்காது இருப்பதும் தங்களின் உரிமை. ஏனென்றால் இத்தளத்தின் நிர்வாகி நீங்கள் சகோதரரே!  தளவிதிமுறைகளுக்கு எப்போதும் கட்டுபடுவேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.


சகோ.அன்பு அவர்கள் எழுதியது
ஒருசிலரின் பதிவை நீக்குகிற நிர்வாகம், ஒரு சிலர் விஷயத்தில் மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்? இதைத்தான் பாரபட்சம் என்கிறேன். விதிமுறை என்றால் அனைவருக்கும் சமமானதே. மூத்த உறுப்பினர் இளைய உறுப்பினர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.


ஓரளவிற்கே சரியான கருத்து. எனது பதிவுகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதாவது நான் தளநிர்வாகத்திற்கு பரிட்சியமான முன்னரும் பின்னரும் என் பதிவுகள் நீக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. எல்லாப் பதிவுகளையும் எல்லா நேரங்களிலும் கண்காணிப்பது மிக கடினமானது. அதிகமான பதிவுகள் இடம்பெறும்போது அனைத்தையும் வாசித்து தணிக்கை செய்வது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. ஆயினும் புதியவர்கள் எத்தகையவர்கள், அவர்களின் பதிவுகள் எத்தகையவை என்பதை இலகுவில் அறிய இயலாது ஆகையால் தான் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது. இது எல்லாத் தளங்களிலும் பொதுவாக நடைபெறும் செயல்பாடு. இதனை பாகுபாடு, பாரபட்சம் என கூற இயலாது.

சகோ.அன்பு அவர்கள் எழுதியது
அப்படியே நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், முதன்முதலாக அம்மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்தியது சில்சாமும் ராஜ்குமாரும்தானேயொழிய நான் அல்ல என்பதை அறியுங்கள்.

அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்காக நீங்களும் அவ்வார்த்தைகளை பயன்படுத்துவது முறையல்ல சகோதரரே!. முதல்முதலில் என நீங்கள் கூறவருவது நீங்கள் அவ்வார்த்தைகளை பயன்டுத்துவது நியாயமான செயல் என்பதாக எனக்கு படுகிறது. ஆயிரம் நியாயங்களை நீங்கள் சொல்லலாம். அவர்களின் வார்த்தைப் பிரயோகங்களுக்காக நேரடியாகவும் தனிமெயில்கள் மூலமாகவும் தெரிவித்துள்ளேன்.  அவர்களின் அதே வார்த்தைகளை பயன்படுத்தாது விட்டாலும் அறிவிலி, பேதை போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதும் ஒருவரை இழிவுபடுத்தும் செயலாகும்.





__________________


Member

Status: Offline
Posts: 18
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களே

உங்கள் ஆதங்கம் சரியானதுதான். நீங்கள் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறீர்கள் அல்லவா? உங்களுக்குத் தெரிந்த தவறுகளை நீங்கள் ஏன் முதலிலே சுட்டிக் காட்டியிருக்கவில்லை.

ஓரிருவர் அப்படி செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அதே வழிமுறையை பின்பற்றலாமா என்பதுதான் என் கேள்வி. சிலருக்கு என்னதான் சொன்னாலும் புரியாது. அவர்களாக நினைத்து மாறினால்தான் உண்டு. தவறை சுட்டிக் காட்டவே முடியும். பலவந்தமாக யார் மேலும் திணிக்க முடியாது அல்லவா?

ஏனைய தளங்களிலும் இதுபோல் இல்லை என்பது முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மாற்றுமத தளங்களிலும் கிறிஸ்தவத்திற்கும் கிறிஸ்தவர்களுககு எதிராகவும் ஏராளமான கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஆயினும் கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எம்மைக்குறித்தும் கிறிஸ்தவத்தைக் குறித்தும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஆயினும் அதிலும் சில ஒழுங்கு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்்து




__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard