நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீண்ட நாட்களாக செயலற்றுக் கிடக்கும் விவாதம்


Militant

Status: Offline
Posts: 830
Date:
நீண்ட நாட்களாக செயலற்றுக் கிடக்கும் விவாதம்
Permalink  
 


கிறிஸ்தவமும் மற்ற மார்க்கங்களும் என்ற தலைப்பில் ”KIRISTIANS BLOG" என்ற தளத்தில் ஒரு கட்டுரை பதியப்பட்டு அதன்மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் இறுதியில் "Gnana Piragasam" என்ற பெயரில் எனது விவாதத்தை நான் வைத்தேன். என்ன காரணமோ தெரியவில்லை, அதுவரை வெகுவேகமாக விவாதித்தவர்கள், எனது விவாதத்திற்குப் பதில் சொல்லாதிருக்கின்றனர்.

அந்த விவாதத்தின் சில பகுதிகள் இத்தள அன்பர்களுக்கு பயனாக இருக்குமென்பதால், அவற்றை அப்படியே எடுத்து இங்கு பதிக்கிறேன். முதலாவதாக கிறிஸ்தவமும் மற்ற மார்க்கங்களும் என்ற தலைப்பில் பதிக்கப்பட்ட கட்டுரை:

யுரோப் தனது 16ம்  நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை சீக்கிரமாக உணர்ந்தது.அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின்லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலைநாட்டினார்.நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவான்களின் உடமைகளையும் அவர்களின் சிலைகளையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை அடைய முடியாவிட்டால் வேறு எதினால் அடையமுடியும் என்று கேட்பார்.அதற்கு மார்டின்லுதர் கிறிஸ்துவே என்று ஆணித்தரமாக வாதிடுவார்.

என்ன இவன் கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும் என்று தலைப்பை வைத்து மார்டின் லூதர் பற்றி ஏதோ எழுதுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் ஆண்டவர், மார்டின் மூலமாக திரும்பவும் நிலைநாட்டிய சத்தியம்(விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்) தான் இன்று கிருத்தவம் மற்ற மார்கங்களிருந்து வேறுபடுகிறது என்று சொல்ல விரும்புகிறேன்.

மற்ற மார்க்கங்களிருந்து கிருத்துவம் எப்படி வேறுபடுகின்றது?
*கிருபையும் கிரியையும்
பிற மார்க்கங்களில் கிரியையினால் மோட்சம் அடையலாம் என்று அந்த மார்க்கங்களின் உபதேசியார் சொல்லுவதை நாம் பல முறை கேட்டிருக்கலாம்.அதாவது நாம் தானம் தர்மம் செய்வதினாலும் நாம் உடலை பலவித கட்டுபாட்டில் ஈடு படுத்துவதினாலும் மோட்சம் அல்லது பரலோகம் செல்லலாம் என்கின்றனர்.ஆனால் அடிப்படையான ஒரு உண்மையை அறியாமல் உள்ளனர்.அது எதுவெனில் நல்ல மரம் நல்ல கனியை தானாக தருகின்றது விஷமரம் விஷ கனிகளை தருகின்றது.நாம் நல்ல மரமென்றால்
நல்ல கனிகள் மாத்திரம் வர வேண்டுமே தவிர நல்லது அல்லாதவைகள் எப்படி வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.ஆதாம் விழுகையினாலே தான் நாம் எல்லாரும் இந்த பாவ சரீரத்தினால் அவதிபடுகிறோம் என்று பைபிள் காண்பிக்கிறது.அதினால் தான் பவுலும் ரோமர் 7 அதிகாரத்தில் பின்வருமாறு எழுதுகிறார்

நன்மை செய்யும் விருப்பம் எனக்கு இருந்தாலும் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை என்றும் பாவ சரீரத்தில் உள்ள பாவ பிரமாணம் என்னை அடிமைபடுத்துகின்றது என்றும் சொல்கிறார்.

மற்ற மார்க்கங்களில் இந்த பாவ சுபாவத்தை பற்றி அதிகம் பேச மாட்டார்கள் நம்மால் நல்லது செய்ய முடியம் அதினால் நாம் பரலோகம் செல்லலாம் என்று போதிப்பர்.ஆனால் அந்த நல்லதிலும் ஒரு சுய நலம் உண்டு என்றும்       கறைகள் ஏராளம் என்பதை பார்க்க அவர்களால் முடிவதில்லை.ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதியானவன் அவர்கள் மனக்கண்களை குருடாக்கி உள்ளான்.
இந்த பாவ சுபாவத்தை குறித்து பைபிளின் சில வசனங்களை பார்ப்போம்.
யோபு 14ம் அதிகாரத்தில் 4 வசனம்
அசுத்தமானதிளிருந்து சுத்தமானது பிறப்பிக்கிறவன் உண்டோ?
யோபு 15 அதிகாரம் 14ம் வசனம்
மனுஷனானவன் பரிசுத்தமாக இருப்பதும் பெண்ணிடம் பிறந்தவன் நீதிமானா இருப்பதும் எப்படி?

இன்னும் பல வசனங்கள் பைபிளில் உண்டு.இப்படி நாம் வசனங்கள் மூலமாகவும் நாம் சுய அனுபவத்திலும் மனுஷன் பிறப்பில் இருந்தே   கறை உள்ளவன் என்பதை அறிகிறோம்.இவைகள் மற்ற மார்க்கங்களில் சொல்லபடவில்லை.

இன்றும் பல கிருத்துவர்கள் கூட நம்முடைய பாவ சுபாவத்தை மறந்து பைபிளை படிப்பதினாலும் சபைக்கு தவறாமல் செல்லுவதினாலும் தசமபாகம்  கொடுப்பதினாலும்   தானம் தர்மம் பன்னுவதினாலும் பரலோகம் அடையலாம் என்று எண்ணுகின்றனர் மாறாக இந்த நற்கிரியைகல்லாம் செய்வதற்கு ஆதி முதல் தேவன் நம்மை உண்டாக்கினார் என்றும் இந்த நற்கிரியைகளில் நடப்பதற்கு அவைகள் முன்னதாகவே ஆயத்தம் செய்யப்பட்டது என்றும் இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்(கிருபையினால் ) வருகின்ற பலன்கள் என்பதை அறியாமல் உள்ளனர்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

விவாதம் - பகுதி 1

  1. chillsam says:

    // இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் (கிருபையினால் ) வருகின்ற பலன்கள் என்பதை அறியாமல் உள்ளனர் //

    எவைகள்…சற்று விளக்கினால் நலம்.(யாக்கோபு.2:17,18 ஐயும் கவனத்தில் கொள்ளவும்)

    புதிய வலைப்பூ முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!

    http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=1

    • தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.கிருபையினால் வரும் பலன்கள் எவைகள் எனில் கிருஸ்துவினடத்தில் வைக்கும் விசுவாசம்,நம்பிக்கை,அன்பு,மற்றும் நீதி,சமாதானம், போன்றவைகள்.
      நாம் காட்டு ஒலிவமரமாக இருந்த போதும் நாம் கிரியை நடபித்தோம் அதாவது நம் மனசும் மாம்சமும் விரும்பினைவைகளை செய்து கொண்டு வந்தோம்.இதில் நமக்கு மனது இருந்த போது ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்தோம்.
      நாம் நல்ல ஒலிவமரத்தில் ஓட்ட வைக்க பட்ட போது கர்த்தர் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்தோம்.மரியாளை போல விலை ஏற பெற்ற நளதத்தை அவர் மீது ஊற்ற கற்று கொள்ள வைக்கிறார்.அதை ஏழைகளுக்கும் கொடுத்திருக்கலாம் யூதாஸ் சொன்னது போல. இதில் எது சரி என்பது மனிதரின் பார்வையில் தவறாக படலாம் (நம் இந்து மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் குற்றம் சொல்கிறார்களே).ஆனால் நமக்கோ கர்த்தர் என்ன விரும்புகிறார் என்பதே முக்கியம்

  2. chillsam says:

    நல்லதொரு பதிலுக்கு நன்றி; யாக்கோபு.2:17,18 – இன் சரியான விளக்கத்தைக் கூற இயலுமா, அவர் எந்த கிரியையைக் குறித்து சொல்லுகிறார்..?

    பின்குறிப்பு:
    தயவுகூர்ந்து தாங்கள் எழுதியுள்ளதை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்; பிழையிருப்பின் திருத்திக் கொள்ளுங்கள்; நாம் செய்ய வேண்டிய வேலை அதிகமிருக்கிறதல்லவா..?

    • யாக்கோபு 2:17-18
      17. அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.

      18. ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக்காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.

      மேலே உள்ள வசனத்தின் படி அந்த ஒருவன் புறஜாதியானவன் என்றால் என் கருத்துகள்,
      ஒருவன் மனிதனாக மனசாட்சிபடி வாழும் போது அவன் தேவன் ஒருவர் உண்டு என்பதை அறிந்து அவருக்கு பயந்து வாழ முற்படுகிறான்.அப்படி வாழும் போது தன சொந்த ஜனத்தார் தேவைகளை அவனுக்கு மனம் உண்டாகும் போது பூர்த்தி செய்து தன நற்கிரியைகளை காண்பிக்கிறான்.அப்படி ஒரு மறுபடியும் பிறவாத ஒரு மனிதனே தன் மனசாட்சியின் படி செய்தால்,நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன் அவர் என் உள்ளத்தில் வாசம் செய்கிறார் என்று ஒருவன் சொல்லியும் தன் மாம்சமானவனின் தேவைகளை கண்டும் கானாதவனை போல் இருந்தால் அவன் விசுவாசம் சந்தேகத்திற்கு உட்படுகிறது.
      அதனால் தான் கர்த்தர் பரலோகத்தில் செல்பவர்களின் நீதிகள் பரிசேயர்களின் நீதிகளை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார் என்று எண்ணுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: நீண்ட நாட்களாக செயலற்றுக் கிடக்கும் விவாதம்
Permalink  
 


விவாதம் - பகுதி 2

  1. chillsam says:

    // அப்படி ஒரு மறுபடியும் பிறவாத ஒரு மனிதனே தன் மனசாட்சியின் படி செய்தால்,நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன் அவர் என் உள்ளத்தில் வாசம் செய்கிறார் என்று ஒருவன் சொல்லியும் …//

    மிக நேர்த்தியான பதில்…இது நியாயப்பிரமாணமில்லாமலே நற்கிரியைகளைச் செய்வோர் சார்பிலான விளக்கமானால் நியாயப்பிரமாண கிரியைகளைக் குறித்த போதனை என்ன‌…அதாவது பத்து கட்டளைகளாகிய கிரியையில்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு கூறுகிறாரா அல்லது நியாயப்பிரமாணத்தின் கிரியையைக் காட்டிலும் வேறொன்றை போதிக்கிறாரா..?

    தயவுசெய்து விளக்கவும்.

    • //அதாவது பத்து கட்டளைகளாகிய கிரியையில்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு கூறுகிறாரா அல்லது நியாயப்பிரமாணத்தின் கிரியையைக் காட்டிலும் வேறொன்றை போதிக்கிறாரா..?//

      முதலில் பத்து கட்டளைகளை குறித்த என் புரிதலை சொல்லி விடுகிறேன்.இந்த பத்து கட்டளைகளை ஒரு கிருத்துவன் எல்லா சூழ்நிலையிலும் கடைபிடிக்க கடமைபட்டுள்ளான்.இந்த பத்து கட்டளைகளில் ஓய்வு நாள் கட்டளை மாத்திரம் நமக்கு (கிருத்துவர்களுக்கு)விதிவிலக்காக தோன்றினாலும் நாம் தினந்தோறும் அதை கைகொள்கிறோம் என்று சொல்கிறேன்.எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.என் விளக்கம்,
      ஆண்டவர் ஒரு முறை சூம்பின கையை உடைய ஒருவனை சுகபடுத்தும் போது,அங்கு இருந்தவர்களை பார்த்து ,ஓய்வு நாளில் நன்மை செய்வதோ,தீமை செய்வதோ எது நியாயம்? என்று கேட்டார்.மேலும் தேவன் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்கிறார்.அப்படி என்றால் தேவனை மகிமை படுத்துவது என்று அர்த்தம் அல்லவா?.புதிய ஏற்பாட்டில் பவுலும் நீங்கள் எதை செய்தாலும் அதை தேவ மகிமைக்கென்றே செய்யுங்கள் என்று சொல்கிறார்.ஆகையால் இதன் அடிபடையில் நாம் பத்து கட்டளைகளை தேவனையும்,நம் உடன் மனிதர்களையும்,அன்பு கூறுவதினால் நிறைவேற்றுகிறோம்.பரிசேயரை போல உள்ளம் கடினபட்டு அன்பில்லாமல் வெளி வேஷமாக அல்ல,அன்பினால் கிரியை செய்கின்றா விசுவாசத்தோடு நாம் செய்கின்றோம்.
      ஆகையால் ஒரு உண்மை விசுவாசி பத்து கட்டளைகளை மாத்திரம் அல்ல அதற்கும் மேலே நிறைவேற்றுவான் என்று என் புரிதல் அடிப்படையில் சொல்கிறேன்.

      ஆகையால் நீங்கள் எழுதினது போல அந்த பத்து கட்டளைகளை அன்பினால் நிறைவேற்றாத விசுவாசியின் விசுவாசம் செத்தது என்றே கருத வருகிறது

  2. chillsam says:

    பத்து கட்டளைகள் சீர்திருத்தல் நிறைவேறுங்காலம் யூதருக்கு கிறித்துவின் நிழலாகக் கொடுக்கப்பட்டதாகவும் வேதம் கூறுகிறதே;அது எப்படி புறசாதியிலிருந்து கிறித்துவிடம் வந்தோரைக் கட்டுப்படுத்தும்?இப்படியே தசமபாகம் போன்ற நியாயப்பிரமாணத்துக்கு முந்தைய பொதுவான பிரமாணங்களும் கூட கிறித்தவனைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லப்படுகிறதே?

  3. //பத்து கட்டளைகள் சீர்திருத்தல் நிறைவேறுங்காலம் யூதருக்கு கிறித்துவின் நிழலாகக் கொடுக்கப்பட்டதாகவும் வேதம் கூறுகிறதே;அது எப்படி புறசாதியிலிருந்து கிறித்துவிடம் வந்தோரைக் கட்டுப்படுத்தும்?//

    நீங்கள் குறிப்பிட்ட வசனம்
    எபிரெயர் 10 அதிகாரம்
    1. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.

    மற்றும் நீங்கள் சொல்லியபடி சீர்திருத்த காலம் வரைக்கும் நடந்தேறுவது பத்து கட்டளைகள் அல்ல.அது பலிகளும்,காணிக்கைகளும் தான்.கீழே உள்ள வசனத்தை படிக்கவும்.

    எபிராயர் 9 அதிகாரம்
    10. இவைகள் சீர்திருந்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.
    மேலும் நம் ஆண்டவர் மத்தேயு 23:23
    பரிசேயரை பார்த்து நீங்கள் எல்லாவற்றிலும் தசம பாகம் செலுத்தி நியாயபிரமாணத்தில் வீசெஷிததவைகளான நீதியையும் இரக்கத்தையும் விட்டு விட்டதாக சொல்கிறார்.அவைகளையும் செய்ய வேண்டும் இவைகளையும் விடாதிருக்க வேண்டும் என்றும் சொல்கிறார் அந்த கால கட்டத்தில்.
    மேலும்
    எபிரெயர் 10 அதிகாரம்

    6. சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.

    7. அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

    8. நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:

    9. தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
    இங்கே ஆண்டவர் முதலாவது நீக்கின காரியங்களில் வெறும் பலிகளையும்,காணிக்கைகளையும் தான் தவிர அன்பு, நீதி, இரக்கங்களை அல்ல.

  4. chillsam says:

    அப்படியானால் பத்து கற்பனைகளையும் கிறித்தவன் கைக்கொண்டாக வேண்டுமென்கிறீர்களா அல்லது அதன் ஆதாரமான அன்பை நிறைவேற்றினால் போதுமா?

    ஏனெனில் யாக்கோபு.2:22 இன் படி விசுவாசத்தின் கிரியையையும் அதன் முடிவையும் காண முடிகிறது; ஆனால் நியாயப்பிரமாணத்தின் கிரியையின் முடிவை எப்படி காண இயலும்?

    கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்றும் வேதம் சொல்லுகிறதே,அப்படியானால் நியாயப்பிரமாணத்தினால் யாராவது நீதிமான் என்று பெயர் பெற்றதுண்டா என்பதையும் அது நித்திய ஜீவனைடைய உதவும் என்றும் கூற இயலுமா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

விவாதம் - பகுதி 3

  1. //அப்படியானால் பத்து கற்பனைகளையும் கிறித்தவன் கைக்கொண்டாக வேண்டுமென்கிறீர்களா அல்லது அதன் ஆதாரமான அன்பை நிறைவேற்றினால் போதுமா?//

    ஒரு உண்மை கிருத்துவன் விசுவாச வாழ்க்கை வாழும் போது நிச்சயமாக பத்து கட்டளைகளை கை கொள்வான்.அதற்கும் ஆழமாக அவன் அன்பு வெளிப்படும்.அந்த அன்பிற்கு முன் ஒன்றும் நிற்க முடியாது.எபெசியார் முதலாம் அதிகாரத்தில் நாம் அன்பில் பரிசுத்தமாகவும் குற்ற மற்றவர்களாகவும் அவர் தெரிந்து கொண்டார் என்று வாசிக்கிறோம்.

    ஆகையால் ஒரு கிருத்துவன் பத்து கட்டளைகளை கை கொள்ளவேண்டுமா?என்று கேட்பதை பார்க்கிலும் அவன் கர்த்தரின் கிருபையால் நிற்பதால் அவனை கர்த்தர் தம் நாம மகிமைக்கென்று பத்து கட்டளைகளை மாத்திரம் அல்ல அந்த கட்டளைகளின் ஆழமான அன்பையும் கைகொள்ள செய்திடுவார் என்று கருதுகிறேன்.

    மேலும் இந்த வசனத்தையும் உங்கள் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன்,

    I தீமோத்தேயு1 அதிகாரம்

    8. ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.

    9. எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,

    10. வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,

    11. நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

  2. //ஏனெனில் யாக்கோபு.2:22 இன் படி விசுவாசத்தின் கிரியையையும் அதன் முடிவையும் காண முடிகிறது; ஆனால் நியாயப்பிரமாணத்தின் கிரியையின் முடிவை எப்படி காண இயலும்?

    கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்றும் வேதம் சொல்லுகிறதே,அப்படியானால் நியாயப்பிரமாணத்தினால் யாராவது நீதிமான் என்று பெயர் பெற்றதுண்டா என்பதையும் அது நித்திய ஜீவனைடைய உதவும் என்றும் கூற இயலுமா?//

    கலாத்தியர் ௩ அதிகாரத்தில்

    நியாயபிரமானமானது நம்மை கிருத்துவினிடத்தில் வழி நடுத்துகிற உபாத்தியாக இருக்கிறது என்று வாசிக்கிறோம்.

    நிச்சயமாக நியாயபிரமாணத்தின் கிரியைகளால் ஒருவனும் நீதிமானாக முடியாது என்பதை ரோமர் நிருபத்தில் நாம் தெளிவாக அறியலாம்.

    கர்த்தரின் கிருபையால் நாம் நீதிமானாக்கபட்டோம் விசுவாசத்தினால்.அதிலே நாம் நிலைகொண்டிருந்தால் நாம் நீதிமான் தான்.அதன் பலனாக நாம் நற்கிரியைகளை செய்வோம்.ஒரு விசுவாசி தன கிருத்துவ வாழ்க்கையை தொடங்கும் போது நியாபிரமானத்தின் கிரியைகளை செய்ய முயலுவான்.அதினால் ஏற்பட்ட தோல்வியினாலும் பாரத்தினாலும் மனம் சோர்ந்து நான் என்ன செய்வேன் என்று கதறும் போது கிருத்துவானவர் அவனக்கு தன்னை வெளிபடுத்துவார்.மோட்ச்ச பிரயாணம் என்ற புத்தகத்தில் ஜான் பனியன் இந்த அனுபவத்தை தெளிவாக சொல்லுவார்.கிறிஸ்தியான்(மோட்ச்ச பிரயாணத்தின் கதாநாயகன்)தன பார சுமையோடு முன்னேறி கிறிஸ்த்துவின்சிலுவையின் அருகே வரும் போது தன பார சுமை தானாக விழுவதை பார்ப்பான்.

    கிருத்துவ வாழ்க்கையில் பல படிகள் உள்ளதாக எண்ணுகிறேன்.௨ பேதுருவில் ௧ அதிகாரத்தில் விசுவாசிகளை பார்த்து பேதுரு சொல்கிறார் நீங்கள் உங்கள் தெரிந்து கொள்ளுதலையும் அழைப்பையும் உறுதி செய்யும் படி ஜாக்கிரதையா இருங்கள் என்கிறார்.அவர்கள்(அந்த விசுவாசிகள்)ஏற்கனவே நீதிமானக்க பட்டால் என இப்படி சொல்கிறார் என்று நமக்கு வினா எழுகிறது.

  3. chillsam says:

    ஒரு முழுமையான கிறித்தவ விசுவாசத்துக்கேற்ற விதமாக பதிலளித்து வருகிறீர்கள்;ஆனால் 1யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். என்று கூறுகிறது; பத்து கற்பனைகளையும் விசுவாசத்தினாலும் ஆழமான அன்பினாலும் நிறைவேற்றுவதாகக் கூறும் நாம் நான்காவது கற்பனையை எப்படி நிறைவேற்றுகிறோம், என்பதை விளக்குவீர்களா, ஏனெனில் இது ஆதியிலேயே கொடுக்கப்பட்டதல்லவா..?

  4. sarav says:

    //பத்து கற்பனைகளையும் விசுவாசத்தினாலும் ஆழமான அன்பினாலும் நிறைவேற்றுவதாகக் கூறும் நாம் நான்காவது கற்பனையை எப்படி நிறைவேற்றுகிறோம், என்பதை விளக்குவீர்களா, ஏனெனில் இது ஆதியிலேயே கொடுக்கப்பட்டதல்லவா..?//

    இந்த பத்து கட்டளைகளில் ஓய்வு நாள் கட்டளை மாத்திரம் நமக்கு (கிருத்துவர்களுக்கு)விதிவிலக்காக தோன்றினாலும் நாம் தினந்தோறும் அதை கைகொள்கிறோம் என்று சொல்கிறேன்.எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.என் விளக்கம்,
    ஆண்டவர் ஒரு முறை சூம்பின கையை உடைய ஒருவனை சுகபடுத்தும் போது,அங்கு இருந்தவர்களை பார்த்து ,ஓய்வு நாளில் நன்மை செய்வதோ,தீமை செய்வதோ எது நியாயம்? என்று கேட்டார்.மேலும் தேவன் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்கிறார்.அப்படி என்றால் தேவனை மகிமை படுத்துவது என்று அர்த்தம் அல்லவா?.புதிய ஏற்பாட்டில் பவுலும் நீங்கள் எதை செய்தாலும் அதை தேவ மகிமைக்கென்றே செய்யுங்கள் என்று சொல்கிறார்.ஆகையால் இதன் அடிபடையில்நாம் தீமை செய்யாமல் நன்மை செய்து,தேவ மகிமைக்கென்று நம் செயல்களை நிமிடந்தோறும் தேவ ஆவியானவரின் மூலம் ஒப்புகொடுக்கபட்டும்,வழி நடத்தபடுகிறதாய் இருப்பதால் நாம் ஓய்வு நாளை(தேவ மகிமையை தேடுவதால்) எல்லா நாளும் அனுசரிக்கிறோம் என்று எண்ணுகிறேன்.
    இன்னும் ஒரு விளக்கம் பழைய ஏற்பாட்டில் ஒருவன் தன் உணவுக்கு ( சுயத்திற்கென்று) ஓய்வு நாளில் சுள்ளிகளை எடுக்க சென்றதால் கொல்லபட்டான்.ஆனால் தேவ ஆலயத்தில் ஆசாரியர் ஓய்வுநாளில் ஓய்ந்திராமல் அந்த நாளை வேலை நாளாக்கினாலும் தவறில்லை என்று வாசிக்கிறோமே.ஏன் அவர்கள் கர்த்தருக்கு அடுத்த வேலையே செய்ததால் தானே.நாமும் கர்த்தருக்கு பிரியமானதை தினந்தோறும் நம் குடும்பத்தில்,வேலை இடத்தில், செய்வதால் எல்லா நாளும் நாம் ஓய்வு நாளை போல பரிசுத்தமாய் ஆசாரிக்கிறோம் என்று எண்ணுகிறேன்.

  5. //ஒரு முழுமையான கிறித்தவ விசுவாசத்துக்கேற்ற விதமாக பதிலளித்து வருகிறீர்கள்;ஆனால் 1யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். என்று கூறுகிறது;//

    ஒரு மனிதன் கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்ட அந்த நேரத்தில் அந்த உண்மையான விசுவாசத்தில் அடிப்படையில் அவன் நீதிமானாக்க படுகிறான்.ஆகையால் அவன் கர்த்தருக்கே சொந்தம்.அவன் விழுந்தாலும் எழுந்தாலும் அவன் கர்த்தருக்கே உத்தரவாதி.அவன் மேல வேறொருவனும் குற்றம் சொல்ல முடியாது.(இங்கு நான் உண்மை கிருத்துவரை குறிப்பிடுகிறேன் பொய் கிருத்துவரை அல்ல).ஆகையால் அவன் பாவம் செய்து மீறினவன் என்று குற்றம் சாட்டபட்டாலும் அவனை திரும்பவும் எழுப்ப கர்த்தர் வல்லவராக இருக்கிறார்.

    உயிரை கொடுக்க தக்கதாக நியாயபிரமாணம் அருளப்படவில்லை.மோசேயும் நல்ல தேசத்தில் பிரவேசிக்க வில்லையே ஒரு அடையாளமாக.ஆனால் நமக்கோ கர்த்தராகிய ஏசு கிறிஸ்த்துவின் இரத்தம் நம் பாவங்களை சுத்திகரித்து நம்மை நிலைக்க செய்கிறது விசுவாசத்தினால்.

  6. chillsam says:

    http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=1

    நான் தங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலமே இரட்சிப்படைய முடியும் அதுவே அன்பு அதை நிறைவேற்றுவதற்கே கிருபாவரம் என சாதிக்கும் ஒரு நண்பரின் வாதங்கள்… உங்களுக்கு ஆத்தும பாரம் (?) இருந்தால் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.(Mobile:9283333200)

    இதற்கொரு உதாரணமே மேலே நான் கொடுத்துள்ள தொடுப்பு; இவர்களைப் போன்றோரிடம் புதியவர்கள் சிக்கிவிடாதிருக்க நாம் செய்ய வேண்டியதென்ன?

    நம்முடைய வீடுகளில் தெரிந்தோ தெரியாமலோ மாட்டி வைத்திருக்கும் பத்து கற்பனைகள் அடங்கிய அட்டையில் சில பதிப்புகளில் ஒரு வரி இருக்கிறது, “மக்கள் மறுரூபமாகுதல்” என,அதனை எடுத்துவிடுவதா அல்லது அன்பினிமித்தமாக செத்துப்போன அந்த பிரமாணங்களை இன்னும் ஞாபகத்துக்காக வைத்திருப்பதா, ஏதோ ஒருவித அச்சத்தினால் அதனை வைத்திருப்பது தவறல்ல என்பதோ பத்து கற்பனைகளைக் குறித்த சரியான தெளிவில்லாததினால் அது அவரவர் சுதந்தரம் என்பதோ கூடாது;

    இதைக் குறித்த விரிவான கட்டுரையினை எனது தளத்தில் எழுதுவேன்; அன்பான நண்பர் அவர்களும் இந்த தளத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

விவாதம் - பகுதி 4

  1. நீங்கள் குறிப்பிட்ட அன்பு அவர்களிடம் ஏற்கனவே நான் பேசி விட்டேன்.இந்த தலைப்பை பற்றி அல்ல ஆண்டவரின் தேவ தன்மையை பற்றி.அதன் பின்பு நான் அவரிடம் பேசவில்லை.மேலும் புதியவர்கள் சிக்கி விடாமல் இருக்க ஒன்று நன்கு வேத அறிவு உள்ள அனுபவத்திலும் வயதிலும் பெரியவர்களை நாடலாம் என்பது என் எண்ணம்.அவர்கள் இந்த இண்டர்னட் போன்ற சாதனங்களில் அனுபவம் இல்லாமையால்,அவர்களால் எழுத முடியவில்லை.தற்போது நான் அறிந்த வரையில் பிரதரன் சபை மக்கள்,அவர்கள் மூப்பர்கள் இந்த தலைப்பில் மிகுந்த வேத ஞானம் உள்ளவர்கள் அதுவும் குறிப்பாக மலையாள பிரதரன் சபை மூப்பர்கள்.(சில காரியங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களிடம் நிறைய காரியங்களை கற்று கொள்ளலாம்)

  2. தங்கள் அன்பான அழைப்பிற்கு நன்றி.நான் தற்போது கற்கும் நிலையிலே உள்ளேன் ஆகையால் இது தான் சரி என்று எதையும் என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. வழி இதுவே என்று எனக்கு சொல்லபடுகிற வழியில் சென்று கொண்டிருக்கிறேன் ஆகையால் நான் எதுவரைக்கும் தேறி உள்ளேனோ அது வரை என்னால் என்னிலும் இளையவர்க்கு போதிக்க முயற்சி செய்கிறேன் ஆண்டவர் கிருபையால்.ஆகையால் என்னால் முடிந்த வரை கேள்வி எழுப்பி நான் தெளிவு பெறவே (கற்று கொள்ளவே )விரும்புகிறேன்

  3. மேலும் நீங்கள் ஆங்கிலம் நன்றாக பேசுபவராக இருந்தால் கீழே வரும் சுட்டியில் சென்று உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.

    http://www.keralabrethren.net

  4. chillsam says:

    தாழ்த்திக்கொள்வது வேறு, தாழ்மைப்படுவது வேறு;நாம் மல்கியா.3:8 இன் படியான ஊழியத்தைப் புதுப்பிக்கவேண்டும்; எனவே அச்சம் வேண்டாம்;

    இரட்சிக்கப்பட்ட ஒரு வாலிபன் இரட்சிக்கப்படாத தனது தகப்பனுக்கு உபதேசிக்கலாமா,ஆம் அதனைச் செய்ய வேண்டும்;அதையே பவுல் தீமோத்தேயுவுக்கு கட்டளையிடுகிறார்.

    http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38606960

    எனவே கேள்வி கேட்கவாவது என்னை சந்திக்க வேண்டுகிறேன்; ஏனெனில் தங்கள் கேள்வி நல்லதொரு சத்தியத்துக்கு வாசலாகவும் எனது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவியாகவும் இருக்கக்கூடும்; சுவிசேஷங்களில் முத்தான சத்தியங்கள் கேள்விகளாலேயே பிறந்தது அல்லவா..?

    பி.கு:பயனுள்ள தங்கள் தொடுப்புக்கு நன்றி.

  5. chillsam says:

    மல்கியா.3:8 என்பதை தயவுசெய்து 4:6 என்று திருத்தி வாசிக்கவும்;

    “நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.” (மல்கியா.4:6)

    இதன்படி இளைஞர்கள் முதியோருக்கு போதித்து சங்கீதம்.119:99&100 நிறைவேறட்டும்.

    Psa 119:99 உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.

    Psa 119:100 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். (சங்கீதம்.119:99&100)



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

விவாதம் - பகுதி 5

  1. Gnana Piragasam says:

    kiristians says:
    //பிற மார்க்கங்களில் கிரியையினால் மோட்சம் அடையலாம் என்று அந்த மார்க்கங்களின் உபதேசியார் சொல்லுவதை நாம் பல முறை கேட்டிருக்கலாம்.//

    அவ்வாறெனில், வேதாகமாம் இம்மாதிரி போதனையைச் சொல்லவில்லை என்கிறீர்களா? பின்வரும் வசனங்களைச் சற்று படியுங்கள்.

    மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. (இயேசு சொன்னது)

    மத்தேயு 19:17 நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள். (இயேசு சொன்னது)

    ரோமர் 2:7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

    வெளி. 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

    இவைகள் ஒரு சிறிய sample மட்டுமே. இன்னும் ஏராளமான வசனங்கள் உண்டு. பின்வரும் வசனங்களையும் படியுங்கள்.

    மத்தேயு 5:16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது

    தீத்து 3:8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.

    யோவான் 14:21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். (இயேசு சொன்னது)

    இவ்வசனங்களெல்லாம் கிரியையை வலியுறுத்தவில்லையா? பின்வரும் வசனத்தையும் படியுங்கள்.

    மத்தேயு 5:19 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். (இயேசு சொன்னது)

    கற்பனைகளைக் கைக்கொண்டு, அவற்றையே போதிக்கவேண்டும் என இவ்வசனத்தில் இயேசு தெளிவாகச் சொல்வதுகூட உங்களுக்குப் புரியவில்லையா? இன்னும் படியுங்கள்.

    மத்தேயு 7:13,14 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

    ஜீவனுக்குப் போகிற இடுக்கமான வாசலை உங்களைப் போன்றோரால் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில் அதைக் கண்டுபிடிப்பவர்கள் சிலர்தான்.

  2. Gnana Piragasam says:

    kiristians says:
    //இந்த பாவ சுபாவத்தை குறித்து பைபிளின் சில வசனங்களை பார்ப்போம்.
    யோபு 14ம் அதிகாரத்தில் 4 வசனம்
    அசுத்தமானதிளிருந்து சுத்தமானது பிறப்பிக்கிறவன் உண்டோ?
    யோபு 15 அதிகாரம் 14ம் வசனம்
    மனுஷனானவன் பரிசுத்தமாக இருப்பதும் பெண்ணிடம் பிறந்தவன் நீதிமானா இருப்பதும் எப்படி?//

    இதே யோபுவைத்தான் உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் என தேவன் நற்சான்றிதழ் பகர்ந்தார். அவ்வாறெனில் அசுத்தமான ஒருவனுக்கா தேவன் நற்சான்றிதழ் கொடுத்தார்?

    மனிதன் பரிசுத்தமாக இருப்பது கூடாதெனில், பேதுரு ஏன் இப்படிச் சொன்னார்?

    1 பேதுரு 1:15,16 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

    வசனங்களை ஒன்றோடொன்று balanace செய்து கருத்தைச் சொல்லுங்கள். கடிவாளம் போடப்பட்ட குதிரை மாதிரி, ஒரு பக்கத்தை மட்டுமே பாராதிருங்கள்.

    • வேகமாக விவாதம் செய்தவர்கள் வசனங்களை எடுத்துப் போட்டதும் அடங்கிவிட்டனரே! முடிந்தால் பதில் சொல்லட்டும், அல்லது தவறை ஒத்துக்கொள்ளட்டுமே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

KIRISTIANS BLOG தளத்தின் விவாத பகுதி நிறைவுற்றது.

விவாத பகுதி 3-ல் chillsam என்பவர் எழுதினது:

//http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=1

நான் தங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலமே இரட்சிப்படைய முடியும் அதுவே அன்பு அதை நிறைவேற்றுவதற்கே கிருபாவரம் என சாதிக்கும் ஒரு நண்பரின் வாதங்கள்… உங்களுக்கு ஆத்தும பாரம் (?) இருந்தால் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.(Mobile:9283333200)//

விவாத பகுதி 4-ல் kiristians என்பவர் எழுதினது:

//நீங்கள் குறிப்பிட்ட அன்பு அவர்களிடம் ஏற்கனவே நான் பேசி விட்டேன்.இந்த தலைப்பை பற்றி அல்ல ஆண்டவரின் தேவ தன்மையை பற்றி.அதன் பின்பு நான் அவரிடம் பேசவில்லை.//

இத்தளத்தின் தொடுப்பைக் கொடுத்த chillsam, என்னுடன் தொடர்பு கொள்ளும்படி கொடுத்த Mobile எண் தவறானது.

என்னோடு ஏற்கனவே பேசியுள்ளதாக kiristians கூறுகிறார். ஆனால் kiristians என்பவர் யார், அவர் எப்போது என்னிடம் பேசினார் என்ற விபரம் எதுவும் தெரியவுமில்லை, அது எனது ஞாபகத்திலுமில்லை.

இக்கட்டுரை மற்றும் விவாதத்தின் மீது தங்களது விமர்சனம் மற்றும் விவாதத்தை தள அன்பர்கள் தரலாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard