/// "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" என்றால் என்ன அர்த்தம்?///
///இதற்கு பதில்சொல்ல எந்த ஒரு வேதபுரட்டரும் தயாராய் இல்லையா? ////
/// இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. தேவதூதனுக்கு கால் இல்லை என்பதும் பெரிய தெய்வம் சிறிய தெய்வத்தைப் படைத்து அது உலகத்தைப் படைத்தது என்று சொல்லும் பபிலோனிய மதக்காரர்கள். இவர்களுக்கு வேதம் முக்கியமில்லை. வசனமும் பெரிதல்ல. ரசலின் நூல்கள்தான் வேதப்புத்தகம். இதில் இந்த விபரம் இல்லை போலும் அதான் அமைதியாக இருக்கிறார்கள். ///
நண்பர் கொல்வின் மற்றும் ஜோன் அவர்களே, தங்களின் கேள்வியை வாசித்தேன். இந்த சாதாரண கேள்விக்கு பதில் தெரியாமலா உங்கள் எல்லோருடனும் வாதாட வந்து இருக்கிறேன். எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியாது என்று உங்களுக்குள் நீங்களே நினைத்துக் கொண்டால் அது உங்கள் அனைவரினதும் அறியாமை. இந்த சாதாரண அடிப்படைக் கேள்வி கூட தெரிந்து கொள்ளாமாலா நாம் வேத மாணாக்கர்களாக இருக்கிறோம்?. உங்கள் கூத்து எப்படி இருக்கு தெரியுமா? ''கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேள்விரகில் நெய் வடியுமாம்'' அப்படித்தான் உங்கள் தளத்தில் எழுதும் அனைத்தும் கோமாளித்தனமான பதிவுகளும்.
அடுத்து நாம் எனது வேலை விஷயமாக சென்று இருந்தேன். வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது. உங்கள் கேள்விக்கு பதில் கொடுக்க தாமதம் ஆகியதுக்கு இதுவும் ஒரு காரணம். அடுத்து உங்கள் கேள்வுக்கு பதில் கொடுக்க விரும்பாது இருக்க, அடுத்த மிக முக்கிய காரணம் நண்பர் கொல்வின் அவர்கள் தினாவின் அபத்தம் என்றும், மற்றும் எம்மை வேதப் புரட்டகர் என்றும் கருதுவதால் நாம் மினக்கட்டு தங்களது கேள்விகளுக்கு பதில் எழுதினாலும் உங்களிடம் இருந்து எமக்கு ஒரே பதில் தான் வரப்போகிறது. எனக்கு உங்களின் விதண்டாவாதங்களுக்கும், குதர்க்கமான கேள்விகளுக்கும் பதில் எழுதுவதற்கு நேரம் இல்லை. இவை எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைப்பது போல எனது அடுத்த திரியாகிய ''இயேசு கிறிஸ்து சர்வவல்லமை உள்ள கடவுளா? என்ற திரியில் தங்களுக்கான கேள்விகள் அனைத்துக்கும் பதில் கொடுக்கப்படும். நன்றி
-- Edited by Dino on Tuesday 15th of March 2011 05:53:16 PM
__________________
''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''
///ரசலின் மாணவர்கள் நன்றாக மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பது தெரியும். எந்த ஒரு பாபிலோனிய கதையும் சொல்லாமல், வேதத்தை மாற்றி எழுதாமல், மனித போதனையை போதிக்காமல் உங்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவரும் இதுவரை பதில் சொல்லவில்லை. இதற்க்கு நேரடியான பதிலை உங்களால் கொடுக்கமுடியாது என்று தெரிந்தாலும் குறைந்தபட்சம் முயற்சி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்///
நண்பர் ஜோன் அவர்களே, எங்களை யாரும் மூளை சலவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி யாராவது எமக்கு சத்தியம் சொன்னால் நாங்கள் வேதத்தைக் கொண்டு சொல்லப்பட்ட விஷயம் சரியானதா என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே ஏற்றுக்கொள்வோம். நீங்க நினைப்பதைப் போன்று நாங்கள் ரசலின் மாணவராக இருந்துட்டு போகுறோம்.
அடுத்து தங்கள் கேள்விக்கு பதில் இதோ .....
இயேசு கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதால், காலத்திலும், வல்லமையிலும், அறிவிலும் இரண்டாந்தர நிலையிலே இருக்கிறார்!!!! இதை அடிப்படையில் கொண்டு ஜோனின் கேள்வியாகிய "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" என்ற பதிவுக்கும் விடை. அடுத்து இயேசு பூமியில் இருந்தபோது, இயேசு மனிதனாய் இருந்தார். எனினும் கடவுளே இயேசுவின் உயிர் - சக்தியே மரியாளின் கர்ப்பத்துக்கு மாற்றி இருந்ததால் பரிபூரணராய் இருந்தார். ஆனால் அவர் தொடக்கம் அவ்வாறில்லை. தாம் "பரலோகத்திலிருந்திறங்கின" ரென அவர் தாமே அறிவித்தார். (யோவான் 3 :13 ) ஆகவே, தம்மைப் பின்பற்றினோரிடம்: "மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?" என்று பின்னால் அவர் சொன்னது இயல்பானதே!!! (யோவான் 6 :62 )
இவ்வாறு, இயேசு பூமிக்கு வருவதற்கு முன்னால் பரலோகத்தில் வாழ்ந்திருந்தார். ஆனால் சர்வவல்ல, நித்திய திருத்துவ கடவுளடங்கிய ஆட்களில் ஒருவராகவா? இல்லை, ஏனெனில், தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்னான வாழ்கையில், இயேசு, தூதர்கள் கடவுள் சிருஷ்டித்த ஆவி ஆட்களாய் இருந்தது போல், சிருஷ்டிக்கப்பட்ட ஆவி ஆளாய் இருந்தாரென பைபிள் தெளிவாய் கூறுகிறது. தூதர்களோ இயேசுவோ தாங்கள் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னாள் இருக்கவில்லை.
இயேசு, தம் மனிதவாழ்க்கைக்கு முன்னான வாழ்கையில், "சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறு" ஆக இருந்தார். (கொலேசயர் 1 :15 ) அவர் "கடவுளுடைய சிருஷ்டிப்பின் தொடக்கம்" (வெளிப் 3:14 ). "தொடக்கம்" (கிரேக்கில், (அரக்கே) ) என்பதை இயேசு கடவுளுடைய சிருஷ்டிப்பைப் 'தொடங்கினவர்' என்று பொருள் கொள்ளும்படி விளக்குவது சரியல்ல. யோவான், தன் பைபிள் எழுத்துக்களில் அரக்கே என்ற கிரேக்க சொல்லின் பற்பல உருவகைகளை 20 -க்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான். இவை எப்பொழுதும் "தொடக்கம்" என்ற இந்தப் பொதுவான பொருளையே கொண்டு இருகின்றன. ஆம், இயேசு கடவுளுடைய காணக்கூடாத சிருஷ்டிகளின் தொடக்கமாகக் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டார்.
தொடரும் .....
__________________
''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''
பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில், உருவகமான "ஞானம்" கூறும் சொற்களோடு இயேசுவின் தொடக்கத்தைக் குறிப்பிடும் இந்தக் மேற்கோள் குறிப்புகள் எவ்வளவு நெருங்க ஒன்றுக்கொன்று இணைகிறது என்பதைக் கவனியுங்கள்:
12. ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். 22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். 25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், 26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
கடவுள் சிருஷ்டித்தவரை உருவகம் செய்ய "ஞானம்" என்ற பதம் பயன்படுத்தி இருக்கையில், அது உண்மையில் தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்னால் ஆவி சிருஷ்டியாக இருந்த இயேசுவுக்குச் சொல்லணியென அறிஞர் பெரும்பான்மையர் ஒப்புக்கொள்கின்றனர்.
அடுத்து இந்த பதிவுகளுக்கான மேலதிக தகவலைப் பெற என் நண்பர் தேநீர் பூக்கள் எழுதிய பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ? என்ற திரியில் மிக அழகாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தம்முடைய மனித வாழ்க்கைக்கு முந்திய வாழ்க்கையில் "ஞானம்" என்பவராக இயேசு, தாம் "அவருடைய பக்கத்தில், கைதேர்ந்த தொளிலாளனாக" இருந்தார் என நீதிமொழிகள் 8:30 தொடர்ந்து கூறுகிறது. கைதேர்ந்த தொளிலாளனாக அவர் வகித்த இந்தப் பாகத்துக்கு ஒத்திசைய, கொலேசெயர் 1:16 - ல் இயேசுவைக் குறித்து "அவர்மூலம் கடவுள் வானத்திலும் பூமிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்" என சொல்லப்படுகிறது.இதுவே ஜோன் அவர்கள் கேட்ட கேள்வியாகிய "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை". க்கும் பதில் .... தொடரும் ....
-- Edited by Dino on Wednesday 16th of March 2011 09:40:54 PM
__________________
''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''
ஆகவே, தமக்குக் கீழ்ப் பணியாற்றுபவர் என்பதுபோல், இந்தக் கைதேர்ந்த வேலயாலனைக் கொண்டு சர்வவல்லமை உள்ள கடவுள் மற்ற எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். பைபல் இந்தக் காரியத்தைப் பின்வருமாறு சுருக்கிக் கூறுகிறது: "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (1 கொரிந்தியர் 8 :6 )
இந்தக் கைதேர்ந்த தொளிலானடிடமே கடவுள்: "நமது சாயலாக ... மனுஷனை உண்டாக்குவோமாக", என்று சொன்னதில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 1 :16 ) இந்தக் கூற்றில் "நமது" "உண்டாக்குவோம்" என்ற சொற்கள் திருத்துவதைக் சுட்டிக் காட்டுகின்றன வென சிலர் விவாதிக்கின்றனர். ஆனால், 'நமக்காக ஏதாயினும் ஒன்றைக் செய்வோம்' என்று நீங்கள் சொன்னால், இது பல ஆட்கள் ஒருங்கிணைந்து உங்கள் உட்புறத்தில் ஒருவராக இருப்பதைக் குறிப்பாய் உணர்த்துகிறதென ஒருவரும் பொதுவாய் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். வெறுமெனே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்கள் ஏதோவொன்றில் ஒன்றாய்ச் சேர்த்து உழைப்பார்கள் என்றே நீங்கள் பொருள் கொள்கிறீர்கள். அவ்வாறே, கடவுள் "நமது" "உன்காகுவோம்" என்பவற்றைப் பயன்படுதினபோது, அவர் வெறுமென மற்றொரு ஆளை, தம்முடைய முதல் ஆவி சிருஷ்டியே, அந்தக் கைதேர்ந்த தொளிலாலனை, மனிதனாவதட்கு முன்னாளில் இருந்த இயேசுவை, நோக்கிப் பேசினார்.
//ரசலின் மாணவர்கள் நன்றாக மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பது தெரியும். எந்த ஒரு பாபிலோனிய கதையும் சொல்லாமல், வேதத்தை மாற்றி எழுதாமல், மனித போதனையை போதிக்காமல் உங்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவரும் இதுவரை பதில் சொல்லவில்லை. இதற்க்கு நேரடியான பதிலை உங்களால் கொடுக்கமுடியாது என்று தெரிந்தாலும் குறைந்தபட்சம் முயற்சி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்//
இப்ப சொல்லுங்கள் நண்பர் ஜோன் அவர்களே, நாம் பாபிலோனியர் கதை சொல்கிறோமா அல்லது மனித போதனைகளை போதிகிரோமா ?::::: பதிலை தீர்மானிப்பது தங்களின் வேலை ...
__________________
''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''
தேவதூதனுக்கு கால் இல்லை என்பதும் பெரிய தெய்வம் சிறிய தெய்வத்தைப் படைத்து அது உலகத்தைப் படைத்தது என்று சொல்லும் பபிலோனிய மதக்காரர்கள். இவர்களுக்கு வேதம் முக்கியமில்லை. வசனமும் பெரிதல்ல. ரசலின் நூல்கள்தான் வேதப்புத்தகம். இதில் இந்த விபரம் இல்லை போலும் அதான் அமைதியாக இருக்கிறார்கள்.///
நண்பர் கொல்வின் அவர்களே, நாம் அமைதியாக இருப்பதே பாய்வதற்கு தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். சாத்தானின் தூண்டுகோல் (பாபிலோன் வேசியே) மூலம் உங்கள் பொய் தேவனை ஆராதிப்பவர்களுக்கு இவ்வளவு தெனாவட்டு இருக்கும் பொது...... யெகோவா என்னும் நாமம் கொண்ட தேவனையும், அவரின் மகனாகிய இயேசுவை எமது இரட்சகராக கொண்ட நாம் எவ்வளவு தெனாவட்டு காட்டவேண்டும்.
எனது அடுத்த பதிவில் திருத்துவத்தை விடாது பற்றிக்கொண்டு இருக்கும் உம்மைப்போன்றவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன சம்பவிக்க போகின்றது என்பதையும் கொடுக்கிறேன் அல்லது விளக்குகிறேன். உங்கள் போன்றவர்களுக்கு நேரடியாக களத்தில் இறங்கி பதில் சொன்னால் தான் புரிந்துகொள்வீர்கள்: நன்றி
__________________
''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''
//நண்பர் கொல்வின் அவர்களே, நாம் அமைதியாக இருப்பதே பாய்வதற்கு தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். சாத்தானின் தூண்டுகோல் (பாபிலோன் வேசியே) மூலம் உங்கள் பொய் தேவனை ஆராதிப்பவர்களுக்கு இவ்வளவு தெனாவட்டு இருக்கும் பொது...... யெகோவா என்னும் நாமம் கொண்ட தேவனையும், அவரின் மகனாகிய இயேசுவை எமது இரட்சகராக கொண்ட நாம் எவ்வளவு தெனாவட்டு காட்டவேண்டும்.
எனது அடுத்த பதிவில் திருத்துவத்தை விடாது பற்றிக்கொண்டு இருக்கும் உம்மைப்போன்றவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன சம்பவிக்க போகின்றது என்பதையும் கொடுக்கிறேன் அல்லது விளக்குகிறேன். உங்கள் போன்றவர்களுக்கு நேரடியாக களத்தில் இறங்கி பதில் சொன்னால் தான் புரிந்துகொள்வீர்கள்: நன்றி //
சகோ.டினோ வின் அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன். திரித்துவத்தைப் பற்றிக்கொள்வோருக்கு எதிர்காலத்தில் என்ன சம்பவிக்கும் என்பதை அறிய மிக ஆவலாயுள்ளேன்.
திருத்துவ நம்பிக்கைகளை விடாது பற்றிக்கொண்டிருப்போரை அது என்ன நிலையில் வைக்கிறது?
அது அவர்களை மிக ஆபத்தான நிலையில் வைத்து இருக்கிறது. திருத்துவக் கோட்பாடு பைபளில் காணப்படுகிறதும் இல்லை, பைபல் போதிக்கிறதொடு பொருத்தமாயும் இல்லை என்பதற்கு அத்தாட்சி மறுக்கமுடியாது இருக்கிறது. இதற்கான விளக்கம் பைபளில் மற்றும் இந்த தளத்தில் போதிய அளவு விளக்கம் கொடுக்கப்பட்டும் இருக்கிறது. திருத்துவ வாதிகள் உண்மையான கடவுளைப் படுமோசமாய்ச் தவறாகச் திரித்துக் காட்டுகிறது. எனினும், இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்:
''உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்''
இவ்வாறு, தங்கள் வணக்கம் ''உண்மையோடு''' அதாவது கடவுளுடைய சொந்த வார்த்தையில் குறித்துவைக்கப்படுள்ள சத்தியத்தைப் பொருந்த இல்லாதவர்கள், ':-
6 . உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். 7. மாயக்காரரே, உங்களைக்குறித்து: 8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. 9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
இது பைபளின் தெளிவான சத்தியன்களுக்குப் பதில் மனித
பாரம்பரியங்களைப் தெரிந்து கொண்டு ஆதரித்து வாதாடும் இன்று கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ளோருக்கு அதே வலிமையுடன் பொருந்துகிறது.
திருத்துவதைக் குறித்து, அதன் உறுப்பினர் ''புரிந்துகொள்ளமுடியாதவர்கள்''' என்று அதநேசியன் விசுவாசப்பிரமானத்தில் சொல்லிருகிறது. இந்தக் கோட்பாட்டைப் போதிக்கிறவர்கள் அது ''மர்மம்'' என அடிக்கடி கூறுகின்றனர். ''நாங்கள் அறிந்திருகிறதைத் தொளுதுகொள்கிறோம்''' என்று இயேசு சொன்னபோது சந்தேகமில்லாமல், இத்தகைய ஒரு திருத்துவக் கடவுள் இயேசுவின் மனதில் இல்லை.
''நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது'' என்று யோவான் எழுதக் கூடியவராக இருந்தார்.
நீங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் உண்மையில் அறிந்திருக்கிரிர்களா?
1 . வின்னைமையான கேள்விகள் நம் ஒவ்வொருவரையும் எதிர்படுகின்றனர்:- நாம் சத்தியத்தை உள்ளப்பூர்வமாய் நேசிக்கிறோமா? 2 . எல்லாரும் சத்தியத்தை உண்மையாய் நேசிக்கிர்தில்லை. பலர் சத்தியத்தின் மீதும் கடவுள் மீதுமுள்ள அன்புக்கு மேலாகத் தங்கள் உறவினர்களின் மற்றும் கூட்டாளிகளின் அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதைப் வைதிருகின்றனர்.
II தெசலோனிக்கேயர் 2 : 9. அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், 10. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
யோவான் 5 : 39. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 40. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. 41. நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 42. உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். 43. நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். 44. தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
ஆனால், இயேசு தம்முடைய பரலோகப் பிதாவிடம் செய்த ஊக்கமான ஜெபத்தில் சொன்னது போல: ''ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்''' குறிக்கிறது. மேலும் சங்கீதம் 144:15 - ல் வசனம் பின்வருமாறு கூறுகின்றது.:- ''இவ்விதமான சீரைப்பெற்றஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது''.
__________________
''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''