இயேசு கிருஸ்து தொழத்தக்கவரா? என்னும் கேள்வியானது சகோதரர் சில்சாம் அவர்களால் எழுப்பப்பட்டு எல்லா கிருஸ்துவ தளங்களும் அதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளாயினர். அது மட்டுமல்லாது அதை தொடர்ந்து வந்த சண்டைகளும், சச்சரவுகளும் எல்லா தளத்தையும் பாதித்தது.
இந்த கேள்விக்கு சரியான பதிலை சொல்வதற்காக வேதத்தை ஆராய்ந்த எனக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவைகளின் விளைவே இந்த கட்டுரை.
தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செய்வது எப்படி என்று பார்த்தால், ஆராதனை செய்தல், தலை குனிந்து பணிந்து கொள்ளுதல், முகம் குப்புற விழுந்து பணிந்து கொள்ளுதல், தொழுது கொள்ளுதல் என வேறு, வேறு வார்த்தைகள் சொல்லப்படுகின்றன.
இவைகள் வேறு வேறு வார்த்தைகளாக இருப்பதிலிருந்து இவைகள் ஒரே அர்த்தம் உடையனவை இல்லை என தெரிந்து கொள்ளலாம். இவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
முதலில் ஆராதனை செய்தல் என்றால் என்ன என்று பார்ப்போம்.
கர்த்தராகிய தேவன் பரலோகத்தில் உள்ள ஒரு கூட்டத்தினரால் ஆராதனை செய்யப்படுகிறார்.
வட புறத்திலுள்ள பர்வதத்தில் கர்த்தர் வீற்றிருக்க அவரை சுற்றி அனேக தேவ சேனைகளால் அவர் ஆராதனை செய்யப்படுகிறார்.
ஏசாயா 14.13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்று (அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி சொன்னான்).
பரலோகத்தில் நடக்கும் ஆராதனையின் மாதிரியின்படி, ஆசரிப்புக் கூடாரத்திலும், சாலமோனின் தேவ ஆலயத்திலும் ஆராதனை நடைபெற்றது.
எபிரேயர் 8.5. இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
ஆராதனை என்பது கிரியை சார்ந்த ஒரு விஷயம். அதாவது தூப கலசத்தை கொண்டு படைப்பது போன்ற பல கிரியைகள் அடங்கியது. இந்த ஆராதனையை அதற்கென தகுதி வாய்ந்த, பரிசுத்தம் உள்ளவர்கள் மட்டும்தான் செய்ய முடியும்.
ஆராதனை குறிப்பிட்ட ஒரு சிலரால் நடைபெற்றாலும், அதை பார்ப்பவர்கள் அனைவருமே ஆராதனை செய்வதாக அர்த்தம் ஆகும்.
எபிரேயர் 9.1. அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. 2. எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். 3. இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. 4. அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. 5. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக் குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை. 6. இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். 7. இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
இயேசுவின் பலியினால் இந்த ஆராதனை முடிவுக்கு வந்ததை பற்றி பவுல் சொல்கிறார்.
ஆதலால் பழைய ஏற்பாட்டு ஆராதனை என்பது புதிய ஏற்பாட்டு காலத்தில் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
எபிரேயர் 8.13. புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
எபிரேயர் 9.9. அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். 10. இவைகள் (ஆராதனை சடங்குகள்) சீர்திருந்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.
இயேசு கிருஸ்து பழைய ஏற்பாட்டின் ஆராதனை சடங்குகளை எப்படி, எவ்வாறு தேவையில்லாதவைகளாக மாற்றினார் என்பது இங்கே சொல்லப்பட்டுள்ளது.
எபிரேயர் 9.11. கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், 12. வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
ஆகவே
எபிரேயர் 10.19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், 20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், 21. தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், (புதிய ஏற்பாட்டு கால மக்களுக்கு ஆராதனை சடங்குகள் இல்லை)
புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆராதனை என்பதற்கான அர்த்தம் மாறி விட்டது. அவையாவன:
1.மாம்ச ரீதியான பாவங்களை செய்யாமலிருத்தல்
ரோமர் 12.1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
தேவ ஆலயத்தில் செலுத்தப்படும் பலி சடங்குகள் இரண்டு வகைப்படும் ஒன்று தேவனுக்கு நன்றி செலுத்துவதற்காக கொடுக்கப்படும் பலி, இரண்டு பாவத்தினிமித்தம் செலுத்தப்படும் பலி இயேசு தன்னையே பலியாக செலுத்தியதனால் பாவத்தினிமித்தம் செலுத்த வேண்டிய பலிக்கு தேவை இல்லாமல் போனது. இயேசு செய்த இந்த தியாகத்தினால் அவருக்கு நன்றி செலுத்துவது பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்தும் பலியாக மாறியது.
புதிய உடன்படிக்கையின்படி செலுத்தப்படும் பலியின் மேன்மை பற்றி பவுல் சொன்னது
எபிரேயர் 13.10. நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. 11-14 .(சுருக்கம்) இயேசு கிருஸ்து நமக்காக மிகப் பெரிய தியாகம் செய்தார் 15. ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
4. ஆராதனையின் அடுத்த அர்த்தமாவது மற்றும் பலியின் அர்த்தமாவது :
இயேசுவின் நாமத்தை துதிக்கும் ஸ்தோத்திரபலியை இயேசுவின் மூலமாய் எப்போதும் பிதாவாகிய தேவனுக்கு செலுத்துவது.
இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் இயேசுவின் நாமத்தை துதித்தால் பிதாவானார் மகிமைப்படுவார் என்பதை அறிய முடியும்.
இப்போது இயேசு சொன்ன ஆராதனையை பற்றி பார்க்கலாம். இந்த வசனமானதுகிருஸ்துவர்கள் என சொல்லிக் கொள்ளும் சில பிரிவுகளுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
மத்தேயு 4.10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
இந்த வசனத்தில் தேவனாகிய கர்த்தர் என்பது யாவே தேவனையும் குறிக்கும். கர்த்தராகிய இயேசு கிருஸ்துவையும் குறிக்கும் என்பதால் இயேசுவுக்கு ஆராதனை செய்வது தவறில்லை என்று சொல்லலாம்.
மூல மொழியில் கர்த்தர் என்பதற்க்கு என்ன என்று எழுதியிருக்கிறது என தெரியவில்லை. ஏனென்றால் தமிழில் கர்த்தர் என்று வரும் அனேக இடங்கள் மூல மொழியில் யாவே என்னும் நாமத்தால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்து தெலுங்கு வேதகாமத்தில் இந்த இடங்களில் யாவே என்றே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. (யாராவது இந்த இடத்தில் என்ன வருகிறது என்று சொன்னால் எனக்கு உதவியாய் இருக்கும்.)
கர்த்தர் என்பது யாவே என்று இருக்கும் பட்சத்தில்,
மேற்கண்ட வசனத்தை படித்த ஒருவருக்கு எழும் கேள்வி என்னவென்றால், இயேசு கர்த்தரை மட்டுமே பணிந்து அவர் ஒருவருக்கே ஆராதனை செய்ய சொல்லியிருக்கிறாரே அப்படியானால் கீழ்கண்ட கருத்து
(4. ஆராதனையின் அடுத்த அர்த்தமாவது மற்றும் பலியின் அர்த்தமாவது :
இயேசுவின் நாமத்தை துதிக்கும் ஸ்தோத்திரபலியை இயேசுவின் மூலமாய் எப்போதும் பிதாவாகிய தேவனுக்கு செலுத்துவது.)
எப்படி செல்லுபடியாகும் என்ற கேள்வி வரக் கூடும்.
இவ்வாறு கேட்பவர்களுக்கு நம்முடைய பதில்.
ஆராதனையின் இந்த பகுதியானது இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் விளைவாக ஏற்பட்ட புதிய உடன்படிக்கையின் நிறைவேறுதலினால் உண்டானதாகும். அதனால் இதைப் பற்றி இயேசு கிருஸ்துவே சொல்ல முடியாது. தேவ ஆவியினால் ஏவப்பட்ட பவுல்தான் இதைப் பற்றி சொல்ல முடியும். ஆகவே இதில் முரண்பாடுகள் எதுவும் இல்லை என்பதை பச்சை புள்ளை கூட புரிந்து கொள்ள முடியும்.
மேலும் மத்தேயு 4.10ல் இயேசு சொன்னது பழைய ஏற்பாட்டு ஆராதனை சடங்குகளையே. புதிய ஏற்பாட்டு காலத்தில் அவை முற்றிலும் மாற்றப்பட்டு விட்டதால் அந்த ஆராதனை வேறு இப்போதைய ஆராதனை வேறு என்றாகி விட்டது. அப்படி இருக்கும் போது இந்த வசனத்தை அடிக்கடி மேற்கோள்வது காட்டுவது சரியான வழியில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு இடறலை உண்டாக்கும் ஒரு தந்திரமே ஆகும்.
இப்போது ஆராதனை என்றால் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
அதற்கு முன்பாக ஆலயம் என்றால் என்ன என்று பார்ப்போம்
தேவனுடைய ஆலயம் எனபது தேவனுடைய மகிமையும், வல்லமையும் எப்போதும் இருக்கின்ற / இருக்க வேண்டிய இடமாகும்.
இவ்வாறு தேவ மகிமை எப்போதும் ஓரிடத்தில் இருக்க வேண்டும் எனில் அங்கு தங்கியுள்ள தேவன் உயர்த்தப்பட வேண்டும், மனிதர்கள் அவரை வணங்க வேண்டும். அந்த இடம் பரிசுத்தமுள்ளதாக காக்கப்பட வேண்டும். இவைகள் எப்போதும் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதற்காக அனேக சடங்குகள் எப்போதும் அந்த இடத்தில் செய்யப்பட்டு கொண்டே இருக்கும் / இருக்க வேண்டும்,
இவ்வாறு இல்லாவிடில் அந்த ஆலயம் தீட்டுப்பட்டதாக மாறி, தேவ மகிமை ஆலயத்தை விட்டு போய் விடும். தேவ மகிமையை எப்போதும் தக்க வைத்து கொள்ள நடக்கும் சடங்குகளே ஆராதனை எனப்படும்.
புதிய ஏற்பாட்டு காலத்தில் மனிதனே தேவனுடைய ஆலயமாக மாறி விட்டதால், மனிதனுடைய மனதும், சரீரமும் பரிசுத்தமாக காக்கபட வேண்டும். தேவனிடத்தில் எப்போதும் அன்பு கூறுவதனால் கிருபையை விட்டு விலகாமல் காத்து கொள்ள வேண்டும். தேவனின் நாமத்தை எப்போதும் துதிக்க வேண்டும் என்பது போன்றவைகள் ஆராதனை முறைகளாயின. இவைகளை சரியாக காத்து கொள்ளும் போது தேவ சமூகம் நம்முடனே எப்போதும் கூட இருக்கும்.
பகுதி 2 : தொழுது கொள்ளுதல் - 1
தொழுது கொள்ளுதல் என்ற வாக்கியத்தை ஓரளவுக்கே ஆராய்ந்து பார்த்தேன். இன்னும் முழுவதுமாக முடிக்கவில்லை. இதன் முதல் பகுதி இப்போது.
தொழுது கொள்ளுதல் என்பதை பார்க்கும் போது தேவனுடைய நாமத்தை தொழுது கொண்டார்கள் என்றே பழைய ஏற்பாட்டில் அனேக இடங்களில் வருகிறது. நாமத்தை தொழுது கொள்வது என்றால் என்ன?
இதை அறிய மூல மொழிக்கான அர்த்தத்தையும், யூதர்களின் வழக்கத்தையும் ஆராய வேண்டியிருப்பதால் இதற்கான பதிலை பிறகு பார்க்கலாம்.
அதற்கு முன்பாக தொழுவதற்கான தேவனுடைய நாமங்கள் எவை என பார்ப்போம்.
சர்வ வல்ல தேவனின் நான்கெழுத்து நாமத்தை யூதர்கள் தொழுது கொண்டார்கள் என்பதும், அந்த நாமத்தால் புற சாதிகள் தேவனை அறியவில்லை என்பதும், புற சாதிகளுக்கு அந்த நாமம் தேவனுடைய நாமமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.
சர்வ வல்ல தேவனை இயேசு என்னும் நாமத்தின் மூலமாகவே அறிந்து கொண்டதால், இயேசு என்னும் நாமத்திலேயே இரட்சிக்கப்பட்டதால் நமக்கு கொடுக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட தேவனின் நாமம் இயேசுவே என அறிய முடியும்.
ஏசாயா 9.6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
இப்போது இயேசுவின் நாமம் தொழத்தக்கதா? என்று பார்ப்போம்.
ஆதாரம்-1
அப்போஸ்தலனாகிய பவுல், சவுலாக இருக்கும் போது இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டவர்களை துன்புறுத்தினவன் என இருக்கிறது. இதிலிருந்து இயேசுவின் நாமத்தை தொழுது கொள்ளலாம் என்பது தெளிவாகிறது. ஏனெனில் யாவே நாமத்தை தொழுது கொண்டிருந்தால் அவன் இயேசுவின் சீடர்களை துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அப்போ 9.13. அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். 14. இங்கேயும் உம்முடைய (இயேசுவின்) நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.
இங்கே தெளிவாக இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டார்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.
ரோமர் 10.13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசுவுடைய) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
ரோமர் 10.9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ஆதாரம்-3
1.கொரி 1.2. கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
//மத்தேயு 4.10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். இந்த வசனத்தில் தேவனாகிய கர்த்தர் என்பது யாவே தேவனையும் குறிக்கும். கர்த்தராகிய இயேசு கிருஸ்துவையும் குறிக்கும் என்பதால் இயேசுவுக்கு ஆராதனை செய்வது தவறில்லை என்று சொல்லலாம்.
மூல மொழியில் கர்த்தர் என்பதற்க்கு என்ன என்று எழுதியிருக்கிறது என தெரியவில்லை. ஏனென்றால் தமிழில் கர்த்தர் என்று வரும் அனேக இடங்கள் மூல மொழியில் யாவே என்னும் நாமத்தால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்து தெலுங்கு வேதகாமத்தில் இந்த இடங்களில் யாவே என்றே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. (யாராவது இந்த இடத்தில் என்ன வருகிறது என்று சொன்னால் எனக்கு உதவியாய் இருக்கும்.)//
நீங்கள் கேட்டிருக்கும் இந்த கேள்விக்கான விடை பல முறை இந்த தளத்திலும், கோவைபெரேயன்ஸ் தளத்திலும் கொடுக்கப்பட்டிருப்பதை கவனியாமல் இருந்திருக்கிறீர்கள் போல்!! பரவாயில்லை, மீண்டும்,
தமிழ் மொழிப்பெயர்ப்பில் பழைய ஏற்பாட்டில் கர்த்தர் என்று வருகிற இடம் யாவே (யெகோவா) தேவனை குறிக்கிறது!! புதிய ஏற்பாட்டில் வெறும் கர்த்தர் என்று வருகிற இடங்கள் கிறிஸ்து இயேசுவை குறிக்கிறது என்பதும் சரியே!! ஆனால் மூல பாஷையில் பார்த்தோமென்றல் பழைய ஏற்பாட்டில் கர்த்தர் என்று சொல்லப்பட்டிருக்கும் இடங்கள் எல்லாம் யெகோவா என்று இருக்கும்!! பல பிற மொழிப்பெயர்ப்புகளில் அதை சரியாக செய்திருக்கிறார்கள்! நீங்கள் எழுதியிருப்பது போல் தெலுங்கிலும் அதை பார்க்கலாம்!! புதிய ஏற்பாட்டில் இரண்டு விதமாக எழுதப்பட்டிருக்கிறது, "தேவனாகிய கர்த்தர்" என்பது யெகோவா தேவனையும், "கர்த்தர்" என்று இருப்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் சொல்லப்பட்டிருக்கிறது!! பிதாவாகிய தேவனை பழைய ஏற்பாட்டில் மாத்திரமே கர்த்தர் என்று சொல்லப்பட்டிருக்கிறது, புதிய ஏற்பாட்டில் "தேவனாகிய கர்த்தர்" என்று இருக்கும்!! ஆக மத் 4:10ல் தேவனாகிய கர்த்தர் என்பது பிதாவை மாத்திரமே குறிக்கும், தாங்கள் சொல்லியிருப்பது போல் இயேசு கிறிஸ்துவை குறிக்காது!! கிறிஸ்துவின் நாமத்தில் எதையும் செய்யலாம், எதுவும் தவறில்லை என்பது மிகவும் தவறான போதனையாகும்!!
கிறிஸ்து பிதாவிடத்திற்கு நம்மை சேர்க்கும் வழியாக இருக்கிறார், அவர் நமக்கு (கிறிஸ்தவர்களுக்கு) பிதாவிடத்தில் பரிந்துரை செய்கிறவராகவும், உலகத்தாருக்கும் தேவனுக்கும் மத்தியச்தராகவும் இருக்கிறார்!!
சந்தோஷ் அவர்களே, பிதாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்கிற போதனை இருக்கும் வரையில் குழப்பங்கள் நீடிக்கும்!! முதலில் பிதாவும் கிறிஸ்துவும் வேறு என்று வேதத்தின் படி சரியாக பார்த்தோமென்றால் எல்லாம் தெளிவாக இருக்கும்!!
நீங்க எப்படி, பிதாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்று சொல்லுபவரா, இல்லை இருவரும் வேறு என்று சொல்லுபவரா!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
ஏற்கனவே பிதாவை ஆராதிப்பது எப்படி என்ற தலைப்பில் நான் ஒரு திரியைத் துவக்கியதை நீங்கள் கவனித்தீர்களா எனத் தெரியவில்லை. உங்களுக்காகத்தான் அத்திரியைத் துவக்கினேன். அதே தலைப்புக்கு ஒத்ததாக பிதாவை வணங்குவது எப்படி என்ற தலைப்பில் நீங்கள் திரியைத் துவக்கியுள்ளீர்கள்.
இக்கேள்விகளுக்கான எனது பதிலும் உங்கள் பதிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் உள்ளன. ஆகிலும் உங்கள் கோட்பாட்டை நிலைநாட்டத்தக்கதாக சில வரிகளையும் சேர்த்துள்ளீர்கள். அவ்வரிகளில் உங்கள் கோட்பாட்டிற்கு ஏற்ப வசனங்களை நன்றாகவே புரட்டியுள்ளீர்கள். மன்னிக்கவும், “புரட்டியுள்ளீர்கள்” எனும் வார்த்தை சற்று கடுமையானதுதான். ஆகிலும் அதைவிட பொருத்தமான வேறு வார்த்தை எனக்குத் தெரியாததால், அதையே பயன்படுத்தவேண்டியதாயுள்ளது.
sandosh wrote: //மத்தேயு 4.10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
இந்த வசனத்தில் தேவனாகிய கர்த்தர் என்பது யாவே தேவனையும் குறிக்கும். கர்த்தராகிய இயேசு கிருஸ்துவையும் குறிக்கும் என்பதால் இயேசுவுக்கு ஆராதனை செய்வது தவறில்லை என்று சொல்லலாம்.//
தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே என வசனம் தெளிவாகக் கூறுகையில், உங்கள் மனம் போல் தேவனாகிய கர்த்தர் என்றால் அது யாவே தேவனையும் இயேசுவையும் குறிக்கும் எனச் சொன்னால் இது எத்தனை பெரிய வேதப்புரட்டாகும்? சற்று சிந்தியுங்கள் சகோதரரே! “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்”.
sandosh wrote: //மூல மொழியில் கர்த்தர் என்பதற்க்கு என்ன என்று எழுதியிருக்கிறது என தெரியவில்லை. ஏனென்றால் தமிழில் கர்த்தர் என்று வரும் அனேக இடங்கள் மூல மொழியில் யாவே என்னும் நாமத்தால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்து தெலுங்கு வேதகாமத்தில் இந்த இடங்களில் யாவே என்றே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. (யாராவது இந்த இடத்தில் என்ன வருகிறது என்று சொன்னால் எனக்கு உதவியாய் இருக்கும்.)//
மூலமொழி வார்த்தையின் அர்த்தங்களை முழுமையாக அறியாமலேயே, தேவனாகிய கர்த்தர் என்றால் அது யாவே தேவனையும் இயேசுவையும் குறிக்கும் எனும் முடிவுக்கு வந்து விட்டீர்கள். இது என்ன நியாயம் சகோதரரே!
sandosh wrote: //கர்த்தர் என்பது யாவே என்று இருக்கும் பட்சத்தில்,
மேற்கண்ட வசனத்தை படித்த ஒருவருக்கு எழும் கேள்வி என்னவென்றால், இயேசு கர்த்தரை மட்டுமே பணிந்து அவர் ஒருவருக்கே ஆராதனை செய்ய சொல்லியிருக்கிறாரே அப்படியானால் கீழ்கண்ட கருத்து
(4. ஆராதனையின் அடுத்த அர்த்தமாவது மற்றும் பலியின் அர்த்தமாவது :
இயேசுவின் நாமத்தை துதிக்கும் ஸ்தோத்திரபலியை இயேசுவின் மூலமாய் எப்போதும் பிதாவாகிய தேவனுக்கு செலுத்துவது.)
எப்படி செல்லுபடியாகும் என்ற கேள்வி வரக் கூடும்.
இவ்வாறு கேட்பவர்களுக்கு நம்முடைய பதில்.
ஆராதனையின் இந்த பகுதியானது இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் விளைவாக ஏற்பட்ட புதிய உடன்படிக்கையின் நிறைவேறுதலினால் உண்டானதாகும். அதனால் இதைப் பற்றி இயேசு கிருஸ்துவே சொல்ல முடியாது. தேவ ஆவியினால் ஏவப்பட்ட பவுல்தான் இதைப் பற்றி சொல்ல முடியும். ஆகவே இதில் முரண்பாடுகள் எதுவும் இல்லை என்பதை பச்சை புள்ளை கூட புரிந்து கொள்ள முடியும்.
மேலும் மத்தேயு 4.10ல் இயேசு சொன்னது பழைய ஏற்பாட்டு ஆராதனை சடங்குகளையே. புதிய ஏற்பாட்டு காலத்தில் அவை முற்றிலும் மாற்றப்பட்டு விட்டதால் அந்த ஆராதனை வேறு இப்போதைய ஆராதனை வேறு என்றாகி விட்டது. அப்படி இருக்கும் போது இந்த வசனத்தை அடிக்கடி மேற்கோள்வது காட்டுவது சரியான வழியில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு இடறலை உண்டாக்கும் ஒரு தந்திரமே ஆகும்.//
இப்பகுதியில் தர்க்கரீதியாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை. “பச்சை புள்ளைகூட புரிந்து கொள்ளும்” என்கிறீர்கள். இப்பகுதியை நீங்களே மறுபடியும் படித்துப்பார்த்து நீங்கள் எழுதியது உங்களுக்காவது புரிகிறதா எனப் பாருங்கள்.
sandosh wrote: //மேலும் மத்தேயு 4.10ல் இயேசு சொன்னது பழைய ஏற்பாட்டு ஆராதனை சடங்குகளையே. புதிய ஏற்பாட்டு காலத்தில் அவை முற்றிலும் மாற்றப்பட்டு விட்டதால் அந்த ஆராதனை வேறு இப்போதைய ஆராதனை வேறு என்றாகி விட்டது. அப்படி இருக்கும் போது இந்த வசனத்தை அடிக்கடி மேற்கோள்வது காட்டுவது சரியான வழியில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு இடறலை உண்டாக்கும் ஒரு தந்திரமே ஆகும்.//
புதிய ஏற்பாட்டு காலத்தில் மாற்றப்பட்ட ஆராதனை முறை என்பது எது? அதற்கான வசன ஆதாரத்தைக் கொடுங்கள். மத்தேயு 4:10-ஐ அடிக்கடி மேற்கோள் காட்டக்கூடாது என்பது உங்கள் தீர்ப்பெனில், எத்தனை தடவை மேற்கோள் காட்டலாம், எந்த சந்தர்ப்பத்தில் மேற்கோள் காட்டலாம், அல்லது மேற்கோள் காட்டவே கூடாதா எனும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
sandosh wrote: //புதிய ஏற்பாட்டு காலத்தில் மனிதனே தேவனுடைய ஆலயமாக மாறி விட்டதால், மனிதனுடைய மனதும், சரீரமும் பரிசுத்தமாக காக்கபட வேண்டும். தேவனிடத்தில் எப்போதும் அன்பு கூறுவதனால் கிருபையை விட்டு விலகாமல் காத்து கொள்ள வேண்டும். தேவனின் நாமத்தை எப்போதும் துதிக்க வேண்டும் என்பது போன்றவைகள் ஆராதனை முறைகளாயின. இவைகளை சரியாக காத்து கொள்ளும் போது தேவ சமூகம் நம்முடனே எப்போதும் கூட இருக்கும்.//
உங்களது இக்கருத்தை நான் முழுமையாக ஏற்று வரவேற்கிறேன். ஆனால் “இயேசுவுக்கு ஆராதனை” எனும் சுலோகனை பலரும் ஓயாமல் கூறிவருவதால்தான், ஆராதனையை ஒருவருக்குச் செலுத்தவேண்டுமெனில் அதை பிதாவாகிய தேவனுக்கு மட்டுமே செலுத்தவேண்டும் எனக் கூறுகிறேன்; அதற்கு ஆதாரமாக மத்தேயு 4:10-ஐ சுட்டிக்காட்டுகிறேன்.
ரோமர் 10.13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
1 கொரி 1.2. கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
இவ்வசனங்கள் இயேசுவைத் தொழுதுகொள்வது பற்றி கூறுவது மெய்தான். ஆனால் தொழுகொள்தல் என்றால் என்ன, ஆராதனையிலிருந்து தொழுதுகொள்தல் எவ்வாறு வேறுபடுகிறது என்பதைச் சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.
மாத்திரமல்ல, மேற்கூறிய வசனங்களில் தொழுதுகொள்தல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தமென்ன, ஆங்கிலம் போன்ற பிற மொழிபெயர்ப்புகளின் அவ்வார்த்தை எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தறியவும் நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.
இதையெல்லாம் ஆராயாமல் வெறுமனே தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் வைத்து எடுக்கிற முடிவு தவறாக இருக்க அதிக வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும். மேற்கூறிய வசனங்கள் KJV ஆங்கில வேதாகமத்தில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை முதலாவதாகப் பார்ப்போம்.
Acts 9:13-14 Then Ananias answered, Lord, I have heard by many of this man, how much evil he hath done to thy saints at Jerusalem: And here he hath authority from the chief priests to bind all that call on thy name.
Acts 9:20-21 And straightway he preached Christ in the synagogues, that he is the Son of God. But all that heard him were amazed, and said; Is not this he that destroyed them which called on this name in Jerusalem, and came hither for that intent, that he might bring them bound unto the chief priests?
Rom 10:13 For whosoever shall call upon the name of the Lord shall be saved.
1 Cor 1:2 Unto the church of God which is at Corinth, to them that are sanctified in Christ Jesus, called to be saints, with all that in every place call upon the name of Jesus Christ our Lord, both theirs and ours:
தொழுதுகொள்தல் என தமிழ் வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள், call on அல்லது call upon என ஆங்கில வேதாகமத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
மூலபாஷையில் இதற்கு இணையான வார்த்தை epikaleomai (ep-ee-kal-eh'-om-ahee, NT:1941) என்பதாகும். இதன் அர்த்தம்:
middle voice from NT:1909 and NT:2564; to entile; by implication, to invoke (for aid, worship, testimony, decision, etc.):
KJV - appeal (unto), call (on, upon), surname. என்பதாகும்.
உதவிக்காக/தொழுதுகொள்வதற்காக/சாட்சிக்காக/தீர்ப்புக்காக - வேண்டுதல்/அழைத்தல்/உட்படுத்துதல் ஆகியவை இதன் அர்த்தங்களாகும்.
அப்போஸ்தலர் 25:11-ல் இராயருக்கு பவுல் அபயமிடுதலுக்கும் இதே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்பொழுது நீங்களே சொல்லுங்கள், நீங்கள் சுட்டிக்காட்டின வசனங்களின் உண்மையான அர்த்தம் எதுவென.
வேதத்தை நன்கு ஆராய்ந்து, தேவைப்பட்டால் மூல பாஷையில் உள்ளவற்றையும் ஆராய்ந்து வேதத்திற்க்கு சரியான விளக்கம் சொல்லுவதன் மூலம் நீங்களும், சகோதரர் பெரேயன்ஸ் அவர்களும் மற்றவர்களுக்கு ஆற்றும் பணி மகத்தானது.
அனேகர் தேவனை தொழுதல், ஆராதனை செய்தல், பணிதல் போன்ற அனைத்து வார்த்தைகளையும் ஒரே அர்த்தம் தருவது போல எப்போதும் உபயோகிக்கிறார்கள். அதனால் பல்வேறு குழப்பங்கள் எழுவது தவிர்க்க முடியாதது.
நானும் எல்லாம் ஒன்றுதான் என்றுதான் நினைத்திருந்தேன். அதனாலேயே நீங்கள் பிதாவுக்கு மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும் என்று சொல்லும் போது, வேதத்துக்கு புறம்பாக இயேசுவின் நாமத்தை தொழுது கொள்ளக் கூடாது என்றோ அல்லது இயேசுவுக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்த கூடாது என்று சொல்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் நீங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பதையும், ஆராதனை என்பதற்க்கு வேறு அர்த்தம் என்பதையும் இப்போதே தெரிந்து கொண்டேன். அதனால் நீங்கள் சொல்வது சரி என்று உணர்ந்து கொண்டேன்.
இருந்தாலும் இன்னும் ஒரு தடவை உறுதி செய்து கொள்ள வேதத்தின் அடிப்படையில் எழுந்த என்னுடைய இந்த கருத்துக்களும் சரியா, தவறா என்பதை நீங்களும், கோவை பெரியன்ஸ் அவர்களும் சொன்னால் நலமாயிருக்கும். இந்த கருத்துக்கள் தவறாய் இருக்கும் பட்சத்தில் இந்த கேள்விகளுக்கு தனி திரி தொடங்கி விவாதிக்கலாம்,
1. இயேசுவின் நாமத்தை தொழுது கொள்வது என்பது வேதத்தின்படி சரியானது. இவ்வாறே அப்போஸ்தலர் அனைவரும் இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டனர்.- சரி / தவறு
2. இயேசு கிருஸ்துவுக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்துவது என்பது பிதாவை மகிமைப்படுத்துவதாகும். - சரி / தவறு
பிதாவை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்று சரியாக சொன்ன நீங்களும், கோவை பெரேயன்ஸ் அவர்களும்
1. ஆவியினாலே பிதாவை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதையும்
2. ஆவியோடும், உண்மையோடும் பிதாவை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்பதை பற்றி எதுவும் எழுதாதது வருத்தமளிக்கிறது. அதைப் பற்றி விரைவில் விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
பிதா ஒருவருக்கே ஆராதனை செய்ய சொல்லி வேதத்தில் உள்ளது என சொன்ன நீங்கள் ஆராதனை என்ற வார்த்தையின் அர்த்தம் எப்படி மாற்றப்பட்டுள்ளது என்று பவுல் சொன்னதை சொன்னால் சரியாக இருக்கும் அதை விடுத்து சடங்குகளான ஆராதனை பற்றி சொல்லும் வசனத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவதினால் இயேசுவின் மேல்வைத்திருக்கும் மரியாதையை குலைக்க முயற்ச்சி செய்கிறீர்களோ என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு வருவதை தவிர்க்க முடியாது. (ஏனெனில் அவர்களுக்கு ஆராதனை, தொழுதல், பணிதல் எல்லாம் ஒன்றுதான்)
மேலும் பிதாவுக்கு ஆராதனை செய்வது எப்படி என்னும் கேள்விக்கு ஆவியினாலே என்று சொல்லப்படும் வசனத்தையும் மேற்கோள் காட்டவோ அல்லது விளக்கவோ விரும்பவில்லை என்பதும் தெளிவாகிறது.
//1. இயேசுவின் நாமத்தை தொழுது கொள்வது என்பது வேதத்தின்படி சரியானது. இவ்வாறே அப்போஸ்தலர் அனைவரும் இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டனர்.- சரி / தவறு//
தொழுதுக்கொள்வது என்றால் அன்பர் அன்பு அவர்கள் விளக்கியிருப்பது போல் புரிந்துக்கொண்டால் இயேசுவின் நாமத்தை தொழுது (ஆராதனை அல்ல, மாறாக பிதாவிடத்தில் நமக்காக பரிந்து பேசுபவர் என்கிற அர்த்தத்தில் மாத்திரமே) கொள்வது சரியே!! மீண்டும் சொல்லுகிறேன், வார்த்தையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், தொழுதுக்கொள்வது என்பது ஆராதனைக்கு சமமோ அல்லது நெருக்கமானதோ அல்ல!!
யோவான் 14:13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
யோவான் 15:16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
இப்படி கிறிஸ்துவின் நாமத்தில் நாம் பிதாவிடத்தில் கேட்பதை நீங்கள் தொழுதுக்கொள்ளுவது என்று எடுத்துக்கொண்டால் நிச்சயமாகவே அது சரி தான்!! ஆனால் பிதாவிற்கு செலுத்த வேண்டிய ஆராதனையிலும் மகிமையிலும் அசட்டையாக இருந்துவிட வேண்டாம் என்பது என் வேண்டுதல்!!
சந்தோஷ் அவர்களின் 2ம் கேள்வி:
//2. இயேசு கிருஸ்துவுக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்துவது என்பது பிதாவை மகிமைப்படுத்துவதாகும். - சரி / தவறு //
இயேசு கிறிஸ்துவிற்கு ஸ்தோத்திர பலிகலை செலுத்தும்படியாக வேதம் சொல்லாததினால், அது எப்படி பிதாவை மகிமைப்படுத்துவதாகும்!! இல்லாத ஒரு விஷயத்தை ஏன் நாம் செய்ய முயற்சிக்கனும்!! கிரிஸ்துவே பிதாவிற்கு கீழ்ப்பட்டவராக இருக்கிறார், அவரின் வலது புயமாக இருக்கிறார் என்று வேதம் பல இடத்தில் சொல்லியும், கிறிஸ்துவிற்கு ஸ்தோத்திர பலி செலுத்தும்படியா எங்கேயும் சொல்லவில்லையே!! இல்லாததை ஏன் ஆம் என்று நம் முயற்சிகளினால் சாதிக்க வேண்டும்!! ஆகவே தங்களின் இந்த கேள்விக்கு என் பதில் "தவறு"!!
யார் இந்த தேவன்? பிதா யார் இந்த குமாரன்? கிறிஸ்து இயேசு
இன்றைய கிறிஸ்தவ விசுவாசத்தின்படி பிதாவும் கிறிஸ்து இயேசுவும் ஒருவரே என்கிற போதனையின்படி பார்த்தோமென்றால் இது போன்ற வசனங்கள் குழப்பம் அடைய செய்யும் என்றே சபைகளில் இந்த வசனங்களை போதிப்பது கிடையாது!!
//பிதா ஒருவருக்கே ஆராதனை செய்ய சொல்லி வேதத்தில் உள்ளது என சொன்ன நீங்கள் ஆராதனை என்ற வார்த்தையின் அர்த்தம் எப்படி மாற்றப்பட்டுள்ளது என்று பவுல் சொன்னதை சொன்னால் சரியாக இருக்கும் அதை விடுத்து சடங்குகளான ஆராதனை பற்றி சொல்லும் வசனத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவதினால் இயேசுவின் மேல்வைத்திருக்கும் மரியாதையை குலைக்க முயற்ச்சி செய்கிறீர்களோ என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு வருவதை தவிர்க்க முடியாது. (ஏனெனில் அவர்களுக்கு ஆராதனை, தொழுதல், பணிதல் எல்லாம் ஒன்றுதான்)//
நாங்கள் வேதத்தில் இருக்கிறது என்று சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா, அல்லது வாசித்து அதை நம்பவில்லையா!! ஆராதனை என்கிற வார்த்தைக்கு தேவனை வழிப்படுவது (Religious homage, worship) என்று இருக்கிறது!! ஆனால் தொழுதுக்கொள்ளுவது என்றால் அவரின் நாமத்தை கூப்பிடுவது, பிதாவிடத்தில் நம் ஜெபங்களை செலுத்தும்படியாக அவரிடம் பரிந்துரைக்கும்படி சொல்லுவது!! ஆக தொழுதுக்கொள்ளுதல் என்பது ஆராதனை அல்ல!! நாங்கள் எந்த விதத்திலும் கிறிஸ்துவிற்கு செலுத்தவேண்டிய மரியாதையை குலைக்க முயற்சிக்கவில்லை, பிதாவிற்கு உண்டான மகிமை பிதாவிற்கும் கிறிஸ்துவிற்கு உண்டான கனத்தை கிறிஸ்துவுக்கும் செலுத்துவோமே!! குழப்பத்தின் ஆரம்பமே இருவரும் ஒருவரே என்கிற தப்பிதமான போதனையினால் தான் அன்றி நாங்கள் சுட்டி காட்டும் வசனங்களில் அல்ல!! பொய்யை விசுவசிப்பதால் கொடிய வஞ்சகத்தை தேவனே அனுப்புவார் என்று வசனம் இருக்கிறதே!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
ஆராதனை செய்தல் மற்றும் தொழுதுகொள்தல் என்பது தமிழ் மொழியில் கிட்டத்தட்ட ஒரே அர்த்தமுடையவைகளாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் தமிழ் வேதாகமத்தில் காணப்படும் இவ்விரு வார்த்தைகளுக்கான மூலபாஷை வார்த்தைகளில் பெரும் வித்தியாசம் உள்ளது. இதை நான் தெளிவாக எடுத்துரைத்தபின்னரும், சகோ.சந்தோஷ் இப்படியொரு கேள்வியைக் கேட்டுள்ளார்.
//இயேசுவின் நாமத்தை தொழுது கொள்வது என்பது வேதத்தின்படி சரியானது. இவ்வாறே அப்போஸ்தலர் அனைவரும் இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டனர்.- சரி / தவறு//
சகோ.சந்தோஷ் அவர்களே!
தொழுதுகொள்தல் என்பதை எந்த அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை. ஒருவேளை மத்தேயு 4:10-ல் இயேசு கூறுகிற ஆராதனையைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்றால், இயேசுவின் நாமத்தை தொழுதுகொள்தல் என்பது நிச்சயம் தவறுதான்.
மாறாக, இயேசுவின் நாமத்தால் தேவனிடம் வேண்டுதல் என்ற அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்றால் அது சரியே.
//இயேசு கிருஸ்துவுக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்துவது என்பது பிதாவை மகிமைப்படுத்துவதாகும். - சரி / தவறு//
சகோ.சந்தோஷ் அவர்களே!
இவ்விஷயத்தில் நாம் அப்போஸ்தலரின் மாதிரியைப் பின்பற்றுவதாக இருந்தால், இயேசு கிறிஸ்து மூலமாக தேவனுக்கே நம் ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தவேண்டும். ஏனெனில் அப்போஸ்தலரின் நிருபங்கள் முழுவதிலும் அவர்கள் தேவனுக்கே ஸ்தோத்திரம் செலுத்துவதாகத்தான் வசனங்கள் கூறுகின்றனவேயொழிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தியதாக ஒரு வசனமும் கூறவில்லை. (ஒருவேளை இயேசுவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தியதாக ஏதேனும் வசனம் இருந்தால் அதை எடுத்துக்காட்டும்படி வேண்டுகிறேன்)
எபிரெய ஆக்கியோனின் பின்வரும் வசனத்தை சற்று படியுங்கள்.
எபிரயர் 13:15 ஆகையால், அவருடைய (இயேசுவின்) நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
ஸ்தோத்திரபலியை எப்போதும் தேவனுக்கே செலுத்தவேண்டுமென எபிரெய ஆக்கியோன் கூறுகிறார். ஆனால் இயேசுவின் மூலமாக அதைச் செலுத்தவேண்டுமென்றும் அவர் கூறுகிறார். இதன்படி நாம் நடந்தாலே போதுமானது. மற்றபடி, உங்கள் கேள்வியில் கூறப்பட்டுள்ளபடி இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவதைப் பற்றி வேதாகமத்தின் எந்த வசனமும் கூறவில்லை என்பதே நான் அறிந்ததாகும்.
ஆயினும், வெளிப்படுத்துதலின் இரு வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன.
வெளி. 5:12,13 அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
ஆட்டுக்குட்டியானவர் என்பது இயேசுவையே குறிப்பிடுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆட்டுக்குட்டியானவராகிய அவர் ஸ்தோத்திரத்தைப் பெற்றுக்கொள்ள பாத்திரராயிருக்கிறார் என 12-ம் வசனம் கூறுகிறது. வானத்திலும் பூமியிலும் சகல சிருஷ்டிகளும் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக எனக் கூறுவதாக 13-ம் வசனம் கூறுகிறது.
சகல சிருஷ்டிகளும் என்றால் மரம், செடி, கொடி போன்ற சகல வஸ்துக்களுமாகும். வெளி. 5:13 சொல்கிறபடி, தற்காலத்தில் “சகல வஸ்துக்களும்” சொல்கின்றனவா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
நான் புரிந்தவரையில், வெளி. 5:13-ல் கூறப்பட்டுள்ளவை எதிர்காலத்தில் (அதாவது மறுமையின் காலத்தில்) நடைபெறக்கூடியவையாகும் என்றே கருதுகிறேன். உங்கள் புரிந்துகொள்தலை நீங்கள் சொல்லுங்கள்.
sandosh wrote: //பிதாவை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்று சரியாக சொன்ன நீங்களும், கோவை பெரேயன்ஸ் அவர்களும்
1. ஆவியினாலே பிதாவை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதையும்
2. ஆவியோடும், உண்மையோடும் பிதாவை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்பதை பற்றி எதுவும் எழுதாதது வருத்தமளிக்கிறது. அதைப் பற்றி விரைவில் விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். //
பிதாவை எப்படி ஆராதிக்கவேண்டும் என பல திரிகளில் எழுதியிருந்தும், அவற்றைப் படிக்காமல் எங்கள்மீது நீங்கள் வருத்தப்படுவது எங்களை வருத்தப்படுத்துகிறது. இதே திரியில் எனது முதல் பதிவில்கூட “பிதாவை ஆராதிப்பது எப்படி” எனும் திரியின் தொடுப்பைக் கொடுத்துள்ளேன். இதுபோக “இயேசு தொழத்தக்க தெய்வமா?” எனும் திரியிலும் பிதாவை ஆராதிப்பதைக் குறித்து எழுதியுள்ளேன். இவ்விரு திரிகளையும் படித்துப்பாருங்கள்; தங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.
இயேசுவின் வசனங்கள் “ஆவியாயும் ஜீவனாயும்” இருப்பதாக யோவான் 6:61 கூறுகிறது. ஆவியாயிருக்கிற “இயேசுவின் வசனங்களுக்கு” கீழ்ப்படிவதுதான் பிதாவை மெய்யாகவே ஆராதிப்பதாகும். இதற்கு மேலாக எந்தவொரு சடங்காச்சார ஆராதனையையும் பிதாவாகிய தேவன் நம்மிடம் எதிர்பார்க்கமாட்டார் என என்னால் திட்டமாகச் சொல்லமுடியும்.
பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம் எனும் வசனத்தையும் (1 சாமுவேல் 15:22), பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் எனும் வசனத்தையும் (மத்தேயு 9:13) நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பிரதான கற்பனையாக இயேசு கூறுவதென்ன? தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூரவேண்டும் என்பதுதானே? தேவனுக்கு முழு மனதுடன்/இருதயத்துடன்/ஆத்துமாவுடன்/பலத்துடன் கீழ்ப்படியாமல் எப்படி அவரிடம் அன்புகூரமுடியும்?
எனவே கீழ்ப்படிதல்தான் மெய்யான ஆராதனை. தமது நேசகுமாரனாகிய இயேசுவுக்குச் செவிகொடுக்கவேண்டும் என்பதுதான் பிதாவின் கட்டளை/சித்தம் (மத்தேயு 17:5). எனவே இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படிவதுதான் மெய்யான ஆராதனை. இதுவே ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்தல் அல்லது ஆராதித்தலாகும். பின்வரும் வசனங்களையும் சற்று படியுங்கள்.
ரோமர் 12:1 சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ஆம், நாம் நம்மையே முழுமையாக தேவனிடம் ஒப்புக்கொடுப்பதுதான் புத்தியுள்ள ஆராதனை. இதற்கும் மேலாக ஆராதனை பற்றி நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.
உங்களுக்கு மற்றொரு விஷயமும் சொல்ல விரும்புகிறேன். நம் மூத்த சகோதரரான இயேசு, மகா பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார் (எபிரெயர் 4:14). அவரே தற்போது ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆசாரியராக இருக்கிறார் (எபிரெயர் 8:2). பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஆசாரியர்கள்தான் ஆராதனைக்குரிய காரியங்களை செய்தனர். அதேவிதமாக தற்போது பிரதான ஆசாரியராயுள்ள இயேசுவே ஆராதனைக்குரிய காரியங்களை செய்கிறவராக இருக்கிறார். எனவே நம்மைப்பொறுத்தவரை சடங்கான ஆராதனைகளை செய்யவேண்டியதில்லை. கீழ்ப்படிதல் மட்டுமே போதுமானது.
பிதாவின் சித்தப்படி செய்கிறவன் பரலோக ராஜ்யம் பிரவேசிப்பான என இயேசு தெளிவாகச் சொல்லிவிட்டார். அதன்படி பிதாவின் சித்தம் செய்வோம்; இயேசுவின் வசனங்களின்படி நடப்போம். இதற்கு மிஞ்சினதொரு ஆராதனை இருக்குமென நான் நினைக்கவில்லை.