நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வமா - சகோ.ஜோசப்பின் பதில்


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வமா - சகோ.ஜோசப்பின் பதில்
Permalink  
 


ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா எனும் பட்டப்பெயர் ஒற்றுமையை வைத்து, பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசுவும் ஒருவரே என வாதம் செய்கிற சகோ.ஜோசப் அவர்களே!

பிதாவாகிய தேவன் மட்டுமே வேதாகமத்தில் “தேவாதி தேவன்” என அழைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். உதாரணம்:

உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.


ஒருவேளை குமாரனாகிய இயேசுவையும் “தேவாதி தேவன்” என வேதாகமம் எங்கேனும் கூறியிருந்தால் அதை எனக்குத் தெரியப்படுத்தும்படி வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 26
Date:
இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வமா - சகோ.ஜோசப்பின் பதில்
Permalink  
 


Bro.Anbu wrote:

//அன்பான சகோதரரே!

எஸ்தர் 1:1-ல் கூறப்பட்டுள்ளவர் அர்தசஷ்டா அல்ல, அகாஸ்வேரு என்பவர்.//

சகோ.அன்பு அவர்களே,

அர்தசஷ்டாவும், அகாஸ்வேருவும் ஒருவரே என்பதை கீழ்காணும் விளக்கங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

(Ezra 4:6)

அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.

(Ezra 4:7)

அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.

(Ezra 4:8)

ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:

 

REMARKS ON THE BOOK OF ESTHER. This Book, which derives its name from the person whose history it chiefly relates, is termed in Hebrew, [megill  'Ect ,] megillath Esther, "the volume of Esther."  Concerning its author there are various opinions: some attribute it to Ezra; some to Joachim, the son of Joshua the high priest; others to the men of the great synagogue; and others to Mordecai, which seems the most probable opinion.  The events here related probably refer to the time of Artaxerxes Longimanus, who, according to Prideaux, was the Ahasuerus of Esther, agreeably to Josephus, (Ant. 1 xi. c.  6,) the Septuagint version, and the apocryphal additions to this book. The history, therefore, comes in between the sixth and seventh chapters of Ezra, commencing about A.M. 3540, and continuing through a period of twelve years:



__________________


Veteran Member

Status: Offline
Posts: 26
Date:
RE: இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வமா - சகோ.ஜோசப்பின் பதில்
Permalink  
 


Bro.Anbu wrote:

//இனி, அர்தசஷ்டாவின் காலகட்டத்தில் வேறு யாரும் அவருக்கு இணையாய் ராஜாதிராஜாவாய் அழைக்கப்பட்டார்களா / இருந்திருக்கின்றார்களா எனும் உங்கள் கேள்விக்கான பதில்.

என்ன சகோதரரே! பிதாவாகிய தேவன் சதாகாலங்களிலும் உயிரோடிருப்பவர்தானே? அவர் சதாகாலங்களிலும் ராஜாதி ராஜாவாகவும் இருக்கிறார் தானே? அவ்வாறெனில் அர்தசஷ்டாவின் காலத்தில் அர்தசஷ்டாவும் ராஜாதி ராஜாவாக இருந்துள்ளார், பிதாவாகிய தேவனும் ராஜாதி ராஜாவாக இருந்துள்ளார், அப்படித்தானே? எனவே உங்கள் வாதப்படி பார்த்தால், அர்தசஷ்டாவின் காலத்தில்அர்தசஷ்டாவும் பிதாவாகிய தேவனும் ஒருவரே, அப்படித்தானே? அவ்வாறே நேபுகாத் நேச்சாரின் காலத்தில் நேபுகாத் நேச்சாரும் பிதாவாகிய தேவனும் ஒருவரே, அப்படித்தானே?

ராஜாதி ராஜா எனும் பட்டப்பெயரைக் கொண்டுள்ளதன் அடிப்படையில், இயேசுவின் காலத்தில் இயேசுவும் பிதாவாகிய தேவனும் ஒருவரே எனக் கூறும் நீங்கள், மேற்கூறிய கூற்றுக்களையும் ஏற்கத்தான் வேண்டும். அவற்றை ஏற்கிறீர்களா இல்லையா என்பதை முதலில் கூறும்படி வேண்டுகிறேன்.//

 

நீங்கள் திரும்ப திரும்ப அதே இடத்திலேயே நிற்கிறீர்கள். நான் சற்று விளக்கமாக கூறட்டும். முழு வேதாகமத்திலும் ராஜாதி  ராஜா, கர்த்தாதி கர்த்தர் என இரண்டு பேர் மாத்திரமே அழைக்கப்படுகின்றார்கள். ஒருவர் பிதா, மற்றொருவர் இயேசு. வேறு யாரும் அல்ல. ஆக அவர்கள் இருவர், எப்படி ஒருவராக இருகின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளும்படி, ஒரே சமயத்தில் ஒருவர்தான் ராஜாதி ராஜாவாக இருக்கமுடியும் என்று ஏற்கனவே விளக்கிவிட்டேன். அதுபோல் கர்த்தாதி கர்த்தர் என்பதை குறித்தும் ஒரே ஒரு கர்த்தர்தான் இருக்கின்றார் என்றும் வேதவசனங்கள் மூலம் எடுத்துக்காண்பித்தேன்.

 

ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட அர்த்தசாஷ்டாவும், நேபுகாத்நேச்சாரும் அப்படி ராஜாதி ராஜா மற்றும் கர்த்தாதி கர்த்தர் என ஒருசேர அழைக்கப்பட்டிருந்தால் உங்கள் வாதம் நியாயமானது. ஆனால் அவர்கள் வெறும் ராஜாதி ராஜா என்று மட்டுமே அழைக்கப்பட்டார்கள். கர்த்தாதி கர்த்தர் என அழைக்கப்படவில்லை. பின்பு ஏன் நீங்கள் தேவையில்லாமல் அவ்விரு ராஜாக்களையும் பிதாவோடு ஒப்பீடு செய்கிறீர்கள் என்று புரியவில்லை?.



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வமா - சகோ.ஜோசப்பின் பதில்
Permalink  
 


joseph wrote:
//ஆக அந்த எல்லா ராஜாக்களுக்கும் மேலே ஒரு ராஜா இருக்கின்றார். அவர்தான் ராஜாதிராஜா என்று அழைக்கப்படுகின்றார். அப்படியென்றால் ராஜாக்களாக எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்க முடியும். ஆனால் ராஜாதிராஜாவாக ஒருவர்தான் இருக்கமுடியும். இரண்டு பேர் அல்ல. அதுபோலவே தேவாதி தேவன் (தேவர்களுக்கெல்லாம் தேவன்), கர்த்தாதி கர்த்தர் (கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தர்) என்ற பதமும் ஒருவரை மட்டும் குறிக்கும் பதங்களாகும்.//

உங்களது மற்றுமொரு வாதத்தையும் படியுங்கள்.

//அதாவது ராஜாதிராஜாவாக இரண்டு பேர் ஒரே சமயத்தில் ஆட்சி செய்யமுடியாது என்ற அர்தத்திலேயே கூறியிருக்கின்றேன். உங்கள் உதாரணத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன். அர்தசஷ்டா என்கிற ராஜாதிராஜா 127 நாடுகளை அரசாண்டான் என்று எஸ்தர் 1:1 சொல்லுகிறது.

(Esth 1:1) இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

அப்படியென்றால் 127 நாடுகளிலும் ராஜாக்கள் இருந்திருக்கின்றார்கள். ஆனால் அர்தசஷ்டாவோ அந்த 127 ராஜாக்களுக்கும் மேலாய் ராஜாதிராஜாவாய் இருந்திருக்கின்றார். அவருடைய காலகட்டத்தில் வேறு யாரும் அர்தசஷ்டாவுக்கு இணையாய் ராஜாதிராஜாவாய் அழைக்கப்பட்டார்களா / இருந்திருக்கின்றார்களா என்பதை நிரூபிக்கும்படி வேண்டுகிறேன்.//

உங்களது இந்த வாதங்களுக்குப் பதிலாகத்தான், அர்தசஷ்டாவின் காலத்தில் பரலோக தேவனும் ராஜாதி ராஜாவாக இருந்தார் எனக் கூறினேன். ஆனால் இப்போது இப்படிக் கேட்கிறீர்கள்.

//ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட அர்த்தசாஷ்டாவும், நேபுகாத்நேச்சாரும் அப்படி ராஜாதி ராஜா மற்றும் கர்த்தாதி கர்த்தர் என ஒருசேர அழைக்கப்பட்டிருந்தால் உங்கள் வாதம் நியாயமானது. ஆனால் அவர்கள் வெறும் ராஜாதி ராஜா என்று மட்டுமே அழைக்கப்பட்டார்கள். கர்த்தாதி கர்த்தர் என அழைக்கப்படவில்லை. பின்பு ஏன் நீங்கள் தேவையில்லாமல் அவ்விரு ராஜாக்களையும் பிதாவோடு ஒப்பீடு செய்கிறீர்கள் என்று புரியவில்லை?.//

தற்போது உங்கள் வாதத்தின்படியே வருகிறேன்.

பிதாவாகிய தேவன் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தாவாக இருப்பது மட்டுமின்றி, ஏக சக்கராதிபதியும், சாவாமையுள்ளவருமாய் இருப்பதாகவும், மனுஷரால் காணக்கூடாதவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவருமாய் இருப்பதாக 1 தீமோ. 6:15,16 கூறுகின்றன. ஆனால் இயேசுவோ ராஜாதி ராஜாவாக கர்த்தாதி கர்த்தாவாக மட்டுமே இருப்பதாக வெளி. 17:14 கூறுகிறது.

ஒருவேளை இயேசுவைக் குறித்தும் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா, ஏக சக்கராதிபதி, சாவாமையுள்ளவர், மனுஷரால் காணக்கூடாதவர், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் என ஒருசேரக் கூறியிருந்தால் உங்கள் வாதம் நியாயமானது. ஆனால் அவர் வெறும் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்று மட்டுமே கூறப்பட்டுள்ளார். ஏக சக்கராதிபதி, சாவாமையுள்ளவர், மனுஷரால் காணக்கூடாதவர், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் என்றெல்லாம் அழைக்கப்படவில்லை. பின்பு ஏன் நீங்கள் தேவையில்லாமல் அவரை பிதாவோடு ஒப்பீடு செய்கிறீர்கள் என்று புரியவில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

என்னுடைய புரிதலின் அடிப்படையில் இந்த  திரியில்  பதிவிடப்பட்டுள்ள இரண்டுபேர்கள் கருத்துக்களிலும் சில நிறை குறைகள் இருப்பதால் யாருக்கு ஆதரவாக கருத்தை பதிப்பது என்பது சற்று குழப்பமாக உள்ளது. ஆயினும் மிக முக்கியமாக இயேசுவானவரை தேவத்துவத்தில் ஒருவர்
என்று நிரூபிக்கும் பிரதான அவசியம் இங்கு  இருப்பதால் அதனைச் சார்ந்தே என்னுடைய பதிவை  முன்வைக்கிறேன்.
 
தேவனைக்  குறித்தும் இயேசுவைக் குறித்தும் பல  அடைமொழிகள் வேதத்தில் சொல்லப்பட்டிருந்தாலும்  சில வசனம் சொல்கிறபடி தேவனாகிய கர்த்தரைப் பற்றி குறிப்பிடும்போது  "தேவாதி தேவன்" "கர்த்தாதி கர்த்தர்"  "ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவர்" மனுஷரால் காணக்கூடாதவர்" என்றும்:
 
உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்;
 
யோசுவா 22:22 தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்;
 
16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்
 
இயேசுவை பற்றி குறிப்பிடும்போது "ராஜாதி ராஜா" "கர்த்தாதி கர்த்தர்" 'தேவ ஆட்டுக்குட்டி" "அடிக்கபட்ட ஆட்டுக்குட்டி"  "மனுஷ குமாரன்" "தேவ குமான்"   போன்ற  அடைமொழிகளும்   பயன்படுத்தபட்டுள்ளது:   
 
வெளி 17:14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; 
 
வெளி 19:16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி

இருவரும் தனிதனி ஆள்தத்துவம் உள்ளவர்களாக இருந்தும்  இருவரும் வேறுவேறு அல்ல ஒருவரில் ஒருவரே என்பதை நாம் கீழ்கண்ட வசனங்கள்
மூலம் அறிய முடியும்!
 
மாற்கு 12:29  : இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
 
ஒரே ஒரு கர்த்தர்தான் அந்த ஒரே கர்த்தர் யாரென்று வேதம் சொல்கிறது?
 
I கொரிந்தியர் 8:6  இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

இவ்வசனங்கள் மூலம் தேவனும் இயேசுவும் முற்றிலும்  வேறுவேறு அல்ல (முக்கியமாக மிகவேல் தூதன் அல்ல) என்பதை அறிய முடியும்.  ஏனெனில் கர்த்தர் தனது மகிமையை வேறொருவனுக்கு கொடுப்பதில்லை என்று சொல்லியிருக்கிறார்.   

இங்கு என்னுடைய புரிதல் என்னவெனில்:

மனுஷர் ஒருவரும் காணக்கூடாத நிலையில் "தேவாதி தேவனும்" "கர்த்தாதி கர்த்தரும்" "ராஜாதி ராஜாவுமாக" இருக்கும்  பிதாவாகிய தேவன், ஆண்டவராகிய இயேசுவை தனது சத்துவத்திலிருந்து (வார்த்தையில் இருந்து) ஜெனிப்பித்து, அவருக்கு தன்னுடய  தகுதிகளை கொடுத்தார். அல்லது தன்னிடமிருந்து தகுதிகளை கொண்டு "இயேசு கிறிஸ்து" என்னும் குமாரனை ஜெனிப்பித்து தன்னுடய அதிகாரங்களை அவருக்கு கொடுத்துள்ளார்.
 
இரண்டு ஆள்தத்துவமாக இருவரும் இருவரும் ஒருவரே!
 
ஆனால் ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தையின் அடிப்படையில்
"பிதாவாகிய தேவன் எல்லோரிலும் பெரியவர்" என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும். ஏனெனில் "தேவாதி தேவன்" என்ற அடைமொழியானது  தேவனுக்கு மட்டுமே உரியது. அவ்வடைமொழி  "வல்லமையுள்ள தேவன்" என்று குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டவராகிய இயேசுவுக்கும் அவரே தேவன் என்ற கருத்தை நமக்குஉணர்த்துகிறது.
 
எபேசியர் 1:17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர்
 
என்று பிதாவைக்குறித்து வேதம் சொல்கிறது!.
 
சுருங்க சொல்லின்: தேவன் தன்னுடைய வார்த்தையை மாம்சமாக்கி தன்னுடய அனேக சத்துவங்களை அவருக்குள் கொடுத்தார்! அவர்மூலம் எல்லாவற்றையும் படைத்தார். அவருள் தானே வந்து பரிபூரணமாக வாசம் பண்ணினார். அவரே "ஆண்டவராகிய இயேசு". இவை அனைத்தையும், ஒருவராய் சாகாமை  உடையவராக இருந்து செய்துகொண்டிருக்கும்
தேவன்  "தேவாதி தேவனும்" எல்லோரிலும் பெரியவராகவும் இருக்கிறார்.


__________________


Veteran Member

Status: Offline
Posts: 26
Date:
Permalink  
 

Bro.Anbu wrote:

//ஒருவேளை இயேசுவைக் குறித்தும் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா, ஏகச்சக்கரபாதி, சாவாமையுள்ளவர், மனுஷரால் காணக்கூடாதவர், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் என ஒருசேரக் கூறியிருந்தால் உங்கள் வாதம் நியாயமானது. ஆனால் அவர் வெறும் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்று மட்டுமே கூறப்பட்டுள்ளார். ஏகச்சக்கரபாதி, சாவாமையுள்ளவர், மனுஷரால் காணக்கூடாதவர், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் என்றெல்லாம்அழைக்கப்படவில்லை. பின்பு ஏன் நீங்கள் தேவையில்லாமல் அவரை பிதாவோடு ஒப்பீடு செய்கிறீர்கள் என்று புரியவில்லை.//

ஏகச்சக்கரபாதிஎன்று அல்ல ஏக சக்கராதிபதி என திருத்திக்கொள்ளுங்கள்.

சரி, இயேசு, பிதாவாகிய தேவனைப்போல் ஏக சக்கராதிபதி, சாவாமையுள்ளவர், மனுஷரால் காணக்கூடாதவர், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் என்றெல்லாம் அழைக்கப்படவில்லை. உண்மைதான். (அதற்கு ஒரு காரணம் இயேசு உலகத்தில் வந்தபோது பிதாவாகிய தேவன் என்ற ஸ்தானத்தில் வராமல் மனிதர்களாகிய நம்முடைய பிரதிநிதியாய் மனுஷகுமாரனாய் வந்தார், மனுக்குலத்தின் பாவங்களை போக்கும்படியாய் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கும் ஆட்டுக்குட்டியாய் மீட்பை ஏற்படுத்த வந்தார்)

ஆனாலும் அவ்வாறு நேரடியாக அழைக்கப்படாவிட்டாலும், மேற்கண்ட இந்த வார்த்தைகள் எல்லாம் இயேசுவுக்கும் பொருந்தும் என்றும், அந்த தகுதி அவருக்கு உண்டு என்பதையும் கீழ்காணும் வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1. ஏக சக்கராதிபதி என்றால்

G1413 δυνάστηςdunastes (doo-nas'-tace) n.

1. a ruler or officer

[from G1410]

KJV: of great authority, mighty, potentate

Root(s): G1410

[?]

அதாவது சகல அதிகாரங்களையும் உடையவர் என்று அர்த்தம். இப்பொழுது

(Matt 28:18) அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2. சாவாமையுள்ளவர்

(Rev 1:18) மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவு கோல்களை உடையவராயிருக்கிறேன்.

(Rom 6:9) மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்வதில்லை.

3. மனுஷரால் காணக்கூடாதவர்

பிதாவாகிய தேவன் மனுஷரில் ஒருவரும் காணக்கூடாதவர் என்று இவ்வசனம் சொல்லுகிறது. ஆனால் அதே வேதத்தில் மனுஷர் பிதாவை கண்டார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

(John 14:7) என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

(John 14:9) அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

(John 15:24) வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

4. சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர்

பிதா எங்கே வாசம் செய்கிறாரோ அங்கே இயேசுவும் இருக்கின்றார் என்று கீழ்காணும் வசனங்கள் சொல்லுகிறது.

(John 14:2) என் பிதாவின் வீட்டில் அநேகவாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்.

(John 16:5) இப்பொழுது நான்என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில்ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.

(John 16:16) நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.

(John 16:28) நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.

 ஆகவே இயேசுவும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவரே.



__________________


Veteran Member

Status: Offline
Posts: 26
Date:
Permalink  
 

Bro.Anbu wrote:

//பின்பு ஏன் நீங்கள் தேவையில்லாமல் அவரை பிதாவோடு ஒப்பீடு செய்கிறீர்கள் என்று புரியவில்லை.//

 

சகோ.அன்பு அவர்களே, நானல்ல, இயேசுவே தம்மை பிதாவோடு ஒப்பீடு செய்கிறார்.

(John 8:16)............., நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

(John 10:30) நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

(John 14:7) என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

(John 14:9) அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

(John 15:24) வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

இப்பொழுதும் புரியவில்லை என்றால், ஆண்டவர் இயேசுவினிடமே கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.



__________________


Veteran Member

Status: Offline
Posts: 26
Date:
Permalink  
 

சகோ.அன்பு அவர்களே,

மற்றுமொரு கேள்வி? பிதாவாகிய தேவன் மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாய் இருக்கின்றாவர் என்று 1 திமோ.6:16 கூறுகின்றது.

அப்படியென்றால்.

ஆதாம் கண்டது யாரை?

(Gen 2:16) தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆபிரகாம் கண்டது யாரை?

(Gen 18:22 [தமிழ்]) அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான்.

ஆகார் கண்டது யாரை?

(Gen 16:13) அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

மோசே கண்டது யாரை?

(Num 12:8) நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.

இவர்கள் எல்லோரும் யாரை கண்டார்கள்? யாரை பிதாவாக தொழுதுகொண்டார்கள்? என்று விளக்குவீர்களா?



__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

ஜோசப்ராஜ் எழுதுகிறார்:
//ஏகச்சக்கரபாதி என்று அல்ல ஏக சக்கராதிபதி என திருத்திக்கொள்ளுங்கள்.//

அய்யா ஜோசப்ராஜ் அவர்களே,
நான் தமிழில் கொஞ்சம் குறைபாடு உள்ளவன், முடிந்த மட்டும் தள நிர்வாகி என் தமிழை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், பரிகசிக்கப்படும் முன்!!

//அதாவது சகல அதிகாரங்களையும் உடையவர் என்று அர்த்தம். இப்பொழுது

(Matt 28:18) அப்பொழுது இயேசு சமீபத்தில்வந்து, அவர்களைநோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.//

கிறிஸ்து இந்த நிலையை சம்பாதித்தார், தன்னை ஈடுபலியாக கொடுத்து!! ஆனால் பிதாவோ என்றென்றும் சகல அதிகாரங்களையும் உடையவர் தானே!! கிறிஸ்துவிற்கு "கொடுக்கப்பட்டிருக்கிறது" என்கிறார்!! அப்படி என்றால் கொடுத்தவர் மேலானவர் தானே!! அவரைக் குறித்து இரு வசனம் இரு நிலையில் இருக்கும்போது சொன்னதை தருகிறேன், விளக்கம் தாருங்கள்!!

மத்தேயு 24:36. அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

அப்போஸ்தலர் 1:7. அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

மாம்சத்தில் இருந்தபோது பிதா ஒருவரை தவிர அந்த நாளையும் நாழிகைகளையும் யாரும் அறியார்கள் என்று சொன்ன கிறிஸ்து சகல அதிகாரங்களை "பெற்று" கொண்ட பிறகு அப்படி சொல்லாமல், பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் நாம் அறிய வேண்டியதில்லை என்பது!! ஏன் இந்த மாற்றம்??!!

ஏனென்றால் கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் பிதா அவருக்கு சகலத்தையும் அறியும்படி தந்திருக்கிறார்!!

வெளி. 1:1. சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும்,

தேவனே இயேசு கிறிஸ்துவிற்கு சகலத்தை ஒப்புவிக்கிறார்!! ஒருவர் கொடுக்கிறார், தருகிறார், மற்றவர் பெற்றுக்கொள்கிறார், கொடுக்கப்பட்டது என்கிறார்!!

ஆனாலும் இருவரும் ஒருவரே என்று சொல்லுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்!!

ஜோசப்ராஜ் எழுதுகிறார்:
//2. சாவாமையுள்ளவர்

(Rev 1:18)

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரியதிறவு கோல்களை உடையவராயிருக்கிறேன்.//

சரி இந்த தகுதிக்கு கிறிஸ்து இயேசு, பிதாவினால் உயர்த்தப்பட்டார் என்று அவரே சொல்லுகிறார்!!

யோவான் 5:26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.

பிதா செய்ததை கிறிஸ்து சொல்லுகிறார், ஆனாலும் இருவரும் ஒருவரே என்று சொல்லுகிறீர்கள்!!

தொடரும்............



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

மத்தேயு 10:32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.

இருவரும் ஒருவரே என்கிற பட்சத்தில் ஏன் ஒருவர் (இயேசு கிறிஸ்து) மற்றோருவருக்கு (பிதா) முன் அறிக்கை பண்ணவேண்டும்!!??

லூக்கா 22:29 ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.

இவரும் (கிறிஸ்துவும்) அவரும் (பிதாவும்) ஒருவரே என்கிற பட்சத்தில் ஏன் பிதா கிறிஸ்துவிற்கென்று ஒரு தனி ராஜ்யத்தை ஏற்படுத்த வேண்டும்!!??

யோவான் 8:16 நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

நான் தனியாக இல்லை, நானும் என்னை அனுப்பின் பிதாவுமாக இருக்கிறோமென்றால் இருவரும் ஒருவரே என்கிறீர்களே, அப்படி என்றால்,

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

ஒன்றாயிருக்கிறோம் என்றுதான் வசனம் சொல்லுகிறதே தவிர, ஒருவராக இருக்கிறோம் என்று சொல்லவில்லையே!!?? உங்கள் அர்த்தப்படி எடுத்துக்கொண்டோமென்றால் கீழ் காணும் வசனங்கள் மூலமாக நீங்களும் நானும் கூட பிதா என்று சொல்லுவீர்கள் போல்!!

யோவான் 17:22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
யோவான் 17:21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

யோவான் 20:21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

கிறிஸ்து பிதாவினால் அனுப்பட்டவர் ஆனாலும் ஒருவரே என்பதில் என்ன நியாயம்??

மத்தேயு 26:53 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?

கிறிஸ்துவே பிதா என்கிற பட்சத்தில் அவர் ஏன் பிதாவிடத்தில் தனியாக வேண்டிக்கொள்ள வேண்டும்!!??

லூக்கா 2:49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

நான் பிதா என்று சொல்லாமல், என் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்கவேண்டியவன் என்று ஏன் கிறிஸ்து சொல்ல வேண்டும்!!

யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

கிறிஸ்து தானாக எதையும் செய்வதில்லை, அப்படி என்றால் இவரும் அவரும் ஒருவரே என்கிற பட்சத்தில் பிதாவும் தானாக ஒன்றும் செய்வதில்லையா??

யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

இருவரும் ஒருவரே என்கிற பட்சத்தில் ஏன் ஒருவர் மற்றொருவரிடம் சிலரை இழுத்துக்கொடுக்க வேண்டும்??

கிறிஸ்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பக்கத்தில் ஏன் வீற்றுக்கொள்ள வேண்டும்? இருவரும் ஒருவர் தானே!!?? ஏன் பிதாவிற்கு கீழ்ப்பட்டவராக இருக்க வேண்டும்??

நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்!! என்னைக் கண்டவன் பிதாவை கண்டான் என்கிற வசனங்களை வைத்து அதன் சரியான அர்த்தம் புரியாம இன்னும் தினறிக்கொண்டு இருக்கிறது திரித்துவ திரியேகத்துவ கூட்டம்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 26
Date:
Permalink  
 

Bereans wrote:-

//ஜோசப்ராஜ் எழுதுகிறார்:

//ஏகச்சக்கரபாதி என்று அல்ல ஏக சக்கராதிபதி என திருத்திக்கொள்ளுங்கள்.//
அய்யா ஜோசப்ராஜ் அவர்களே,

நான் தமிழில் கொஞ்சம் குறைபாடு உள்ளவன், முடிந்த மட்டும் தள நிர்வாகி என் தமிழை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், பரிகசிக்கப்படும் முன்!!//

 

நண்பர் பெரேயன்ஸ் அவர்களே,

1.       நான் சகோ.அன்பு அவர்களுடைய பதிவுக்குத்தான் பதில் அளித்திருந்தேன். ஆனால் இடையில் நீங்கள் வந்து உங்களை குறித்து பரிகசித்து சொன்னதாக எடுத்துக்கொண்டீர்கள். ஏன்?

2.       மேலும் நான் பரிகாசத்தோடு சொல்லவில்லை. மற்றவர்கள் மனம் புண்படும்படியாக நான் கிண்டல் செய்வதில்லை. ஒருதடவை அப்படி செய்து சகோ.அன்பு அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன்.

3.       மொழி என்று வரும்போது, நான் உங்கள் எல்லோரையும் விட மேன்மையானவன் அல்ல. நானும் தவறுகளை செய்திருக்கின்றேன். செய்யவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும்போது நான் எப்படி மற்றவர்களை குறை சொல்ல முடியும் / பரிகசிக்க முடியும்.

4.       ஏக சக்கராதிபதி என்ற வார்த்தை வேதத்தில் தேவனை குறித்து சொல்லப்பட்ட மேன்மையான ஒரு வார்த்தை. ஆகவே அதில் ஒரு பிழையை கண்டபோது, ஒருவேளை அன்பு அவர்கள் தவறுதலாக Typeசெய்திருக்கலாம். அல்லது அவர் எதில் இருந்து காப்பி & பேஸ்ட் செய்தாரோ அவர்களுடைய தவறாகவும் இருந்திருக்கலாம் என நினைத்து நான் வெறுமனே தவறை திருத்திக்கொள்ளுங்கள் என்று மாத்திரம் சொன்னேன்.

 

உங்களுடைய பதிவை வாசிக்கையில் எனக்கு இநத வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது.

(1Cor 2:11) மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

 

நாம் இரண்டு பேர்களுமே மனிதர்கள். அப்படியிருக்க நான் யாருக்கு சொன்னேன் மற்றும் எந்த கண்ணோட்டத்தில் பிழையை சுட்டி காண்பித்தேன் என்பதையே உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லையே? பின்பு தேவனுடைய ஆவியின் உதவியின்றி எப்படி நீங்கள் வேதத்தின் மகத்துவங்களை புரிந்துகொள்ள போகிறீர்கள்?

(இதையும் நான் கிண்டலாக சொல்லவில்லை, என்னுடைய ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தியிருகின்றேன்).



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.ஜோசப்ராஜ் அவர்களே!

நீங்கள் எனது பிழையைத் திருத்தியதால், எங்கே பெரியன்ஸ்-ன் பிழையைச் சுட்டிக்காட்டி அவரைப் பரிகசித்துவிடுவீர்களோ என எண்ணி, பெரியன்ஸ் முந்திக் கொண்டார், அவ்வளவே! (அப்படித்தானே பெரியன்ஸ்?)

மற்றபடி, எனது பிழையைச் சுட்டிக்காட்டியதை, தன்னைச் சுட்டிக்காட்டியதாக எண்ணி பெரியன்ஸ் சொல்லவில்லை.

மேலும், நீங்கள் பரிகசித்து எழுதியதாக நினைத்தும் அவர் சொல்லவில்லை. இவ்வாறு தவறைச் சுட்டிக்காட்டும் நீங்கள், பின்னர் எப்போதாவது பரிகசித்துவிடக்கூடாது என நினைத்து சற்று முந்திக் கொண்டார், அவ்வளவே! (அப்படித்தானே பெரியன்ஸ்?)

ஒரு நண்பர் ஏற்கனவே பிழைகளைச் சுட்டிக்காட்டி பரிகசித்ததால், தற்போது பெரியன்ஸ் முந்திக் கொண்டார் என நினைக்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 26
Date:
Permalink  
 

Bereans wrote:-

//தேவனே இயேசு கிறிஸ்துவிற்கு சகலத்தை ஒப்புவிக்கிறார்!! ஒருவர் கொடுக்கிறார், தருகிறார், மற்றவர் பெற்றுக்கொள்கிறார், கொடுக்கப்பட்டது என்கிறார்!!
ஆனாலும் இருவரும் ஒருவரே என்று சொல்லுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்!!//

நான் மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் வசனங்களை வெறும் வசனங்களாகவே வாசிப்பீர்கள் என்றால் தேவனை இரண்டு நபர்களாக மட்டுமல்ல, மூன்று நபர்களாகவும் காணமுடியும், ஏழு நபர்களாகவும் காணமுடியும். அதற்கு ஆதாரமாக வசனங்களும் வேதத்தில் இருக்கின்றது.

நம்முடைய திரித்துவ சகோதரர்கள் மத்தேயு 3:16,17 மற்றும் 1 யோவான் 5:7 (மூலபிரதியில் இல்லையென்றாலும்) வைத்துதானே தேவன் மூன்று தனித்தனி நபராய் இருக்கின்றார் என்று விசுவாசிக்கின்றார்கள் / வாதிடுகின்றார்கள். மேலும் உங்களை போன்று தளங்களை நடத்தும் நம்முடைய மற்ற இரண்டு சகோதரர்கள் (அவர்கள் இருவருடைய பெயரும் S-இல் ஆரம்பிக்கும்) பிதாவாகிய தேவன் என்பவர் ஏழு ஆவிகளின் கூட்டுதான் என்று வெளி 1:4, 3:1, 4:5மற்றும் 5:6-ஜ ஆதாரமாக கொண்டு விசுவாசிக்கின்றார்கள். நீங்களும், அன்பு அவர்களும் பிதா, குமாரன் என்று இரு பதங்களை வைத்துக்கொண்டு இரண்டு நபர்கள் என்று விசுவாசிக்கின்றீர்கள்.

புதிய ஏற்பாடு முழுவதும் பிதா, குமாரன் என்ற பதங்களை நாம் காண முடியும். அதை அப்படியே வாசித்து புரிந்து கொள்வதற்கு வெறும் கல்வி அறிவும், சாதாரண மூளை அறிவும் போதும். ஆனால் இயேசு நமக்கு கல்வி அறிவை வாக்கு பண்ணாமல் சத்திய ஆவியானவர் உங்களுக்குள் தங்கி உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நட்த்தி செல்வார் என்று வாக்கு பண்ணியிருகின்றார். கல்வியறிவு மேலொங்கியுள்ள இந்த காலத்திலும் ஏன் அந்த ஆவியானவர் நமக்கு தேவைப்படுகின்றார்? பிதாவுக்கும் குமாரனுக்கும் உள்ள தொடர்பு / சம்பந்தம் / ஜக்கியத்தின் ரகசியம் என்ன என்று அறிந்துகொள்ளும்படியாகத்தான்.

(Col 2:2) அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரணநிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாக வேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

(Eph 3:11) இயேசுகிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

நான் மூல பாஷை ஆராய்ச்சிக்கோ அல்லது மற்ற மொழிபெயர்ப்புகளுக்கோ எதிரி அல்ல, அது நல்லது. வேதத்தில் எழுதப்பட்டுள்ள அநேக காரியங்களை குறித்து நாம் விளக்கமாய் அறிந்து கொள்ள / சரியாய் புரிந்து கொள்ள உதவுகிறது. ஆனால் தேவன் எப்படிப்பட்டவர், ஒருவரா, இருவரா அல்லது மூவரா என்பதை மூல பாஷை ஆராய்ச்சி செய்து நாம் கண்டுபிடிக்க முடியாது. வெளிப்பாட்டின் அறிவின் (Revelation Knowledge)மூலமே நாம் அறிந்து கொள்ள முடியும். அதற்கு சில அடிப்படை தகுதிகள் வேண்டும். முதலாவது நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்கபடவேண்டும். தேவனுடைய குடும்பத்தில் இணைக்கப்படவேண்டும். தேவனுடைய ஆவியானவர் நமக்குள் வாசம் செய்யவேண்டும். எளிமையாக சொல்லவேண்டுமானால் நாம் இரட்சிக்கப்படவேண்டும். தேவ ஆவியின் உதவியின் மூலமாகத்தான் தேவன் இத்தனை விதங்களில் வெளிப்பட்டாலும் ஒரே நபராய் இருக்கின்றார் என்றவேத வசனங்களின் பின்னால் மறைந்திருக்கின்ற சத்தியத்தை அறிந்து கொள்ள இயலும்.

உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களை பார்ப்போம்.

(Matt 16:6) இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.

(Matt 16:6 [KJV]) Then Jesus said unto them, Take heed and beware of the leaven of the Pharisees and of the Sadducees.

உடனே அவர்கள் புளித்தமாவு என்றால் என்ன என்று மூலபாஷையல்லாம் ஆராய்ந்து பார்த்தார்கள்.

G2219 ζύμηzume (dzoo'-may) n.

1. a fermenting agent (as if boiling up)

2. (specially) leaven

3. (figuratively, good or bad) a thorough, utterly complete change agent affecting itself and others

4. (negatively) moral or mental corruption, depravity

5. (positively) purity, integrity, a perfect condition

[probably from G2204]

KJV: leaven

Root(s): G2204

[?]

பின்பு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

(Matt 16:7) நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனை பண்ணிக் கொண்டார்கள்.

ஆனால் இயேசு என்ன சொன்னார் தெரியுமா?

(Matt 16:8) இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக் குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனை பண்ணுகிறதென்ன?

(Matt 16:9) இன்னும் நீங்கள் உணரவில்லையா?....................

(Matt 16:11) பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக் குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

(Matt 16:12) அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக் குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்து கொண்டார்கள்.

புளித்தமாவு என்பது வேதவசனம். ஆனால் அதனுடைய உண்மையான அர்த்தம் உபதேசம் என்பதே. சரி அந்த உபதேசம் என்ற வார்த்தை எங்கே இருக்கின்றது? புளித்தமாவு என்ற வேதவசனத்தின் பின்னால் மறைந்திருக்கின்றது.

உண்மையான அர்த்தமாகிய இந்த உபதேசம் என்ற வார்த்தையை நீங்கள் வேதாகமத்திலோ அல்லது Bible Commentary books, Bible Concordanceபோன்ற எதிலும்  தேடி கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் அந்த அர்த்தத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு நபர் வேண்டும். அன்றைக்கு இயேசு கூட இருந்தார். ஆகவே சீஷர்களுடைய தவறை திருத்தினார். அவர் வெளிப்படுத்தினபிறகு மற்ற வேத வசனங்களோடு ஒப்பிட்டு பார்த்து அந்த அர்த்தம் சரி என்று புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கோ நம்மை இப்படிப்பட்ட சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தும்படியாய் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்கிறார்.
இதுபோல் அநேக உதாரணங்களை எடுத்து காண்பிக்க முடியும். ஆனால் புரிந்து கொள்ள இது போதும் என்று நினைக்கின்றேன்.



-- Edited by E S Joseph on Friday 1st of July 2011 08:14:43 AM

__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

திரு ஜோசப்ராஜ் அவர்களே,

 

உங்களுக்கு பரிகாசத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது என் கணிப்பு!! உங்கள் வாதத்தை தான் கேட்கிறேனே தவிர, நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீங்கள் சொல்லி நான் தெரிந்துக்கொள்ளும் நிலையில் இல்லை என்று நினைக்கிறேன்!! எனக்கு என்ன ஆவி இருக்கிறது என்பதை நான் அறிவேன், உங்களுக்குள் இருக்கும் ஆவியில் நீங்கள் தாராளமாக எழுதலாம்!!

என்னமோ நீங்கள் ஒருவர் தான் பரிசுத்த ஆவிக்கு சொந்தக்காரர் போல் எழுதியிருக்கிறீர்கள்!! நான் உங்களை எந்த விதத்திலும் தனிப்பட்ட கேள்வி கேட்டிருக்கிறேனா!! வசனத்துக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள், மற்றபடி எல்லாம் தேவையற்றது!! பரிசுத்த ஆவியை ஒரு தேவன் என்று சொல்லும் நீங்கள் எந்த ஆவியில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்!! வசனத்தில் இல்லாததை பரிகாசம் செய்யும் நோக்கத்தில் சேர்த்து எழுதுவதே நீங்கள் எப்படி பட்ட ஆவியில் நடமாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது வெளிப்படுகிறது!!

(Matt 16:6) இயேசு அவர்களை (சீஷர்கள் மற்றும் Truth Seekers) நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.

மன்னிக்கனும், இது விவாதம் இல்லை, அடுத்தவர்களை மட்டு தட்டும் முயற்சியே!! உங்களுக்கு என்ன வயது என்பது எனக்கு தெரியாது , ஆனால் நீங்கள் எந்த வயது உடையவராக இருந்தாலும் நீங்கள் எழுதியது சற்றும் பொறுத்தமில்லாதது!!

தள நிர்வாகி அவர்களே,

இந்த திரியில் பதிவிட்ட என் பதிவுகளை (இந்த பதிவை தவிர) நீக்கி விடும்படியாக கேட்டுக்கொள்கிறேன்!!

நன்றி!!



-- Edited by Bereans on Thursday 30th of June 2011 08:56:09 PM

__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

ஜோசப்ராஜ்:
//நாம் இரண்டு பேர்களுமே மனிதர்கள். அப்படியிருக்க நான் யாருக்கு சொன்னேன் மற்றும் எந்த கண்ணோட்டத்தில் பிழையை சுட்டி காண்பித்தேன் என்பதையே உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லையே? பின்பு தேவனுடைய ஆவியின் உதவியின்றி எப்படி நீங்கள் வேதத்தின் மகத்துவங்களை புரிந்துகொள்ள போகிறீர்கள்?//

நீங்கள் சகோ அன்பு எழுதியதை சுட்டிக் காட்டி தான் எழுதியிருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள தேவ ஆவி எல்லாம் தேவையில்லை!! நான் எழுதிய நோக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இப்படி என்னை கமெண்ட் செய்திருப்பது எந்த ஆவியில்!!??

வேதத்தைப் புரிந்துக்கொள்ள தேவனின் சிந்தை எங்களிடம் தேவைக்கேற்ப இருக்கிறது!! மேலும் வெளிப்பாட்டினால் விஷயங்களை தெரிந்துகொண்டோம் என்று சொல்லிக்கொண்டு இன்றும் உலகத்தில் 2000த்திற்கும் மேலான சபைகள் இருப்பது உங்கள் பார்வையில் படவில்லையா!! இவர்கள் அனைவருமே வெளிப்பாட்டின் மூலமாகத் (Revelatory Knowledge) தான் வேதத்தைப் போதிக்கிறார்கள்!! ஆனால் நாங்களோ வேதத்தில் சொன்னபடியேதான் வேதத்தை ஆராய்ந்து அறிகிறோம்!! தேவனை தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் தான் தேவ ஆவியின் துணையை நாட வேண்டுமே தவிர நீங்கள் எழுதியது போல் அல்ல‌!!

தானியேல் 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

அப்போஸ்தலர் 17:11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

நாங்களும் இந்த பெரேயா பட்டணத்தார் போல் தான் வசனத்தை ஆராய்ந்து பார்த்து தெளிவடைகிறோம்!! வேதத்தைக் கையில் வைத்துக்கொண்டு பரலோகத்திலிருந்து ஒருவர் வெளிப்பாடு தருவார் என்று உட்கார்ந்திருந்தால், ஒருவன் வருவான், அழகான வெளிப்பாடுகளுடன்!! அவனை நம்பி மோசம் போன சபைகளின் கணக்கை தான் 2000த்திற்கும் மேல் என்று எழுதியிருந்தேன்!!

ஆவியில் பேசுகிறேன் என்று கிறிஸ்து சிலுவை மரணத்தையே மாற்றி பேசுபவர்கள் தான் இருக்கிறார்கள்!! தனிப்பட்ட சர்ச்சையோ அடுத்தவர்களை பரிகசிக்கும் எண்ணம் இல்லாமல் எழுதினால் விவாதம் நன்றாக இருக்கும்!!

மூல பாஷையில் தான் வேதம் கொடுக்கப்பட்டது, அதை தமிழில் பல பிழைகளுடன் மொழிபெயர்த்து இருக்கிறார்கள்!! மனிதர்கள் புரிந்துகொள்ளும்படியாக தான் தேவன் எழுத்தை தந்திருக்கிறார், ஆனால் நாங்கள் ஆவியில் புரிந்துக்கொள்கிறோம் என்று அவர் கொடுத்த எழுத்தை அவமாக்குகிறீர்கள்!!

(Col 2:2) அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரணநிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாக வேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

பிதாவாகிய தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை என்பது நீங்கள் ஆவியில் இருவரும் ஒருவரே என்று புரிந்துகொள்கிறீர்கள்!! நான் கேட்ட வசனங்களுக்கு ஒவ்வொன்றாகப் பதிலை தாருங்களேன்!!

நாங்கள்,

I கொரிந்தியர் 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.

என் தமிழ் குறையுள்ளது என்று சொல்லி, நீங்கள் சகோ அன்பு அவர்களை எழுதியது போல் என்னையும் எழுதிவிடாதீர்கள் என்று சொன்ன ஒரு சாதாரண விஷயத்தையே புரிந்துகொள்ளாமல் இத்துனை பெரிய சர்ச்சையை உருவாக்கி விட்டீர்களே!! சகோ அன்பு மிகவும் தெளிவாக நான் எதை/யாரைக் குறித்து எழுதினேன் என்று அவரின் பதிவில் மிகவும் தெளிவாக எழுதியும் நீங்கள் வியாக்கியானம் செய்திருப்பது ருசிகரமாக இல்லை!! என் தளத்தை குறிப்பிடும்படியாக Truthseekers என்கிற வார்த்தையை நீக்கி எழுதினால் நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்!!

பரிசேயரின் புளித்த மாவைத் தான் உபதேசம் என்று தெளிவாக நாம் வாசிக்கும்படியாக வேதத்தில் எழுதியாகிவிட்டதே, பிறகு என்ன அதை ஆவியில் நீங்கள் புரிந்துகொண்டு விட்டீர்கள் என்கிற மமதை!! மன்னிக்கனும், நாம் விவாதம் செய்வதாக இருந்தால் அடுத்தவர் மேல் தூஷணங்களை எடுத்துவிடுவதற்கு பதில் ஆக்கமான விஷயங்களை தந்தால் எழுதுவோருக்கும் அதை வாசிப்போருக்கும் பிரயோஜனமாக இருக்கும்!!

//உண்மையான அர்த்தமாகிய இந்த உபதேசம் என்ற வார்த்தையை நீங்கள் வேதாகமத்தில் தேடி கண்டுபிடிக்கமுடியாது.//

(Matt 16:12) அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக் குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்து கொண்டார்கள்.

வசனம் இருக்கிறது!! இன்னும் புதிய வெளிப்பாடு கிடைக்கும் என்று நாங்கள் இருப்பதில்லை!!

ஏசாயா 34:16 கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.

எல்லாமே அர்த்தங்களுடன் இதே வேதப்புத்தகத்தில் இருக்கிறது, நாம் தேடி வாசிக்க வேண்டும்!! இனியும் புதிது புதிதான வெளிப்பாடு வரும் என்று காத்துக்கொண்டிருப்பதால் வேதத்திற்கு புறம்பான வெளிப்பாடுகள் வருமே தவிர வேறு ஒன்றும் இல்லை!

உனக்கும் எனக்கும் என்று சொன்னால் அது ஒருவரை மாத்திரமே குறிக்கும் "இரகசியம்" என்று நினைக்க வேண்டாம்!! வேதத்தை இரகசிய புத்தகமாக உங்களைப் போன்றோர் மாற்றியிருக்கிறார்கள், ஆனால் பவுல் சொல்லுகிறார்,

அப்போஸ்தலர் 20:26. தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,

எல்லாவற்றையும் அறிவித்து வைத்ததை பின்பற்றாமல் இன்னும் இரகசியம் இருக்கிறது என்று ஆராயச்சொல்லி வேதம் சொல்லுவதில்லை, இதைத் தான் மனித ஆவி என்கிறோம்!! ஆனால் பாவம் பவுலுக்கு தெரியாத திரித்துவம் திரியேகத்துவம் இன்று சபைகளுக்கு தெரிந்த "இரகசியமாக" இருப்பது ஆச்சரியம் தான்!! அவர் ஒவ்வொரு சபைக்கும் சொல்லும் வாழ்த்துக்களை வாசித்தாலே, தேவன் யார் கிறிஸ்து யார் என்பது புரிந்துவிடும்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 26
Date:
RE: இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வமா - சகோ.ஜோசப்பின் பதில்
Permalink  
 


சகோ.பெரேயன்ஸ் அவர்களே,

நேற்று இரவே நான் உணர்த்தப்பட்டேன், அந்த வார்த்தைகளை நீக்கிவிட வேண்டும் என்று. ஆகவே இன்று காலையில் முதல் வேளையாக பரிகாசமாக கருதப்படும் வார்த்தைகளையெல்லாம் நீக்கிவிட்டேன். இன்னும் நீக்கப்படவேண்டிய வார்த்தைகள் இருக்குமானால், அவைகளை எல்லாம் நீக்கும்படி தளநிர்வாகி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உங்கள் பதிவை வாசித்தேன். மன்னியுங்கள். முடிந்தவரையில் இனி அப்படி பரிகாசமாய் தோன்றாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். மீறி ஒன்றிரெண்டு வார்த்தைகள் வருமானால் சுட்டி காண்பியுங்கள், திருத்திக்கொள்கிறேன்.

இப்பொழுதும் உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்க முடியும். ஆனால் வேண்டாம். விதண்டாவாதம் தான் நடைபெறுமே தவிர விவாதம் நடைபெறாது.

வாதம் என்பது எனக்கு புதிதான ஒன்று. காரணம் இதுவரையில் நான் கலந்து கொண்டது இல்லை. இப்பொழுதுதான் முதல்முறையாக ஈடுபட்டுள்ளேன். அதுவும் அதிகபட்சமாக சகோ.அன்பு அவர்களின் கேள்விகளுக்கு விளக்கத்தைதான் அளித்துள்ளேன். எதிர்கேள்விகள் கேட்டதில்லை. முதன்முதலாக பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் கண்டது யாரை என்று கேள்வி எழுப்பியிருக்கின்றேன்.

கர்த்தருக்கு சித்தமானால் நேர்மையான விவாதத்தில் ஈடுபடுவோம். ஆகவே என்னுடைய மேற்கண்ட கேள்விக்கு பதில் அளிப்பீர்களா?




__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

யோவான் 1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை
1 தீமோத்தேயு 6:16..........................மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்.........

இந்த இரண்டு வசனங்களையும் சாட்சிகளாக வைத்துக்கொண்டு உங்கள் கேள்விகளுக்கு நீங்களே பதில் தரலாம்!!

ஆதியாகமம் 2:16. தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆதாம் கண்டது  யாரை?

இந்த வசனத்தில் ஆதாம் யாரையும் பார்த்ததாக இருக்கிறதா, அல்லது இந்த பகுதியில் தான் இருக்கிறதா??!! இதற்கு மூல பாஷையே தேவையில்லை, தமிழில் வாசித்தாலே புரியும், தேவன் மனுஷனை நோக்கி சொல்லுகிறார்!! நோக்கி என்கிற பதம் இருப்பதால் ஆதாமும் நோக்கினார் என்று இல்லை!! மேலும் "நோக்கி" என்பது நேரடியாக ஒருவரு அருகில் அமர்ந்து ஒருவரை பார்ப்பது என்பதற்கு மாத்திரம் உபயோகப்படுத்தப்படுவதில்லை!! தேவன் மனிதன் மேல் கொண்டிருந்த அக்கறையை தான் இது காண்பிக்கிறது!! எடுத்துக்காட்டு:

சங்கீதம் 33:14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.

தேவன் பூமியில் தம்மால் வைக்கப்பட்டிருக்கும் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார் என்பதற்காக பூமியில் உள்ளவர்களும் தேவன் மேல் கண்ணோக்கமாயிருக்கிறார்கள் என்பது அபத்தமாக இருக்கும்!!

ஆகவே யோவான் 1:18 மற்றும் 1 தீமோத்தேயு 6:16ஐ கொண்டு, ஆதாம் தேவனை கண்டதில்லை என்பதை என் பதிலாக பதிவு செய்கிறேன்!! ஆதாம் மாத்திரம் வசனத்தை மீருபவனாக இருக்க முடியாது!!

அதன் பின்னும் நீங்கள் கேட்ட அனைவரும் யெகோவா தேவனை பார்த்தார்கள் என்பது மெய் என்றால் யோவான் 1:18 மற்றும் 1 தீமோத்தேயு 6:16 வசனங்கள் பொய்யாகி விடும்!! அப்படி என்றால் ஆகார் சொல்லுகிறபடி என் கண்கள் கண்டது என்பது பொய்யா என்று கேட்டீர்களென்றால், கண்டது என்று மொழிப்பெயர்க்கப்பட்ட வார்த்தைக்கு உண்டான அர்த்தங்களை பார்த்தீர்களென்றால் புரியும்!! தேவனை ஒருவனும் ஒரு போதும் கண்டதில்லை என்று எழுதப்பட்டது விரோதமாக எப்படி ஒரு செயல் நடந்திருக்க முடியும்!!

ஆங்கிளத்தில் "I SEE" என்பார்கள்!! அப்படி என்றால் அது பார்ப்பது என்று அர்த்தக் கிடையாது என்பதை நான் சொல்லி தான் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பது அல்ல்!! "I SEE" என்று சொல்லிவிட்டதால், இல்லை இல்லை, அதான் பார்த்தாரே என்று சொல்லுவோமென்றால் அது தப்பாக இருக்கும்!!

பரலோகத்திலிருந்து இறங்கி வந்த கிறிஸ்துவே மாம்சத்தில் இருந்த போது பிதாவை காண்டதாக ஒரு இடத்திலும் இல்லை, ஆனால் அப்போஸ்தலர்களுடனும், இன்னும் ஒரு சில சம்பவங்களின் போது பிதாவின் குரல் கேட்டதாக எழுதப்பட்டிருக்கிறது!! மாம்சத்தில் இருப்பவர்கள் ஒரு போதும் சர்வவல்லமையுள்ள தேவனை காண முடியாது, கண்டது கிடையாது என்கிற வசனத்தை நான் நம்புகிறேன்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வமா - சகோ.ஜோசப்பின் பதில்
Permalink  
 


எனது சொந்த வேலையாக 1-ம் தேதி இரவு சென்னை சென்று இன்று காலை (3-ம் தேதி) திரும்பினேன்.

தேவனுடைய பெரிதான கிருபையால் இன்று காலை எனது மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவத்தை கட்டளையிட்ட தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.

கடந்த 2 நாட்களாக சற்று வேலை நெருக்கடியில் இருப்பதால், பதிவுகள் தர இயலவில்லை. தொடர்ந்து இம்மாத பத்திரிகை வேலையும் உள்ளது.

சகோ.பெரியன்ஸ்-ம் சகோ.ஜோசப்ராஜ்-ம் தொடர்ந்து விவாதம் செய்யுங்கள். நானும் கூடிய விரைவில் சேர முயற்சிக்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
RE: இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வமா - சகோ.ஜோசப்பின் பதில்
Permalink  
 


நீங்கள் தாத்தாவாக பதவி உயர்வு பெற்றிருக்கிறீர்கள்!! வாழ்த்துக்கள்!!

ஜோசப்ராஜ் அவர்கள் பதில் பதிந்தால் அடுத்து பதிவை தருகிறேன்!! நன்றி!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 26
Date:
Permalink  
 

சகோ.அன்பு அவர்களே,

வாழ்த்துக்கள், தாயும், சேயும் நலமாக உள்ளதை அறிந்து மகிழ்ச்சி.

ஜீவனுள்ள நாளெல்லாம் தேவனுடைய நன்மையும், கிருபையும் குழந்தையை தொடர வேண்டுகிறேன்.

இப்பொழதுதான் முதன்முதலாக Grand Fatherஆனீர்களா? அல்லது ஏற்கனவே ஆகிவிட்டீர்களா?

சுகம் இல்லாத காரணத்தால் பதிவுகளை வாசிக்கவும், எழுதவும் முடியவில்லை. விரைவில் கலந்துகொள்வேன்.



__________________
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard