நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தருடைய இராப்போஜனம் - கடவுளைக் கனப்படுத்துகிற ஓர் ஆசரிப்பு!!


Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
கர்த்தருடைய இராப்போஜனம் - கடவுளைக் கனப்படுத்துகிற ஓர் ஆசரிப்பு!!
Permalink  
 


கிறிஸ்துவின் மரணத்தை ஆசரிக்க வேண்டுமென்று கிறிஸ்தவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருகிறது. இந்த ஆசரிப்பு I கொரிந்தியர் 11 : 21 "இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசரிப்பில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதை எப்படி, எப்போது ஆசரிக்கவேண்டும்?

இயேசு கிறிஸ்து இந்த ஆசரிப்பை பொதுசகாப்தம் 33 - ல், யூத பஸ்கா பண்டிகையின் இரவன்று ஆரம்பித்து வைத்தார்.இந்தப் பாஸ்கா பண்டிகை வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே. அதாவது நிசான் என்ற யூத மாதத்தின் 14 - ம் தேதியன்று மட்டுமே கொண்டாடப்பட்டது. அந்தத் தேதியேக் கணக்கிடுவதட்க்கு, முறிப்பிட்ட ஒரு நாளை யூதர்கள் மையமாக வைத்து இருந்தார்கள்; அந்நாள், இளவேனிட்காலத்தில் பகலும் இரவும் ஓரளவு சரிசமமாக இருக்கும் நாளாகும். அந்த நாளுக்குப் பின் எப்போது அமாவாசை வருகிறதோ அப்போதுதான் நிசான் மாதம் துவங்குகிறது. 14 நாட்கள் கழித்து, சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பாஸ்கா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இயேசு தம்முடைய அப்போஸ்தலருடன் பாஸ்காவைக் கொண்டாடினார், பிறகு யூதாஸ் ஸ்க்கரியோதை அனுப்பிவிட்டு கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த இராப்போஜனம் யூத பாஸ்கா பண்டிகைக்குப் பதிலாக ஆசரிக்கப்படுவதால் இது வருடத்திற்க்கு ஒருமுறை மட்டுமே ஆசரிக்கப்பட வேண்டும்.

மத்தேயுவின் சுவிசேஷம் இவ்வாறு சொல்கிறது: மத்தேயு 26 : 26. அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது''. என்றார் தொடரும் ......



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

இயேசு சொல்லர்த்தமாகவே அந்த அப்பத்தை தம்முடைய உடலாகவும், திராட்சரசத்தை தம்முடைய இரத்தமாகவும் மாற்றியதாகச் சிலர் நம்புகிறார்கள். ஆனால், இயேசு அந்த அப்பத்தைக் கொடுத்த சமயத்தில், அவருடைய மாமிச உடல் எந்தக் குறையும் இல்லாமல் நல்லபடியாகவே இருந்தது. இயேசுவின் அப்போஸ்தலர்கள் நிஜமாகவே அவருடைய உடலையும் இரத்தத்தையும் புசித்துக்கொண்டிருந்தார்களா? இல்லை, ஏனென்றால் அது நரமாமிசத்தைச் சாப்பிடுவதாக ஆகி இருக்கும், கடவுளுடைய சட்டத்தை மீறுவதாய் இருந்து இருக்கும்.

ஆதியாகமம் 9 : 3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
4. மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
லேவியராகமம் 17 : 10. இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.

''போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்''. என்று இயேசு சொன்னதாக லூக்கா 22 :20 - ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பாத்திரம் சொல்லர்தமாகவே 'புதிய உடன்படிக்கையாக' மாறியதா? அப்படி ஆகி இருக்கவே முடியாது, ஏனெனில் உடன்படிக்கை என்பது ஒரு பொருள்ளல்ல, அது ஓர் ஒப்பந்தம். தொடரும்....



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

எனவே, அப்பம், திராட்சரசம் ஆகிய இரண்டும் வெறும் அடையாளச் சின்னங்கள் தான். அப்பம் கிறிஸ்துவின் பரிபூரண உடலை அடையாளப்படுதுகிறது.  பாஸ்காவின்போது உபயோகிக்கப்பட்ட அப்பத்தின் மீதியே இயேசு புதிய உடன்படிக்கைக்குப் பயன்படுத்தினார். அந்த அப்பம் புளிப்பிலாமல், அதாவது ஈஸ்ட் சேர்க்கப்படாமல், தயாரிக்கப்பட்டது.
யாத்திராகமம் 12 : 8. அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.

புளிப்பு என்பது பைபளில் பாவத்திற்கு அல்லது கலங்கத்துக்கு அடையாளமாக இருக்கிறது. எனவே, இயேசு பலியாகச் கொடுத்த அவருடைய பரிபூரண, அதாவது பாவமற்ற உடலையே அந்த அப்பம் குறிக்கிறது.-

மத்தேயு
16 : 11. பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

12. அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.

I கொரிந்தியர் 5 : 6. நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
7. ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

I பேதுரு 2 : 22. அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

I யோவான் 2 : 1. என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

சிவப்பு திராட்சரசம் இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கிறது. அந்த இரதம் தான் புதிய உடன்படிக்கயேச் செல்லுபடியாகுக்கிறது. தமது இரத்தம் "பாவ மன்னிப்பைப் உண்டாக்குவதற்குச்" சிந்தப்படுகிறதேன்று இயேசு சொன்னார். இதன் மூலம் தேவனுடைய கண்களில் மனிதர்கள் சுத்தமானவர்களாக ஆகி, புதிய உடன்படிக்கைக்குள் வர முடியும்.
எபிரெயர் 9 : 4. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

எபிரெயர் 10 : 16. அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு,
17. அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.
இந்த உடன்படிக்கையின்; அதாவது ஒப்பந்தத்தின், மூலமே விசுவாசமிக்க கிறிஸ்தவர்களால் பரலோகத்துக்குச் செல்ல முடியும். அங்கே அவர்கள் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருந்து முழு மனிதகுலத்துக்கும் ஆசிவாததைப் பொழிவார்கள். ( ஆதியாகமம் 22 :18 ; எரேமியா 31 :31 -33 ; 1 பேதுரு 2 :9 ; வெளிப்படுதல் 5 :9 ,10 )

இந்த ஞாபகார்த்த சின்னங்கள் யார் புசிக்க வேண்டும்? நியாயமாகவே, புதிய உடன்படிக்கையில் உள்ளவர்கள் மட்டும்தான், அதாவது பரலோகத்துக்குச் செல்லும் நம்பிக்கயுடயவர்கள் மட்டும்தான், அப்பத்தையும் திராட்சரசத்தையும் புசிக்க வேண்டும். அவர்கள் பரலோக ராஜாக்களாகத் தேர்ந்து எடுக்கப்படத்தைச் கடவுளுடைய பரிசுத்த ஆவி அவர்களுடைய மனதிலே உறுதிப்படுத்துகிறது.  (ரோமர் 8 :16 ) அவர்கள் யேசுவுடனும் ராஜ்ய உடன்படிக்கைலும் இருகிறார்கள். லுக்கா 22 :29

பரதிஸ் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய மற்றவர்களைப் பற்றியென்ன?  அவர்கள் இயேசுவின் கட்டளைகளுக்குச் கீழ்ப்படிந்து, கர்த்தருடைய இராப்போஜன நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். பார்வையாளர்களாக மட்டுமே இருந்து அந்நிகழ்ச்சிக்கு மரியாதை காட்டுகிறார்கள், அப்பத்தையும் திராட்சரசத்தையும் அவர்கள் புசிப்பதில்லை. வருடத்துக்கு ஒருமுறை, நிசான் 14 அன்று சூரிய அஸ்தமனதுகுப் பின் நாம் கர்த்தருடைய இராப்போஜணத்தை ஆசாரிகிறோம். உலகமெங்கும் சில ஆயிரம் பேர் மட்டுமே தங்களுக்குப் பரலோக நம்பிக்கை இருப்பதாகச் சொன்னாலும், எல்லா கிறிஸ்தவர்களுமே இந்த ஆசரிப்புமிக்க மதிப்புமிக்க ஒன்றாக இருக்கிறது. யேகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் காண்பித்துள்ள மிக உயர்ந்த அன்பைப் பற்றி நாம் எல்லோருமே சிந்தித்துப் பார்ப்பதற்க்கு அது ஏற்ற சமயமாக இருக்கிறது.- யோவான் 3 :16



-- Edited by Dino on Sunday 10th of April 2011 05:16:09 PM



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: கர்த்தருடைய இராப்போஜனம் - கடவுளைக் கனப்படுத்துகிற ஓர் ஆசரிப்பு!!
Permalink  
 


இராப்போஜனம் குறித்த சகோ.டினோவின் பதிவுகள் அனைத்தும் வேத போதனைக்கு உட்பட்டதாகவே அறிகிறேன்.

ஆகிலும் புதிய ஏற்பாட்டின் “இராப்போஜனம் மற்றும் ஞானஸ்நானம்” ஆகியவை, பழைய ஏற்பாட்டின் “விருத்தசேதனம் மற்றும் பலி” ஆகியவற்றிற்கு ஒத்ததாகவே நான் கருதுகிறேன்.

விருத்தசேதன கட்டளை என்பது நித்திய உடன்படிக்கையாகத்தான் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

ஆதியாகமம் 17:13,14 உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.

இப்படி நித்திய உடன்படிக்கையாகவும், விருத்தசேதனம் செய்யாதவன் அறுப்புண்டு சாவான் என்ற அளவுக்கு கண்டிப்பானதாகவும் கொடுக்கப்பட்ட விருத்தசேதன கட்டளையே ஒன்றுமில்லை என பவுல் கூறுகிறார்.

1 கொரி. 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

ரோமர் 2:28,29 ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

நித்திய உடன்படிக்கையான விருத்தசேதனமே ஒன்றுமில்லையென்றும், தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே முக்கியம் என்றும் பவுல் கூறுகிறார்.

அவ்வாறே பலியைக் குறித்து பற்பல விதமான கண்டிப்பான பல கட்டளைகளை தேவன் கொடுத்திருந்த போதிலும், இயேசு பின்வருமாறு கூறினார்.

மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.

தேவனும்கூட தமது தீர்க்கதரிசி மூலம் பின்வருமாறு கூறினார்.

ஏசாயா 1:10,11 சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. (தொடர்ந்து 20-ம் வசனம் வரை படித்துப் பார்க்கவும்)

இப்படியிருக்க, கண்டிப்பாக இல்லாமல் தமது நினைவுகூருதலுக்காக மட்டும் செய்யும்படி இயேசு கேட்டுக்கொண்ட இராப்போஜன ஆசரிப்பு நிச்சயம் பிரதானமானதல்ல என்பது எனது கருத்து.

இதைக் குறிப்பிட்ட நாளில் செய்யும்படி பிரயாசப்படுவோரை நான் எவ்விதத்திலும் குறைவாகக் கருதவில்லை. ஆனால் இதற்காக எடுக்கிற பிரயாசத்தைக்காட்டிலும் பலமடங்கு பிரயாசத்தை இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்வதில் எடுக்காதிருந்தால், இராப்போஜன பிரயாசத்தால் பிரயோஜனம் ஒன்றுமில்லை என நான் கருதுகிறேன்.

அவ்வாறே சடங்காச்சார தண்ணீர் ஞானஸ்நானத்தை கட்டாயமாகக் கருதி அதைப் பிரதானப்படுத்துவதாலும் பயனில்லை என நான் கருதுகிறேன்.

ஞானஸ்நானத்தைப் பற்றி பல வசனங்களில் எழுதின பவுல்கூட, ஞானஸ்நான அடிப்படையில் பிரிவினைகள் உண்டானபோது பின்வருமாறு கூறினார்.

 1 கொரி. 1:17 ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

இந்நாட்களில் பவுல் நம்மிடையே இருந்தால், நம் மத்தியில் ஞானஸ்நானத்தை வலியுறுத்திக்கொண்டும் அதனடிப்படையில் பிரிவினையை உண்டாக்கிக்கொண்டும் இருப்பவர்களைப் பார்த்து இப்படித்தான் கூறியிருப்பார்.

“ஞானஸ்நானமும் ஒன்றுமில்லை, ஞானஸ்நானமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.”

பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனம் மற்றும் பலியை நிறைவேற்றுவதில் சரீர வேதனையும் உண்டு, பண இழப்பும் உண்டு, பொருள் இழப்பும் உண்டு. ஆனால் புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நானம் மற்றும் இராப்போஜன ஆசரிப்பில் சரீர வேதனையும் கிடையாது, பண இழப்பும் கிடையாது, பொருள் இழப்பும் கிடையாது. எனவே ஞானஸ்நானம் மற்றும் இராப்போஜன ஆசரிப்புகள் மிக மிக எளிதானவைகளே.

இவற்றை ஆசரித்தால்தான் நித்தியஜீவன் என்ற அடிப்படையில் எந்த வசனமும் இல்லை. ஆனால் பிறரோடு அன்புகூர்தல் மற்றும் பரிசுத்த வாழ்வு வாழ்தல் போன்றதன் அடிப்படையிலான கற்பனைகளைக் கைக்கொண்டால்தான் நித்தியஜீவன் எனக் கூறுகிற வசனங்கள் பலவுண்டு. எனவேதான் அவற்றையே நான் எப்போதும் பிரதானமாகக் கூறி வலியுறுத்தி வருகிறேன்.

சகோ.டினோ அவர்களே! இராப்போஜனம் சம்பந்தமான தங்கள் பதிவுகளை நான் சற்றும் மட்டுப்படுத்தவில்லை. ஆனால் இராப்போஜனத்தில் நாம் காட்டுகிற அக்கறையைக் காட்டிலும் பலமடங்கு அக்கறையை இயேசுவின் பிறகற்பனைகள் விஷயத்தில் எடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது அவா.

தங்கள் பதிவுகளுக்கு நன்றி. தொடர்ந்து இராப்போஜனம் தொடர்பாக தாங்கள் கூறவிழைவதை சற்றும் தடங்கலின்றி கூறுங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

///இப்படியிருக்க, கண்டிப்பாக இல்லாமல் தமது நினைவுகூருதலுக்காக மட்டும் செய்யும்படி இயேசு கேட்டுக்கொண்ட இராப்போஜன ஆசரிப்பு நிச்சயம் பிரதானமானதல்ல என்பது எனது கருத்து.

இதைக் குறிப்பிட்ட நாளில் செய்யும்படி பிரயாசப்படுவோரை நான் எவ்விதத்திலும் குறைவாகக் கருதவில்லை. ஆனால் இதற்காக எடுக்கிற பிரயாசத்தைக்காட்டிலும் பலமடங்கு பிரயாசத்தை இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்வதில் எடுக்காதிருந்தால், இராப்போஜன பிரயாசத்தால் பிரயோஜனம் ஒன்றுமில்லை என நான் கருதுகிறேன்.///

//இவற்றை ஆசரித்தால்தான் நித்தியஜீவன் என்ற அடிப்படையில் எந்த வசனமும் இல்லை. ஆனால் பிறரோடு அன்புகூர்தல் மற்றும் பரிசுத்த வாழ்வு வாழ்தல் போன்றதன் அடிப்படையிலான கற்பனைகளைக் கைக்கொண்டால்தான் நித்தியஜீவன் எனக் கூறுகிற வசனங்கள் பலவுண்டு. எனவேதான் அவற்றையே நான் எப்போதும் பிரதானமாகக் கூறி வலியுறுத்தி வருகிறேன்.

சகோ.டினோ அவர்களே! இராப்போஜனம் சம்பந்தமான தங்கள் பதிவுகளை நான் சற்றும் மட்டுப்படுத்தவில்லை. ஆனால் இராப்போஜனத்தில் நாம் காட்டுகிற அக்கறையைக் காட்டிலும் பலமடங்கு அக்கறையை இயேசுவின் பிறகற்பனைகள் விஷயத்தில் எடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது அவா.///

சகோதரர் அன்பு அவர்களே; அருமையான விளக்கத்தை கொடுத்து என்னை தெளிவடைய வைத்து உள்ளீர்கள். யோசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் உங்கள் பதிவுகள் நான் முதல் தடவையாக கேள்விப்படுகிறேன்  (புதியவையாக)  தகவலுக்கு நன்றி .



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

//சகோதரர் அன்பு அவர்களே; அருமையான விளக்கத்தை கொடுத்து என்னை தெளிவடைய வைத்து உள்ளீர்கள். யோசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் உங்கள் பதிவுகள் நான் முதல் தடவையாக கேள்விப்படுகிறேன்  (புதியவையாக)  தகவலுக்கு நன்றி .//

புரிந்துகொள்தலுக்கு நன்றி சகோதரரே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard