இந்நாட்களில் யார் யாரைப் பரிசேயன் எனச் சொல்வதென்ற ஒரு வரையறை இல்லாமல் போய்விட்டது. தான் நம்புகிற கருத்துக்கு எதிரான ஒருவர் கருத்தைச் சொன்னால், உடனே அவரைப் “பரிசேயன்” என தீர்த்துவிடும் போங்குதான் அனேகரிடம் காணப்படுகிறது.
சமீபத்தில் யௌவன ஜனம் தளத்தில், “என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்” என்ற தலைப்பில் ஒரு திரி துவக்கப்பட்டு பதிவுகள் தரப்படுகின்றன. இயேசுவைத் தொழ மறுப்பவர்களை பரிசேயர் எனச் சொல்லிக்கொள்ள அவர்களுக்கு தாராளமாக உரிமை உள்ளது. தன் பெற்றோரைத் தொழமறுப்பவன் பரிசேயன் எனச் சொல்லிக்கொள்ளக்கூட அவர்களுக்கு உரிமை உள்ளது. கேட்பதற்கு ஆள் இருக்கும்போது, கேப்பையில் நெய் வடிகிறது என தாராளமாக அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும்.
அப்படியே அவர்களின் சுயமூளைப்படி, யாரையும் பரிசேயன் என்றும் சொல்லிவிட்டுப் போகட்டும்; ஆனால் வேதாகமம் என்ன சொல்கிறது?
உண்மையில் இயேசுவை தொழ மறுப்பவர்கள் தான் பரிசேயரா, அல்லது வேறு யார்தான் பரிசேயர், வேதாகமம் சொல்வதென்ன?
(நம் சுய மூளையின்படியில்லாமல்) வேதவசனத்தின்படி சற்று ஆய்வு செய்வோம்.
மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீதி விஷயத்தில் பரிசேயரின் நீதியை இயேசு மட்டுப்படுத்தவில்லை. அவர்களின் நீதியைவிட அதிக நீதிதான் வேண்டுமென சொன்னாரேயொழிய, அவர்களின் நீதியை இயேசு குறைகூறவில்லை.
(கிரியை இல்லாமல் இரட்சிப்பு இல்லை எனச் சொல்வதும் பரிசேயத்தனமே எனக் கூறுபவர்கள், பரிசேயரின் நீதி எனும் கிரியையைவிட அதிக நீதியாகிய கிரியை இல்லாவிடில், பரலோகராஜ்யம் பிரவேசிக்க மாட்டீர்கள் என இயேசு சொன்னதை கவனிப்பார்களாக. ஒருவேளை பரலோகராஜ்யம் பிரவேசிப்பது வேறு, இரட்சிப்பு என்பது வேறு என இந்த புத்திசாலிகள் கூறுவார்களோ என்னவோ?)
பரிசேயர் அடிக்கடி உபவாசம் பண்ணுகிறவர்கள் என இவ்வசனத்திலிருந்து அறிகிறோம். அந்த உபவாசம் எனும் கிரியையால் “பரிசேயர்கள்” தங்களை மேன்மை பாராட்டிக் கொள்வதுமுண்டு. இதை ஓர் உதாரணத்தில் இயேசுவும் கூறியுள்ளார் (லூக்கா 18:10-12).
பரிசேயரின் நீதி எனும் கிரியையை ஆதரித்த இயேசு, உபவாசம் எனும் கிரியையை பெரிதுபடுத்தவுமில்லை; அதை மட்டுப்படுத்தவுமில்லை.
மேலும், பரிசேயரைப் போல் தமது சீஷர்களும் உபவாசிக்கத்தான் வேண்டுமென்றோ, அல்லது உபவாசித்தால்தான் பரலோக ராஜ்யம் என்றோ கூறவில்லை. மாறாக, மணவாளன் எடுபடும்போது, தமது சீஷர்கள் துயரப்படுகையில் உபவாசிப்பார்கள் என்று சொல்லி அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மணவாளனாகிய இயேசு, தமது சீஷரை விட்டு எடுபட்ட நாட்கள் 3 நாட்கள் மட்டுமே. அப்போது அவரது சீஷர்கள் உபவாசமிருந்திருப்பார்கள். இயேசு உயிர்த்தெழுந்தபின் அவர்கள் மகா சந்தோஷமடைந்ததாக மத்தேயு 28:8 கூறுகிறது. அதன்பின், “இதோ சகல நாட்களிலும் உங்களோடிருக்கிறேன்” என இயேசு வாக்கருளவும் செய்தார். எனவே அதன்பின் அவர்கள் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்கள். எனவே அதன்பின் அவர்கள் உபவாசம் இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. ஆயினும் அவரவர் விருப்பத்தின்படி உபவாசமிருப்பதை வேதாகமம் தடைசெய்யவில்லை.
ஆனால் இன்று பலரும், அன்றைய பரிசேயரைப்போல உபவாசத்தை ஒரு நியமனமாகக் கருதி, உபவாசத்தை ஆசரித்து, உபவாசம் இராதவர்களை அற்பமாகவும் கருதுகின்றனர். பெரும்பாலும் திரித்துவவாதிகள்தான் வியாபாரச் செழிப்புக்கு உபவாசம், கல்வித் தேர்வு வெற்றிக்கு உபவாசம் என உலகத்துக்குக் காரியங்களுக்காக உபவாசமிருந்து, தங்கள் பரிசேயத்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.
உபவாசமிருப்பது தவறல்ல, ஆனால் உபவாசத்தை ஒரு நியமனமாக வலியுறுத்தி, உபவாசம் இராதவர்களை அற்பமாகவும் தங்களை மேன்மையாகவும் கருதுவது ஒரு பரிசேயத்தனமே.
லூக்கா 18:9-12 தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
மத்தேயு 9:11 பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
இன்றைய திரித்துவவாதிகளுக்கு ஒரு அபார நம்பிக்கை. இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரைத் தொழுவதனால் தாங்கள் அனைவரும் நீதிமான்களென்றும், இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் மாபாவிகளென்றும் நம்புவதே அந்நம்பிக்கையாகும்.
அது மட்டுமல்ல, வெளிப்படையான ஒரு பாவமான விபச்சாரத்தை செய்தவர்களை மிகமிக மட்டமாகக் கருதுவதும் அவர்களுக்கு வாடிக்கையாகும். இவர்கள் தங்கள் இருதயத்தில் செய்கிற விபச்சாரத்தையெல்லாம் சற்றும் நினைத்துப்பாராமல், சரீரத்தில் விபச்சாரம் செய்தவர்களை மிக மட்டமாகக் கருதி, அவர்களை தூஷிக்கவும் செய்வார்கள்.
விபச்சாரர்களை மட்டுமின்றி விபச்சாரரின் சந்ததிகளையும் ஏளனமாக தூஷிப்பார்கள். கேட்டால், இயேசுகூட “பொல்லாத விபச்சார சந்ததியினர்” என்று சொல்லியுள்ளாரே எனச் சொல்லி தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள். இயேசு சொன்ன “விபச்சாரம்” எது என்பதையெல்லாம் சற்றும் சிந்தியாமல், விபச்சாரரையும் அவர்களின் சந்ததியையும் ஏளனம்செய்வது சில திரித்துவவாதிகளின் பொழுதுபோக்காகும்.
இப்படியெல்லாம் செய்வது பரிசேயத்தனமே என்பதை அவர்கள் சற்றும் உணர்வதில்லை. மாறாக, “இயேசுவைத் தொழாதிருப்பதுதான் பரிசேயத்தனம்” என்று தாங்களாகவே ஒரு விதியை வகுத்துக்கொண்டு, இயேசுவைத் தொழுகிற தங்களைக் குறித்து மேன்மைபாராட்டுவார்கள்.
இவர்கள் வேதத்தில் இல்லாததை பேசியும், போதித்தும், திரித்துவம் போன்ற பிற மத போதனைகளால் ஈர்கப்பட்டு அதை வேதத்தில் பொருத்தி மகிழ்பவர்கள்!! தான் தான் பரிசேயன் என்பதை அறியாத இவர்கள் இருளில் இருப்பவர்கள்!! இயேசு தொழத்தக்கவர் என்றால் பிதா யார் என்று இவர்களிடம் கேட்டால், கிறிஸ்து தான் பிதா, அல்லது பிதாவிற்குள் தான் கிறிஸ்து என்று தங்களுக்கே குழப்பமான ஒரு விஷயத்தை விளக்க தண்ணீர், ஐஸ்கட்டி, நீராவி, மின்சாரம், கம்ப்யூட்டர் போன்றவற்றை பயன்ப்படுத்தும் கூட்டம்!! வேதத்தின் வசனத்தை காட்டிலும், சிலர் எழுதிய புத்தகங்களும், சிலர் வரைந்த வரைப்படங்களும் இவர்களுக்கு ஆதாரம் (Reference and citation!!!!) ஆகிறது!!
அதையும் தாண்டி இவர்களின் நாகரீகமான வார்த்தைகள் இவர்கள் எப்படி பட்ட கனிகளை தருபவர்கள் என்பதையும் கான்பிக்கிறது!! இயேசு கிறிஸ்து யாரை விபச்சார சந்தத்தி என்று சொன்னார் என்று கூட தெரியாமல் இருக்கும் ஒரு கூட்டம் இந்த திரித்துவ கூட்டம்!! அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படாத ஒரு இரகசியம் இவர்களுக்கு வெளிப்பட்டு இருக்கிறதாம்!!
இவர்கள் பொய்யை விசுவசித்து நடப்பதினால் கொடிய வஞ்சகத்தை இவர்களுக்கு தேவனே அனுமதித்திருக்கிறார்!! பிதாவை மறுதலிக்கும் இவர்களை குறித்த ஒரு வசனம் இருக்கிறது,
மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
பரிசுத்த ஆவி என்றதும் இவர்களுக்கு தோன்றுவது இவர்கள் நம்பும் திரித்துவத்தின் மூன்றாம் தேவன் "பரிசுத்த ஆவியான தேவன்" என்று எனக்கு தெரியும்!! ஆனாலும் வசனத்தை சொல்லியே ஆக வேண்டுமே!! இது ஒரு எச்சரிப்பு வசனமே!! மனுஷக்குமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் கூட அது அவனுக்கு மன்னிக்கப்படுமாம், ஏனென்றால் கிறிஸ்து அனைவருக்காகவும் மரித்தாரே!! ஆனால் பரிசுத்த் ஆவி என்றால் பிதாவாகிய தேவனையே குறிக்கும் வார்த்தை இது!! ஏனென்றால் தேவன் ஆவியாக இருக்கிறார் என்கிறது வசனம்!! தேவன் பரிசுத்தமாக இருக்கிறார் என்கிறது வசனம்!! பிதாவிற்கு விரோதமாக பேசப்படும் தூஷனங்கள் இம்மையிலும் மறுமையிலும் யாருக்கும் மன்னிக்கப்படுவதில்லை என்கிற ஒரு எச்சரிக்கையே!!
பிதாவை மகிமைப்படுத்த சொன்னதே கிறிஸ்து இயேசு தான், அதை கூட இந்த திரித்துவத்தின் கூட்டத்தார் புரிந்துக்கொள்ளாது இருக்கிறார்களே!! வசனம் இப்படி சொல்லியிருந்தாலும் இவர்கள் சொல்லுவது, Now or never!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17