நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்/அநீதிகள்


Veteran Member

Status: Offline
Posts: 33
Date:
RE: சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்
Permalink Closed


Thanks

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

sundar wrote:
//சகோ. அன்பு அவர்களே தாங்கள் தலைப்பில் யாரை  குறிப்பிட்டு எழுதுகிறீர்களோ அவரை பற்றிய கருத்துக்களை மட்டும் இங்கு பதிவிடும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன். அவர் மற்ற எல்லா சகோதரர்களும் அவருடைய  கருத்துக்குள் இழுத்திருந்தாலும் தங்கள் பதிவுகளை குறித்த  கருத்துக்களுக்கு மட்டும் பதில் கொடுப்பதே சிறந்தது. சகோ. ஜோசப்சிநேகா அவர்களின் பதிவின் அடிப்படையில் இதை சொல்கிறேன்.//

நன்றி சகோதரரே!

இனி இம்மாதிரி chain-ஆக விஷயங்கள் சென்றுவிடாதபடி கவனமாக இருக்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்
Permalink Closed


//எதிரியை தடுமாறச் செய்து வீழ்த்துவது ஒன்றே குறிக்கோளானால் எந்த வேடத்தையும் ஒருவன் போடுவான் என்பதற்கு பெரியவர் அன்பு அவர்களே நல்ல உதாரணம்; அவருக்கு வசனம் வேண்டுமாம்; மாணவனாம்; மாணவன் எதிர்த்து கேள்வியே கேட்கவே கூடாதே?//

இப்படி எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசினால் இவரை மதியீனர் எனச் சொல்லாமல் வெகுபுத்திசாலி என்றா சொல்லமுடியும்? இவர் இப்படிச் சொன்னதற்கான பின்னணியைச் சொல்கிறேன். அதன்பின் இவர் மதியீனர் என்பது தானாகப் புரிந்துவிடும்.

“நான் வேதத்தை முற்றும் கற்றறிந்தவனில்லை” என்றார் சகோ.ஜோசப்ஸ்னேகா. அதற்குப் பதில் சொன்ன நான், “நானுங்கூட வேதத்தை முழுவதுமாக கற்றதாக நினைக்கவில்லை” என்றேன். உடனே என்னை மாணாக்கன் எனச் சொல்லும் சில்சாம், நான் யாரையும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது என்றும் சொல்கிறார்.

வேதத்தைக் கற்றுக்கொண்டிருக்கும் என்னை மாணாக்கன் என அவர் சொன்னதில் தவறில்லை. ஆனால் மாணாக்கனான நான், யாரையும் எதிர்த்து
கேள்வி கேட்கக்கூடாது என இவர் சொல்வதில்தான் இவரது மதியீனம் அடங்கியுள்ளது. வேதத்தைக் கற்றுக்கொள்வதாகச் சொன்ன நான், இங்கு யாரையாவது குருவாக வைத்தா கற்கிறேன் என்றேன்? கிறிஸ்து ஒருவேரே நம் அனைவருக்கும் குருவாக இருக்கும்போது, நம்மில் யார்தான் யாருக்குக் குருவாக இருக்கமுடியும்?

தன்னை ஒரு வேதாகம குருவாக சில்சாம் எண்ணுவதால்தான், நான் வேதத்தைக் கற்று வருகிறேன் என்றதும், அவரிடமும் அவரைப் போன்ற குருக்களிடம் நான் கேள்வியே கேட்கக்கூடாது என அவர் நினைக்கிறார். இப்படி நினைக்கும் ஒருவரை மதியீனர் எனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்?

வேதத்தைக் கற்பதற்கு நாம் யாரிடமும் போய் டியூஷன் படிக்க வேண்டியதில்லை. நாம் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு வேதாகமத்தை ஆராயும்போது, தேவன் தாமே வேதத்தைக் கற்பதற்கான ஞானத்தை நமக்குத் தந்தருளுவார். இந்த அடிப்படை உண்மைகூட தெரியாத சில்சாம், மாணாக்கனான நான் யாரிடமும் கேள்வி கேட்கக்கூடாது என மமதையோடு சொல்கிறார்.

ஒரு வகுப்பிலுள்ள மாணாக்கர்கள், தங்கள் வாத்தியாரைத்தான் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது. ஆனால் சக மாணவர்கள் ஒருவர் அறிந்ததை மற்றவரிடம் சொல்லி, ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டு விஷயங்களை அறிந்துகொள்ளலாம். அப்படி கேள்வி கேட்கும்போது, ஒரு மாணவன் வந்து, “என்னையா எதிர்த்து கேள்வி கேட்கிறாய், நான் சொன்னா சொன்னதுதான், உங்களுக்கெல்லாம் நான்தான் வாத்தியார்” என மமதையோடு சொன்னால், அவனை மதியீனன் என்றுதானே சொல்லமுடியும்? அதேவிதமாகத்தான், வேதாகம மாணவனாகிய நான் யாரையும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது எனச் சில்சாம் சொல்வது, அவரது மதியீனமான மமதையைக் காட்டுகிறது.

பின்குறிப்பு: “நான் வேதத்தை முற்றும் கற்றறிந்தவனில்லை” என ஜோசப்ஸ்னேகா சொன்னபோது, அவரிடம் எதுவும் சொல்லாத சில்சாம், அதேவிதமாக நான் சொன்னபோது மட்டும் விழுந்தடித்து வந்து, “மாணக்கனான நீ எதிர்த்து கேள்வி கேட்காதே” என்கிறார்.

இதிலிருந்து அவரது பட்சபாத புத்தியும் தெரிகிறதல்லவா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

//எதிரியை தடுமாறச் செய்து வீழ்த்துவது ஒன்றே குறிக்கோளானால் எந்த வேடத்தையும் ஒருவன் போடுவான் என்பதற்கு பெரியவர் அன்பு அவர்களே நல்ல உதாரணம்;//

உன்னைப்போல் பிறனை நேசி என இயேசு சொன்னது, உன்னைப் போல் பிறனை யோசி என சில்சாமுக்குக் கேட்டதோ தெரியவில்லை, தன்னைப் போலவே எல்லாரையும் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால்தான் தன்னைப் போன்ற கள்ளனாக, வேடதாரியாக என்னையும் அவர் நினைக்கிறார்.

ஒருவேளை சில்சாமுக்கு காதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறதென்றால் என்ன சொல்லலாம்? வேறென்ன சொல்ல, மதியீனன் என்றுதான் சொல்லவேண்டும்.

அய்யா சில்சாம்! நான் யாரையும் எதிரியாகவும் நினைக்கவில்லை, யாரையும் வீழ்த்தவும் நினைக்கவில்லை, வேடமும் போடவில்லை. உங்கள் மதியீனம்தான் உங்களை அப்படி நினைக்க வைக்கிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

இத்தளத்தைத் துவக்கி ஓரிரு நாட்களுக்குள்ளாக சில்சாம் தனது தளத்தில் பதித்த பதிவு:
//எச்சரிக்கை: யெகோவா சாட்சிகளின் மாறுவேடத்தில் செயல்படும் "வேதாகம மாணவர்" குழுவுடன் இன்னொரு விஷ ஜந்து "நித்திய ஜீவனை"த் தருவதாகக் கூறிப் புறப்பட்டிருக்கிறது..!//

இத்தளத்திற்கு எதிராக சில்சாமின் சிந்தையில் எழுந்த முதல் மதியீனம் இது. தளத்தில் நான் எந்த கருத்தையும் சொல்வதற்கு முன்னதாகவே இப்படிச் சொன்னார் அவர்.

இதை அடுத்து சில்சாம் கொட்டின பல மதியீனங்கள்:

//இவர்கள் நித்திய ஜீவனை யாருக்கும் தரமுடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்;ஆனாலும் இவர்களுடைய போதனையை வாசிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதைக் கண்டிக்கவே அதுபோன்று எழுதினேன்;//

சில்சாமுக்கு பரிந்து பேசுபவர்கள் கவனிக்க: “நித்தியஜீவன்” என்ற பெயரில் ஒரு தளத்தைத் தொடங்குவதுகூட தப்பா? அதில்கூட ஒரு உள்நோக்கம் இருக்குமா? எனது தளத்திற்கு நித்தியஜீவன் எனப் பெயர் வைத்ததன் மூலம், நான் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறின சில்சாம் மதியீனனா இல்லையா என்பதை நடுநிலையுடன் சிந்தித்து நிதானியுங்கள்.

//
நம்முடைய தளத்தைக் குறித்து எழுதியே தங்கள் தளத்தின் வாசகர்களை இழுக்கும் தந்திரத்தை எனது நண்பர்கள் பயன்படுத்தி வருகின்றனர்; இன்றைக்கு "சில்சாமைக் குறித்து இவர் என்ன எழுதியிருக்கிறார் " என்று பார்க்கவே சில தளங்களில் கூட்டம் கூடுகிறது; நம்மைப் பற்றி எழுதுவதை நிறுத்தினால் இவர்களுடைய தளங்கள் காய்ந்து போகும்; போதாக்குறைக்கு நாம் வேறு இவர்களுடைய மோசடிகளை பகிரங்கப்படுத்தி இவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறோம்;ஏதோ பிழைத்து போகட்டும்..!//

வாசகரை இழுக்கும் தந்திரம், விளம்பரம் என்பதுபோன்ற அற்பத்தனமான உள்ளெண்ணத்துடனா நாங்கள் தளம் நடத்துகிறோம்? இதைக்கூட நிதானிக்கத் தெரியாத இவரை மதியீனர் எனச் சொல்லாமல் புத்திசாலி என்றா சொல்ல முடியும்?

//
10,12 என்ற அளவில் பார்வையாளர் எண்ணிக்கையை வைத்திருந்த இந்த கனவான்கள் அதிலேயே திருப்தியடைந்து கழுகு குஞ்சுகளுக்கு இது போதும் என்று தோளை குலுக்கிக் கொண்டிருந்தனர்;இப்போதோ நான் அவர்கள் தளத்தில் எழுதுவதை நிறுத்திய பிறகும் நேரடி விவாதத்துக்கு வர முதுகெலும்பில்லாத கோவணாண்டிகள் நம்மையும் நம்முடைய விசுவாசத்தையும் குறித்து பரியாசம் செய்யும் வண்ணமாக எழுதி வருகின்றனர்;இவர்கள் மெய்யாகவே பூரண சற்குணர்களாகவும் -கழுகு குஞ்சுகளாகவும் - மரணமில்லா பெருவாழ்வுக்காக பத்துக் கற்பனையை மாய்ந்து மாய்ந்து நிறைவேற்றுபவர்களாக இருந்தால் நம்மைக் குறித்து எழுதுவதை நிறுத்தட்டும்; அல்லது திருந்தி வந்தால் நல்லதை சொல்லிக் கொடுத்து ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம்.//

இவரது இஷ்டம்போல் தூஷித்து எழுதுவார்; பின்னர் இவர் நிறுத்திவிட்டால் நாமும் உடனே நிறுத்தவேண்டுமாம். என்னே ஒரு நியாயமான எதிர்பார்ப்பு?

மேற்காணும் பதிவுக்கு தொடுப்பு கொடுக்கவில்லை; அதற்கு வேறு கோபிக்கப்போகிறார். இதோ அதன் தொடுப்பு: http://www.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=39729174&page=2&sort=newestFirst

தன்னைக் கிறிஸ்தவன் என்றும் கிறிஸ்துவுக்கு வைராக்கியம் பாராட்டுபவன் என்றும் சொல்கிற ஒருவர் இப்படியுங்கூட பரியாசம் பண்ணுவாரா?

//
உங்கள் கூட்டணியின் மற்றொரு தொங்கு சதையான பெரியவர் அன்பு அவர்களை நான் ஆரம்பத்தில் தவறாக கணித்துவிட்டேன்;அவர் கற்பனையைப் பிரதானப்படுத்தி போதிக்கும் ஏழாம் நாள் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணினேன்;ஆனால் போகப் போகவே எனக்கு தெரியவந்தது,அவரும் இயேசுவை மறுதலிக்கும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர், என்பது.//

நான் இயேசுவை மறுதலிப்பவன் என மதியீனமாகச் சொல்லும் இவரது வார்த்தைகளை நம்புவோர், இவரைவிட மதியீனரே எனச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.

சில்சாமின் மற்றுமொரு மதியீன பதிவு:

//இந்த பிசாசுகளை அடையாளங் காண கீழ்க்காணும் தொடுப்புகளை சொடுக்கவும்...

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=1

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=1

முதலாவது பிசாசு மிகவும் கொடியது; இது "இயேசு தொழத் தக்க தெய்வமல்ல" என்று சொல்லும்; என்ன ஒரு ஆச்சரியமென்றால் மற்ற ரெண்டும் பல காரியங்களில் இதனுடன் ஒத்துப்போவதுடன் "இயேசு தொழத் தக்க தெய்வமல்ல" என்ற கருத்துடன் மிகவும் சாந்த சொரூபிகளாக வேடமிடும் ஓநாய்கள்; இவைகள் இதற்கு மேல் தெளிவடைய வாய்ப்பில்லை என்ற தீர்மானத்தின் காரணமாகவே நான் கடுமையாக எதிர்த்து அடையாளங் காட்டுகிறேன்;

இரண்டாவது பிசாசு பத்து கற்பனைகள் வழியாக மட்டுமே இரட்சிப்பு என்ற கருத்தை மேலோட்டமாகவும் அதன் அடுத்தடுத்த கட்டங்களில் வேதத்தில் உயிர்த்தெழுதல் முதலாக ஒவ்வொரு போதனையிலும் விகர்ப்பமானவற்றை போதிக்கும்;

மூன்றாவது பிசாசு மறுபிறவி கொள்கையை உடையது;வேதம் மாத்திரமே வேதமல்ல,புத்தர் போன்ற மகான்கள் மூலமும் ஆண்டவர் பேசியிருக்கிறார்;சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்,சர்வ வல்ல இறைவனுடைய செயல்களை யாரும் கட்டுப்படுத்தவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்று போதிக்கிறார்; இயேசுவுக்குப் பிறகு பிறந்த அனைவரும் இவரைப் பொறுத்தவரை மறுபிறவிகளே; அதாவது இயேசுவின் மீட்புக்குள் அனைவரையும் கொண்டு வர அவருடைய பிறப்புக்கு முன் பிறந்து வாழ்ந்து மறைந்த அனைவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இறைவன் பிறக்கச் செய்திருக்கிறார்;அந்த வகையில் தானும் கூட ஆதி காலத்தில் சிவபெருமானாகவும் இடைப்பட்ட காலத்தில் இவரும் இவரது சகோதரரும் பிரபலமான இஸ்ரவேலின் சகோதரத் தலைவர்களாகவும் வாழ்ந்தவர்கள்; தற்போது இவர் வாழ்ந்துகொண்டிருப்பது மூன்றாவது பிறவி; இவருக்கு முற்பிறவிகளின் பல காரியங்கள் இன்னும் நினைவில் இருப்பது இவருடைய தனிச்சிறப்பு; தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் இவருடைய தளத்தின் அதிமுக்கியமான கட்டுரையானது சொல்லும் சேதி என்னவென்றால் "இயேசுவானவர் சிலுவையில் கொன்றது சாத்தானின் பகை" யே; சாத்தானை சமாளிக்க வேறு வழியில்லாமல் தேவன் தம்முடைய மகனையே பலியாக செலுத்தி உலக மக்களை மீட்டுக்கொள்ளுகிறார்; மேலும் ஆதிமுதல் பலி செலுத்திய அனைவருமே சாத்தானை குளிர்விக்கவே பலிசெலுத்தினர், என்கிறார்;//

வசனத்தின்படியல்லாமல், பாரம்பரியத்தின்படியானதும் பெருவாரியான ஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான கருத்துக்களுக்கு எதிராகப் பேசினால், உடனே அப்படிப் பேசுவோரை பிசாசு எனச் சொல்லிவிடுவதா? இப்படிச் சொல்பவரை மதியீனர் என நான் சொல்லக்கூடாதா?

சில்சாமைப் பற்றிய இத்திரியைத் துவக்கும் முன்னதாக அவர் கொட்டின மதியீனங்களில் சிலவற்றைத்தான் இப்பதிவில் கூறியுள்ளேன். இதற்கும் மேலாக மதியீனங்களைக் கொட்டிக் கொண்டேயிருந்ததால்தான், இத்திரியை நான் துவக்கினேன்.

ஆம், மதியீனனான அவர் தனது பார்வைக்கு ஞானியாகக்கூடாது என்பதற்காகத்தான், நானும் அவரைப் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில், அவரது மதியீனத்தின்படியே நானும் மறு உத்தரவு கொடுத்துள்ளேன் (நீதிமொழிகள் 26:4,5).

இன்னும் அவரது மதியீனங்கள் தொடரும் ... 



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

சில்சாம் ஒரு மதியீனர் மட்டுமல்ல, அநீதியானவருங்கூட.

ஒரு தளத்தின் பதிவை மற்றொரு தளத்தில் பதிப்பவர்கள், அப்பதிவுக்கான தளத்தின் தொடுப்பைக் கொடாததைக் குறித்து, சமீபத்தில் சில்சாம் கூறினது:

//மாற்றுக் கருத்துக்களை சுதந்தரமாக தெரிவிக்கவே இணையதளத்தின் வலைப்பூக்களையும் வலைதளங்களையும் பயன்படுத்துகிறோம்; அதில் நாம் பதிக்கும் ஒவ்வொரு கருத்துக்கும் பின்னணியில் இன்னொரு கருத்து நிச்சயமாகவே இருக்கும்; அதன் பாதிப்பு நம்முடைய எழுத்துக்களில் எதிரொலிப்பது தவிர்க்க இயலாததாகும்; ஆனாலும் மற்றொருவருடைய கருத்தின் பாதிப்பில் மட்டுமல்லாது மற்றவருடைய கருத்தையே மேற்கோள் காட்டி எழுதும்போது அவசியம் அவரவருடைய கருத்து இடம்பெற்றுள்ள தொடுப்பை கொடுக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான நாகரீகமாகும்; ஆனால் கீழ்த்தரமான இழிவான நோக்கத்துடன் எழுதுவோர் இந்த நாகரீகத்தைக் கடைபிடிப்பதில்லை.//

தொடுப்பு தராதவர்களை, “கீழ்த்தரமான இழிவான நோக்கத்துடன் எழுதுவோர்” என்கிற கடுமையான வார்த்தைகளால் சில்சாம் தாக்கியுள்ளார். என்னையும் பெரியன்ஸ்-ஐயும் சுந்தரையும் மனதில் வைத்துதான் இப்படியொரு மட்டமான தாக்குதலை சில்சாம் தொடுத்துள்ளார். ஆனால் இவரது அபிமான போதகரும் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் நிர்வாகியுமான அற்புதம் என்பவர் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு திரியில் பின்வருமாறு கூறியுள்ளார்:

//சகோ.கொல்வின் அவர்களே! உங்களின் அன்பான் ஆலோசனைக்கு நன்றி. ஆனால் நீங்கள் ஏன் நித்திய ஜீவன் தளத்தின் விவாத தொடுப்பை இங்கே கொடுத்தீர்கள் என தெரியவில்லை. அந்த கூட்டத்தார் வித்தியாசமான உபதேசத்தைப் போதிப்பவர்கள் என்பது தங்களுக்கு தெரியாதா?//

நித்தியஜீவன் தளத்தின் ஒரு பதிவை மேற்கோள் காட்டி, கூடவே இத்தளத்தின் தொடுப்பையும் சகோ.கொல்வின் கொடுத்ததைக் கண்டித்து, மேற்கூறியவாறு
அற்புதம் கூறியுள்ளார். அற்புதம் சொன்னதை ஒரு தவறாகவோ அநாகரீகமானதாகவோ நான் கருதவில்லை.

********************************
(ஆகிலும், இத்தளத்தை “வித்தியாசமான உபதேசத்தைப் போதிப்பவர்கள்” என அவர் கூறியதால், பின்வருமாறு நான் கேட்டிருந்தேன்; இன்றுவரை அதற்கு யாரும் பதில் தரவில்லை.
//
நித்திய ஜீவன் தளத்தில் வித்தியாசமான உபதேசத்தைப் போதிப்பதாக சகோ.அற்புதம் சொல்கிறார், அதை சகோ.கால்வின் ஆமோதிக்கிறார். நல்லது.

நித்திய ஜீவன் தளத்தில் வித்தியாசமான போதனையாகக் காணப்படும் உபதேசங்களில் ஏதேனும் ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் எடுத்துரைக்கும்படி சகோதரர்கள் இருவரையும் வேண்டுகிறேன்.
//)

********************************
எனது தொடுப்பைத் தருவதைக் குறித்து கண்டித்து அற்புதம் கூறின அதே திரியில், சில்சாமும் சில பதிவுகளைக் கொடுத்திருந்தார்; ஆனால், அற்புதத்தின் கண்டனத்தைக் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

ஒரு தளத்திற்கு தொடுப்பு தராமல் அதன் பதிவை மேற்கோள் காட்டுவதை அநாகரீகம் என்றும், அப்படிச் செய்பவர் கீழ்த்தரமான இழிவான நோக்கமுடையவரென்றும் தற்போது கூறுகிற சில்சாம், அன்று அற்புதத்தின் நடவடிக்கையை கண்டு கொள்ளாதிருந்தது ஏன்?

அற்புதம் என்பவர் சில்சாமின் மரியாதைக்குரிய போதகர், சில்சாமின் மதியீன வேதாகமக் கருத்துகளோடு ஒத்துப்போகிறவர் என்பதால்தான் சில்சாம் ஒருதலைப் பட்சமாக அற்புதத்தின் செயலைக் கண்டுகொள்ளாமலும், என்னைப் போன்றோரின் செயலைக் கடுமையாக விமர்சித்துமுள்ளார். இவரது இச்செயலை அநீதி எனச் சொல்வதில் எனக்குத் தயக்கம் எதுவுமில்லை. இவரது அநீதிகளுக்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

ஆகாத மருமகள் கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்”, “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்” என்பது போன்ற பழமொழிகளுக்கேற்ப, தனக்குப் பிடித்தோருக்கு ஒரு நீதி பிடிக்காதோருக்கு ஒரு நீதி என சில்சாம் செயல்படுகிறார்.

சில்சாமின் இத்தனை வெளிப்படையான அநீதிகளைப் பார்த்துக்கொண்டு அவருக்குத் தாளம் போடுகிற அனைவரும் தாங்கள் “கிறிஸ்துவை ஆராதிப்பவர்கள்” என்றும் தாங்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்றும் சொல்வதுதான் வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது. இப்படிச் செய்கிற இவர்கள் அனைவரும் ஒருபுறம் கிறிஸ்துவை ஆராதிப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கின்றனர் எனச் சொன்னால், அது மிகையாகாது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

chillsam wrote in யௌவன ஜனம்
//நம்முடைய புதிய நண்பர் ஜாண் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஓநாயின் பல்லை சுத்தம் செய்வதைப் போன்றதொரு செயலில் இறங்கி தனியாக சிக்கிக்கொண்டிருக்கிறார்; மென்மையான‌ அவரிடம் எந்த நாகரீகமோ மனிதத் தன்மையோ இல்லாமல் மூர்க்கத்தனமாகவும் மடத்தனமாகவும் ஒரு விவாதத்தை "அம்பும்", "வெறியன்ஸும்" நடத்திக்கொண்டிருக்கின்றனர்;//

நானும் பெரியன்ஸ்-ம் மிகவும் சாதாரணமாக ஜாணோடு விவாதம் செய்ததைக்கூட பொறுக்கமுடியாமல், நாங்கள் நாகரீகமோ மனிதத் தன்மையோ இல்லாமல் மூர்க்கத்தனமாக விவாதிப்பதாகக் கூறுகிற சில்சாம், ஓரிரு நாட்களுக்கு முன்பாக ஜாண், கொல்வின், ஜோசப்ஸ்னேகா என மூவருமாக மாறி மாறி இத்தளத்தில் பதிவுகளைத் தந்து கொண்டிருக்க, நானும் அவற்றிற்கு சளைக்காமல் பதில் தந்துகொண்டிருக்க, சில்சாம் தனது தளத்தில் ஒருபுறம் என்னைக் குறித்து நையாண்டியும் பரியாசமும் செய்து தனது வழக்கமான பாணியில் மதியீனங்களைக் கொட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கொட்டின ஒரு மதியீனம்:

//குடிப்பதற்கு வாங்கிய டீயைக்கூடப் பருகாமல் அதில் ஈ விழுந்து கிடக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்;//

நான் சளைக்காமல் தொடர்ந்து பதிவுகளைத் தருவதைப் பார்த்து, டீ கூட பருகாமல் நான் பதிவுகளில் பிசியாக இருப்பதாக பரியாசம் செய்யும் சில்சாம், தமது பசியைக் கூட மறந்து சமாரிய ஸ்திரீயிடம் தனது ஊழியத்தைச் செய்த இயேசுவை என்ன சொல்லப் போகிறார்?

யாராயிருந்தாலும் ஒரு பணியில் இறங்கிவிட்டால், பசி/தூக்கம் பாராமல் அப்பணியைச் செய்வது இயல்பான ஒன்று. அதைக்கூட பரியாசம் பண்ணுகிற இவரது மதியீனத்தை என்ன சொல்ல?

3 பேரின் தொடர்ச்சியான பதிவுகளுக்கு உடனடியாக பதில் தந்துகொண்டிருந்த என்னை பரியாசம் செய்த இவர், தனது அபிமானத்திற்குரிய ஜாணோடு நாங்கள் இருவர் மட்டும் விவாதம் செய்யும்போது, நாங்கள் மூர்க்கத்தனமாகவும் மடத்தனமாகவும் விவாதம் செய்வதாகப் பாய்கிறார். இவரது இம்மாதிரி செயல்களை அநீதி என்பதா, மதியீனம் என்பதா? விபரமறிந்தவர்கள் சொல்லுங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்/அநீதிகள்
Permalink Closed


சில்சாமின் மற்றுமொரு மதியீனம்:
//இதுவரை நம்முடைய மார்க்க அறிஞர்களின் போதனைக்குக் கீழ்ப்படிந்து எதிர்த்து கேள்வி கேட்காமல் கேட்டதை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிவருகிறோம்;இதுவே ஒரு தேர்ந்த மாணவனின் அடையாளமாகும்;அதையே ஆண்டவரும் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்;எதிர்ப்பது, கேள்வி கேட்பது, கலகம் செய்வது, பிரிந்துபோவது இவையெல்லாம் பிசாசின் குணமாகும்;கிறித்துவின் குணமோ கேட்பதும் விசுவாசிப்பதும் கீழ்ப்படிவதும் அர்ப்பணிப்பதும் சத்தம் கேட்டு சித்தம் செய்து அடங்கியிருப்பதுவும் மாத்திரமே;இதற்கு மிஞ்சினது அக்கிரமமாகும்.//

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி சொன்னதை (மத்தேயு 15:7-9) மேற்கோள் காட்டி அன்றைய வேதபாரக பரிசேயரை இயேசு கண்டித்த அக்கண்டனம், இன்றைய வேதபாரக பரிசேயனாகிய சில்சாமுக்கும் பொருந்தும் என்பதை சில்சாம் தனது வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிற மதியீனத்தைப் போன்ற மதியீனத்தை சில்சாமும் செய்துவிட்டார்.

மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதே அவசியமாயிருக்கிறது என மெய்யான அப்போஸ்தலன் பேதுரு சொன்னார் (அப். 5:29). ஆனால் பொய்ப் போதகரான சில்சாமோ, மனுஷரின் போதனைகளுக்குக் கீழ்ப்படிவதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறார்.

எனக்கு ஒரு சந்தேகம்! இவர் மெய்யாகவே திரித்துவவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறாரா, அல்லது அவர்கள் பக்கம் இருப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு, அவர்களுக்கு எதிராகப் பேசுகிறாரா? திரித்துவவாதிகளே கவனிக்கவும்:

நீங்கள் நம்பி ஏற்றுக்கொண்டுள்ள போதனைகள் யாவும் “மார்க்க அறிஞராகிய” மனுஷரின் போதனைகள்தானாம். இதை நான் சொல்லவில்லை, உங்கள் ஆஸ்தான குருவான சில்சாம்தான் கூறுகிறார், ஜாக்கிரதை.

என்னவொரு கேவலமான பிழைப்பு? மனுஷரின் போதனைக்குக் கீழ்ப்படிந்து எதிர்த்து கேள்வி கேட்காமல் அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் ஒரு பெருமையாம். இப்படிச் செய்தோரைத்தானே மாயக்காரர் எனச் சொல்லி, மத்தேயு 15:7-9-ல் இயேசு கண்டித்தார்? இப்படி இயேசு நேரடியாகச் சொல்லியிருந்துங்கூட அவரது கூற்றை உதாசீனம் செய்துவிட்டு “அவரை ஆராதனையும் செய்வதாகக்” கூறுவதெல்லாம் வெறும் மாயமாலந்தானே?

மனுஷரின் போதனைக்குக் கீழ்ப்படிந்து பின்பற்றுவதைத்தான் இயேசு எதிர்பார்க்கிறாராம். என்னவொரு மகா புத்தியீனம்?

//கிறித்துவின் குணமோ கேட்பதும் விசுவாசிப்பதும் கீழ்ப்படிவதும் அர்ப்பணிப்பதும் சத்தம் கேட்டு சித்தம் செய்து அடங்கியிருப்பதுவும் மாத்திரமே;//

ஆம், கிறிஸ்து சொன்னதைக் கேட்பதும், அவரை விசுவாசிப்பதும், அவருக்குக் கீழ்ப்படிவதும், அவரிடம் அர்ப்பணிப்பதும், தேவசித்தம் செய்து அவரது கைக்குள் அடங்கியிருப்பதும்தான் கிறிஸ்துவின் குணம். சில்சாம் சொல்வதுபோல் மார்க்க அறிஞரான மனுஷர் சொன்னதைக் கேட்டு அவர்களின் போதனைக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் சொன்னதை நம்பி விசுவாசித்து, அவர்களுக்கு அடங்கியிருப்பது நிச்சயமாக கிறிஸ்துவின் குணமல்ல; ஆதியில் பிசாசின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து அடங்கிப்போன ஆதாம்-ஏவாளின் குணம்.

இம்மாதிரி மதியீனத்தைச் செய்யவேண்டாம் என திரித்துவவாதிகளை அன்புடன் வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink Closed

I பேதுரு 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

வேத வசனத்தை பின்பற்றி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலர்களின் எழுத்தின்படி கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி நாம் உணர்ந்து நடப்போம்!! வேதம் எழுதி முடித்த பிறகு அநேகர் பரிசுத்தவான்களின் வேஷமிட்டு கிறிஸ்துவின் நாமத்தில் வந்து ஏமாற்றியவர்களின் அடிச்சுவடுகளை கள்ள போதகன் சில்சாம் மற்றும் அவரின் ஆடுகள் பின்பற்றட்டும்!!

என்ன ஒரு துனிச்சலான தேவ தூஷனம்!! இந்த கள்ள போதகன் "கிறித்து" "இயேசுசாமி" போன்றவர்களை தான் தன் குலதெய்வமாக வைத்திருக்கிறார், அவர்களுக்கு தான் ஆராதனை செய்துக்கொண்டு இருக்கிறார், அந்த பாதையில் இவர்கள் தொடர்ந்து நடக்கட்டும்!! நமக்கு தேவன் கொடுத்த பொக்கிஷமான வேத வசனங்கள் அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது!!


__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 33
Date:
Permalink Closed

ஐயா, சில்சாம் மட்டும் அல்ல, உலகில் கோடிக்கணக்கான மக்கள் இயேசுவை தொழுது தான் வருகின்றனர். அந்த நம்பிக்கைக்காக தான் பல இன்னல்களையும் துன்பங்களையும் உங்களை போன்றோரின் ஏளனங்களையும் சகித்து வருகின்றனர்.

__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink Closed

மண்ணிக்கனும், இன்று இப்படி பட்ட போதனையை தருவோர், எந்த வித பாடுகளும் படுவதில்லை என்பதற்கு இன்றைய ஊழியர்களின் வாழ்க்கை முறையே காண்பித்து தரும்!! பிதாவை பிதா என்றும், கிறிஸ்துவை குமாரன் என்றும் சொல்லிய அப்போஸ்தலர்கள் தான் பாடுகள் பட்டார்கள், அவர்கள் தான் நிந்தைகள் அவமானங்களை சகித்தார்கள்!! இன்று இருக்கும் ஊழியர்களின் படகு கார் சவாரிகளும், பூனைப்படை பாதுகாப்பும், பட்டு உடைகளின் ஆடம்பரமும், முகத்தில் உள்ள மேக் அப், இதில் எந்த விதத்திலும் இவர்கள் பாடுகள் பட்டதாக தெரியவில்லையே!! சொல்லப்போனால் இது எல்லாம் இவர்களுக்கு இலவசமாகவே கிடைப்பது அதைவிட பெரிய ஆசீர்வாதம்!!

என் தாய் தகப்பனை தூஷித்து எழுதும் ஒரு ஏளனத்தை விடவா நீங்களோ சில்சாமோ சகித்திருப்பீர்களா??!! நான் இதை எழுதுவது அனுதாபம் தேடிக்கொள்வதற்கு அல்ல, என் நிலையில் இன்னொருத்தன் இருந்தால் அவன் எப்படி இதற்கு பதில் கொடுத்திருப்பான் என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவே!! உங்கள் காதுகளுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் என் தகப்பன் 2004ல் மரித்து விட்டார், இப்படி பட்ட ஒரு கேள்வி எனக்கு என் போதனையினால் தானே வந்திருக்கிறது!! இதை போல் ஒரு கேள்வியை நான் கேட்டிருக்கிறேனா!! ஆனாலும் நீங்கள் சில்சாமின் போதகத்தை நம்புவதால், நான் இப்படி எழுதியதற்கும் நிச்சயமாகவே ஏதாகிலும் வித்தியாசமாக தான் எழுதுவீர்களே தவிர, வேறு என்ன செய்வீர்கள்!!

மீண்டும் சொல்லுகிறேன்,

யோவான் சொன்னது போல், எங்களின் ஐக்கியம் பிதாவோடும், அவரின் குமாரனான கிறிஸ்து இயேசுவுடன் மாத்திரமே!!

I யோவான் 1:3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

என்ன ஒரு தெளிவான வசனம்!! அப்போஸ்தலர்கள் அழைப்பு கொடுத்த அழைப்பில் நான் ஐக்கியம் கொண்டிருக்கிறேன், நீங்கள் இந்த கோடிகணக்கானவர்களோடு தாராளமாக இருக்கலாம்!! ஆனால் உங்களின் ஐக்கியம் இன்னும் ஒரு தேவனோடு (பரிசுத்த ஆவியான தேவன்) இருக்கிறதாக நீங்கள் சொல்லுகிறீர்கள்!! உங்களின் அழைப்பை ஏற்பதா, அப்போஸ்தலர்கள் கொடுத்த வசனத்தின் அழைப்பை ஏற்பதா என்பதை யோசிக்கும் போது, எனக்கு வசனம் தான் பிடித்திருக்கிறது!!

நீங்கள் ஆதரித்து பேசும் சில்சாமின் அல்லது கோடிக்கணக்கான உலக கிறிஸ்தவர்களின் குலதெய்வமான "கிறித்து" அல்லது "இயேசுசாமி" அல்லது சில்சாமின் பிரியமான போதகர் அறிமுகப்படுத்திய "இயேசு நாதர்" அல்லது "அருள் நாதர்" கூட நிச்சயமாக யோவானுக்கோ, மற்ற அப்போஸ்தலர்களுக்கோ சம்பந்தம் இல்லாதது போல் எனக்கும் இல்லை!!

//அந்த நம்பிக்கைக்காக தான் பல இன்னல்களையும் துன்பங்களையும் உங்களை போன்றோரின் ஏளனங்களையும் சகித்து வருகின்றனர்.//

யாரை சொல்லுகிறீர்கள், சில்சாம் போன்றோர்களையா!! அவரை போல் நையாண்டியும் அடுத்தவர்களை புன்படுத்தும்படியாக எழுத நிச்சயமாக எனக்கு தெரியாது!! நான் கோட்பாடு ரீதியான வேண்டுமென்றால் காட்டமாக எழுதியிருக்கலாம், ஆனால் சில்சாமை போன்று குடும்பத்தை தாக்கி எழுதினது கிடையாது!! அந்த நம்பிக்கை என்று சொல்லுகிறீர்களே, அது நிச்சயமாக அப்போஸ்தலர்களின் நம்பிக்கை கிடையாது என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!! கொலை செய்யும் அளவிற்கு சில்சாம் எழுதுவது எல்லாம் நீங்கள் வாசித்தது கிடையாது போல் அல்லது வாசிக்காதது போல் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!!


__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink Closed

சகோதரர் அவர்களே!

தேங்கிக்கிடக்கும் கழிவு நீருக்குள் நல்ல தண்ணீரை ஊற்றினாலும் கெட்ட தண்ணீரை ஊற்றினாலும்
துர்நாற்றம்தான் வரும்.  அது எல்லோருக்கும் பாதிப்பைதான் ஏற்ப்படுத்தும். எனவே  சிலரின் தேவையற்ற பதிவுகளை கண்டு கொள்ளாமல் உங்கள் மேன்மையை நீங்கள் காத்து கொண்டு  விலகியிருப்பதே நல்லது என்பது எனது கருத்து.
 
கிறிஸ்த்துவின் அன்பை ருசிக்கவும் அதை பிறருக்கு எடுத்து சொல்லவும் அபிஷேகிக்கப்பட்டவர்கள்  அதை செய்யாமல் "பிறரை திட்டவும் பிறரால்  திட்டப்படவும்" விரும்பும் நிலையில் அதேநோக்கமாக இருக்கும் போது,  இங்கு தாங்கள் இவ்வளவு சிரமத்துடன் எழுதும் பதிவுகள் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தாது என்றே நான்  கருதுகிறேன்.  


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்/அநீதிகள்
Permalink Closed


sundar wrote:

//சகோதரர் அவர்களே!

தேங்கிக்கிடக்கும் கழிவு நீருக்குள் நல்ல தண்ணீரை ஊற்றினாலும் கெட்ட தண்ணீரை ஊற்றினாலும் துர்நாற்றம்தான் வரும்.  அது எல்லோருக்கும் பாதிப்பைதான் ஏற்ப்படுத்தும். எனவே  சிலரின் தேவையற்ற பதிவுகளை கண்டு கொள்ளாமல் உங்கள் மேன்மையை நீங்கள் காத்து கொண்டு  விலகியிருப்பதே நல்லது என்பது எனது கருத்து.
கிறிஸ்த்துவின் அன்பை ருசிக்கவும் அதை பிறருக்கு எடுத்து சொல்லவும் அபிஷேகிக்கப்பட்டவர்கள்  அதை செய்யாமல் "பிறரை திட்டவும் பிறரால்  திட்டப்படவும்" விரும்பும் நிலையில் அதேநோக்கமாக இருக்கும் போது,  இங்கு தாங்கள் இவ்வளவு சிரமத்துடன் எழுதும் பதிவுகள் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தாது என்றே நான்  கருதுகிறேன்.//

அன்பான சகோதரரே!

நீங்கள் சொல்வது சரிதான். ஆகிலும் நான் இந்த சாக்கடையில் இறங்கியதற்கு 3 காரணங்கள் உண்டு.


1. இந்த சில்சாம் ஆரம்பத்திலிருந்தே பிறரது பணிகளில் எத்தனை இடறலாயிருந்தார் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நான் எழுதும்போதே இவர் பல இடறல்களைக் கொடுத்துவந்தார். அவரது அநாகரீகமான எழுத்துக்களின் காரணமாக, அவரோடு நேரடியாக வாதம் செய்வதில்லை எனும் முடிவுக்கு பல வருடங்களுக்கு முன்பே நான் வந்துவிட்டேன்; இதை அவரிடம் நேரடியாக சொல்லியும்விட்டேன். நாம் என்னதான் ஒதுங்கிப்போனாலும் மீண்டும் மீண்டும் மட்டமாகவும் திசை திருப்பியும் எழுதி வந்த இவரை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆயினும் நாம் எழுதுகிற கருத்துகள் அத்தனையையும் சிதைத்து எழுதி இடறல் உண்டாக்கிவந்ததால், ஒருவேளை இவரது மதியீனத்தின்படி நாமும் மறுஉத்தரவு கொடுத்தால் சற்றாகிலும் உணர்வு பெற்று சகஜ நிலைக்கு வருவார், நாமும் நம் பணியை இடறலின்றி செய்யலாம் என்ற எண்ணமே இச்சாக்கடைக்குள் நான் இறங்க முன்வந்ததற்கான முதல் காரணம்.

2. துன்மார்க்கனின் துன்மார்க்கத்தை அவனுக்குச் சொல்லி எச்சரிக்காவிடில், அவனது இரத்தப்பழி உன் தலையில் விழும் எனும் வேதவாக்கியத்தின்படி, இவரது இரத்தப்பழிக்கு நான் நீங்கலாக வேண்டும் எனும் எண்ணத்தினாலும் சாக்கடைக்குள் நான் இறங்கத் துணிந்தேன்.

எசேக்கியேல் 3:17-19 மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.


நான் தேவனின் பணியைச் செய்யத் தீர்மானித்தபோது எனக்கு உணர்த்தப்பட்ட வசனம்: எசேக்கியேல் 2:7. அதன்படி இன்றைய இஸ்ரவேலரான “கிறிஸ்தவர்களிடம்” தேவவார்த்தைகளைச் சொல்லி அவர்களை எச்சரித்து வருகிறேன். எசேக்கியேல் 3:18-ன்படி சில்சாமின் இரத்தப்பழிக்கும் நானே பொறுப்பு என நான் தூண்டப்பட்டதால், இவ்விதமாய் சாக்கடைக்குள் இறங்கினேன்.

3. இந்த சில்சாமின் மதியீனங்களை பிறர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவற்றை விலாவாரியாக எடுத்துரைக்க முன்வந்தேன். ஆனால் நான் எடுத்துரைக்கத் தொடங்கியதும், அவரது மதியீனங்களையும் வக்கிரங்களையும் மிக வெளிப்படையாகவே அவர் கொட்டித் தீர்த்துவிட்டார். அவர் கடைசியாக பதித்த இப்பதிவில் அவரது வக்கிரத்தின் உச்சக்கட்டத்தை நான் காண்கிறேன்.

(deleted)

இப்பதிவில் அவர் தனது அபிமானிகளை சமரசம் செய்ய பதித்துள்ள வரிகளை சற்று கவனியுங்கள்:

//
நான் எழுத வந்த நோக்கம் அனைவரும் அறிந்த வண்ணமாக, இயேசுவைக் குறித்த தெய்வத்தை ஆராய்வதற்கு சாதாரண மனிதர்களான நமக்கு எந்த தகுதியும் இல்லை,இதில் விசுவாசம் ஒன்றே போதுமானது,
என்பதே;//

இப்போது இப்படி அப்பாவி போல் எழுதும் இவர், அப்போதுங்கூட இம்மாதிரி வரிகளால் தனது நோக்கத்தைச் சொல்லவேண்டியதுதானே? அதைவிடுத்து, உலகத்தான் தன் எதிரியை இழிவுபடுத்த பயன்படுத்தும் வார்த்தைகளைக் கூறுவானேன்?

எப்படியோ, இத்திரியை நான் துவக்கியதன் விளைவாக, சில்சாம் திருந்தினாரோ இல்லையோ, அவரது தரங்கெட்டத் தன்மையை அனைவரும் அறிந்துகொள்ள இத்திரி சற்றாகிலும் உதவியிருக்கும் என நம்புகிறேன்.

sundar wrote:
//இங்கு தாங்கள் இவ்வளவு சிரமத்துடன் எழுதும் பதிவுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே நான்  கருதுகிறேன்.//

நீங்கள் சொன்னபடி நான் எழுதினதில் எதுவும் அவருக்குள் எந்த பாதிப்பையும் உண்டாக்கவில்லை என்பதை இதுவரை அவர் தந்த அனைத்து பதிவுகளும் குறிப்பாக கடைசி பதிவும் நிரூபிக்கிறது. என் மூலம் அவருக்குச் சொல்லப்பட வேண்டிய எச்சரிப்புகள் போதும் என நான் கருதுவதால், உங்கள் ஆலோசனைப்படி, அந்த சாக்கடைக்குள்ளிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன். இனி மதியீனனான அவர், தன் பார்வைக்கு ஞானியாயிருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்.

இப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன் (1 கொரி. 5:5).

இனி, இவரைக் குறித்து எனக்கு எதுவுமில்லை. இனி இவர் எந்த ஆகடியம் பேசித்திரிந்தாலும், பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கனாகத்தான் இவரை நான் கருதுவேன் (நீதி. 6:12). இனி இவர் எந்த இடறலைச் செய்தாலும் அதை தேவன் பார்த்துக்கொள்வார்.

இவரது தளத்தில் உறுப்பினராக இருந்து, இவரது துன்மார்க்கங்களுக்கு ஒத்து ஊதுகிற கொல்வின், ஜாண் போன்றவர்களையும் எச்சரிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் பின்வரும் வசனம் சொல்வதை சற்று கவனிப்பார்களாக.

ஏசாயா 31:5 அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.

மகத்துவமான வேதவசனங்களை அந்நியமாகக் கருதி புறக்கணிக்காதீர்கள் (ஓசியா 8:12).

அக்கிரமக்காரராகிய சில்சாமுக்குச் சகாயஞ்செய்கிற யாராயிருந்தாலும், அவர் இத்தளத்தில் உறுப்பினராக இருக்கவும் வேண்டாம், பதிவுகளைத் தரவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அன்பான சுந்தருக்கு!

எனது இத்திரி சில்சாமை பெரிதாக பாதிக்காது என்றீர்கள், அது உண்மைதான். ஆகிலும், அவரது சுபாவம் மாறாவிடினும், மிகமிக மட்டரகமான பதிவுகளைக் கொடுப்பதற்கு இனி சற்றாகிலும் தயங்குவார் என நான் கருதுகிறேன். காத்திருந்து பார்ப்போம்.

-- Edited by anbu57 on Friday 8th of April 2011 06:57:45 AM



-- Edited by anbu57 on Friday 15th of April 2011 05:24:49 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard