தேவனுடைய பெரிதான கிருபையுடன், உங்கள் மகனுடைய திருமணத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. அவர்களுடைய திருமண புகைபட்த்தை தங்களது தளத்தில் வெளியிட்டால் இன்னும் நன்றாயிருக்கும். கர்த்தர்தாமே மணமக்களை முடிவுபரியந்தம் காத்து, ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
என்னுடைய பெயர் ஜோசப்ராஜ். சென்னையில் வசிக்கின்றேன். தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். ரோமன் கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்த என்னை ஆண்டவர் தம்முடைய அளவற்ற கிருபையினால் இரட்சித்தார். வேத வசன்ங்கள் மீது மிகுந்த வாஞ்சையுடையவன். கூடுமானால் எல்லாரோடும் சமாதானமாயிருக்க விரும்புகிறவன்.
உங்களுடைய நேர்மையான அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். வேதத்தை குறித்து எழும் சந்தேகங்களுக்கு வேதவசனங்களை கொண்டே விளக்கும் / விடை அளிக்கும் அற்புதமான தாலந்தை தேவன் உங்களுக்கு தந்திருக்கின்றார்.
ஆனால் இயேசு தொழுதுகொள்ளபடத்தக்கவரா என்ற விஷயத்தில் நீங்கள் யெகோவா சாட்சியினர்களோடு சேர்ந்து இல்லை என்று மறுதலிப்பது ஆச்சரியமாக உள்ளது. ஆகவே இக்காரியத்தை குறித்து என்னுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என்று எழுத ஆரம்பித்தேன். ஆனால் அது இப்பொழுது 33 பக்கங்கள் கொண்ட பெரிய கட்டுரை ஆனது.
ஆகவே நீங்கள் விரும்பினால் (ஏனென்றால் உங்கள் கருத்துகளுக்கு எதிராக எழுதப்பட்டது) உங்கள் தளத்தில் வெளியிட விரும்புகிறேன்.
வரவேற்ப்புக்கும், அனுமதி அளித்தற்கும்நன்றி. இன்னும் சில கருத்துக்கள் சேர்க்கப்படவேண்டியதாய் இருக்கின்றது. ஆகவே முழுமையாக முடித்தபிறகு ஓரிரு நாட்களில் வெளியிடுகிறேன்.
சத்தியத்தை நீங்களும் மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற வாஞ்சையுடனே ஜெபத்துடன் எழுதியிருக்கின்றேன். PDFஃபார்மேட்டாக உள்ளது. எப்படி displayஅல்லது attach பண்ண வேண்டும் என்று தெரியவில்லை.
உதவுவீர்களா?Attach இமேஜில் கிளிக் செய்தால் ஏற்றுகொள்ளமாட்டேன் என்கிறது.
தங்கள் PDF Format file-ஐ இத்தளத்தில் ஏற்ற வழியில்லை என்றே கருதுகிறேன். எனவே தங்கள் file-ஐ எனது இ-மெயிலுக்கு attach செய்து அனுப்புங்கள். நான் அதை ஏதேனும் server-ல் upload செய்து, அதற்கான link-ஐ தருகிறேன்.
என்னுடைய வேண்டுகோளை ஏற்று நீங்கள் செய்த மிகப்பெரிய உபகாரத்திற்காக மிக்க நன்றி சகோ.அன்பு அவர்களே,
(Matt 10:42)
……………. இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இந்த வசனத்தின்படி உங்கள் பலனை நீங்கள் சீக்கிரமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
இக்கட்டுரையில் சொல்லப்பட்ட வேதவசனங்கள் / சத்தியங்கள் உங்களையும் மற்றவர்களையும் ஈர்த்து ஆண்டவராகிய இயேசுவை இன்னும் அதிகமாய் நேசிக்கவும், தொழுதுகொள்ளவும் செய்யுமானால், இன்னும் அதிகமாய் சந்தோசப்படுவேன்.
தங்களுக்கென எந்த விசேஷித்த உபகாரத்தையும் நான் செய்ததாகக் கருதவில்லை. தேவன் எனக்குத் தந்த சிறு பணியை நிறைவேற்றினேன், அவ்வளவே!
மத்தேயு 10:41-க்கும் எனது இப்பணிக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. ஆயினும் அவ்வசனத்தின்படியான பலன் எனக்குக் கிடைக்கும்படி நீங்கள் வேண்டிக்கொண்டதற்காக எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
தாங்கள் PDF File-ல் உருவாக்கின கட்டுரையை, Notepad File-ஆக நான் உருவாக்கியுள்ளேன். அதில் ஒருசில திருத்தங்கள் மற்றும் modifications செய்தபின், பகுதி பகுதியாகப் பிரித்து விரைவில் இத்திரியில் பதிவிடுகிறேன்.
தங்களது நீண்ட கட்டுரையை ஓரளவு படித்தேன். இன்னும் ஆழமாகப் படித்தபின் அதற்கான என் பதிலைத் தருகிறேன். அதுவரைப் பொறுத்திருங்கள்.
நண்பர் ஜோஸப் அவர்களின் கட்டுறையில் என் பெயரும் வந்ததினால் நானும் பதில் தருகிறேன்!! இங்கு இல்லை, ஏனென்றால், அன்பர் அன்பு அவர்கள் இன்னும் ஆழமாக படித்து விட்டு பதில் தருவதாக எழுதியிருப்பதால், என் பதில் அவர் எண்ணங்களை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதற்காக நண்பர் ஜோஸப் அவர்களின் பதிவிற்கான விளக்கங்களை கோவைபெரேயன்ஸ் தளத்தில் தருகிறேன்.
அன்புள்ள Bereans, anbu57 என்னால் முடிந்த இரண்டு வாக்கியங்களை உங்களுக்கு சொல்கிறேன்.
அப்போ 9 : 4 - அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
அப்போ 9 : 5 - அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
இந்த இரண்டாம் வாக்கியத்தை கவனமாக கவனித்தீர்கள் ஆனால் இதில் இயேசுவும், கர்த்தரும் ஒரே தேவன் என்பதை அறித்து கொள்ளலாம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென்.