ஒரு நீதிபதியானவன் ஒரு குற்றவாளிக்கு அவன் செய்த குற்றத்தின் அடிப்படையில் சிறைத்தண்டனை அல்லது மரணதண்டனை கொடுப்பதுண்டு. தண்டனை எதுவாக இருந்தாலும் அது குற்றவாளிக்கு தீமையாக அல்லது தீங்கானதாகத்தான் இருக்கும். இந்நிலையில், அவனது தீமைக்கு யார் காரணம் எனக் கூறமுடியும்? நீதிபதியா அல்லது குற்றவாளியா? நிச்சயமாக குற்றவாளி என்றுதான் கூறமுடியும்.
இதேபோல்தான் ஒரு நீதிபதி ஸ்தானத்தில் இருந்து, ஒரு மனிதனை தேவன் தண்டிக்கையில், அம்மனிதனுக்கு தண்டனையாகக் வந்த தீமைக்குக் காரணம் தேவனல்ல, சம்பந்தப்பட்ட மனிதனே என்பதுதான் உண்மை.
அடுத்து, தகப்பன் மகன் உறவை எடுத்துக்கொள்வோம். மகனுக்கு ஒரு வாகனத்தை தகப்பன் வாங்கிக் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் மகனிடம் அதிக வேகமாகப் போகாதே என்று சொல்லித்தான் வாகனத்தைக் கொடுப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் மகன் என்ன செய்வான்? அதிக வேகத்தில் செல்லவேண்டும் என்றுதான் விரும்புவான். அதன்படி அவன் அதிக வேகத்தில் சென்றதை தகப்பன் அறிந்தால் என்ன செய்வார்? மகனை வார்த்தையால் கண்டிப்பார், அல்லது அடித்துக் கண்டிப்பார், அல்லது சில நாட்கள் அவன் வாகனம் ஓட்டவேண்டாம் என்று சொல்லி வாகனத்தை வாங்கிவைத்துக் கொள்வார். இவற்றில் எதுவானாலும் அது மகனுக்குத் தீமையாகத்தான் தெரியும்.
ஒருவேளை மகன் வேகமாகச் சென்று விபத்துக்குள்ளானால், அத்தகவலை தகப்பனே காவல் துறையிடம் சொல்லி, மகன் சட்டப்படித் தண்டிக்கப்படும்படி செய்வார். இப்படி எதைச் செய்தாலும் அது மகனுக்கு தீமையாகத்தான் இருக்கும். இதனால் மகனின் தீமைக்கு தந்தைதான் காரணம் எனக் கூற முடியுமா? நிச்சயமாக அல்ல.
தகப்பன் மகனிடம் வேறு விதத்திலும் தீமையைக் கொண்டு வருவதுண்டு. எப்படியெனில், தனது மகனுக்குத் தீமைகள் நேரிடும்போது அதை அவன் பொறுமையாய் சகிப்பானா, தனக்குக் கீழ்ப்படிவதன் காரணமாக சில துன்பத்திற்குள்ளாக நேரிட்டாலும் அதை முறுமுறுப்பின்றி ஏற்றுக்கொள்வானா என்பதை அறிவதற்காகவும் அவனைச் சில துன்பங்கள் மூலம் வருத்துவதுண்டு. தகப்பன் இப்படிச் செய்வதை நாம் “தீமை” எனச் சொல்வதில்லை. மாறாக, மகனைச் சிட்சித்தல் என்றுதான் சொல்லுவோம். இப்படி மகனை சிட்சிக்கும் தகப்பன், சிட்சையை சகித்த மகனுக்குப் பரிசாக, சில பரிசுகளையும் வழங்குவதுண்டு.
தகப்பன்/மகன், நீதிபதி/குற்றவாளி உறவின் அடிப்படையில் மகனுக்கு/குற்றவாளிக்கு எப்படி தீமை நேரிடுகிறதோ அதே விகமாகத்தான் இவ்வுலகில் மனிதனுக்கு துன்பங்கள் நேரிடுகின்றன. ஆனால் அப்படி துன்பங்கள் நேருடும்போது, அத்துன்பங்களுக்குக் காரணம் தேவன்தான் என நாம்சொல்லிவிடுகிறோம். அதற்கு ஆதாரமாகச் சில வசனங்களையும் கூறுகிறோம்.
கோவை பெரியன்ஸ் தளத்திலும் இது சம்பந்தமாக ஒரு திரி துவக்கப்பட்டு, அதில் சில வசனன்களும் இடம்பெற்றுள்ளன. அவ்வசனங்களின் கருத்தை ஆராய்ந்து, மனிதனின் துன்பங்களுக்குக் காரணம் தேவன்தானா, அல்லது மனிதனா, அல்லது வேறெதுவுமா என்பதை அறிவோம்.
"... மனுப்புத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்." பிர 1:13
"... ஒரு பாத்திரத்தை கனவீனமான காரியத்துக்குப் பண்ணுகிறதற்கு அவனுக்கு அதிகாரமில்லையோ?" ரோம 9:18 முதல் 25
"... நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகாசங்காரத்தையும் வரப்பண்ணுவேன்." எரே 4:6
"... நான் அவர்கள் மேல் ... தீங்கை வரப்பண்ணுவேன்." எரே 6:19
" ... அப்பொழுது அது(பொய்யின் ஆவி), நான் போய் அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்(கர்த்தர்):... போய் அப்படிச் செய் என்றார்." 1இராஜா 22:22
கோவை பெரேயன்ஸ் தளத்தில் தீமைக்கு யார் காரணம்? தேவனா என்ற திரியில் தங்களில் விளக்கங்கள் மிகவும் அருமை. அதுவும் கடைசியாக இயேசு மற்றும் சாத்தானுக்கு இடையே நடந்த வசன உரையாடலை அடிப்படையாக கொண்டு தாங்கள் முன்வைத்த கருத்து மிகவும் அருமை யானதும் சுலபமாக யாருக்கும் புரிந்துவிட கூடியதுமாக இருக்கிறது.
ஒரே வேத புத்தகத்தை வைத்துகொண்டு இரு எதிர்புற கருத்துள்ள வசனங்களை இருவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டு ஒருவர் சொல்வதை இன்னொருவர் ஏற்காமல் விவாதத்தை வளர்ப்பது ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்பை உண்டாக்கும் என்றே கருதுகிறேன்.
எனது கருத்தை பொறுத்தவரை: பெரியன்ஸ் கருத்துக்கு எதிராக எப்படி உங்கள் வசனம் பொருந்துகிறதோ அதேபோல உங்கள் கருத்துக்கு எதிராக பெரியன்ஸ் வசனங்கள் பொருந்துவது உண்மையே!
இந்நிலையில் நமது நிலை என்ன? நாம் நாம் மனதில் எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியமாகிறது!
அதாவது நாம் தேவனுக்கேற்ற கிரியைகளை செய்வதில் அதிகபிரயாசம் எடுக்கவேண்டியது அவசியம்! ஆனால் அந்த கிரியையிநிமித்தம் நம் மனதில் சிறிது பெருமை தோன்றினாலும்கூட உடனே "தேவனின் கிருபை இல்லாமல் என்னுடைய கிரியையினால் பயனில்லை" என்று எண்ணி, அப்பெருமைக்கு உடனே முடிவுக்கொண்டுவர வேண்டும். அதேபோல் "எல்லாம் தேவனின் செயல் நாம் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்" என்பதுபோன்ற எண்ணம் நாம் மனதில் வருமாகில், உடனே கிரியையின் அவசியத்தைபற்றி வேதம் சொல்லும் வசனங்களை மனதில் நிறுத்தி, என்னதான் தேவனின் கிருபையும் அதன்மேல் நமக்கு விசுவாசமும் இருந்தாலும்கூட அதற்கேற்ற கிரியை இல்லாத பட்சத்தில் அது செத்ததாகவே இருக்கும் எண்ணி நம்முடைய கிரியையையும் நாம் விடாதிருக்க வேண்டும்" என்பதே எனது கருத்து.
எந்தபக்கம் அதிகமாக சாய்ந்தாலும் இழந்துபோக நேரிடலாம்
நீண்ட நாட்களுக்குப் பின் இத்தளத்தில் பதிவைத் தந்த சகோ.சுந்தருக்கு நன்றி.
சுந்தர்:
//அதாவது நாம் தேவனுக்கேற்ற கிரியைகளை செய்வதில் அதிகபிரயாசம் எடுக்கவேண்டியது அவசியம்! ஆனால் அந்த கிரியையிநிமித்தம் நம் மனதில் சிறிது பெருமை தோன்றினாலும்கூட உடனே "தேவனின் கிருபை இல்லாமல் என்னுடைய கிரியையினால் பயனில்லை" என்று எண்ணி, அப்பெருமைக்கு உடனே முடிவுக்கொண்டுவர வேண்டும். அதேபோல் "எல்லாம் தேவனின் செயல் நாம் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்" என்பதுபோன்ற எண்ணம் நாம் மனதில் வருமாகில், உடனே கிரியையின் அவசியத்தைபற்றி வேதம் சொல்லும் வசனங்களை மனதில் நிறுத்தி, என்னதான் தேவனின் கிருபையும் அதன்மேல் நமக்கு விசுவாசமும் இருந்தாலும்கூட அதற்கேற்ற கிரியை இல்லாத பட்சத்தில் அது செத்ததாகவே இருக்கும் எண்ணி நம்முடைய கிரியையையும் நாம் விடாதிருக்க வேண்டும்" என்பதே எனது கருத்து.//
இவ்விஷயத்தில் உங்கள் கருத்துதான் எனது கருத்தும் சகோதரரே! இதே கருத்தைத்தான் கோவை பெரியன்ஸ் தளத்தில் நானும் கூறியுள்ளேன்.
//1 கொரி. 15:22-ன்படி நாம் உயிர்த்தெழுவதென்பது நம் ஜீவனைக் காப்பதன் (அதாவது நாம் இரட்சிக்கப்படுவதன்) முதல் பகுதியாகும். இந்த இரட்சிப்புக்கும் நம் கிரியைகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லை; மாறாக, இந்த இரட்சிப்பு முழுக்க முழுக்க தேவகிருபையை மட்டுமே சார்ந்ததாகும். இதைத்தான் 2 தீமோ. 1:9-ம் வசனம் கூறுகிறது.
இவ்வுலகில் நாம் என்னதான் நீதிமான்களாக நடந்தாலும், அல்லது பலி/காணிக்கை கொடுத்தாலும், அல்லது நற்கிரியைகளைச் செய்தாலும் அதினிமித்தம் நாம் உயிர்த்தெழுவதென்பது நிச்சயமாக சாத்தியமில்லை. எனவே நம் கிரியைகளால் நாம் நம்மை இரட்சித்துக்கொள்வோம் என எண்ணி நம் கிரியைகளை மேன்மைபாராட்ட இயலாது.
இயேசுகிறிஸ்துவின் ஈடுபலியால் நமக்குக் கிடைத்த இரட்சிப்பினால்தான் 1 கொரி. 15:22-ன்படி நாம் அனைவரும் உயிர்த்தெழக்கூடிய பாக்கியத்தைப் பெறுகிறோம். இதைத்தான் 2 தீமோ. 1:9 கூறுகிறது.
1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுந்த நாம் அதன் பின்னர் நம் ஜீவனை இழப்பதும் இரட்சிப்பதும் நம் கிரியையைச் சார்ந்ததாயுள்ளது. நம் கிரியையைச் சார்ந்து நாம் பெறுகிற இந்த இரட்சிப்புதான் நம் இரட்சிப்பின் 2-ம் பகுதியாகும்.
நம் இரட்சிப்பின் முதல் பகுதி (தேவகிருபையைச் சார்ந்தது) மற்றும் 2-ம் பகுதி (நம் கிரியையைச் சார்ந்தது) எனும் இவ்விரு பகுதிகளும் நிறைவேறினால்தான் நம் இரட்சிப்பு முழுமை பெறும். எனவேதான் நம் கிரியைகளினால் நாம் நீதிமான்களாவதில்லை எனக் கூறுகிற அதே வேதாகமம் நம் கிரியைகளை வலியுறுத்தியும் போதிக்கிறது.
இதை அறியாமல் நம் இரட்சிப்படைவதற்கு தேவகிருபை மட்டும் போதும், கிரியைகள் தேவையில்லை என நம்மில் சிலர் கூறிவருகிறோம்.//
தேவகிருபையைக் குறித்த அவசியத்தை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், கோவை பெரியன்ஸ் சகோதரர்களின் “கிரியை தேவையில்லை” எனும் கருத்தை எதிர்த்து விவாதிக்க வேண்டியதிருந்ததால், கிரியை குறித்த வேதவசனங்களை அதிகமாக எடுத்துப்போட்டு அதற்கு ஆதரவாக விவாதிக்க வேண்டியதாயிருந்தது.
தற்போது கிட்டத்தட்ட விவாதத்தை முடிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். எனது விவாதம் கோவை பெரியன்ஸ் சகோதரருக்கு பயனாக இருந்ததோ இல்லையோ, ஆனால் தளத்திற்கு வந்துசெல்லும் பிற சகோதரருக்குப் பயனாக இருந்திருக்குமென நம்புகிறேன்.