நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவத்தின் சம்பளம் மரணமே, நித்திய வேதனை அல்ல - கோவை பெரியன்ஸ்


Militant

Status: Offline
Posts: 830
Date:
பாவத்தின் சம்பளம் மரணமே, நித்திய வேதனை அல்ல - கோவை பெரியன்ஸ்
Permalink  
 


பாவத்தின் சம்பளம் பற்றி கோவை பெரியன்ஸ் தளத்தின் பாவத்தின் சம்பளம் மரணம் எனும் திரியில் பதியப்பட்டுள்ள பயனான ஒரு பதிவு.

//குறைவான இடம் இருப்பதால், நாம் சுருக்கமாகவே நம் கர்த்தரின் சில உவமைகளையும், கருகலான வார்த்தைகளையும் பார்க்கலாம், இதைக் கொண்டே நித்திய வேதனை போன்ற ஒரு தத்துவத்தை உருவாக்கி அதை அநேகர் நம்பும் படி செய்த கோட்பாடுகளையும் பார்க்கலாம். பொதுவாக தகர்க்கமுடியாதவைகள் என்று நம்பப்படும் முக்கியமன இரண்டை நாம் பார்ப்போம் - முதலாவது செம்மறியாடுகள், வெள்ளாடுகள் கொண்ட உவமை (மத். 25:31-46), மற்றும் ஐசுவரியவான், லாசரு பற்றிய உவமை (லூக். 16:19-31). ஒழுங்கான விளக்கத்தை பார்த்தால், அவர்கள் சொல்லுவது போல் ஒன்றுமே இதிலிருந்து நமக்கு கிடைக்காது.

செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளின் உவமை இயேசுவின் 1000 ஆண்டு ஆட்சியில் (மிலெனியம்) நடக்கும் சோதனைகளுக்கு பிறகு உள்ளதைக் குறித்து சொல்ல பட்டிருக்கிறது - "அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் மகிமையுள்ள சிங்காசனத்தில்ன் மேல் வீற்றிருப்பார்". இந்த காலத்தின் அறுவடை அப்போது இருக்கும் மக்களின் தன்மையைப் பொருத்து இருக்கும், இதற்காகவே 1000 வருடங்கள். 41, 46 வசனங்களே நமக்கு தேவையான வசனங்கள், இதிலே நீதியற்றவர்களை (வெள்ளாடுகள்) குறித்து பேசப்பட்டிருக்கிறது.

வச, 41, "சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்படிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்". இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எப்படி "வெள்ளாடுகள்" என்று அடையாளமாக சொல்ல பட்டிருக்கிறதோ, அப்படியே தான் "நித்திய அக்கினி". எப்படி தன்னிச்சைகளின் படி நடக்கிறவர்களையும், அநீதியுள்ளவர்களையும், வெள்ளாடுகள் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அப்படியே அழிவையே நித்திய அக்கினி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அக்கினி எப்பவுமே அழிக்கும் தன்மை உள்ளதே தவிர பாதுகாக்கும் தன்மையுள்ளது அல்ல. தீ அணைக்கபடாமல் இருந்தால் அதில் விழும் வெள்ளாடு முற்றிலுமாக அழிந்து விடும். ஆக அநீதிமான்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என்று இந்த உவமை சொல்லுகிறது. அநீதிமான்களுக்கு உவமையாக வெள்ளாடுகள் போல் நித்திய அழிவிற்கு பதில் அக்கினி என்று உள்ளது.

வச. 46, "இவர்கள் நித்திய ஆக்கினையை அடைய போவார்கள்" என்கிறது. அநீதிமான்கள் தண்டிக்கப்படுவார்களோ அல்லது அவர்களின் தண்டனை நித்தியமானதாக இருக்கும் என்பதை குறித்து அல்ல கேள்வி; அது எப்பேற்பட்ட தண்டனை என்பதைத்தான் நாம் ஆராய்ந்துபார்க்கிறோம். வேதத்தில் எந்த இடத்தில் வாசித்தாலும் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்றே உள்ளது; இந்த உவமையும் இதையே கற்றுத்தருகிறது. தவறான அபிப்பிராயம் கொண்டவர்களின் வாதமே இந்த உவமைக்கு தப்பர்த்தம் கொடுக்கிறது. இதில் வரும் தண்டனை என்கிற கிரேக்க பதம் இதற்கான அர்த்தத்தையும் கொடுக்கிறது. மூல பாஷையில் கோலாஸின் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, மாறாக ஆக்கினை என்ப்பதற்கு கிரேக்கத்தில் பாஸினோஸ் என்கிற வார்த்தை பயன் படுகிறது. கோலாஸின் என்கிற வார்த்தை கொலாஸோ என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்த வார்த்தை. அதற்கு அர்த்தம். 1. மரத்திலிருந்து கிளைகளை வெட்டி விடுவது போல் வெட்டி விடுவது. 2. தடுப்பது அல்லது அடக்குவது. இதில் முதலாவது அர்த்தம் மிகப்பொருத்தமாக இருக்கும் எப்படியென்றால், ஜீவன் கிடைப்பது பரிசாக இருப்பது போல், ஜீவனிலிருந்து வெட்டி விடப்படுவது தான் தண்டனையாகும்.

ஐசுவரியவான் மற்றும் லாசருவின் உவமை - லூக். 16:19 - 31

இந்த பகுதி உவமையாக சொல்லப்படிருந்தாலும் பெரும்பாலோர் இதை அப்படியே எழுத்தின்படியே எடுத்துக் கொள்ளுகிறார்கள். இதை அப்படியே எழுத்தின்படி எடுத்துக் கொண்டோமானால் பல அபத்தங்களை நாம் பார்க்கலாம்; உதாரணமாக, ஐசுவரியவான் நரகத்திற்கு போன காரணம் அவன் மிகவும் ஐசுவரியம் கொண்டவனாக இருந்தான் மேலும், அவன் லாசருவிற்கு மேசையிலிருந்து விழுந்ததை மாத்திரம் கொடுத்தான். அவனது பாவமோ துஷ்டத்தனமோ சொல்லப்படவில்லை. மேலும் லாசரு ஆசீர்வதிக்கப்பட்டது, அவன் நல்லவனாக இருந்தான் என்றோ, அல்லது தேவன் மேல் விசுவாசம் கொண்டவனாக இருந்தான் என்று அல்லாமல், அவன் ஏழையாகவும், வியாதியஸ்தனாகவும் இருந்ததினால் தான். ஆக எழுத்தின்படி இதை புரிந்துக் கொண்டோமென்றால், நாம் பரலோகம் செல்ல பிச்சைகாரர்களாகவும், உடம்பில் சீழ் வடிந்துகொண்டு இருப்பவராகவும் இருக்க வேண்டும்; மாறாக இப்பொழுது வசதியாகவும் நல்ல உடைகளை உடுத்துபவர்களாகவும் இருந்தால் நாம் நித்திய ஆக்கினைக்குள் தான் போவோம் என்பதாகும். மேலும் பரலோகம் என்பதை இங்கு ஆபிரகாமின் மடி என்று உள்ளது, எனவே மடி உண்மையென்றால், உலகில் உள்ள எல்லா எழைகளும் வியாதியஸ்தரகள் தங்கும் படி அவ்வுளவு பெரிதான மடி தேவையாக இருக்கும். நாம் ஏன் அபத்தங்களை பார்க்க வேண்டும்? இதை உவமையாக எடுப்போமென்றால் சுலபமாக அர்த்தம் புரிந்து கொள்ளலாம். உவமையில் சொல்லப்பட்ட வார்த்தை அதே அர்த்தம் கொண்டதாக இருக்காது, எடுத்துக்காடாக, நம் கர்த்தர் சொன்னபடியே, கோதுமை மற்றும் களைகள் பற்றிய உவமையில், கோதுமை இராஜ்ஜியத்தின் பிள்ளைகளும், களை என்பது பிசாசின் பிள்ளைகள் என்று அவரே அர்த்தம் தருகிறார். இவர்களையே வேறு ஒரு உவமையில் செம்மறியாடுகளாகவும், வெள்ளாடுகளாகவும் சொல்லுகிறார். அப்படியே இந்த உவமையிலும் ஐசுவரியவான் ஒரு ஜாதி மக்களையும், லாசரு இன்னோரு ஜாதி மக்களுக்கு அடையாளமாக சொல்லுகிறார், அதன் மூலமாக அந்த அந்த ஜாதி மக்களுக்கு சொல்லப்படுவதே இந்த உவமையாகும்.

ஐசுவரியவான் யூத மக்களைக் குறிக்கும் படியாக இருந்தான், இந்த உவமை சொல்லப்படும் காலத்தில் அவர்கள் தேவனின் எல்லா கிருபைகளும் பெற்று "சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்". பவுல் சொல்லுகிற படி யூதர்கள் விசேஷித்த மக்களாக இருந்தார்கள் எனென்றால், அவர்களிடமே நியாயப்பிரமாணங்களும், தீர்க்கதரிசனங்களும் கொடுக்கப்படிருந்தது. இராத்தம்பரம் என்பது யூதர்களுக்கு ஆபிரகாம், தாவீிது போன்றவர்களால் வந்த செல்வமாகும். அப்படியே அவர்கள் செலுத்திய பலிகள் பிரத்தியேகமாக அவர்களை ஒரு பரிசுத்த ஜாதியாக வைத்திருந்தது, அதையே ஐசுவரியவானின் விலையேறப்பெற்ற வஸ்திரம் என்று உள்ளது (வெளி. 19:8 - மெல்லிய வஸ்திரம்).

லாசரு, யூத யுகம் முடியும் மட்டும் தேவனுக்கு பயந்திருந்த மற்ற ஜாதியாரை குறிப்பதாக இருக்கிறது. எப்படி வஸ்திரம் இஸ்ரவேலின் நீதியை குறிக்கிறதோ அப்படியே பருக்கள், மற்றவர்களின் அநீதியைக்குறிக்கும் ஏனென்றால் இஸ்ரவேலரைப் போல அவர்களிடம் பலிகள் இல்லை. அவர்கள் மாதிரிகளாக சுத்திகரிக்கப்படவும் இல்லை, ஆகையால் ராஜ்ஜியத்தின் வாக்குத்ததங்களில் அவர்களுக்கு பங்கு இல்லாமல் இருந்தது. அவர்கள் இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குதத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியருமாக இருந்தார்கள் (எபே. 2:11-13). அவர்கள் எப்படியாக இஸ்ரவேலின் நிரம்பிய மேஜையிலிருந்து, துணிக்கைகள் கிடைக்கும் படியாக, நாய்களின் கூட்டத்திற்கு ஒப்பானவர்களாக இருந்தார்கள் என்று கானானிய ஸ்திரியிடம் நம் கர்த்தர் பேசியிதிலிருந்து கண்டறியலாம். (மத். 15:22-28).

ஆனால் இந்த இரண்டு வகுப்பாருக்கும் ஒரு மாற்றம் வந்தது. அந்த ஐசுவரியவான் (யூத ஜாதி) மரித்தான், அதாவது, ஒரு தேசம் என்று இல்லாமல் போனார்கள், தேவனின் கிருபைகள் கொண்ட தேசம் என்பது மாறி, அவர்களிடமிருந்து தேவனின் இராஜ்ஜியம் நீக்கப்பட்டு, மற்றவர்களிடம் (புறம்பேயிருப்பவர்களிடம்) கொடுக்கப்பட்டது (மத். 21:43).

அந்த ஐசுவரியவான் ஜாதி எல்லா கிருபைகளும் இழந்து கஷ்டத்திலும் துன்பத்திலும் நின்றது. அப்பொழுது முதல் இதுவரை யூத மக்கள் அவர்களின் சட்டங்களின் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் "ஆக்கினை"க் குள்ளாக இருக்கிறார்கள்,. "லாசரு" வகுப்பார்களும் மரித்து, அதாவது முன்பு விலக்கப்பட்ட நிலையிலிருந்து மாறி, தேவனின் கிருபைகளுக்கு பாத்திரவான்களானார்கள் (அப். 10:28-35). கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட இந்த வகுப்பார், அதன்படி, ஆபிரகாமின் மடியில் - அதாவது வாக்குதத்தத்தின் படி ஆபிரகாமின் உண்மை சந்ததியானர்கள். வாசிக்கவும் கலா. 3:16, 29; ரோம் 11:7-9, 12-25. 

நேர்மையும், சத்தியமும் ஜெயம் கொள்ளட்டும்

இப்படியாக வேதம் நித்திய துன்புறும் வேதனைக்கு சற்றும் ஒத்துபோகவில்லை என்று பார்த்தோம். இப்படியான ஒரு கோட்பாடு வர பல சபைகளின் பிரமாணங்களும், அறிக்கைகளும், பாடல் புஸ்தகங்களும், மத ஆராய்ச்சி நூல்கள் மாத்திரமே காரணம்; இப்பொழுதோ பெருகிக்கொண்டிருக்கும் சத்தியத்தின் வெளிச்சதினால்; அதன் விளைவாக இருண்ட காலங்களில் ஏற்பட்ட இப்படியான பயங்கரமான கோட்ப்பாடுகளில் இருந்து விடுதலை கிடைத்து வருகிறதை பார்க்கலாம். ஆனால், சில கிறிஸ்தவர்கள், இதை ஒப்புக் கொள்ளாமல் இன்னும் இருளிலே இருக்கும் அந்த விக்கிரகங்கள் போன்ற கோட்பாடுகளுக்கு ஆராதனை செய்து அவைகளையே வணங்கிக்கொண்டு அதையே பிரசங்கித்தும் வருகிறார்கள். இதற்காக வாதாடும் படி அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்ய நேரமும், பணமும் விரயமாக்கிகொண்டிருக்கிறார்கள், ஆனால் மனதளவில் அவர்களின் இருதயங்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை, தனிமையில் அவர்கள் இந்த கோட்பாடுகளை மறுக்கவும் செய்கிறார்கள்.

இதன் விளைவு, உலகம், இப்படியான உண்மை இருதயம் உள்ள கிறிஸ்தவர்களையும் வேதத்தையும் ஒதுக்குகிறது; மாறாக வேஷதாரிகளும், பாதி-நாத்தீகர்களும் பொதுவான கிறிஸ்தவர்கள் என்று உயர்த்தபடுகிறார்கள். பொதுவான கிறிஸ்தவர்கள் இந்த கோட்பாடுகளை பிடித்துக் கொண்டு, வேதத்தின் படிப்பினைகளை தவறு என்று சொல்லுமளவிற்கு துணிந்துமிருக்கிறார்கள். இதன் விளைவு அதிகபடியாக முதலில் நம்பிக்கைத்துரோகமும், பிறகு அராஜகமும் குழப்பமுமாகும். இதற்கு முழு பொறுப்பும் பிரசங்க மேடைகளிலிருந்து பிரசங்கிக்கும் வெதுவெதுப்பான கிறிஸ்தவர்களே ஆவார்கள். இப்படிப்பட்டவர்கள் சத்தியத்தை விட்டுகொடுப்பவர்களாகவும், தேவனின் குணாதிசயங்களை குறைப்பவர்களாகவும், மடத்தனமானதை செய்து தங்களையே ஏமாற்றிக் கொள்பவர்களாகவும், பூமிக்குரிய வசதிகளையோ, சுகத்தையோ, நிம்மதியையோ தேடிக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். 

வெளிப்படையான கிறிஸ்தவர்கள் உண்மையாகவே தங்களை தேவன் பக்கம் திருப்பினால், விரைவிலே அவர்கள் அறிந்துகொள்ளும் விஷயம் என்ன வென்றால், "அவர்கள் தேவனுக்கு பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" என்று (ஏசா. 29:13). இப்படி சிந்தித்தால், "தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும்" விளங்கும் (ரோம். 3:4), இப்படி ஏற்றுக்கொண்டால், விரைவிலே குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு சபை பிரமாணங்களும் தகர்த்து எறியப்படும். அப்பொழுது இதற்குமுன்பு இல்லாததுபோல் வேதம் தியானிக்கப்பட்டு, "பாவத்தின் சம்பளம் மரணம் (நித்திய அழிவு)" என்று சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மன்னிப்பு பெறும் மற்றும் பெறாத பாவங்கள்.

விரும்பி செய்யும் பாவத்தின் தண்டனையை குறித்து நாம் இனி பார்க்கலாம். ஆதாமும் அவன் பின் சந்ததியாருக்கும் கிடைத்த தண்டனை இவ்வகையைச் சேர்ந்தது; பிறகு இயேசு கிறிஸ்து அந்த தண்டனைக்கு செலுத்திய மீட்ப்பின் பொருளினாலேயே அந்த பாவத்திற்கும் பிறகு செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்க பெற்றது.

மன்னிப்பு பெறும் பாவம் என்றால், ஆதாம் செய்த பாவத்தின் நிமித்தம் பெலவீனத்தால் நாம் செய்யும் பாவம் ஆகும், இதற்காகவே கிறிஸ்து மீட்பின் பொருள் செலுத்திவிட்டார். அவை விரும்பிச் செய்வது அல்ல, மாறாக அறியாமையில் செய்வது, அல்லது மாம்சத்தின் பலவீனத்தில் செய்கிறது ஆகும். கிறிஸ்துவின் பலியின் நிமித்தம் நாம் மன்னிப்பு கேட்கும் போது அவை நமக்கு மன்னிக்கப்படும் என்று தேவன் வாக்கு செய்திருக்கிறார்.

மன்னிப்பு பெறாத பாவங்கள் என்றால், விரும்பியே செய்வதாகும். எப்படி விரும்பியே செய்த முதல் பாவத்திற்கு மரணம் தண்டனையாக இருந்ததோ, அப்படியே தேவனை பற்றி எல்லா அறிவையும் பெற்று விரும்பி செய்யும் பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது. இதை இரண்டாம் மரணம் என்று வேதம் கூறுகிறது. முதல் தடவை செய்த பாவத்திற்கு கிறிஸ்து பலியானார், ஆனால் அப்பொழுது இந்த பாவத்திலிருந்து தப்பிக்கும் படி ஒன்றுமே இருக்காதே.
//



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard