தானியேல் 12:4 அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள்; அறிவும் பெருகிப் போம்.
இத்தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டபடியே இந்நாட்களில் பலரும் அங்குமிங்கும் ஓடி வேதாகமத்தை ஆராய்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சிக்குத் துணையாக பல இணைய தளங்கள் உலக முழுவதிலும் காணப்படுகின்றன.
ஆகிலும் அவற்றின் கருத்துக்கள் அனைத்துமே முழுக்க முழுக்க சரியானவையே எனச் சொல்ல முடியாது. எனவே எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை மட்டும் பிடித்துக் கொள்ள நாம் மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.
தள அன்பர்களின் கவனத்திற்காக இத்திரியில் சில இணைய தளங்களின் முகவரியைத் தருகிறோம். நம் வேதஅறிவைப் பெருக்கிக்கொள்ள அவற்றைப் பயன்படுத்திக் கொள்வோம்.
கோவை பெரியன்ஸ் குழுவினரால் நிர்வகிக்கப்படும் விவாத மேடை:
சங்கீதம் 88:18 சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.
சங்கீதக்காரனுக்கு நேர்ந்த இவ்வனுபவம், சமீபத்தில் எனக்கும் நேர்ந்ததை தள அன்பர்கள் அறிவார்கள். ஆம், ஒரு காலத்தில் பல வேதவிஷயங்களில் என்னோடு இணைந்து தோள் கொடுத்து பணிசெய்த தோழர் பெரியன்ஸ், தற்போது எனக்குத் தூரமாகிப் போனார்.
தகப்பன் தாயைக்கூட கிறிஸ்துவைக் காட்டிலும் அதிகமாக நேசிப்பவன் கிறிஸ்துவுக்குப் பாத்திரனல்ல என மத்தேயு 10:37 கூறுகிறது. கிறிஸ்துவினிமித்தம் வீடு, மனைவி, மக்கள் அனைத்தையும் இழக்க ஒருவன் முன்வரவேண்டும் என மாற்கு 10:29 கூறுகிறது.
அப்படியிருக்க தோழர் பெரியன்ஸ் எம்மாத்திரம்? எனவே வசனத்துக்கு விரோதமான அவரது போதனையை நான் எவ்வளவாய் எடுத்துரைத்த போதிலும் அதை ஏற்க மனமில்லாத அவரை விட்டு நான் விலகுகிறேன்.
அவரது தளத்தின் கருத்துக்கள் ஓரளவு வசனத்துக்கு இசைவாக இருந்ததால், அவரது தளத்தை இப்பகுதியில் சிபாரிசு செய்திருந்தேன். ஆனால் தற்போது மிகமிக முக்கியமான ஒரு விஷயத்தில் அவர் வசனத்துக்கு விரோதமான கருத்தில் இருப்பதால், அவரது தளத்திற்கு நான் தந்திருந்த சிபாரிசை தற்போது விலக்கிக் கொள்கிறேன்.
மாத்திரமல்ல, “எல்லோருக்கும் நித்திய ஜீவன்” எனும் அவரது தவறான போதனையில் சிக்கி யாரும் வஞ்சிக்கப்பட்டு போகவேண்டாம் என தள அன்பர்களை எச்சரிக்கிறேன்.