மேற்கண்ட தொடுப்பிலுள்ள குழப்பும் படத்தைப் பார்த்தவுடனே எதிர்த்து எச்சரித்தேன்;
நினைத்தவாறே காரியம் போய்க் கொண்டிருக்கிறது;
சகோதரரே,
இந்தப்படத்தில் என்ன குழப்பம் இருக்கிறது? என்ன எச்சரித்தீர்கள்? இன்று எல்லா கிறிஸ்துவ சபைப்பிரிவுகளிலும் நம்பப்படும் திரித்துவத்தைத்தானே இந்தப்படம் 'விளக்குகிறது'.
பிதாவானவர் குமாரனில்லை, பரிசுத்தாவியுமில்லை. குமாரன் பிதா இல்லை, பரிசுத்தாவியில்லை. பரிசுத்தாவி பிதா இல்லை, குமாரன் இல்லை. ஆனால், பிதா தேவன் குமாரன் தேவன் பரிசுத்தாவி தேவன். (இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்) இவ்வளவு தெளிவான சத்தியத்தை குழப்பம் என்றீர்களென்றால் நீங்கள் கிறிஸ்தவரே அல்ல.
Joined: 30-11-1999 05:30:00 Posts: 104 Location: Chennai
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குரியவரா?
chillsam wrote://"போகப் போகத் தெரியும்" என்றது தங்கள் போதனையைக் குறித்தே;//
anbu57:எனது போதனையைப் பற்றிய விபரமும் எனது இணையதளத்தில் உண்டு என்றுதானே சொல்லியிருந்தேன்?
ஆம்,உங்களைப் பற்றி நான் புரிந்துக்கொண்டதை அறியாதிருக்கக்கூடிய எனது நண்பர்களுக்காக அவ்வாறு எழுதியிருந்தேன்; உங்கள் போதனைகளை மேலோட்டமாகப் பார்ப்போருக்கு ஒன்றும் புரியாது; ஆனாலும் சத்தியத்தில் அனுபவப்பட்டோர் உங்களுடைய பிரபல்மான "கைப்பிரதி"களின் முதல் ஒரு சில வரிகளைப் படித்தவுடனே உணர்ந்துக் கொள்ளமுடியும்;
ஆனாலும் உங்கள் விசுவாசத்தைப் பிரமாணமாக அறிவித்து முன்னேறுவதே இன்னும் நேர்மையாக இருக்கும்; அதுவே நீங்கள் மற்ற சபையாரிடமிருந்து எப்படி வேறுபடுகிறீர்கள் என்பதையறிய உதவும்;
அதை விட்டுவிட்டு எங்களில் ஒருவரைப் போல CSI சபையைச் சார்ந்தவர் என்றும் TELC சபையைச் சார்ந்தவர் என்றும் கூறிக் கொள்வது கீழ்த்தரமான ஏமாற்றுவேலையாகும்; மேற்கண்ட சபைகளின் ஆதாரக் கொள்கைகளை விமர்சிக்கும் நீங்கள்(anbu57,NESAN,RS ஆகிய மூவரும் திருத்துவக் கொள்கையின்படி ஒருவரோ..?) எப்படி அந்த சபையைச் சார்ந்தவராக இருக்கமுடியும்?
NESAN:// "என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் (பரலோகராஜ்யத்தில்) பிரவேசிப்பதில்லை" என்று சொல்லியிருக்கிறார் நீங்கள் அவரை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று ஆராதித்து பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்போம் என்று சொல்கிறீர்கள். ஆகமொத்தம் இயேசுவின் நியாயந்தீர்க்கப்போகும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவில்லை என்றுதானே பொருள். //
ஹலோ மிஸ்டர்,வார்த்தையைத் திரிப்பதில் இத்தனை தீவிரமாக இருக்கும் நீங்கள் (நானும்) ஒரு இஸ்லாமியராக இருந்து இதுபோல செய்திருந்தால் என்னுடைய நடவடிக்கை வித்தியாசமாக இருந்திருக்கும்; கிறிஸ்துவின் அன்பு உங்களை உயிரோடு விட்டிருக்கிறது என்பதை மறவாதிருங்கள்..!
பிதாவினின்று இயேசுவைப் பிரிக்க உங்களுக்கு எந்த உரிமையுமில்லை; பிதாவும் குமாரனும் கொஞ்ச காலம் பிரிந்தும் புதிய வானம் புதிய பூமி வந்ததும் சேர்ந்தும் இருப்பர் என வேதம் எங்கும் கூறவில்லை; இங்கு வரும் அப்பாவிகளை யாரும் வஞ்சித்துவிடக்கூடாது என்ற வைராக்கியத்தினாலேயே பொறுமையாக எழுதிக் கொண்டிருக்கிறோம்; உங்கள் முழு சரக்கையும் கொட்டிவிட்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்;
"இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.(பிலிப்பியர். 2:10,11)
மேற்கண்ட வசனம் காரியத்தை இத்தனை வெளிப்படையாகச் சொல்லிருக்க முட்டாள்தனமாக "கன்ட்ரி ப்ரூட்" போல வாதிப்பதைவிட நீங்கள் அமைதியாக இருந்தால் கற்றுக்கொள்ள ஏதுவாகும்;
// எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை //
அது "யாவே" என்று யூதர்களால் அறியப்பட்ட நாமம் என்று நான் சொல்லுகிறேன்; ஏனெனில் அவரே மோசேயிடம் இவ்வாறு சொல்லுகிறார், "சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை." (யாத்திராகமம்.6:3)
// முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும் //
முட்டாள்கள் முழங்கால் போட்டால் தான் காரியம் விளங்கும்; நான் கூட மாணவனாக இருந்தபோது முழங்கால் போட்டிருக்கிறேன்; ஆனால் இங்கே முழங்கால் போடுதல் என்பது தொழுகையினைக் குறிக்கிறது;மேற்கண்ட புதிய ஏற்பாட்டின் வாக்கியத்துக்கு ஒத்தவாக்கியத்தை பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம்;
"பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்." (ஏசாயா.45:22,23)
இந்த வாக்கியம் இயேசுகிறிஸ்துவில் மட்டுமே நிறைவேறுவதால் அவரே பிதாவினால் நியமிக்கப்பட்ட ஆராதனைக்குரியவர்;
"அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்."(வெளிப்படுத்தல்.5:8,9,10)
நீங்கள் குறிப்பிட்டது போல "பொறுக்கி" எடுக்காமல்,முன்பும் பின்பும் முழுமையாகப் பார்த்தால்...ஆண்டவர் சொல்லியிருப்பது உங்களுக்காகவே என விளங்கும்;
"கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்."(மத்தேயு.7:15,21,22,23)
கண் கண்ட தெய்வமான அவரை விட்டு கிரியைகளைப் பிரதானப் படுத்துகிறவர்களைக் கண்டிக்கிறாரே தவிர, தம்மை வணங்கக் கூடாது என்று சொல்லவில்லை; காரணம் அந்த வாக்கியத்தை முடிக்கும் போது, "என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்." என்று கூறுவதை கவனிக்கவும்; பிதாவின் சித்தம் செய்வது என்றால் என்ன,என்று யோசிப்பதை விட்டுவிட்டு கர்த்தாவே கர்த்தாவே என்று யாரை அழைக்கவேண்டும் என்று யோசிக்கும் உங்கள் குறுமதியை என்னவென்று சொல்ல..?
மேலும் உங்கள் கூற்றுப்படியே அவர் இன்னும் மகிமையடையவில்லை; அதாவது ஆராதிக்கும் ஸ்தானத்தை இன்னும் அவர் அடையவில்லை; அதாவது அவ்ர் பாடுபட்டு எழுந்த பிறகே அவர் தேவனுக்கு சமமாகத் தொழத்தக்க நிலையினை அடைவார் என்பது தேவ திட்டம்; இது உலகத் தோற்றத்துக்கு முன்னரே வெளிப்பட்ட தேவசித்தமாகும்; எனவே தான் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பு கொண்டு பேசி வந்தார்; ஆம்,தனிப்பட்ட முறையில் யார் யாருடனெல்லாம் தேவன் இடைப்பட்டாரோ அங்கெல்லாம் இயேசுகிறிஸ்துவே வார்த்தையாக இருந்து பேசினார்; புதிய ஏற்பாட்டிலும் கூட "கர்த்தராகிய இயேசுகிறிஸ்து" எனும் பதமும் "யாவே"வாகிய இயேசுகிறிஸ்து என்றே விளங்கிக் கொள்ளப்படவேண்டும்;
இறுதியாக சகோதரர் அற்புதம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...தயவுசெய்து இந்த வாதத்தைப் பூட்டிவிடாதீர்கள்; இவர்களுக்குத் தரவேண்டிய பதில் ஏராளம் உண்டு; இவர்களுடைய போதனை முழுவதும் இங்கே வரட்டும்; அதற்குரிய ஆவியானவரின் பதிலும் பதிக்கப்படும்; அதுவே புது விசுவாசிகள் எச்சரிப்படைய ஏதுவாகும்..!
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.(பிலிப்பியர். 2:10,11)
சபாஷ் சில்சாம். அருமையான வசனம். இதற்கு என்ன பதில் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
அபாரம் சில் சாம் வெளுத்து வாங்கியிருக்கிறீர்கள் 2000 ஆண்டு கிறிஸ்தவ வரலாற்றில் எத்தனையோ தியாகிகள், பக்தர்கள், பரிசுத்தவான் கள் இயேசுவை அறிக்கையிட்டு கடந்து சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத தெளிவு இவர்களுக்கு கிடைத்துவிட்டதாக்கும். இவர்கள் விட்டால் பவுலுக்கே டியூஷன் எடுப்பார்கள் போல. பாடலாசிரியரான ஜான் நியூட்டன் தனது மரிக்கும் தறுவாயில் இவ்வாறு கூறினார். " எனது நினைவுகள் மங்கிவிட்டன, எஞ்சியிருப்பதோ இரண்டு காரியங்கள் தான் பாவிகளில் பிரதான பாவி நான், எனது பிரதான இரட்சகர் இயேசு கிறிஸ்து"
I am the greatest sinner and Jesus is the greatest redeemer ஒரு மனிதன் இரட்சிப்படைய இந்த அளவு தெரிந்து வைத்திருந்தால் போதும்
முதலில் சகோதர்கள் என்னை மன்னிக்க வேண்டும். மேலும் விவாதம் முடிந்தது என்று சொல்லப்பட்ட பிறகும் இந்த பதிவை இடுவதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.
.
ஆண்டாண்டு காலமாக இஸ்லாமியர் கூறிவரும் குற்றச்சாட்டான இயேசு கடவுளல்ல அவர் ஒரு நபி, அவர் தன்னை தேவன் என்று எங்கும் சொல்லவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கு சரியான பதில் வரும் என்று எதிர்பாத்து சில பதிவுகளை இடநேர்ந்தது!
.
சகோதரர் அன்பு அன்பு அவர்களை தவறாக கருதவேண்டாம் ஒரு சிறிய தவறான புரிதல் மட்டுமே. அவருக்கு புரியவில்லை என்றால் அவருக்கு நான் அனுப்பபோகும் தனிமடலை படித்துவிட்டு அதன்பின் கருத்து கூறவும் அவசரம் வேண்டாம்!
.
இப்பொழுது சகோதரர் சில்சாம் " தான் சகோதரனை மூடனே என்று சொல்கிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்" என்ற வார்த்தையை மறந்து நாசுக்காக "முட்டாள்" "பொருக்கி" ஏதோ கண்ட்ரி என்றெல்லாம் விமர்சித்து சுட்டிக்காட்டும் வசனந்தை சற்று ஆராய்வோம்.
.
"இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.(பிலிப்பியர். 2:10,11)
இந்த கூட்டு வசனத்தை பிரித்தால் இங்கு முக்கியமாக தென்படுவது பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக என்பதே அதாவது அதை சற்று மாற்றி அமைத்தால்
.
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும் இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.(பிலிப்பியர். 2:10,11) .
அதாவது எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை இயேசுவுக்கு கொடுக்க காரணம்
.
1. இயேசுவின் நாமத்தின் மூலம் எல்லோருடைய முழங்காலும் முடங்கவேண்டும்
2. அவரை எல்லா நாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து என்று அறிக்கை பண்ணவேண்டும்
3 அதன் மூலம் பிதாவுக்கு மகிமை உண்டாக வேண்டும் என்பதே!
எனவே அந்த வசனத்தின் இறுதி உருவம் பிதாவுக்கு மகிமை உண்டாகவேண்டும் என்பதே!
.
ஆராதனை என்பது தேவனுக்கு மட்டுமே உரியது என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது எனவே இங்கு நாம் ஆராய வேண்டிய விஷயம் இயேசு தேவனா என்பதுதான்!
.
இயேசு யார்? அவர் தேவனா?
யோவான் 1 இவ்வாறு சொல்கிறது :
1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
.
ஆதியில் வார்த்தை என்னும் வல்லமையாக தேவனிடத்தில் தேவனாய் இருந்த இயேசு, பாவத்தில் மனிதன மீட்கும் திட்டத்தில் மாமிசமானார். அந்த வார்த்தையும் தேவனாய் இருந்தது என்று வேதம் தெளிவாக சொல்கிறது. எனவே அவரும் தேவன்தான்!
.
இந்த செய்தி தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கபட்டபோதும் "அவர் வல்லமையுள்ள தேவன்" என்றே குறிப்பிடப்படுகிறது
.
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
எனவே அவர் தேவன்தான் என்பதில் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
.
இரண்டாவதாக பவுலும் தனது நிருபத்தில் இயேசு தேவனுக்கு சமமானவர் என்று எழுதுகிறார் , .
பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
எப்படியெனில், : "தேவன் ஆவியாயிருக்கிறார்" என்று வசனம் சொல்கிறது. தேவன் என்பவர் மொத்தம் ஏழு ஆவிகள் கூட்டு என்று கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது
வெளி 4:5 தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
.
தேவன் என்பவர் ஆவி! அவரின் ஆவிகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர் இயேசு ஒருவரே!
.
வெளி 3:1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது;
.
எனவே இயேசுவும் தேவனகிறார்! அல்லது தேவனுக்கு சமமாகிறார்! எனவேதான் பவுல் அவரைப்பற்றி எழுதும்போது தேவனுக்கு சமமானவர் என்று எழுதுகிறார்.
.
தேவனுக்கு ஆராதை செய்! என்று வசனம் சொல்லும்போது தேவனுக்கு சமமாக இருபவரையும் ஆராதனை செய்யலாம் என்று பொருள்படுகிறது அல்லவா?
.
X = 100
Y = X
Y = 100௦௦
.
தேவன் = ஆராதனைக்கு பாத்திரர்
கிறிஸ்த்து = தேவன்
கிறிஸ்த்து = அராதனைக்குரியவர்
.
கிறிஸ்த்து ஆராதனைக்கு பத்திரரே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
.
இப்பொழுது தேவன் என்று ஒருவர் ஏற்கெனவே இருக்க மற்றும் இயேசு என்றொரு மற்றொரு தேவனா?
ஆக இரண்டு தேவனா? என்ற கருத்து எழலாம். அதை ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் விளக்க
விரும்புகிறேன்.
.
ஆதியில் பூமி ஒரே நிலப்பரப்பாகதான் இருந்தது என்றும் அது பின்னானில் கண்டங்களாக பகுக்கபட்டது என்றும் அறிவோம்
.
இப்பொழுது ஆசியா கண்டமும் பூமிதான், ஆப்பரிக்க கண்டமும் பூமிதான். ஆசிய கண்டத்தில் பயிரிடுகிறவனும் பூமியில்தான் பயிரிடுகிறான் அமெரிக்க கண்டத்தில் பயிரிடுகிறவனும் பூமியில்தான் பயிரிடுகிறான். ஆனால் ஆப்ரிக்கா கண்டம் மட்டும்தான் பூமியா என்றால் இல்லை. அனைத்து கண்டமும் சேர்ந்ததுதான் பூமி. எங்கு பயிரிட்டாலும் அது பூமியில் பயிரிடுவதாகதான் பொருள் படும். அது வேறு கண்டம் இது வேறு கண்டமாக இருந்தாலும் எல்லாமே ஒன்றுதான் எல்லாவற்றிக்கும் சேர்த்து பூமி என்றுதான் பெயர்.
.
இது அப்படியே தேவனுக்கும் பொருந்தும்.
.
தேவன் என்பது ஒரு கூட்டு சொல்!. அதனுள் இயேசு மற்றும் ஆவியானவர் எல்லோரும் அடங்குவார்கள் எனவே யாரை ஆராதித்தாலும் அது தேவனை ஆரதிப்பதாகதான் பொருள்படும்.
.
இப்பொழுது பூமி ஏதோ ஒரு காரணத்தால் பிரிக்கப்பட்டது, அது சரி! தேவன் பிரிந்திருக்க காரணம் என்ன என்ற கேள்வி எல்லாம்!
.
அதற்க்கு கீழ்க்கண்ட வசனம் மூலம் விளக்கம் பெறலாம்!
.
9. யோவாபோ இராணுவங்களின் படைமுகம் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதைக் காண்கையில், அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி, . 10. மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து:
.
இங்கு இஸ்ரவேலை எதிர்க்க இரண்டு விதமான ராணுவங்கள் வருகின்றன ஓன்று சீரிய இன்னொன்று அம்மோன் புத்திரர். ஆனால் இஸ்ரவெலிடம் இருப்பதோ ஒரே ராணுவம்! இப்பொழுது யோவாப் என்ன செய்கிறார் இஸ்ரவேல் ராணுவத்தை இரண்டாக பிரித்து ஒன்றை சீரியருக்கும் ஒன்னோற்றை அம்மோன் போத்திரருக்கும் எதிராக நிறுத்தி யுத்தம் செய்கிறார். யுத்தத்தில் ஜெயித்தபிறகு எல்லாம் ஒரே ராணுவமாகிவிடும்.
அதுபோல்
.
மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் என்னும் மூன்று நிலைகளின் தொகுப்பு! . சாத்தான் மனிதனின் மூன்று நிலைகளோடும் மூன்று வித யுக்தியோடு போரிடுகிறான். ஆனால் தேவன் ஒன்றான மெய்த்தேய்வமாக இருக்கிறார்.
இப்படி மனிதன் மாமிசத்துக்குரிய நிலையில் இருந்துகொண்டு நல்லதை செய்யவேண்டும் என்று விருப்பம் இருந்தும், தான் விரும்பாத பாவத்தை செய்துகொண்டு ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் விரோதமாக வரும் சாத்தானை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்.
.
எனவே தேவன் தனது வல்லமையை மூன்றாக பிரித்து மாமிசத்துக்கு விரோதமாக போரிடும் சாத்தனை வெல்ல தனது வார்த்தையை மாமிசமாக்கி, அவரின் மரணத்தினால் அவனை வென்றார்!
.
ஆவிக்கு விரோதமாக போரிடும் சாத்தானை வெல்ல பரிசுத்தஆவியாக நம்முள் வந்து தங்குகிறார் எவ்வளவு அதிகமாக தேவனை தேடுகிறோமோ அவ்வளவு அதிகமாக ஆவியில் நிறைந்து சாத்தானை எதிர்கொள்ளும் சக்தியை தருகிறார்!
.
ஆத்துமா என்பது அநாதி தேவனுக்கு சொந்தமானது!
.
எசேக்கியேல் 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது
.
தேவனுடைய பிள்ளைகளின் ஆத்துமாவுக்கு விரோதமாக வரும் சாத்தானை அவரே எதிர்கொள்ளுகிறார் அல்லது அவனை மேற்கொள்ள ஆலோசனை வழங்குகிறார்!
.
எனவே மனிதன் மூன்று நிலையின் தொகுப்பாக இருப்பதால் தேவனும் மூன்று நிலைகளின் தொகுப்பாக மாறினார். இதற்க்கு பெயர் திரித்துவம் என்று சொல்கிறார்கள்!
.
வேதத்தை ஆராய்ந்து பார்த்ததில் இது என்னுடைய புரிதல். இதற்க்கு எதிர்ப்பு இருக்குமாயின் எனது பதிவை நீக்கிவிடலாம்!
Joined: 30-11-1999 05:30:00 Posts: 104 Location: Chennai
Subject :Re:கிறிஸ்து ஆராதனைக்குரியவரா?
// ஆண்டாண்டு காலமாக இஸ்லாமியர் கூறிவரும் குற்றச்சாட்டான இயேசு கடவுளல்ல அவர் ஒரு நபி, அவர் தன்னை தேவன் என்று எங்கும் சொல்லவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கு சரியான பதில் வரும் என்று எதிர்பார்த்து சில பதிவுகளை இடநேர்ந்தது! //
அடைப்பைப் பிடுங்குகிறவனை பாம்பு கடிக்கும்,தலைவா..!
"படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்." (பிரசங்கி.10:8)
உங்கள் குற்றச்சாட்டுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகிறேன்; நான் மன்னிப்படைய வாய்ப்புகள் ஏராளமுண்டு; ஆனால்...
"முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். (எபிரெயர்.2:3,4)
கணிதக் கணக்குகளோ (mathematical equations) பூகோளக் கணக்குகளோ (geographical principles) சர்வ வல்லவரைப் புரிந்துக்கொள்ள உதவாது, நண்பரே..!(உங்களை நண்பர் என்றதால் எரிநரகத்துக்குத் தப்பி உங்களோடு வர வாய்ப்புண்டல்லவா..!)
எப்படியோ "கண்சாமி கவுந்தாரு" எனும் துக்ளக் மொழிக்கேற்ப இப்பத்தான் ஒரு விக்கெட் விழுந்திருக்கு..!
உண்மையில் பாராட்டுபவர்கள் நான் தொடர்ந்து எழுதுவதைத் தடுக்கிறார்கள்; கண்டிப்பவர்களோ என் மீது அக்கறையுடன் என்னை அல்லது என் எழுத்தை மெருகேற்றுகிறார்கள்; ஆனாலும் சிலருக்கு சிலதை சொல்றது போல சொன்னால் தான் உறைக்கும்;
நீதிமொழிகள் பாதிக்கு பாதி மூடர்களைப் பற்றி விளக்குகிறது; அதனால் அதைப் படிப்பவர்களெல்லாம் நரகத்துக்குப் போய்விடுவார்களா? அப்படியும் கூட "அவர்கள்" நம்பிக்கையின் படி நரகமே கிடையாதே; பிறகு யாருக்கு பயப்படவேண்டும்..?
நாம் இன்னும் சபையின் பாரம்பரியத்திலேயே இருப்பதால் என்மீது நானே உருவாக்காத ஒரு "இமேஜ்" ம் எதிர்பார்ப்பும் பதிந்துவிட்டது; இங்கே எனக்கு எந்த மேன்மையும் வேண்டாம்; நானும் உங்களில் ஒருவன் அவ்வளவுதான்..!
சபைக்குள் ஒற்றுமையினைக் கருதி யாரும் நினைத்ததை பேசிவிடமுடியாது; ஊழியர் சொன்னதற்கு எதிர்த்துப் பேசுவது பாவம் என்று போதிக்கப்பட்டோம்; இதனால் அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட அப்பாவி ஆத்துமாக்களை சாத்தானானவன் வஞ்சிக்க ஏதுவானது;
ஆனால் அடிப்படை கட்டுப்பாடுகளோ மட்டுறுத்தலோ இல்லாத "அற்புதமான" நம்முடைய தளத்தில் அனைத்துப் பொருளிலும் விவாதித்து வருகிறோம்; இதனால் அநேகர் பயனடைகிறார்கள்; இதற்காக நான் ஆண்டவரைத் துதிக்கிறேன்..!
ஒரே வேத புத்தகத்தை வைத்துகொண்டு இருபுறமும் வாதிடலாம் என்பதால்தான் வேத வசனங்கள் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று போற்றப்படுகிறது!
.
இப்பொழுது
.
கிறிஸ்த்துவின் மூலம் பிதாவை ஆராதிப்பது தவறா ? இல்லை
கிறிஸ்த்துவையும் பிதாவையும் சேர்த்து ஆதாரிப்பது தவறா? அதுவும் இல்லை
.
ஆனால் தவறு எங்கே இருக்கிறது என்றால் நாம் எப்படி ஆராதிக்கிறோம் என்பதிலேயே இருக்கிறது!
.
நாம் செய்ய வேண்டிய புத்தியுள்ள ஆராதனை எது?
.
ரோமர் 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
நாம் நம்மை ஜீவபலியாக தேவனுக்கு ஒப்புகொடுக்கவேண்டும் என்பதுதான்!
.
பலி என்று வந்துவிட்டாலே எதோ ஓன்று சாக வேண்டும்! இங்கு சாக வேண்டியது சுயம்!
(சர்வாங்க தகன பலி - உயிர் கொல்லப்படும், ஸ்தோத்திரபலி - நமது வாயின் சுயபேச்சு கொல்லப்படும்)
.
நான் பெரியவன், நான் வசதியுள்ளவன், நான் பாஸ்டர், நான் ஆயர், நான் தலைவன், நான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற பல "நான்"கள் சாக வேண்டும்! அந்த "நான்" செத்தால் மட்டுமே நாம் ஆராதிப்பது உயிருளதாக இருக்கும். ஆனால் பலர் அந்த "நான்"களை சாககொடுக்க விரும்பாமல் ஒரு ஓரத்தில் பிடித்து வைத்துகொண்டு தேவனை ஆராதிக்கும் போது, அது நம் சுயபலத்தால் செய்யும் புத்தியற்ற ஆராதனையாக மாறிவிடுகிறது. முட்டங்கால் போட்டு படுத்தி கிடந்தாலும் முக்கியமில்லததாக போய்விடும்!
.
இப்பொழுது பலியிடப்பட்டு செத்த உயிர் எப்படி இருக்கும்?
.
அதை எப்படி தூக்கி போட்டு வெட்டினாலும் ஒன்றும் மறுப்பு தெரிவிக்காது. அடித்தாலும் ஒன்றும் செய்யாது
செத்த ஒரு உடம்பை ஒருவர் எப்படி கையாண்டாலும் அது ஏனென்று கேட்பதில்லை! அதுபோல்
"நான்" என்ற சுயத்துக்கு மரித்தவன், தேவனுடைய கரத்தில் நம்மை செத்தவர்களாக பாவித்து ஒப்புகொடுத்து அவர் எப்படி நம்மை கையாள விரும்புகிறாரோ அப்படி விட்டுவிட வேண்டும்.
.
தேவன் நமக்கு கொடுத்திருக்கும் வாக்குதத்தம் என்னவோ அது ஒன்றையே பிடித்துகொண்டு வேறு உலக சம்பத்தப்பட்ட எல்லாவற்றிக்கும் நாம் மரித்தவர்களாக காணப்படவேண்டும்! எது நிறைவேற வேண்டுமோ அதை தேவன் ஏற்றகாலத்தில் நிச்சயம் நிறைவேற்றுவார்!
.
நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்! "நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்" நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியவைகளை நமக்காக நிச்சயம் தருவார். எனவே எப்படி ஒரு தகப்பன் ஒரு சிறுபிள்ளை ஒன்றை ஊருக்கு அழைத்து செல்லும்போது "எங்கே தங்குவோம்" "என்ன சாப்பிடுவோம்" என்று கேள்வி எதுவும் கேட்காமல் "எல்லாவற்றையும் தகப்பன் பார்த்துக்கொள்வார்" என்ற மனதிருப்தியில் தகப்பன் பின்னால சொல்கிறதோ அதுபோல் நாமும் நம்மை முழுமையாக தேவனிடம் ஒப்புகொடுத்து அவர் சித்தம் செய்வது ஒன்றே குறிகோளாக அவர் பின்னால செல்லவேண்டும்!
.
அட! உங்களால் அவர் வேகத்துக்கு ஈடு கொடுத்து செல்லமுடியவில்லையா? அப்படியே நின்றுவிடுங்கள்1 உங்களை தூக்கியாவது கொண்டு சென்று தேவன் காப்பாற்றிவிடுவார்! தேவனின் ஒப்பற்ற அன்பு அளவிட முடியாதது!
.
ஆனால் அவர் ஒருபுறம் இழுக்க நீங்கள் உங்கள் சுயத்தால் போராடி இன்னொரு புறம் இழுத்தீர்களானால் அவருக்கும் கஷ்டம் நமக்கும் கஷ்டம்!
.
ஒவ்வொரு காரியத்தை செய்யும்போது "இது தேவனின் சித்தமா" அல்லது "சுயசித்தமா" என்பதை நிச்சயம் ஆராயவேண்டும். சிலரின் வர்ப்புறுத்துதலாம் தவிர்க்க முடியாமல் செய்யவேண்டிய சில பொதுவான
காரியங்கள் கூட தேவனின் சித்தமே!
.
இப்பொழுது நானோ அல்லது அன்பு அவர்களோ தேவனின் சித்தம் இல்லாமல் இங்கு எழுத வந்தோமா?
.
இல்லவே இல்லை! எங்களை அனுப்பியது தேவன்தான். முடிந்தால் அவர் காட்டும் வசனங்களுக்கு சரியான வசனத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அல்லது திரியை பூட்டிவிடலாம். நீக்கிவிடலாம்! மாறாக வேறுமாதிரி விமர்சிப்பது அதை சகோதரர்கள் கண்டுகொள்ளாமல் பாராட்டுவது
எல்லாம் கிறிஸ்த்துவின் அளவற்ற அன்பை எடுத்துக்காட்டாது!
.
"அடைப்பை பிடுங்குகிறவனை பாம்பு கடிக்கும்" என்றாலும் தேவனே சில நேரங்களில் அடைப்பை தகர்க்க வாய்ப்பு உண்டு!
.
ஏசாயா 5:5 இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.