நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ.கொல்வின் அவர்களை வரவேற்கிறேன்


Militant

Status: Offline
Posts: 830
Date:
சகோ.கொல்வின் அவர்களை வரவேற்கிறேன்
Permalink  
 


இத்தளத்தில் புதிதாக இணைந்து, 2 பதிவுகளையும் தந்த சகோ.கொல்வின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

சகோ.கொல்வின் அவர்கள் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் சில திரிகளில் என்னோடு இணைந்து பங்காற்றியவர்; சகோதரருக்குள் (கருத்து) மோதல் உண்டாகையில் சமாதானப் பாலமாக செயல்படும் தன்மையுள்ளவர்.

இவருங்கூட சில பதிவுகளில் சற்று கடினமான எழுதியதாக ஞாபகம், ஆனால் திட்டமாகத் தெரியவில்லை. அதற்கான ஆதாரத்தை தற்போது தேடிக்கண்டுபிடிக்க இயலாததால் அதை நான் பெரிதுபடுத்தவில்லை.

அனேக சமயங்களில் சில்சாம் போன்றவர்களின் கடினமான வார்த்தைகளை இவர் கண்டித்துள்ளார் என்பதை திட்டவட்டமாக அறிவேன்.

இதுவரை அவரோடுடனான உறவுகள் எப்படியிருந்தாலும் இனி அவரோடு நல்லுறவுடன் நல்விவாதம் அமையவேண்டும் என்ற விருப்பத்துடன் அவரை வரவேற்கிறேன்.

அவரது பதிவுகளுக்கு விரைவில் பதில் தர முயல்கிறேன்.

சகோ.கொல்வின் அவர்களே! தங்கள் ஆக்கபூர்வமான பதிவுகளைத் தரும்படி தங்களை உற்சாகப்படுத்தி வரவேற்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 18
Date:
Permalink  
 

என்னை வரவேற்றமைககு மிக்க நன்றி சகோதரரே!. எனது சமய நம்பிக்கை என்ன என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என எண்ணுகிறேன்.  என்னை பற்றிய அறிமுகம்  பெரிதாக தங்களுக்கும் தளஉறவுகளுக்கும் தேவைப்படாது என எண்ணுகிறேன்.

அப்படி நான் தங்கள் மனம் நோகும்படி எழுதியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆயினும் நான் எனது பதிவுகளில் இத்தகைய கருத்துக்கள் குறித்து எச்சரிக்கையாகவே இருக்கிறேன். ஆயினும் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி


விரைவில் தாங்கள் எழுதியுள்ள தமிழ் கிறிஸ்தவ தளத்திற்கெதிரான கருத்துக்களுக்கு பதில் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சிலவேளை அவை தளத்தினை மீள அமைக்க உதவியாகவும் சிலர் தங்களின் தவறுகளை உணர்ந்து கொள்ளத்தக்கதாகவும் வசதியாக இருக்கும் என நம்புகிறேன். சில சகோதரர்களுக்கு எதிராக இடம்பெறும் சொல்லாடல்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வேளைப்பளு, நெருங்கி வரும் பரீட்சைகள் காரணமாக எனது பதில்களும் தாமதப்படக்கூடும் என தெரிவித்துக் கொள்கிறேன்

வேதாகம வசன மேற்கோள்களை தவிர வேறு ஏதாவது சரித்திர விடயங்கள் மற்றும் மூலமொழி குறித்த விடயங்களுக்கு சரியான ஆதாரங்கள், தொடுப்புக்கள், நூல்களையும் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கர்த்தர் நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard