நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


கடந்த 2009 டிசம்பர் மாதத்தையொட்டி, தமிழ் கிறிஸ்தவ தளத்தின் “கிறிஸ்து ஆராதனைக்குரியவரா” என்ற திரியில் நான் பதித்த பதிவுகள் மட்டுமின்றி அத்திரி முழுமையும் அத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. அத்திரியில் எனது பதிவு மற்றும் பிறரது பதிவுகள் எனது சேமிப்பில் உள்ளன. அவற்றை அப்படியே இங்கு பிரதியாக பதிக்கிறேன்.

எனது பதிவு மட்டுமின்றி அத்திரி முழுமையும் நீக்கப்பட்டதற்கான தகுந்த முகாந்தரத்தை யாரேனும் அறிந்தால் அதை இங்கு தெரியப்படுத்தவும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

RS
Im New Here!
Joined: 30-11-2009 13:49:14
Posts: 12
Location:

Subject :கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்ட தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறென்று வேறொரு தளத்தில் வாதாடிய அன்பு57 என்பவர் இங்கும் அதை சொல்ல முயல்கிறாரா என்றறிய ஆவல்.
நன்றி?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Jesus_My_Love
Im New Here!
Joined: 30-11-1999 05:30:00
Posts: 37
Location: Coimbatore

Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

Bro RS உங்களை குறித்து சிறுது சொல்வீர்களா

I Love You Jesus


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

anbu57

Joined: 12-10-2009 05:37:08
Posts: 32
Location: Tirunelveli

Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

RS wrote:
//வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்ட தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறென்று வேறொரு தளத்தில் வாதாடிய அன்பு57 என்பவர் இங்கும் அதை சொல்ல முயல்கிறாரா என்றறிய ஆவல்.//


தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறென்று வேறொரு தளத்தில் வாதாடவில்லை சகோதரரே! “இயேசுகிறிஸ்து ‘யாவே' தேவன் என்று நம்புகிறீர்களா?” என என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக, சில வேதவசனங்களை மேற்கோள் காட்டியிருந்தேன், அவ்வளவே. என்னைப் பொறுத்தவரை பின்வரும் வசனம் கூறுவதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

உன் தேவன் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என இயேசு கிறிஸ்துவே தெள்ளத் தெளிவாகக் கூறியபின், அவர் சொல்வதையே எதிர்த்து வாதிடுவோரிடம் நான் என்ன சொல்லி வாதிட்டாலும் அதில் பயனில்லை. எனவே இவ்விஷயத்தில் இதற்கு மேலாக நான் வாதிடப்போவதில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

RS
Im New Here!
Joined: 30-11-2009 13:49:14
Posts: 12
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

நன்றி.

இயேசு 'கிறிஸ்து'தான் என்றும், பிதாவாகிய தேவன் ஆதியந்தமில்லாத ஒருவர் என்றும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும் வேதம் வலியுருத்துகிறது என்பதை அண்மையில்தான் அறிந்து கொண்டேன். சத்தியத்தை அறியும் வாஞ்சையால் கிடைக்கும் வேத விளக்கங்களை இதுபோன்ற தளங்களிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்.

வெளியில் விவாதிக்கத் தயங்குகிற விஷயங்கள் இங்கு அலசப்படுவது பாராட்டத்தக்கது. பாரம்பரிய TELC    சபையைச் சேர்ந்த நான் வேதத்தின் பால் உள்ள வாஞ்சையால் சபை பாரம்பரியங்களுக்கு அப்பால் வேத சத்தியங்களைத் தேட முயல்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


anbu57
Im New Here!
Joined: 12-10-2009 05:37:08
Posts: 32
Location: Tirunelveli

Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

RS wrote:
//வெளியில் விவாதிக்கத் தயங்குகிற விஷயங்கள் இங்கு அலசப்படுவது பாராட்டத்தக்கது. பாரம்பரிய TELC சபையைச் சேர்ந்த நான் வேதத்தின் பால் உள்ள வாஞ்சையால் சபை பாரம்பரியங்களுக்கு அப்பால் வேத சத்தியங்களைத் தேட முயல்கிறேன்.//


வேதசத்தியத்தின் மீதுள்ள தங்கள் வாஞ்சைக்கும், சத்தியத்தைத் தேடும் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

TELC என்பதன் விரிவாக்கம் மற்றும் தமிழாக்கத்தைத் தரும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

arputham
Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 29
Location: Bangalore
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

இவாஞ்சலிக்கன் லுத்தரன் சபை(TELC) சார்ந்தவராக தன்னை அறிமுகப்படித்திக் கொண்டு வந்திருக்கும் சகோ.RS அவர்களுக்கு வந்தனங்களும் வாழ்த்துக்களும். நீங்கள் ஏற்கனவே வேறொரு தளத்தில் சகோ.அன்பு அவர்களுடன் விவாதித்திருக்கிறீர்கள் என்று உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது. நல்லது. ஆனால் அவ்ர்களின் முரண்பட்ட கருத்தை சுட்டிக் காட்டிய நீங்கள் அந்தப் பதிவையும் இங்கு கொடுத்து அதற்கான லின்க்கையும் கொடுத்திருந்தால் நலமாக இருந்திருக்கும். சரி போகட்டும்.

கிறிஸ்து ஆராதனைக்குரியவரா?

முதலாவதாக நாம் வேதாகமத்தில் ஏதாவது கேள்விக்கு பதில் காண முயலும் போது ஒரே ஒரு வசனத்தை மாத்திரம் பிடித்துக் கொண்டு இதான் தெளிவாக கூறப்பட்டிருக்கிறதே என்று ஒரு முடிவுக்கு நாம் வந்துவிடக்கூட      கூடாது. மாறாக முழு வேதாகமத்தின் வெளிச்சத்தில்தான் நாம் பதில் காண வேண்டும். இன்றைக்கு பல உபதேசக் குழப்பங்களை நாம் காண்கிறோம். அதற்கு முக்கியமான காரணம் முழுமையான வேதாகமப் புரிந்து கொள்ளல் இல்லாமையே.

இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை மேற்கோள் காட்டி சகோ.அன்பு கூறியிருப்பவைகளைப் பார்ர்த்தால் இயேசுவை ஆராதிக்கக் கூடாது என்று அவர் சொல்ல வருகிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.

தேவன் ஆராதிக்கப்படத்தக்கவர் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் தேவ குமாரனான இயேசு...........................................????? ............... வேதம் என்ன கூறுகிறது

தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.  (எபிரெயர் 1:6)  கவனிக்க இங்கு சொன்னவர் தேவன்.

ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி.......(பிலிப்பியர் 2:9) இங்கும் உயர்த்தினவர் தேவனே


மேலும் அப்.
தோமா இயேசுவிடம் ”என் ஆண்டவரே என் தேவனே ” என்று சொன்ன போது இயேசு அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. ” காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள்” பாக்கியவான்கள் என்றே கூறினார் (யோவான் 20:28).

இன்னும் சொல்லப்போனால், இயேசுவிடம் வந்தவர்கள் அவரை தொழுது கொண்டனர், பணிந்து கொண்டனர் என்றெல்லாம் நாம் நற்செய்தி நூல்கள் நெடுகிலும் நாம் வாசிக்கிறோம். இயேசு வேதத்தில் ஒரு இடத்திலும் என்னை தொழுது கொள்ளவோ பணிந்து கொள்ளவோ கூடாது என்று கூறவில்லை.  ஆகவே இயேசு ஆராதனைக்குரியவரே. அவர் பரலோக சபையினராலேயே ஆராதிக்கப்படும் போது நாம் அவரை இங்கே ஆராதிப்பதற்கு தயங்க வேண்டிய அவசியமில்லை, இல்லவே இல்லை.

அப்படியானால் இயேசு ஏன் பிசாசிடம் அவ்வாறு கூறினார் என்ற கேள்வியும் நமக்கு எழ்க்கூடும். அங்கே இயேசு
எந்த சூழ்நிலையில் ”உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்று கூறினார் என்று பார்க்கவேண்டும். அங்கு நடந்தது என்ன? சாத்தான் தன்னைப் பணிந்து கொள்ளும்படிக்கு, “ நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று” என்று உலகத்தை காண்பித்து சொல்லும்போதுதான் இயேசு அவ்வாறு சொன்னார். இயேசு தனது ஜீவனைக் கொடுத்துதான் உலகத்தை தனக்கு ஆதாயமாக்கிக் கொண்டார். அதுவே அவர் உலகத்திற்கு வந்த நோக்கம். அதை குழப்ப சாத்தான் பயன்படுத்தின தந்திரம் எடுபடாமற் போயிற்று. சாத்தானைப்ப் போல சந்தேகக்கேள்விகள் எழுப்புபவரின் தந்திரங்களும் உண்மையாக வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தால் எடுபடாமற் போகும்.

இன்னும் விளக்கமாக கூறுகிறேன் கேளுங்கள். நீங்கள் ஒரு ரோபோட் (கம்ப்யூட்டர் மனிதன்)  செய்கிறீர்கள். அது உங்களுக்கு கீழ்ப்படியாமல் நீங்கள் அதற்கு கீழ்ப்படியவேண்டும் என்று உங்களிடம் எதிர்பார்த்தால் அதை நீங்கள் என்ன செய்வீர்கள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  லூசிபராகிய சாத்தான் இயேசுகிறிஸ்துவினால் உண்டாக்கப்பட்டவன். அப்படியிருக்க அவனுக்கு எவ்வளவு துணிகரம் பாருங்கள். இன்று அனேக உபதேசக்காரர்களுக்கு இருப்பதும் துணிகரம் என்றே வேதம் கூறுகிறது.

அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,  எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள். பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.  அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.  அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.  அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள். (வெளிப்படுத்தல் 5: 8-14)

சத்திய வேதாகமத்தில் யாதொரு குழப்பமும் இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் உண்டு. குழப்பம் வேதாகமத்தில் இல்லை என்கீறபோது அது எங்கே இருக்கீறது என்பதை வாசிக்கிற இதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.  இயேசு ஆராதனைக்குரியவர் அல்ல என்கிற சிந்தையுடையவர் அவருடைய தெய்வீகத்தை மறுக்கிறார், தேவனையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அப்படிப்பட்டவர்களை விட்டு நாம் விலகவேண்டும்..... விலக்க வேண்டும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

RS
Im New Here!

Joined: 30-11-2009 13:49:14
Posts: 12
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

சகோதரரே,

இதே வசனங்களை மேற்கோள்காட்டியே இன்னொரு தளத்தில் வாதம் இருந்தது. அதற்கு அன்பு அவர்கள் தொழுது கொள்வது வேறு, ஆராதிப்பது வேறு என்று வியாக்கியானம் செய்திருந்தார்.

இயேசு கிறிஸ்துவுக்கு செலுத்தவேண்டிய மகிமையை பிதாவாகிய தேவன் 'அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார்' என்றும் பல இடங்களில் வாசிக்கிறோம்.

நன்றி!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

RS

Im New Here!

Joined: 30-11-2009 13:49:14
Posts: 12
Location:
Subject :Re:Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

[anbu57 30-11-2009 17:11:08]:


வேதசத்தியத்தின் மீதுள்ள தங்கள் வாஞ்சைக்கும், சத்தியத்தைத் தேடும் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

TELC என்பதன் விரிவாக்கம் மற்றும் தமிழாக்கத்தைத் தரும்படி வேண்டுகிறேன்.
TAMIL EVANGELICAL LUTHERAN CHURCH







__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


arputham

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 29
Location: Bangalore
Subject :கிறிஸ்து ஆராதனைக்குரியவரா? சகோ. அன்பு பதில் தருக

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி? முடியுமா?

சகோ அன்பு அவர்கள் ”தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறென்று வேறொரு தளத்தில் வாதாடவில்லை” எழுதியிருந்தார்கள். நானும் அவர்கள் உண்மையில் என்ன எழுதியிருந்தார்கள் என்பதை அறிய அத்தளத்திற்கு சென்றேன். அவர்கள் எழுதியிருப்பவைகள் இவைதான்..............

குமாரனை ஆராதிக்கும்படி வேதாகமம் கூறியுள்ளதா, அல்லது வேதாகம விசுவாசிகள்/ஊழியர்கள் அதைச் செய்துள்ளார்களா என்பதுதான். அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.

குமாரனை மகிமைப்படுத்த வேண்டாம் என்றோ, கனம் பண்ண வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை.
தகப்பனையும் தாயையும் கனம் பண்ணு என்றுகூட வேதாகமம் சொல்லுகிறது. இதனால் அவர்களை ஆராதனை செய்யவேண்டும் என பொருள் கொள்ளமுடியுமா?

பிதாவைக் கனம்பண்ணுவதுபோல் குமாரனைக் கனம்பண்ணும்படி ... என வசனம் கூறுவதால் பிதாவை ஆராதிப்பதைப்போல் குமாரனையும் ஆராதனை செய்யவேண்டும் என எப்படி பொருள் கொள்ள முடியும்? ஆராதிப்பதும் கனம்பண்ணுவதும் ஒன்றா?

தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யும்படி வசனம் தெளிவாகக் கூறியிருக்க, பிதா குமாரன் எனும் இருவரை எப்படி ஆராதனை செய்யலாம்?

மேலும், இயேசுவை ஆராதிக்கும்படி அழைப்பவர்களும் ஆராதிப்பவர்களும் இயேசுவை மட்டுந்தான் ஆராதிக்கிறார்களேயொழிய, பிதாவை ஆராதிப்பதில்லையே?

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விஷயம்.
தேவனுக்குத்தான் ஆராதனை என வேதாகமம் கூறுகிறது. எனவே இயேசுவை ஆராதிப்பதால், இயேசுவும் தேவன் என்றாகிவிடுகிறது. இயேசுவை ஆராதிக்கிற அநேகர் அவரை தேவனாகப் பாவித்துதான் ஆராதிக்கின்றனர்.

இயேசுவை ஆராதிக்காவிடில் பிதாவோ இயேசுவோ யாரும் கோபிக்கப்போவதுமில்லை, வருத்தப்படப்போவதுமில்லை. ஏனெனில் இயேசுவை ஆராதிக்கும்படி வேதாகமத்தில் கட்டளை எதுவும் கொடுக்கப்படவில்லை.

ஆனால், இயேசுவை ஆராதிப்பதன்மூலம் ஜனங்களுக்கு இடறலாகும் நம்மீது பிதாவைவிட இயேசுதான் அதிகம் கோபிக்கப்போகிறார் என்பதை அறியுங்கள்.

பிதாவும் குமாரனும் தந்த எத்தனையோ கற்பனைகளைக் கைக்கொள்வதிலும் போதிப்பதிலும் தீவிரப்படாமல், பிதாவை ஆராதிப்பதா, குமாரனை ஆராதிப்பதா அல்லது இருவரையும் ஆராதிப்பதா என்கிற கேள்விகளுக்கு பதில் காண்பதிலில் நாம் பொழுதைப் போக்குகிறோம். இதனால்தான் கிறிஸ்தவத்தை அடையாளம் காட்டுகிற தன்மைகள் கொஞ்சங்கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

Source: http://kovaibereans.activeboard.com/index.spark?aBID=128972&p=3&topicID=31452448

சகோ.அன்பு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சகோ.சில்சாம் அவர்கள் கூறிய வட்டத்திற்குள் சென்று கொண்டிருக்கிறார்.  சகோ.அன்பு அவர்களே உங்களை நீங்களே ஏன் குழப்பிக் கொள்ளுகிறீர்கள்? உங்கள் பதிவை மறுபடியும் படித்துப் பாருங்கள். ”தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறென்று வேறொரு தளத்தில் வாதாடவில்லை” ”ஆனாலும் இயேசுவை ஆராதிப்பது தவறு ” நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது மேலே உள்ள  உங்களுடைய பதிவிலிருந்து மிகத்தெளிவாகதெரிகிறது.

இயேசுவை ஆராதிக்கக் கூடாது என்று வேதத்தில் எங்கு போட்டிருக்கிறது?

தேவதூதர்கள் அனைவரும் அவரை தொழுது கொள்ளவேண்டும் என்று பிதாவாகிய தேவனேசொன்னார் என்று என் பதிவில் வசன ஆதாரத்துடன் குறிப்பிட்டிருந்தேன். இயேசு கர்த்தர் என்பதை(யாவது)  நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அப்படியானால் பழைய ஏற்பாட்டில் கர்த்தர் என்று குறிப்பிடப்படுபவர் யார்? புதிய ஏற்பாட்டிலும் கூட அப்போஸ்தலர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து கொண்டிருந்தார்கள் என்று அப்.13ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

மேலும் எனது பதிவில் பரலோக சபையினர் ஆட்டுக்குட்டியானவராம் இயேசுகிறிஸ்துவை ஆராதித்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன். பாருங்கள்! நாம் இங்கு செய்கிற ஆராதனை என்னது தெரியுமா? ”இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது” எபிரெயர் 8: 5. நிஜ சபையாகிய பரலோகசபை அவரை ஆராதிக்கையில் நிழலாட்டமான உலகத்தில் உள்ள சபையில் அவரை ஆராதிக்க யோசிப்பது என்பது...... சரியாக இல்லை. நான் கூறினது போல முழுவேதாகமத்தின்  வெளிச்சத்தில் முடிவுகளுக்கு வாருங்கள். இயேசுவின் தெய்வீகத்தை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு தடையாக இருக்கும் காரியம் என்ன? தயங்காது எழுதுங்கள் தாராளமாய் பதில் கூறுகிறோம். இங்கே விவாதச் சண்டை (வாக்குவாதம்) அல்ல விவாத தெளிவு வேத வசன அடிப்படையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டாக வேண்டும் என்பதே தள நிர்வாகிகள் அனைவரின் விருப்பமும் ஆகும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


anbu57

Im New Here!

Joined: 12-10-2009 05:37:08
Posts: 32
Location: Tirunelveli
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

arputham wrote:
//முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி? முடியுமா?

சகோ அன்பு அவர்கள் ”தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறென்று வேறொரு தளத்தில் வாதாடவில்லை”  எழுதியிருந்தார்கள். நானும் அவர்கள் உண்மையில் என்ன எழுதியிருந்தார்கள் என்பதை அறிய அத்தளத்திற்கு சென்றேன். அவர்கள் எழுதியிருப்பவைகள் இவைதான்.............//


சகோதரரே, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நான் முயலவில்லை. என்னை அறியாமல் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது, ஒத்துக் கொள்கிறேன். தவறை அறிந்தபின், அதை ஒத்துக்கொள்ள மறுத்து, நான் பிடிவாதம் பிடிப்பதில்லை.

நான் எவ்வாறு தவறுசெய்தேன் என்பதற்கான விளக்கத்தைத் தருகிறேன், அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

இதே தளத்தின் மற்றொரு பகுதியில் (அறிமுகப் பகுதியில்), சகோ.சில்சாமின் பின்வரும் கேள்விக்கு நான் பதிலளித்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

chillsam asked me: இயேசுகிறிஸ்து ‘யாவே' தேவன் என்று நம்புகிறீர்களா?

இவ்விஷயத்தில் சகோ.சில்சாமோடு விவாதத்தை உண்டாக்கி, அதை வளர்க்க நான் விரும்பாததால், வேதவசனங்கள் கூறுவதையே எனது பதிலாகத் தந்திருந்தேன். அவ்வசனங்களிலிருந்து, இயேசு தேவனுடைய குமாரன் என்பதும், பிதாவாகிய தேவனை மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டும் என்பதும்தான் எனது கருத்து என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள்.

இந்நிலையில், இதே தளத்தின் இப்பகுதியில், சகோ.RS ஒரு விவாதத்தை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு தொடங்கியிருந்தார்.

RS wrote:
//வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்ட தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறென்று வேறொரு தளத்தில் வாதாடிய அன்பு57 என்பவர் இங்கும் அதை சொல்ல முயல்கிறாரா என்றறிய ஆவல்.//


இதை நான் படிக்கையில், “வேறொரு தளத்தில்” என சகோ.RS குறிப்பிட்டிருந்தது, “இதே தளத்தின் மற்றொரு பகுதியில்” என்பதாகத்தான் எனக்குப் புரிந்ததேயன்றி, கோவை பெரியன்ஸ்-ல் நான் வாதாடியது எனக்குச் சற்றும் நினைவில் வரவில்லை. இவ்விஷயத்தில் மிகக்குறுகிய அளவில் மட்டுமே நான் கோவை பெரியன்ஸ்-ல் வாதம் செய்திருந்தேன். மற்றபடி, வேறொரு விஷயம் சம்பந்தமாக மிகமிக அதிக அளவில் அங்கு நான் வாதம் செய்திருந்ததால், இயேசுவை ஆராதிப்பது பற்றி அங்கு நான் வாதம் செய்தது சற்றும் நினவில் வரவில்லை.

அதே வேளையில், சமீபத்தில்தான் இயேசு யாவே தேவனா என சகோ.சில்சாம் கேட்ட கேள்விக்கு நான் பதிலளித்திருந்ததால், அதன் அடிப்படையில்தான் சகோ.RS குறிப்பிட்டுள்ளாரோ என நான் தவறாகக் கருதிவிட்டேன். அதன் அடிப்படையில்தான் பின்வருமாறு நான் பதிலும் கூறியிருந்தேன்.

anbu57 wrote:
////RS wrote:
//வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்ட தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறென்று வேறொரு தளத்தில் வாதாடிய அன்பு57 என்பவர் இங்கும் அதை சொல்ல முயல்கிறாரா என்றறிய ஆவல்.//

தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறென்று வேறொரு தளத்தில் வாதாடவில்லை சகோதரரே! “இயேசுகிறிஸ்து ‘யாவே' தேவன் என்று நம்புகிறீர்களா?” என என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக, சில வேதவசனங்களை மேற்கோள் காட்டியிருந்தேன், அவ்வளவே.////


இங்கு சகோ.சில்சாமின் கேள்வியைக் குறிப்பிட்டு நான் எழுதியதிலிருந்து, “வேறொரு தளம்” என சகோ.RS குறிப்பிட்டதை நான் தவறாகப் புரிந்துகொண்டேன் என்பதை அறியலாம். எது எப்படி ஆனாலும் எனது தவறு தவறுதான். அதை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு வேண்டுகிறேன். ஆனால், சகோ.அற்புதம் கருதுகிறபடி எதையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது.

சகோ.RS கூறியுள்ளதைப்போல், “இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது தவறு” என நேரடியாக யாரையும் குற்றப்படுத்தி நான் வாதம் செய்யவில்லை. சகோ.அற்புதம் குறிப்பிட்டிருந்த கோவை பெரியன்ஸ் link-க்குச் சென்று அதை முழுமையாகப் படித்துப் பார்த்தால், அதை யாரும் அறிந்துகொள்ள முடியும்.

என்னோடு வாதிட்டவர், சில வசனங்களை மேற்கோள் காட்டி, இயேசுவை ஆராதிப்பதில் தவறில்லை எனக் கூறியிருந்தபோது, நான் பின்வருமாறு பதிலளித்திருந்தேன்.

anbu57 wrote in Kovai Bereans:
//தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யும்படி உபாகமம் 6:13; 1 சாமுவேல் 7:3,4 வசனங்கள் கூறுகின்றன. அவ்வசனங்களில் எழுதியுள்ளதை மத்தேயு 4:10-ல் இயேசுவும் எடுத்துரைக்கிறார். அப்படியிருக்க இயேசுவை ஆராதிப்பதில் தவறில்லை என எப்படிச் சொல்கிறீர்கள்? தம்மை மகிமைப்படுத்தும்படி பிதாவிடம் இயேசு கேட்டுக்கொண்டதால், இயேசுவை ஆராதிப்பதில் தவறில்லை என எப்படிக் கூறமுடியும்? மனுஷரால் நான் மகிமையை ஏற்றுக் கொள்கிறதில்லை என யோவான் 5:41-ல் இயேசு கூறியுள்ளாரே! மனுஷரால் மகிமையை ஏற்காதவர் மனுஷரால் ஆராதனையை ஏற்பாரா? தம்மை ஆராதனை செய்யும்படி இயேசு கூறியுள்ளாரா? அவரை ஆராதனை செய்யும்படி வேதாகம ஊழியர்கள் கூறினார்களா? வேதாகம ஊழியர்களில் யாராவது இயேசுவை ஆராதித்தார்களா?//

“இயேசுவை ஆராதிப்பது தவறில்லை என எப்படிச் சொல்கிறீர்கள்?” என்ற கேள்விக்கும், “இயேசுவை ஆராதிப்பது தவறு” என குற்றப்படுத்தி கூறுவதற்குமுள்ள வித்தியாசத்தை விபரமறிந்தவர்கள் அறிவார்கள்.

“இயேசுவை ஆராதிப்பது தவறு” என யாரையும் குற்றப்படுத்தும் தோரணையில் நான் எங்கும் வாதம் செய்ததில்லை. “இயேசுவை ஆராதிக்கும்படி வேதாகமம் கூறுகிறதா?”, “நாம் இயேசுவை ஆராதிப்பது அவசியந்தானா” என்ற கேள்விகளின் அடிப்படையில்தான் நான் வாதம் செய்வதுண்டு.

இது சம்பந்தமாக இத்தளத்தில் எனது கருத்துக்களைச் சொல்லி நான் வாதம் செய்யவிரும்பாததால், குறிப்பாக சகோ.சில்சாமுடன் வாதம் செய்ய விரும்பாததால், வேதவசனங்களை மட்டும் குறிப்பிட்டு சகோ.சில்சாமின் கேள்விக்குப் பதிலளித்திருந்தேன். நான் வாதம் செய்யப்போவதில்லை என இப்பகுதியில் குறிப்பிடவும் செய்திருந்தேன்.

ஆனால் நான் ஒன்று நினைக்க தேவசித்தம் வேறாக இருந்துள்ளது. எனவேதான் கோவை பெரியன்ஸ்-லுள்ள எனது வாதங்கள் இங்கு மேற்கோள் காட்டப்படும் நிலை வரை வந்துள்ளது. எனவே சகோ.அற்புதத்தின் சில வேதவசன மேற்கோள்களுக்கு நான் பதில்தர ஆசிக்கிறேன். தள அன்பர்கள், கோவை பெரியன்ஸ் link-க்குச் சென்று எனது வாதத்தைப் படிக்கும்படியும் வேண்டுகிறேன்.

அடுத்த பதிவில் தொடர்கிறது .....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

anbu57

Im New Here!

Joined: 12-10-2009 05:37:08
Posts: 32
Location: Tirunelveli

Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

முந்தின பதிவின் தொடர்ச்சி .....

சகோ.அற்புதம் பல வசனங்களைக் குறிப்பிட்டிருந்தார். அவ்வசனங்களுக்கு தனித்தனியே விளக்கம் கூறுவதற்கு முன், மத்தேயு 4:10-ல் பயன்படுத்தப்பட்டுள்ள “ஆராதனை” எனும் வார்த்தைக்கு இணையான கிரேக்க வார்த்தையான  "latreuo" என்பது (Nestle number 3000), புதிய ஏற்பாட்டில் எந்தெந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

மத்தேயு 4:10; லூக்கா 1:71; 2:37; 4:8; அப்போஸ்தலர் 7:7,42; 24:14; 26:7; 27:23; ரோமர் 1:9,25; பிலிப்பியர் 3:3; 2 தீமோத்தேயு 1:4; எபிரெயர் 8:5; 9:9,14; 10:2; 12:28; 13:10; வெளி. 7:15; 22:4 ஆகிய இந்த 20 வசனங்களில் மட்டுமே கிரேக்க வார்த்தையான "latreuo" பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 20 வசனங்களையும் படித்துப் பாருங்கள். அவற்றில் ஏதாவது ஒரு வசனத்தில் இயேசுவுக்காக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பாருங்கள்.

இந்த 20 வசனங்களைத் தவிர வேறெந்த வசனமும், தொழுதுகொள்தல், வணங்குதல், பணிந்துகொள்தல் எனக் குறிப்பிட்டாலும், அது மத்தேயு 4:10-ல் இயேசு சொன்ன “ஆராதனை” என்ற வார்த்தைக்கு நிகரானதல்ல என்பதை அறியுங்கள்.

நம் தமிழ் வார்த்தைகளிலுள்ள ஒற்றுமையின் அடிப்படையில், (அதாவது ஆராதனை, தொழுகை என்பது போன்ற வார்த்தைகளிலுள்ள ஒற்றுமையின் அடிப்படையில்) ஒரு முடிவுக்கு வருவது சரியல்ல.

எபிரெயர் 1:6; வெளி. 5:8-14 வசனங்களில் கூறப்பட்டுள்ள தொழுது கொள்தல் எனும் வார்த்தைக்கு இணையான கிரேக்க வார்த்தையான “proskuneo" என்பது (Nestle number 4352) பின்வரும் வசனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளி. 3:9 இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.

இவ்வசனத்தில் “உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து” எனும் சொற்றொடரிலுள்ள “உன்” எனும் வார்த்தை பிலதெல்பியா சபையைக் குறிக்கிறது. அதாவது, “பிலதெல்பியா சபையின் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து” என அச்சொற்றொடர் குறிப்பிடுகிறது. பிலதென்பியா சபை என்பது சில விசுவாசிகளை அடக்கிய ஒரு அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். அதாவது இயேசுவைப் பணிந்து கொள்வதைப் போல பிலதெல்பியா சபையையும் பணிந்துகொள்வதைப் பற்றி வெளி. 3:9 கூறுகிறது. இப்பொழுது சொல்லுங்கள், “proskuneo" என்ற வார்த்தையும் “latreuo" என்ற வார்த்தையும் ஒன்றாகுமா?

அப்போஸ்தலர் 13:2-ஐக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பாருங்கள்.

Tha Acts 13:2 As they ministered to the Lord, and fasted, the Holy Ghost said, Separate me Barnabas and Saul for the work whereunto I have called them. (KJV)

மொத்தத்தில், “தேவன் ஒருவருக்கே ஆராதனை செய்” என இயேசு சொன்ன மத்தேயு 4:10-ல் பயன்படுத்தப்பட்டுள்ள “latreuo" எனும் வார்த்தை எந்தெந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அவற்றின் அடிப்படையில் மட்டுமே, இயேசு ஆராதிக்கச் சொன்ன அந்த “ஒருவர்” யார் என்பதை நாம் தீர்மானிக்கவேண்டும். அதன்படி, “latreuo" எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள 20 வசனங்கள் கூறுவதன் அடிப்படையில், யாரை நாம் ஆராதிக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டும் என்பது எனது கருத்து. அந்த 20 வசனங்களில் சில வசனங்கள், வானசேனைக்கு அல்லது பிற தேவர்களுக்கு தவறாக ஆராதனை செய்வதைக் குறிப்பிடுவதால் அவற்றை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை.

இயேசுவை ஆராதிக்க வேண்டியதில்லை என நான் கூறுவதால் இயேசுவுக்கு நான் எதிரியல்ல, அல்லது இயேசு தேவத்துவம் உள்ளவர் அல்ல எனக் கூறுபவன் அல்ல. தேவனுடைய குமாரன் என்ற அளவில் இயேசு தேவத்துவம் உள்ளவர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். அவரைக் குறித்து எழுதப்பட்டதற்கு மிஞ்சி (1 கொரி. 4:6) நான் விசுவாசிப்பதில்லை.

இயேசுவை ஆராதிக்கும்படி எந்த வசனமும் சொல்லாதிருக்கையில், தேவன் ஒருவரையே ஆராதிக்கும்படி இயேசு சொல்லியிருக்கையில், வேதாகம ஊழியர்கள் இயேசுவை ஆராதனை செய்ததாக எந்த வசனமும் கூறாதிருக்கையில், இயேசுவை ஆராதனை செய்யவேண்டும் என நான் நினைப்பது, எழுதப்பட்டதற்கு மிஞ்சி நினைப்பதாகும். இயேசு சொன்ன பின்வரும் வசனங்களைப் பாருங்கள்.

மத்தேயு 7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
யோவான் 5:41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.


பிதாவின் சித்தப்படி நடப்பதே முக்கியமேயன்றி, தம்மை நோக்கி கர்த்தாவே எனச் சொல்வதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல என இயேசு கூறுகிறார். பிதாவின் சித்தப்படி செய்வதென்றால் அவரது கற்பனைகளைக் கைக்கொள்வதையே குறிப்பிடுகிறார். பிதாவின் கற்பனைகளைத்தான் இயேசுவும் தந்துள்ளார்.

யோவான் 14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

எனவே இயேசுவின்/பிதாவின் கற்பனைகளைக் கைக்கொள்வதுதான் பிதாவின் சித்தப்படி நடப்பதாகும்.

இப்போது சொல்லுங்கள் சகோ.அற்புதம் அவர்களே! பின்வரும் இருவரில் யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்று.

ஒருவன் பிதாவின்/இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்கிறான்; இயேசு தேவனுடைய குமாரன், அவரே வழி சத்தியம் ஜீவன் என விசுவாசிக்கிறான்; உலக மக்களின் பாவநிவாரண பலியாக அவர் மரித்து உயிர்த்தெழுந்ததை விசுவாசிக்கிறான், அவரைக் கனப்படுத்துகிறான், அவரது நாமத்தில் பிதாவிடம் ஜெபிக்கிறான்; ஆனால் தேவன் ஒருவரை மட்டுமே ஆராதிக்கிறான்.

மற்றொருவன் தேவனையும் இயேசுவையும் ஆராதிக்கிறான், ஆனால் அவர்களின் கற்பனைகளின்படி நடப்பதில் அலட்சியமாயுள்ளான்.

இவ்விருவரில் யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான்? இருவருமே பிரவேசிப்பார்களா? அல்லது இருவருமே பிரவேசிக்க மாட்டார்களா? வசன ஆதாரத்துடன் பதில் சொல்லவும். எனது பதில் முதலாமவன் மட்டுமே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்பது. என் பதிலுக்கு ஆதாரம், மத்தேயு 7:21.

அடுத்த பதிவில் தொடர்கிறது .....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

anbu57

Im New Here!

Joined: 12-10-2009 05:37:08
Posts
: 32
Location
: Tirunelveli

Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

முந்தின பதிவின் தொடர்ச்சி .....

இத்தளத்தின் விவாதங்கள் பகுதியில், திரித்துவம் எனும் தலைப்பில் சகோ.ராஜ்சார்லஸ் பின்வருமாறு எழுதியிருந்தார்.
//மூவரும் சமமானவர்கள், மூவரும் நித்தியமானவர்கள், மூவரும் யாராலும் உண்டாக்கபடாதவர்கள்.//

சகோ.ராஜ்சார்லஸ் மட்டுமல்ல, அவரைப்போல் பலரும் இதே கருத்தை உடையவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் இயேசு என்ன சொல்கிறார்?

யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான் 14:28 ... ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்


இயேசுவுக்கு சகல அதிகாரத்தையும் கொடுத்தவர் பிதா. அதிகாரத்தைப் பெற்றவர், அதிகாரத்தைக் கொடுத்தவருக்குச் சமமாக இருக்கமுடியுமா?


இயேசுவைத் தேவன் என சில வசனங்கள் கூறுவது மெய்தான். ஆனால் “ஒரே தேவன் (Unique God)” யாராக இருக்கமுடியும்? பிதாவாகிய தேவனாக மட்டுமே இருக்கமுடியும். இரண்டு “Unique God” அல்லது இரண்டு “ஒரே தேவன்” இருக்கவே முடியாது. பின்வரும் வசனங்களில் பவுல் கூறுவதைப் படியுங்கள்.

1 தீமோத்தேயு 2:5,6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.

இயேசுவை தேவன் என வேறு சில வசனங்கள் கூறியுள்ளபோதிலும் (யோவான் 1:1; 20:28; எபிரெயர் 1:9), தேவன் ஒருவரே எனச் சொல்லி, “தேவன்” என்ற வார்த்தைக்குரிய uniqueness-ஐ இவ்வசனத்தில் பவுல் காண்பிக்கிறார்.

இயேசுவை தேவன் என சில வசனங்கள் கூறுவது மெய்தான். ஆனால் இயேசுவின் தேவன் யார்? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

மத்தேயு 27:46 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
யோவான் 20:17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
எபிரெயர் 1:8-12 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. ... ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; ... நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

எபிரெயர் 1:8-ம் வசனம், குமாரனாகிய இயேசுவை தேவன் எனக் கூறுகிறது. ஆனால், அதையடுத்த 9-ம் வசனம், “தேவனே, உம்முடைய தேவன்” எனச் சொல்லி பிதாவானவர் குமாரனாகிய தேவனுக்கும் தேவனாக இருக்கிறார் எனக் கூறுகிறது.

தேவன் எனும் வார்த்தை ஒரு வசனத்தில் சாத்தானைக் குறிப்பிடுகிறது. தேவர்கள் எனும் வார்த்தை பழைய ஏற்பாட்டின் சில வசனங்களில் ஆசாரியர்களைக் குறிப்பிடுகிறது. பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

2 கொரி. 4:4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

சங்கீதம் 82:1,6 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
(இவ்வசனங்களில் தேவர்கள் எனும் வார்த்தை இஸ்ரவேலரை நியாயம் விசாரித்த ஆசாரியர்களைக் குறிப்பிடுகிறது. இவ்வசனங்களைத்தான் பின்வரும் வசனங்களில் இயேசு மேற்கோள் காட்டுகிறார்.)

யோவான் 10:33 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

தேவவசனத்தைப் பெற்றுக்கொண்ட ஆசாரியர்களையே தேவர்கள் என தேவன் சொல்லியிருக்கும்போது, பிதாவிடமிருந்து பரிசுத்தமாக்கப்பட்ட வந்த தம்மை ஏன் தேவனுடைய குமாரன் என தாம் சொல்லக்கூடாது எனபதே இயேசுவின் கேள்வி.

தேவன் எனும் வார்த்தைப் பயன்பாட்டின் அடிப்படையில் இயேசு பிதாவுக்குச் சமம் எனும் முடிவை எடுப்பது சரியல்ல. மேற்கூறிய வசனங்களில், தேவன், தேவர்கள் எனும் வார்த்தைகள் பலரையும் குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் கருத்து என்ன?

இஸ்ரவேலர்களுக்கு ஆசாரியர்கள் தேவர்களாயிருந்தனர்.

இப்பிரபஞ்ச மக்களுக்கு சாத்தான் தேவனாக இருக்கிறான்.

உலக மக்கள் அனைவருக்கும் பிதாவும் இயேசுவும் தேவனாக இருக்கின்றனர்.

ஆனால் உலக மக்களுக்கு மட்டுமின்றி இயேசுவுக்கும் தேவனாக பிதா இருக்கிறார்.

எனவே இயேசு உட்பட அனைவருக்கும் ஒரே தேவனாக இருப்பது பிதாவாகிய தேவனே. அந்த ஒரே தேவனையே ஆராதனை செய்யும்படி இயேசு கூறுகிறார். இதற்கு மிஞ்சி எண்ணுவதற்கு எதுவுமில்லை என்பதே என் கருத்து.

அடுத்த பதிவில் தொடர்கிறது .....



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

anbu57

Im New Here!

Joined: 12-10-2009 05:37:08
Posts: 32
Location: Tirunelveli

Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

முந்தின பதிவின் தொடர்ச்சி .....

இன்று கிறிஸ்தவர்களின் கடவுள் யாரென்று புறஜாதியினரிடம் கேட்டால் இயேசு என்றுதான் சொல்வார்கள். அந்த இயேசுவுக்கு நாம் ஓர் உருவத்தைக் கொடுத்துள்ளதால், புறஜாதியிலிருந்து கிறிஸ்தவத்திற்கு வருவோரில் பலர் இயேசுவின் உருவப்படத்தையே ஆராதனை செய்கின்றனர்.

பல அலுவலகங்களில் வியாபார ஸ்தலங்களில் புறஜாதி தேவர்களின் படத்திற்கு நடுவில் இயேசுவின் படத்தையும் வைத்து மாலை போட்டுள்ளதை நாம் காணமுடியும். சமீபத்தில் ஒரு பத்திரிகையில், கிறிஸ்தவ வழிபாட்டுச் சிலைகள் உடைக்கப்பட்டன எனும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இவ்விதமாக கிறிஸ்தவர்களும் சிலை வழிபாட்டினர் என புறஜாதியார் நினைப்பதற்குக் காரணம், நாம் இயேசுவைக் கடவுளாக முன்னிறுத்தி, அவரை ஆராதனை செய்வதே. நீ உனக்கு எந்த சொரூபத்தையும் உண்டாக்கவேண்டாம் என 10 கற்பனைகளில் முதல் கற்பனையில் தேவன் கூறியிருக்க, நம்மில் எத்தனைபேர் இயேசுவின் உருவப்படத்தை வீட்டிலும் ஆலயத்திலும் போட்டு வைத்துள்ளோம்?

இயேசுவை ஆராதிப்பதை முக்கியப்படுத்துகிற நாம், அவரது கற்பனைகளைக் கைக்கொள்வதில் தீவிரமாயிருக்கிறோமா? ஒரேயொரு கற்பனையை எடுத்துக்கொள்வோம்.

மத்தேயு 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

பொன்னகையை வெறும் அலங்காரத்திற்காக மட்டும் நாம் வாங்குவதில்லை. அதை ஒரு பொக்கிஷமாகக் கருதியும்தான் வாங்குகிறோம். (ஒருவேளை வெறும் அலங்காரத்திற்காகவே வாங்குவதாக யாராவது கூறினால், நம்மைச் சுற்றி எத்தனையோபேர் வறுமையில் உழலும்போது, வெறும் அலங்காரத்திற்காக அவ்வளவாய் செலவுசெய்வது சரியா என சிந்தித்துப் பார்ப்பார்களாக.)

பொன்னைத் திருடர்கள் கன்னமிட்டுத் திருடுவார்கள் என நாம் அறிவோம், பொன்னுங்கூட துரு பிடிக்கும் என யாக்கோபு 5:3 கூறுகிறது. எனவே பொன் அல்லது பொன்னகை பொக்கிஷங்களில் ஒன்றுதான். அந்தப் பொக்கிஷத்தைச் சேர்க்கவேண்டாம் என இயேசு நேரடியாகக் கூறுகிறார். இயேசு நேரடியாகக் கூறாத “என்னை ஆராதனை செய்யுங்கள்” எனும் கற்பனைப்படி நடப்பதற்கு தீவிரப்படுகிற கிறிஸ்தவ சமுதாயம், நேரடியாகச் சொன்ன கற்பனைக்குக் கீழ்ப்படிய தீவிரப்படுகிறதா?

ஒரு கிறிஸ்தவ திருமண விழாவுக்குச் சென்றால் போதும், ஒவ்வொருவரும் எவ்வளவாய் பொக்கிஷம் சேர்த்துவைத்துள்ளனர் என்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இதை பேராயர், மாபெரும் ஊழியர் etc. etc. போன்ற யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம், அவர்களும் ஏகப்பட்ட பொன்னகைகளை வைத்திருப்பதுதான். பூமியில் பொக்கிஷம் சேர்க்கும் இவர்கள், இயேசுவின் அடுத்த கட்டளைப்படி பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்கமுடியுமா? நிச்சயம் முடியாது. ஏனெனில் பூமியின் பொக்கிஷங்களை இழந்தால்தான் பரலோகப் பொக்கிஷங்களைச் சேர்க்க முடியும். பின்வரும் வசனத்தைப் படிப்போம். இதுவும் இயேசுவின் வசனம்தான்.

லூக்கா 12:33 உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.

பூமியின் பொக்கிஷங்களாகிய பொன்னகைகளை விற்று பிச்சைகொடுத்தால்தான் குறையாத பொக்கிஷத்தை பரலோகத்தில் சேர்க்கமுடியும். இல்லாவிடில், ............

யாக்கோபு 5:3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.

இவ்வசனம் கூறுகிறபடிதான் நடக்கும். எனவே இம்மாதிரி காரியங்களைச் சொல்லி போதிப்பதுதான் அவசியமானது. அதைவிடுத்து, யாரை ஆராதனை செய்வது என்பதை அடிப்படையாக வைத்து பிரிவினைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.

புதியஏற்பாட்டின் நடைமுறை போதனைகள், மற்றும் நடவடிக்கைகளை சற்று ஊன்றிப் படித்துப் பாருங்கள். அன்றைய நடைமுறையை இன்றைய கிறிஸ்தவர்களின் நடைமுறையோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் எதை முக்கியப்படுத்தினார்கள், நாம் எவற்றை முக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை சற்று சீர்தூக்கிப் பாருங்கள்.

இயேசுவை ஆராதனை செய்யும்படி வேதாகமம் கூறவில்லை என்கிற நான், பிதாவை ஆராதனை செய்வதற்கும் தீவிரப்படுவதில்லை. ஏனெனில் பிதாவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதுதான், மெய்யான ஆராதனை. பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

ரோமர் 12:1 நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
யக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.


இவ்வசனத்தின் கருத்தை அறிந்தீர்களானால், இயேசுவை ஆராதிக்க வேண்டியதில்லை என நான் கூறுவதைக் குற்றமாக்கி, என்னைவிட்டு விலகவும், என்னை விலக்கவும் கூறியிருக்க மாட்டீர்கள்.

arputham wrote:
//இயேசு ஆராதனைக்குரியவர் அல்ல என்கிற சிந்தையுடையவர் அவருடைய தெய்வீகத்தை மறுக்கிறார், தேவனையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அப்படிப்பட்டவர்களை விட்டு நாம் விலகவேண்டும்..... விலக்க வேண்டும்.//


“இயேசு ஆராதனைக்குரியவர் அல்ல” என்கிற சிந்தையுடையவரை விட்டு விலகும்படி வேதாகமம் சொல்லவில்லை, யாரைவிட்டு விலகும்படி வேதாகமம் சொல்கிறது என்பதை கவனமாகப் படியுங்கள்.

ரோமர் 16:17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
(இயேசு ஆராதனைக்குரியவர் என ரோமர் நிருபத்தின் ஏதாவது ஒரு வசனத்தில் பவுல் உபதேசித்துள்ளாரா?)

2 தெச. 3:6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

(யார் ஒழுங்கற்று நடப்பவர்கள் என பவுல் கூறுவதையும் படியுங்கள்.)

2 தெச. 3:7,8 நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

1 தீமோ. 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

1 தீமோ. 6:20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.

(மத்தேயு 4:10-ன்படி, பிதாவாகிய ஒரே தேவனை ஆராதிக்கவேண்டும் எனும் எனது கொள்கையில் விபரீதம் எதுவுமில்லை, ஆனால் ஏதோ சில வசனங்களைத் துருவி ஆராய்ந்து கண்டு பிடித்த உங்கள் கொள்கையான குமாரானாகிய இயேசுவையும் ஆராதிக்கவேண்டும் என்பது கொள்கை விபரீதமா என்பதை நீங்கள்தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.)

2 தீமோ. 3:1-5 கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

தீத்து 3:9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.

(நமது தர்க்கம் வீணாகப் போகாது என நம்புகிறேன்)

தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.

(இத்தளத்தில் பலர் வேதப்புரட்டர்கள் அல்ல என நான் நம்புவதால், இத்தளத்தைவிட்டு இதுவரை நான் விலகவில்லை)

எனது விசுவாசம் என்னவென்பது சகோ.அற்புதத்திற்கும், தள நிர்வாகிகளுக்கும், அன்பர்களுக்கும் நன்றாகப் புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதைப் படித்தபின் சகோ.அற்புதம் மட்டுமல்ல, தளநிர்வாகிகளும் என்னை விலக்கத் தீர்மானித்தால் அதற்காக நான் எவ்விதத்திலும் வருந்தப்போவதில்லை. ஏனெனில் .....

லூக்கா 6:22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

ஒரேயொரு விஷயத்தில் மட்டும் சிறு வருத்தம். நான் மரியாதை வைத்துள்ள சகோ.அற்புதம், ஏதோ ஒரு தவறான தகவலை நான் கூறியதாகக் கருதி, நான் தன்னிலை விளக்கம் கொடுக்கக்கூட வாய்ப்பு தராமல், நான் முழு பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முயல்வதாகக் கூறிவிட்டாரே என்பதுதான்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

சகோ. அன்பு,
நிறைய எழுதியிருக்கிறீர்கள். நல்லது. கீழ்கண்ட வசனங்களுக்கு உங்கள் விளக்கம் என்ன?
மத்தேயு 9:18அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.worshipped him, saying, My daughter is even now dead: but come and lay your hand upon her, and she shall live

மத்தேயு 14:3பணிந்து கொண்டார்கள்.worshipped him, saying, Of a truth you are the Son of God

மத்தேயு 14:33.

அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.


Then she came and worshipped him, saying, Lord, help me

மத்தேயு 28:9.

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

And as they went to tell his disciples, behold, Jesus met them, saying, All hail. And they came and held him by the feet, and worshipped him


கொலோசெயர் 1:15

15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

 



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

2 தெச. 3:6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

இது நீங்கள் குறிப்பிட்ட வசனம்தான். இதில் ஏன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கட்டளையிட்டார்கள் என்று சொல்ல முடியுமா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

The Jews therefore said to Him, "You are not yet fifty years old, and have You seen Abraham?" Jesus said to them, "Truly, truly, I say to you, before Abraham was born, I am." Therefore they picked up stones to throw at Him; but Jesus hid Himself, and went out of the temple. (John 8:57-59)

"I and the Father are one." The Jews took up stones again to stone Him. Jesus answered them, "I showed you many good works from the Father; for which of them are you stoning Me?" The Jews answered Him, "For a good work we do not stone You, but for blasphemy; and because You, being a man, make Yourself out to be God." (John 10:30-33)

And Jesus cried out and said, "He who believes in Me does not believe in Me, but in Him who sent Me. And he who beholds Me beholds the One who sent Me. I have come as light into the world, that everyone who believes in Me may not remain in darkness." (John 12:44-46)

Jesus said to him, "I am the way, and the truth, and the life; no one comes to the Father, but through Me. If you had known Me, you would have known My Father also; from now on you know Him, and have seen Him." Philip said to Him, "Lord, show us the Father, and it is enough for us." Jesus said to him, "Have I been so long with you, and yet you have not come to know Me, Philip? He who has seen Me has seen the Father; how do you say, 'Show us the Father'?" (John 14:6-9)



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

Isaiah 48:16-17

16 Come ye near unto me, hear ye this; I have not spoken in secret from the beginning; from the time that it was, there am I: and now the Lord GOD, and his Spirit, hath sent me. 17 Thus saith the LORD, thy Redeemer, the Holy One of Israel;

For a good work we stone thee not; replied the Jews, but for blasphemy; and because that thou, being a man, makest thyself God.” (John 10:33).

John 1:1 says that “the Word was God.” John 1:14 says that “And the Word was made flesh, and dwelt among us”

And without controversy great is the mystery of godliness: God was manifest in the flesh, justified in the Spirit, seen of angels, preached unto the Gentiles, believed on in the world, received up into glory.1 Timothy 3:16

Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name Immanuel. Isaiah 7:14  (written: 712 BC (Before Christ)

Behold, a virgin shall be with child, and shall bring forth a son, and they shall call His name Emmanuel, which being interpreted is, God with us.
Matthew 1:23

For unto us a Child is born, unto us a son is given; and the government will be upon His shoulder: and his name will be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.
Isaiah 9:6 (written: 712 BC (Before Christ)

And there came a fear on all: and they glorified God, saying, That a great prophet is risen up among us; and, That God hath visited his people.
Luke 7:16

In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. John 1:1

because he had not only broken the sabbath, but said also that God was his Father, making Himself equal with God. John 5:18

You call Me Teacher and Lord; and ye say well; for so I Am. John 13:13 

And Thomas answered and said unto him [Jesus], My Lord and my God. John 20:28

Looking for that blessed hope, and the glorious appearing of the great God and our Saviour Jesus Christ; Titus 2:13

11 And I saw heaven opened, and behold a white horse; and he that sat upon him was called Faithful and True, and in righteousness he doth judge and make war. 12 His eyes were as a flame of fire, and on his head were many crowns; and he had a name written, that no man knew, but he himself. 13 And he was clothed with a vesture dipped in blood: and his name is called The Word of God. 14 And the armies which were in heaven followed him upon white horses, clothed in fine linen, white and clean.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

NESAN

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 8
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

சகோதரர்  அன்பு அவர்களின் பதில் மிக அருமை! அனால் இங்குஅது
ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதுதான் புரியவில்லை!
.
///தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.  (எபிரெயர் 1:6)  கவனிக்க இங்கு சொன்னவர் தேவன்////.
.
சொன்னாவர் தேவன்தான் ஆனால் சொல்லப்பட்டது மாமிசமான நமக்கல்ல!  ஆவியாயிருக்கும் தேவதூதர்களுக்கு! மாமிசமான நமக்கெல்லாம் தேவன் கர்த்தர் ஒருவரே!
எரேமியா 32:27 இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்
எண்ணாகமம் 16:22 அப்பொழுது அவர்கள் முகங்குப்புறவிழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே,
.
//ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி.......(பிலிப்பியர் 2:9)
.
இங்கும் உயர்த்தினவர் தேவனே! ஆனால்  ஆனால் இயேசுவை தேவன் உயர்த்தியது எதற்கு ஒப்பாய் இருக்கிறது என்றால் சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்தில் உயர்த்தப்பட்டதற்கு ஒப்பாயிருக்கிறது. சிலர் அந்த சர்பத்தை வணங்க முற்ப்பட்டபோது அது உடைத்துபோடப்பட்டது. எனவே உயர்த்தப்பட்டது எல்லாம் ஆராதனைக்கு உரியதல்ல!

/////அவர் பரலோக சபையினராலேயே ஆராதிக்கப்படும் போது நாம் அவரை இங்கே ஆராதிப்பதற்கு தயங்க வேண்டிய அவசியமில்லை, ////
.
நமக்கு யாரை ஆராதிப்பதற்கு  கட்டளையிடப்பட்டது என்பதை மாத்திரம்தான் நாம் பார்க்கவேண்டும்.  வேதத்தில் எங்காவது இயேசுவை ஆராதியுங்கள் என்று வசனம் உள்ளதா? ஆராதனை என்பது தேவனுக்கு மட்டுமே  செலுத்த கூடிய ஓன்று.
.
லூக்கா 4:8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக
பிலிப்பியர் 3:3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

எபிரெயர் 12:28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்
.
யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்
.
யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
ரோமர் 10:13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
வெளி 5:14 அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
.
வெளி 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்.
.
வெளி 15:4 கர்த்தாவே,......... தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்;
.
இயேசுவுக்கு ஆராதனை செலுத்தவேண்டும் என்று எங்குமே வசனம் இல்லை!
வெளி 7:12 ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென்,
(பணிந்துகோள்ளுதல் என்பதன் பொருள் வேறு
I சாமுவேல் 25:23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,)


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

///தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.  (எபிரெயர் 1:6)  கவனிக்க இங்கு சொன்னவர் தேவன்////.
.
//சொன்னாவர் தேவன்தான் ஆனால் சொல்லப்பட்டது மாமிசமான நமக்கல்ல!  ஆவியாயிருக்கும் தேவதூதர்களுக்கு! //
தேவதூதர்கள் மனிதர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தேவதூதர்களே தொழுதுகொள்ளும்போது மனிதர்கள் ஏன் தொழுதுகொள்ளக்கூடாது?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard