பரமபிதாவே இயேசுவாக இப்பூமிக்கு வந்தார்; பிதாவும் இயேசுவும் ஒருவரே; பிதாவும் இயேசுவும் சமமான 2 தேவர்கள், ஆனால் இருவரும் சேர்ந்ததுதான் ஒரே தேவன்; பரிசுத்த ஆவியும் ஒரு தேவன் தான், அவரும் பிதா மற்றும் இயேசுவுக்குச் சமமானவரே, எனவே பிதா இயேசு பரிசுத்தஆவி மூவரையும் தொழவேண்டும், ஆராதிக்க வேண்டும்; அதே வேளையில் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதிக்க வேண்டும் என வேதாகம் சொல்வதும் 100-க்கு 100 உண்மைதான் என்பது போன்ற பல குழப்பமான கொள்கைகளைச் சொல்லி போதிப்போர்கள் சிந்திக்கும்படியாக ஒரு (கற்பனையான) நகைச்சுவை ஜெபத்தை TruthSeekers தளத்தில் சகோ.soulsolution வெளியிட்டுள்ளார். இத்தள அன்பர்களும் அதைப் படித்து சிரித்து சிந்திக்கும்படியாக அந்த ஜெபம் இங்கு வெளியிடப்படுகிறது.
அன்புள்ள இயேசுசுவாமி...
பிதாவாகிய உம்மைத் தொழுதுகொள்கிறோம். துதிக்கிறோம்.பிதாவாகிய நீர் எங்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தீர். உம்மை நீரே எழுப்பிக்கொண்டீர். இயேசுகிறிஸ்துவின் தேவனாகிய நீர் உமக்கு நீரே பிரதான ஆசாரியராக இருக்கிறீர். உமது வலதுபாரிசத்தில் நீரே உட்கார்ந்து கொண்டு எங்களுக்காக உம்மிடத்தில் நீரே பரிந்து பேசுகிறீர். உமக்கு நீரே கீழ்ப்படிந்துகொண்டிருக்கிறீர். பரிசுத்த ஆவியானவராகவும் நீர் இருந்துகொண்டு எங்களுக்குள்ளேயே வாசம் செய்து நீரே உம்மிடத்தில் எங்களுக்காக வேண்டுதலும் செய்கிறீர். உம்மை நீரே அனுப்பிவிட்டு அனுப்பினவரே பெரியவர் என்று கூறுகிறீர். என் நாமத்தில் எதைக் கேட்டாலும் பிதாவாகிய நான் தருவேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறீர். உம்முடைய குமாரனாகிய நீர் உம்மையே ஜீவபலியாக கொடுத்தீர். நான் தேவனுடைய குமாரனாகிய பிதா என்று எங்கள் குழப்பங்களையெல்லாம் நீக்கிவிட்டீர். "நான் பிதாவாகிய என்னை வேண்டிக்கொள்வேன் அப்பபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படியாக சத்திய ஆவியாகிய வேறொரு(?) தேற்றரவாளனை அவர்(நான்) உங்களுக்குத் தந்தருவார் என்று யோவான்14:16ல் தெளிவாக சொல்லியிருக்கிறீர். "நாம் ஒன்றாயிருப்பது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி....யோவான் 17:20,21. ல் எல்லாருமே பிதாதான் என்றும் சொல்லியிருக்கிறீர்.
இத்தனை தெளிவான ஆவியைக் கொடுத்ததற்காக நன்றி செலுத்தி உம்முடைய பிதாவாகிய உம்மையும், உம்முடைய குமாரனாகிய உம்மையும், பரிசுத்த ஆவியாகிய உம்மிடத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் குமாரனாகிய பிதாவே ஆமென்.