யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(இயேசுவை அனுப்பியது யார்? இக்கேள்விக்கு பின்வரும் வசனத்தில் இயேசுவே பதில் தருகிறார்)
யோவான் 17:1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: 2 பிதாவே, வேளை வந்தது, ... 3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
இயேசுவை தேவனென்று அல்ல, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என விசுவாசிப்பவனுக்கே நித்திய ஜீவன்.
3. தேவனிடமும் இயேசுவிடமும் விசுவாசமாயிருத்தல்
யோவான் 14:1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
இவரே அவர், அவரே இவர் என்றல்ல; இவரிடமும் அவரிடமும் தனித்தனியே விசுவாசம் வைக்கும்படி இயேசு கூறுகிறார்.
4. இயேசு தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தவர் என விசுவாசித்தல்
யோவான் 16:27 நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.
தேவனே இயேசுவாக வந்தார் என விசுவாசிப்பது விசுவாசமல்ல; பிதாவாகிய தேவனிடமிருந்து புறப்பட்டு வந்தவரே இயேசு என விசுவாசிப்பதுதான் மெய்யான விசுவாசம். அப்படி விசுவாசிப்பவர்களையே பிதா சிநேகிப்பார். மற்றபடி, பிதாவாகிய தேவனே இயேசுவாக வந்தார் என விசுவாசிப்பவர்களை பிதா சிநேகிக்க மாட்டார்.
5. மனுஷன் நியாயப்பிரமாண கிரியைகளால் அல்ல, விசுவாசத்தாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்பதை விசுவாசித்தல்
ரோமர் 3:28 மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.
விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுபவன் அதிலேயே திருப்தியுடன் இருந்துவிட்டால், அவனது விசுவாசம் செத்துப்போய்விடும். அவனது விசுவாசம் உயிருள்ளதாக இருக்கவேண்டுமெனில், அவனிடம் கிரியை வேண்டும். கிரியை இருந்தால்தான் அவன் நித்தியஜீவனைப் பெறுவான்.
7. உலகத் தேவைகளுக்காக கவலைப்படாமல் தேவனையே விசுவாசித்தல்
மத்தேயு 6:30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். 32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். 34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
தேர்வு எழுதும் பிள்ளைகளுக்காக உபவாசமிருந்து ஜெபித்தல் போன்றதைச் செய்பவர்கள், விசுவாசிகளிடையே அற்ப விசுவாசத்தை வளர்க்கின்றனர்.
8. இயேசு ஒரு வார்த்தை சொன்னாலே பிணிகள் நீங்கி அற்புத சுகம் கிடைக்கும் என விசுவாசித்தல்
மத்தேயு 8:7 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். 8 நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். ... என்றான். 10 இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஊழியர்களின் அற்புத(?) கூட்டங்களுக்குச் சென்று ஊழியர்கள் மூலம் ஜெபித்தால்தான் அற்புத சுகம் கிடைக்கும் எனும் விதமான அற்ப விசுவாசத்தை இன்றைய ஊழியர்கள் வளர்த்து வருகின்றனர். ஆனால் தேவனை மெய்யாகவே விசுவாசிப்பவன், எந்த ஊழியரையும் தேடிச் செல்லவேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே, இயேசுவிடம் “ஒரு வார்த்தை சொன்னால் போதும்” என ஜெபித்தால் போதும்.
9. இயற்கை சீற்றங்களைப் பார்த்து அஞ்சாதிருப்பதும் கிறிஸ்தவ விசுவாசமே
மத்தேயு 8:26 அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
கிறிஸ்தவ விசுவாசத்தில் பிரதானமானவைகளும் சில துளிகளுமானவைகளை தந்துள்ளேன். இன்னும் அதிகமானவற்றை வேதாகமத்தைப் படித்து தெரிந்துகொள்வோம்.