நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

யோவான் அதிகாரம்: 14
10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

12. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
இங்கே கவனிக்க வேண்டியது. ஏன் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் செய்வேன் என்று இயேசு கூறுகிறார். தான் பிதாவினிடத்திற்கு போவதை குறிப்பிடும்போதுதான் இதை சொல்கிறார். இதற்கு அர்த்தம் என்ன? இயேசுவிடம் நாம் மன்றாடலாம், நம் குறைகளை சொல்லலாம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Jesus_My_Love

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 37
Location: Coimbatore
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

கிறிஸ்து ஆராதனைக்குரியவர்


I Love You Jesus


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

யோவான் 14

4. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

5. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.

6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

இயேசு கிறிஸ்து தெளிவாகச் சொல்லியிருக்கிறார்:  என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். இப்படியிருக்க இயேசு கிறிஸ்து தேவையில்லை நாங்கள் தேவனிடத்தில் நேரடியாகப் பேசிக்கொள்கிறோம் என்றால் என்ன அர்த்தம்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

யேகோவா சாட்சிகள் என்றழைக்கப்படும் ஒரு கூட்டத்தினர் இயேசு கிறிஸ்துவை வணங்கக்கூடாது என்று தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். கேரளத்தில் இவர்கள் ஆதிக்கம் அதிகம். வீடு வீடாக புகுந்து துருபதேசம் இவர்கள் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இவர்களிடம் கிறிஸ்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Proskuneo என்ற வார்த்தையை இவர்கள் எப்படி தந்திரமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய கீழ்கண்ட தொடுப்புக்கு சென்று பாருங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

மேலும் விளக்கம் இங்கே:

http://www.desiringgod.org/ResourceLibrary/Sermons/ByDate/1997/1016_Worship_God/

http://www.towertotruth.net/shouldchris.htm



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Jesus_My_Love

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 37
Location: Coimbatore
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

You are exactly correct Robin

I Love You Jesus


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

chillsam
Century Hitter (1)

Joined: 30-11-1999 05:30:00
Posts: 104
Location: Chennai
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

அன்பு57 அவர்களைக் குறித்து...இதைத் தான் முன்பே சொன்னேன்,

"போகப் போகத் தெரியும்" என்று..!

 

அன்பு57: // குறிப்பாக சகோ.சில்சாமுடன் வாதம் செய்ய விரும்பாததால்...// ஏன் என்று அறிந்துக்கொள்ள வாய்ப்பு தருவீர்களா,அய்யா..?



Last Edited On: 01-12-2009 18:16:58 By chillsam for the Reason
"Praying for Your Success"


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

chillsam

Century Hitter (1)

Joined: 30-11-1999 05:30:00
Posts: 104
Location: Chennai
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

இஸ்லாமிய மார்க்க அமைப்பாளர் முகம்மது அவர்களின் விசுவாசத்தையும் தடுமாறச் செய்த புண்ணியவான்கள் வழிவந்தவர்கள்தான் இன்றைய யெகோவா சாட்சிகள் என்பது வரலாறு;அவர்களுடைய பாதிப்பில் தான் மார்மன்ஸ்,ஏழாம் நாள்காரர்களும் தோன்றினர்; பிரன்ஹாம் எனும் கள்ளத் தீர்க்கதரிசியும் தோன்றினார்;

 

கர்த்தருடைய
வருகை பரியந்தமும் இதுபோன்ற கூட்டத்தார் வந்துகொண்டே இருப்பர்; சபையானது
பூரணமடைய இடறல் வருவதும் நல்லதே,ஆனாலும் யாரால் அந்த இடறல் வருகிறதோ
அவருக்கு ஐயோ..!

 

"என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான்" என்று இயேசுகிறிஸ்துவும் கூறினார்..!


"Praying for Your Success"


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

RS

Im New Here!

Joined: 30-11-2009 13:49:14
Posts: 12
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

சகோ அன்பு அவர்களின் பதிவுகள் தெளிவாக வேத வசனங்களுக்கு உகந்ததாகவே இருக்கிறது.

தேவன் (God)    என்ற பதத்துக்கும் அருமையாக விளக்கம் அளித்துள்ளார். ராபின் அவர்கள் அன்பு எழுதியதை முழுவதும் படிக்காமல் ஆங்கிலத்தில் பதில் பதித்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. பணிந்து கொள்ளுதல், தொழுது கொள்ளுதல் போன்ற வார்த்தைகளுக்கும் அவர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

அன்பு அவர்கள் கூற விரும்புவது இயேசுகிறிஸ்து  தேவத்துவம் வாய்ந்த ஒரு தேவன் என்றாலும் அவர் பிதாவாகிய தேவனுக்கு குமாரனே என்பதுதான். இருவரும் சமமாயிருக்கும் பட்சம் பிதாவுக்கு இவர் ஏன் கீழ்ப்படிய வேண்டும் என்பது போன்ற கேள்விகள் எழலாம். எனக்கும் இத்தகைய கேள்விகளுக்கு இதுவரை யாரும் தெளிவான பதில் தந்ததில்லை.

'அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக' என்ற பதம் உண்மையில் சர்வ வல்ல பிதாவுக்கு மாத்திரம் பொருந்தும். மற்றபடி குமாரன் ஸ்தானத்தில் அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும். பிதாவுக்குக் கொடுக்க வேண்டிய ஆராதனையை சபையின் தலையாகிய கிறிஸ்துவுக்குக் கொடுக்கும் பட்சம் சரீரமாகிய 'சபை'க்கும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சபைக்கே கொடுக்கப்பட்ட கட்டளைதானே தேவனை ஆராதி என்பது!

நன்றி அன்பு அவர்களே!

இனி உங்கள் பதிவை எடுத்துவிட்டாலும் எனக்கும் கவலை இல்லை. இதன் மூலம் பயனடைந்த அனேகரில் நானும் ஒருவன். பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம் என்ற வசனங்கள் அந்தத் தன்மையில் ஒன்றாயிருகிறோம் என்றே அர்த்தமளிக்க முடியும். அதுபோல் நீங்களும் ஒன்றாயிருங்கள் என்று கூறியிருப்பதை என்னென்று கொள்வது? அதே போல கர்த்தர் என்ற பதத்திற்கு creator   என்றே அர்த்தம். ஏனென்றால் பிதா இவர் மூலமாயும், இவருக்கென்றும் சகலத்தையும் படைத்தார் என்பதால் இயேசுகிறிஸ்து கர்த்தர் என்றழைக்கப்பட தகுதிவாய்ந்தவர் என்பது என் எண்ணம்.

"கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும், குமாரனையும் உடையவன்" 2யோவான்9.

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களூக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக! 1தெச1:1



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sarav

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 32
Location:
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

WHAT ABOUT THE OTHER GODS?The Bible acknowledges the existence of other gods, but places them in categories other than the exclusive position of the ONE TRUE GOD. These "gods" are, without exception, CREATED AND FALSE. They are not GOD by NATURE.

"However at that time, when you did not know God, you were slaves to those which BY NATURE ARE NO GODS" (Galatians 4:8).

"For even if there are SO CALLED gODS whether in heaven or on earth, as indeed there are many gods and many lords, yet for us there is but ONE GOD, the Father, from whom are all things, and we exist for Him; and ONE LORD, Jesus Christ, by whom are all things, and we exist through Him" (1 Corinthians 8:5,6).Belief in the ONE TRUE GOD of Scripture has always necessitated renouncing ALL OTHER GODS. The Ten Commandments begin, "I am the Lord your God, who brought you out of the land of Egypt, out of the house of slavery. YOU SHALL HAVE NO OTHER GODS BEFORE ME... You shall not worship them or serve them; for I, the Lord your God, am a jealous God..." (Exodus 20:2,3,5).

CATEGORIES OF "GODS" IN SCRIPTURE

Category 1—Satanic

"We know that we are of God, and the whole world lies in the power of the evil one" (1 John 5:19)."...the god of this world has blinded the minds of the unbelieving, that they might not see the light of the gospel of the glory of Christ, who is the image of God" (2 Corinthians 4:4).It is evident, if we believe Jesus to be "a god," He would NOT fit this satanic category!Category 2—IdolsA. Carved Idols—"And he did evil in the sight of the Lord as Manasseh his father had done, and Amon sacrificed to all the carved images which his father Manasseh had made, and he served them" (2 Chron. 33:22).B. Molten Images—

"They shall be turned back and be utterly put to shame, who trust in idols, who say to molten images, ‘you are our gods’" (Isaiah 42:17).

"And do not be idolators" (1 Cor. 10:7). If we think that Jesus is "a god", He would NOT fit into the above category!

Category 3—Exaltation of Humans to Gods

"Jesus answered them, ‘Has it not been written in your Law, "I said, ‘you are gods?"’" (John 10:34).

Who were called "gods" by Jesus? It was the judges who ruled Israel before the days of the Kings. These judges had the power of life and death over the people, and were called "gods."

Were they true gods or false gods? Psalm 82 tells us in verses 1 and 2, "God takes His stand in His own congregation; He judges in the midst of the rulers. How long will you judge unjustly, and show partiality to the wicked?"

Yes, God’s judgment awaited these "men-gods", who were not behaving in a righteous manner. "I said, ‘You are gods, and all of you are sons of the Most High. Nevertheless you will die like men...’" (Psalm 82:6,7).

No exalted man is a true god, but a false one. Do not be deceived by the same lie Satan told Eve in the garden of Eden: "...You will be like God (or, "as gods") knowing good and evil" (Genesis 3:5).

The teaching that any man can become a god is unscriptural. GOD has an exclusive on godship. If we think Jesus is "a god," we see that we cannot place Him in this category of corrupt men. This concludes the biblical categories of "gods." Jesus fits NONE of them. Jesus is NOT "a god."

This is so important because if we have the right Jesus Christ, we are right for all eternity. If we have the wrong Jesus Christ, then we are wrong for all eternity. Do not be misled by groups that downgrade Jesus Christ, while exalting themselves. Jesus is Almighty God manifest in the flesh, nothing less. Why not trust in Him for your eternal salvation, rather than some organization?

Box 294 Nelson B.C. V1L 5P9 Visit our WEB: http://www.macgregorministries.org/



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sarav

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 32
Location:

Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

HOW MANY GODS DO YOU BELIEVE?

In answer to the above question, every Jehovah’s Witness will answer–ONE! Yes, Jehovah’s Witnesses worship and acknowledge only one God, namely God the Father, whom they call "Jehovah." They believe the Holy Spirit is an "active force" or God’s power, and they reduce Jesus to a secondary god, who is also known as the archangel Michael in their theology. They reject the Trinity.

THERE IS ONLY ONE TRUE GOD

Jehovah’s Witnesses will agree with this statement, and they are right, there is only one true God. Jeremiah 10:10 says, "But the LORD [YHWH] is the true God; He is the living God and the everlasting King."

This Scripture is very plain. YHWH [mistranslated "Jehovah"] is the one true God of Scripture. He is the only true God BY NATURE. Galatians 4:8 explains it this way: "However at that time, when you did not know God, you were slaves to those which BY NATURE are no gods."

Jehovah’s Witnesses will agree with the above statement. YHWH is the only true God by nature.

WHAT ABOUT OTHER GODS IN THE BIBLE?

By biblical definition, all other gods mentioned in Scripture are first of all FALSE, and secondly, CREATED. Space does not permit a discussion of this truth in this article, but for more information we recommend our booklet, "Could Jesus be ‘a god’?"

Even the demons know there is only one God! James 2:19 says, "You believe that God is one. You do well; the demons also believe, and shudder."

We therefore have the one, true, eternal God of Scripture, worthy of our worship and devotion. All others are false, created ones, and are not true gods by nature.

WHAT ABOUT JESUS?

The one, true God of Scripture has revealed Himself through the pages of the Bible as Father, Son, and Holy Spirit. This forms the basis of the teaching called the Trinity [triunity]. For further details, please refer to our booklet, "Is the Trinity True?" In the Trinity teaching, these three persons are the one, true God. The three are one. Belief in one, true, eternal God is called "monotheism" and forms the basis of Christianity.

MONOTHEISM VERSUS POLYTHEISM

On the other side of the argument, we find groups believing in polytheism, belief in more than one God. Mormons, Eastern and pagan religions fall into this category. Jehovah’s Witnesses may be surprised to discover that they also fall into this category, since they teach that Jesus is an extra god. Let’s pursue the Jehovah’s Witnesses line of reasoning a little further.

JEHOVAH’S WITNESSES DOCTRINE ON GOD

Jehovah’s Witnesses are taught by the Watchtower Society that Almighty God Jehovah created a secondary god, Jesus Christ. To illustrate:

O

+

O

= 2

Jehovah
[One God]

+

Jesus
[Secondary god]

=Belief in TWO-both true?

We have already established that there is ONE TRUE GOD by nature. Now we ask the Jehovah’s Witnesses the key question -- Is Jesus a true god or a false god? They will have to admit that Jesus is a true god. This forces them to believe in more than one true god! You can’t believe in two true gods as the Jehovah’s Witnesses do and still be a Christian and a Bible believer! This is a real dilemma for Jehovah’s Witnesses.

I remember presenting this concept to one Jehovah’s Witness. I then asked, "How many gods do Jehovah’s Witnesses believe in?" After thinking over the matter carefully, and pondering at some length, the Jehovah’s Witness finally replied, "one and a half!" The explanation was of course, that they believe Jehovah [God one] created Jesus [god two], but Jesus was at the same time the archangel Michael, so Jesus became "sort of a hybrid being, a god/archangel Michael" at the same time! This reasoning also makes them polytheists, as does their rendering of John 1:1 in their "New World Translation" of the Bible: "In [the] beginning the Word was, and the Word was with God, and the Word was a god". No reputable Bible scholars will endorse this [mis]translation. The text should read "and the Word [Jesus] was God".

JESUS—AN EXTRA GOD OR ALMIGHTY GOD?

Christians need to be able to present the right Jesus Christ to Jehovah’s Witnesses. Here is a presentation that proves that Jesus is Almighty God. This point settles the matter of Jesus’ identity. If He is Almighty God manifest in the flesh, He is not any kind of secondary god! Pray before the arrival of the Jehovah’s Witnesses at your door, and then proceed. They will no doubt mention the "kingdom," a favorite topic of their presentations. You reply that to discuss the kingdom, we need first to discuss the KING, Jesus Christ. State that you believe Jesus is ALMIGHTY GOD, manifest in the flesh. The Jehovah’s Witnesses will object. Ask them, " Will you believe that Jesus Christ is Almighty God, if I can show it to you from the Bible?" They will scoff, but just proceed.

THE "FIRST AND THE LAST" WITNESS

I title this presentation, the "First and the Last," not only because it uses this term, but also because we use the first and the last chapters of Revelation to prove our point. Let’s begin.

REVELATION 1:8, WHO IS HE?

"I am the ALPHA AND THE OMEGA," says the LORD GOD, who is and who was and who is to come, the ALMIGHTY." [Rev. 1:8 NAS]

This Scripture teaches us a few points. The "Alpha and the Omega" is the "Lord God Almighty," and He is coming.

All will agree, and the Jehovah’s Witnesses will point out that their Bible inserts "Jehovah" for "LORD God." Tell them it is not in the original text and they can see this for themselves in their New World Translation "Kingdom Interlinear Translation." Say,

"Let’s see if the Bible sheds any more light on the identity of the ‘Alpha and the Omega.’ Turn to Revelation chapter 22."

"I AM COMING QUICKLY" SPEAKER

There are several speakers in Revelation 22. We are interested in the one who says "I am coming quickly," since this fits in with Revelation 1:8 which we have just read.

"Behold I AM COMING QUICKLY and My reward is with Me, to render to every man according to what he has done. I AM THE ALPHA AND THE OMEGA, THE FIRST AND THE LAST, the beginning and the end." [Rev.22:12,13]

What have we now learned? The ALPHA AND THE OMEGA has two other titles, "THE BEGINNING AND THE END," and "THE FIRST AND THE LAST."Remember especially this one, as it will be used again. Resuming our reading in Revelation 22, notice that the speaker does NOT change, but continues on from verse 14 through 16 inclusive. Force Jehovah’s Witnesses to read IN CONTEXT. In verse 16, the Alpha and the Omega, the First and the Last identifies Himself:

"I, JESUS, have sent My angel to testify to you these things for the churches. I am the root and the offspring of David, the bright morning star." Verse 20 concludes "He who testifies to these things says, ‘Yes, I am coming quickly.’ Amen, Come, Lord Jesus."

Yes, Jesus Christ Himself tells us that He is the Alpha and the Omega, The First and the Last. Now we turn back to Revelation chapter one.

THE VISION OF THE SON OF MAN

Beginning in verse 13 of Revelation, chapter one, we have a vision of a "son of man." Jehovah’s Witnesses will tell you this is Jesus. Read down to verses 17 and 18, which read:

"Do not be afraid; I am the FIRST AND THE LAST, and the living One; and I was dead, and behold, I am alive forevermore, and I have the keys of death and of Hades."

Even a Jehovah’s Witnesses has to admit that this applies only to Jesus Christ. Jesus really is "THE FIRST AND THE LAST," and the "ALPHA AND THE OMEGA." Return now to Revelation 1:8 where we began and put in the name of Jesus Christ where it belongs!

"I am the Alpha and the Omega," says the Lord God [Jesus Christ], "who is, who was and who is to come, the Almighty." [Rev. 1:8]JESUS CHRIST IS ALMIGHTY GOD!

 

MacGregor Ministries

Box 454 Metaline Falls WA 99153

Box 294 Nelson B.C. V1L 5P9

Visit our WEB

http://www.macgregorministries.org/



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

robin

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 31
Location
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

//சகோ அன்பு அவர்களின் பதிவுகள் தெளிவாக வேத வசனங்களுக்கு உகந்ததாகவே இருக்கிறது.

தேவன் (God)    என்ற பதத்துக்கும் அருமையாக விளக்கம் அளித்துள்ளார். ராபின் அவர்கள் அன்பு எழுதியதை முழுவதும் படிக்காமல் ஆங்கிலத்தில் பதில் பதித்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. பணிந்து கொள்ளுதல், தொழுது கொள்ளுதல் போன்ற வார்த்தைகளுக்கும் அவர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். //  அன்பு எழுதியது மட்டும் கண்ணுக்கு தெரிகிறது, மற்றவர்கள் எழுதியது எதுவும் தெரியவில்லை, அப்படிதானே. நல்லது. உங்கள் கூட்டத்தில் யார் யார் வெளிபடுத்தியதற்கு நன்றி.

பணிந்து கொள்ளுதல், தொழுது கொள்ளுதல் பற்றிய சுட்டிகளை கொடுத்திருந்தேனே அதை படிக்கவில்லையா? இப்போது சரவ் அருமையாக விளக்கம் அளித்துள்ளார். இப்பொழுதாவது உங்கள் கண்கள் திறக்கிறதா என்று பார்ப்போம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

anbu57

Im New Here!

Joined: 12-10-2009 05:37:08
Posts: 32
Location: Tirunelveli


Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குரியவரா?

RS wrote:
//சகோ அன்பு அவர்களின் பதிவுகள் தெளிவாக வேத வசனங்களுக்கு உகந்ததாகவே இருக்கிறது.

தேவன் (God) என்ற பதத்துக்கும் அருமையாக விளக்கம் அளித்துள்ளார். ராபின் அவர்கள் அன்பு எழுதியதை முழுவதும் படிக்காமல் ஆங்கிலத்தில் பதில் பதித்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. பணிந்து கொள்ளுதல், தொழுது கொள்ளுதல் போன்ற வார்த்தைகளுக்கும் அவர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.//

//நன்றி அன்பு அவர்களே!

இனி உங்கள் பதிவை எடுத்துவிட்டாலும் எனக்கும் கவலை இல்லை. இதன் மூலம் பயனடைந்த அனேகரில் நானும் ஒருவன்.//

எனது பதிவை நீங்கள் புரிந்துகொண்டதற்காக தேவனைத் துதிக்கிறேன்.

உண்மையில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். சகோ.சில்சாம் அவர்கள் என்னிடம் 4 கேள்விகளை எழுப்பியிருந்தார். எனது பணியைக் குறித்த தேவசித்தப்படி, சில்சாமின் கேள்விகளுக்கு நான் விரிவான பதிலைக் கொடுத்திருக்கவேண்டும். ஏனெனில் நான் தேவப்பணியைச் செய்ய அழைக்கப்பட்டபோது, தேவன் எனக்குத் தந்த வசனம் இதுதான்:

எசேக்கியேல் 2:7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறவர்கள் கேட்டாலும், கேளாவிட்டாலும் தேவனின் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லவேண்டுமென்பதுதான் தேவன் எனக்கிட்ட கட்டளை. இப்படியிருக்க, சகோ.சில்சாமின் சில அணுகுமுறைகளை விரும்பாத நான், அவரது கேள்விகளுக்கு விரிவான பதில் கொடாமல் சில வேதவசனங்களை மட்டும் பதிலாகக் கொடுத்தேன். அந்த வசனங்களைப் பதிவு செய்கையில், வசனங்களைக் கொடுப்பது போதாது, அவற்றிற்கான விளக்கங்களையும் கொடுக்கவேண்டுமென தேவனின் மெல்லிய சத்தம் என்னோடு பேசியதை நான் உணரத்தான் செய்தேன். ஆயினும் தேவசத்தத்தைப் புறக்கணித்து, என் சுயசித்தப்படி வசனங்களை மட்டும் கொடுத்தேன்.

கிட்டத்தட்ட யோனாவைப் போல தேவன் சொன்னதைப் புறக்கணித்து என் சுயச்சித்தப்படி நடந்தேன். ஆனால் தேவனோ, யோனாவை எப்படி இழுத்துக் கொண்டுவந்தாரோ அதேவிதமாக உங்களையும் சகோ.அற்புதத்தையும் கருவிகளாகப் பயன்படுத்தி என்னை இழுத்துவந்து, வசனங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தரச்செய்தார். தேவசித்தத்தை நான் நிறைவேற்றுவதற்கு கருவிகளாகப் பயன்படுத்தப்பட்ட உங்களுக்கும், அற்புதத்திற்கும், சில்சாமுக்கும் எனது நன்றியை கிறிஸ்துவின் நாமத்தில் தெரிவிக்கிறேன்.

எனது பதிவு தங்களைப்போல் சிலருக்காவது பயன்படுமே என்பதை உணராமல், யோனாவைப் போல் ஓடியது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன்..

தள அன்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.

எனது பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், சந்தேகத்திற்குரிய பகுதி மற்றும் வசனங்களை மேற்கோளிட்டு கேளுங்கள். மேலும் விளக்கம்தர நான் தயாராக இருக்கிறேன். அதைவிடுத்து, தேவையற்ற விதமாக எனது பதிவை விமர்சிக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உதாரணமாக, எனது பழையபதிவு ஒன்றினை சகோ.அற்புதம் பின்வருமாறு விமர்சித்திருந்தார்.

//இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை மேற்கோள் காட்டி சகோ.அன்பு கூறியிருப்பவைகளைப் பார்ர்த்தால் இயேசுவை ஆராதிக்கக் கூடாது என்று அவர் சொல்ல வருகிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.//

எனது பதிவை இவர் மேற்கோள் காட்டாததால், எனது எந்தப் பதிவை இவர் விமர்சிக்கிறார் என்பது தெரியவில்லை. (இதேவிதமாகத்தான் சகோ.RS-ம் எனது பதிவை மேற்கோள் காட்டாமல் ஒரு தகவலைத் தெரிவித்து, சில குழப்பங்கள் உண்டாகி, இறுதியில் நன்மையில் முடிந்தது). சகோ.அற்புதம் சொல்கிறபடி பார்த்தால், சகோ.சில்சாமின் கேள்விகளுக்கு சில வசனங்களை மேற்கோள் காட்டி நான் பதித்த பதிவாகத்தான் இருக்கவேண்டுமென யூகிக்கிறேன். அப்பதிவில் எனது வார்த்தைகள் எதையும் பதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வசனங்களில் ஒன்றில் இயேசு பின்வருமாறு கூறுகிறார்.

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இவ்வசனத்திற்கு நான் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும், இயேசுவை ஆராதிக்கக்கூடாது என நான் சொல்ல வருகிறேனோ என அற்புதம் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது? இயேசுவை ஆராதிக்கக்கூடாது என சொல்ல வருவது நானல்ல, இயேசுதான் என்பதுதானே? ஏனெனில் நான்தான் விளக்கம் எதுவுமே தரவில்லையே!

எனவே, மத்தேயு 4:10-ன் மூலம், “தேவன் ஒருவரைத் தவிர யாரையும், தம்மையுங்கூட ஆராதிக்கக்கூடாது” என இயேசு சொல்ல வருகிறார் என்பதை சகோ.அற்புதம் ஒத்துக்கொண்டார். உள்ளங்கை நெல்லிக்கனி போல இத்தனை தெளிவாக இயேசு சொல்லியிருந்தும், அவரது வசனத்தில் வெளிச்சம் குறைவாக உள்ளதைப் போல் நினைத்து, வேறு வசனங்களின் வெளிச்சத்தில் பார்க்கவேண்டும் என சகோ.அற்புதம் கூறுகிறார்.

கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட சுத்தசொற்கள் என சங்கீதம் 12:6 கூறுகிறது. ஒருவேளை இந்த வசனத்திற்கான கருத்தையும் (சங்கீதம் 12:6) வேறொரு வசனத்தின் வெளிச்சத்தில்தான் பார்க்கவேண்டும் என சகோ.அற்புதம் கூறினாலும் கூறுவார்.

ஒரு வசனத்தின் கருத்து புரியாமற்போனால், குறிப்பாக மொழிபெயர்ப்பின் காரணமாக மூலக்கருத்து புரியாமற்போனால், பிற வசனங்களின் உதவியை நாடலாம்தான். ஆனால் மிகத்தெளிவான கருத்தை ஒரு வசனம் கூறியிருக்கையில் அவ்வசனத்தின் வெளிச்சமே போதுமானது.

மத்தேயு 4:10-ஐ மேற்கோள் காட்டின என்னை விமர்சித்த சகோ.அற்புதம், தன்னையறியாமல் இயேசுவைத்தான் விமர்சனம் செய்துள்ளார். அதேபதிவின் இறுதியில், இயேசுவை ஆராதிக்கக்கூடாது என சொல்ல வருகிற என்னை விலக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

arputham wrote:
//இயேசு ஆராதனைக்குரியவர் அல்ல என்கிற சிந்தையுடையவர் அவருடைய தெய்வீகத்தை மறுக்கிறார், தேவனையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அப்படிப்பட்டவர்களை விட்டு நாம் விலகவேண்டும்..... விலக்க வேண்டும்.//


தேவன் ஒருவரையே ஆராதனை செய்யவேண்டும் எனக் கூறியவர் இயேசு. அதாவது “தாம் (இயேசு) ஆராதனைக்குரியவர் அல்ல” எனக் கூறியது இயேசு. இப்படியிருக்க ஏதோ நான் சுயமாக இயேசு ஆராதனைக்குரியவர் அல்ல எனக் கூறியதுபோல் சொல்லி, என்னை விலக்கும்படி சகோ.அற்புதம் கூறுகிறார்.

உண்மையில் அவர் விலக்குவது என்னையல்ல, இயேசுவையே. இயேசு சொன்ன ஒரு வசனத்தைக் கனம் பண்ணாமல், அவ்வசனத்தில் இயேசு கூறியதற்கு மாறாக, இயேசுவை ஆராதித்து என்ன பயன்?

இப்படியாக எனது பதிவை விமர்சிக்க முற்படுபவர்கள், வேதவசனத்தை அல்லது வசனத்தைச் சொன்னவரையே விமர்சிக்க நேரிடக்கூடும். எனது பதிவுகளில் பெரும்பாலும் வேதவசனத்தை மேற்கோள் காட்டித்தான் விளக்கம் கூறியிருப்பேன். எனது விளக்கத்தை விமர்சிப்பவர்கள், நான் மேற்கோள் காட்டின வசனத்தையும் விமர்சிப்பதாக ஆகிவிடும் என்பதால் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகிறேன். வேதவசனங்கள் அனைத்தும் மகத்துவமானவை (ஓசியா 8:12). விவாதம் என்ற பெயரில் அவற்றை விமர்சித்து, தேவகோபாக்கினைக்கு ஆளாகவேண்டாம் என தள அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எனது விளக்கத்தில் தவறு இருப்பதாகத் தோன்றினால் அதைத் தாராளமாக சுட்டிக்காட்டலாம். மாறாக, சகோ.சில்சாம் என்னைக் கள்ளத்தீர்க்கதரிசியாக பாவித்து கீழ்க்கண்டவாறு விமர்சித்துள்ளதைப்போல் அவசரப்பட்டு விமர்சிக்கவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறேன்.

chillsam wrote:
//இஸ்லாமிய மார்க்க அமைப்பாளர் முகம்மது அவர்களின் விசுவாசத்தையும் தடுமாறச் செய்த புண்ணியவான்கள் வழிவந்தவர்கள்தான் இன்றைய யெகோவா சாட்சிகள் என்பது வரலாறு; அவர்களுடைய பாதிப்பில் தான் மார்மன்ஸ், ஏழாம் நாள்காரர்களும் தோன்றினர்; பிரன்ஹாம் எனும் கள்ளத் தீர்க்கதரிசியும் தோன்றினார்;

கர்த்தருடைய வருகை பரியந்தமும் இதுபோன்ற கூட்டத்தார் வந்துகொண்டே இருப்பர்; சபையானது பூரணமடைய இடறல் வருவதும் நல்லதே, ஆனாலும் யாரால் அந்த இடறல் வருகிறதோ அவருக்கு ஐயோ..!//

எனது பதிவை சகோ.சில்சாம் மேற்கோள் காட்டாவிடினும், கள்ளத் தீர்க்கதரிசிகள் என அவர் கருதுகிற கூட்டத்தாரில் என்னையும் சேர்த்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நான் பதிந்துள்ள எந்த விஷயம் என்னைக் கள்ளத் தீர்க்கதரிசியாக அடையாளம் காட்டுகிறது என்பதை வசன ஆதாரத்துடனும், எனது பதிவை மேற்கோள் காட்டியும் அவர் கூறவில்லை.

அவர் இப்படிச் செய்வது இது முதல்முறையல்ல. பலமுறை இப்படித்தான் செய்கிறார். எனவேதான் அவரோடு விவாதிப்பதை நான் தவிர்க்க நினைக்கிறேன். ஆசீர்வாத ஆசை காட்டி பணம் சேகரிப்பவர்கள் மெய்யான ஊழியர்கள் அல்ல என நானுங்கூட கூறியுள்ளேன். ஆனால் அதற்கான வசன ஆதாரங்களைச் சொல்லித்தான் என் கருத்தைக் கூறினேன் என்பதை தள அன்பர்கள் அறிவார்கள். அதேபோல் சகோ.சில்சாமும் தகுந்த வசன ஆதாரத்தைத் தந்து, அவ்வசனம் என்னை கள்ளத் தீர்க்கதரிசியாக அடையாளம் காட்டுகிறது எனச் சொன்னால் அதன்பின் நான் எனது விளக்கத்தைத்தர வசதியாக இருக்கும், அல்லது நான் என்னைத் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

அதைவிடுத்து, மொட்டையாக கள்ளத்தீர்க்கதரிசிகளின் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதுபோல் விமர்சித்து, அவர் விமர்சித்தபடி நான் கள்ளத்தீர்க்கதரிசியாக இல்லாதிருந்தால் நஷ்டம் எனக்கல்ல, அவருக்குத்தான்.

chillsam wrote:
//அன்பு57 அவர்களைக் குறித்து...இதைத் தான் முன்பே சொன்னேன்,

"போகப் போகத் தெரியும்" என்று..! //

போகப் போகத்தான் என்னைக் குறித்து தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக என்னைக் குறித்த எந்த விஷயத்தை நான் மறைத்துள்ளேன் சகோ.சில்சாம் அவர்களே? அறிமுகப்பகுதியில் எனது இணையதள முகவரி தந்து, அதில் (எனது இணைய தளத்தில்) எனது இருப்பிடம், தொலைபேசி எண் போன்ற அனைத்தையும் தந்து, எனது பத்திரிகைகளையும் தந்துள்ளேன். எனது பத்திரிகைகளைப் படித்தாலே போதும், நான் என்னென்ன கருத்துக்களை உடையவன் என்று எவரும் அறிந்துகொள்ளலாம்.

நீங்கள்தான் உங்கள் இயற்பெயர்கூட வெளியில் தெரியாதபடி மறைக்க நினைத்துள்ளீர்கள். ஓர் ஊழியரான நீங்கள் “மாம்சமானவனுக்கு நம்மை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் கர்த்தருக்கு உகந்த உபவாசத்தின் ஒரு பகுதி” என்பதை அறியாமற்போனது ஏனோ (ஏசாயா 58:7)?

உங்கள் பெயர் வெளியில் வந்ததும், வரக்காரணமானவர் மீது வருந்துகிறீர்கள். உங்களைப்போல் யாராவது தன்னை மறைக்க நினைத்தால், அவரைப் பற்றிய விபரம் போகப் போகத் தெரியும் என்று சொல்வதில் அர்த்தம் உள்ளது. என்னைப் பற்றிதான் எல்லா விபரமும் (எனது வேதாகமக் கருத்துக்கள் உட்பட அனைத்து விபரமும்) எனது இணையதளத்தில் வெளியிட்டுவிட்டேனே, அதை வைத்துதானே கோவை பெரியன்ஸ் வாதமெல்லாம் வெளியே வந்தது? என்னை (எனது கருத்துக்களை) நான் மறைக்க நினைத்திருந்தால் கோவை பெரியன்ஸ் link-ஐ நான் குறிப்பிடாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்?

இப்படியாக தங்களின் தகுதியற்ற ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதிலளிக்க இயலாததும் தங்களுடன் விவாதம் செய்ய நான் மறுப்பதற்குக் காரணமாகும்.

இவ்வுலகில் நாம் யாரைப் பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் அது சரியானதுதான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் ஒருவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதுதான் உண்மையானது, நிலையானது.

அது இப்போதும் தெரியாது, போகப் போகவும் தெரியாது, மரித்து உயிர்த்தெழுந்தபின் நியாயத்தீர்ப்பு நாளில் தான் தெரியும். அதுவரை பொறுமையாக இருங்கள் சகோ.சில்சாம் அவர்களே!

arputham wrote:
//சகோ.அன்பு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சகோ.சில்சாம் அவர்கள் கூறிய வட்டத்திற்குள் சென்று கொண்டிருக்கிறார்.  சகோ.அன்பு அவர்களே உங்களை நீங்களே ஏன் குழப்பிக் கொள்ளுகிறீர்கள்?//

சகோ.சில்சாம் என்ன வட்டம் போட்டார், அதில் யார் யாரெல்லாம் வருகிறார் எனக் கவனிப்பதை விட்டுவிட்டு தேவன் போட்ட வட்டத்தில் நம்மில் யாரெல்லாம் போகப் போகிறோம், நான் போவேனா என்பதில் கவனத்தைச் செலுத்துங்கள் சகோ.அற்புதம் அவர்களே!

தேவன் போட்டுள்ள வட்டத்தின் வாசல் மிகவும் இடுக்கமானது. அதைக் கண்டுபிடிப்பதுகூட மிகவும் கடினம். கண்டுபிடித்தபின் அதன் வழியாக நுழைவது இன்னும் கடினம்.

சகோ.சில்சாமின் வட்டம் என்ன, நரகத்தில் செல்கிறவர்களைச் சேர்க்கும் வட்டமா, அதற்குள் நான் செல்வதாக நீங்கள் கூறியதும் நான் பயந்து நடுங்குவதற்கு?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


chillsam

Century Hitter (1)

Joined: 30-11-1999 05:30:00
Posts: 104
Location: Chennai

Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குரியவரா?

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=1738&Itemid=287

மேற்கண்ட தொடுப்பிலுள்ள குழப்பும் படத்தைப் பார்த்தவுடனே எதிர்த்து எச்சரித்தேன்;

நினைத்தவாறே காரியம் போய்க் கொண்டிருக்கிறது;

என்னை "துருபதேசக்காரன்" என்ற நண்பர் ராபின் இப்போது என்ன சொல்வாரோ..?

அப்போஸ்தலர் பால் தங்கையா அவர்களின் "ஆராதனைக்குரியவரே, அபிஷேக நாதரே, அச்சாரமானவரே..." பாடலை யாராவது போட்டுவிடுங்க... ஒருவேளை "பி(வி)த்து" தணியலாம்..!

ஆமாம்..,இதுக்கே இப்படின்னா ஆவியானவருடைய தெய்வத்துவ- வாக்குத்தத்த செயல்பாடுகளைப் பற்றி பேசத் துவங்கினால்..?

அப்பப்பா...நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதே..!

(ஒரு க்ரூப்பாதான்யா களம்ப்றாய்ங்க..!)

கிறிஸ்துவை முத்தரித்துள்ள ஆவியானவரைக் குறித்து விவாதிக்கக் கூட இயேசுவானவர் தடைவிதித்துள்ளார்..!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீக்கப்பட்ட திரி மற்றும் எனது பதிவுகள்
Permalink  
 


chillsam

Century Hitter (1)

Joined: 30-11-1999 05:30:00
Posts: 104
Location: Chennai


Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குரியவரா?

பொதுவாக சுவிசேஷங்களின் நோக்கத்தை இவ்வாறாகப் பிரிப்பார்கள்:

1.
மத்தேயு எழுதிய நோக்கம் இயேசுவானவரை மனுஷ குமாரன் என்று நிரூபிப்பதே;
ஏனெனில் அதுவரை யூதருக்குள் இருந்திராத ஒரு புதிய நோக்கில் ஆண்டவர் பணி
செய்ய வந்தார்;

2.
மாற்கு எழுதிய நோக்கம் இயேசுவானவரைப் பாடுள்ள ஊழியராக
அறிமுகப்படுத்துவதே;காரணம் எந்த தீர்க்கனும் மக்களுக்கிடையே உலாவி நன்மை
செய்பவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதில்லை;

3.
லூக்கா எனும் கிரேக்க மருத்துவரோ யூதத்துக்கு வெளியிலிருந்து அவரைப்
பார்த்து இயேசுவானவரை ஒரு வரலாற்று நாயகனாகக் காட்டுகிறார்; இது அவருடைய
இரண்டாம் பணியான அப்போஸ்தல நடபடிகளிலும் தொடருகிறது;

4.
இறுதியாக இயேசுவானவரின் மார்பிலேயே சேர்ந்திருந்த அவருடைய இருதயத்துக்குப்
பிரியமான அன்பின் அப்போஸ்தலனான யோவான் அவரை முழுக்க முழுக்க
தேவகுமாரனாகவும் தேவனாகவும் நிரூபிக்க விரும்புகிறார்;

வேண்டுமானால்
அவர் எழுதியவற்றை ஒரு கற்பனைக்காக நீக்கிவிட்டு (யோவானின் சுவிசேஷம், 3
நிருபங்கள் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம்) புதிய ஏற்பாட்டினைக் கற்பனை
செய்து பாருங்கள்..!

எனவே
நான்கு சுவிசேஷங்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆதாரத் தூண்களாக
விளங்குவதால் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுவது போலத் தோன்றினாலும் அது
நான்கு திசைகளிலிருந்து ஒரு பொருளைப் பார்ப்பது போன்றதாகும்;

உதாரணமாக
கண்ணாடியில் ஒரு பொருளைப் பார்த்தால் அது இடம் வலமாக மாறித் தோன்றும்;
இதனால் அது தவறாகக் காட்டுகிறது என்று கூற முடியுமா?

இதன்படி
இயேசுவானவரின் சோதனைக்காரனுடனான விவாதத்தைப் பதிவு செய்த மத்தேயு (வுக்கு
அந்த விவரங்கள் எப்படி தெரியவந்தது என்றும் சொல்லுவீர்களா?) அவர்
சோதனைக்காரனை எதிர்கொண்ட விதத்தை மாத்திரமே பதிவு செய்துள்ளாரே தவிர தம்மை
ஆராதிக்கக்கூடாது என்ற வாதத்துக்கான பதிலாக அதை எடுத்துக் கொள்ள அல்லவே;

இதே
போல மற்றொரு சந்தர்ப்பத்தில் தேவனைத் தவிர நல்லவன் ஒருவனுமில்லை என்று
இயேசு சொன்னார் என்பதற்காக இயேசு நல்லவர் இல்லை என்று சொல்லமுடியுமா?

இறுதியாக மிகாவேல் தூதனே ஆதிமுதல் தேவனோடிருந்து மனு அவதாரமெடுத்து இயேசுவாக வந்தான் என்று சொல்லிவிட்டால் உங்களோடு ஒரு பிரச்சினையும் இருக்காது;

"போகப் போகத் தெரியும்" என்றது தங்கள் போதனையைக் குறித்தே;அதற்கும் ஞானம்57 அவர்களுடனான எனது அனுபவங்களே காரணம்;
இங்கே- இந்த தளத்தில் நாம் யாராக இருந்தால் என்ன, நமது கருத்துக்களை
வைத்தே நாம் மதிக்கப்படுவோம்; புனைப் பெயரில் எழுதுவதில் சில
சுவாரசியங்களும் சௌகரியங்களும் உண்டு; தேவைப்பட்டால் நீங்கள் எப்போது
வேண்டும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்;

 

நான் வசனத்தின் படி என்னை உங்களுக்கு ஒளிக்கவில்லை; மாம்சமானவனுக்கு
தன்னை ஒளிப்பது என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா, மிக
அதிகப்பட்சமாக சொல்லப்போனால் தாவீது தன் ஊழியனான உரியாவுக்குத் தன்னை (சுய
ரூபத்தை) மறைத்து அவனைக் கொலை செய்து அவன் மனைவியைக் கவர்ந்ததே..!

இனி
இதுபோல அவசரத் தீர்ப்பு செய்யாதிருங்கள்; அதிலும் வசனமாகிய பட்டயத்தை
வைத்து விளையாடும் போது மிகவும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

anbu57

Im New Here!

Joined: 12-10-2009 05:37:08
Posts: 32
Location: Tirunelveli


Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குரியவரா?

chillsam wrote:
//இதன்படி இயேசுவானவரின் சோதனைக்காரனுடனான விவாதத்தைப் பதிவு செய்த மத்தேயு (வுக்கு அந்த விவரங்கள் எப்படி தெரியவந்தது என்றும் சொல்லுவீர்களா?) அவர் சோதனைக்காரனை எதிர்கொண்ட விதத்தை மாத்திரமே பதிவு செய்துள்ளாரே தவிர தம்மை ஆராதிக்கக்கூடாது என்ற வாதத்துக்கான பதிலாக அதை எடுத்துக் கொள்ள அல்லவே;//

இதற்கு மேலும் விவாதித்துதான் மத்தேயு 4:10-ன் கருத்தை உங்களுக்குப் புரியவைக்கவேண்டுமென்பதில்லை. எனக்குப் புரிந்ததை நான் சொல்லிவிட்டேன், உங்களுக்குப் புரிந்ததை நீங்கள் சொல்லுங்கள். அவற்றைப் படிப்பவர்கள், எதை ஏற்றுக்கொண்டாலும் சரி. உண்மை எதுவென்பதை நியாயத்தீர்ப்பு நாளில் நாம் அறிந்துகொள்வோம்.

chillsam wrote:
//"போகப் போகத் தெரியும்" என்றது தங்கள் போதனையைக் குறித்தே;//

எனது போதனையைப் பற்றிய விபரமும் எனது இணையதளத்தில் உண்டு என்றுதானே சொல்லியிருந்தேன்?

anbu57 wrote:
//என்னைப் பற்றிதான் எல்லா விபரமும் (எனது வேதாகமக் கருத்துக்கள் உட்பட அனைத்து விபரமும்) எனது இணையதளத்தில் வெளியிட்டுவிட்டேனே, அதை வைத்துதானே கோவை பெரியன்ஸ் வாதமெல்லாம் வெளியே வந்தது? //


chillsam wrote:
//நான் வசனத்தின் படி என்னை உங்களுக்கு ஒளிக்கவில்லை; மாம்சமானவனுக்கு தன்னை ஒளிப்பது என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா, மிக அதிகப்பட்சமாக சொல்லப்போனால் தாவீது தன் ஊழியனான உரியாவுக்குத் தன்னை (சுய ரூபத்தை) மறைத்து அவனைக் கொலை செய்து அவன் மனைவியைக் கவர்ந்ததே..!

இனி இதுபோல அவசரத் தீர்ப்பு செய்யாதிருங்கள்; அதிலும் வசனமாகிய பட்டயத்தை வைத்து விளையாடும் போது மிகவும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.//


உங்கள் இயற்பெயரைச் சொல்லாமல் புனைப்பெயரில் எழுதுவதை, மாம்சமானவனுக்கு ஒளித்துக் கொள்தல் என நான் கூறவில்லை. உங்கள் இயற்பெயர் வேறு யார் மூலமாகவோ வெளியே தெரியவரும்போது, அதற்காக மிகவும் வருந்தியதால்தான், உங்கள் இயற்பெயர் அனைவருக்கும் தெரிவதை நீங்கள் விரும்பவில்லை என நான் அறிய நேர்ந்தது.

நம் இயற்பெயர் எல்லோருக்கும் தெரிந்துவிடக்கூடாது எனும் எண்ணமும், மாம்சமானவனுக்கு நம்மை ஒளித்துக் கொள்வதற்குச் சமமே என்பது எனது கருத்து. இக்கருத்தை இப்போதும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. ஆயினும் உங்கள் மனச்சாட்சி அதை ஒத்துக்கொள்ளவில்லையெனில், உங்கள் மனச்சாட்சிக்கும் நியாயத்தீர்ப்பு செய்கிற தேவனுக்கும் குறுக்கே நான் வரப்போவதில்லை. எனது கருத்து உங்கள் மனச்சாட்சியைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.

chillsam wrote:
//இனி இதுபோல அவசரத் தீர்ப்பு செய்யாதிருங்கள்; அதிலும் வசனமாகிய பட்டயத்தை வைத்து விளையாடும் போது மிகவும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.//


என் மனச்சாட்சியை வைத்து உங்களைத் தீர்ப்பு செய்து விட்டேன். இனி, இவ்வாறு தீர்ப்பு செய்வதைத் தவிர்க்கிறேன். வசனமாகிய பட்டயம் குறித்த உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி.

chillsam wrote:
//இறுதியாக மிகாவேல் தூதனே ஆதிமுதல் தேவனோடிருந்து மனு அவதாரமெடுத்து இயேசுவாக வந்தான் என்று சொல்லிவிட்டால் உங்களோடு ஒரு பிரச்சினையும் இருக்காது;//


இம்மாதிரி விமர்சனம்தான் வேண்டாம் என மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

NESAN

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 8
Location:

Subject :Re:Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?



[robin 01-12-2009 14:16:30]:

///தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.  (எபிரெயர் 1:6)  கவனிக்க இங்கு சொன்னவர் தேவன்////..
//சொன்னாவர் தேவன்தான் ஆனால் சொல்லப்பட்டது மாமிசமான நமக்கல்ல!  ஆவியாயிருக்கும் தேவதூதர்களுக்கு! //
தேவதூதர்கள் மனிதர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தேவதூதர்களே தொழுதுகொள்ளும்போது மனிதர்கள் ஏன் தொழுதுகொள்ளக்கூடாது?
சகோதரரே!
"அவர்களே  செய்யும் போது நாம் ஏன்  செய்ய கூடாதா" என்பதெல்லாம் ஆக்க பூர்வமான கேள்வியல்ல.
அது தேவனிடம் கேட்கவேண்டியது. நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும். எழுதப்பட்டிருப்பதற்கு மிஞ்சி எண்ணுவது சரியல்ல!
.
சவுலின் கதையை பார்த்தால் அமலேக்கியர் விஷயத்தில்    அவன் தேவனின் வார்த்தையை நிறைவேற்ற தீவிரித்தான் ஆனால் ஒரே ஒரு  சின்ன தவறு அதுவும் கர்த்தருக்கென்று  ஆடு மாடுகளை அழிக்காமல்  விட்டது தவறாகிப்போனது! அதை  கர்த்தருக்கேன்றுதான் செய்தான் என்பதை கவனிக்க!    அதுபோல் அவர் வார்த்தைகளை சிரிது மீறி தகுதி இழந்த்துபோனோர் வேதத்தில் பலர் உண்டு!
.
தேவன் என்ன சொன்னாரோ அதை செய்ய வேண்டியதுதான் நமது வேலை!  தேவனை எதிர்  கேள்வி கேட்பது
சரியானது அல்ல!
பணமோ  எல்லாவற்றிக்கும் உதவும் என்று பிரசங்கி  சொல்கிறது  எல்லோரும் பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள் நான் ஏன் ஓடக்கூடாது என்பது போன்ற கேள்விக்கு பதில் கிடையாது!
.
"இயேசு இல்லாமல் தேவனிடம் பேசலாம்" என்றெல்லாம் இங்கு யாரும் குறிப்பிடவில்லை! நீங்கள் இயேசுவை மதிக்கும் நிலையில் எவ்விதத்திலும் அவரை  குறைத்து மதிப்பிடவில்லை. அவரின்றி ஒருவருக்கும் இரட்சிப்பு இல்லை. அவரின்றி ஒருவரும் பிதாவிடத்தில் போகவும் முடியாது. ஏனெனில் அவரே தேவனிடம் மனிதன் சேருவதற்கு  வழியாக இருக்கிறார்.
.
அவர் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம் அவரை நோக்கியம் விண்ணப்பிக்கலாம்
ஆனால் இயேசுவை ஆராதிக்கலாமா? அதற்க்கு வேதவசனங்கள் என்ன சொல்கிறது என்பதுதான் கேள்வி. சகோதரர் அன்பு அவர்கள் சொன்னதில் உண்மை இருப்பது தெரிகிறது ஆனால் நீங்கள்   அதற்க்கு ஈடான சரியான வசனத்தை  சொன்னால் நான் அதை அப்படியே ஏற்றுக்கொள்வேன் ஏனெனில் உண்மையை அறிந்துகோள்ளதானே விவாதமே!
.
இயேசுவை ஆராதிக்க கூடாது என்று எங்கும் வசனம் சொல்லவில்லை என்றாலும்   "தேவன் ஒருவருக்கே ஆராதனை" என்று வசனங்கள் சொல்கின்றன இயேசுவும் அதை தன வாயால் உறுதிபடுத்தியிருக்கிறார். மேலும்
.
"என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் (பரலோகராஜ்யத்தில்)  பிரவேசிப்பதில்லை" என்று சொல்லியிருக்கிறார்
நீங்கள் அவரை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று ஆராதித்து பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்போம் என்று சொல்கிறீர்கள்.  ஆகமொத்தம் இயேசுவின் நியாயம் தீர்க்கபோகம் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவில்லை என்றுதானே பொருள்.
.
நாமாக ஒன்றை  செய்துகொண்டு இது குழப்பமில்லாத உண்மை என்று நம்பினால் அதற்க்கு யார் பொறுப்பு?
.
மனிதனை பாவத்தின் பிடியிலிருந்து மீட்பதற்காக தேவனிலிருந்து தனியாக பிரிந்த இயேசு அந்த நிகழ்வுகள்
எல்லாம் நிறைவேறி புதிய பூமி அமைக்கப்பட்ட  பிறகு  வெளிப்படுத்தின விசேஷத்தில் கடைசி பகுதியில் மீண்டும் ஒருமித்துவிடுகின்ற்றனர்
1. பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
5.அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
இவையெல்லாம் இயேசு வருகைக்குபிறகு நிறைவேறுவதால் "இயேசுவே வாரும்" என்று அழைப்பதாக வசனம் உள்ளது.
.
நாம் விவாதித்துகொண்டு இருப்பது அவர் வருகைக்கு முற்ப்பட்ட காலத்தில். இப்பொழுது நமக்கு என்ன கட்டளை  கொடுக்கப்பட்டுள்ளது  என்பதை ஆராய்வது தானே நல்லது!


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

anbu57

Im New Here!

Joined: 12-10-2009 05:37:08
Posts: 32
Location: Tirunelveli


Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குரியவரா?

NESAN wrote:
//சகோதரர்  அன்பு அவர்களின் பதில் மிக அருமை! அனால் இங்கு அது ஏற்றுக்கொள்ளப்படுமா  என்பதுதான் புரியவில்லை.//

தங்களைப் போன்ற ஒருசிலர் ஏற்றுக்கொண்டாலே அதை தேவன் எனது பணிக்குத் தந்த மாபெரும் பலனாகவே நான் கருதுவேன்.

NESAN wrote:
////ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி.......(பிலிப்பியர் 2:9).//

இங்கும் உயர்த்தினவர் தேவனே! ஆனால்  ஆனால் இயேசுவை தேவன் உயர்த்தியது எதற்கு ஒப்பாய் இருக்கிறது என்றால் சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்தில் உயர்த்தப்பட்டதற்கு ஒப்பாயிருக்கிறது. சிலர் அந்த சர்பத்தை வணங்க முற்ப்பட்டபோது அது உடைத்துபோடப்பட்டது. எனவே உயர்த்தப்பட்டது எல்லாம் ஆராதனைக்கு உரியதல்ல!////

நான் விளக்கம் தரத்தவறிய வசனத்திற்கு அருமையான விளக்கம் தந்த தங்களுக்குப் பாராட்டுக்கள், நன்றி.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

arputham

Im New Here!

Joined: 30-11-1999 05:30:00
Posts: 29
Location: Bangalore

Subject :கிறிஸ்து ஆராதனைக்குரியவரா? விவாதம் முடிந்தது

வாதம் செய்வதில் எனக்குதெரிந்து மூன்று வகைகள் உண்டு. அவை

1.விவாதம்

2.வாக்குவாதம்

3. விதண்டாவாதம்


மேலே கொஞ்சம் பாருங்கள். இந்த விதண்டாவாதம் எனப்திலிருந்து விவாதம் என்கிற ஆரோக்கியமான  இடத்திற்கு முன்னேறினால்தான் வாதம் செய்வதில் அர்த்தம் இருக்கும். விதண்டாவாதம் செய்பவர்களிடம் பேசி ஒரு பிரயோஜனமுமிருக்காது. இங்கே கிறிஸ்து ஆராதனைக்குரியவரா? என்கிற விவாதத்தில் முதலிலிருந்தே ஒரே வசனத்தை பிடித்துக் கொண்டு அது எந்த இடத்தில் சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்துவிட்டு ஒரு வித்தியாசமான குழு இங்கு வந்து முயற்சி செய்கின்றனர்.

இயேசு ஏன் ஆராதனைக்குரியவர் என்பத்ற்கு தள சகோதரர்கள் பலரும் விரிவாக விளக்கமாக பதிலளித்துவிட்டனர். பின்னரும் இவர்கள் அவர்களே ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொண்டும்  இவர்கள்தான் சத்திய மே....... தா........ வி... கள் என்றும் நினைக்கின்றனர். குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்கலாம் என்று நினைக்காதீர்கள். நிச்சயமாக அப்படிப்பட்ட முயற்சிகள் இங்கு இதுவரை பலித்ததில்லை இனிமேலும் பலிக்கப் போவதுமில்லை.

நான் அறிந்தவரையில் வித்தியாசமான உபதேச குழப்பம் உள்ளவர்கள் ஏற்கனவே கிறிஸ்தவர்களாக இருப்பவர்களிடம் தங்கள் வி(ச)தைகளை தூவி அவர்களை கெடுத்துப் போடுவதில்தான் இவர்களுக்கு அலாதிப் பிரியம். கிறிஸ்துவைப்பற்றி கேள்விப்படாத அல்லது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் குறித்து எள்ளளவும் அக்கறையில்லை. அழிந்து போகிற ஆத்துமாக்களைக் குறித்து பாரத்துடன் செயல்படுவதை விடுத்து சபையின் மூலைக்கல்லுக்கெதிராக  எழும்பினால் என்ன செய்வது?

கற்பனைக்கு கீழ்ப்படிவதுதான் ஆராதனை என்று வேதாகமத்தில் இல்லாத ஒரு புதுக்கருத்து வேறு . அப்படியானால் தேவதூதர்கள் ஏன் ஆராதிக்கிறார்கள்?தேவன் மாட்சிமையுள்ளவர், மகத்துவமுள்ளவர். அதை அறிந்த எவரும் அவரை ஆராதிக்காமல் இருக்க முடியாது? இயேசுவை யூதர்கள் கொலை செய்ய முக்கியமான காரணம் பொறாமை மட்டுமல்ல, அவர் தம்மை தேவன் என்று சொன்னதும்தான். அவரின் மகத்துவம் மாட்சிமை வல்லமை, தெய்வீகம் தெரியாமல் அன்று கொலை செய்தனர். இன்று அதே யூதர்களைப் போல சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் கொலை செய்தனர், பின்பு கொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. இவர்கள் கிறிஸ்துவை தடை செய்கின்றனர். ஆதலால்...........இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக உண்மை மாறிவிடாது.

விலக வேண்டும்! விலக்கவேண்டும்! என்ற கருத்தை வேதத்தை மையமாக வைத்தே கூறினேன். நானும் கூட கோவை பெரியன்ஸ் தளத்திலிருந்து விலகலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்ன சகோ.அன்பு இன்று அவர்களின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். இவர் யார் என்ற அறிமுகம் இனிமேலும்  தேவையில்லை.  அவரே விளக்கிவிட்டார். நாம் விலக்கிவிடுவோம் என்று கூறியும் விட்டார்.அவருக்கு தேவைவிளக்கமோ, விரிவான பதிலோ அல்ல என்பதும் அவர் இதுவரை அளித்த பதில்களில் இருந்துதெரிகிறது. கடைசியாக ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன்.

A text out of context is pretext



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

RS

Im New Here!

Joined: 30-11-2009 13:49:14
Posts: 12
Location:

Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குறியவரா?

அற்புதம் எழுதியது

//இயேசுவை யூதர்கள் கொலை செய்ய முக்கியமான காரணம் பொறாமை மட்டுமல்ல, அவர் தம்மை தேவன் என்று சொன்னதும்தான். அவரின் மகத்துவம் மாட்சிமை வல்லமை, தெய்வீகம் தெரியாமல் அன்று கொலை செய்தனர்.//

சகோதரரே,

இயேசு கிறிஸ்து ஒருபோதும் தம்மை தேவன் என்று சொன்னதாக எந்த வேதாகமத்திலும் இல்லை. இங்கு குட்டையைக் குழப்ப ஒன்றுமில்லை. 'அனேகர்' தான் வஞ்சிக்கப்படுவார்கள். ஆக வேதத்தின்படி அனேகர் நம்பிக்கொண்டிருப்பதுதான் வஞ்சகம். ஏதோ வஞ்சிக்கப்படாத ஒரு சிலர் கூறுவது இந்த 'அனேகருக்கு' புரிய வேண்டியதில்லை. தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேற வேண்டுமே.

தள முயற்சிகளுக்கும், எழுத்து சுதந்திரத்துக்கும் இத்தளத்தை மனமாற பாராட்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard