நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிதாவாகிய தேவனை ஆராதிப்பது எப்படி?


Militant

Status: Offline
Posts: 830
Date:
பிதாவாகிய தேவனை ஆராதிப்பது எப்படி?
Permalink  
 


சகோ.சந்தோஷ் தனது தளத்தின் ஒரு திரியில் பின்வரும் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று வேத வசன ஆதாரங்களை வைத்து truth seekers தள நிர்வாகியும், நித்திய ஜீவன் தள நிர்வாகியும் சொல்கின்றனர். பிதா ஒருவரையே ஆராதிக்க வேண்டும் என இயேசு சொன்ன வசனங்களை ஆதாரமாக காட்டுகின்றனர்.

இவ்வாறு வேத வசன ஆதாரத்தை காட்டி இயேசு தொழத்தக்கவர் அல்ல என அனேக கட்டுரைகளை எழுதும் இவர்கள் ஆராதிக்க வேண்டிய பிதாவாகிய தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என ஒரு கட்டுரை கூட எழுதாதது ஏனோ?

என்னை படைத்ததற்க்காக நான் பிதாவாகிய தேவனின் மேல் அன்பு கொண்டு அவரை தொழ விரும்புகிறேன் என கொள்வோம். இப்போது என் கேள்வி:

பிதாவாகிய தேவனை ஆராதிப்பது எப்படி?


நல்லதொரு கேள்வியை முன்வைத்துள்ளீர்கள் சகோ.சந்தோஷ்! உங்கள் கேள்வியை நான் வரவேற்கிறேன்.

முதலாவது என்னைக் குறித்த ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

இயேசு தொழத்தக்க தெய்வமா இல்லையா என்பது பற்றிய கேள்வி என் மனதில் கிஞ்சித்தும் கிடையாது. உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என வசனம் தெளிவாகச் சொன்னபின், இயேசுவை ஆராதிக்கலாமா வேண்டாமா எனும் கேள்வி ஒருவர் மனதில் வந்தால், அவரை அறிவில் குறைவுள்ளவர் அல்லது அறிவில்லாதவர் என்றுதான் சொல்லவேண்டும்.

இப்படிப்பட்ட எண்ணமுடைய நான் இயேசு தொழத்தக்கவரா இல்லையா என ஆராய்ச்சி செய்வேனா? நிச்சயமாக மாட்டேன், அது தேவையுமில்லை. பிற அன்பர்கள் இயேசுவை தொழலாமா கூடாதா எனும் கேள்வியை எழுப்புவதாலும் இயேசுவுக்கு ஆராதனை என பல சபைகளில் முழக்கமிடுவதாலும்தான், இத்தளத்தில் “இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?” என்ற தலைப்பில் ஒரு திரியைத் துவக்கி அதில் பல விஷயங்களையும் அலசி எழுதினேன். அத்திரியின் முதல் பதிவை சற்று படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

ஆராதனைக்குரியவரான பிதாவை ஆராதிப்பது எப்படி எனக் கேட்டுள்ளீர்கள்.

இயேசுவுக்கு ஆராதனை எனும் சுலோகனை ஓயாமல் சொல்வதும் பாடலாகப் பாடுவதுமாக பலர் இருப்பதால்தான் ஆராதனைக்குரியவர் இயேசு அல்ல, பிதாவே ஆராதனைக்குரியவர் என நான் சொல்லி வருகிறேன். மற்றபடி பிதாவை ஆராதனை செய்யும்படி நானாக ஒருபோதும் எங்கும் சொல்வதில்லை.

பிதாவை ஆராதிப்பது எப்படி எனும் உங்கள் கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால், இயேசுவை ஆராதனைகுரியவராகக் கருதுகிற நீங்கள் உட்பட பலரும் எப்படி இயேசுவை ஆராதனை செய்கிறீர்களோ, அதேவிதமாக பிதாவை ஆராதனை செய்யுங்கள் எனச் சொல்லலாம்.

ஏனெனில் ஆராதனை எனும் வார்த்தையை முக்கியப்படுத்தி பாடல்களிலும் ஆராதனை வேளையிலும் பயன்படுத்துவது இயேசுவை ஆராதிக்கிற நீங்கள்தானேயன்றி பிதாவை மட்டும் ஆராதனைக்குரியவராக ஏற்றுக்கொண்டுள்ள நான் அல்ல.

தொடரும் .......


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sandosh-ன் கேள்விகள்:
//வேத வசன ஆதாரத்தை காட்டி இயேசு தொழத்தக்கவர் அல்ல என அனேக கட்டுரைகளை எழுதும் இவர்கள் ஆராதிக்க வேண்டிய பிதாவாகிய தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என ஒரு கட்டுரை கூட எழுதாதது ஏனோ?

பிதாவாகிய தேவனை ஆராதிப்பது எப்படி?//


சந்தோஷின் இக்கேள்விக்கு பதிலாக, கடந்த பதிவின் இறுதியில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

//பிதாவை ஆராதிப்பது எப்படி எனும் உங்கள் கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால், இயேசுவை ஆராதனைகுரியவராகக் கருதுகிற நீங்கள் உட்பட பலரும் எப்படி இயேசுவை ஆராதனை செய்கிறீர்களோ, அதேவிதமாக பிதாவை ஆராதனை செய்யுங்கள் எனச் சொல்லலாம்.//

இப்பதில், தற்காலத்தில் ஆராதனையை முக்கியப்படுத்தி “இயேசுவுக்கு ஆராதனை” என்று சொல்லி பாட்டு பாடி ஆராதிப்பவர்களுக்கு மட்டுமே.

மற்றபடி பிதாவை ஆராதிப்பது எப்படி எனும் கேள்விக்கு ஏற்கனவே இத்தளத்தில் நான் பதில் தந்துள்ளேன். சகோ.சந்தோஷ் அதைக் கவனிக்கவில்லை போலும். “இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?” எனும் திரியில் சகோ.சந்தோஷின் கேள்விக்கு விரிவான பதில் தந்துள்ளேன். அதை சந்தோஷின் வசதிக்காக இத்திரியிலும் பதிக்கிறேன்.

ஆராதனை எனும் தமிழ்வேதாகம வார்த்தைக்கு இணையாக, பழையஏற்பாட்டில் “ஊழியம்” எனப் பொருள்படும் 'abad' என்ற வார்த்தையும், புதியஏற்பாட்டில் “தொண்டாற்றுதல்” எனப் பொருள்படும் 'latreuo' எனும் வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பழையஏற்பாட்டில் ஆராதனை வழிமுறைகளாக சில காரியங்கள் கூறப்பட்டுள்ளன.

யாத்திராகமம் 12:25-27 கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள். அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.

யாத். 29:30 அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன்.

யாத். 30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

மூலபாஷை வார்த்தையின் அர்த்தப்படி பார்த்தால், தேவனுக்கு ஊழியம் செய்வதும் அவரைச் சேவிப்பதும்தான் அவரை “ஆராதித்தல்” என அறியப்படுகிறது. ஆகிலும் அந்த “ஆராதித்தலை” சில குறிப்பிட்ட முறைப்படி செய்யும்படி பழையஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் ஆதாரமாயுள்ளன.

ஆனால் இம்மாதிரி முறைமைகளைச் செய்வதோடு தேவனை “ஆராதித்தல்” முடிந்துபோவதில்லை. குறிப்பிட்ட முறைப்படி பலியிடுவதாலோ காணிக்கையிடுவதாலோ மட்டும் ஊழியம் முடிந்துபோவதில்லை. “ஊழியம்” என்றால் எஜமானின் அத்தனை கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதுதான் மெய்யான ஊழியம். அதுதான் மெய்யான “ஆராதனை”. அந்த மெய்யான “ஆராதனை” தமக்கு மட்டுமே உரியது எனத் தேவன் கூறுகிறார் (உபாகமம் 6:13; 10:20).

பெற்றோரின் கட்டளைகளுக்கு, அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு மற்றும் பெரியோரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது அவசியம்தான். ஆனால் அவர்களின் கட்டளைகளைவிட மேலானது தேவனின் கட்டளைகள். அவை மற்றெல்லோரது கட்டளைகளையும் பின்னாகத் தள்ளி முதன்மையில் நிற்பவையாகும். எனவே நாம் முதலிடம் கொடுக்கவேண்டியது தேவன் ஒருவரது கட்டளைகளுக்கு மட்டுமே. அவற்றிற்குப் பின்னாகத்தான் மற்றவர்களின் கட்டளைகள்.

நாம் முதலாவதாக ஊழியம் அல்லது சேவை செய்யவேண்டியது தேவனுக்குத்தான். அதற்குப்பின்னர்தான் மற்றவர்களுக்குச் செய்யும் ஊழியம் அல்லது சேவை எல்லாம். நாம் முதன்மையாக ஊழியம் செய்யவேண்டிய அந்த ஒரே தேவனின் நாமம், யெகோவா என்பதுவே. எனவே “அவர் ஒருவருக்கே ஆராதனை” எனும் சொற்றொடர் தேவனாகிய யெகோவாவுக்கு மட்டுமே எனக் குறிப்பதாக உள்ளது.

பழையஏற்பாட்டின் ஆராதனை முறைமைகள் எல்லாம் (அதாவது ஆசரிப்புக்கூடார காரியங்கள், பலிகள் போன்றவை) இயேசுவின் ஒரே பலியின் மூலம் ஒழிக்கப்பட்டுவிட்டன . எனவே புதியஏற்பாட்டுக் காலத்தில் ஆராதனை முறைகள் என எதுவும் கிடையாது. எனவேதான் தேவனுடைய ஆலயத்தில் மட்டுமின்றி “பிதாவை எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வரும் என யோவான் 4:21-ல் இயேசு கூறினார். குறிப்பாக நம் சரீரமே தேவனுடைய ஆலயமாக இருப்பதால் “தேவனுக்கு ஆராதனை” என்பது நம் கிரியைகளின் மூலம்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இக்கருத்துக்கு இசைவாக பின்வரும் வசனங்கள் இருப்பதைக் காணலாம்.

ரோமர் 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட “தேவன் ஒருவருக்கு மட்டுமே ஆராதனை ” எனும் கோட்பாடு என்றென்றும் மாறாததாயிருக்கிறது. ஆனால் பழைய ஏற்பாட்டின் ஆராதனை முறைமைகள் புதிய ஏற்பாட்டில் ஒழிந்துபோயின. புதியஏற்பாட்டைப் பொறுத்தவரை தேவனுக்குக் கீழ்ப்படிவதை நம் சரீரத்தின் ஒவ்வொரு செயலின் மூலமாகவும் காட்டுவதுதான் ஆராதனை.

பழையஏற்பாட்டில் மோசே மூலம் தமது கற்பனைகளைக் கூறிய தேவன், புதியஏற்பாட்டில் இயேவின் மூலம் தமது கற்பனைகளைக் கூறினார். மாத்திரமல்ல, இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்றும் மோசே மூலம் கூறிவைத்துள்ளார் (உபாகமம் 18:19).

எனவே மோசேயின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதென்றால் அதன் அர்த்தம் தேவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதுதான். அவ்வாறே இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதென்றால் அதன் அர்த்தம் தேவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதே. மோசேயின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதை எப்படி மோசேக்குக் கீழ்ப்படிவதாகச் சொல்லமுடியாதோ அதேவிதமாக இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதையும் இயேசுவுக்குக் கீழ்ப்படிவதாகச் சொல்லமுடியாது.

மோசேயின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தாலும் சரி, இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தாலும் சரி, அது தேவனுக்குக் கீழ்ப்படிவதாகவே இருக்கும்; அதுவே தேவனை ஆராதிப்பதாகவும் இருக்கும்.

தேவனை நான் ஆராதிக்கிறேன் என வார்த்தையால் சொல்லவேண்டியதில்லை, அல்லது பழையஏற்பாட்டுக் காலம் மாதிரி ஏதேனும் வழிமுறைமைகள் (சடங்குகள்) மூலம் தேவனை ஆராதிக்க வேண்டியதில்லை. நம் செயலில் (அதாவது கிரியைகளில்) இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தால் போதும், அப்போது நாம் தேவனுக்கு ஆராதனை செய்கிறவராகிவிடுவோம்.

ஆனால் இன்று நம் மத்தியில், இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதை முக்கியப்படுத்தாமல், “இயேசுவை ஆராதிக்கிறேன், இயேவை ஆராதிப்போம் ” என வார்தைகளால் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இயேசுவுக்கு முன்னாக முழங்கால்கள் யாவும் முடங்கும் என வேதாகமம் சொல்வது மெய்தான். இதன் அர்த்தமென்ன? இயேசுவுக்கு முன்னாக அனைவரும் பணியவேண்டும், அவரது வார்த்தைகளுக்கு அனைவரும் கீழ்ப்படியவேண்டும் என்பதே. ஆனால் நாம் இப்படிச் செய்வதன்மூலம் யாரை ஆராதிக்கிறோம்? ஒரே தேவனாகிய யெகொவாவையே.

ஏனெனில் இயேசுவுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது “ஒரே தேவனாகிய யெகோவாவே”.

யோசேப்பின் உத்தரவில்லாமல் எகிப்தில் யாரும் கையை/காலை அசைக்கக்கூடாது எனும் பார்வோனின் உத்தரவுக்கு எகிப்து ஜனங்கள் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்கள் யாருக்குக் கீழ்ப்படிந்தார்கள் எனச் சொல்லமுடியும்? பார்வோனுக்கா, யோசேப்புக்கா? பார்வோனுக்குத்தான் என நிச்சயமாகச் சொல்லமுடியும். அதேபோலத்தான், நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிகிறோம் என்றால் அதன் உள்ளர்த்தம், நாம் தேவனுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதே.

இயேசு நம் பாவங்களுக்காக தியாகபலியானார் என்பதற்காக நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிவதில்லை; “இயேசுவுக்கு யாவரும் கீழ்ப்படியவேண்டும், அவருக்கு முன்பாக முழங்கால்கள் யாவும் முடங்கவேண்டும் ” எனத் தேவன் கூறியதால்தான் இயேசுவுக்கு நாம் கீழ்ப்படிகிறோம், அவருக்கு முன்பாகப் பணிகிறோம். இதனால் “ஒரே தேவனுக்கு ஆராதனை” என்பது இயேசுவுக்கும் ஆராதனை என மாறுவதில்லை. சிங்காசனத்தில் மட்டும் யோசேப்பைவிட பார்வோன் பெரியவனாயிருந்ததைப்போல (ஆதி. 41:40), ஆராதனை என்பது தேவன் ஒருவரையே சேரும்.

ஆகிலும் பழையஏற்பாட்டைப் போல ஆராதனை முறைகள் எதுவும் புதியஏற்பாடுக் காலத்தில் இல்லாததால் “ஆராதனை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைவிட, ரோமர் 12:1 மற்றும் யாக்கோபு 1:27 கூறுகிறபடியான “ஆராதனையை” செயலில் காட்டினாலே போதும். ஆனால் இந்நாட்களில் அநேகர் “இயேசுவுக்கு ஆராதனை” எனும் சுலோகத்தை அழுத்தமாகக் கூறிவருவதால்தான் அதைக் கண்டித்து கூறவேண்டியதாகிறது.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு 4:10 கூறுகிற ஆராதனை எனும் வார்த்தைக்கு இணையான மூலபாஷை வார்த்தையான 'latreuo' எனும் வார்த்தை, 21 வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் அப்போஸ்தலர் 7:42, ரோமர் 1:25 ஆகிய 2 வசனங்களைத் தவிர மற்ற வசனங்கள் யாவும் தேவனை ஆராதிப்பது சம்பந்தமானவைகளே. 2 வசனங்கள் புறஜாதி தேவனையும் சிருஷ்டியையும் ஆராதிப்பது சம்பந்தமாகச் சொல்லி அப்படிச் செய்வதைக் கடிந்துகொள்ளுகின்றன.

அன்றைய அப்போஸ்தலர்கள் அனைவரும் தேவனை ஆராதிப்பதைத்தான் கூறியுள்ளனர்.


தேவனுக்கு ஆராதனை அல்லது தொழுதல் என்பதில் நாம் அசட்டையாக இராமல் தேவசித்தப்படி (மட்டுமே) செய்யவேண்டும் என்பது மிகமிக முக்கியமானது. மோசே மூலம் தேவன் தந்த 10 கற்பனைகளில் முதல் கற்பனையே “எந்த தேவனை எப்படி ஆராதனை செய்யவேண்டும்” என்பது பற்றியதுதான்.

யாத்திராகமம் 20:2-5  உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

இந்நாட்களில் இயேசுவை ஆராதிக்கலாம் அல்லது தொழலாம் எனச் சொல்பவர்கள், இயேசுவுக்கு ஓர் உருவத்தையும் உண்டாக்கி அதைத் தங்கள் மனதில் பதித்து மற்றவர்கள் மனதிலும் பதித்து வைத்துள்ளனர். (இதற்கு ஆதாரம்: சந்தோஷ் மற்றும் சில்சாமின் தளங்களில் இயேசுவின் உருவப்படம் இடம்பெற்றிருப்பதே)

அவர்கள் இயேவை ஆராதிக்கையில் அல்லது தொழுகையில் “இயேசுவின் உருவத்தை நினைப்பதில்லை” என என்னதான் சொன்னாலும், நிச்சயம் அவர்கள் இருதயத்தில் இயேசுவின் உருவம் எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கும்.


ஓர் உருவத்தை உருவாக்கி ஆராதனை செய்வதும் ஓர் உருவத்தை இருதயத்தில் நினைத்து ஆராதனை செய்வதும் சமமான செயல்கள்தான். (ஸ்திரீயுடன் இருதயத்தில் விபசாரம் செய்தல் பற்றி இயேசு சொன்னாரல்லவா?)

எனவே “இயேசுவின் உருவத்தை மனதில் நினைத்து அவரை ஆராதித்தல்” என்பது 10 கற்பனைகளின் முதல் கற்பனையை மீறுவதாகிவிடும். இவ்வாறு ஜனங்கள் கற்பனையை மீறுவதற்கு தாமும் காரணமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் “மனுஷரால் நான் மகிமையை ஏற்றுக்கொள்கிறதில்லை” என இயேசு declare செய்துள்ளார் (யோவான் 5:41). ஆனால் இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், “இயேசுவை ஆராதிப்பதில்” பலர் பேரானந்தமடைகின்றனர். சிலர், இயேசுவை ஆராதிப்பதால் நரகம் செல்லக்கூட ஆயத்தமாயுள்ளனர்.

என்னையன்றி வேறே தேவர்கள்” எனும் சொற்றொடர் “ஒரே தேவன் (unique God)” concept-ஐ தெளிவாகச் சொல்கிறது. “ஒரே தேவனாகிய” யெகோவாவைத் தவிர வேறு யார் “தேவன்” என அழைக்கப்பட்டாலும், அது “ஒரே தேவன்” concept-ஐ மாற்றிவிடாது. எனவேதான் இயேசுவைத் “தேவன்” என வேதாகமம் கூறினாலும் கூடவே “ஒரே தேவன்” concept-ம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் declaration மற்றும் “ஒரே தேவன்” concept ஆகிய இவையெல்லாம் வேதாகமத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள போதிலும், 10 கற்பனைகளின் முதல் கற்பனைக்கு விரோதமாக பலரும் “இயேசுவை ஆராதிக்கின்றனர்”. இச்செயலை நிச்சயம் தேவனின் சார்பாக இயேசு நியாயம் விசாரிப்பார். அப்படி நியாயம் விசாரிக்கையில் தமது declaration-நினைவூட்டி, “நான் தான் இப்படிச் சொல்லியுள்ளேனே, பின் ஏன் என்னை ஆராதிக்க நினைத்தாய்?” எனக் கேள்வியும் கேட்பார். அத்தோடு மத்தேயு 7:21-ஐயும் நினைவூட்டுவார்.

சகோ.சந்தோஷின் கேள்விக்கான பதில் தற்போது கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

இப்பதிலைப் பற்றிய விமர்சனத்தைக் கொடுக்கவேண்டியது சந்தோஷின் கடமையாகும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

chillsam wrote:
//என் தயவில் தங்கள் பிழைப்பு ஓடுவதால் நான் ஒதுங்கிப் போனாலும் என்னை சீண்டிக்கொண்டே இருக்கும் கீழ்த்தரமான போக்கை கோவை பெரியன்ஸ், அன்பு, சுந்தர் போன்ற (மேசியாவின்) எதிரிகள் கைவிட்டு சத்தியத்தை அறியும் அறிவைப் பெற முயற்சிப்பது அவர்களுடைய எதிர்காலத்துக்கும் அவர்தம் சந்ததியினருக்கும் நல்லது.

அப்படியிராதிருந்தாலும் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்;இதுபோல குறுக்கு சால் ஓட்டவேண்டாம்.அது இருதரப்புக்குமே நல்லதல்ல‌.//


வேதவசனங்களால் தொடுக்கப்பட்ட தாக்குதல்களைச் சமாளிக்கமுடியாமல் அய்யோ அம்மா என்னை விட்டிருங்க என்ற ரீதியில் மேற்கூறிய விதமாக சில நாட்களுக்குமுன் புலம்பித் தீர்த்த சில்சாமுக்கு தற்பொழுது குளிர்விட்டு விட்டதால், மீண்டும் தனது வழக்கமான பாணியில் கொக்கரித்துள்ளார்.

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும் அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது எனும் வேதவசனத்தை (நீதி. 27:22) மீண்டும் அவர் நிரூபித்துள்ளார்.

இவரோடு சேர்ந்த திரித்துவவாதிகள் எப்படி வேதபகுதிகளை அறைகுறையாகப் போட்டு ஜனங்களை வஞ்சிக்கின்றனரோ அதுபோலத்தான் இவரும் நான் எழுதினதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துப்போட்டு தனது அறிவீனங்களைக் கொட்டியுள்ளார்.

அவர் எடுத்துப்போட்ட ஒரு பகுதியுங்கூட முழுக்க முழுக்க வேதவசனங்களைச் சார்ந்ததுதான் என்பது அந்த அறிவீனருக்கு நிச்சயம் தெரியாதுதான். அவர் எடுத்துப்போட்ட எனது வார்த்தைகளும் அதற்கு அவரது அறிவீன விமர்சனமும்:

anbu57 wrote:
//மோசேயின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதை எப்படி மோசேக்குக் கீழ்ப்படிவதாகச் சொல்லமுடியாதோ அதேவிதமாக இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதையும் இயேசுவுக்குக் கீழ்ப்படிவதாகச் சொல்லமுடியாது.//

chillsam wrote:
//"ஆளும் வளரணும் அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி" என்று உலகத்தானே சொல்லுகிறான்;ஆனால் இங்கே ஜீவனுள்ள தேவன் அருளிய பரிசுத்த வேதாகமத்தை கையில் வைத்துக்கொண்டு தப்புந்தவறுமாக வாசித்து புரிந்துகொண்டு போய் சேருகிற காலத்தில் நற்கதியை அடையும் வழியையே கேள்விக்குரியதாக்கிக் கொண்டிருக்கும் புல்லர்களுக்கு எந்த போதகன் வந்து போதித்து மீட்பதோ? இன்னும் இந்த மாபாவிகளால் புதியவர்களும் தடுமாறும் அவலநிலை உண்டாகிறது; தடுமாறுகிறவர்களுக்கு இரக்கம் உண்டு;ஆனால் தடுமாறச் செய்தவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பே கிடையாது.

* "எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது."(2.கொரிந்தியர்.3:6)
* "பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்." (1.கொரிந்தியர்.15:45)

இரத்தின சுருக்கமாகக் குறிப்பிடப்படும் வேத வாக்கியங்களிலிருந்து நாம் மோசேக்கும் இயேசுவானவருக்குமான வித்தியாசத்தை உணரமுடியும்; மோசேக்கும் இயேசுவானவருக்குமிடையே ஊழியத்தில் மட்டுமல்ல, தன்மையிலும் வித்தியாசமுண்டு என்பதை அறியாதோர் கையிலே வேதத்தை எடுக்கவோ விசேஷமாக புதிய ஏற்பாட்டு புத்தகங்களை கண்களால் பார்க்கவே உரிமையில்லை;ஆனால் அனைவருக்கும் பொதுவான பழைய ஏற்பாட்டை நீங்கள் தாராளமாக எடுத்தாளலாம்; ஆனாலும் பிள்ளைகள் என்ற ஸ்தானத்திலிருந்து அல்ல,அடிமைகள் என்ற நிலையிலிருந்து;மேலும் உடனே அவசரமாக செய்துகொள்ளவேண்டியது சுன்னத்து கலியாணம்..!

மோசேயைப் போல இயேசுவும் தன்னை ஒரு தீர்க்கதரிசியாகவோ சாதாரண போதகராகவோ முன்னிறுத்தியிருந்தால் அவரை சிலுவையில் அறையும் நிலையே வந்திருக்காது என்பதை முட்டாள்கள் உணரவேண்டும்; இன்னும் ஏதாவது அசிங்கமாக திட்டறதுக்கு முன்பாக ஓடிப்போயிடுங்க; உங்களிடமெல்லாம் பொறுமையா நியாயத்தை எடுத்துக் கூறி ஆதாயப்படுத்தும் எண்ணமோ ஆதாயப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோ எனக்கு இல்லாத காரணத்தினாலேயே முழுப் பகையாகப் பகைக்கிறேன்;ரெண்டில் ஒன்று பார்க்கும் நாள் நெருங்குகிறது, பாத்துடுவோம்..!//


இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதைக் குறித்து நான் எழுதியிருக்க, இயேசுவுக்கும் மோசேக்குமான வித்தியாசத்தை எடுத்துப்போட்டு தனது அதிமேதாவித்தனத்தை சில்சாம் கொட்டியுள்ளார். நான் என்ன இயேசு தேவகுமாரன் இல்லை என்றா சொன்னேன்?

வேதவசனங்களையே திரித்துப்போடுவதில் வல்லவரான இவருக்கு, நான் எழுதினதை திரித்துப்போட எத்தனை நேரமாகும்? இப்படிப்பட்ட ஓர் அறிவீனன் சொல்வதையும் கேட்டு அவருக்குத் தாளம் போடுகிற படு அறிவீனர்களை நினைத்தால்தான் மிக பரிதாபமாக உள்ளது.

அந்த படு அறிவீனர்களில் ஒருவராக விஜய் என்பவரைச் சொல்லலாம், விஜய்-ன் 10 கேள்விகள் பற்றி நான் எதுவுமே சொல்லாமலும் செய்யாமலும் இருந்தபோது, யாரோ 4 பேர் சொன்னதை வைத்து தமிழ் கிறிஸ்தவ தளத்தில் கரடி கிளப்பி விட்டு, சற்றும் கூசாமல் எனது பெயரையும் இழுத்துவிட்டவர் ராஜ்குமார் எனும் பேதையராவார்.

அதன் பின்னர்தான் அந்த 10 கேள்விகளை நான் படித்து, இத்தளத்திலும் அதைப் பதித்தேன். ஆனால் அறிவீனன் சில்சாமோ, முதலில் பந்தெடுத்து வீசின பேதையர் ராஜ்குமாரை விட்டுவிட்டு, எதிர்பந்து வீசின என்னைத்தான் மட்டமாக விமர்சித்தார். அதை அப்படியே நம்பின விஜய் எனும் படு அறிவீனரும் என்னைத் தாக்கத்தான் முற்பட்டாரேயொழிய, ஆரம்பத்தில் பந்தை வீசிய ராஜ்குமாரையோ தமிழ் கிறிஸ்தவ தளத்தின் பிற உறுப்பினர்களையோ எதுவும் சொல்லவில்லை.

இவர்களின் இச்செயல்கள் யாவும், அவர்கள் எத்தனை அறிவீனர்கள் என்பதையும் எத்தனை அநீதியினர் என்பதையும் பறைசாற்றுகின்றன.

தொடரும் ...


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard