நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதரர்கள் கொல்வின் மற்றும் ஜோசப்சினேகாவின் கவனத்திற்கு ...


Militant

Status: Offline
Posts: 830
Date:
சகோதரர்கள் கொல்வின் மற்றும் ஜோசப்சினேகாவின் கவனத்திற்கு ...
Permalink  
 


இத்தளத்தில் புதிதாக இணைந்து பதிவுகளைத் தந்துகொண்டிருக்கும் சகோ.கொல்வின் மற்றும் சகோ.ஜோசப்சினேகா ஆகியோரின் கவனத்திற்கு சில வரிகள்:

யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் எண்ணம் இத்தள நிர்வாகியான எனக்கு கொஞ்சமும் கிடையாது. எனது நோக்கமெல்லாம் வசனங்கள் மற்றும் அவற்றிற்கான விளக்கங்களின் அடிப்படையில் நன்றாக விவாதித்து தள அன்பர்கள் உண்மையை அறியவேண்டும் என்பது மட்டுமே.

இத்தளத்தில் இடம் பெற்றுள்ள வாதங்களை சற்று கவனித்துப் பாருங்கள்; வாதம் செய்வோரை நான் எங்கேயாவது தரக்குறைவாக விமர்சித்திருந்தால் அதை எடுத்துக்காட்டுங்கள்.

இத்தளத்தில் வாதம் செய்யாமல், தனது சொன்ன தளத்தில் எந்த முகாந்தரமும் இல்லாமல் என்னை விமர்சனம் செய்தவர் சில்சாம்.

என்னைப் பொறுத்தவரை நான் திரித்துவத்தை ஏற்கவில்லை என்பதோடு, திரித்துவத்திற்கு எதிரான கருத்துக்களைச் சொல்பவன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் திரித்துவத்தை எதிர்ப்பதென்பது என்ன மாபெரும் குற்றமா? நான் என்ன வசனத்தைச் சொல்லாமலா என் கருத்தைச் சொல்கிறேன்?

முழுக்க முழுக்க வசனங்களை முன்வைத்துதான் எனது கருத்துக்களைக் கூறிவருகிறேன். அப்படி கூறும்போது எனது கருத்து தவறு என்பதற்கான வாதத்தை வாத இலக்கணப்படி வைக்க வேண்டியதுதானே? அதைவிடுத்து ஏதோ நான் துர்உபதேசம் செய்து ஜனங்களை வஞ்சிப்பதைப் போல், என்னை பிசாசு என்றும் விஷஜந்து என்றும் விமர்சிப்பதேன்?

தமிழ் கிறிஸ்தவ தளத்தில் சிலர் எப்போது பார்த்தாலும் எனது தளம் உட்பட சில தளங்களை “துர் உபதேச” தளம் எனக் குறிப்பிடுகின்றனர். “துர் உபதேசம்” என்றால் என்ன? அதற்கு வேதாகமம் ஏதாவது வரைமுறை கூறியுள்ளதா? எனது பதிவுகளில் எந்தப் பதிவு “துர் உபதேசமாக” உள்ளது என்பதை தகுந்த வசன ஆதாரத்துடன் உங்களால் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது என நான் கூறுகிறேன். இதை ஒரு சவாலாகவே உங்களிடம் நான் கூறுகிறேன்.

வேதாகமம் சொல்லாத திரித்துவத்தை நான் ஏற்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எனது தளத்தை “துர் உபதேச தளம்” எனச் சொல்வது என்ன நியாயம்?
வசனத்தைச் சொல்லி வாதம் செய்ய இயலாத இயலாமையால்தான் எனது தளத்தை
“துர் உபதேச தளம்” எனச் சிலர் சொல்வதாக நான் கருதுகிறேன்.

நீங்கள் திரித்துவத்தைச் சொல்வதற்கும் நான் (நாங்கள்) திரித்துவத்தை எதிர்ப்பதற்கும் ஆதாரமாக வேத வசனங்களைத்தானே பயன்படுத்துகிறோம்? இதில் நாம் ஒருவரையொருவர் தரக்குறைவாகத் தாக்க வேண்டிய அவசியமென்ன? வசனத்தை நீங்கள் புரிந்துகொண்டதன் அடிப்படையில் நீங்கள் ஒரு கோட்பாட்டை வைக்கிறீர்கள், நாங்கள் புரிந்துகொண்டதன் அடிப்படையில் அக்கோட்பாடு தவறு என்கிறோம்.

இதை ஒட்டி/வெட்டி வாதம் செய்வோம்; ஒருமித்த கருத்து வந்தால் ஏற்றுக்கொள்வோம். இல்லாவிடில் இன்முகத்துடன் விடைபெறுவோம். இதற்கு மேலாக நாம் ஏன் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவரையொருவர் தாக்க வேண்டும்?

உண்மையில் தங்கள் சுய ஆதாயத்துக்காக வசனங்களைப் புரட்டி அப்பாவி விசுவாசிகளை வஞ்சிக்கிற பொய் ஊழியர்கள்தான் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவர்கள்.

அப்பணியையும் நான் அவ்வப்போது செய்கிறேன். மற்றபடி எனது தளத்தை துர் உபதேச தளம் என விமர்சித்து இடறல் செய்கிற சில்சாம் மற்றும் TCM உறுப்பினர்களுக்கு பதில் சொல்வதிலேயே நேரம் விரயமாகி வருகிறது.

போகட்டும், எதுவானாலும் தேவசித்தம் என ஏற்றுக்கொள்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: சகோதரர்கள் கொல்வின் மற்றும் ஜோசப்சினேகாவின் கவனத்திற்கு ...
Permalink  
 


josephsneha wrote:
//... வால்டர் மார்டின் அவர்கள் எழுதிய துர் உபதேசங்கள் என்ற புத்தகத்தை வாசித்திருக்கிறீர்களா என தெரியவில்லை. அதில் துர் உபதேசங்க்களையும் அது எவ்வாறு வேதத்தில் இருந்து மாறுபாடான சத்தியமாக உருவெடுக்கிறது என்பதை தெளிவாக விளக்கியிருப்பார். எனக்கு தெரிந்தவற்றை பாயிண்டு பாயிண்டாக திறம்பட எடுத்துவைக்கும் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் இல்லீங்க...//

"துர் உபதேசம்” என்றால் என்னவென்பதை வசன ஆதாரத்துடன் தரும்படி கேட்டிருந்தேன். நீங்களோ யாரோ எழுதின புத்தகத்தை கைகாட்டியுள்ளீர்கள். அப்புத்தகத்தை நான் படிக்கவில்லை.

அப்புத்தகத்தில் வசன ஆதாரத்துடன் “துர் உபதேசம்” பற்றின விளக்கம் இருந்தால், அதை எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே? குறைந்தபட்சம் ஒரு குறிப்பையாவது எடுத்துச் சொல்லலாமே!

உங்களுக்குத் தெரிந்ததை பாயிண்டு பாயிண்டாகச் சொல்லவேண்டாம். குறைந்தபட்சம் ஒரு பாயிண்டை, வசன ஆதாரத்துடன் சொல்லலாமே!


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard