//தங்கள் சுகவீனம் குணமாகிவிட்டதா? விரைவில் முழுகுணம்பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப ஜெபிக்கிறேன்.//
சகோ.அன்பு அவர்களே,
கரிசனையுடன் கூடிய உங்கள் ஜெபத்திற்காக நன்றி. கர்த்தருடைய கிருபையினாலும், உங்களை போன்ற அநேகருடைய ஜெபத்தாலும், இரண்டு நாட்களில் சுகவீனம் சரியாகிவிட்டது. வேலை பளுவினிமித்தம் கலந்துகொள்ள முடியவில்லை.
சகோ.பெரேயன்ஸ் அவர்களே,
தங்களுடைய பதிவுக்காக நன்றி. என் மீது மனஸ்தாபம் இல்லை என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். ஒருவேளை கடைசிவரை ஒருமித்த கருத்து எட்டமுடியாமல் போனாலும், இருதரப்பிலும் பரிகாசம் தோன்றாவண்ணம் பார்த்துக்கொள்வோம்.
Bro.Bereans wrote:
//அதன் பின்னும் நீங்கள் கேட்ட அனைவரும் யெகோவா தேவனை பார்த்தார்கள் என்பது மெய் என்றால் யோவான் 1:18 மற்றும் 1 தீமோத்தேயு 6:16 வசனங்கள் பொய்யாகி விடும்!!//
யோவான் 1:18 மற்றும் 1 தீமோத்தேயு 6:16 வசனங்களின் அடிப்படையில் மாம்சமான யாருமே யெகோவா தேவனை பார்த்ததில்லை என்கிறீர்கள். சரி நானும் அதை விசுவாசிக்கின்றேன் / ஏற்றுக்கொள்கிறேன்.
Bro.Bereans wrote:
//பரலோகத்திலிருந்து இறங்கி வந்த கிறிஸ்துவே மாம்சத்தில் இருந்த போது பிதாவை காண்டதாக ஒரு இடத்திலும் இல்லை, ஆனால் அப்போஸ்தலர்களுடனும், இன்னும் ஒரு சில சம்பவங்களின் போது பிதாவின் குரல் கேட்டதாக எழுதப்பட்டிருக்கிறது!! மாம்சத்தில் இருப்பவர்கள் ஒரு போதும் சர்வவல்லமையுள்ள தேவனை காண முடியாது, கண்டது கிடையாது என்கிற வசனத்தை நான் நம்புகிறேன்!!//
நல்ல விளக்கம். ஆனால் கிறிஸ்துவை தவிர்த்து மாம்சமான மற்றவர்கள் வேண்டுமானால் தேவனை கண்டது கிடையாது என்று நம்புகிறேன். ஏனெனில் கிறிஸ்துவை குறித்து வசனங்கள் இவ்வாறாக சொல்லுகிறது.
இயேசு நிக்கோதேமுவுடன் உரையாடும்போது சொன்ன வார்த்தைகள் இவை. இயேசு மாம்சத்தில் இப்பூமியில் இருக்கும் அதேசமயத்தில், பரலோகத்திலும் இருக்கிறார் என்று கூறுகிறார்.
(John 6:46) தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
Bro.Bereans wrote:
//அப்படி என்றால் ஆகார் சொல்லுகிறபடி என் கண்கள் கண்டது என்பது பொய்யா என்று கேட்டீர்களென்றால், கண்டது என்று மொழிப்பெயர்க்கப்பட்ட வார்த்தைக்கு உண்டான அர்த்தங்களை பார்த்தீர்களென்றால் புரியும்!! தேவனை ஒருவனும் ஒரு போதும் கண்டதில்லை என்று எழுதப்பட்டது விரோதமாக எப்படி ஒரு செயல் நடந்திருக்க முடியும்!!
ஆங்கிலத்தில் "I SEE" என்பார்கள்!! அப்படி என்றால் அது பார்ப்பது என்று அர்த்தக் கிடையாது என்பதை நான் சொல்லி தான் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பது அல்ல்!! "I SEE" என்று சொல்லிவிட்டதால், இல்லை இல்லை, அதான் பார்த்தாரே என்று சொல்லுவோமென்றால் அது தப்பாக இருக்கும்!!//
உங்களுடைய இந்த விளக்கத்தை ஆகாரின் சம்பவத்தில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் ஆபிரகாமை குறித்து என்ன?
(Gen 18:22) அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம்விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான்.
மாத்திரமல்ல அந்த குறிப்பிட்ட சம்பவத்தை வாசிக்கும்பொழுது ஆபிரகாம் கர்த்தரோடு சம்பாஷித்தான் எனவும் மற்றும்
(Gen 18:8) ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்துவந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.
நண்பர் ஜோசப்ராஜ் எழுதுகிறார்: //இயேசு நிக்கோதேமுவுடன் உரையாடும்போது சொன்ன வார்த்தைகள் இவை. இயேசு மாம்சத்தில் இப்பூமியில் இருக்கும் அதேசமயத்தில், பரலோகத்திலும் இருக்கிறார் என்று கூறுகிறார்.//
அதே சமயம் பரலோகத்தில் இருக்கிறார் என்று இயேசு சொன்னார் என்பது சேர்த்துக்கொள்ளப்பட்டது!!
Amplified Bible (AMP)
John 3:13 And yet no one has ever gone up to heaven, but there is One Who has come down from heaven--the Son of Man [Himself], [a]Who is (dwells, has His home) in heaven.
Footnotes: John 3:13 (a) Some manuscripts add this phrase.
பரலோகத்திற்கு யாரும் ஏறி சென்றது கிடையாது, ஆனால் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தவர் ஒருவர், அவரே மனுஷ குமாரன்!! இது தான் சரியான மொழிப்பெயர்ப்பு!! "பரலோகத்தில் இருக்கிறவரும்" என்பது அநேக மொழிப்பெயர்ப்பில் "திரித்துவர்களால்" சேர்த்துக் கொள்ளப்பட்டது!! மூல பாஷையில் இருப்பதை இங்கே கொடுக்கிறேன், அதிலிருந்து பரிசுத்த வேதாகமத்தில் மொழிப்பெயர்த்தது போல் இருக்கிறதா என்று நீங்களே பாருங்கள்!! வேதம் எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழியில் தான் சரியாக இருக்க முடியும்!! மற்றபடி மொழிப்பெயர்ப்புகளை நம்பி முழு சத்திய வசனங்களையும் அறிய முடியாது!!
//மாத்திரமல்ல அந்த குறிப்பிட்ட சம்பவத்தை வாசிக்கும்பொழுது ஆபிரகாம் கர்த்தரோடு சம்பாஷித்தான் எனவும் மற்றும்//
பேசினார்கள், நிற்கிறார்கள் என்பதை வைத்து பார்த்தார் என்று அர்த்தம் கொள்ள முடியாது நண்பர் ஜோசப்ராஜ் அவர்களே!! இது போன்ற வசனங்களை சரிவர புரியாததினால் தான் இன்றைய ஊழியர்கள் துனிச்சலாக நாங்கள் தேவனை சிங்காசனத்தில் பார்த்தோம், தேவன் எங்களுடன் காரிலும் ரயிலிலும் பயனம் செய்தார் என்று சொல்லும் அளவிற்கு துனிந்திருக்கிறார்கள்!!
காணக்கூடாதவராக இருக்கிறார் என்றால் ஆபிரகாம் மாத்திரம் விதிவிலக்கு கிடையாது!! மேலும் அந்த வசனபகுதிகளில் ஆபிரகாம் தேவனை (யெகோவாவை) கண்டான் என்று எங்குமே இல்லையே!!
//கர்த்தர் புசித்தார் எனவும் வாசிக்கின்றோம். //
அவர்கள் புசித்தார்கள் என்று தானே வசனம் சொல்லுகிறது, கர்த்தர் புசித்தார் என்றா இருக்கிறது!!??
ஆதியாகமம் 18:8 ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.
அப்படியே கர்த்தர் புசித்தார் என்று இருந்தால் என்ன தவறு!! இதை வைத்து என்ன சொல்ல வருகிறீர்கள்!!
-- Edited by Bereans on Sunday 10th of July 2011 05:15:04 PM
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
//பேசினார்கள், நிற்கிறார்கள் என்பதை வைத்து பார்த்தார் என்று அர்த்தம் கொள்ள முடியாது நண்பர் ஜோசப்ராஜ் அவர்களே!! //
(Gen 18:2) தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து:
(Gen 18:3) ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.
(Gen 18:4) கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள்.
(Gen 18:5) நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டு வருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.
இதற்கு மேலேயும் ஆபிரகாம் பார்க்கவில்லை என சாதிப்பீர்களானால், எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
Bro.Bereans wrote:
//அவர்கள் புசித்தார்கள் என்று தானே வசனம் சொல்லுகிறது, கர்த்தர் புசித்தார் என்றா இருக்கிறது!!??//
புசித்த மூன்று பேர்களில் ஒருவர் கர்த்தர் என்று 13-ஆம் வசனம் சொல்லுகிறது.
(Gen 18:13) அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?
Bro.Bereans wrote:
//அப்படியே கர்த்தர் புசித்தார் என்று இருந்தால் என்ன தவறு!! இதை வைத்து என்ன சொல்ல வருகிறீர்கள்!!
காணக்கூடாதவராக இருக்கிறார் என்றால் ஆபிரகாம் மாத்திரம் விதிவிலக்கு கிடையாது!! மேலும் அந்த வசனபகுதிகளில் ஆபிரகாம் தேவனை (யெகோவாவை) கண்டான் என்று எங்குமே இல்லையே!!//
பிதாவாகிய யெகோவா தேவனை யாருமே காணமுடியாது என்றால்,
1.ஆபிரகாமும் மற்ற பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களும் கண்ட இந்த கர்த்தர் யார்?
2.பிதாவாகிய யெகோவா தேவனுக்கும், இந்த கர்த்தருக்கும் என்ன உறவு? என்று விளக்குவீர்களா?
இத்திரியில் விவாதித்து வந்த சகோ.பெரியன்ஸ்-ம் சகோ.ஜோசப்-ம் வெகுநாட்களாக பதிவைத் தராததால் நான் சற்று இடைபட விரும்புகிறேன்.
ஆதியாகமம் 18-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சம்பவத்தில், ஆபிரகாம் கண்டது தேவனையா அல்லது வேறு யாரையுமா, வேறு யாருமென்றால் அவர் யார் எனும் கேள்விகளை ஜோசப் எழுப்பியுள்ளார்.
ஆதியாகமம் 18-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள அச்சம்பவத்தை கூர்ந்து நோக்கினால், அச்சம்பத்தில் ஆபிரகாமோடு தேவன் (Yehovah) இடைபடுவதும், 3 புருஷர்கள் இடைபடுவதும் தனித் தனி track ஆக இருப்பதை நாம் காணலாம். அவற்றை தனியே பிரித்துத் தருகிறேன், சற்று படியுங்கள்.
முதல் Track:
ஆதியாகமம் 18:1 பின்பு கர்த்தர் (Yehovah) மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். 10 அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
11 ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. 12 ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
13 அப்பொழுது கர்த்தர் (Yehovah) ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? 14 கர்த்தரால் (Yehovah) ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
15 சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
17 அப்பொழுது கர்த்தர் (Yehovah): ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், 18 நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? 19 கர்த்தர் (Yehovah) ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய (Yehovah) வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
20 பின்பு கர்த்தர் (Yehovah) சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், 21 நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.
22 .... ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு (Yehovah) முன்பாக நின்றுகொண்டிருந்தான். 23 அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? 24 பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? 25 துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
26 அதற்குக் கர்த்தர் (Yehovah): நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். 27 அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். 28 ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். 29 அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். 30 அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
31 அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். 32 அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
33 கர்த்தர்கர்த்தர் (Yehovah) ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
இந்த Track முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ள கர்த்தர் எனும் வார்த்தைக்கு, மூலபாஷையில் Yehovah என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2-வது Track:
ஆதியாகமம் 18:1 .... அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, 2 தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து: 3 ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். 4 கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். 5 நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.
6 அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். 7 ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். 8 ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்துவந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள். 9 அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
16 பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.
22 அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்;
இந்த Track முழுவதும் Yehovah என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
(இந்த track-ல் 3-ம் வசனத்தைத் தவிர மற்றெல்லா பகுதியிலும் பன்மைச்சொற்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியின் மூலபாஷை மற்றும் சில ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்த்தால், 3-ம் வசனத்தில் மட்டும் ஒருமைச்சொற்கள் பயன்படுத்த எந்த முகாந்தரமும் இல்லை என்பதை அறியலாம். எனவே 3-ம் வசனத்திலும் பன்மைச்சொற்களைப் பயன்படுத்தி, “ஆண்டவன்மாரே, உங்களுடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீங்கள் உங்கள் அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம்” என மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதிக பொருத்தமாக இருக்கும்.)
இந்த 2 tracks-ன் காரியங்களும் ஒரே சமயத்தில் ஒருங்கிணைந்து நடந்துள்ளன. ஆபிரகாமும் 3 புருஷர்களும் பேசிக்கொண்டிருக்கையில் இடையிடையே தேவனும் பேசுகிறார், தேவனோடு ஆபிரகாமும் பேசுகிறார். 3 புருஷர்களும் தேவனின் சார்பாக வந்தவர்கள் (அவர்கள் தேவதூதர்களாக இருக்கலாம் என ஆதியாகமம் 19:1-லிருந்து அறிகிறோம்). அந்த 3 புருஷரும் தேவனின் சார்பாக ஆபிரகாமுடன் பேசுகின்றனர்; ஆனால் இடையிடையே தேவனும் ஆபிரகாமோடு பேசுகிறார்.
தேவன் மற்ற சமயங்களில் ஆபிரகாமுடன் பேசுவதைப் போலவே இச்சம்பவத்திலும் பேசுகிறார். மற்ற சமயங்களில் ஆபிரகாமும் தேவனும் பேசுவதை வைத்து, ஆபிரகாம் தேவனை நேரடியாகக் கண்டதாக நாம் கூறுவதில்லை. அதுபோலத்தான் இச்சம்பவத்திலும் ஆபிராகம் தேவனை நேரடியாகக் கண்டதாக நாம் கூறமுடியாது. ஆபிரகாம் தேவனைத் தரிசித்த அதேவேளையில் தேவனின் சார்பாக 3 புருஷர்களும் வந்து ஆபிரகாமோடு பேசியதுதான் நம் குழப்பத்துக்குக் காரணம். நம் குழப்பத்தைத் தெளிவிக்க ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம்.
*******************
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன், எகிப்தின் அதிபதியாக யோசேப்பை நியமித்து, தனது சார்பாக எந்த முடிவையும் எடுக்க யோசேப்புக்கு அதிகாரம் கொடுத்ததை நாம் அறிவோம். இந்நிலையில், பார்வோனைப் பார்க்க ஒரு குடிமகன் வருகிறான் என வைத்துக்கொள்வோம். பார்வோன் திரைமறைவிலும், யோசேப்பு வெளியரங்கமாகவும் அரண்மனையில் இருக்கின்றனர் என வைத்துக் கொள்வோம்.
குடிமகன் யோசேப்பிடம், “பிரபு, என் குடும்பத்துக்கு தானியம் வேண்டும்” என்கிறான். அப்போது திரைமறைவிலிருக்கும் பார்வோன், “பணம் கொடுத்தால் தானியம் உண்டு; பணம் வைத்துள்ளாயா?” என்கிறார்.
அதற்கு அவன், “பணம் வைத்திருந்தேன், ஆனால் வரும்வழியில் அது களவு போய்விட்டது” என்கிறான். உடனே யோசேப்பு, “அப்படியானால் இன்று தானியம் வாங்கிச் செல், ஆனால் அடுத்தமுறை வரும்போது இந்த தானியத்துக்கான பணத்தையும் கொண்டுவரவேண்டும்” என்கிறார். உடனே குடிமகன், “என்னால் இதை நம்பமுடியவில்லை, இத்தனை எளிதாக எனக்கு தானியம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை” என்கிறான்.
அதற்கு பார்வோன், “எகிப்திய அரசின்மீது உனக்கு இத்தனை அவநம்பிக்கையா? இனியாவது குடிமக்கள்மீது எகிப்திய அரசு வைத்துள்ள பரிவை உணர்ந்துகொள்” என்கிறார்.
********************
இக்கற்பனை சம்பவத்தில், யோசேப்பை மட்டும்தான் அக்குடிமகன் நேரடியாகப் பார்த்தானேயொழிய, திரைமறைவிலிருந்த பார்வோனை அவன் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனாலும் பார்வோனோடும் அவன் உரையாடுகிறான்; யோசேப்போடும் அவன் உரையாடுகிறான்.
இதேவிதமாகத்தான் தேவனோடும் அந்த 3 புருஷரோடும் ஆபிரகாம் உரையாடியிருக்கவேண்டும். ஆபிரகாம் கண்ணாரக் கண்டு உரையாடியது, அந்த 3 புருஷரிடம். உணவைக் கொடுத்ததும், அந்த 3 புருஷரிடம்தான். அவ்வுணவைப் புசித்ததும் அந்த 3 புருஷர்தான். ஆகிலும் அந்த 3 புருஷரோடு ஆபிரகாம் உரையாடுகையில், தேவனும் இடைபட்டு ஆபிரகாமிடம் பேசினார். இந்தப் புரிந்துகொள்தலுடன் அச்சம்பவத்தைப் படித்தால், நமக்கு எந்தக் குழப்பமும் வராது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நான் ஏற்றுக்கொண்டேன் அன்பரே தேவன் யார் என்பதை அறிவித்தமைக்கு எனது நன்றிகள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென்.
இத்தளத்தில் புதிதாக இணைந்து பதிவைத் தந்துள்ள சகோ.gssscool அவர்களை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன். இத்தளம் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தமைக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.