நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் மனச்சாட்சியின் குரல் ...


Militant

Status: Offline
Posts: 830
Date:
என் மனச்சாட்சியின் குரல் ...
Permalink  
 


சமீபத்தில் யௌவன தளம் ஜனத்தின் ஒரு திரியில் சகோ.ஜாண் அவர்களுக்கு சகோ.கோல்டா ஓர் ஆலோசனையைக் கொடுத்துள்ளார், அதற்கு சகோ.ஜாண் ஒரு பதிலையும் கொடுத்துள்ளார். சகோ.கோல்டாவின் ஆலோசனை மற்றும் சகோ.ஜாணின் பதில்:

golda wrote:
//To Brother John:

தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.//


john wrote:
//நன்றி சகோதரி Golda.  நண்பர்கள் . அன்பு மற்றும்  பெரியன்ஸ் அவர்கள் சத்தியத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் அனேக கிறிஸ்தவ சகோதரார்கள் அங்கே செல்வதாலும், சத்தியத்தை அங்கு வருபவர்களும் அறிந்து கொள்ளட்டுமே என்றுதான். கூடிய விரைவில் துரத்தப்படுவேன் என்று நம்புகிறேன்.  "Truth will defend itself". இப்போது இவர்கள் முழங்காலை முடக்காவிட்டால் கடைசி நாளில் தேவன் அவர்களுடைய "தேவனோடு (lucifer)" சேர்த்து இவர்கள் முழங்காலையும் முடக்குவார் but it will be too late. நான் அங்கு எழுதும் கருத்துக்களை இங்கே பதிக்கவும் நினைக்கிறேன் ஆனால் "keep up" பண்ண முடியவில்லை.//

இதைப் படித்ததும் சகோ.கோல்டா சொன்ன அதே ஆலோசனையை எனது மனச்சாட்சியும் என்னிடம் சொன்னது.

//To anbu57:

தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.//


இவ்வாறு சொல்லும் என் மனச்சாட்சிக்கு நான் சொல்லும் பதில்:

//நன்றி என் மனச்சாட்சியே.  நண்பர் ஜாண் அவர்கள் சத்தியத்தை தற்போது அறியாவிடினும், தேவனுக்கு சித்தமானால் ஒரு நாளில் சத்தியத்தை அறிவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரை வேதப்புரட்டராக என்னால் கருத இயலவில்லை. கண்கள் மறைக்கப்பட்ட ஒரு குருடராகவே நான் கருதுகிறேன். தேவனுக்குச் சித்தமான நாளில் அவரது கண்களும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நம்பிக்கை இருக்குமட்டும் உன் மகனை சிட்சை செய் என வசனம் கூறுகிறது (நீதி. 19:18). எனவே கலகக்காரராகிய அவர் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தேவனுடைய வார்த்தையை அவருக்கு நான் சொல்லவே செய்வேன் (எசேக்கியேல் 2:7).

இப்போது இவர் இயேசுவைத் தள்ளி அவரது வார்த்தைகளாகிய சத்தியத்தை ஏற்காவிட்டால், கடைசி நாளில் இயேசுவின் வசனமாகிய சத்தியமே இவரை நியாயந்தீக்கும் (யோவான் 12:48). ஆனால் it will be too late at that time.

இவர் இயேசுவைத் தள்ளினதற்கு ஆதாரமானதும் இவர் ஏற்காதிருக்குமானதுமான இயேசுவின் வசனங்களில் மிக முக்கியமான ஒன்று:

மத்தேயு 4:10 உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே.//


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

இது உங்களை சங்கடபடுத்தி இருந்தாலும் என்னுடைய "Conviction" அதுவே. மாற்றி சொன்னால் நான் பொய்யானகி விடுவேன். இயேசு தொழத்க்கவர் இல்லை என்றால் அவரை தேவன் என்று யூதர்கள் சொன்ன போதும், அவருடைய பாதத்தில் ஜனங்கள் வந்து விழுந்த போதும் (பேதுரு  , பவுலையும் , பர்னபாவையும் போல) நான் தேவனல்ல என்று சொல்லாத இயேசு பொய்யராகிவிடுவார். நான் நேசிக்கும் என் அன்பு தேவன் இயேசு பொய் சொல்ல நம்மை போல ஒரு மனிதனல்ல ஆகையால் பொய் சொல்லுவது நீங்கள் தான் என்று தீர்க்கவேண்டியிருகிறது. Sorry!

//மத்தேயு 4:10 உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே.//

ஆனால் ஒரே கர்த்தராகிய இயேசுவை ஆராதனை செய்ய நிங்கள் மறுக்கிறீர்களே?

I கொரிந்தியர் 8:6 "...இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு"

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இயேசு தொழத்தக்கவரா, ஆராதனைக்குரியவரா என்பதைப் பற்றி நாம் விவாதித்துக்கொண்டிருக்கும்போதே சில்சாமின் தளத்தில் பின்வருமாறு எழுதிவிட்டீர்கள்.
//
கடைசி நாளில் தேவன் அவர்களுடைய "தேவனோடு (lucifer)" சேர்த்து இவர்கள் முழங்காலையும் முடக்குவார்.//

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீங்கள் அமர்ந்திருக்கும் இடம் (யௌவன ஜனம்) அப்படி. எனது தளத்தில் ஓரளவு நிதானமாக எழுதின நீங்கள், யௌவன ஜனத்தில் நிதானமிழந்து, முடிவைச் சொல்லிவிட்டீர்கள்; அதுவும் “எங்களுடைய தேவன் lucifer” என்ற தீர்ப்போடு.

அங்கு என்னதான் எழுதினாலும், எனது தளத்தில் நாகரீகமாக விவாதம் செய்கிறீர்களே என்ற எண்ணத்தில் நானும் அதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தற்போது எனது தளத்திலும் பின்வருமாறு எழுதியுள்ளீர்கள்.


//இயேசு தொழத்தக்கவர் இல்லை என்றால் அவரை தேவன் என்று யூதர்கள் சொன்ன போதும், அவருடைய பாதத்தில் ஜனங்கள் வந்து விழுந்த போதும் (பேதுரு  , பவுலையும் , பர்னபாவையும் போல) நான் தேவனல்ல என்று சொல்லாத இயேசு பொய்யராகிவிடுவார். நான் நேசிக்கும் என் அன்பு தேவன் இயேசு பொய் சொல்ல நம்மை போல ஒரு மனிதனல்ல ஆகையால் பொய் சொல்லுவது நீங்கள் தான் என்று தீர்க்கவேண்டியிருக்கிறது.//

இப்படி ஒரு தீர்ப்பை நீங்கள் சொன்னபின், உங்களுடனான விவாதம் அர்த்தமற்றது. நீங்கள் யௌவன ஜனத்தில் சொன்ன பிரகாரம், எனது தளத்தில் வருபவர்கள் உங்கள் சத்தியத்தை(?) அறிவதுதான் உங்கள் நோக்கம் எனில், உங்கள் சத்தியங்கள் அனைத்தையும் ஒரு திரியில் எந்த எதிர்ப்புமின்றி தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்.

உங்களைப் போன்ற குருடர் காட்டுகிற வழியின் பின்னே இத்தள அன்பர்கள் யாராவது செல்லவிரும்பினால், அதை நான் தடுக்கப்போவதில்லை. ஒரு குருடன் காட்டுகிற வழியை அவர்கள் நம்புவதை தேவனே அனுமதித்திருக்கும்போது, அதைத் தடுக்க நான் யார்? எனவே உங்கள் சத்தியங்களை நீங்கள் இங்கு பதிவது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.

மற்றபடி எங்கள் மீது தீர்ப்பைச் சொன்ன உங்களோடு இனி விவாதிக்க நான் தயாரில்லை. உங்கள் மீதுள்ள என் நம்பிக்கையை (அதாவது நீதிமொழிகள் 19:18 சொல்கிற நம்பிக்கையை) நான் இழந்துவிட்டேன்.

ஒரு நாலாந்தர அநாகரீகமான உலகத்தார் போல, உங்கள் அபிமான தளத்தின் நிர்வாகி சில்சாம் கொட்டுகிற (deleted) அநாகரீகத்தையெல்லாம், மெய்யான சத்தியத்தை (?) அறிந்த நீங்கள் எப்படி சகிக்கிறீர்களோ தெரியவில்லை.

(deleted)


முதலில் இம்மாதிரி மதியீனருக்கு உங்கள் உபதேசத்தைச் சொல்லுங்கள்; அதன்பின், உங்கள் மதியீன தீர்ப்பின்படி lucifer-ஐ தேவனாகக் கொண்டுள்ள எங்களுக்கு உங்கள் உபதேசத்தைச் சொல்லுங்கள்.

இனி உங்களோடு விவாதிக்க நான் விரும்பவில்லை. உங்களோடு விவாதம் செய்ய பெரியன்ஸோ அல்லது வேறு அன்பர்களோ முன்வந்தால், அவர்கள் உங்களோடு விவாதம் செய்வதை நான் தடை செய்யவில்லை.

-- Edited by anbu57 on Sunday 10th of April 2011 04:37:07 AM



-- Edited by anbu57 on Friday 15th of April 2011 05:00:28 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

"அதி" "அல்பா" போன்ற வார்த்தைகளின் அர்த்தங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். "ஆதிக்கு முன்பாக ஒரு நேரம்(???) இருந்தது அப்போது இயேசு உருவாக்கப்பட்டார் பின்பு அவர் உருவாக்கப்பட்ட எல்லாவற்றையும் உருவாக்கினார் என்கிற 'கதை' எப்படி உருவானது என்று தெரியவில்லை. "அல்பா" என்பது கிரேக்கத்தில் முதல் எழுத்து ஆனால் இவர்களை பொறுத்தவரை "அல்பா" வுக்கு
முன்னமே ஒரு எழுத்து கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவான் 1:3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.


ஆதியிலே வார்த்தை "இருந்தது" (In the Beginning the word WAS). நேரம், கருப்பொருள், சக்தி (Time, Matter, Energy) இவையெல்லாம் உருவாக்கப்பட்டவை. தேவன் நேரத்திற்கு வெளியே இருக்கிறார். வார்த்தையான இயேசு தேவனும் நேரத்திற்கு வெளியே இருப்பதால் தான் "In the beginning the Word WAS". இது வரை இதற்க்கு ஒரு  உருப்படியான பதிலும் இல்லை.

இயேசு "மகா தேவன்"

தீத்து 2:13 "நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது."

இயேசு நித்திய பிதா

ஏசாயா 9:6 அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு

இயேசு சர்வத்திற்கும்மேலான தேவன்

ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்

இவ்வளவு வசனங்கள் இருந்தாலும் 'வசனத்தின்'(???) படி செயல்படுகிற இவர்கள் இயேசுவை தொழமாட்டார்கள்.

யேகோவா தேவன் சொல்லுகிறார்:

ஏசாயா 46:5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?

இயேசு பிதாவுக்கு சமம் என்று கிழே உள்ள வசனத்தில் வசிக்கிறோம்.

பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

சமம் என்றால் என்ன? தேவனுக்கு சமமாக தேவனை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? இதுவரை பதில் இல்லை

தேவன்னுக்குள் "ஆள்தத்துவங்கள்" இல்லை ( I , You relationship)  என்றால், படைப்புக்கு முன்பு  அவருக்கு "அன்பு" என்றால் என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை. அன்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் 2 "Personality" ஆவது வேண்டும்.

யோவான் 17:24. பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால்...


//உங்களைப் போன்ற குருடர் காட்டுகிற வழியின் பின்னே இத்தள அன்பர்கள் யாராவது செல்லவிரும்பினால், அதை நான் தடுக்கப்போவதில்லை. ஒரு குருடன் காட்டுகிற வழியை அவர்கள் நம்புவதை தேவனே அனுமதித்திருக்கும்போது, அதைத் தடுக்க நான் யார்? எனவே உங்கள் சத்தியங்களை நீங்கள் இங்கு பதிவது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.....முதலில் இம்மாதிரி மதியீனருக்கு உங்கள் உபதேசத்தைச் சொல்லுங்கள்; அதன்பின், உங்கள் மதியீன தீர்ப்பின்படி lucifer-ஐ தேவனாகக் கொண்டுள்ள எங்களுக்கு உங்கள் உபதேசத்தைச் சொல்லுங்கள்.//

நீங்கள் என்னை குருடன் , மதியினன் என்று சொல்லுங்கள் கவலை இல்லை. ஏன் என்றால் என் இயேசு தேவனை ஆராதிக்காமல் திரிந்த நாட்களில் நான் அப்படிதான் இருந்தேன்

நான் அது போல எழுத ஒரே காரணம், நான் திரும்ப, திரும்ப கேட்டும் நீங்கள் இருவரும் மறந்தும் கூட அந்த 24 மூப்பர்களும் , மரியாளும், பேதுருவும் , கானானிய பெண்ணும்..இன்னும் பலரும் செய்தது போல "இயேசுவின் பாதத்தில்" நாங்கள் பணிவோம் என்று சொல்லவில்லை. இயேசுவின் பாதத்தில் விழக்கூடாது என்று சொல்லுகிற ஒரே "தேவன்"  இயேசு தேவனுடைய மகிமையை நீங்கள் காணக்கூடாத படி கண்களை குருடக்குகிற  இந்த பிரபஞ்சத்தின் தேவனாகிய சாத்தான் தான். இந்த பொய்யை சத்தியமாக போதிக்கிறவன் பொய்யும் பொய்க்கு பிதாவுமான பிசாசு தான்.


மரியாள் இயேசு சிலுவை சுமக்கும் முன்னமே அவருடைய பாதத்தை கண்ணிரால் கழுவி , ஸ்திரிகளின் மகிமையாகிய தன் தலை முடியால் துடைத்தாள் என்றால், என் அன்பு தேவன், மா பாவி எனக்காக சிலுவை சுமந்தபின்பு அவருடைய பாதத்தில் விழக்கூடாது என்று சொல்லுகிற "எந்த தேவனும்" எனக்கு தேவை இல்லை.

லூக்கா 7:38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

இப்போது விரும்பி நீங்கள் உங்கள் முழங்கால்களை முடக்காவிட்டால் நீங்கள் ஆராதிக்காத என் சத்திய பிதா தாமே முழங்கால்களை  இயேசுவின் பாதத்தில் முடக்குவார்.


இதுதான் உங்களுடைய தளத்தில் என்னுடைய கடைசி பதிவு.




__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

john wrote:
//இதுதான் உங்களுடைய தளத்தில் என்னுடைய கடைசி பதிவு.//

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் (...) க்கு ஆராதனை செய்துவருகிற (மத்தேயு 15:7-9) மாயக்காரனும் வேதபாரக பரிசேயனுமாகிய ஜாணை இத்தளத்திலிருந்து ஒதுங்கச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

என் மனச்சாட்சி: பிரதர் அன்பு57, இந்த மதியீனர், அறிவீனர், பேதையர், மடையர் போன்ற வார்த்தைகளை நீ பயன்படுத்தாமலிருக்கலாமே! தன் சகோதரனை “மூடன்” என்பவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான் என இயேசு சொல்றார்ல? இயேசுவின் போதனைகளைப் போதிக்கிற நீ, மூடன் என்ற வார்த்தைக்கு சமமான வார்த்தைகளைச் சொல்லலாமா?

அன்பு57: பிரதர் மனச்சாட்சி, மத்தவங்க மடத்தனமா, sorry இது ரொம்ப மோசமான வார்த்தையோ, அப்போ மதியீனமானு சொல்லவா, sorry அதுவும் மோசமானதுதான், அப்போ அறிவீனமானு சொல்லட்டா, வேண்டாம் அதுவும் மோசமானதுதான்னு சொல்றீயா, அப்போ பேதையர்னு சொல்லவா, வேண்டாம் அதுகூட நல்லாலேங்கறீயா, அப்போ அறியாமையிலிருப்போர்னு சொல்லவா?

மனச்சாட்சி: ஆமா பிரதர், அப்படியே சொல்லு. இதுதான் வம்பில்லாத வார்த்தை. அறியாமையிலிருப்போர் -ங்கிற வார்த்தையும் மடையர்-ங்கிற வார்த்தையும் சமமான வார்த்தைதான் உனக்கும் எனக்கும் சில விபரமறிஞ்சவங்களுக்கு மட்டுந்தான் தெரியும். அறியாமையிலிருக்கிற மத்தவங்களுக்குத் தெரியாது. எனவே, “அறியாமையிலிருப்போர்”னே சொல்லிக்கோ பிரதர்.

அன்பு57: சரி பிரதர்! நான் என்ன சொல்ல வர்றேன்னா, மத்தவங்க அறியாமையில் கேட்கிற மாதிரி நீயும் கேட்கக் கூடாதுனுதான். சகோதரனை மூடனே-னு சொல்றவன் எரிநரகரத்துக்கு ஏதுவாயிருப்பான்னு இயேசு சொல்றதை நான் மறுக்கலை. ஆனா இயேசு யாரைக் குறித்து அதில் சொல்றார்னு கொஞ்சம் கவனமா படி பிரதர்.

மனச்சாட்சி: ஆரம்பிச்சிட்டீயா? இப்படி வசனங்களைப் போட்டு வியாக்கியானம் செய்றதைத்தானே “வேதப்புரட்டுன்னு” சில புத்திசாலிகள் சொறாங்க. ஆனா, நீ அதை விடமாட்டேன்கறீயே. சரி, சரி நீ என்னதான் சொல்ல வர்றே? சொல்லு.

அன்பு57: பிரதர், எந்த வசனமானாலும், அதை வியாக்கியானம் பண்ணித்தான் புரிஞ்சிக்கணும். இல்லாட்டி போனா, வேதாகமம் முழுசும் முரண்பாடான கருத்தாகத்தான் தோற்றமளிக்கும். இப்போ, மூடனே-னு சொல்றதைப் பத்தி இயேசு சொன்னதையே எடுத்துக்குவோமே. இயேசு சொன்னது ஒருபுறமிருக்க, 1 கொரிந்தியர் 15:36-ல் பவுல் சிலரைப் பாத்து புத்தியீனனே-ங்கிறார். அப்போ மூடனே-னு சொல்லக்கூடாது, புத்தியீனனே-னு சொல்லலாம்னு அர்த்தமா?

மனச்சாட்சி: அதெப்படி பிரதர்? மூடன், புத்தியீனன் எல்லாமே ஏறக்குறைய ஒரே அர்த்தம்தானே? நீ கூட மூடனே-னு ஒரு இடத்திலயும் சொல்லலியே. அதனால, மதியீனன், அறிவீனன்னு சொன்னதையெல்லாம் ஏத்துக்க முடியுமா?

அன்பு57: நிச்சயமா முடியாது பிரதர். மூடன்-னு சொல்றதும் ஒண்ணுதான், புத்தியீனன்னு சொல்றதும் ஒண்ணுதான். இப்போ சொல்லு, இயேசு சொன்னதுக்கு எதிராத்தானே பவுல் சொல்றார்? அப்போ வேதாகமம் முரணானதுன்னு சொல்லலாமா?

மனச்சாட்சி: முடியாது பிரதர். சரி, இப்போ இயேசு சொன்ன வசனத்துக்கு உன் விளக்கத்தைச் சொல்லு.

அன்பு57: பிரதர், சகோதரனை மூடன்னு சொல்றவன் எரி நரகத்துக்கு ஏதுவாயிருப்பான்னு சொன்ன இயேசு அடுத்த சில வசனங்களில் என்ன சொல்றார்னா: ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். - அப்படீன்னு சொல்றார்.

இவ்வசனங்களை கொஞ்சம் நிதானமா படிச்சுப்பார். நியாயாபதியினிடத்தில் போற அளவுக்கு சகோதரனிடம் குறை இருந்ததுதானா என்ன அர்த்தம்? அவங்க 2 பேருக்கும் தனிப்பட்ட முறைல ஏதோ தகறாறு இருக்குன்னுதானே அர்த்தம்?

மனச்சாட்சி: ஆமா, பிரதர். அதனாலதான் சமரசம் பண்ணிட்டு காணிக்கை வைன்னு இயேசு சொல்றார்.

அன்பு57: இப்போ புரியுதா? சகோதரனை மூடன்னு அவன் ஏன் சொல்லியிருப்பான்னு?

மனச்சாட்சி: ஆமா பிரதர். தனிப்பட்ட தகறாறுல கோபப்பட்டு, அக்கோபத்தின் விளைவாக, சகோதரனின் உணர்வைத் தூண்டி இழிவுபடுத்தணுங்கிற நோக்கத்தில அவனை மூடனேனு சொல்றதைத்தான் இயேசு கண்டிக்கிறார். அதாவது அவன் மூடனேனு சொல்றது, சகோதரனின் மூடத்தனத்தைச் சொல்லி அவனை உணரவைக்கிறதுக்காக இல்லாம, தனிப்பட்ட தகறாறுல சகோதரன் மீது வந்த கோபத்தை தணிக்கிறதுக்கும், சகோதரனின் உணர்வைத் தூண்டுறதுக்குமா இருக்குது.

அன்பு57: இப்போ சொல்லு பிரதர். நான் என்னுடைய தனிப்பட்ட தகறாறுலயா யாரையாவது மதியீனன், அறிவீனன்னு சொல்றேன்? ஒண்ணு, வசனத்தைச் சொல்லவிடாம, எதுக்கெடுத்தாலும் ஏடாகூடமா எதையாவது சொல்லி நான் செய்கிற தேவப்பணியை தடை செய்றவங்களை அப்படிச் சொல்றேன்; இல்லே, நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்காம அறிவீனமா வியாக்கியானம் பண்ணி, எனது பணியை தடைசெய்றவங்களை அப்படிச் சொல்றேன். இப்படிச் சொல்லி அவங்களது அறிவீனத்தை உணத்துறதும் என் தேவப்பணியின் ஒரு பகுதிதான்.

மத்தேயு 7:26-ல புத்தியில்லாத மனுஷன்னு ஒருத்தனை இயேசு சொல்றாரே, அந்த புத்தியில்லாதவனுக்கும் மத்தேயு 5:22- இயேசு சொல்ற மூடனுக்கும் கிரேக்க பாஷையில் moros -ங்கிற ஒரே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கு.

மத்தேயு 7:26-ன்படியான புத்தியில்லாத மனிதரிடம், அவர்களின் புத்தியீனத்தைச் சொல்லி உணரவைப்பது என் தேவப்பணியில் ஒன்றுதானே? அதனால்தான் அப்படியெல்லாம் கடின வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். என் ஜனங்கள் அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள், கெட்டுப்போகிறார்கள் என வேதவசனம் கூறுகிறது. எனவே ஜனங்களின் அறிவில்லாமையை எடுத்துக்காட்டி போதிப்பது என் கடமை. அவர்களின் அறிவில்லாமையில் சில, எனது தேவப்பணிக்கு இடறலாக சில சமயம் இருப்பதால், அவற்றையும் நான் சொல்லத்தான் வேண்டியதுள்ளது. அப்படிச் சொல்லும்போது, நான் தனிப்பட்ட காரணத்திற்காக அவர்களை அறிவீனன் எனச் சொல்வதாக மற்றவர்களுக்குக் காணப்படும். ஆனால் உண்மை அதுவல்ல.


மனச்சாட்சி: நீ சொல்றதும் சரிதான் பிரதர். ஆனா மத்தவங்களுக்கு இது புரியலியே. அது சரி, அவங்கதான் அறியாமையில் இருக்காங்களே, அவங்களுக்கு எப்படி புரியும்? எது எப்படியோ போகட்டும் பிரதர். உங்கிட்ட ரகசியமா சொல்றேன். நீ இந்த மதியீனன் அறிவீனன் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாம, அறியாமையிலிருப்பவன் அப்படினு பாலிஷா சொல்லிக்கோயேன். 

அன்பு57: அதாவது மறைமுகமா மதியீனன்னு சொல்லு, நேரடியா சொல்லாதேங்கிற. சரி, சரி நீ சொல்றதையும் கொஞ்சம் consider பண்ணிப்பாக்கறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

மனச்சாட்சி: என்ன பிரதர், உனது பயனர் பெயரை வைத்து உன் வயது கடந்த வருடம் 57 என அறியாமையாகக் கருதி, தற்போது 2011 வந்துவிட்டதால் உன் வயது 58 ஆகிவிட்டதாகவும், இனி நீ அன்பு58 என்றுதான் அழைக்கப்படவேண்டும் என்பதாகவும் ஒரு புத்திசாலி நக்கலான ஒரு கூற்றைச் சொல்லியுள்ளாரே! நீயும் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாயே! ஒன்று உன் பெயரை அன்பு58 என மாற்றிக்கொள், அல்லது நீயும் ஒரு அறிவில்லாதவன் என ஒத்துக்கொள்.

அன்பு57: Sorry brother, கோபம் வேண்டாம்; யாரோ ஒருவர்தான் அறியாமையில் பிதற்றுகிறார் என்றால் நீயுமா? உனக்குத் தெரியாதா என் பெயருக்கான காரணம்?

மனச்சாட்சி: தெரியும் பிரதர், ஆனா இப்போ நீ மத்தவங்க பார்வையில் அறியாமையுள்ளவனாக அல்லவா இருக்கிறாய்? அதனால்தான் பொறுக்கமுடியாமல் உன்னைத் தூண்டினேன்.

அன்பு57: சரி பிரதர், உனக்குத் தெரிந்த ரகசியத்தை எல்லோருக்கும் சொல்லி விடுகிறேன். பாவம், பிறரது பயனர் பெயரையெல்லாம் ஆராய்ச்சி செய்து மண்டையை உடைத்துக்கொள்பவர்களுக்கு எனது பயனர் பெயரால் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது. எனவே எனது பயனர் பெயரின் ரகசியத்தை போட்டு உடைத்துவிடுகிறேன்.

மனச்சாட்சி: அப்படி வா வழிக்கு பிரதர்.

அன்பு57: பிரதர், எந்த மடையனாவது Sorry sorry, எந்த அறியாமைக்காரனாவது தனது நிகழ்கால வயதை பயனர் பெயரில் வைப்பானா? அதுதான் வருடாவருடம் மாறிக்கொண்டிருக்குமே என்பதுகூட தெரியாத அவனை எப்படிப்பட்ட அறியாமைக்காரனாக சொல்லலாம்? எனக்கு வார்த்தையே இல்லை. சரி, அது இப்போது பிரச்சனையில்லை. என் பயனர் பெயருக்குக் காரணம் வேண்டும் அவ்வளவுதானே?

நான் பிறந்த வருடம் 1957. இதன் அடிப்படையில்தான் எனது பயனர் பெயரில் 57 என்ற எண்ணைச் சேர்த்துள்ளேன். இது தெரியாமல் எதையோ கற்பனை செய்து, ..... மகா புத்திசாலித்தனமாக யோசிப்பதுபோல யோசித்து, மகா ..... கற்பனை செய்து, வேண்டாம் வேண்டாம் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை.

இதோடு இதாக “அன்பு” என்பதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். பிறகு இதற்கும் எதையாவது கற்பனை செய்து, ஒண்ணடக்க ஒண்ணைச் சொல்லி எதற்குக் குழப்பம்?

தேவனின் பிரதான கற்பனை “அன்பு” கூர் என்பதே. எனவே நான் ஏதோ மிகுந்த அன்புள்ளவன் எனக் காட்டிக்கொள்ளும்படியாக “அன்பு” என்ற பெயரை வைத்துள்ளேன் எனக் கருதவேண்டாம். தேவன் என்னை “அன்பு57” எனச் சாட்சி பகரும்படியாக நான் நடந்துகாட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும், அவ்வார்த்தை எப்போதும் எனக்கு ஓர் உறுத்தலாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும்தான் அப்பெயரை வைத்துள்ளேன்.

சரி, விரைவில் இந்த விளக்கத்திற்கும் ஒரு நக்கலை எதிர்பார்க்காலம் என நினைக்கிறேன், என்ன பிரதர் சரிதானே?


மனச்சாட்சி: பிரதர், உங்க பிரச்சனையில் என்னை ஏம்பா இழுக்கிறாய்? நான் எஸ்கேப்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard